Sunday, August 6, 2017

தமிழ்நாட்டில் இயல்பான அன்பும், மரியாதையும் துளிரத் தொடங்கி விட்டது;


ஜெயலலிதாவின் மரணம் விளைவித்த 'மெளனப் புரட்சி'


‘மீடியா வெளிச்சத்தில் வெளிப்படையாக 'பாராட்டு, புகழ்' போதையில் வலம் வருபவர்களை விட, மீடியா வெளிச்சத்திற்கு வராமல், பாராட்டு, புகழ் உள்ளிட்ட போதைகளில் சிக்காமல்;

அடி ஓட்டத்தில் (under current) பயணிப்பவர்களின் முயற்சிகளே, சமூக அரசியல் மாற்றங்களில் தீர்மானகரமான (Decisive)  செல்வாக்கு செலுத்துகின்றன.’ என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2016/07/blog-post.html )

சமூகமானது நல்ல/தீய திசையில் பயணிப்பதற்கான முனைப்பான சமூக வினைகள் (Socially pro-active), எல்லாம், அடிமட்டத்தில் உருவாகி, வளர்ச்சிப் போக்கில் தொகுவிசைகளாக வளர்வதானது;

சுயலாப நோக்கில் உள்ள மீடியாக்களின் பார்வைகளில் படுவது அபூர்வமே. அந்த சமூக செயல்நுட்பத்திற்கு உதாரணமாக, தமிழ்நாட்டின் போக்கில், மீடியா பார்வைக்கு வராமல், நான் வழங்கிய பங்களிப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/07/blog-post.html )

மீடியா வெளிச்சத்தில் முக்கியத்துவம் பெறுபவைகளும், பெறுபவர்களும், சமூக விளைவு வினையாக (Socially Reactive), அடிமட்ட வளர்ச்சிப் போக்குகளை மறைத்து, காலப்போக்கில் உதிரும் சருகுகளா? என்ற ஆய்வின்றி பயணிப்பவர்கள் எல்லாம், 'எதிர்பாரா' நல்ல/தீய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

எனவே தான், அடிமட்டத்திலுள்ள சாமானியர்களுடன் இயல்பாக பழகி வரும் நான், இப்பதிவின் முடிவில் தெரிவித்துள்ள காரணங்கள் அடிப்படையில், மேல்தட்டு மனிதர்களுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்கிறேன்.

ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவம்/மரணம் நிகழ்ந்திருக்காவிடில்;

‘தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.கவின் அடிமட்ட பெண் தொண்டர் ஒருவர், நம் எல்லோரின் மனசாட்சியை உலுக்கும் வகையில் கீழ்வரும் கேள்வியை எழுப்பும் சமூக தேவையும் உருவாகி இருக்காது; என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்ததை எதிர்த்து சென்னை வானகரம் பகுதியில் நடந்த அதிமுகவினரின் போராட்டத்தின்போது,  பெண் ஒருவர் படு ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டில் அம்மா செத்தா, 90 நாள் துக்கம் அனுசரிக்க வேண்டாம். பொட்டச்சிங்க நாங்க தலையில் பூ வைக்காம இருக்கோம். அந்த உணர்வு கூட உங்களுக்கு இல்லை. உப்பு போட்டுச் சாப்பிடலை நீங்க. உரைக்கலை உங்களுக்கு. ரத்தம் துடிக்குது எங்களுக்கு ( http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-women-agitate-against-sasikala/slider-pf217679-270746.html )

"உப்பு போட்டுச் சாப்பிடலை நீங்க. உரைக்கலை உங்களுக்கு. ரத்தம் துடிக்குது எங்களுக்கு?" என்று ஒரு அடிமட்ட அ.இ.அ.தி.மு.க பெண் தொண்டர் எழுப்பியுள்ள கேள்வியானது;

சசிகலாவை அ.இ.அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த, அந்த கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை நோக்கி, கேட்கப்பட்ட கேள்வியாக மட்டுமே நான் கருதவில்லை. நான் உள்ளிட்டு, தமிழ்நாட்டின் மீது அக்கறையுள்ளவர்கள் ஒவ்வொருவரும், தமது மனசாட்சிக்குட்பட்டு பதில் தேட வேண்டிய, சமூக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக கருதுகிறேன்; 'நமக்கேன் வம்பு?' என்று சமூகக்கேடான 'பாதுகாப்பு சிறையில்' வாழ்பவர்கள் மட்டுமே, இக்கேள்வியை புறக்கணிக்க முடியும்.’ (http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

கிராமப்புறங்களில் ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்தவர்கள் எல்லாம், நானறிந்தவரையில், மேலே குறிப்பிட்ட அ.இ.அ.தி.மு.கவின் அடிமட்ட பெண் தொண்டரைப் போலவே, சசிகலா குடும்பத்தின் மீது, சரியான கோபத்தில் உள்ளார்கள்.

ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவம்/மரணம் தொடர்பாக,வலம் வரும் வதந்திகள் எல்லாம்;

சசிகலா ஆதரவாளர்களாக கிராமங்களில் எவரும் வலம் வர வெட்கப்படும் அளவுக்கு, அதிர்ச்சி தருபவையாக உள்ளன.

எந்த கட்சிப்பதவியிலும் இல்லாத அ.தி.மு.க அடிமட்ட தொண்டர்கள் எல்லாம், கீழ்வரும் போக்கில், மற்ற கட்சித் தொண்டர்களிடமிருந்து வேறுபட்டுள்ளார்கள், என்பதும் எனது அனுபவமாகும்.

‘எந்த கட்சியும் கொள்கையும் சாராத, சாதாரண மக்களிடம் வெளிப்படும் 'சுயலாப நோக்கற்ற'  இயல்பான அன்பு, நேர்மை போன்றவை, ஒப்பீட்டளவில், கட்சி/கொள்கை ஆதரவாளர்களிடம் குறைவு என்பதும் எனது அனுபவமாகும். அது எந்த அளவுக்கு ‘அரசியல் நீக்கம்'(Depoliticize)  போக்குடன் தொடர்புடையது?  என்பதும் ஆய்விற்குரியதாகும். 'கொள்கைக்காக' மனிதர்களை மதித்த காலம் மாறி,  ‘அரசியல் நீக்கம்'  போக்கில், அவர்களை எல்லாம், 'பொதுவாழ்வு வியாபாரிகளாக', சாதாரண மக்களில் பெரும்பாலோர் கருதுகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். கீழ்வரும் அடிமை கலாச்சாரமானது, ‘அரசியல் நீக்கம்' போக்குடன் தொடர்புடையதா?  என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ என்பதையும்:

‘1967க்குப்பின் அந்த (ஊழல் ) வலைப்பின்னலில், எந்த அளவுக்கு, சுயலாப கள்வர் நோய் வளர்ந்துள்ளதோ, அந்த அளவுக்கு, குடிநீர் பிரச்சினை, சாலை பிரச்சினை,போன்ற இன்னும் பல தெரு/கிராம/உள்ளூர் பிரச்சினைகளும் வளர்ந்துள்ளன. அந்த வலைப்பின்னலை நம்பாமல், பாதிக்கப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்கள் வீதியில் இறங்கி போராடுவதும், அந்த அளவுக்கு அதிகரித்துள்ளது; அந்த வலைப்பின்னலை 'அரசியல் நீக்கம்'(Depoliticize)  நோய்க்குள்ளாக்கி.

அத்தகைய போராட்டங்கள் ‘மீடியாகவனத்தை ஈர்த்தவுடன், அதில் நுழைந்து ‘வெளிச்சம்போடுவதும், ‘மீடியாகவனம் குறைந்தவுடன், அதிலிருந்து விலகி, அடுத்த ‘வெளிச்சத்தைநோக்கி ஓடுவதுமான, 'அரசியல் நாடகங்களின்' காலமும், முடிந்து வருகிறது. அந்த வலைப்பின்னல் மூலம் 'உருவான', 'ஊழல் பணக்காரர்' குடும்ப‌ ஆடம்பர திருமணங்களில் கலந்து கொள்பவர்களிடையே, அந்த நபரின் 'கடந்த காலம்' பற்றியும்,  'என்னென்ன வழிகளில் சம்பாதித்தார்?' என்பது பற்றியும்,  'கிசு கிசு' பேச்சுகள் அதிகரித்து வருவதும்,  'புதிதாக' அரங்கேறிவரும் 'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும் சமுக நகைச்சுவை' ஆகும். அதன் தொடர்ச்சியாக, அந்த 'ஊழல் பணக்காரர்கள்' எல்லாம், 'விலை உயர்ந்த  காரில்,  தெருவில் செல்லும் போது, தெரு ஓர தேநீர் கடைகளில், அந்த 'கிசுகிசு' பேச்சுக்கள்,  'உரக்க' பேசி, விவாதிக்கப்படுகின்றன. ‘ என்பதையும்;
ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html )

‘சத்யராஜ் - மணிவண்ணன் ஜோடியின் புகழ்பெற்ற 'அமாவாசை காமெடி'யானது (கீழே) 1967க்கு முன் வெளிவந்திருந்தால், ரசிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லைhttps://www.youtube.com/watch?v=J-Efb347l5E

1967க்குப்பின் 'அமாவாசை சமூக செயல்நுட்பம்' வெளிப்பட்டு (விதைத்தது 1944?), இன்று உச்சத்தில் உள்ள சமூக சூழலில், இன்றைய 'அமாவாசைகளின்குடும்பங்களில் உள்ள மாணவர்களில் பலர், தமது சமூக வட்டத்தில் சந்தித்து வரும் 'அவமானங்களும்', 'நெருக்கடிகளும்', தொடர்பான காமெடி திரைப்படங்கள் வந்ததாக தெரியவில்லை; இனி வரலாம்.’ (http://tamilsdirection.blogspot.in/2017/04/1967.html )

இன்றைய இளைய தலைமுறைக்கும், பெரியவர்களுக்கும் இடையிலான கேலி கிண்டல் மிகுந்த இடைவெளியில் சிக்கிய:

ஊழல் அரசியல்வாதி/அதிகாரி/தரகர் குடும்பங்களில் உள்ள கல்லூரி மாணவர்களின் நிலைமைகள் எல்லாம், மேலே குறிப்பிட்ட திரைப்படங்களுக்கான, திரைக்கதை மூலங்களாகி (Sources) வருகின்றன. அதில் 'குறுக்குவழி அதிவேக பணக்கார பெரியார் சமூக கிருமிகள்’ மற்றும் எடுபிடிகளின் ‘குடும்பங்கள் – நண்பர்கள்’ வாழ்வில் வெளிப்பட்டுவரும் 'மூலங்களில்' எல்லாம், 'பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் இன உணர்வு' தொடர்பான 'பொதுவாழ்வு வியாபார/விபச்சார' நகைச்சுவைகளுக்கு வாய்ப்புகள் அதிகமாகும். அத்தகையோர் தமக்கு 'சுயலாப' நோக்கில;


எவரைப் புகழ்ந்தாலும், 'வாலாட்டும் சமூக நாய்களாகவும்';
எவரைக் கண்டித்தாலும், 'வேண்டிய எலும்புத்துண்டு கிடைக்காத கோபத்தில் குலைக்கும் நாய்களாகவும்';

வலம் வருகையில், அத்தகையோரை, இயல்பான அன்பு, மரியாதை சுவாசிக்கும் நபர்கள் எல்லாம், இயன்றவரை தவிர்த்து வாழ்வது தானே, புத்திசாலித்தனமாகும்.

பணம், புகழ் சம்பாதிப்பதற்காக, அகத்தில் சீரழிந்து, தமது 'சுயலாப கணக்குகளை' புத்திசாலித்தனமாக மறைத்து, தமது முதுகுக்குப் பின்னால் தமது 'யோக்கியதையை' சிசுகிசுப்பது தெரிந்தும், தெரியாதது போல;

தமது உற்றம், சுற்றம் உள்ளிட்ட சமூக வட்டங்களில் வெளிப்படும் 'போலி' மரியாதைகளில், கள்ளுண்ட வண்டு போல;

மிதந்து வாழ்பவர்கள் எல்லாம் வடிகட்டின சமூக முட்டாள்கள் ஆவார்கள். அந்த சமூக முட்டாள்த்தன போக்கில், தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ள 'ஆளுயரமாலை, மலர்க்கிரீடம்' போதைகளில் சிக்கி, சாதாரண மக்கள் அருவறுக்கும் கோமாளிகளாக வரும் தலைவர்களும், அந்த போதையில் பயணிப்பவர்களே ஆவர்; பா.ஜ.க உள்ளிட்டு எந்த கட்சியில் இருந்தாலும். ‌

கார் வைத்துக் கொள்ளும் அளவுக்கு வசதியுள்ள எனது நண்பர், அந்த 'போலி மரியாதையில்' சிக்க விரும்பாமலும், இயல்பான அன்பும், மரியாதையும் வெளிப்படும் சமூக சுவாசத்தை இழக்க விரும்பாமலும்;

நடந்து செல்வது, சைக்கிளில் செல்வது, அவசியமென்றால் மட்டும் மொபெட்டில் (Moped) செல்வது, வெளியூருக்கு பேருந்தில் செல்வது, என்று, நானே பிரமிக்கும் வகையில், எனக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார். பல முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ள, மாதம் லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும், எனக்கு நண்பரான பிராமண பேராசிரியரும் அதே போல வாழ்ந்ததையும், சாஸ்திரா பல்கலைக்கழகத்தில், நான் பார்த்திருக்கிறேன். திருச்சி ஜங்சன் பிளாட்பாரத்தில் தொலைவில்,  தனது லால்குடி பள்ளி பருவ நண்பரை, சாமான்யரின் தோற்றத்தில் பார்த்தவுடன், தனக்கு 'வாலையாட்டிக் கொண்டிருந்த பரிவாரங்களை' எல்லாம் தூரத்திற்கு போகச் சொல்லி;


அந்த நண்பரை நோக்கி சென்று, ‘சாமான்யராகவே’ அவருடன் உரையாடி ('சுவாசித்து'), அவரிடம் விடைபெற்று, திரும்பி;

பின் தன் பரிவாரங்களை அருகில் வர உத்திரவிட்டு, ரயிலில் ஏறி சென்றார்; பணி நிமித்தமாக திருச்சி வந்திருந்த, டெல்லியில், மத்திய அரசில் உயர்நிலை அதிகாரியாக பணியாற்றி வந்த ஒருவர்.

ஆனால் கடந்த காலத்தில் தரகராக, அடியாளாக, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவராக, 1965 இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் ‘நன்கொடையாக' (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html ), அரசு கல்லூரிகளில், பெரும்பாலும் முதல் தலைமுறையாக படிக்கும் மாணவர்களின் வகுப்புகளை சீர்குலைக்கும், 'மாணவ ரவுடி'களாக, எடுபிடிகளாக (http://tamilsdirection.blogspot.in/2016/08/blog-post.html );

வாழ்வைத் தொடங்கி, 'ஊழல் சாதி'யில் இடம் பெற்று, இன்று 'மிகுந்த வசதியுடன்' வாழ்பவர்கள் எல்லாம் சைக்கிளில் செல்வதையும், அரசு பேருந்தில் பயணிப்பதையும் கேவலமாக கருதி, தவிர்த்து, மேலே குறிப்பிட்ட கள்ளுண்ட வண்டு போல வாழ்ந்து வருகிறார்கள்

தமிழ்நாட்டில் இயல்பான அன்பும், மரியாதையும், அந்த சமூக முட்டாள்களின் வாடையில்லாத, சமூக வட்டங்களில் தான் வசந்தமாக அரங்கேறி வருகின்றன.

நான் மட்டுமல்ல, என்னைப் போன்று, இயல்பான அன்பு, மரியாதை சுவாசிக்கும், எனக்கு தெரிந்தவர்களின் சமூக வட்டங்களிலும், மேலே குறிப்பிட்ட 'ஊழல்' சாதியினர் அனுமதிக்கப்படுவதில்லை; எதிர்பாராத சந்திப்புகள் மூலம் அத்தகையோருடன் அரங்கேறும் உரையாடல்களில், அவர்கள் எல்லாம் தங்களையும் 'யோக்கியராக', நாம் கருத வேண்டும் என்ற நோக்கில், சிரமப்படுவதெல்லாம்;

முதலில் குறிப்பிட்ட திரைப்படங்களுக்கான, நகைச்சுவை வசனங்களாக, இடம் பெற தக்கவையாகும்.

அத்தகைய 'ஊழல்' சாதியின் துணையின்றி, அவர்களால் கிடைக்கும் லாபங்களை எல்லாம் வெறுத்து, ஒதுக்கி;

மேலே குறிப்பிட்டவாறு, இயல்பான அன்பு, மரியாதை சுவாசிக்கும் வாய்ப்புள்ளவர்கள் எல்லாம்;

நடுத்தர, ஏழை மட்டங்களில் அதிகமாகவும்;

'சமூக ஒப்பீடு நோயில்' (Social Comparison Infection) சிக்கி ( “இன்பத்தைத் திருடும் ஒப்பீடு" -தியோடர் ரூஸ்வெல்ட் "Comparison is the thief of joy" Theodore Roosevelt ; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html );

'ஊழல்' சாதி வாடையுடன் பயணிப்பதற்கான‌ அதிக வாய்ப்புள்ள நடுத்தர, பணக்கார மட்டங்களில் குறைவாகவும் வெளிப்படுகின்றன;

என்பதும் எனது அனுபவமாகும். அதாவது 'ஊழல் சாதி சமூக வட்டத்திலிருந்து', நேர்மையானவர்கள் எல்லாம் வெளியேறும் சமூக தள விளைவானது (Social Polarization), தமிழ்நாட்டில் தொடங்கி விட்டது. அதன் மூலமாக‌ தமிழ்நாட்டில் இயல்பான அன்பும், மரியாதையும் துளிர தொடங்கி விட்டது. 


'ஊழல் சாதியின்' சமூக வட்டத்தில் இடம் பெற்று;

'தமிழ்நாட்டின் தாய்மொழிவழிக்கல்வியும், கனிவளங்களும் 'ஊழல் சுனாமி'யில் சூறையாடப்பட்டு, அந்த சமூக குற்றவாளிகளை, 'புரவலராக' கொண்டு, கடந்த சுமார் 30 வருடங்களில் நடைபெற்ற 'தமிழ் உணர்வு' நிகழ்ச்சிகளையும், 'பாராட்டப்பட்ட' அறிவுஜீவிகளையும்;

அடையாளம் கண்டு அம்பலப்படுத்தும் பணியை, கமல் ரசிகர்கள் செய்தால், தமிழ்நாட்டின் மீட்சி வரலாற்றில் கமல்ஹாசன் நிச்சயம் இடம் பெறுவார்.' (http://tamilsdirection.blogspot.in/2017/07/its-mad-madmad-tamilnadu.htmlஅம்முயற்சியில் வெளிப்படும் தகவல்களின் அடிப்படையில், கீழ்வரும் பொருளில், முனைவர் பட்ட (Ph.D) ஆய்வினை, ஆர்வமும், உழைக்கும் திறனும் உள்ளவர்கள் மேற்கொள்ளலாம்.


உலகிலேயே தனித்துவமாக (Unique), பொதுவாழ்வு வியாபாரத்தில், தமிழ் உணர்வு என்பது, முதலில்லாத மூலதனமாக பயன்பட;

தமிழ் புலமையாளர்களும், தமிழ் உணர்வு ஆதரவாளர்களும், சுயநல நோக்கில் அதற்கு துணை போக;

'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' கண்டுபிடித்த, மறைந்த நக்கீரன் போன்று விதிவிலக்காக செயல்பட்டவர்களையும், பகிரங்கமாக ஆதரிக்கும் 'சமூக முதுகெலும்பு' இல்லாதவர்கள் நிறைந்திருந்ததே;

தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கான சமூக செயல்நுட்பத்திற்கு வழி வகுத்தது. அந்த சமூக செயல்நுட்பத்தினை முடிவுக்கு கொண்டு வந்து, மீட்சிக்கு வழி வகுக்கும், சமூகத் தூண்டலானது (Social Induction) தமிழ்நாட்டில் தொடங்கி விட்டது.

உண்மையாகவும், நேர்மையாகவும், நல்ல சமூக ஒழுக்க நெறிகளுடனும் வாழும் பணக்காரர்களில் பெரும்பாலோர், தமக்கு தொந்திரவு வேண்டாம் என்று அஞ்சி, 'ஊழல்' பெருச்சாளிகளுடன் ' நல்லுறவில்' (?) வாழ்ந்து வருகிறார்கள். அந்த 'நல்லுறவு' என்பதும் சமூக குற்றமாகும் என்பதை அவர்கள் உணர்ந்து, திருந்தும் விளைவினை ஏற்படுத்தும் சமூகத் தூண்டலானது (Social Induction);


தமிழ்நாட்டில் கிராமங்களில் அடிமட்டத்தில் முளை விட்டு, மேல் நோக்கி, வலிமையுடன் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த தமிழ்நாட்டை மீட்கும் சமூகத் தூண்டலுக்கு, நம்மைப் போன்றவர்கள் எல்லாம், சமூக வினை ஊக்கியாக' (Social Catalyst) வாழ்வதன் மூலம், அந்த மீட்சிக்கு நாம் ஆக்கபூர்வமாக பங்களிக்க முடியும்.( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html )

No comments:

Post a Comment