நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்; சரியான வாதத்தை முன்வைத்துள்ளார்களா? (6)
எதிர்வினைப்போக்கில்(Reactive) சிக்கிய மேக்ரோ உலக மீடியா குவியத்தைத் தவிர்த்து, மைக்ரோஉலக நேர்வினை குவியத்தில் (Proactive Focus) பயணிக்கும் ரஜினி?
தனிமனிதராக
இருந்தாலும், குடும்பமாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும் சரி;
தெளிவான
தொலைநோக்குடன் கூடிய பார்வையில் தமது பயணத்தை முன்கூட்டியே
கணித்து, வேலைத்திட்டங்களை வகுத்து, நேர்வினைப்போக்கில்(Proactive) பயணிக்கும்போது
முன்னேறுவது இயற்கை விதியாகும்.
அதற்கு
மாறாக, குறுகிய உடனடி பலன்களை (Short term gains) முக்கியமாக கருதி, சந்திக்கும் சம்பவங்களுக்கு எதிர்வினை (Reactive) ஆற்றி, தமது முழுகவனத்தையும் செயல்பாடுகளையும்
கொண்டு, எதிர்வினைப்போக்கில் பயணிக்கும்போது பின்னேறுவதும் இயற்கை விதியாகும். (https://proactivechange.com/reactive/
)
எதிர்வினை
அரசியல் (Reactive Politics)
என்பது எந்த கட்சிக்கும் அழிவுப்பாதையாகவும்,
நேர்வினை அரசியல் (Proactive Politics)
என்பது எந்த கட்சிக்கும் வெற்றிப்பாதையாகவும்
அமையும். (http://www.heidrick.com/Knowledge-Center/Article/Anticipate-Proactive-vs-reactive-organizations
& http://www.kellysite.net/proact.htm
)
அருவருப்பான
இரைச்சலை ஏற்படுத்தி எதிர்வினை அரசியலில் பயணிக்கும் கட்சிகள் அழிவை நோக்கி பயணிப்பவை ஆகும்; அறிவு முதிர்ச்சி இன்றியும், அறிவு மூலதனம் இன்றியும் (lack maturity and
intellectual capital) அக்கட்சிகள்
பயணிப்பதே அதற்கு காரணமாகும்.
(‘Political parties that only
react lack maturity and intellectual capital. Those that are proactive are busy
at making their roadmaps without much cacophony. ; http://www.theshillongtimes.com/2017/08/22/proactive-versus-reactive-politics/ ) அறிவு மூலதனமுடையவர்களையும், கட்சிக்காகவே வாழ்ந்து முதிர்ச்சியுடன் பயணிப்பவர்களையும் ஓரங்கட்டி, மீடியா வெளிச்சத்தில் உள்ள குடும்ப அரசியல் கட்சிகள் எல்லாம், அவ்வாறு அழிவை நோக்கி பயணிப்பதை தவிர்க்க முடியாது.
முதல்வராக
இருந்து எதிர்வினை (reactive) ஆற்ற வாய்ப்பு வந்த
போது,ராஜாஜி அதைப் புறக்கணித்தார்; என்பதை கீழ்வரும் தகவல் உணர்த்தும்.
இந்திய
விடுதலைக்கு முன் ராஜாஜி முதல்வராக
இருந்த போது, ஈ.வெ.ரா
அவர்கள் கும்பகோணத்தில் இந்து கடவுள் பொம்மைகளை உடைக்கும் ஊர்வலம் நடத்திய போது, முதல்வர் ராஜாஜி அதைப் புறக்கணித்ததால், அப்படி ஒன்று நடந்ததா? என்ற கேள்வி எழும்
அளவுக்கு அது இருட்டில் மறைந்தது.
கும்பகோணம்
போலவே, முதல்வர் கருணாநிதி ஆட்சியில் சேலத்தில் இராமர் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் ஈ.வெ.ரா
அவர்கள் தலைமையில் நடந்ததை, புகைப்படங்களுடன் துக்ளக் வெளியிட்டது. 'அந்த' துக்ளக் இதழை முதல்வர் கருணாநிதி
தடை செய்ததானது, அந்த ஊர்வலமானது இன்றுவரை
பேசப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது; 'அந்த' துக்ளக் இதழை தேடி படிக்கும்
விளைவை ஏற்படுத்தி, துக்ளக்கின் வளர்ச்சிக்கு பலகோடி ரூபாய் செலவழித்திருந்தாலும் கிடைத்திருக்காத வளர்ச்சிக்கு, அந்த தடையானது வித்தானது.
அதன் மூலம் முதல்வராக இருந்து எதிர்வினை(Reactive) ஆற்றி, துக்ளக் இதழின் வளர்ச்சிக்கும், தொலைநோக்கில் தமது வீழ்ச்சிக்கும் முதல்வர்
கருணாநிதி வழி வகுத்துக் கொண்டார்.
எச்.ராஜாவின் கனிமொழி தொடர்பான குறுஞ்செய்திக்கு: (http://www.business-standard.com/article/politics/bjp-leader-h-raja-calls-dmk-s-kanimozhi-illegitimate-child-of-karunanidhi-118041800750_1.html
) ராஜாஜி வழியில், எதிர்வினை ஆற்றாமல், தி.மு.க
ஆர்வலர்கள் புறக்கணித்திருந்தால்;
இன்று
கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் இணைய தேடலில்;
'பெரம்பலூர்
சாதிக் பாட்சா, அண்ணா நகர் ரமேஷ்' மட்டுமின்றி,
'ஒத்திசைவு பொதுக்கருத்துருவாக்க சமூக செயல்நுட்பத்தில் (public opinion social resonance mechanism)
‘மாணவர் சிதம்பரம் உதயகுமார்' உள்ளிட்டவர்களின் 'மர்ம மரணங்கள்' முக்கியத்துவம்
பெற்றிருக்காது;
என்பதும்,
'அந்த தேடலின்' விளைவான இளையர்களின் வாக்குகள்
இழப்பினை, தி.மு.க
அடுத்து வரும் தேர்தல்களில் தவிர்க்க முடியாது; என்பதும் எனது ஆய்வு கணிப்புகளாகும்.
அது
போலவே எஸ்.வி.சேகர்
'Forward' செய்த தகவலுக்கு எதிர்வினை ஆற்றாமல், புறக்கணித்திருந்தால்,
அதனாலும்
வரும் விளைவுகளையும், தேர்தல்களில் தி.மு.க
தவிர்த்திருக்கலாம்; என்பதும் எனது ஆய்வுக் கணிப்பாகும்.
அதிலும்
சாமான்யர்கள் தொடர்புடைய மைக்ரோஉலகத்திலிருந்து, தமிழ்நாட்டில் மேக்ரோஉலகமானது தனித்துவமாக துண்டிக்கப்பட்டுள்ள சூழலில் தான், இனிவரும் தேர்தல்களை எல்லா கட்சிகளும் சந்தித்தாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளன.
‘மேக்ரோ
உலகத்தில் 'இழிவான சமரசங்கள்' இன்றி, தமது சமுக நிலையை
பாதுகாத்து வாழ்வதானது கடினமாகி வரும் சூழலில்;
வாழ்க்கையில்
இயல்பான இன்பங்களை அனுபவித்து வாழ விரும்புபவர்கள் எல்லாம்
இழப்புகளை பற்றிய கவலையற்ற எளிமையான, போலி பாராட்டு, புகழுக்கு
இடமளிக்காத வகையில் வாழ்வதன் மூலமே;
……..
'விகேரியஸ்'(Vicarious)
இன்பங்கள் உள்ளிட்ட இயற்கையிலும், சமூகத்திலும் வெளிப்படும் இன்பங்களை அனுபவித்து வாழ முடியும். ( http://tamilsdirection.blogspot.in/2016/02/style-definitions-table.html
)
நடுமட்டத்திலும்,
கீழ்மட்டத்திலும் வாழ்பவர்களுக்கு ஒப்பீட்டளவில் இழப்புகளை எளிதில் சந்திக்க முடியும் என்பதால்;
தமிழ்நாட்டில்
'உண்மையான தன்மானத்துடன்' வாழ்பவர்கள் எல்லாம் ஒப்பீட்டளவில் நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் அதிகமாகவும், மேல் மட்டத்தில் குறைவாகவும்
இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின்
மறைவானது, மேல் மட்டத்தில் தன்மானக்கேடான
முறையில் வாழ்பவர்களை எல்லாம் மீடியா வெளிச்சத்தில் கொண்டு வந்து, மைக்ரோ உலகத்தில் வாழ்பவர்களிடையே கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கி விட்டதால்;
மேக்ரோ
உலகமானது 'தன்மான மீட்பு' நோக்கி, மாற வேண்டிய நெருக்கடியில்
சிக்கியுள்ளது; மேக்ரோ உலகத்திற்கான மாற்றங்களின் 'முளைகள்' எல்லாம் மைக்ரோ உலகத்திலிருந்து தான் தொடங்கும்;
என்ற
சமுகவியல் விதியை நிரூபிக்கும் வகையில்.
பாழடைந்து
அல்லது ஊழல் கட்டுமானத்தில் சிக்கிய
கட்டிடங்கள் எல்லாம் மழையில் வெள்ளத்தில் இடிந்து விழுவதற்கு முன்பேயே, அக்கட்டிடங்களில் கட்டுமானப் பொருட்களின் அணுக்களும் (atoms) மூலக்கூறுகளும் (molecules) பாழடைவதற்கான மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதை, 'சேதமற்ற ஆய்வு' (Non-Destructive
Testing) முறையில் முன்கூட்டியே கணிக்க முடியும்; சேதங்களையும் தவிர்க்க முடியும்;
மக்கள்
நலனில் உண்மையான அக்கறை உள்ள கட்சிகளின் ஆட்சிகளில்.
அது
போலவே சமூகத்திலும் தமிழ்நாட்டில் இன்றுள்ள மேக்ரோ உலகமானது இடிந்து விழுவதற்கு முன்பேயே, சமூகவியலுக்கான 'சேதமற்ற ஆய்வு' (Social
Non-Destructive Testing) முறையில்,
நான் விடுத்துள்ள அபாய எச்சரிக்கைளில்;
கட்டிடங்கள்
போலின்றி, சமூக எந்திரவியலில் (Social Mechanics) மைக்ரோ உலகில் வீழ்ந்து வரும் போக்குகளுனேயே, புதிய மேல்கட்டுமானத்திற்கான போக்குகளும் முதலில் மைக்ரோ உலகில் தான் வெளிப்படும் என்பதையும்
கருத்தில் கொள்ள வேண்டும்.
எனது
அபாய எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, தன்மானக் கேடான திசையில் பயணிக்கும் கட்சிகளும், மனிதர்களும், குடும்பங்களும், 'அதற்கான விலையை' கொடுப்பதிலிருந்தும் தப்ப முடியாது;
என்பதும்
சமூகவியல் இயற்கை விதியாகும்.’ ( ‘தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகத்திலிருந்து'
(Micro-world) துண்டிக்கப்பட்டு
வரும் 'மேக்ரோ உலகம்’(Macro-world (2);‘என்கவுண்டரில்’ சுட்டுக்
கொல்லப்பட்ட 'ரவுடி வீரமணி' மூலம் 'விகேரியஸ் இன்பம்' (Vicarious
Joy)’; http://tamilsdirection.blogspot.sg/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_28.html
)
தமிழ்நாட்டில்
மனித உறவுகளிலும், உரையாடல்களிலும் 'லாபநட்ட கள்வர் கணக்கு' ஆதிக்கம் செலுத்தி வருவதால்;
கருத்துக்கணிப்பில்
கேள்வி கேட்பவருக்கு என்ன லாபம்? எந்த
பதில் சொன்னால் தனக்கு லாபம் அல்லது பாதிப்பு இருக்காது? என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்னே தான் பதிலே வெளிப்படும்.
தமிழ்நாட்டு
சட்டமன்ற பொதுத் தேர்தல்கள் 2011 மற்றும் 2016 முதல் கடந்த ஆர்.கே.நகர்
இடைத் தேர்தல் வரை, துக்ளக் தவிர்த்த,
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் எல்லாம், பெரும்பாலும் தி.மு.க வை
நம்ப வைத்து ஏமாற்றிய கணிப்புகளாக முடிந்ததற்கு, அதுவே காரணமாக இருந்தால் வியப்பில்லை.’ (http://tamilsdirection.blogspot.sg/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html
)
தமிழ்நாட்டில்
1967 முதல் 'ஆதாய அரசியல்' முளை
விட்டு வளர்ந்த வேகத்தில், 'அரசியல் நீக்கமும்' (Depoliticize) வளர்ந்து உச்சமாகி, இன்று அரசியல் கட்சிகளும் பெரும்பாலான மீடியாக்களும் 'மேக்ரோஉலகமானது, தமிழ்நாட்டின் மைக்ரோ உலகத்துடன் துண்டிக்கப்பட்டது தெரியாமல் பயணிக்கிறார்களா? என்ற ஆய்விற்கு, கீழ்வருபவை
துணைபுரியும்.
‘1967க்குப்பின் அரசு
துறைகளில் எந்த அளவுக்கு லஞ்சம்
வளர்ந்துள்ளதோ, அந்த அளவுக்கு, அரசை
மட்டும் நம்பாமல், 'செல்வாக்குள்ள' நபரின் தயவுடனேயே தான், கிராமம் வரை வாழ முடியும்
என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது.
பிறப்பு
சான்றிதழ், பள்ளியில் சேர்த்தல், சாதி சான்றிதழ், வேலையில்
சேர்தல், தொழில்/கடை தொடங்குதல், தெரு
ஓரம் வியாபாரம், இறப்பு சான்றிதழ், காவல் நிலையம், நீதிமன்றம் என்று ஒரு மனிதர் பிறந்தது
முதல் இறக்கும் வரை, இறந்து இறுதி
சடங்கை நிறைவேற்றும் வரை, அந்தந்த காரியங்களுக்கு
உதவும் 'செல்வாக்கான'
நபரின், தயவு
தேவைப்படுகிறது.
அப்படிப்பட்ட
'செல்வாக்கான' நபர்கள் தெரு/கிராமம். வட்டம்,
மாவட்டம், மாநிலம் என்ற அடிப்படையில் வலைப்பின்னல்
கொண்ட இரண்டு கட்சிகள் தி.மு.க
மற்றும் அ.இ.அ.தி.மு.க
ஆகும். அந்த கட்சிகள் தேர்தலுக்கு
செலவழிக்கும் பணத்தை போல், பல மடங்கு பணத்தை
வைத்திருக்கும் கட்சி கூட, அது போன்ற
வலைப்பின்னலின்றி, அந்த பணத்தை வாக்குகளாக
மாற்ற முடியாது.
அந்த வலைபின்னலை, கட்சிக்குள் தடைகளின்றி, 'முழு
அதிகாரத்துடன்' செயல்படுத்திய
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பின், அ.இ.அ.தி.மு.கவில்
அடுத்து யார் இருக்கிறார்? குடும்பத்துக்குள்
தடைகளுடன் செயல்பட்டு, ஆனாலும் 2016 தேர்தலில்
'சாதனை' வெற்றி பெற்றுள்ள ஸ்டாலினுக்குப் பின், தி.மு.கவில் அடுத்து
யார் இருக்கிறார்? என்ற கேள்விகள்,
அந்த வலைப்பின்னலானது, மரண வாயிலில் நிற்பதை,
குறிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (மயிரிழையில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்த தி.மு.கவானது,
ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்ந்த நாள் முதல் எதிர்வினை(Reactive)
அரசியல் போக்கில் பயணித்ததே, அடுத்து வந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில்,
ஆளுங்கட்சி சிதறுண்ட நிலையிலும், டெபாசீட் இழக்கும் அளவுக்கு பலகீனமானது. அது தெரியாமல், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி, தனது மகனை கட்சியில்
சேர்த்து மேலும் பலகீனமாகும் திசையில் தி.மு.க
பயணிக்கிறதா? என்பது தி.மு.க
ஆர்வலர்கள் முன்னெடுக்க வேண்டிய ஆய்வாகும்.)
1967க்குப்பின் அந்த
வலைப்பின்னலில், எந்த அளவுக்கு, சுயலாப
கள்வர் நோய் வளர்ந்துள்ளதோ, அந்த
அளவுக்கு, குடிநீர் பிரச்சினை, சாலை பிரச்சினை,போன்ற
இன்னும் பல தெரு/கிராம/உள்ளூர் பிரச்சினைகளும் வளர்ந்துள்ளன. அந்த வலைப்பின்னலை நம்பாமல்,
பாதிக்கப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்கள் வீதியில் இறங்கி போராடுவதும், அந்த அளவுக்கு அதிகரித்துள்ளது;
அந்த வலைப்பின்னலை 'அரசியல் நீக்கம்'(Depoliticize) நோய்க்குள்ளாக்கி.
அத்தகைய
போராட்டங்கள் ‘மீடியா’ கவனத்தை ஈர்த்தவுடன், அதில் நுழைந்து ‘வெளிச்சம்’ போடுவதும், ‘மீடியா’ கவனம் குறைந்தவுடன், அதிலிருந்து விலகி, அடுத்த ‘வெளிச்சத்தை’ நோக்கி ஓடுவதுமான, 'அரசியல் நாடகங்களின்' காலமும், முடிந்து வருகிறது. அந்த வலைப்பின்னல் மூலம்
'உருவான', 'ஊழல் பணக்காரர்' குடும்ப
ஆடம்பர திருமணங்களில் கலந்து கொள்பவர்களிடையே, அந்த நபரின் 'கடந்த
காலம்' பற்றியும், 'என்னென்ன
வழிகளில் சம்பாதித்தார்?' என்பது பற்றியும், 'கிசு
கிசு' பேச்சுகள் அதிகரித்து வருவதும், 'புதிதாக'
அரங்கேறிவரும் 'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும் சமுக நகைச்சுவை' ஆகும்.
அதன் தொடர்ச்சியாக, அந்த 'ஊழல் பணக்காரர்கள்' எல்லாம்,
'விலை உயர்ந்த’ காரில், தெருவில்
செல்லும் போது, தெரு ஓர தேநீர்
கடைகளில், அந்த 'கிசுகிசு' பேச்சுக்கள், 'உரக்க'
பேசி, விவாதிக்கப்படுகின்றன.
அத்தகையோரில் 'அதிபுத்திசாலிகள்
சிலர், 'தமிழ், தமிழ் உணர்வு' 'புரவலர்களாக' வலம் வரும்போது, ஆங்கிலவழியில்
கல்வி பயிலும்/பயின்ற மாணவர்கள் மத்தியிலும், 'ஆங்கிலத்தில்' பேச 'ஏங்கி வாழும்'
சாதாரண மக்கள் இடையிலும், தமிழும், தமிழ் உணர்வும் கேலிப்பொருளாகி வருகின்றன. அதே சமுக செயல்நுட்பத்தில்,
‘அரசியல் நீக்கம்’ (Depoliticize) போக்கில், தமிழ்/திராவிடக் கட்சிகளின் சமூக அடித்தளமானது ‘அரிக்கப்பட்டு’ வருகின்றன.
மாணவர்களிடமிருந்தும்,
சாதாரண மக்களிடமிருந்தும், 'அந்நியமாகி' உள்ள போக்கிலிருந்து, தமிழ்
அமைப்புகள் மீள வேண்டுமானால், அந்த
'அதி புத்திசாலிகளின் சமூக நோய் தொடர்பிலிருந்து'
விடுபட்டு, ஊழல் ஒழிப்பிலும் பங்கேற்று,
தமிழ்வழிக்கல்வி அரசு பள்ளிகளை மரண
வாயிலிலிருந்து மீட்பதற்கு, முன்னுரிமை
கொடுத்து செயல்பட வேண்டும்.
எந்த
கட்சியும் கொள்கையும் சாராத, சாதாரண மக்களிடம் வெளிப்படும் 'சுயலாப நோக்கற்ற' இயல்பான
அன்பு, நேர்மை போன்றவை, ஒப்பீட்டளவில், கட்சி/கொள்கை ஆதரவாளர்களிடம் குறைவு என்பதும் எனது அனுபவமாகும். அது
எந்த அளவுக்கு ‘அரசியல் நீக்கம்'(Depoliticize) போக்குடன்
தொடர்புடையது? என்பதும்
ஆய்விற்குரியதாகும். 'கொள்கைக்காக' மனிதர்களை மதித்த காலம் மாறி, ‘அரசியல்
நீக்கம்' போக்கில்,
அவர்களை எல்லாம், 'பொதுவாழ்வு வியாபாரிகளாக', சாதாரண மக்களில் பெரும்பாலோர் கருதுகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்………. ஊழல் பெருச்சாளிகள் தண்டிக்கப்படாமல்,
மேலே குறிப்பிட்ட ஊழல் வலைப்பின்னலிலிருந்து, தமிழ்நாட்டை மீட்க
முடியாது. அவ்வாறு மீட்காமல், வாக்குகளுக்கு பணம் கொடுப்பதையும், வாங்குவதையும்
ஒழிக்க முடியாது. நமது குடும்பம், நட்பு,
கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் உள்ளோர்,
'அந்த வலைப்பின்னலில்' இடம் பெற்று, நாமும்
அதன் மூலம் பலன் பெற்று வாழ்ந்து
கொண்டு, 'வாக்குக்கு பணம் வாங்குவது தவறு'
என்றும், 'வாக்களிக்காதது தவறு' என்றும் சொல்லும் அருகதை நமக்கு உண்டா?
எனவே
மேலே குறிப்பிட்ட ஊழல் செயல்பாடுகளை ஒழிக்காமலும்,
அடிமட்டத்தில் உள்ள பொதுப்பிரச்சினைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தொடர்ந்து துணை புரிந்து, அப்பிரச்சினைகளை
தீர்ப்பதில் தமக்குள்ள சுயலாபநோக்கற்ற சமுக அக்கறையை நிரூபிக்காமலும்,
பா.ஜ.க உள்ளிட்டு
எந்த கட்சியும், இனி தமிழ்நாட்டில் வேர்
பிடிக்க முடியாது.’ (‘அரசியல் வெளி (Political Space) காலியாகி விட்டதா? அந்த அரசியல் வெற்றிடத்தை
ஆக்கிரமிக்கும்,சமூக செயல்நுட்பம்?’ ; http://tamilsdirection.blogspot.sg/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html
)
ஆதாய அரசியலின் விளைவான அரசியல் நீக்கத்தில் (depoliticize) பலகீனமாகி வந்த தமிழ்நாட்டு கட்சி அரசியலானது, மரணத்தை தழுவி விட்டதை, ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வெட்ட வெளிச்சமாக்கியது; எம்.ஜி.ஆரை விட, ஜெயலலிதாவை விட, அதிக செல்வாக்குடைய 'தலைவர்'(?) தினகரன் என்பதை உணர்த்திய வாக்குகள் மூலமாக. அடுத்த தமிழக சட்டமன்ற தேர்தலானது, ஆர்.கே.நகர் பாணியிலேயே நடக்கும் அளவுக்கு, தேர்தல் கமிசனும், மத்திய அரசும் ஏமாற மாட்டார்கள்; என்பது எனது கணிப்பாகும்.
நடிகர்களில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது துணிச்சலுடன் அவரை எதிர்த்து, சட்டசபை எதிர்க்கட்சியாகும் அளவுக்கு பிரமிக்கும் வகையில் வளர்ந்து, பின் கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட விஜயகாந்த் டெபாசீட் இழக்கும் அளவுக்கு தோல்வியைத் தழுவினார்; குடும்ப அரசியல் நோயில் சிக்கிய அக்கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது.
நடிகர்களில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது துணிச்சலுடன் அவரை எதிர்த்து, சட்டசபை எதிர்க்கட்சியாகும் அளவுக்கு பிரமிக்கும் வகையில் வளர்ந்து, பின் கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட விஜயகாந்த் டெபாசீட் இழக்கும் அளவுக்கு தோல்வியைத் தழுவினார்; குடும்ப அரசியல் நோயில் சிக்கிய அக்கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது.
ஜெயலலிதா
எதிர்ப்பினை சமாளிக்கும் துணிச்சலின்றி, தமிழ்நாட்டை விட்டே ஓடப்போவதாக அச்சுறுத்திய கமல்ஹாசன், ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் கட்சி அரசியலில் பயணிப்பது நகைச்சுவையானால் வியப்பில்லை.(‘ கமலஹாசன் நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா?’; http://tamilsdirection.blogspot.sg/2017/07/its-mad-mad-mad-tamilnadu-its-mad-mad.html
) 1996 தேர்தலில் ஜெயலலிதா எதிர்ப்புக்கு ஆதரவு கொடுத்து, செயல்மூலம் தனது துணிச்சலை நிரூபித்தவர்
ரஜினிகாந்த்.
தமிழ்நாட்டில்
அடுத்து மைக்ரோஉலகத்தில் வேர் பிடித்து, 'ஆந்திர
என்.டி.ஆர்' பாணியில்
அதிவேகத்தில் மேக்ரோஉலகில் அரசியலில் முன்னேறி ஆட்சியைப் பிடிக்கும்;
சமூக
செயல்நுட்பத்தினை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
‘கனிவான
சமூக சூழலில், நடக்கும் சமூக மாற்றங்களை முன்கூட்டியே
கணிக்க உதவும் சமூகவியல் கருத்தாக்கமானது, 'சமூக நியுக்கிலியேசன்' (Social Nucleation) ஆகும்……… எனது ஆய்வுகள் மூலம்,
'பெரியார்' ஈ.வெ.ராவின்,
தமிழரின் 'ஆணி வேர்கள்' தொடர்பான
தவறான நிலைப்பாடுகளை திருத்திக் கொண்டு, எனது வழியில்,
காமராஜரை ஈ.வெ.ரா
ஆதரித்தது போல், 2005 முதல், மோடி ஆதரவு போக்கில்,
எந்த 'பெரியார்' கட்சியாவது பயணித்திருந்தால்;
இன்று
'சமூக நியுக்கிலியேசன்' போக்கில், அஸ்ஸாமைப் போல, தமிழ்நாட்டிலும் அக்கட்சியானது,
தாய்மொழிவழிக் கல்வி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான நிபந்தனைகளுடன்;
பா.ஜ.கவுடன் சேர்ந்து,
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை அமைத்திருக்க முடியும்.
அதற்கான
வாய்ப்பினை, 'பெரியார்' கட்சிகள் தாமே கெடுத்துக் கொண்ட
சூழலில்;
அதற்கான
சமூக நியுக்கிலியேசன் நடைபெற, மக்கள் செல்வாக்குள்ள நபர் எவராவது அரசியலில்
நுழைந்தாக வேண்டும்.
அது
ரஜினி மூலமாக நடப்பதும், அல்லது வேறு எதிர்பாராத நபர்
மூலம் நடப்பதும், ரஜினி மேற்கொள்ள இருக்கும் நிலைப்பாடுகளை பொறுத்ததாகும்.’ (‘தமிழ்நாட்டில் 'சமூக நியுக்கிலியேசன்' (Social Nucleation); ரஜினி மூலமாகவா? அல்லது வேறு எதிர்பாராத நபர்
மூலமாகவா?’ ; http://tamilsdirection.blogspot.sg/2017/06/4-socialnucleation-signals-on-growth.html
)
மேக்ரோ
உலக மீடியாக்கள் மைக்ரோ உலகத்தில் இருந்து துண்டிருப்பது தெரியாமல், மீடியா வெளிச்சத்தில் தமிழ்நாட்டில் நிகழ்பவைகளுக்கு எல்லாம் எதிர்வினையாற்றி, மீடியாக்களுக்கு தீனி போட்டு பயணிக்காமல்; (Those that are proactive are busy at making their roadmaps without much cacophony. ; http://www.theshillongtimes.com/2017/08/22/proactive-versus-reactive-politics/ )
நிதானமாக
மைக்ரோ உலகில் வேர் பிடித்து, அதனை
உறுதி செய்து, அதிகாரபூர்வமாக கட்சியை அறிவித்து ரஜினிகாந்த் பயணிக்கத் தொடங்கி விட்டாரா? என்ற யூகத்திற்கு கீழ்வரும்
தகவல் இடம் அளித்துள்ளது.
‘நடிகர்
ரஜினிகாந்த், விரைவில் கட்சி தொடங்க உள்ளார். அதற்கு வசதியாக தற்போது தனது ரசிகர் மன்றத்தை
மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடந்து வருகிறது.
மக்கள்
மன்றத்திற்கு குக்கிராமங்கள் தோறும் கிளைகள் அமைக்கவும், அந்த கிளைகளுக்கு நிர்வாகிகளை
நியமிக்கவும் அவர் மாநில நிர்வாகிகளுக்கு
உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 65 ஆயிரத்து 500 குக்கிராமங்களிலும் மன்றத்தின் கிளைகள் துவக்கப்பட இருக்கிறது.
உறுப்பினர்களை
சேர்ப்பது, அந்தந்த பகுதியில் உள்ள பிரச்னைகளை தலைமைக்கு
தெரிவிப்பது. தனி நபர்களுக்கு தேவைப்படும்
உதவிகளை செய்வது ஆகியவை மக்கள் மன்ற கிளை நிர்வாகிகளின்
முக்கிய பணிகளாகும்.
தமிழ்நாடு
முழுவதும் 65500 கிளைகள், ஒரு கோடி உறுப்பினர்கள்
சேர்ந்தவுடன் அந்த பட்டியலுடன் புதிய
கட்சியை அறிவிக்க ரஜினி திட்டமிட்டிருக்கிறார்.’(http://www.dinamalar.com/mgr/detail.php?id=68435
)
மைக்ரோஉலகில்
பிரமிக்கும் வகைகளில் உதவிகள் புரிந்து வரும், ரஜினியின் அரசியலை ஆதரிக்கும் ராகவா லாரன்ஸ் போலவே, அது போலவே பயணித்து
வரும் ஆர்.ஜே.பாலாஜி,
சிவக்குமார் போன்ற இன்னும் பலர் எல்லாம் தாமாக
முன்வந்து ஆதரிக்கும் அளவுக்கு, ரஜினியின் அதிகாரபூர்வ கட்சி பயணிக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன;
என்பது
எனது கணிப்பாகும். அந்த வாய்ப்புகள் பொய்த்துப்போனாலும் வியப்பில்லை; கீழ்வரும் காரணங்களால்.
'புத்திசாலி அரசியல் கொள்ளையர்கள்' அதை முன்கூட்டியே 'நுகர்ந்து', தமது செல்வாக்கிற்குட்பட்ட பகுதிகளில் ர.ம.மன்றம் வேர் பிடிக்க அனுமதிக்க மாட்டார்கள்; பேரம் பேசி தமது கட்டுப்பாட்டில் செயல்பட அனுமதிப்பார்கள்; வாய்ப்பு கிடைத்தால், ரஜினிக்கு 'வாலாட்டி', ரஜினியின் கட்சிக்குள் நுழைந்து, செல்வாக்கு பெறும் போக்கில்.
மேலே குறிப்பிட்ட தடைகளை சமாளித்து வெற்றி பெறுபவர்களுக்கு எல்லாம், கீழ்வரும் போக்கானது வினை ஊக்கியாக (Catalyst) சாதகமாகும்.
சாத்தியமுள்ள வாய்ப்புகளுடன் நேர்வினைப் போக்கில்(Proactive), பெரும்பாலும் பயணிக்கும் மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் பார்வையில்;
தன்மானக்கேடாக வாழும் கட்சிகளும் தலைவர்களும், 'சமூக புழுதிகளாக' தெரிவதால், தமிழ்நாட்டில் ' சமூக புழுதி நீக்கம்' (Social De-pollution) நடைபெற்று, தமிழ்நாடு மீள்வதும் நிச்சயமாகி வருகிறது. சமூக அக்கறையுடன் நேர்வினைப்போக்கில்(Proactive) பயணிக்கும் தனிமனிதர்களும், குடும்பங்களும், அமைப்புகளும் அந்த மீட்சிக்கு பங்களித்து வருபவர்கள் ஆவர்.
'புத்திசாலி அரசியல் கொள்ளையர்கள்' அதை முன்கூட்டியே 'நுகர்ந்து', தமது செல்வாக்கிற்குட்பட்ட பகுதிகளில் ர.ம.மன்றம் வேர் பிடிக்க அனுமதிக்க மாட்டார்கள்; பேரம் பேசி தமது கட்டுப்பாட்டில் செயல்பட அனுமதிப்பார்கள்; வாய்ப்பு கிடைத்தால், ரஜினிக்கு 'வாலாட்டி', ரஜினியின் கட்சிக்குள் நுழைந்து, செல்வாக்கு பெறும் போக்கில்.
மேலே குறிப்பிட்ட தடைகளை சமாளித்து வெற்றி பெறுபவர்களுக்கு எல்லாம், கீழ்வரும் போக்கானது வினை ஊக்கியாக (Catalyst) சாதகமாகும்.
சாத்தியமுள்ள வாய்ப்புகளுடன் நேர்வினைப் போக்கில்(Proactive), பெரும்பாலும் பயணிக்கும் மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் பார்வையில்;
தன்மானக்கேடாக வாழும் கட்சிகளும் தலைவர்களும், 'சமூக புழுதிகளாக' தெரிவதால், தமிழ்நாட்டில் ' சமூக புழுதி நீக்கம்' (Social De-pollution) நடைபெற்று, தமிழ்நாடு மீள்வதும் நிச்சயமாகி வருகிறது. சமூக அக்கறையுடன் நேர்வினைப்போக்கில்(Proactive) பயணிக்கும் தனிமனிதர்களும், குடும்பங்களும், அமைப்புகளும் அந்த மீட்சிக்கு பங்களித்து வருபவர்கள் ஆவர்.
No comments:
Post a Comment