Monday, July 31, 2017

 

தமிழ்நாட்டின் மீட்சி வரலாற்றில் கமல்ஹாசன்  இடம் பெறுவாரா? (1)

 

அறிவுபூர்வமான விவாதத்திற்கு உட்படுத்தியாக வேண்டும்;

காஷ்மீர் பிரிவினை கோரிக்கைக்கு, கமல்ஹாசன் ஆதரவா?


'it’s a Mad Mad Mad Tamilnadu'- உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படம்: கமலஹாசன் நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா?’ என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2017/07/its-mad-mad-mad-tamilnadu-its-mad-mad.html )

கமல்ஹாசன் தொடர்பாக, அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளில்;

கீழ்வரும் செய்தியானது மிகுந்த கவலை தந்தது. அறிவுபூர்வமான விவாதத்திற்கு அதனை உட்படுத்த வேண்டியது அவசியமாக, எனக்கு பட்டது.
 
கமல் " 'காஷ்மீர் விவகாரத்தில் முஸ்லீம்களுக்கு பிரியமில்லை என்றால் பிரிந்து போகட்டுமே'  என்று அப்போது எழுதியதைப் பார்த்து, சோ இந்த மாதிரி விஷயங்களில் அவசரப்படாதே என்று எச்சரித்தார்." (பக்கம் 04,  தமிழக அரசியல், 26.07.2017)

கருத்துரிமை என்பது எந்த நெருக்கடியுமில்லாத சமூக சூழலில் மட்டுமே, சாத்தியமாகும். ஆயுதப்போராட்டத்தில் சிக்கிய எந்த பகுதியிலும் வாழும் மக்களுக்கு, அந்த சமூக சூழல் கிடையாது. 

பாகிஸ்தான் என்ற நாடு, காலனிய சூழ்ச்சியில் உருவாகாமல் இருந்திருந்தால், இந்தியாவுடன் 1975இல் இணைந்து, சுயநல தேசியக் கட்சி அரசியலில் சிக்காமல், முன்னேறியுள்ள சிக்கிமைப் போல், காஷ்மீரும் இன்னொரு சிக்கிமாக வளர்ந்திருக்கக் கூடும். (https://en.wikipedia.org/wiki/Sikkim )

ஜின்னாவை பிரதமராக்க நேரு சம்மதித்திருந்தால், பாகிஸ்தான் தனிநாடாக பிரிந்திருக்குமா? என்பதும் விவாதத்திற்குரியதாகும்.

வல்லபாய் படேல் இந்திய பிரதமராகி, இருந்தால், காஷ்மீரில் ஒரு பகுதி, பாகிஸ்தானுக்கு போயிருக்குமா? மேலே குறிப்பிட்ட பாதகமான சமூக சூழலில், பிரிவினைக்குழுக்களுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையிலான மோதலில், காஷ்மீர் மக்கள் சிக்க நேரிட்டிருக்குமா? வல்லபாய் படேல் அன்று உள்துறை அமைச்சராக இரும்பு மனிதராக செயல்பட்டிருக்காவிட்டால், இன்று இந்தியாவில் சுமார் 50க்கும் அதிகமான காஷ்மீர்கள் உருவாகியிருந்து, ஆப்பிரிக்கா போல, இந்தியா சீரழிந்திருக்குமா, சீரழிவுக்கு காரணமான 'மக்கள் போராட்டங்களின்' தலைவர்களும், அவர்களின் குடும்பங்களும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், 'பாதுகாப்பான' வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டு(‘நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை’ ; http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

என்பது போன்ற கேள்விகளை, தமது மனசாட்சிக்குட்பட்டு, கமல்ஹாசன் எழுப்பி, விடைகள் காண வேண்டும்.

அது போன்ற ஆய்வுக்கு உதவும் தகவல்களை, அடுத்து சுருக்கமாக பார்ப்போம்.

‘உலகமயமாக்கலுக்குப் பின்,  'தனிநாட்டின் அதிகார ஆளுமை' (‘sovereignty’) என்பது, பெற்று வரும் வேகமான மாற்றங்கள் குறித்து, பல ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

'உலகமயமாக்கலுக்குப் பின் ‘சாவரினிட்டி (‘sovereignty’) என்பது கதையாகப் (fictional. ) போய்விட்டது', என்று ஜான் எச் ஜாக்சனும் (பக்கம் 784), கடந்த காலத் தடயமாக வரலாற்று நூலகத்திற்குச் செல்ல வேண்டியது என்று பேரா.என்கினும் (பக்கம் 789),  சர்வ தேசச் சட்டங்கள் பற்றிய அமெரிக்க ஆய்வு நூலில் (The American Journal of International Law  ) கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

இப்போது தனிநாடுகளாக உள்ளவற்றின் 'சாவரினிட்டிக்கே', இந்த கதி என்பதை, பிரிவினை இயக்கங்கள் கருத்தில் கொண்டு செயல்படுகின்றனவா?

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்களைத் தேடினால், கிடைக்கும் விடைகள் முக்கியமானவை.

1983 சூலை இனப்படுகொலைக்குப் பின், தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் ந‌கரம், கிராமம் என்ற வேறுபாடின்றி, தாமாகவே கொதித்தெழுந்து, பல வாரங்கள் அந்த கொதிப்பு நீடித்ததை நேரில் அனுபவித்தவன் நான். அந்த கொதிப்பில் உருவான ஆதரவாளர்கள் பலத்துடன், விடுதலைப் புலிகள், PLOT, EPRLF, TELO, EROS      போன்ற பல ஈழ விடுதலைக்குழுக்கள்,  தமிழ்நாட்டை தததம் ஆதரவு மண்டலங்களாகக் கூறு போட்டுக் கொண்டனர். அத்துடன் ஆயுதப்பயிற்சிகள், புத்தகங்கள், இதழ்கள் வெளியிடுதல், கண்காட்சிகள் நடத்துதல் உள்ளிட்டு பலவேறு வழிகளில் தம்மைப் பலப்படுத்திக் கொண்டனர். அக்குழுக்களின் தமிழ்நாட்டு ஆதரவாளர்களிடையே ஆங்காங்கு மோதல்கள் நடந்த சம்பவங்களும் உண்டு.

அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் எம்.ஜி ஆரின் ஆதரவில், அதிக பலன் பெற்றவர்கள் விடுதலைப் புலிகள். அன்று மிகவும் வலிமையுடனும், செல்வாக்குடனும், இருந்த டெலோ தலைவரையும், நூற்றுக்கணக்கான ஆயுதப் பயிற்சி பெற்ற போராளிகளையும், விடுதலைப் புலிகள் இலங்கையில் சுட்டுக் கொன்றனர். அதிலும் கைகளைத் தூக்கி சரணடைந்தவர்களையும் கொன்றனர். அதே போல்  EPRLF   போராளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டில் அந்த அமைப்புகளுக்கு எவ்வளவு ஆதரவாளர்கள் இருந்தனர்? அவர்கள் மனநிலையில் என்னென்ன பாதிப்புகள் விளைந்தன? என்பது பற்றி, எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் விவாதம் நடக்கவில்லை. என்னைப் போன்று, அன்று விடுதலைப்புலி ஆதரவாளர்களாக செயல்பட்டவர்கள் தங்களுக்குள் வருத்தத்தைப் பரிமாறிக் கொண்டோம். ஒரு பெரிய இலட்சியத்திற்காகப் போராடும் இயக்கத்தில், இது போன்று நடக்கும் தவறுகளை, சகித்துக் கொள்வதைத் தவிர வேறு , என்று 'அன்று' இருந்த ‘அறிவில்(?)  சமாதானம் சொல்லிக் கொண்டோம். 'விடுதலைப் புலிகள் மீண்டும் ஏமாறப் போகிறர்களா?' (மார்ச் 1988} உள்ளிட்ட பல (திருச்சி பெரியார் மையம்) வெளியீடுகளின் அபாய எச்சரிக்கைகள் காரணமாக, விடுதலைப்புலிகள் என்னை வெறுக்கத் தொடங்னார்கள்……..1944இல் 'பெரியார்' ஈ.வெ.ரா திசை திரும்பியதைப் போல, பிரபாகரனும் பாதகமாக திசை திரும்பினாரா? என்ற ஆய்வுக்குதவும் தகவல் வருமாறு:

தனது வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலின்றி, பிரபாகரன் 'திசை திரும்ப' தொடங்கிய காலத்தில், அது பற்றி ஆன்டன் பாலசிங்கம், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம், நான் உள்ளிட்ட நால்வரும் விவாதித்தோம். பிரபாகரனை 'கவனமாக' கையாண்டு நெறிப்படுத்தலாம், என்று பாலசிங்கம் கருத்து தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ளாமல், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம் இருவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறினர். அதன்பின் நிர்மலா, திருச்சியிலிருந்த எனது இல்லத்திற்கு வந்து, 'விடுதலைப்புலிகளை ஆதரிப்பது தவறு' என்று கோபமாக பேசினார். பின், எனது முயற்சியில், சென்னை பெரியார் திடலில் கோவை.இராமகிருட்டிணனை சந்தித்து, அவர் பேச ஏற்பாடு செய்தேன். அவரிடமும் நிர்மலா கோபமாக பேசியதை கோவை.இராமகிருட்டிணன் மறந்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன். அதன்பின் கடைசியாக, ஆண்டன் பாலசிங்கத்தை சந்தித்த போது, சர்வதேச அரசியல் சூழலில், 'தனி ஈழம் சாத்தியமில்லை' என்று நான் விளக்கியபோது, அதற்கு தகுந்த மறுப்பு சொல்லாமல், மொட்டையாக 'ஆனாலும் வாங்கி விடுவோம்' என்றார். அந்த சந்திப்பில் கூட இருந்த விடுதலை இராசேந்திரன், அதை மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதன்பின் இசை ஆராய்ச்சியில், நான் திசை திரும்பினேன்.

நிர்மலாவின் தங்கையான, யாழ் பல்கலைக்கழக மனித உரிமை அமைப்பின் நிறுவனருமான,  பேரா.முனைவர்.ரஜனி திரநாகமா, விடுதலைப்புலிகளை விமர்சித்து, 21 செப்டம்பர் 1989இல் ' The Broken Palmyra' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அடுத்து சில வாரங்களிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
https://en.wikipedia.org/wiki/Rajini_Thiranagama & Rajini Rajasingham Thiranagama: Unforgettable Symbol of Sri Lanka’s Tamil Tragedy

பின் பல வருடம் கழித்து,'ஏன் தமிழ்நாடு தனிநாடாக வேண்டியதில்லை?' என்று விளக்கிய, கீழ்வரும் பாலசிங்கம் பேட்டி, என் கண்களுக்கு பட்டது." " There is a state government of its own there. There are political parties. The state is prospering. Why should Tamilnadu separate from India? There is no need to do so" said Balasingham." Page 127; Frontline December 24, 1999. பிரபாகரனை 'கவனமாக' கையாண்டுவந்த , ஆண்டன் பாலசிங்கம் 2006 டிசம்பரில் மறைந்தார். ‘ (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

‘உதவிகளை வழங்குபவரைப் போலவே, உதவிகள் பெறுபவருக்கும், சுயலாப கணக்கிலான உள்நோக்க ஈடுபாடு இருக்குமானால், அப்படிப்பட்ட நபர்களிடம் ஏமாந்து, அவர்களை பொதுவாழ்வில் தலைவர்களாகவும், தொண்டர்களாகவும் செயல்பட அனுமதித்த சமூகமானது, அந்த உதவிகளால் விளையும் ஆபத்திலிருந்து தப்பவே முடியாது.

1980கள் தொடக்கம் வரை இலங்கையில் மலையகத்தமிழர் பிரச்சினைத் தவிர, வேறு எந்த பிரச்சினை பற்றியும், தமிழ்நாட்டில் பெரும்பாலோருக்கு ('பெரியார்' இயக்கத்தில் கொள்கை புலமையாளனாக (Theoretician) பயணித்த நான் உள்ளிட்டு) தெரியாது. மே 19 1982   சென்னை பாண்டி பஜாரில்  மோட்டர் சைக்கிளில் (விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்) பிரபாகரன் ஓட்ட, பின்னால் அமர்ந்து பயணித்த‌ ராகவன்,  ( 'புளோட்' - PLOT-  இயக்க) தலைவர் உமா மகேசுவரனையும்,  அவரது உதவியாளர் ஜோதீஸ்வரனையும் சுட்டதில் அவர் தப்பித்து, பின் நால்வரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட செய்தி மூலமே, பொது அரங்கில், 'ஈழப் பிரச்சினை' பெரும்பாலோரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.

இன்றைக்கு சுமார் 55 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு அது தெரியும்.

இந்திராகாந்தி பிரதமராக இருந்த அந்த காலக்கட்டத்தில், ஈழ விடுதலை குழுக்களுக்கு, ‘அபரீதமான உதவிகள்எங்கிருந்து, எதற்காக வந்தன? தமிழ்நாடெங்கும் அந்த குழுக்கள் எல்லாம் 'ஆயுத பயிற்சிகளும்', 'கண்காட்சிகளும்', ''பத்திரிக்கைகளும்', கொலைகளும், சித்திரவதை முகாம்களும் செயல்பட்ட அளவுக்கு, சம்பந்தப்பட்ட சட்டங்கள் எல்லாம் 'கண்களை' மூடிக் கொண்ட அளவுக்கு, மத்திய அரசு ஏன் ஒத்துழைப்பு வழங்கியது? போன்ற கேள்விகள் எல்லாம், அந்த காலக்கட்டத்தில், விடுதலைப் புலிகளை ஆதரித்து பயணித்த, திருச்சி 'பெரியார் மையத்தில்' விவாதிக்கப்பட்டது. அந்த காலத்தில் திருச்சி பெரியார் மாளிகையில், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்த, புலவர் இமயவரம்பனிடம், 'காஷ்மீர், மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் 'தனி நாடு' கோரும் ஆயுதப் போராட்டங்களை ஒடுக்கி வரும், இந்திராகாந்தியின் உதவியை விடுதலைப் புலிகள் பெறுவது, சரி என்றால், நாம் ஏன் (அன்றைய இலங்கை அதிபர்) ஜெயவர்த்தனேயிடம் தனித் தமிழ்நாட்டிற்கு ஆதரவும், உதவியும் பெறக்கூடாது?" என்று நான் கேட்ட போது, அவரால் உரிய விளக்கம் தர முடியவில்லை.

'உதவிகள்' தொடர்பான புரிதலும், ஆய்வும் இன்றி, 'ஈழ விடுதலை' முயற்சிகள் பயணித்து, முள்ளிவாய்க்கால் பேரழிவானது, எவ்வாறு வரலாற்று சான்றாகி விட்டது? என்பதை எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.’ (http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_27.html )

உலக ஆதிக்க சக்திகளின் நலன்களுக்குக் கேடில்லாத வகையில் உருவான சர்வதேசச் சூழலில் கிழக்கு தைமூரிலும், தெற்கு சூடானிலும், ஐ.நா மேற்பார்வையில் 'கருத்து வாக்கெடுப்பு' மூலம், தனி நாடுகள் உருவானது. அதன் பின் அங்கு என்ன நடந்தது, நடக்கிறது, அவ்வப்போது அந்நிய துருப்புகள் உள்நுழைந்து அமைதி உருவாக்க வேண்டிய தேவை என்ன? தனிநாடு கோரிக்கையில்லாமலேயே, சீனர் பெரும்பான்மையாயுள்ள சிங்கப்பூரை, மலேசியா ஏன் தனிநாடாகத் துண்டித்தது? அப்போது மலேசிய நாணயத்தை விட, சிங்கப்பூர் டாலர் மதிப்பு குறைவாகவும், ஊழலில் மோசமாகவும் இருந்த சிங்கப்பூர், உலகே வியக்கும் அளவுக்கு எவ்வாறு முன்னேறியது?

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்களைத் தேடினால், கிடைக்கும் விடைகள் முக்கியமானவை.

புறக்கணிப்பின் அடிப்படையில், துவக்கத்தில், நேர்மையான உரிமைப் போராட்டமாக துவங்கும் 'தனி நாடு' முயற்சிகள், ஆயுதப் போராட்ட வடிவமாக வளரும்போது, உலக ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஆபத்தும் இருக்கிறது. தனிநாடு, மனித உரிமை, பெண்ணுரிமை, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு உள்ளிட்டு உலகில் நடைபெறும் பலவகையான அமைப்புகளையும், போராட்டங்களையும், 'பொம்மலாட்டமாக' மாற்றி, தமது வலையில், உலக ஆதிக்க சக்திகள், எவ்வாறு சிக்க வைக்கின்றன, என்ற செயல்நுட்பத்தை, விளக்கும் நாவல் The Aquitaine Progression by Robert Ludlum ( 1984).

குறிப்பாக சட்டபூர்வமாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் ஆயுத உற்பத்தி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சுயநல சக்திகளுக்கு, அவர்களுடைய வியாபார நலன்களுக்காக, உலகில் பல இடங்களில் போரும், ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பாக கடும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள அமெரிக்கா போன்ற நாடுகள் ஆயுத உற்பத்தி வியாபாரத்தையே பெரிதும் நம்பியுள்ளன. 1998 - 2003 காலக் கட்டத்தில், உலக ஆயுத வியாபாரத்தில் பாதி அமெரிக்கா வசம் இருந்தது. அதில் 2/3 பங்கு வியாபாரம் வளரும் நாடுகளுக்கான ஆயுத விற்பனையாக இருந்தது. அன்றைய ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னன் சட்டவிரோதமான ஆயுத வியாபரத்தைத் தடுக்க, வளர்ந்த நாடுகள் கூட்டு முயற்சி மேற்கோள்ளும் யோச‌னையை முன் வைத்தபோது, அமெரிக்கா அதை நிராகரித்தது.  ( Pages 97-98,  Identity and Violence – The Illusion of Destiny by Amartya Sen - 2006)

அதே நேரத்தில் உலக ஆயுத உற்பத்தியாளர்களின் பிழைப்பிற்கே ஆபத்தாகும் வகையில், உலகப் பொருளாதாரம் சீர்குலையாமலும், பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த சமநிலைக்குக் கட்டுப்பட்ட வகையிலேயே போரும், ஆயுதப் போராட்டங்களும் நடைபெறுவதற்காகவே, அச்சக்திகள் அவ்வப்போது சமாதான முயற்சிகளிலும், ஒத்து வராத அரசுகளை கவிழ்ப்பதிலும், தாமே, தமது சுயநலனுக்கு வளர்த்த, ஆயுதக் குழுக்களை, 'பயங்கரவாத எதிர்ப்பு' என்ற போர்வையில், அழிப்பதுமான, செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திறந்த மனதுடனான, அறிவுபூர்வமான விமர்சனங்களைத் துரோகமாகக் கருதி ஒழித்து, உணர்ச்சிபூர்வ போதையில் பயணிக்கும் ஆயுதப் போராட்டங்கள், இந்த சூழ்ச்சி வலையிலிருந்து தப்புவது கடினமே.’ (http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_26.html )

மேலே குறிப்பிட்ட பின்னணியில்;

'தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப் போக்கும்;

1980களில் சங்கமமான சமூக செயல்நுட்பத்தினை ஆராய்வதும் அவசியமாகி விட்டது.' (http://tamilsdirection.blogspot.in/2017/02/blog-post_19.htmlTELO, PLOT, EPRLF ஆகிய குழுக்களின் தலைவர்களையும், போராளிகளையும், ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற விடுதலைப்புலிகளை கண்டிக்காமல், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக பயணித்த‌, அந்த குழுக்களின், தமிழ்நாட்டு ஆதரவாளர்களுக்கும், ஜெயலலிதாவை காலில் விழுந்து வணங்கி, பின் ஜெயலலிதாவின் மர்ம சிகிச்சை/மரணம் குறித்து, பாரபட்சமற்ற நீதி விசாரணை கோராமல், சசிகலாவின் காலில் விழுந்து வணங்கியவர்களுக்கும், வேறுபாடு உண்டா? அந்த சமூக செயல்நுட்பத்திலிருந்து விடுதலை ஆகாமல், தமிழ்நாட்டிற்கு மீட்சி உண்டா? 'தமிழ்நாடும், தமிழும், தமிழர்களும் வீழ்ந்து வருகிறார்கள்; தமிழ்நாட்டை சீரழித்த 'சாபத்தில்' (Curse) பங்கும், தண்டனையும் அனுபவித்துக் கொண்டு.' (http://tamilsdirection.blogspot.in/2017/07/blog-post_16.html ) தமிழ்நாட்டிற்கு வந்து, அந்த சமூக செயல்நுட்பத்தில் சிக்கிய 'ஈழ விடுதலை' முயற்சியும், அந்த 'சாபத்தில்' (Curse) அதற்கான‌ பங்கும், தண்டனையும் அனுபவிப்பதிலிருந்து தப்ப முடியுமா? அந்த சமூக செயல்நுட்பத்திலிருந்து விடுதலை ஆகாமல், 'ஈழத்' தமிழர்களுக்கும் மீட்சி உண்டா?  

ஈ.வெ.ராவை 'பெரியார்' பிம்பத்தில் உணர்ச்சிபூர்வமாக சிறைப்படுத்தி, 'தனித்தமிழ்நாடு போதையில்' பயணித்தவர்களின் பலத்தில், அதை விட மோசமான 'பலூன் பிம்பத்தில்' பிரபாகரன், ஈ.வெ.ராவைப் போலவே, தனது வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலின்றி சிறைபட்டதே, முள்ளிவாய்க்கால் பேரழிவை நோக்கிய திசையில், விடுதலைப் புலிகளை பயணிக்க செய்தது, என்பது எனது ஆய்வு முடிவாகும். 'பெரியார்' பிம்பமானது, உடையத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் வெளிப்பட தொடங்கியுள்ளதை, கீழ்வரும் முகநூல் தகவல் உணர்த்துகிறது.

"ம. வெங்கடேசனின் ‘ஈவேராவின் மறுபக்கம்என்ற புத்தகம் தி.க காரர்களால் இன்னமும் பதில் சொல்லப்படாமல் இருக்கிறது. ஈ.வே.ரா வின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் புரோக்கர்களை புரட்டிப்போட்ட புத்தகம் அது." (http://vijayabharatham.org/?p=148அப்புத்தகத்திற்கு அறிவுபூர்வமான மறுப்பு ஏதும் வெளிவந்திருந்தால், தெரிவிக்கவும்; நன்றியுடன் ஆய்வுக்கு நான் உட்படுத்த இயலும். இது போன்ற புத்தகங்களுக்கும், எனது பதிவுகளுக்கும் அறிவுபூர்வமாக, 1944க்கு முன் 'குடி அரசு' பயணித்த பாணியில், பதில் சொல்வதைத் தவிர்த்து, பயணிக்கும் 'பெரியார்' கொள்கையாளர்கள் எல்லாம், திராவிட அரசியல் கொள்ளையின் அடிவருடிகளாகவே பயணிக்க முடியும். ‘தமக்கு இப்போதிருக்கும் செல்வம், செல்வாக்கு, வசதிகளுடன் தமது காலத்தை பெரியார் கட்சிகளின் தலைவர்கள் கழித்து விடலாம். ஆனால் தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, பெரியாரின் வரலாற்று மரணத்தை முன்நிபந்தனையாக்கிய குற்றவாளிகளாக அவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதை தடுக்க முடியாது. எனது ஆய்வுகள் அடிப்படையில் தெளிவு பெற்று, 2005 முதல் நான் மட்டுமே, நானறிந்த வரையில், தனி ஆளாக எதிர்நீச்சல் போட்டு வரும் அடிப்படையில்,  இந்த அபாய அறிவிப்பை முன் வைக்கிறேன்.’;( http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none_15.html1950களில் 'காந்தி பொம்மையை உடைத்தல், படங்களை' எரித்தல் போராட்ட பிரச்சாரங்களை, 'பெரியார்' ஈ.வெ.ரா மேற்கொண்டபோது, மக்களிடம் அது எடுபடவில்லை; போராட்டமும் நடக்கவில்லை. (ஆனால் 'பெரியார் உடைத்தல், படங்களை' எரித்தல் போராட்ட பிரச்சாரங்களை இன்று மேற்கொண்டால், அதை வரவேற்கும் அறிகுறிகள் வெளிப்பட தொடங்கியுள்ளன. (http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_5.html )

'பெரியார் பிம்பமும்', 'பிரபாகரன் பிம்பமும்', ஜெயலலிதாவின் மர்ம சிகிச்சை/மரணம் குறித்து, பாரபட்சமற்ற நீதி விசாரணை கோராமல், சங்கமமாகி விட்டதா? தமிழ்நாட்டில் பிரபாகரனின் 'பலூன் பிம்பம்' உடைவதை, 'பணம், மீடியா' பலத்தால் தாமதப்படுத்த முடியுமே தவிர, தவிர்க்க முடியாது. 'பெரியார்', ' பிரபாகரன்', 'மார்க்சியம்', ' தமிழ்த்தேசியம்' ஆகிய பிம்பங்களின் வழிபாட்டில் சிக்கியவர்கள் எல்லாம்;


தாம் 'நேசிக்கும்' நிலைப்பாட்டிற்கு எதிராக, விவாதத்தில் நாம் முன்வைக்கும், வெளிவந்த ஆய்வு கட்டுரைகளை படிக்கும் ஆர்வமின்றி, தமது 'நிலைப்பாடு போதையில்' பயணிப்பவர்களை, நான் 'அனுபவித்திருக்கிறேன்'. எனவே அத்தகையோரை சந்திப்பதையும், தற்செயலாக சந்திக்க நேர்ந்தால், அவர்களுடன் விவாதிப்பதையும், இயன்ற அளவு தவிர்த்து வருகிறேன்; 'கர்நாடக இசை உயர்வு போதை', 'தமிழ் இசை உயர்வு போதை'யாளர்களை தவிர்த்து வருவது போலவே.  


காலனிய மனநோயில் சிக்கிய இந்தியர்கள் எல்லாம், ஒரு வகை தாழ்வு மனப்பான்மையில் 'மேற்கத்திய அங்கீகாரத்திற்கு' ஏங்கியவர்களாக  பயணித்து வரும் சூழலில்;

தமிழ்நாட்டில் தனித்துவமாக (Unique), ஆங்கிலம் தெரியாமல், தமிழிலும் ஆழ்ந்த புலமையின்றி, சாராசரி பொது அறிவின் அடிப்படையில், தமிழ் இலக்கியங்களையும் கேலி, கிண்டல் செய்து, 'அதி புத்திசாலிகளாக' பயணித்தவர்கள்,( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html ) மற்றும் 'தனித்தமிழ்நாடு போதையில்'  உணர்ச்சிபூர்வமாக பயணித்தவர்கள் எல்லாம் (http://tamilsdirection.blogspot.in/2016/07/fetna.html  ), 'ஊதி' பெருக்க வைத்த, மேலே குறிப்பிட்ட பிம்பங்களின் 'அதீத' செல்வாக்கில்;

தமிழ்நாட்டின் தாய்மொழிவழிக் கல்வியும், கனிவளங்களும் 'ஊழல் சுனாமி'யில் சூறையாடப்பட்டு, அந்த சமூக குற்றவாளிகளை, 'புரவலராக' கொண்டு, கடந்த சுமார் 30 வருடங்களில் நடைபெற்ற 'தமிழ் உணர்வு' நிகழ்ச்சிகளையும், 'பாராட்டப்பட்ட' அறிவுஜீவிகளையும்;

அடையாளம் கண்டு அம்பலப்படுத்தும் பணியை, கமல் ரசிகர்கள் செய்தால், தமிழ்நாட்டின் மீட்சி வரலாற்றில் கமல்ஹாசன் நிச்சயம் இடம் பெறுவார்.

காஷ்மீரில் கடந்த வருடம் வெள்ளம் சூழ்ந்த போது, இந்திய‌ இராணுவத்தின் மீட்பு முயற்சிகளில், பொதுமக்க‌ள் மட்டுமின்றி, பிரிவினைக் குழுக்களின் ஆதரவாளர்களும் காப்பாற்றப் பட்டனர். இராணுவத்தின் அத்துமீறல்களை கண்டிக்கும், மனித உரிமைத் தலைவர்கள் எல்லாம், ஆயுதக் குழுக்களின் அத்து மீறல்களை இதுவரை கண்டித்தார்களா? இனிமேலாவது கண்டிப்பார்களா? இராணுவமாக இருந்தாலும், ஆயுதக்குழுக்களாக இருந்தாலும், அப்பாவி மக்களை துன்புறுத்துவதை கண்டித்தாக வேண்டும்.   

அத்தகைய பாரபட்சமற்ற போக்கில், கமல்ஹாசன் போன்றவர்கள் குரல் எழுப்பினால், அது  காஷ்மீர் மக்களின் துயரங்களை குறைக்க உதவும். ஊழலற்ற, பாரபட்சமற்ற போக்கில் செயல்பட்டு வரும் பிரதமர் மோடியால், வடகிழக்கு மாநிலங்களில், பிரிவினை போக்குகள் வலுவிழந்து, வளர்ச்சி நோக்கி, அம்மாநிலங்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளன. அந்த திசையில் காஷ்மீர் மக்களும் பயணிப்பதை ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாடு அந்த திசையில் பயணிப்பதற்கு, தமிழக பா.ஜ.கவில் உள்ள தடைகளை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

சர்வதேச அரசியல் பொருளாதாரத்தில், ஆயுத/போதைப் பொருள் வியாபார முதலைகளின் நலன்களில், தனிநாடு, மனித உரிமை போராட்டங்கள் சிக்கி, பயங்கரவாதம் அச்சுறுத்தி வரும் சூழலில், மக்கள் நலனுள்ள அரசுகள் எல்லாம்;

சுதந்திரத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் இடையில் கவனமாக பயணித்தாக வேண்டும்.
“Knowing that security is a prerequisite for freedom, a trade-off must be accepted in order to keep the people safe”. ( ‘Terrorism: Freedom vs. National Security’ ; http://newsactivist.com/en/news-summary/flacks-ethics-winter-2015/terrorism-freedom-vs-national-security )

அவ்வாறு இந்திய அரசு கவனமாக பயணிக்க வேண்டுமானால்;

வெளிநாட்டு நிதி உதவியில், மக்கள் பிரச்சினைகளை பகடைக்காய்களாக்கி பயணிக்கும் அமைப்புகளையும், தலைவர்களையும் அம்பலப்படுத்தும் பணியை, தமிழ்நாட்டில் 'பிரபல' எழுத்தாளர்கள் எல்லாம் பெரும்பாலும் தவிர்த்து வரும் நிலையில் (http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_12.html), கமல்ஹாசன் போன்றவர்கள் செய்வது, நாட்டுக்கு நல்ல பலன் தருவதாக அமையும். பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் எல்லாம்,  பிராந்திய தீவிரவாதங்களுக்கு, சுயநல அரசியலில், துணை போகும் போக்குகளை எல்லாம், ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி, கண்டிக்கும் பணியை, நாட்டின் மீது அக்கறை உள்ள அனைவரும் செய்தாக வேண்டும். (‘Caution: BJP's support to strengthen the regional chauvinism, at the cost of the Indian unity?’; http://tamilsdirection.blogspot.in/2016/10/caution-bjps-support-to-strengthen.html )

No comments:

Post a Comment