Sunday, April 15, 2018


ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் முன்னேற்றமா? பின்னேற்றமா? (2);



தலைவர்களை குவியமாக கொண்டு சமூக அழுத்தம் (Social Pressure) அதிகரிப்புக்குள்ளான, சமூக விசைகளின் (Social Forces) ‘.பி.எல் கிரிக்கெட் எதிர்ப்பு வடிகால் வெளிப்பட்டது  வளர்ச்சிக்கா? வீழ்ச்சிக்கா?


தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின், பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தினை உணர்ச்சிபூர்வ போக்கில் பாராட்டுபவர்கள் எல்லாம்;

கீழ்வரும் தகவலை அறிவுபூர்வ ஆய்வுக்கு உட்படுத்துவார்களா?

விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஈழக்குழுக்கள் தமிழ்நாட்டில் வைத்திருந்த ஆயுதங்கள் எல்லாம், எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஒரு முறை பறிமுதல் செய்யப்பட்டன. உடனே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 'சாகும் வரை உண்ணாவிரதம்' என்ற 'காந்தி வழி' போராட்டத்தினை மேற்கொண்டார். பின் அவர் தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்;

விடுதலைப்புலிகளிடம் கைப்பற்றிய ஆயுதங்கள் மட்டுமின்றி, பிற குழுக்களிடம் கைப்பற்றிய ஆயுதங்களும் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்பட்ட பின்.  

When the then state intelligence chief, K. Mohandas, ordered the seizure of the weapons of all militants in the state, Prabhakaran went on a fast-unto-death demanding they be returned and all the arrested cadres released. MGR got the DGP to return to Prabhakaran not only his own guns but also many that were picked up from the other groups. (http://www.lankalibrary.com/phpBB/viewtopic.php?f=2&t=4805 )

காந்தி மேற்கொண்ட உண்ணாவிரதங்களின் மூலம் காந்தி சாகாமல் தப்பித்ததும், எம்.ஜி.ஆரைப் போலவே, காலனி அரசும் அவரை அணுகியது தான் காரணமா?

பிரபாகருக்கு நெருக்கமான முதல்வர் எம்.ஜி.ஆர் எதற்காக, தமிழ்நாட்டில் ஈழ குழுக்களின் ஆயுதங்களை பறிமுதல் செய்தார்? அதை எதிர்த்து, தமது ஆயுதப் போராட்ட பாதையிலிருந்து தடம் புரண்டு, 'காந்தி பாணி' உண்ணாவிரதப் போராட்டத்தினை பிரபாகரன் ஏன் மேற்கொண்டார்? அவ்வாறு பறிமுதல் செய்யத் தூண்டிய காரணங்களுக்கும், பறிமுதல் செய்ததை மீண்டும் திருப்பிக் கொடுக்க அனுமதித்த காரணங்களுக்கும் உள்ள உறவு என்ன? மற்ற குழுக்களிடமிருந்து பறிமுதல் செய்த ஆயுதங்களையும் பிரபாகரனிடம் ஒப்படைத்ததன் பின்னணி என்ன? அது நேர்மையல்ல? என்று 'ஏமாந்த' குழுக்களோ, அவர்களின் தமிழ்நாட்டு ஆதரவாளர்களோ ஏன் குரல் எழுப்பவில்லை?, பிற குழுக்களை வீழ்த்தி, விடுதலைப்புலிகள் 'வளர்ந்த'(?) பின், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக,'அந்த' ஆதரவாளர்களில் மாறியவர்கள் யார்

இன்று விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக முன்னணியில் இருக்கும் தலைவர்கள் எல்லாம், அந்த காலக்கட்டங்களில் ஈழ விடுதலைக்கு ஆதரவாக என்ன பங்களித்து, என்ன நிலைப்பாடுகள் எடுத்து, என்ன லாபம்/நட்டம் அடைந்து பயணித்தார்கள்? இன்றும் சுயலாப நோக்கின்றி விடுதலைப் புலிகளின் ஆதரவார்களாக பயணிப்பவர்கள் எல்லாம், அறிவுபூர்வமாக விடைகளை தேடுவார்களா? அல்லது 'சமூக விட்டில் பூச்சிகளாக' அல்லது பொதுவாழ்வு வியாபாரிகளாக 'புத்திசாலித்தனமாக வளமாகி'(?) வாழ்வார்களா? அத்தகைய 'புத்திசாலிகள்'(?) நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டங்களில் இருந்து, அத்தகையோரை ஓரங்கட்டாமல், நாம் எல்லாம் வாழ்ந்தால், தமிழ்நாட்டில் பொதுவாழ்வு வியாபாரிகளை ஓரங்கட்ட முடியுமா? அவ்வாறு ஓரங்கட்டாமல், தமிழும், தமிழ்நாடும் மீள முடியுமா?

பிரபாகரனுக்கு முன் தமிழ்நாட்டில், அதிக செல்வாக்குடன் கூடிய பணபலத்தில் இருந்தபுளோட் தலைவர் உமா மகேசுவரனை துதி பாடி பிழைத்த அதே நபர்கள், அவரின் மறைவிற்குப் பின் பிரபாகரன் துதி பாடி பிழைத்ததற்கும், ஜெயலலிதா துதி பாடி பிழைத்தவர்கள், அவரின் மறைவிற்குப் பின், சசிகலா துதி பாடி பிழைத்ததற்கும், வேறுபாடு உண்டா?

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளின் போக்கில், 'அரசியல் நீக்கம்' (Depoliticize) வளர்ந்த சமூக செயல்நுட்பத்தின் ஊடே, சமூக முதுகெலும்பும் முறிந்து, தன்மானக்கேடாக வாழ்ந்து 'வளமாகும்'(?) போக்கும் அரங்கேறியதா? என்ற கேள்வியின் முக்கியத்துவத்தை, ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சையும் மரணமும் எழுப்பியுள்ளன.

‘"சசிகலாவை வணங்கி தொழுவது வாஸந்திக்கு இப்போது குமட்டலாக ("கூச்சமும் அச்சமும்") இருக்கிறது. அதிமுகவின் கர்த்தாவாகிய எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் ஜெயலலிதா என்கிற ஒரு முன்னாள் நடிகை பின்னால் அரசியல் வித்தகர்கள் அணிவகுத்த போதும் ஒரு கட்டத்தில் தாள் பணிந்த போதும் இதே அஜீரணக் கோளாறு பலருக்கும் நேர்ந்தது தான்.ஆனால் அந்த கசப்பை வெகுஜன ஊடகங்களின் முன் பகிர்ந்து கொண்டவர் எவருமில்லை.வாஸந்தியும் கூட தான்.ஒருவேளை அப்போது "கூச்சமும் அச்சமும்" வாஸந்திக்கு வரவில்லையென்றால் இப்போது மட்டும் ஏன் வர வேண்டும்?"

"அந்த கசப்பை வெகுஜன ஊடகங்களின் முன் பகிர்ந்து கொண்டவ"ராக, வாஸந்தி இருந்திருந்தால், அது மிகவும் பாராட்டுதலுக்குரியது..’ (http://tamilsdirection.blogspot.sg/2017/01/blog-post_12.html )

.வெ.ரா அவர்கள் தமது கொள்கையில் சிக்கியவர்களை எல்லாம், தாய்மொழி அடிப்படையிலான‌ 'அடையாள இழப்புக்கு' உட்படுத்தி, அதன் விளைவான உலக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளபலவகை போதைகளுக்கு ஆட்படும் வாய்ப்புகளைக் கூட்டிய போக்கினைப் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_31.html  ) மேலே குறிப்பிட்ட சமூக முதுகெலும்பும் முறிந்து, தன்மானக்கேடாக வாழ்ந்து 'வளமாகும்'(?) போக்கும், 'அந்த' போதைகளின் ஊடே வளர்ந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தங்கள் குடும்பப் பிள்ளைகளை எல்லாம் படித்தாலும், படிக்காவிட்டாலும் 'செட்டில்' செய்து, ஊரான் வீட்டுப்பிள்ளைகளை போராட்டங்களில் ஈடுபடுத்தும் போக்கில் உள்ளவர்களை ஒதுக்காமல், தமிழ்நாடு முன்னேற முடியுமா? மாணவர்களை ஈடுபடுத்தாமல், பெரியவர்கள் முன்னெடுத்த 1938 இந்தி எதிர்ப்பு போராட்டமானது, பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் சேதமின்றி, கட்டாய இந்தியை ஒழித்து வெற்றி பெற்றதா? (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html) பெரியவர்கள் ஒதுங்கி, மாணவர்கள் முன்னெடுத்த 1965 இந்தி எதிர்ப்பு போராட்டமானது, பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்து, குப்பன், சுப்பன் வீட்டுப்பிள்ளைகள் பலரை காவு கொடுத்து, 1967இல் தி.மு. வை ஆட்சியில் அமர்த்தி, அரசுப் பள்ளிகளில் விருப்பமுள்ளவர்கள் இந்தி படிக்க இருந்த வாய்ப்பை ஒழித்து, பின் ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டும் இந்தி படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி, 'காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகள் கட்டிக்கொள்ள ஆட்சேபணையில்லை' என்று முதல்வர் தமிழக சட்டசபையில் அறிவித்த போது, எதிர்க்காதவர்கள், (http://www.dinamalar.com/news_detail.asp?id=1998902   வாசகர் மடல்: Vimalathithan - Abu Halifa,குவைத்) தமிழ்நாட்டின் ஆறுகள், ஏரிகள், கிரானைட், தாதுமணல் ஊழலுக்கு இரையான போதும், தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, அபகரித்த போதும், எதிர்க்காதவர்கள் எல்லாம், இன்று தமிழ்நாட்டில் 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்கும் போராட்டத்தில் முன்னணியில் இருப்பதானது, தீர்வை நோக்கி தமிழ்நாட்டை முன்னேற்றுமா? அல்லது இன்னொரு முள்ளிவாய்க்காலாக தமிழ்நாட்டை பின்னேற்றுமா? (http://tamilsdirection.blogspot.sg/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

சீமான், வைகோ, பாரதிராஜா உள்ளிட்டு .பி.எல் கிரிக்கெட் எதிர்ப்பு போராட்ட தலைவர்களில் பெரும்பாலோர் பிரபாகரனை பாராட்டி, சசிகலாவை ஆதரிப்பவர்கள் ஆவர்.  அவர்களில் ஒருவரான வை.கோ, சசிகலாவை ' வீரமங்கை வேலுநாச்சியார்' என பாராட்டியவர் ஆவார்

.பி.எல் கிரிக்கெட் எதிர்ப்பு போராட்ட தலைவர்கள் எல்லாம், .வெ.ரா அவர்கள் முன்னிறுத்திய பொதுத்தொண்டருக்கான இலக்கணத்திற்கு தகுதியானவர்களா? என்ற ஆய்வானது (‘.வெ.ராவின் 'பொதுத் தொண்டனுக்கானஅளவுகோலின்படி, நமது  'யோக்கியதை' எப்படி?’; http://tamilsdirection.blogspot.sg/2016/10/blog-post.html  );

அத்தகையோர் எல்லாம் போராட்டத்தில் முன்னணியில் இருப்பதானது, தீர்வை நோக்கி தமிழ்நாட்டை முன்னேற்றுமா? அல்லது இன்னொரு முள்ளிவாய்க்காலாக தமிழ்நாட்டை பின்னேற்றுமா? என்ற கேள்விகளுக்கான விடைகளைத் தரும்.

சமூகத்தில் வாழும் மனிதர்களை தோற்றுவாயாகக் கொண்டு வெளிப்படும்சமூக ஆற்றல்கள் எல்லாம்;

எந்த சமூக இயக்கவியல் தொழில்நுட்பத்தில் (Social Dynamics Mechanism) தொகுவிசைகளாக (Resultant Forces) வெளிப்படும்?

என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் ஆற்றல்(energy) இருப்பதையும், அந்தந்த நபரின் மனத்தில் உள்ள தேவைகளையும்(needs), ஈடுபாடுகளையும்(interests) பொறுத்து, தனது தேவைகள், தான் சார்ந்துள்ள குடும்பம், நட்பு, கட்சி, பொது நலன் உள்ளிட்டவைக்கு, அவரின் மனதில் உள்ள முக்கியத்துவ தரஏணி வரிசையில்(hierarchical) , அவருடைய ஆற்றல் விசைகளாக (forces) வெளிப்படும், என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.  (’ சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds) ‘; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html 

சமுகத்தில் வளர்ந்து வரும்(growing), தேய்ந்து வரும்(decaying) போக்குகள் உள்ளிட்ட, பொது நலன் தொடர்புள்ள அமைப்புகளிலும், பிரச்சினைகளிலும் செயலாற்றும் விசைகளின் ஊற்றுக்கண்கள் மேலேக்குறிப்பிட்ட, தனி நபரிடமிருந்து வெளிப்படும் விசைகளே ஆகும். இயற்பியலில்(physics) எந்திரவியலில் (Mechanics) எவ்வாறு விசைகள் பிணைப்புகள்(Bonds)  உள்ளிட்ட பல வழிகளில் சேர்ந்து, அடுத்த அடுத்த உயர் மட்டங்களில்,  தொகு விசைகளாக (Resultant Forces)  செயல்படுகிறதோ, அதே போல, சமூக எந்திரவியலில் , மேற்குறிப்பிட்ட விசைகள், அந்த சமூகத்தில் செல்வாக்கில் உள்ள பண்பாடு உள்ளிட்ட கூறுகளின் அடிப்படையில், வெவ்வேறு வகைகளிலான,  வெவ்வேறு, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வகையில், அரசியல், கலை, ஆன்மீகம் உள்ளிட்ட புலங்களில், வெவ்வேறு  தொகு விசைகளாக செயல்படுகின்றன.’ (http://tamilsdirection.blogspot.sg/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

1919 முதல் 1944 வரை  .வெ.ரா அவர்களும், அவர் வழியில் எண்ணற்றோரும், சேமித்து வளர்த்து வந்த சமூக ஆற்றல்கள் எல்லாம், 1944இல் தமிழ்ச் சொல்லான 'இனம்' பொருளில் திரிந்து, 'திராவிடர் கழகம்' உருவான சமூக செயல்நுட்பத்தில் பொதுவாழ்வு வியாபாரப் போக்கானது முளை விட்டு, அந்த சமூக ஆற்றல்களை எல்லாம் உணர்ச்சிபூர்வ போக்கில் அபகரித்து, 1965 இந்தி எதிர்ப்பு போராட்ட வடிகால் மூலமாக .வெ.ரா வசம் இருந்த சமூக நேர்மையுள்ள சமூக ஆற்றல்களை எல்லாம் அழித்து, 1967இல் ஆட்சியை பிடித்து, ஆதாய அரசியல் மூலமாக அரசியல் நீக்கத்தை ஊக்குவித்து, வளர்ந்த பொதுவாழ்வு வியாபார சமூக ஆற்றல்களின் 'உண்மையான பலம் செல்லாக்காசு' என்பதானது, சென்னை வெள்ள நிவாரண மீட்சியில் கட்சி சார்பற்ற இளைஞர்கள் மூலம் அம்பலமாகியிருந்த சூழலில்;

பிரதமர் மோடியும், முதல்வர் .பிஎஸ்ஸும் பங்களித்த சூழலில், மேலே குறிப்பிட்ட இளைஞர்களின் பங்களிப்பில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமானது வெற்றிக்கனியை ஈட்டியதை, கொண்டாட முடியாமல் சீர்குலைத்த சக்திகள் வசம் இருந்த சமூக ஆற்றல்கள் எல்லாம்;

மக்களை துயரத்திற்குள்ளாக்கிய 'பண நீக்கமானது' தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்காமல், மேலும் வளர்த்ததை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவும், தண்டனைகளில் இருந்து தப்பித்து வரும் தமிழ்நாட்டு லல்லுக்களும் வெட்ட வெளிச்சமாக்கி, ஸ்டெர்லைட் போராட்ட பின்னணியில், காவிரி மேலாண்மை பிரச்சினையில் மோடி மீதான அதிருப்தி அலைக் காற்றில் 'தூசி' போல 'எழுந்து', முட்டாள்த்தனமாக .பி.எல் கிரிக்கெட் எதிர்ப்பினை வடிகாலாக்கி, தமிழ்நாட்டின் வீழ்ச்சி நோக்கிய குவிந்த சமூக விசைகளை எல்லாம் செலவழித்ததன் மூலமாக‌;

தமிழ்நாட்டின் மீட்சிக்கான தடைகளை அகற்றிய நல்ல காரியமானது, .பி.எல் கிரிக்கெட் எதிர்ப்பு போராட்டம் மூலம் நடைபெற்றுள்ளதா? என்ற கேள்விக்கு விடை தெரியும் காலமும் அதிக தொலைவில் இல்லை. தமிழ், தமிழ் இசை புலமையாளர்களாக 'காட்சி' தந்து, தமது 'புகழ், செல்வ வளர்ச்சி சுயலாப' நோக்கில். ஆபிரகாம் பண்டிதர், வீ.பா.கா சுந்தரம், குடந்தை சுந்தரேசனார், நான் உள்ளிட்ட இன்னும் பலரின் பங்களிப்புகளை 'இருட்டில் தள்ளி, மீடியா பலத்தில் வெளிச்சம் போடும்' போக்கின் முடிவும் அதிக தொலைவில் இல்லை. (http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

நேர்மையான சுயசம்பாத்தியம் இன்றி, ‘வெளிப்படைத்தன்மையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability) இன்றி, பொதுவாழ்வில் மீடியா பலத்தில் வெளிச்சம் போட்டு வருபவர்கள் எல்லாம்;

டிஜிட்டல் யுகத்தில், மாணவர்கள் படித்த இளைஞர்கள் மத்தியில் எளிதில் அம்பலமாகி, வீழ்ந்து வரும் சமூக தொகுவிசைகள் (Decaying Social Resultant Forces)  ஆவர்.

சமூகத்தில் வளர்ச்சி நோக்கியும், வீழ்ச்சி நோக்கியும், பொதுப்பிரச்சினைகளில் வெளிப்படும் மக்கள் ஆதரவின் மூலமாக‌,  அவை சம்பந்தப்பட்ட தலைவர்களை குவியமாக கொண்டு சமூக அழுத்தம் (Social Pressure) அதிகரிப்புக்குள்ளான சமூக விசைகள் (Social Forces) எல்லாம்;

சரியான வாய்ப்பினை வடிகாலாகக் (Outlet) கொண்டு வெளிப்பட்டு:

வளர்ச்சி நோக்கிய சமூக விசைகள் எல்லாம் வளர்ச்சிக்கான புதிய சமூக ஆற்றல் ஊற்றுக்கண்களை அந்த போக்கில் திறந்து வலிமையாவதும்;

வீழ்ச்சி நோக்கிய குவிந்த சமூக விசைகள் எல்லாம், வீழ்ச்சிக்கானவிசைகளை செலவழித்து அம்பலமாகி, சமூக சருகாகி உதிர்வதும்;
அடுத்து நடக்கும் நிகழ்வுகளாகும்.

.பி.எல் கிரிக்கெட் எதிர்ப்பு போராட்ட தலைவர்கள் எல்லாம் எந்த வகையைச் சார்ந்தவர்கள்?

என்ற கேள்விக்கான விடை வெட்ட வெளிச்சமாகும் காலம் அதிக தொலைவில் இல்லை என்பது எனது கருத்து. 

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தினை 1938 இந்தி எதிர்ப்பு போராட்ட பாணியில்  உலகே வியக்கும் அளவுக்கு முன்னெடுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள், .பி.எல் போராட்டத்தில் ஏன் அந்த அளவுக்கு பங்காற்றவில்லை? காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்டு தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு, இது போன்ற போராட்டங்கள் தீர்வுக்கு வழி வகுக்குமா? அல்லது பொதுவாழ்வு வியாபாரத்திற்கு வலிவு சேர்க்குமா?

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மறுபதிப்பாக, 2018 மகாராட்டிர மாநில விவசாயிகள் போராட்டமும், பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் சேதமின்றி, பிரமிக்கும் வெற்றியில் முடிந்துள்ளது தெரிந்தும், (https://en.wikipedia.org/wiki/Kisan_Long_March,_Maharashtra  );

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவுகளே இன்றைய தமிழ்நாட்டின் சீரழிவுகளுக்கு வழி வகுத்தது, என்பது வெட்ட வெளிச்சமான பின்னும் (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html  ) ;

அதே பாணியில் இன்று போராட முனைந்தால், அது தமிழ்நாட்டை இன்னும் சீரழித்து, தமிழ் வேரழிந்த நாடாகவும், நேர்மையான சுயசம்பாத்தியமின்றி, தரகராகவும், திருடராகவும், ரவுடியாகவும் பிழைக்கும் போக்கில் தமிழர்களை ஊக்குவிக்கும் நாடாகவும், தமிழ்நாடு சீரழியும்.

சென்னை வெள்ள நிவாரணத்தில் அரசியல் கட்சிகளை வாலாக்கி நிவாரணங்கள் மேற்கொண்ட இளைஞர்களும்;

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் திசையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தினை முன்னேடுத்த இளைஞர்களும்;

அதை முறியடித்து, தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகள் கண்டு, நேர்மையான சுய சம்பாத்தியத்துடன், தன்மானமுள்ள தமிழர்கள் நாடாக தமிழ்நாட்டைப் பயணிக்க செய்வார்கள் என்று நம்பியே, அந்த பயணத்திற்கு, தன்னம்பிக்கையுடன் என்னால் இயன்ற பங்களிப்பை அளித்து, நான் பயணிக்கிறேன்; அது போல பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வரும் சூழலில்.

No comments:

Post a Comment