Thursday, July 20, 2017

'பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்' (2)


தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு தடையாக,    

இனி பயணிக்க முடியாது

 

‘'பிராமணன்', 'பூணூல்', 'தமிழர்', 'பன்றி' ஆகிய சொற்கள் தொடர்பாக, அறிவுபூர்வ அணுகுமுறையில் மேலே குறிப்பிட்ட போராட்டம் ('பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்') திட்டமிடப்பட்டதா?’ என்ற கேள்வியை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_18.html )

“'பூணூல் அறுப்பு' சம்பவங்களும், திராவிடர் கழகம் தோன்றுவதற்கு முன் தமிழ்நாட்டில் அதிகம் நடந்து வந்தன, தி.க உருவானபின் குறைந்திருப்பதாக பெரியார் பட்டுக்கோட்டை சொற்பொழிவில் குறிப்பிட்டதை, அந்த பேச்சு ஒலிநாடாவில் நான் கேட்டிருக்கிறேன்.” (http://tamilsdirection.blogspot.sg/2015/03/

இந்திய விடுதலைக்கு முன், 'பெரியார்' ஈ.வெ.ராவின் 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை, ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும் ஆதரித்திருந்த பின்னணியில்;

'பெரியார்' ஈ.வெ.ரா இந்திய விடுதலைக்குப் பின், முதல்வர் காமராஜரை ஆதரித்த காலக்கட்டத்தில்;

‘தமிழ்நாட்டில் பிராமணர்கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில், மத்திய அரசிலும் அவர்கள் செல்வாக்குடன் இருந்ததால் தான், தமிழ்நாட்டிற்கு பாதகங்கள் இன்றி, சாதகங்கள் நிகழ்ந்தன: காமராசராலும் திருச்சி 'பெல்', தூவாக்குடி 'துப்பாக்கி தொழிற்சாலை', ஆவடி 'டேங்க்' தொழிற்சாலை போன்றவை வந்தன. பிராமண எதிர்ப்பில், தமிழ்நாட்டிலும், மத்திய அரசிலும் தமிழ்நாட்டு பிராமணர்கள் செல்வாக்கு குறைந்ததே,1967க்குப் பின் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டிய‌ வேண்டிய பெரும் திட்டங்கள் எல்லாம்,  காங்கிரஸ் ஆட்சியில் இருந்த‌ பெங்களுருக்கு சென்றன; காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகள் முளை விட்டு வளர்ந்தன; கச்சத்தீவும் பின்னர் பறி போக‌.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/06/blog-post.html )

'பெரியார்' ஈ.வெ.ரா மறைவிற்கு பின், எந்த காலக்கட்டத்தில் பூணூல் அறுப்பு சம்பவங்கள் அதிகரித்தன? அதில் தி.மு.க ஆட்சிக்கும், எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க ஆட்சிக்கும், பூணுலை அறுத்தவர்களிலும், பாதிக்கப்பட்ட பிராமணர்களிலும் வேறுபாடுகள் உண்டா? பின் ஜெயலலிதா ஆட்சியில் அவை குறைந்தனவா? 'பெரியார்' ஈ.வெ.ரா  மறைவிற்குப் பின், தி.கவில் அதிக இளைஞர்கள் சேர்ந்த காலக்கட்டத்தில், அவை அதிகரித்தனவா? 'அந்த' இளைஞர்களுக்கு வயதான பின், அடுத்த கட்டத்தில், இளைஞர்கள் வற்றிய போக்கில், பூணூல் அறுப்பு சம்பவங்கள் குறைந்தனவா? பூணூல் அறுத்தவர்களில் சுயலாப கணக்கில் (பொது வாழ்வு மூலதனமாக) பூணூல் அறுத்தவர்கள் யார்? சுயலாப நோக்கின்றி, உணர்ச்சிபூர்வமாக, சாகசத்தில் பூணூல் அறுத்தவர்கள் யார்?

1967க்குப் பின் சாதி வெறியும், சாதி மோதல்கள் அதிகரித்த போக்கிற்கும், ஊழலும், அந்த ஊழலை உரசாமல், வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓக்கள் அதிகரித்த போக்கிற்கும் தொடர்பு உண்டா?

'பெரியார்'  ஈ.வெ.ரா காலத்தில் குறைந்திருந்த‌ பூணூல் அறுப்பு சம்பவங்கள், 'பெரியார்' ஈ.வெ.ரா மறைவிற்கு பின்,  அதிகரித்து, ஊழலும், சாதி வெறியும், சாதி மோதல்களும் அதிகரித்து;

ஊழல் மன்னர்களை 'தமிழ்ப் புரவலராக' போற்றி, பிழைத்த, கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் அதிகரித்து;

தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் சீரழிந்ததற்கு;

கீழ்வருவதே முக்கிய காரணம் என்று எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

‘‘ஒரு மனிதரின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு மற்றும் நிகழ்கால சமூக தேவைகள் ஆகியவற்றின் அடிப்படைகளிலான அடையாளகூறுகளுக்கு இடையிலான சமநிலையானது (equilibrium), சீர்குலைவிற்குள்ளாகும்போது, வலுவிழந்த (தாய்மொழி) அடையாளக் கூறுகளின் 'ஈடுபாடுகள்' (interests), இயல்பாக வாய்ப்புள்ள அடையாள கூறு (சாதி, சாகசம், etc) நோக்கி, இடப்பெயர்ச்சிக்குள்ளாகி, அந்த அடையாளக்கூறானது, 'அளவுக்கு மிஞ்சிய நஞ்சாக' மாறும் விளைவினை ஏற்படுத்துமா? என்ற ஆய்விற்குதவும் நாடாக, தமிழ்நாடு உள்ளது.” (http://tamilsdirection.blogspot.in/2014_09_01_archive.html ) 1967க்கு முன் இருந்ததை விட,  அதிகமாக சாதி வெறியும், சாதி மோதல்களும் அதிகரித்துள்ளதற்கும், மேற்குறிப்பிட்ட சமநிலை சீர்குலைவிற்கும் உள்ள தொடர்பும் ஆய்விற்கு உள்ளாக வேண்டும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_18.html )

ஊழல் மன்னர்களை 'தமிழ்ப் புரவலராக' போற்றி, பிழைத்த, கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எல்லாம் 1967க்கு பின் தான் 'அதீதமாக' வளர்ந்ததும், அந்த சமநிலை சீர்குலைவின் விளைவேயாகும்; அறிவுபூர்வ விமர்சனப்பார்வையை பின் தள்ளி, உணர்ச்சிபூர்வ போக்கை, ஊழலின் கேடயமாக பயன்படுத்தும் போக்கின் வளர்ச்சியில்.

ஊழல், சாதிவெறி, சாதி மோதல்கள் அதிகரித்துள்ள இன்றைய தமிழ்நாட்டில் வாழும் இளைஞர்களுக்கு;

1967க்கு முன் தமிழ்நாடு எப்படி இருந்தது? என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

இன்றும் சுமார் 60 வயதுக்கும் அதிகமானவர்களில்;

கீழ்வரும் மனநோயாளிகளாக வாழ்பவர்களைத் தவிர்த்து, மற்றவர்களுக்கு எல்லாம், மேலே குறிப்பிட்ட கவலை இருக்கலாம்.

‘மேல் நடுத்தட்டு, பணக்காரர்களில் பெரும்பாலோர், 'காரியம் சாதிக்க' தமக்கு வாய்த்திருந்த 'செல்வாக்கு' நபர்கள் எல்லாம், 'கோமாளிகளாக' வலம் வருகையில், அந்த நகைச்சுவைகளை ரசிக்க முடியாத அளவுக்கு,  காரியம் சாதிக்க அடுத்து நமக்கு யார் 'செட்' ஆவார்கள்? என்ற தேடலில்,  குழம்பி தவிக்கிறார்களா?

நமது குடும்பப்பிள்ளைகளை நல்ல பள்ளியில்/கல்லூரியில் சேர்க்க வேண்டுமே?

 +2 தேர்விலும், அடுத்து அடுத்து வரும் தேர்வுகளிலும், கமுக்கமாக வெளியில் தெரியாமல், குறுக்கு வழிகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமே?

அதே போல அரசு வேலைகள் அல்லது நல்ல தனியார் கம்பெனிகளில், குறுக்கு வழிகளில்,வேலை பெற வேண்டுமே? என்பது போன்ற இன்னும் பலவற்றில் மூழ்கி;

ஊழல் சாம்ராஜ்யத்தில் மவுலிவாக்க அடுக்குமாடிகள் மழையில் விழுந்தால் என்ன?
ஏரிகள், ஆறுகள், தாதுமணல், கிரானைட், ஆற்று மணல் கொள்ளை போனால் என்ன?
கொலை, கொள்ளை, ஊழல் குற்றவாளிகள் தப்பிக்க துணை போனால் என்ன?

அத்தகையோரின் செல்வாக்கு நமக்கு லாபம் என்றால், நல்லது தானே;

என்ற மன நிலையில் வாழ்பவர்கள் எல்லாம், பெரும்பாலும் 'எந்த வழியிலாவது மேல்தட்டு' வாழ்க்கைக்கு ஏங்கும் நடுதரவாசிகளாகவும், மேல் தட்டு, பணக்காரர்களுமாகவுமே இருக்கிறார்கள்; பொதுவாழ்வு வியாபாரிகளின் சமூக முதுகெலும்பாக வாழ்ந்து கொண்டு.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_16.html )

அதே நேரத்தில் இன்று படித்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களில் பெரும்பாலோர் எல்லாம், மேலே குறிப்பிட்ட வகையில், 'பொது வாழ்வு வியாபாரிகளின் சமூக முதுகெலும்பாக' வாழும் தமது பெற்றோர்களை முன் மாதிரியாகக் கொண்டு;

அவர்களால் தமக்கு இலாபம் இல்லையென்றால்;

அவர்களையும், சுற்றத்தையும், " 'நியூசென்ஸ்' என்று ஒதுக்கி வாழ;

அதையும் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, செத்துக் கொண்டே வாழும் பெற்றோர்கள் எல்லாம் வளர்ந்து வரும் நாடாக தமிழ்நாடு இருக்கிறது.

ஆங்கில வழிக்கல்வியில்,  'சொந்த காசில் சூன்யம்' வைத்துக் கொள்ளும் போக்கில்;

தமிழ்நாடும், தமிழும், தமிழர்களும் வீழ்ந்து வருகிறார்கள்; தமிழ்நாட்டை சீரழித்த 'சாபத்தில்' (Curse) பங்கும், தண்டனையும் அனுபவித்துக் கொண்டு. (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_16.html )

‘அந்த போக்கினை முன்கூட்டியே உணர்ந்து, விழித்துக் கொண்டு, தமது குழந்தைகளை 5 வயது வரை எந்த பள்ளியிலும் 'கூண்டில்' அடைக்காமல்;

முதலாம் வகுப்பில் தமிழ்வழிக் கல்வியில் பயில வைக்கும் திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ள இளம் பெற்றோர்களையும் நான் அறிவேன்.( http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html ) "

அந்த போக்கில் தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நம்பிக்கையூட்டும் கீழ்வருவது போன்ற செய்திகள் அதிகரித்து வருவதானது, மீட்சியை நிச்சயமாக்கி விட்டது.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் லலிதா ஐஏஎஸ், தன் மகள் தருணிகாவை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையரான லலிதா ஐஏஎஸ் இதுகுறித்து நம்மிடம் விரிவாகவே பேசினார்.
''என்னுடைய குழந்தையை தனியார் பள்ளியில் படிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை. சென்னை மாநகராட்சிப் பள்ளியிலேயே அவள் படிக்கவேண்டும் என்று விரும்பினேன். அதனால் தருணிகாவை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் தொடக்கப்பள்ளியில் திங்கட்கிழமை அன்று சேர்த்திருக்கிறேன். அவளும் தன்னுடைய பள்ளி வாழ்க்கையை ஆனந்தமாகத் தொடங்கி இருக்கிறாள்.
இந்த தருணத்தில் நானும் ஓர் அரசுப் பள்ளியின் வார்ப்பு என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மகளை சேர்த்த ஐஏஎஸ் அதிகாரி .” ( http://tamil.thehindu.com/tamilnadu )
‘அறிவுபூர்வ போக்கில், தவறு என்று வெளிப்பட்டதை பகிரங்கமாக ஏற்று, திருந்தி, பயணித்த 'பெரியார்' ஈ.வெ.ரா இன்று உயிரோடிருந்தால், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு சேர்ந்து செயல்பட்டிருப்பார், என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_29.html)
'தாய்மொழிவழிக் கல்வி, கல்வி நிறுவனங்களில் சாதி, மத அடிப்படைகளில் பாகுபாட்டை எதிர்த்தல், போன்ற பிரச்சினைகளில், ஆர்.எஸ்.எஸுடன் சேர்ந்து செயல்படும் வாய்ப்புகளை புறக்கணித்து, மாணவர்களும், இளைஞர்களும் விரும்பாத வெறுப்பு அரசியல் போக்கில், அறிவுபூர்வ விவாதங்களை தவிர்த்து, உணர்ச்சிபூர்வ போக்கில், 'பெரியார்' கட்சிகள் இனியும் பயணிப்பதானது, புத்திசாலித்தனமா?’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_18.html )

மீட்சி திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ள தமிழ்நாட்டில், சுயலாப கணக்கில் (பொது வாழ்வு மூலதனமாக) அல்லது சாகசத்தில் பூணூல் தொடர்பான போராட்டங்கள் எல்லாம்;
மீட்சிக்கான தடைகளாகவே ஒதுக்கப்படும்;
ஈ.வெ.ரா சாகும் வரை கடைபிடித்த போக்கிலிருந்து விலகி, பொது மக்களுக்கும், பொது வாழ்வுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் கேடான திசையில் பயணித்தால், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒடுக்கப்படும்.
நெருக்கடிகாலம் முடிந்து நடந்த பாராளுமன்ற தேர்தலில், வட மாநிலங்களில் பெரும் தோல்வியை சந்தித்த இந்திரா காங்கிரஸ் கட்சியானது:
தமிழ்நாட்டில் பெரும் வெற்றி பெற்றது: ஊழலில் சிக்கி ஆளுங்கட்சியாக பயணித்த தி.மு.கவினரை ஒடுக்கிய போக்கிற்கு, பொது மக்களிடம் கிடைத்த ஆதரவின் காரணமாக.
திராவிட அரசியல் கொள்ளையர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும், அறிவுபூர்வமற்ற  'திராவிடர்' கவசத்தில் ஆதரித்து வரும், 'பெரியார்' கட்சிகள் எல்லாம், அறிவுபூர்வமாக விழித்துக் கொண்டால் மட்டுமே, தமிழ்நாட்டு மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியும். 

No comments:

Post a Comment