Monday, April 16, 2018



படைப்புக்கான(Creative) கருக்களும், திறவுகோல்களும், நல்ல மற்ற தீய எண்ணங்களும் தொடர்புடைய தோற்றுவாய்கள் பற்றிய ஆய்வுகள்?

 

மூளைக்கான சிக்னல்கள் தொடர்புடைய 'ட்ரான்ஸ்டியூசர்'(Transducer) ஆகவும், அண்டத்தில் வரும் சிக்னல் ஏற்பியாகவும்(Receiver), சிக்னல் பரப்பியாகவும்(Transmitter) மனிதர்கள்?


நடைப்பயிற்சியின்(Walking) போது, தங்களின் படைப்புக்கான(Creative) கருக்களும் திறவுகோல்களும் தங்களின் மனங்களில் உதித்ததாக, உலக அளவில் புகழ் பெற்ற விஞ்ஞானிகளும், இசை அமைப்பாளர்களும் தெரிவித்துள்ளதை ஏற்கனவே படித்திருக்கிறேன். அது அறிவியல் ஆராய்ச்சிகள் மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் படித்தபோது, அது இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. (‘People have noted that walking seems to have a special relation to creativity. The philosopher Friedrich Nietzsche (1889) wrote, “All truly great thoughts are conceived by walking” (Aphorism 34);  RESEARCH REPORT: Give Your Ideas Some Legs: The Positive Effect of Walking on Creative Thinking’- Marily Oppezzo and Daniel L. Schwartz Stanford University; http://gradpsych.apags.org/pubs/journals/releases/xlm-a0036577.pdf   )

சுயலாப நட்ட கணக்குகளில் சிக்காத மனத்துடன் நடைபயிற்சியில் ஈடுபடும்போது தான், அந்த பலன்கள் கிட்டும், என்பதும் எனது அனுபவமாகும். மீடியா வெளிச்சத்தில் சிக்குவதை தவிர்த்து, இன்று இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ் பெற்ற சாதனையாளர்களை நான் சந்திக்கும் அளவுக்கும், அவர்கள் எல்லாம் எனது ஆய்வு சாதனைகளை கண்டு மலைக்கும் அளவுக்கும் வெளிப்பட்டுள்ளவையின்(http://drvee.in/) கருக்களும் திறவுகோல்களும் பெரும்பாலும் மரங்கள் சூழ்ந்த இயற்கை சூழலில் நான் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, எனது மனங்களில் தோன்றியவை ஆகும்.

அது மட்டுமல்ல, எனக்கு தெரிந்து, 'சுயலாப கள்வர் செயலாக்கி (Processor) மூளை'யுடன் வாழ்ந்தவர்களையோ, அல்லது அவர்களால் எனக்கு ஏற்பட்ட பாதிப்புகளையோ, நான் நடைப்பயிற்சியின் போது, நினைவு கூர்ந்தால், சாலையில் செல்லும் வாகனம் என் மீது மோதுவது போல் வந்து, மோதாமல் தப்பிக்கும் வகையில் சம்பவங்களையும் சந்தித்து வருகிறேன். ஒரு முறை வெறிச்சோடிக் கிடந்த சாலையின் ஓரமாக மரங்களை ஒட்டி நான் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, கைபேசியில் பேசியவாறே மோட்டர் சைக்கிளை ஓட்டிய ஒரு இளைஞர் பின்பக்கமாக வந்து மோதி, மருத்துவமனையில் முதல் உதவி பெறும் அளவுக்கு, சிறு விபத்தை உண்டாக்கினார். அப்போதும் மேலே குறிப்பிட்ட நினைவுகளில் ஒன்று என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 'Freedom from the Known' நூலின் சாராம்சத்தை அகவயப்படுத்தி(internalize), இயன்றவரை நல்ல ஆக்கபூர்வ எண்ணங்களுடன் நான் வாழ்வதுடன், எனது சமூக வட்டத்திலும் அதனை தூண்டி வருகிறேன்.

நமது மனங்களில் தோன்றும் படைப்புக்கான கருக்களும் திறவுகோல்களும், நல்ல மற்ற தீய எண்ணங்களும் தொடர்புடைய தோற்றுவாய்கள் பற்றிய ஆய்வுகளையும் தேடுவதும் உண்டு.

அந்த தேடலில், லண்டனில் வாழும் நண்பர் தொல்காப்பியன் துணையுடன் கீழ்வரும் அரிய தகவல் கிடைத்தது.

'மார்ஃபிக் ஒத்திசைவு' (Morphic resonance) என்பது தொடர்பான ஆய்வுகள் எல்லாம், மேலே குறிப்பிட்ட கேள்விகளுடன் தொடர்புடையவையாக இருக்கலாம். உலகில் இதுவரை வாழ்ந்த உயினங்களின் நினைவுப்பதிவுகள்(memory) எல்லாம், நம் மனதின் செயல்பாட்டைப் பொறுத்து, 'மார்ஃபிக் ஒத்திசைவு'க்கு நாம் உள்ளாகும் விளைவுகள் பற்றிய விளக்கங்கள் கீழுள்ள இணைய தளத்தில் உள்ளன.

“Morphic resonance is a process whereby self-organising systems inherit a memory from previous similar systems. In its most general formulation, morphic resonance means that the so-called laws of nature are more like habits. The hypothesis of morphic resonance also leads to a radically new interpretation of memory storage in the brain and of biological inheritance. Memory need not be stored in material traces inside brains, which are more like TV receivers than video recorders, tuning into influences from the past. And biological inheritance need not all be coded in the genes, or in epigenetic modifications of the genes; much of it depends on morphic resonance from previous members of the species. Thus each individual inherits a collective memory from past members of the species, and also contributes to the collective memory, affecting other members of the species in the future.”; https://www.sheldrake.org/research/morphic-resonance
 
நமது மூளையில் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் உருவாகும் போது, அதற்கான நரம்பு மண்டல செயல்பாடுகள் மூலம் நமது உடலில் நல்ல மற்றும் நோய்களை உண்டாக்கும் தீய விளைவுகள் எவ்வாறு ஏற்படுகின்றன? என்பதை கீழ்வரும் காணொளி நன்கு விளக்கியுள்ளது.

நமது மூளை ஆனது,  கணினி செயலாற்றி (processor)  போன்றுள்ள ஒரு மனித செயலாற்றி ஆகும். நமது மூளை என்னும் செயலாற்றியானது,  உள்ளார்ந்த ஈடுபாடுகள்(passions) , அன்பு, லாபநட்ட நோக்கில்லாத சேவை போன்ற ஆக்கபூர்வ உணர்வுகளில் ( Positive feelings)  செயல்படும்போது, நாம் ஒரு ஆக்கபூர்வ அலையியற்றி  ( Positive Oscillator) போல் வாழ்வோம். மாறாக சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, ஏமாற்றம்,கோபம், வெறுப்பு, வஞ்சம்,பழி வாங்கல், சுய அனுதாபம், போன்ற எதிர் உணர்வுகளில் செயல்படும்போது, நாம் ஒரு அழிவுபூர்வ அலையியற்றி  (Negative Oscillator) போல் வாழ்வோம். நேர் உணர்வுகள் (Positive Feelings) செயல்பாட்டில் மூளை இருக்கும்போது,  நோய்கள் நம்மை அண்டாது. எதிர் உணர்வுகள் (Negative Feelings) செயல்பாட்டில் மூளை இருக்கும்போது, நோய்கள் நம்மை தாக்கும்.                                 https://www.youtube.com/watch?v=W81CHn4l4AM&t=1s
 
ஓரு அழிவுபூர்வ அலையியற்றியான நபர், தமது சமுக வட்டத்தில் ஒப்பீடு நோயைப் பரப்பும், நோய்க்கிருமியாகி விடுவார். அவரது சமூக வட்டத்தில் இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழ்பவர்கள், அவரை விட்டு விலகி விடுவார்கள். அதன் விளைவாக, அவரது சமூக வட்டமே ஒப்பீடு நோயில் சிக்கிய, 'எந்த வழியிலும்' பணம் சம்பாதிக்க முயலும்  வட்டமாகி , சமூகத்திற்கே கேடாக அமையவும் வாய்ப்புண்டு.

அந்த மனநிலையில் உள்ளவர்கள், வாழ்க்கையில் இயல்பாகக் கிடைக்கும் இன்பங்களைக் கூட அனுபவிக்க முடியாமல், தொலைத்து வாழவும் நேரிடும்.  ஒரு நல்ல இசையை கேட்கும் வாய்ப்புடைய நபர், அந்த நேரத்தில் 'ஷேர்' மார்க்கெட்டில்(share market), தம்மிடமுள்ள பங்குகள் ஏற்றத்திலா?/இறக்கத்திலா? என்று யோசித்துக் கொண்டிருந்தால், அந்த இசையின் இன்பத்தை அனுபவிக்க முடியுமா? 'பாதுகாப்பு மண்டிலத்தில்'(Comfort Zone) புத்திசாலித்தனமாக(?) வாழ்வதாக நினைத்துக் கொண்டு, 'அம்பலமாகாமல்' சமூக ஒழுக்கநெறிகளை எல்லாம் காவு கொடுத்து 'வளமாகி'(?) வாழ்பவர்களின் 'நடைப்பயிற்சிகள்' எல்லாம், படைப்புக்கான(Creative) கருக்களையும் திறவுகோல்களையும் தருமா? அல்லது மேலும் மோசமான சமூகக் கிருமியாக வாழ்வதற்கான கருக்களையும் திறவுகோல்களையும் தருமா? 

சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, செல்வம், செல்வாக்கு, பாராட்டு, புகழ்' போன்றவற்றிற்கு ஏங்கி வாழ்வதைத் தவிர்த்து, தமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) வாழ்பவர்களுக்கு கிடைக்கும் இன்பங்கள், தனித்துவம் (Unique)  வாய்ந்தவையாகும்.’ ( http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

நமது சொந்த புத்தியிலோ, அல்லது அனுபவங்கள் கற்றுத் தந்த பாடத்திலோ அடையாளம் கண்ட தீய உறவுகளின் தொடர்பறுந்து மரணித்தல், வாழ்க்கைப்பயணத்தில் வெளிப்படும் நல்லவைகளை ஏற்று புதிய உறவுகளை பிறப்பித்தல், என்ற போக்கில், பிறப்பு, மரணம், பிறப்பு என்று திருக்குறள் (350) திறவுகோலின் துணையுடன், (http://veepandi.blogspot.sg/2012/12/normal-0-false-false-false_3340.html )

நமது வாழ்வையே சமூகவியல் பரிசோதனையாக (Sociological Experiment) கருதி, ஒரே நேரத்தில் நமக்கு நாமே முதல் மனிதராக இன்ப துன்பங்களை அனுபவித்து, மூன்றாம் மனிதராக நெறிப்படுத்தி வாழும் இரகசியமானது,  ஆடம்ஸ் ஸ்மித்தின் 'Theory of Moral Sentiments'(https://en.wikipedia.org/wiki/The_Theory_of_Moral_Sentiments) என்ற நூலில் வெளிப்பட்டுள்ளது.


நமது நல்ல எண்ணங்கள், மற்றும் தீய எண்ணங்கள் முரண்பாடுகளின் தொகுவிளைவிலான‌, வினையின், நல்ல/கெட்ட பலன்களை, நமது வாழ்வு முடிவதற்குள், 'அறுவடை' செய்வது ஒரு பகுதி; 'எஞ்சியவை', நமது 'ஜீன்கள்' (gene: a unit of heredity which is transferred from a parent to offspring and is held to determine some characteristic of the offspring.) மூலம் அடுத்த தலைமுறைகளில், 'அறுவடை'யாவதிலிருந்தும் (ஊழ் வினை?) தப்ப முடியாது. அந்த 'அறுவடை'களை 'பார்க்கத் தெரியாமல்', 'நல்லதுக்கு காலமில்லை' என்று புலம்புபவர்கள் எல்லாம், சமூக நடப்புகளை, 'சரியாக' பார்க்கத் தெரியாத, 'சமூகப் பார்வை குருடர்கள்' (திருக்குறள்   573) ஆவர்.’ (‘'மனித எந்திரர்களுக்கு' விளங்காதது’; http://tamilsdirection.blogspot.sg/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_22.html & 'வாழ்க்கை பரமபத விளையாட்டில்'  முட்டாள்களாகி வரும் 'புத்திசாலிகள்' ; http://tamilsdirection.blogspot.sg/2018/04/normal-0-false-false-false-en-us-x-none.html )

‘'பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' போன்ற பலவித, எதிர் (Negative) உணர்வுபூர்வ(emotions) போக்குகளுக்கு அடிமைப்பட்ட மனிதர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பலவித உடல்/மன நோய்களுக்கு உட்பட்டு வாழ்ந்து, சமூக உறவுகளையும் கெடுத்து, தமிழர்களின் உயிரணுக்களிலும் (genes) அதைப் பதிவு செய்து, இனிவரும் பரம்பரையையும் கெடுப்பவர்கள் என்பதையும், திறந்த மனதுடன், அறிவுபூர்வமாக நேர் (Positive) உணர்வுகளுடன் வாழ்பவர்கள் அதற்கு எதிரான ஆக்கபூர்வமீட்பு உணர்வுகளை தமிழர்களின் உயிரணுக்களில் பதிவு செயவதையும், உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. (உதாரணமாக; “scientists are discovering that positive emotions don’t just make you feel good — they have an impact on our social interactions and health outcomes that may become written in our genes.”; http://www.psychologicalscience.org/index.php/publications/observer/2013/july-august-13/new-research-on-positive-emotions.html  )

மேலே குறிப்பிட்டவை உள்ளிட்டு, நான் சந்தித்து வரும் அனுபவங்களின் அடிப்படைகளில், இயற்கையில் 'உயிரற்ற பொருட்கள்' (inanimate) என்று நாம் கருதிக் கொண்டிருப்பவைக்கும், வேறு வகையிலான உயிர் இருக்கக்கூடும், என்ற எனது கருதுகோளையும்(Hyphothesis) பதிவு செய்துள்ளேன்.

 
எனக்கு தெரிந்து, போதுமான ஆங்கில அறிவின்றி, தமிழிலும் ஆழ்ந்த புலமையின்றி, 'பெரியார்' கொள்கையாளர்களாக ஆணவத்துடன் 'மூட நம்பிக்கை' என்று கண்டிக்கப்பட்ட (‘‘சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி!’   என்று சொன்னது பகுத்தறிவா? அறியாமையா?; http://tamilsdirection.blogspot.sg/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html );

இலக்கியங்களும் புராணங்களும் பல பரிமாண புலமை கொண்டவை, என்பது எனது ஆய்வுகள் மூலம் கண்டறிந்து பதிவு செய்துள்ளேன்.(‘ மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?’; http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

‘'பெரியார்' .வெ.ராவுக்கு இருந்த வரை எல்லைகள்(limitations)  இல்லாத‌,  பிரான்ஸ் நாட்டு நாத்தீகர் ஜீன் பெரி லேமன் - Jean-Pierre Lehmann  - 'இந்து மதம் 'பற்றி தெரிவித்துள்ள கீழ்வரும் கருத்தும் கவனிக்கத் தக்கதாகும்.

உலகிற்கு ஒரு ஒழுக்க முறை, ஆன்மீகம்,நேர்மை வழிகாட்டி தேவைப்படுகிறது.இந்தியாவில் உள்ள மதம் மற்றும் தத்தவப் பாரம்பரியங்கள் அந்த மூன்றையும் நன்கு வழங்கக் கூடியவையாகும்.”( The planet needs a sense of moral order, spirituality and an ethical compass. The Indian religious and philosophical traditions can provide a great deal of all three.); ‘The Dangers of Monotheism in the Age of Globalization’bBy Jean-Pierre Lehmann  (http://www.theglobalist.com/dangers-monotheism-age-globalization/

ஆன்மீகத்தையும் மதத்தையும் ஒன்றெனக் குழம்பி வாழ்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட கட்டுரை விளங்குவது சிரமமே. (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

கீழேயுள்ள குறிப்பின்படி, மேற்கத்திய உலகில் நாத்தீகர்கள் மத்தியில் நடந்துவரும் அறிவுபூர்வ விவாதங்களின் பின்னணியில்;

நமது மனங்களில் தோன்றும் படைப்புக்கான கருக்களும் திறவுகோல்களும், நல்ல எண்ணங்களும் கண்ணுக்கு தெரியாத கடவுள்கள், தேவதைகள் போன்றவரோடு ஒரு குறிப்பிட்ட வகை ' மார்ஃபிக் ஒத்திசைவு' மூலமும்;
 
மற்ற தீய எண்ணங்களுட‌ன் தொடர்புடைய தோற்றுவாய்களாக பேய்களும்(Demons) ஆவிகளும்(Ghosts) வேறொரு குறிப்பிட்ட வகை ' மார்ஃபிக் ஒத்திசைவு' மூலமும்;

ஏற்படுகின்றனவா? என்ற கேள்வியை திறந்த மனதுடன் ஆராயும் எண்ணமும் எனக்குள்ளது.

தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் உள்ள தொன்மை இலக்கியங்களையும், புராணங்களையும் பல பரிமாண புலமை ஆய்வுக்கு உட்படுத்தியே, அந்த கேள்விக்கான விடையை தேட முடியும்.

அது போன்ற முயற்சியில் வெளிப்பட்டவைகளை தொகுத்தே, கீழ்வரும் பதிவினை வெளியிட்டேன். 'பெரியார்' கொள்கையாளர்கள் உள்ளிட்ட கடவுள் மறுப்பாளர்களிடமிருந்து, உணர்ச்சிபூர்வ இரைச்சலற்ற, அறிவுபூர்வ மறுப்புகள் ஏதும் இதுவரை வரவில்லை. இனி வந்தாலும் வரவேற்பேன்.

 
ம‌லேசியாவை சேர்ந்த மறைந்த முனைவர்.கே.லோகநாதனும், அவர் வழியில் 'தமிழ் ஆகம அறிவியல்' ஆய்வுகளை மேற்கொண்டு வரும் முனைவர் ஆர்.சிவக்குமாரும் வெளிப்படுத்திய ஆய்வுகள் எல்லாம், திறந்த மனதுடன் அறிவுபூர்வ விவாதங்களுக்கு உரியவை ஆகும்: படைப்பின், வாழ்க்கையின் சூட்சமங்கள் பற்றிய இரகசியங்களை தேடுபவர்களுக்கு எல்லாம்.(http://drkloganathan.blogspot.sg/2016/10/the-holy-text-of-agamic-science.html ) 

மேலே குறிப்பிட்டவற்றின் அடிப்படையில், வாழ்கின்ற மனிதர்கள் எல்லாம் மூளைக்கான சிக்னல்கள் தொடர்புடைய 'ட்ரான்ஸ்டியூசர்'(Transducer) (https://en.wikipedia.org/wiki/Transducer ) ஆகவும், அண்டத்தில் வரும் சிக்னல் ஏற்பியாகவும்(Receiver), சிக்னல் பரப்பியாகவும்(Transmitter), ஒரே நேரத்தில் செயல்பட்டு, அந்த செயல்பாட்டின் விளைவுகளுக்கு ஏற்ற வகையில் வாழ்ந்து வருகிறார்கள்.

Note: “Reward and punishment may not emanate from a single omnipotent deity, as imagined in Western societies. Justice may be dispensed by a vast unseen army of gods, angels, demons and ghosts, or else by an impersonal cosmic process that rewards good deeds and punishes wrongdoing, as in the Hindu and Buddhist conception of karma. But some kind of moral order beyond any human agency seems to be demanded by the human mind, and this sense that our actions are overseen and judged from beyond the natural world serves a definite evolutionary role. Belief in supernatural reward and punishment promotes social co-operation in a way nothing else can match. The belief that we live under some kind of supernatural guidance is not a relic of superstition that might some day be left behind but an evolutionary adaptation that goes with being human.
It’s a conclusion that is anathema to the current generation of atheists – Richard Dawkins, Daniel Dennett, Sam Harris and others – for whom religion is a poisonous concoction of lies and delusion.”
From ‘Why humans find it hard to do away with religion; The new atheists decry religion as a poisonous set of lies. But what if a belief in the supernatural is natural?’- by John Gray, the New Statesman’s lead book reviewer. His latest book is The Soul of the Marionette: A Short Enquiry into Human Freedom. ; https://www.newstatesman.com/culture/books/2016/01/why-humans-find-it-hard-do-away-religion

No comments:

Post a Comment