Friday, April 6, 2018


'வாழ்க்கை பரமபத விளையாட்டில்'  முட்டாள்களாகி வரும் 'புத்திசாலிகள்' (2);


வியாபாரத்தில் கடைபிடிக்க வேண்டிய 'சுயலாப கணக்குகளை' எல்லாம், குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளில் நுழைத்து 'வளமான' முட்டாள்கள்?


  
'மேக்ரோ உலகத்திற்கான மாற்றங்களின் 'முளைகள்' எல்லாம் மைக்ரோ உலகத்திலிருந்து தான் தொடங்கும்;

என்பதற்கான அறிகுறிகள் எல்லாம் தமிழ்நாட்டில் வெளிப்பட தொடங்கியுள்ளன.' என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். 

அது மட்டுமல்ல, 'வாழ்க்கைக்கு பணம் தேவை. ஆனால் பணமே வாழ்க்கையாகாது' என்ற புரிதலுடன், வாழ்பவர்கள் எல்லாம்,  தமது வாழ்க்கை பரமபத விளையாட்டில் தென்படும் வழிகளில்;

அகத்தில் சுயலாப கணக்குகள் இன்றி, மனித உறவுகளில் உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து, இழப்புகளை சந்திக்கும் போதும் தடம் புரளாமல் வாழ்ந்து, அந்த போக்கிற்கு உடன்பட்ட வகையிலான வழியை தேர்ந்தெடுத்து பயணிக்கும் போது;

கிடைக்கும் பலன்களையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2016/02/style-definitions-table.html  )

வாழ்க்கை பரமபதத்தில் ஒரு மனிதரின் வாழ்வில் முக்கிய கட்டங்களில் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் தென்படும். அதில் அவர் தேர்ந்தெடுக்கும் வழியில் பயணித்து, அதனால் வரும் ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்தித்தாக வேண்டும். அந்த ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் சரியான வழியை தேர்தெடுக்க மேற்கத்தியப் பகுத்தறிவானது, அதன் 'வரைஎல்லைகள்' (limitations) காரணமாக‌ துணை புரியாது.

தமிழ்நாட்டில் சமூக சடங்குகள் எல்லாம் காலனியத்தின் அறிமுகத்திற்கு முன், எவ்வாறு இருந்தன

காலனியம் தமது 'சுயநலன்களுக்காக' அறிமுகப்படுத்திய 'புதிய சாதி அமைப்பும்' (http://tamilsdirection.blogspot.in/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html   );

சமூக ஒப்பீடு நோயும் (Social Comparison Infection), அதன் மூலம் வளர்ந்த  சமூக உயர்வு ஏற்ற தாழ்வுகளும்;

என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன? 'திராவிட' கட்சிகளின் ஆட்சியில், அவை எல்லாம் இன்னும் மோசமாக, எப்படி சீரழிந்தன?

என்ற ஆய்வுகளை எல்லாம், 'மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு' என்ற 'குருட்டு பகுத்தறிவு பார்வையில்', இருட்டில் வைத்திருந்த போக்குகளும் முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளன.

மேற்கத்திய நாடுகளின் அரசுகளும், சிந்தனையாளர்களும், தமது நாடுகளில் உள்ள பொருளதாரச் சிக்கல்களுக்கும், கொலை, தற்கொலை, போதைப் பழக்கம், வன்முறை உள்ளிட்ட சமூகச் சிக்கல்களுக்கும் தீர்வுகளுக்கான சாவிகளை (Keys) இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள பாரம்பரியப் பண்பாடுகளில் தேடத் தொடங்கியுள்ளனர். 'அந்த' தேடலில்,சமஸ்கிருத இலக்கியங்களைப் போல, பழந்தமிழ் இலக்கியங்கள் உலகின் கவனத்தை இன்று வரை ஈர்த்ததாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் தமிழ் இலக்கியங்களை தமிழர்களே வெறுக்கும் அளவுக்கு, 'குருட்டுப் பகுத்தறிவு' செல்வாக்கு பெற்றதே, அதற்குக் காரணமாக இருந்தது, என்பது எனது ஆய்வு முடிவாகும்.

தமிழில் சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை மேலேக் குறிப்பிட்ட மேற்கத்திய 'முற்போக்கு, மார்க்சிய' பார்வைகளில் அணுகிய முயற்சிகள் எல்லாம் குருடர்கள் தேடிய ஓவியங்களின் கதையானது.  அத்தகையப் பார்வையில் சிக்கியதாலேயே, 'பெரியார்' .வெ.ரா அவர்கள், தமிழைக்  காட்டுமிராண்டி மொழியாகவும், தமிழ் இலக்கியங்களில் திருக்குறள் (அதிலும் குறை கண்டு) தவிர்த்து, மற்றவையெல்லாம் தமிழர்க்குக் கேடானவை என்றும் முடிவு செய்தார்.  (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html        &        & http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html   & http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html   ).

'மொழி', 'இனம்', 'சாதி', உள்ளிட்டு தாம் முன்வைக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக, உலக அளவில் வெளிப்பட்டு வரும் ஆய்வுகளையெல்லாம் கண்டு கொள்ளாமல், உணர்ச்சிபூர்வமாக பயணிக்கும் குருட்டு பகுத்தறிவாளர்கள், உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் வாழ்கிறார்களா? என்ற ஆய்வினை தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது.’ (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

'முற்போக்கு மேற்கத்திய மோகத்தில்', மேலே குறிப்பிட்ட 'குருட்டுப் பகுத்தறிவின்' அடிப்படையில் .வெ.ரா அவர்கள் பயணித்ததன் விளைவாக;

வியாபாரத்தில் கடைபிடிக்க வேண்டிய 'சுயலாப கணக்குகளை' எல்லாம், குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளில் நுழைத்து 'வளமான';

'பெரியார்' ஆதரவாளர்களாக புறத்தில் (நேர்மையானவர்களிடமிருந்து அகத்தில் வேறுபட்டு) காட்சி தந்தபுத்திசாலிகள் எல்லாம்;

இயல்பான லாபநட்ட கணக்கின்றி வாழும் மனிதர்களின் பார்வைகளில், 'யோக்கிய புலி வேடம் கலைந்த நரிகளாக' அம்பலமாகி, வாழ்க்கை என்ற பரமபத விளையாட்டில் முட்டாள்களாகி வரும் 'புத்திசாலிகள்' ஆகி விட்டார்கள்; இயல்பான அன்பு வறண்ட மனித நரிகள் சூழவே, வாழ்ந்தாக வேண்டிய தண்டனையையும் அனுபவித்து.

மைக்ரோ உலகத்தில் வெளிப்பட்டு வரும் இந்த போக்குகளின் விளைவுகள் எல்லாம் மேக்ரோ உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும்போது;

'அந்த புத்திசாலிகளை' நம்பி, 'ஆதாய அரசியலில்' பயணித்து வரும் கட்சிகள் எல்லாம் 'சுவடின்றி அழியும் சுனாமியை' சந்திப்பதை தவிர்க்க முடியாது.

மேலே குறிப்பிட்ட 'புத்திசாலிகளின்' பார்வையில் நான் 'முட்டாளாக'  தென்பட்டு;

எனது வாழ்க்கை பரமபதத்தில் 'எதிர் நீச்சல்' போக்கில், எனது பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, கி.வீரமணி, ஆண்டன் பாலசிங்கம் போன்றோருடன் 'நெருக்கமான' வாய்ப்புகளை எல்லாம் சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளாமல், அறிவுபூர்வ விமர்சனப் போக்கில் அவர்களை விட்டு விலகி, எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எனது மாமனார் மற்றும் அவரின் வைப்பட்டி/துணைவி குடும்பத்திற்கு வாலாகி, 'வளம் சேர்க்காமல்', அவரின் சட்டபூர்வ மனைவி, மற்றும் ஒரே மகளின் உரிமைகளுக்காக நீதிமன்ற வழக்குகளில் சிக்கி, கடனில் மூழ்கிய காலத்திலும், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம தலைமையில் இருந்த விஜய், அவர் விரும்பிய இசை ஆய்வுத்திட்டத்தை நிதி உதவியுடன் மேற்கொள்ள வற்புறுத்தியபோது, அத்திட்டம் ('உலகில் உள்ள இசைகள் எல்லாம், கர்நாடக இசைக்குள் அடக்கம்' என்று பாலமுரளி கிருஷ்ணா வெளியிட்ட கருத்தினை நிரூபிக்கும்) மூலம் எனது திறமைகளை, எனக்கு தவறாக பட்ட திட்டத்தில் பயன்படுத்த எனது மனசாட்சி இடம் கொடுக்காமல் மறுத்து, பயணித்த பரமபத விளையாட்டில்; (http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

இன்று என் வீட்டு வாசலை மிதிக்க அருகதை அற்றவர்களாக ஒதுக்கி வைத்துள்ள சமூக கிருமிகளை எல்லாம், 'பெரியார் இயக்கத்தில்' பயணித்த காலத்தில் அனுமதித்து பெற்ற அனுபவங்கள் எல்லாம், .வெ.ராவும் அவர் வழியில் நான் உள்ளிட்ட எண்ணற்றோரும் புரிந்த தியாகங்கள் எல்லாம், 'திராவிட பொதுவாழ்வு வியாபாரிகளின் முதலில்லாத மூலதனங்களாக (Capital without investment)  எவ்வாறு மாறியது?' என்ற சமூக செயல்நுட்பத்தினையும்;

'தாய்மொழி தமிழ் அடிப்படையிலான அடையாள இழப்புக்கு' உள்ளான 'பெரியார்' ஆதரவாளர்களில் யார்? யார்?

உலக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ள, அந்த இழப்புகள் ஏற்படுத்தும்  'போதைகளில்' ( http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html ) சிக்கியுள்ளார்கள்? என்பதையும்; 

அந்த போதைகளின் தனித்துவமாக விவாத பொருளின் வரம்புக்குள் விவாதம் நடத்தும் அடிப்படை நாகரீகம் கூட தெரியாமல், விவாதத்தில் ஈடுபடுபவர் மீது விவாதத்தினை திசை திருப்பும் போக்கானது, ‘தாய்மொழி அடையாள இழப்போடு’ அல்லது ‘குருட்டுப் பகுத்தறிவோடு’ எந்த அளவுக்கு தொடர்புடையது? என்பதையும்;

கண்டுபிடிக்க உதவி;

மனிதர்களின், குறிப்பாக 'திராவிட மனநோயாளிகளின்' நன்றி கெட்ட பண்பு இல்லாத இயற்கையையும், சாமான்ய மனிதர்கள் சமூகத்தையும், சுயலாப நோக்கின்றி இயல்பான அன்புடன் நாம் நேசிக்கும் போது, நம்மை அதை விட அதிகமாக நேசித்து 'அருளும்' இயற்கையுடன் இணக்கமான உறவில் பயணித்து வருகிறேன் (http://veepandi.blogspot.sg/2014/04/normal-0-false-false-false-en-us-x-none.html ; இந்த பதிவிற்கு அறிவுபூர்வ மறுப்பு 'பெரியார்' ஆதரவாளர்களிடமிருந்து இதுவரை வரவில்லை. இனி வந்தாலும் வரவேற்பேன்.) 

மேலே குறிப்பிட்ட 'புத்திசாலிகள்'(?) மேலே குறிப்பிட்ட விளைவுகளை அனுபவித்து, தமது வாழ்க்கை பரமபத விளையாட்டின் முடிவில் முட்டாளாகி விட்டோமா? என்ற கேள்வியை சந்தித்து வரும் சூழலில்;

அவர்களில் எனது வாழ்க்கை பரமபத விளையாட்டில், என்னை 'முட்டாளாக' கருதியவர்கள் எல்லாம் குழம்பி, மலைக்கும் வகையில், எனது சாதனைகள் எல்லாம் (http://drvee.in/  );

அவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேற்கண்ட பதிவில் உள்ள சாதனைகள் காரணமாக, கடந்த சில வருடங்களாக புகழும், பணமும் வரும் வழிகள் தாமாகவே என் கண்முன் வருகின்ற போக்கில், சாமான்யனாக வாழும் 'சுதந்திரத்தை' இழக்க விரும்பாமலும், அதே நேரத்தில் தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான எனது பங்களிப்பை தட்டிக்கழிக்காமலும், கவனமாக தேர்ந்தெடுத்து நான் பயணித்து வருவதானது, என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு வியப்பாகவும், மலைப்பாகவும் அமைய, எனது வாழ்க்கை பரமபத விளையாட்டானது, ஒரு சமூக பொறியியல் வினை ஊக்கியாக(Social Engineering Catalyst) செயல்படுவதையும் உணர முடிகிறது.

'நல்லதுக்கும், நல்லவர்களுக்கும் கேடான காலம்' என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறி வரும் தமிழ்நாட்டின் மைக்ரோ உலகத்தில் வெளிப்பட்டு வரும் சிக்னல்கள் எல்லாம், மேக்ரோ உலகத்தில் உரிய மாற்றங்களை ஏற்படுத்தும் 'ஊடகமாக', எனது வாழ்க்கை பரமபத விளையாட்டு பயணித்து வருவதானது, எனக்கே நம்பமுடியாத அதிசயமாகும். எனது வாழ்க்கை பரமபத விளையாட்டில், நம்ப முடியாத அளவுக்கு அவமானங்களையும், துன்பங்களையும், துரோகங்களையும், அனுபவித்தது எல்லாம் அதற்காக தானோ? என்று நானே வியக்கும் அளவுக்கு. 

அவ்வாறு தடம் புரளாமல் அவற்றை அனுபவிக்கும் துணிச்சலின்றி, அகத்தில் கோழைகளாகவும், புறத்தில் 'யோக்கியர்' போலவும்(?) 'பாதுகாப்பு மண்டிலத்தில்' (Comfort Zone) வாழ்பவர்கள் எல்லாம், 'பெரியார் சமூகக் கிருமிகளின்' வளர்ச்சிக்கான சமூக முதுகெலும்பாக உதவி வருகிறார்கள்.

அத்தகையோரில் பலர், பொது அரங்கில் நகைச்சுவைகளை ரசிக்க முடியாமல், ‘சொந்த காசில் சூன்யம்’ வைத்துக் கொண்ட‌ பெற்றோர்களாக வெளிப்பட்டு வருகிறார்கள்.
 (http://tamilsdirection.blogspot.com/2017/07/blog-post_16.html )

நமக்கு தொடர்பின்றி நடந்த நிகழ்ச்சிகளை கற்பனையாக மாற்றி, அதன் மூலம் இன்பம் அனுபவித்தலை 'விகேரியஸ் இன்பம்' (Vicarious Joy) என்று குறிப்பிடுவார்கள். 

அது போன்ற இன்பத்தை அனுபவிக்க விரும்புபவர்கள் எல்லாம், தமிழ்நாட்டில் ஊழல் அரசியலில் 'கதாநாயகர்களாக வளமாகி', பிரபல கவிஞர்களின், பேச்சாளர்களின், எழுத்தாளர்களின் பாராட்டுகளின் ஒலி/ஒளி பதிவுகளில், 'அந்தகதாநாயகர்களுக்குப்' (?) பதிலாக;

சென்னை மாநிலக்கல்லூரி நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பின், அரசியலில் நுழைந்து 'தமிழ்ப் புரவலராகாமல்', முட்டாள்த்தனமாக‌ ‘என்கவுண்டரில்சுட்டுக் கொல்லப்பட்ட 'ரவுடி வீரமணியை',  'கற்பனை செய்தால்', வாய்விட்டு குலுங்கி சிரிக்கும் நகைச்சுவை நிறைந்த இன்ப அனுபவங்களாக ரசிக்கும் 'விகேரியஸ் இன்பம்' (Vicarious Joy) தரும் நாடாக உள்ள தமிழ்நாட்டில்; (http://tamilsdirection.blogspot.sg/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_28.html )



வியாபாரத்தில் கடைபிடிக்க வேண்டிய 'சுயலாப கணக்குகளை' எல்லாம் அரசியலில் நுழைத்து வளமான 'தமிழ்/ தமிழ்த்தேசிய' புரவலர்கள் எல்லாம், லாபநட்ட கணக்கின்றி மைக்ரோ உலகில் வாழும் மனிதர்களின் பார்வைகளில், 'யோக்கிய புலி வேடம் கலைந்த நரிகளாக' அம்பலமாகி, 'விகேரியஸ் இன்பம்' (Vicarious Joy) தரும் கோமாளிகளாக மாறிவரும் போக்கில்;

மேக்ரோ உலகின் பரமபத விளையாட்டானது, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சி நோக்கி மாறத் தொடங்கியுள்ளது. (''வாழ்க்கை பரமபத விளையாட்டில்'  முட்டாள்களாகி வரும் 'புத்திசாலிகள்' (1);
மேற்கத்திய மோகமானது, 'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும்' வழியா?'; http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none.html )

No comments:

Post a Comment