அனைத்து சாதியும் அர்ச்சகராகும் கோரிக்கையை கெடுப்பது (2);
'பெரியார்'
ஈ.வெ.ரா ஆதரவு
மற்றும் எதிர்ப்பு முகாம்களில் அறிவுபூர்வ விவாதம் சாத்தியமே
‘வாய்ப்புள்ள
பிரச்சினைகளில், ஒத்த கருத்துள்ள, சுயலாப
நோக்கற்ற சமூக பற்றாளர்கள் எல்லாம்,
தத்தம் கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கு, ஈ.வெ.ரா
அவர்கள் சிறந்த முன்னுதாரணமும் ஆவார்.’ என்பதையும்;
‘இன்று
ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால்; ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பாரா?’
என்பதையும்;
ஏற்கனவே
பதிவிட்டுள்ளேன்.
‘1944இல் 'பெரியார்' ஈ.வெ.ரா 'திராவிடர் கழகம்' தொடங்கி, பின் அவரையே ஓரங்கட்டி, 1949இல் தி.மு.க உருவாகி, 1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி, பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும் போக்கு அரங்கேறி, 1967இல் ஆட்சியைப் பிடித்து, தமிழ்நாட்டை சீரழித்ததற்கு எதிராக வெளிப்பட்ட சமூக ஆற்றல்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூலம் செயல்பட்டு, இன்று திருப்புமுனை கட்டத்தில் உள்ள நிலையில்;
தமிழ்நாட்டில் ஆக்கபூர்வ
சமூக தள விளைவினை (Social Polarization) ஏற்படுத்த முடியும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_29.html )
‘1944இல் 'பெரியார்' ஈ.வெ.ரா 'திராவிடர் கழகம்' தொடங்கி, பின் அவரையே ஓரங்கட்டி, 1949இல் தி.மு.க உருவாகி, 1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி, பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும் போக்கு அரங்கேறி, 1967இல் ஆட்சியைப் பிடித்து, தமிழ்நாட்டை சீரழித்ததற்கு எதிராக வெளிப்பட்ட சமூக ஆற்றல்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூலம் செயல்பட்டு, இன்று திருப்புமுனை கட்டத்தில் உள்ள நிலையில்;
காங்கிரஸ்,
பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகள் எல்லாம், 'திராவிட பொதுவாழ்வு சுயநல குழு அரசியல்
நோயில்' சிக்கி, தமிழ்நாட்டை மீட்கும் வாய்ப்பை தவற விடும் போக்கில் பயணிக்கின்றன.
சுயநல
சக்திகள் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளிலும், தேசியக் கட்சிகளிலும் ஊடுருவியுள்ள
சூழலில்;
கட்சி
வேறுபாடுகளை மறந்து, உணர்ச்சிபூர்வ போக்குகளை எதிர்த்து, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிப்பதன்
மூலமே;
பள்ளிகளில்
முதல் கட்டமாக, குறைந்த பட்சம் ஆரம்பப் பள்ளி வரையிலாவது 'தாய்மொழிவழிக் கல்வி' கட்டாயமாக்கல்
கோரிக்கையிலும்,
மத்திய,
மாநில அரசு துறைகளில் வெளிப்படும், சாதி, மதம் அடிப்படைகளில் புறக்கணிப்பு, தீண்டாமை உள்ளிட்ட
பிரச்சினைகளிலும்,
'பெரியார்' கட்சிகளும், ஆர்.எஸ்.எஸும் ஒன்று சேர்ந்து
செயல்பட்டு, 'இரட்டை வேடப் போக்கில்' பயணிப்பவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும், செயல்பூர்வமாக
அத்தகையோரை அடையாளம் கண்டு ஒதுக்கி, முன்னேறவும் தமிழ்நாட்டில் வாய்ப்பிருக்கிறது.
அதற்கு சமூக வினை ஊக்கியான (Social Catalyst) முயற்சியாக, இந்த பதிவினை எழுதினேன்.
பல வருடங்களுக்கு
முன் கேள்விப்பட்டு, என்னை வியப்பில் ஆழ்த்திய தகவல் வருமாறு:
தென்
மாவட்டத்தில் கத்தோலிக்க கிறித்துவர் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் கிராமத்தில், அந்த சமயத்தில், சர்ச்
பாதிரியார் (Parish Priest),
வேறு சாதியை சேர்ந்தவர். அவர் அந்த கிராமத்தில்
வாழும் கத்தோலிக்க கிறித்துவர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார்; தமது சாதி ரீதியிலான
பாரபட்ச அணுகுமுறை மூலமாக. எனவே ஞாயிற்றுக் கிழமைகளில்,
அந்த கிராமத்தில் பெரும்பாலோர் அருகிலுள்ள வேறு ஊரின் சர்ச்சுக்கு
போய், 'பூசை'யில் வழிபட்டார்கள்.
தமது
சாதிக்குள் திருமணம் முடிப்பது, சாதி வேறுபாடு/தீண்டாமை
போன்றவற்றில் தமிழ்நாட்டில் கத்தோலிக்க கிறித்துவர்கள், பெரும்பாலும்
அரை இந்துக்களாக வாழ்கிறார்கள்.
'வழிபாடு' என்பது கிறித்துவர்களாயிருந்தாலும், முஸ்லீம்களாயிருந்தாலும், இந்துக்களாயிருந்தாலும், அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதும், அதில் மற்றவர்கள் தலையிடுவது அநாகரீகமாகும், என்பதன் அடிப்படையிலேயே, ஆப்பிரிக்காவில் உள்ள மத சடங்குகளில்,
'சீர்திருத்தம்'என்ற பெயரில் மூக்கை
நுழைத்தவர்கள் எல்லாம், அந்த தவறிலிருந்து பின்வாங்கத்
தொடங்கியுள்ளார்கள்.
'மதமாற்ற'
கொள்கையுடைய கிறித்துவ, முஸ்லீம் மதங்களின் நுழைவுக்குப் பின்னரே,ஆப்பிரிக்காவில் மத அடிப்படையில் போர்கள்
நிகழத் தொடங்கின' என்ற உண்மைகளும் வெளிவரும்
காலம் இதுவாகும்.
(it
might be safe to argue that before the introduction of Christianity and Islam
to Africa, there were no religious wars on the continent because the indigenous
religions did not engage in any sort of proselytization activities. The absence
of proselytization efforts almost automatically leads to a lack of bitter
rivalry against other creeds.; http://digitalcommons.andrews.edu/cgi/viewcontent.cgi?article=1242&context=jams
) 'உலகிலேயே மூடத்தனமும், முட்டாள்த்தனமும், இரத்த வன்முறை மிக்கதுமான மதம் கிறித்துவ மதமாகும்'
என்ற வால்டேரின் கருத்தும் மேற்குறிப்பிட்ட நோக்கில், கவனிக்கத் தக்கதாகும். ("Christianity is
the most ridiculous, the most absurd and bloody religion that has ever infected
the world," - http://historiarex.com/e/en/417-voltaire-1694-1778 )
கீழ்வரும்
பதிவில் உள்ள சான்றுகளை எல்லாம்,
பிறர் உதவியின்றி, தாமாகவே படித்து விளங்கிக் கொள்ளும் அறிவு இல்லாமல் பயணித்ததாலேயே, ஈ.வெ.ரா
அவர்கள் மேற்கத்திய மனித உரிமை வழிபாட்டில்
பயணித்தாரா? என்ற கேள்வியை எழுப்பி, அறிவுபூர்வமாக விவாதிக்கும் நேரமும் வந்து விட்டது.
'ஐ.நாவின் மனித உரிமைகள்,
அந்த பாரம்பரிய, பண்பாடுகளைக் கணக்கில் கொண்டே, ஒவ்வொரு சமூகத்திலும் செயல்பட வேண்டும். மாறாக வேறொரு சமூகத்தின் வரை எல்லைகள் அடிப்படையில்
செயல்படுவது என்பது, அந்த சமூகத்தின் மீதான
மனித உரிமைத் தாக்குதலாகவே அமையும்.’ ;
‘மனித
உரிமைகள்: சட்டமும், சமூகமும் - 'மாதொரு
பாகன்' எழுப்பும்
கேள்விகள்’ ; http://tamilsdirection.blogspot.sg/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html
தமிழ்நாடெங்கும், பெண்களையே அர்ச்சகர்களாகக் கொண்டு வேகமாக பரவி வரும் ஆதிபராசக்தி
கோவில்களில், மனித உரிமை அடிப்படையில்,
ஆண்களையும் சரிபாதி அர்ச்சகராக வேண்டும், என்று அரசு சட்டம் மூலமாக
கட்டாயப்படுத்தினால், அது சரியாகுமா?
புதுக்கோட்டை
மாவட்டம் திருவரங்குளம் கோவிலில் திருவிழாவில் பாரம்பரியமாக ஒரு குறிப்பிட்ட தலித்
குடும்பத்தின் பிரதிநிதியே வழிபாட்டில் முதன்மை மரியாதை பெறும் வழிபாட்டு முறையை, பிற பிராமணர், பிராமணரல்லாத
பிற்படுத்தப்பட்ட, தலித் சாதிகளுக்கும் அந்த உரிமை வேண்டும்
என்று அரசு சட்டம் மூலம்
கட்டாயப்படுத்தினால், அது சரி வருமா?
தேனி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில்
கோவில் திருவிழாவில் தலைமை பூசகராக செயல்படுபவர், அருகாமை ஊரில் பாரம்பரியமாக ஒரு குறிப்பிட்ட முஸ்லீம்
குடும்பத்தில் ஒருவர், இந்துவைப் போல, பலநாட்கள் கடுமையான
கட்டுப்பாடுகளுடன் விரதமிருந்து செயல்பட்டு வரும் வழிபாட்டு முறையை, சட்டம் போட்டு மாற்றுவது சரி வருமா?
இந்து
மதத்தில் பக்தர்களும், மதத்தலைவர்களும், கால தேச வர்த்தமானங்களுக்கேற்ப,
மாற்றங்கள் கொண்டு வந்திருப்பதை, நீதிபதி மகராசன் குழு அறிக்கையானது பதிவு
செய்துள்ளது. இந்து
மதத்தில் வேதங்களுக்கு எதிராக எழுதியவர்களை எல்லாம், சீர்திருத்தங்களை கொண்டு வந்த இராமநுசர் போன்ற
சமய ஆச்சாரியார்களை எல்லாம், கிறித்துவ மத வரலாற்றில் உள்ளதை
போல, சிறையில் அடைக்கவில்லை; கொலை செய்யவில்லை; வேறு
வகையிலும் துன்புறுத்தவில்லை.
தென்னிந்தியாவில் கிறித்துவ மதபோதகர்கள் இந்துக்களின் வழிபாடுகளையும், பண்பாடுகளையும் குறைபாடுகள் மிகுந்த தாழ்வானதாகவும் பிரச்சாரம் செய்ததும், அவர்களது மதமாற்ற வழிமுறைகளில் ஒன்றாகும். ( ‘Ritual, Caste, and
Religion in Colonial South India’; edited by Michael Bergunder, Heiko Frese )
மதமாற்ற நோக்கில், இந்து
வழிபாட்டுமுறைகளை இழிவுபடுத்தியும், அரசின் மூலம் சீர்திருத்தம் என்ற பெயரில் கட்டாயப்படுத்தியும்
கிறித்துவ பாதிரியார்களும், அவர்களின் செல்வாக்கில் ஆதிக்கம் செய்த காலனி அரசும், அந்த
இயல்பாக நடந்து வந்த சீர்திருத்த போக்கில் சிதைவினை ஏற்படுத்தி, இந்துக்களின் மனதில்
ஒரு பாதுகாப்பின்மையை துண்டுவித்து, புதிதாக சாதி உயர்வு/தாழ்வு/தீண்டாமை சமூக நோய்களையும்
புகுத்தி, அந்நோய்களும் அந்த 'பாதுகாப்பின்மையை' உரமாகக் கொண்டு வளர்ந்ததா? என்ற ஆய்வுக்கு
உதவும், முன் – தடய (Prima Face Evidences) சான்றுகளையும் நான் பதிவு செய்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.sg/2016/01/ )
அதே காரணத்தால், முஸ்லீம்
நாடுகளில் முஸ்லீம் மதத்தில் நடந்துள்ள சீர்திருத்த முயற்சிகள், இந்தியாவில் நடைபெறவில்லையா?
(The truth is that Islam has already had its own reformation of sorts, in the
sense of a stripping of cultural accretions and a process of supposed
“purification”. Wasn’t reform exactly what was offered to the masses of the
Hijaz by Muhammad Ibn Abdul Wahhab, the mid-18th century itinerant preacher who
allied with the House of Saud? He offered an austere Islam cleansed of what he
believed to be innovations, which eschewed centuries of mainstream scholarship
and commentary, and rejected the authority of the traditional ulema, or
religious authorities. ; https://www.theguardian.com/commentisfree/2015/may/17/islam-reformation-extremism-muslim-martin-luther-europe
)
வீர சவர்க்காரின் ' The Indian War of Independence' (https://en.wikipedia.org/wiki/The_Indian_War_of_Independence_(book) - தமிழில் 'எரிமலை') நூலின்படி, இந்துக்களும் முஸ்லீம்களும் 1857-இல் காலனி அரசை வீரமுடன் எதிர்த்த போது, மேலே குறிப்பிட்ட 'பாதுகாப்பின்மை' நோயில் இந்தியர்கள் எவரும் சிக்கவில்லை. 1857க்குப் பின் தான், இந்து மதத்திலும், முஸ்லீம் மதத்திலும் மேலே குறிப்பிட்ட 'பாதுகாப்பின்மை'யும், 'பெரும்பான்மை/சிறுபான்மை' நோய்களும் வளர்ந்தன. இன்று இந்துத்வா, முஸ்லீம் கட்சிகளில் உணர்ச்சிபூர்வமாக பொதுவாழ்வு வியாபாரியாக இல்லாமல், அர்ப்பணிப்போடு, அறிவுபூர்வ விவாதத்தைப் புறக்கணித்து வாழ்பவர்கள் எல்லாம், அந்த காலனி சூழ்ச்சியில் பலியாகி வாழ்பவர்களே ஆவர்.
தமிழ்மொழி, இலக்கியங்கள் தொடர்பாக, தனது அறிவு வரை எல்லைகள்(intellectual limitations) பற்றிய புரிதலின்றி, 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள் பயணித்த போக்கானது, 'சாதி ஒழிப்பையும்', 'அனைத்து சாதி அர்ச்சகராதல்' கோரிக்கையையும் குழப்பி, இன்று 'ஆதிக்கம்' என்ற சொல்லையும், 'பெரியார்' ஆதரவாளர்களில் பலர், குழம்பி பயன்படுத்தும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

காலனிய சூழ்ச்சியில் சிக்கி,
ஈ.வெ.ரா அவர்கள் 'சாதி' பற்றிய தவறான புரிதலில் பயணித்ததை, ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html) அது போலவே, கோவில் கருவறை தொடர்பாகவும், அவர் தவறான
உணர்ச்சிபூர்வ புரிதலில் பயணித்தாரா? என்ற கேள்வியையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.sg/2017/10/blog-post_15.html )
தமது அறிவுபலத்தில் தூண்டப்பட்ட
அறிவுஜீவிகளாக வேடம் போடும் சில ஆடுகள் இருப்பதில் மயங்கி, விவாத அரங்கில் மற்றவர்களையும் மாற்றுக்கருத்துக்கு தகுதியற்ற ஆடுகளாக
கருதி, விவாதிக்கும் 'மேய்ப்பர்' நோயும்; 1944இல் 'திராவிடர் கழகம்' உருவாகி, உணர்ச்சிபூர்வப்
போக்கில் வளர்த்த நோயா? (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html )
காலனிய சூழ்ச்சியில் சிக்கி,
தமிழ் மொழியையும், இலக்கியங்களையும் கேடாக கருதி, மேற்கத்திய வழிபாட்டில் பயணித்த,
ஈ.வெ.ரா அவர்கள், கிறித்துவ பாதிரியார்களைப் போல, தம்மை 'மேய்ப்பராக' கருதி, தமது அறிவு
வரை எல்லைகள் பற்றிய புரிதலின்றி, கடவுள் நம்பிக்கையற்ற தனது மனித நாகரீக வரை எல்லைகள்
பற்றிய புரிதலுமின்றி, 'ஆத்தீக' தமிழர்களின் அறிவையும், தனி மனித உரிமையையும் துச்சமெனக்
கருதி, அரசின் மூலம், கிறித்துவ காலனீய மனப்போக்கில், அனைத்துசாதியினரும் அர்ச்சகராகும்
கோரிக்கையை முன்னெடுத்தாரா?
கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள்
முன்னெடுத்த வைக்கம் போராட்டத்தில், இறுதிக்கட்டத்தில் பிரமிக்கும் வகையில் பங்கேற்று,
கோவில் நுழைவு கோரிக்கையில் வெற்றி பெறாமல், கோவில் தெருக்களில் நடமாடும் உரிமை ஈட்டிய
அந்த போராட்டத்தில் இருந்து, அறிவு பூர்வ பாடங்கள் கற்காமல்;
மதுரை மீனாட்சியம்மன் கோவில்
நுழைவு போராட்டத்தை முன்னெடுத்த (https://en.wikipedia.org/wiki/A._Vaidyanatha_Iyer#Temple_Entry_Movement
) மதுரை வைத்தியநாத அய்யரை பாராட்டாமல் குறை கண்டு,
'இடிப்பாரை இல்லாத ஏமரா'
மேய்ப்பராக பயணித்த ஈ.வெ.ரா அவர்கள், தமது கடைசி காலக்கட்டத்தில், அனைத்து சாதியினரும்
அர்ச்சகராகும் கோரிக்கையை முன்னிலைப் படுத்தினாரா?
மெத்தப் படித்தவர்கள் எல்லாம்
'ரசிகராக' பயணித்த போக்கில்;
என்பது தொடர்பான, அறிவுபூர்வ
விவாதங்கள் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டதாக, நான் கருதுகிறேன்.
தமிழ்நாட்டில் திராவிடக்கட்சி ஆட்சியில், ஊழல் பேராசையில், தமிழ்நாடும், பொதுவாழ்வும் சீரழியத் தொடங்கியது தெரியாமல், 'பெரியார்' ஈ.வெ.ரா பயணித்தாரா? உணர்ச்சிபூர்வ இரைச்சலுக்கு
இடமளிக்காத அந்த விவாதத்தில், 'பெரியார்' ஈ.வெ.ரா தனது மரணத்திற்கு முன் ஆற்றிய உரையும்
இடம் பெற வேண்டும். https://www.youtube.com/watch?v=YQxxZKJE-Wo
1980களில் புதுக்கோட்டை
மாவட்டத்தில் என் மூலமாக 'பெரியார்' கொள்கையில் ஈர்க்கப்பட்ட, சாதி வேறுபாடு மனப்பான்மையற்ற,
'கள்ளர்' மாணவர், தனது கிராம 'தலித்' மாணவர்களைத் தவிர்த்து, மற்ற கிராம தலித் மாணவர்களையே
நண்பர்களாக கொண்டிருந்தார். தனது கிராமத்தில் உள்ள தலித் மாணவர்கள் வீடுகளுக்கு சென்று
பழகினால், தனது பெற்றோரும், சுற்றத்தினரும் காட்டும் எதிர்ப்பில், தனது படிப்பு பாழகிவிடும்
என்று கருதி, அவ்வாறு அவர் நடந்ததை, நான் குறையாக கருதவில்லை. 'பெரியார்' கொள்கையில்
இரண்டாம், மூன்றாம் தலைமுறை குடும்பங்களில் கூட, சாதிக்குள் திருமணம் செய்து கொண்டு,
'கறுப்பு சட்டைகளாக' வலம் வருபவர்களை எல்லாம், 'பெரியார்' கட்சிகள் சகித்துக் கொள்ளவில்லையா? 'தனித்தமிழ்' கட்சிகளில் உள்ள பேராசிரியர்களில், வசதியானவர்களில், எத்தனை குடும்பங்களில், 'தமிழ் இன ஒற்றுமையை' ஓரங்கட்டி, 'தம் சாதிக்குள்', திருமணங்கள் எல்லாம் நடைபெறுகின்றன?
தத்தம் சாதிகளில் உள்ள 'முற்போக்கு, பிற்போக்கு' 'சாதனையாளர்களை', அந்தந்த சாதி நிகழ்ச்சிகளில் மேடைகளில் பாராட்டி, கெளரவிக்கும் 'சமூக அசிங்கங்கள்' இன்று அரங்கேறி வருகின்றனவா? 'சாதி ஒழிப்பு வீரர்கள்'(?) அந்தந்த சாதி அமைப்புகளிலுள்ள 'வி.ஐ.பி'(V.I.P)-க்களுடன் நெருக்கமான உறவைப் 'பேணி', அந்தந்த சாதி அமைப்பு இதழ்களிலும் கட்டுரைகள் எழுதி, தமது 'செல்வாக்கையும்' வளர்த்து வருகிறர்களா? 'அது போன்ற சாதி ஒழிப்பு வீரர்'களில் சிலர், திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களை நத்திப் பிழைத்தவர்களுடன் நெருக்கமாகி, 'சாதி ஒழிப்பு'/'பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு' வீரர்களாக வலம் வருகிறர்களா? அந்த 'பகுத்தறிவு, பாரப்பன எதிர்ப்பு' வீரர்களில், 'அதிவேக' 'திராவிட' பணக்காரரானவர்கள், 'குடும்ப சோதிடர்கள்' ஆலோசனையில் வாழ்கிறார்களா? 1944க்கு முந்தைய, ஆக்கபூர்வமான சமூக தள விளைவை (Social Polarization) சிதைத்து, அழிவுபூர்வ சமூக தள விளைவில், தமிழும், தமிழர்களும் சீரழிந்து வருகிறார்களா? என்ற ஆய்வை, விருப்பு வெறுப்பற்ற, எவரையும் இழிவுபடுத்தும் உள்நோக்கமின்றி, அறிவுபூர்வமாக முன்னெடுப்பதில் தான், தமிழின், தமிழர்களின் மீட்சி அடங்கியுள்ள்து, என்பது என் கருத்தாகும். (http://tamilsdirection.blogspot.sg/2015/09/normal-0-false-false-false-en-us-x-none.html )
சில வருடங்களுக்கு முன்,
'திருச்சி பெரியார் மையத்தில்' இருந்தவர், எனது வீட்டிற்கு வந்த போது, 'கருப்பு சட்டைகளில்
சமூக கிருமிகள் மிகுந்து, நேர்மையானவரை கண்டுபிடிப்பது கடினமாகி வருவதால்’, எனது வீட்டுக்குள்
கறுப்பு சட்டைகளை அனுமதிக்கப் போவதில்லை' என்று உறுதியாக அறிவித்த போது (http://tamilsdirection.blogspot.sg/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html), நான் அடையாளம் கண்டு 'தீண்டாமை'க்கு உட்படுத்திய 'பெரியார்
சமூக கிருமியுடன்' நல்லுறவில் இருந்த அவர், தான்
இன்னும் 'யோக்கியராக' இருப்பதாக என்னிடம் கெஞ்சியதும், 'இரட்டை வேட' 'பெரியார்' கொள்கையாளர்கள் எல்லாம் அவர்களை
'நன்கு' அறிந்த சாதாரண மக்களிடம் அம்பலமாகி வரும் போக்கும், செயல் மூலம் வாழ்வில் 'பேசி
வருபவர்களுக்கு' சமூகத்தில் செல்வாக்கு அதிகரித்து வருவதும், 'பெரியார் பொது வாழ்வு
வியாபாரிகளுக்கு' முடிவு நெருங்கியுள்ளதன் அறிகுறிகள் ஆகும். அதுவே 'திராவிட அரசியல்
பொதுவாழ்வு வியாபாரிகளின்' முடிவையும் துரிதப்படுத்தும். தமிழ்நாட்டில் தேசியக்கட்சிகளில்
வளர்ந்து வரும் 'பொதுவாழ்வு வியாபார' போக்கும் பலகீனமாகி, தமிழ்நாட்டின் மீட்சிக்கும்
வழி பிறக்கும்.
தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கு, பொதுவாழ்வானது வியாபாரம் ஆனதே, முக்கிய காரணம் என்பதை உணர்ந்த, சுயலாப நோக்கமில்லாத சமூகப் பற்றாளர்கள் எல்லாம், கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, உடன்படும் (தாய்மொழிவழிக் கல்வி, சாதி உயர்வு/தாழ்வு, தீண்டாமை எதிர்ப்பு) கோரிக்கைகளில் ஒன்றுபட்டு செயல்படுவதை தாமதப்படுத்தல் சரியாகுமா?
பெரியார்' ஈ.வெ.ராவின் 'பார்ப்பன எதிர்ப்பு' கொள்கையானது, திரிந்து, ஊழல் பாதுகாப்பு கவசமாகி விட்டதை, தயாநிதி மாறனும் (http://tamilsdirection.blogspot.sg/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html );
(சசிகலா) நடராஜனும் அம்பலப்படுத்தியுள்ள
போக்குகளும் (http://tamilsdirection.blogspot.sg/2017/01/blog-post_18.html),
'அனைத்து சாதி அர்ச்சகராகும் கோரிக்கையும்' அதில் சிக்கி, அம்பலமாகி வருவதும், தமிழ்நாட்டின்
மீட்சிக்கான அறிகுறிகளே ஆகும். மேற்குறிப்பிட்ட இருவருமே
வெளிப்படுத்தியவாறு, 'திராவிட ஊழல் பாதுகாப்பு கவசத்திற்கு' துணை புரிந்து வருபவர்கள்
பா.ஜ.கவில் இருக்கும் வரை, தமிழ்நாட்டில் பா.ஜ.கவானது, திராவிடக் கட்சிகளின் வாலாகவே
பயணிப்பதை தவிர்க்க முடியுமா? ஊழலில் சம்பாதித்த பணத்தில்
கோவில்களுக்கும், மடாதிபதிகளுக்கும் நன்கொடை வழங்கி, 'பெரியார்' கட்சிகளின் தலைவர்களையும் 'நன்கு 'கவனித்து, 'இந்துத்வா' ஆதரவாளர்களையும், 'பார்ப்பன எதிர்ப்பு' ஆதரவாளர்களையும்,
'கவசமாக' கொண்டு, திராவிட அரசியல் கொள்ளை தொடர்வதை, இனியும் அனுமதிக்கலாகுமா?
எனவே 'பெரியார்' ஈ.வெ.ரா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் 'பொதுவாழ்வு வியாபாரியாக' சொத்து சேர்த்து பயணிக்காமல், பல இழப்புகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்து, சமூகத்திற்கு பாடுபட்டவர்களை எல்லாம் எதிர்கொள்கை முகாமில் இருந்திருந்தாலும், பாராட்டும் மனப்பக்குவத்தை, வளர்த்து, மேலே குறிப்பிட்ட அறிவுபூர்வ விவாதத்தினை ஊக்குவிக்க வேண்டும்.
இன்று ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் எல்லாம் ஆதரித்துள்ள அனைத்து சாதியினரின் அர்ச்சகராகும் சட்டத்தினை, அரசு அமுல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றி, துக்ளக் 'சோ' வெளியிட்டுள்ள கீழ்வரும் கருத்தும், அந்த விவாதத்தில் இடம் பெற வேண்டும்.
தத்தம் சாதிகளில் உள்ள 'முற்போக்கு, பிற்போக்கு' 'சாதனையாளர்களை', அந்தந்த சாதி நிகழ்ச்சிகளில் மேடைகளில் பாராட்டி, கெளரவிக்கும் 'சமூக அசிங்கங்கள்' இன்று அரங்கேறி வருகின்றனவா? 'சாதி ஒழிப்பு வீரர்கள்'(?) அந்தந்த சாதி அமைப்புகளிலுள்ள 'வி.ஐ.பி'(V.I.P)-க்களுடன் நெருக்கமான உறவைப் 'பேணி', அந்தந்த சாதி அமைப்பு இதழ்களிலும் கட்டுரைகள் எழுதி, தமது 'செல்வாக்கையும்' வளர்த்து வருகிறர்களா? 'அது போன்ற சாதி ஒழிப்பு வீரர்'களில் சிலர், திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களை நத்திப் பிழைத்தவர்களுடன் நெருக்கமாகி, 'சாதி ஒழிப்பு'/'பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு' வீரர்களாக வலம் வருகிறர்களா? அந்த 'பகுத்தறிவு, பாரப்பன எதிர்ப்பு' வீரர்களில், 'அதிவேக' 'திராவிட' பணக்காரரானவர்கள், 'குடும்ப சோதிடர்கள்' ஆலோசனையில் வாழ்கிறார்களா? 1944க்கு முந்தைய, ஆக்கபூர்வமான சமூக தள விளைவை (Social Polarization) சிதைத்து, அழிவுபூர்வ சமூக தள விளைவில், தமிழும், தமிழர்களும் சீரழிந்து வருகிறார்களா? என்ற ஆய்வை, விருப்பு வெறுப்பற்ற, எவரையும் இழிவுபடுத்தும் உள்நோக்கமின்றி, அறிவுபூர்வமாக முன்னெடுப்பதில் தான், தமிழின், தமிழர்களின் மீட்சி அடங்கியுள்ள்து, என்பது என் கருத்தாகும். (http://tamilsdirection.blogspot.sg/2015/09/normal-0-false-false-false-en-us-x-none.html )
தமிழ் வேரழிந்த தமிங்கிலீசர்கள்
நாடாக தமிழ்நாடு மாறி வரும், இந்த காலக்கட்டத்தில் கூட, 'பெரியார்' கொள்கையாளர்கள்
மேற்குறிப்பிட்ட விவாதத்தினை தவிர்த்து பயணித்தால், 'பெரியார் ஊழல் பாதுகாப்பு கவசத்தின்
அடையாளமாக', 'கறுப்பு சட்டையானது' விரைவில் மாணவர்களின், இளைஞர்களின் கேலிக்கும் கண்டனத்திற்கும்
இலக்காகி விடும்.
தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கு, பொதுவாழ்வானது வியாபாரம் ஆனதே, முக்கிய காரணம் என்பதை உணர்ந்த, சுயலாப நோக்கமில்லாத சமூகப் பற்றாளர்கள் எல்லாம், கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, உடன்படும் (தாய்மொழிவழிக் கல்வி, சாதி உயர்வு/தாழ்வு, தீண்டாமை எதிர்ப்பு) கோரிக்கைகளில் ஒன்றுபட்டு செயல்படுவதை தாமதப்படுத்தல் சரியாகுமா?
பெரியார்' ஈ.வெ.ராவின் 'பார்ப்பன எதிர்ப்பு' கொள்கையானது, திரிந்து, ஊழல் பாதுகாப்பு கவசமாகி விட்டதை, தயாநிதி மாறனும் (http://tamilsdirection.blogspot.sg/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html );
எனவே 'பெரியார்' ஈ.வெ.ரா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் 'பொதுவாழ்வு வியாபாரியாக' சொத்து சேர்த்து பயணிக்காமல், பல இழப்புகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்து, சமூகத்திற்கு பாடுபட்டவர்களை எல்லாம் எதிர்கொள்கை முகாமில் இருந்திருந்தாலும், பாராட்டும் மனப்பக்குவத்தை, வளர்த்து, மேலே குறிப்பிட்ட அறிவுபூர்வ விவாதத்தினை ஊக்குவிக்க வேண்டும்.
இன்று ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் எல்லாம் ஆதரித்துள்ள அனைத்து சாதியினரின் அர்ச்சகராகும் சட்டத்தினை, அரசு அமுல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றி, துக்ளக் 'சோ' வெளியிட்டுள்ள கீழ்வரும் கருத்தும், அந்த விவாதத்தில் இடம் பெற வேண்டும்.
"சிவாச்சார்யர்களும் மிக மிகச் சிறுபான்மையோர்; ஆகையால் அவர்கள் எதிர்த்து ஒன்றும் ஆகப் போவதில்லை. சிவாச்சார்யர்கள் குடும்பத்தினர் சுமார் ஒரு லட்சம் பேர் இருப்பதாக ஒரு கணக்கு கூறுகிறது. இதை வைத்து அவர்களிடம் உள்ள ஓட்டுக் கணக்கைப் பார்த்தால், சுமார் ஐம்பதாயிரம், அல்லது அறுபதாயிரம் தேறும். அதாவது ஒரு சட்டசபைத் தொகுதிக்கு சுமார் 250 ஓட்டு. இது வந்தால் என்ன, போனால் என்ன!
அதனால்தான் எல்லா கட்சிகளுமே ‘அனைவரும் அர்ச்சகர்’ என்பதை ஆதரிக்கின்றன. விதிவிலக்கே இல்லை. அவ்வப்போது, ஹிந்து தர்மத்தையும், ஹிந்து வழிபாட்டையும், ஹிந்து ஆலயங்களையும் காப்பாற்றப் புறப்படுகிற விச்வ ஹிந்து பரிஷத் போன்ற ஹிந்து அமைப்புகளும் இதை வரவேற்கின்றன. ஆர்.எஸ்.எஸ்.ஸும் ஆதரிக்கிறது. இதை எதிர்த்தால், ஹிந்து ஆதரவில் எவ்வளவு போய்த் தொலையுமோ! ஏன் வம்பு? இதை ஆதரித்து, ‘எங்களுக்கு எல்லோரும் சமம்’ என்று பறைசாற்றினால், தங்களுடைய இயக்கங்கள் பலப்படலாமே என்கிற நப்பாசை.
ஆனால் உண்மையில், ஹிந்துக்களில், எத்தனை பேர் இதை உற்சாகமாக வரவேற்பார்கள்? சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் - பிராம்மணர்களுக்குச் சற்றும் குறையாமல் - சொல்லப் போனால், பிராம்மணர்களையும் விட அதிகமாக, மற்ற ஜாதியினர் பெரிதும் நம்புகிறார்கள். அவர்களில் எத்தனை பேர் இந்த மாற்றத்தை வரவேற்பார்கள்? சீர்திருத்தம் செய்ய முனைந்துள்ளவர்கள், அதை முழுமைப் புரட்சியாக மாற்ற வேண்டுமென்றால், முறையான பயிற்சி அளித்து தாழ்த்தப்பட்டவர்களையே, எல்லா கோவில்களிலும் அர்ச்சகர்கள் ஆக்க வேண்டும். அப்படிச் செய்தால், பிராம்மணரல்லாத மற்ற சமூகத்தினர்கள் அதை ஏற்பார்களா?
ஆக, அரசின் இந்த புதிய உத்திரவில், ஆகம நம்பிக்கையும் இல்லை; சம்பிரதாய மரியாதையுமில்லை; சட்ட பூர்வமும் இல்லை; நேர்மையும் இல்லை.
இது, நம்பிக்கையற்ற நாத்திகர்களால், நாத்திகர்களுக்காகக் கொண்டு வரப்பட்டுள்ள, நாத்திகர்களுடைய உத்திரவு. ‘சில வருடங்கள் முனைந்து, ஸம்ஸ்க்ருதம் கற்று, வேதங்களையும், ஆகமங்களையும் படித்து, முறையான பயிற்சியுடன், சைவ சித்தாந்த தத்துவ ஞானம் பெற்று ... வருமானம் அதிகமில்லாத அர்ச்சகர் பணியை ஏற்றுவிட வேண்டும்’ - என்று சிவாச்சார்யர் அல்லாத மற்ற ஜாதியினரெல்லாம், ஏங்கிக் கிடக்கவில்லை; ஆகையால் இது ஒரு சமுதாய சீர்திருத்தம் அல்ல. இதனால், ஆளும் கட்சிக்கு அரசியல் ஆதாயம் கிட்டப் போவதுமில்லை; ஓட்டு பலம் கூடப் போவதுமில்லை. பின் எதற்காக இதைச் செய்திருக்கிறார்கள்? ‘ஹிந்து மதத்தினர் மனம் புண்பட்டால் - அதுவே திருப்தி’ என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியும். ‘ஸாடிஸம்’ என்பதற்கு இதை விட சிறந்த ஒரு உதாரணத்தைக் கண்டுபிடிப்பது கடினம்.” சோ; துக்ளக் 24.10.2017
'பெரியார்' ஈ.வெ.ரா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உணர்ச்சிபூர்வமாக எதிர் முகாமில் உள்ளவர்களையெல்லாம் இழிவுபடுத்தும் 'சாடிஸ்டு' (Sadist-பிறரை காயப்படுத்தி மகிழ்பவர்) போக்கினை வெறுத்து, அறிவுபூர்வ விவாதத்தினை ஊக்குவித்து, ஒத்து வரும் கோரிக்கைகளில் ஒன்று சேர்ந்து பயணிப்பவர்களை ஊக்குவிப்பதன் மூலமே, தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் முன்னேற முடியும்.

No comments:
Post a Comment