பொது அரங்கில் நகைச்சுவைகளை ரசிக்க முடியாமல்;
‘சொந்த காசில் சூன்யம்’ வைத்துக் கொள்பவர்களின் நாடாகி
வருகிறதா, தமிழ்நாடு?(1)
சமூகத்தில் பொது அரங்கில்
வெளிப்படும் நகைச்சுவை சம்பவங்களை எல்லாம் ரசிக்க கூட முடியாமல், தவிக்கும் தமிழர்களும்
தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்.
தமிழக முதல்வராயிருந்த
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், 'காற்றுள்ளவரை தூற்றிக் கொள்ளும் பேராசையில்', பொதுவாழ்வு
வியாபாரிகள் எல்லாம், கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஓரங்கட்டி, பணம் ஈட்ட, 'ஓடும்' ஓட்டப்பந்தயம்
போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம், ‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF ) என்ற உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை திரைப்படத்தை
நினைவு படுத்துகின்றன.
‘'it’s
a Mad Mad Mad Tamilnadu' என்ற, உலக அளவில்
பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படத்திற்கான
சம்பவங்கள் பல, தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன:’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_12.html
)
அத்துடன் மீடியா வெளிச்சத்தில்
வராமல், தமிழ்நாடு முழுவதும் இன்னொரு வித்தியாசமான நகைச்சுவை போக்கும் அரங்கேறி வருகிறது.
மேலே குறிப்பிட்ட பொதுவாழ்வு
வியாபாரிகளை எல்லாம் கோமாளிகளாக கருதி, அந்த நகைச்சுவை காட்சிகளை ரசித்து வருபவர்களில்
பெரும்பாலோர் கீழ்நடுத்தட்டு, ஏழைகளாக இருக்கிறார்களா?
மேல் நடுத்தட்டு, பணக்காரர்களில்
பெரும்பாலோர், 'காரியம் சாதிக்க' தமக்கு வாய்த்திருந்த 'செல்வாக்கு' நபர்கள் எல்லாம்,
'கோமாளிகளாக' வலம் வருகையில், அந்த நகைச்சுவைகளை ரசிக்க முடியாத அளவுக்கு, காரியம் சாதிக்க அடுத்து நமக்கு யார் 'செட்' ஆவார்கள்?
என்ற தேடலில், குழம்பி தவிக்கிறார்களா?
நமது குடும்பப்பிள்ளைகளை
நல்ல பள்ளியில்/கல்லூரியில் சேர்க்க வேண்டுமே?
+2 தேர்விலும், அடுத்து அடுத்து வரும் தேர்வுகளிலும்,
கமுக்கமாக வெளியில் தெரியாமல், குறுக்கு வழிகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமே?
அதே போல அரசு வேலைகள்
அல்லது நல்ல தனியார் கம்பெனிகளில், குறுக்கு வழிகளில்,வேலை பெற வேண்டுமே? என்பது போன்ற
இன்னும் பலவற்றில் மூழ்கி;
ஊழல் சாம்ராஜ்யத்தில்
மவுலிவாக்க அடுக்குமாடிகள் மழையில் விழுந்தால் என்ன?
ஏரிகள், ஆறுகள், தாதுமணல்,
கிரானைட், ஆற்று மணல் கொள்ளை போனால் என்ன?
கொலை, கொள்ளை, ஊழல் குற்றவாளிகள்
தப்பிக்க துணை போனால் என்ன?
அத்தகையோரின் செல்வாக்கு
நமக்கு லாபம் என்றால், நல்லது தானே;
என்ற மன நிலையில் வாழ்பவர்கள்
எல்லாம், பெரும்பாலும் 'எந்த வழியிலாவது மேல்தட்டு' வாழ்க்கைக்கு ஏங்கும் நடுதரவாசிகளாகவும்,
மேல் தட்டு, பணக்காரர்களுமாகவுமே இருக்கிறார்கள்; பொதுவாழ்வு வியாபாரிகளின்
சமூக முதுகெலும்பாக வாழ்ந்து கொண்டு; தமக்கு கட்டுப்பட்டு வளரும் தமது குடும்பப் பிள்ளைகளையும், அவ்வாறு வாழவே வளர்த்துக் கொண்டு.
இவ்வாறு ‘புத்திசாலித்தனமாக’(?) வாழ்ந்து வருபவர்கள் எல்லாம், வெளியில் சொல்ல முடியாத, வெவ்வேறு வகையிலான தண்டனைகளையும் அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்கள்; தமிழ்நாட்டிற்கு பெரும்பாலும் புதிதாக; 1970களின் பிற்பகுதிகளில் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரம் அறிமுகமானதன் பலனாக.
'முதல் தர' ஆங்கில நர்சரி
பள்ளியில் சிரமப்பட்டு இடம் வாங்கி, 'எல்லா வழிகளிலும்' நன்கு படிக்க வைத்து, ஐ.ஐ.டியில்
சேர்ந்து, பொறியாளராக கை நிறைய சம்பளம் வாங்கிய மகன், தனது அப்பாவை 'நியுசன்ஸாக' கருதி,
ஒதுங்கி, 'புத்திசாலித்தனமாக'(?) வாழ; அப்பொல்லோ மருத்துவமனையில் தனது தந்தை உயிருக்கே
ஆபத்தான நோயில் சிக்கி அனுமதிக்கப்பட்டிருந்த போதும், எந்த கஷ்டத்திலும் பங்கேற்காமல்,
ஓரிரு முறைகள் பார்வையாளராக வந்து பார்த்து சென்று விட்டார்.
தமிழ்நாட்டிலிருந்து
குடியேறி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில், ஆங்கிலத்தை பேச்சு மொழியாகக் கொண்டு,
ஆங்கில வழியில் பயின்று, வேலையில் சேர்பவர்களிடம், மேற்கத்திய நாகரீக நற்பண்புகள் அகவயமாகி
(internalize), வெளிப்படுவது போல;
தமிழ்நாட்டில் தமிங்கிலீசை
பேச்சு மொழியாகக் கொண்டு, ஆங்கில வழிக்கல்வியில் பயின்றவர்களிடம், மேற்கத்திய நற்பண்புகளும்,
தமிழ் கலாச்சார நற்பண்புகளும் இன்றி, இரண்டும் கெட்டானான 'சுயநல மிருக' பண்புகள் வெளிப்படுகின்றனவா?
என்பதும் ஆய்விற்குரியதாகும்.
தமிழ்நாட்டில் உயர் கல்வி
படித்து, உயர் வேலை வாய்ப்புகளில் பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும்,
உள்நாட்டிலும்/வெளிநாடுகளிலும் பணியாற்றி வருபவர்களில், மேலே குறிப்பிட்ட நபரை போல்
இல்லாமல்,
பணத்தை/லாபத்தை முக்கியமாக
கருதாமல், பெற்றோர்கள் மீதும், சுற்றத்தினர் மீதும் அன்பு பாராட்டி, உதவி வருபவர்கள்
எல்லாம், இந்துக்களில், கிறித்துவ கல்லூரிகளில் படிக்காத முஸ்லீம்களில், நானறிந்த வரையில்,
உயர்நிலைப் பள்ளி வரை, தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களே ஆவர்.
தமிழ்நாட்டில் முதலில் குறிப்பிட்டது போன்ற
சுயநல மிருகங்கள் உருவான சமூக செயல்நுட்பமும், எனது ஆய்வில் இடம் பெற்றுள்ளது.
‘தமிழ்நாட்டில் இத்தகைய
சுயநலக்கள்வர்கள் உருவான சமூக செயல்நுட்பமானது(social mechanism), திராவிட ஆட்சிகளின்
சாதனையா?(எனது அனுபவங்கள் அடிப்படையில்) சுயலாப நோக்கில் மதம் மாறிய கிறித்துவர்களிடமிருந்து,
இந்த சமூக செயல்நுட்பமானது, திராவிடக்கட்சிகளால் அகவயபடுத்தப்பட்டு, இன்று தமிழ்நாட்டில்
தேசிய, இந்துத்வா உள்ளிட்டு அனைத்து கட்சிகளிலும் 'இயல்பில் திரிதல்' நோயை தொத்துநோயாக
வளர்த்து வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’
(http://tamilsdirection.blogspot.sg/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html
)
ஆங்கிலவழிக்' கல்வி பயிலும்
குழந்தைகள் மேல்நிலைக் கல்வியைத் தாண்டும்போது, வீட்டுக்குப் பழக்கப்பட்ட செல்லப் பிராணிகளாகவோ
(domesticated animals ) அல்லது யாருக்கும் அடங்காத முரடர்களாகவோ (unruly
disobedient thugs ) வெளிப்படுகிறார்கள்'(http://tamilsdirection.blogspot.sg/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html
); தமது இயல்போடு ஒட்டிய
வளர்ச்சியை தொலைத்து, உள்ளார்ந்த ஈடுபாடுகள் (Passions) வாசமற்ற எந்திரர்களாக வெளிப்பட்டு.
மேற்கத்திய வழிபாட்டு
போக்கானது, கிறித்துவர்களிடமும், விளையாட்டுப்பள்ளி முதலே ஆங்கிலவழிக்கல்வி பயிலும் இந்துக்கள், முஸ்லீம்கள்
உள்ளிட்ட அனைத்து மதத்தினரிடமும், மேற்கத்திய பாணி முற்போக்காளர்களிடமும், வளர்ந்து,
தமிழ் மொழி, பண்பாடு உள்ளிட்ட ஆணிவேர்களிடமிருந்து, அவர்களை எல்லாம் அந்நியமயமாக்கி
வருகின்றனவா? என்று அறிவுபூர்வமாக, திறந்த மனதுடன், விவாதிக்க வேண்டிய நேரம் வந்து
விட்டதாக கருதுகிறேன்.
எந்த மொழியாக இருந்தாலும்,
மொழி என்பதானது, வெறும் பேசுவது, படிப்பது, எழுதுவது என்பதை தாண்டி;
ஒரு மொழியின் மூலமாக
நமது சிந்தனை முறையும், கண்ணோட்டமும் மாற்றங்களுக்கு உள்ளாவதை (‘the language we
speak affects the way we think, it also affects the way we view the world
around us. We habitually formulate our perceptions of the world in language,
according to the particular biases and prejudices inherent in whatever language
we know. ‘) கீழே குறிப்பில் உள்ள ஆய்வு தெரிவிக்கிறது.
மேற்குறிப்பிட்ட பின்னணியில்,
கீழ்வரும் கருத்தானது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பது தெளிவாகும்.
"உங்கள் வீட்டில்
மனைவியுடனும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்;
பேச பழகுங்கள்; பேச முயலுங்கள்;! தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள்" -- பெரியார்
ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89
அந்த ஆபத்திலிருந்து
மீள, அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டாமா? (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post.html
)
குக்கிராமங்களில் கூட ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் ஊடுருவி வரும் தமிழ்நாட்டில்;
குக்கிராமங்களில் கூட ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் ஊடுருவி வரும் தமிழ்நாட்டில்;
அதிகம் படித்த பெற்றோர்களின்
அந்த ஆபத்தான திசையில், பாமரர்களும் பயணிக்கத் தொடங்கி விட்டார்கள்.
அந்த குழந்தைகள் எல்லாம்,
தமிழ் மொழி, பண்பாடு, வேர்கள் அற்று, வளர்ந்து, தற்கொலை, கொலை, போதை மாத்திரை, திருட்டு
போன்ற சமூக நோய்களில், அதன் காரணமாவே சிக்கி;
அதிலும் தப்பித்து உயர்ந்த
படிப்பில், உயர்ந்த வேலையில் சேர்ந்த பின்;
பெற்றோர்கள் உள்ளிட்ட
சுற்றத்தை 'நியூசென்ஸ்' என்று ஒதுக்கி வாழ;
அதையும் வெளியில் சொல்ல
வெட்கப்பட்டு, செத்துக் கொண்டே வாழும் பெற்றோர்கள் எல்லாம் வளர்ந்து வரும் நாடாக தமிழ்நாடு
இருக்கிறது.
ஆங்கில வழிக்கல்வியில்,
'சொந்த காசில் சூன்யம்' வைத்துக் கொள்ளும்
போக்கில்;
தமிழ்நாடும், தமிழும்,
தமிழர்களும் வீழ்ந்து வருகிறார்கள்; தமிழ்நாட்டை சீரழித்த
'சாபத்தில்' (Curse) பங்கும், தண்டனையும் அனுபவித்துக் கொண்டு.
அந்த போக்கினை முன்கூட்டியே
உணர்ந்து, விழித்துக் கொண்டு, தமது குழந்தைகளை 5 வயது வரை எந்த பள்ளியிலும் 'கூண்டில்'
அடைக்காமல்;
முதலாம் வகுப்பில் தமிழ்வழிக்
கல்வியில் பயில வைக்கும் திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ள இளம் பெற்றோர்களையும் நான்
அறிவேன்.( http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html
)
தமிழின், தமிழர்களின்,
தமிழ்நாட்டின் மீட்சிக்கான நம்பிக்கை நட்சத்திரங்களாக, வரலாற்றின் சுயநினைவற்ற 'மீட்சிக்கான'
கருவிகளாக, அவர்களை கருதி பாராட்டுகிறேன். அந்த போக்கில், பாராட்டப்படும் வகையில் வெளிவந்துள்ள
காணொளி கீழே:
மேலே குறிப்பிட்ட ' சிக்னல்'கள் எல்லாம், தமிழின்,
தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான ' சமூகவியல் புன்னகை'யாகவே எனக்கு தெரிகிறது.
மேலே காணொளியில் பேசிய தாய் இசைமொழி, அந்த முடிவுக்கு
எடுக்கும் முன், திரு.நலங்கிள்ளியுடன் நடத்திய உரையாடலில் ஒரு பகுதி கீழே:
இசைமொழி: அரசுப் பள்ளியில் படித்தால் ஒழுக்கம் கெடாதா?
நான் (திரு.நலங்கிள்ளி): அரசுப் பள்ளியில்தான் ஒழுக்கம் வரும். பகுத்துண்டு
வாழும் ஓர்மைப் பண்பாட்டைப் பேணி நிற்பது யார் ? ஒடுக்கப்பட்ட மக்கள்தானே? இன்று அரசுப்
பள்ளிகளில் பெருமளவுக்கு நிரம்பியிருப்பது அட்டவணைச் சாதியினர்தானே? அவர்களிடம் இல்லாத
எந்த நற்பண்பை உயர் சாதியினரிடம் உங்கள் மகன் கற்றுக் கொள்ள முடியும் என நினைக்கிறீர்கள்.
அரசுப் பள்ளி மறுப்பில் சாதிய ஆதரவு அடங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் இசைமொழி.
இசைமொழி: நீங்கள் எல்லாம் அப்படித்தான் சொல்வீர்கள்.
உங்கள் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்?
நான்: என் மகள் ஈரோடை, பறை இருவரும் படித்து வளர்வது
மாநகராட்சி, அரசுப் பள்ளிகளில்தான். என்னிடம் இப்படி கேள்வி கேட்பவர்களிடம் துணிந்து
சொல்வேன். அறிவுடனும் நற்பண்புகளுடனும் என் பிள்ளைகள் ஓங்கி நிற்பதற்கு, அவர்களுடன்
படிக்கும் எளிய பாட்டாளிப் பிள்ளைகளே காரணம்.
இசைமொழி: கழிப்பறை போன்ற வசதிகள் இல்லாது, அரசுப்
பள்ளிகள் சுகாதாரமில்லாமல் இருக்கின்றனவே?
நான்: உண்மைதான். சில அரசுப் பள்ளிகள் தூய்மைக் கேடாக
இருப்பது உண்மைதான். ஆனால் ஏழைப் பிள்ளைகள், தாழ்ந்சாதிப் பிள்ளைகள் அங்கு படித்து
துன்பப்பட வேண்டும். நம் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் சொகுசாகத் தனியார் பள்ளியில் படிக்க
வேண்டும் என்பது நல்ல மனநிலையா இசைமொழி? நீங்கள் தனியார் பள்ளிக்குச் செலவிடும் தொகையை
உங்கள் மகன் படிக்கும் அரசுப் பள்ளிக்குச் செலவிடுங்கள். ஊதியத்துக்குத் துப்புரவுப்
பணியாளர்களை அமர்த்துங்கள். இன்னும் மற்ற பெற்றோர்களிடம் பேசி, ஆசிரியர்களுடனும் கலந்துரையாடி
பள்ளிக்கான முன்னேற்றங்களைத் திட்டமிடுங்கள். இது உங்கள் மகனிடமும் பொதுநோக்கை விதைக்கும்.
இப்படி இசைமொழி சரமாரியாகத் தொடுத்த வினாக்களுக்குப்
பொறுமையாகப் பதிலளித்தேன். என்ன இசைமொழி, என் வீட்டில் வரும்போது உங்கள் முகத்தில்
கோபம் தெரிந்தது. இப்போது சிறிது புன்னகை பூப்பது போல் தெரிகிறதே என்றேன்.
குறிப்பு:
“If you have ever
tried to learn a new language, you might have noticed that it is not only about
learning the alphabet, vocabulary and grammar. It also involves learning a new
way of thinking and expressing yourself.
Language carries
references to the culture to which it belongs and, by interacting with a
language, we gain an insight into a particular culture……..Whorf said, “because
the language we speak affects the way we think, it also affects the way we view
the world around us. We habitually formulate our perceptions of the world in
language, according to the particular biases and prejudices inherent in
whatever language we know. Thus, language limits the way we perceive reality,
the way we think about it, and the way we talk about it. But it need not do so.
If we are aware of those limitations, we can compensate for them and view the
world freshly and newly.”……….. From the above, we can see that if language
affects the way we speak and is intimately related with culture, there will be
a close relationship between the mind and culture through language. Looking at
some ancient languages, we find that the more sophisticated the language is,
the more developed the civilization, and perhaps the opposite is also true.
George Orwell, who made a life-long study of language, held that “the decay of
a civilization can be seen in the declining levels of sincerity in the words
and minds of its citizens.” ” - ‘Language
and Culture’ -Article By Pinar Akhan; http://library.acropolis.org/language-and-culture/
மொழி, இலக்கணம், தொடர்பான மேலே குறிப்பிட்டது போன்ற ஆய்வுகளின் தொடர்பின்றி,
மொழி, இலக்கணம், தொடர்பான மேலே குறிப்பிட்டது போன்ற ஆய்வுகளின் தொடர்பின்றி,
உணர்ச்சிபூர்வமாக பயணிக்கும் தனித்தமிழ் அமைப்புகளும், 'சுயநினைவற்ற' ஆபத்துகளே ஆகும்.( http://tamilsdirection.blogspot.sg/2016/07/fetna.html )
No comments:
Post a Comment