Saturday, August 12, 2017

'தமிழன்: பறைய னொழிந்த தமிழ்ச்சாதியான்';


Tamil Lexicon, University of Madras மீது வருத்தப்படுவதானது, அறிவுபூர்வமாகுமா?


‘பெரியார்', 'பிரபாகரன்', 'மார்க்சியம்', 'தமிழ்த்தேசியம்' ஆகிய பிம்பங்களின் வழிபாட்டில் சிக்கியவர்களில் (‘வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html );

தாம் 'நேசிக்கும்' நிலைப்பாட்டிற்கு எதிராக, விவாதத்தில் நாம் முன்வைக்கும், வெளிவந்த ஆய்வு கட்டுரைகளை படிக்கும் ஆர்வமின்றி, தமது 'நிலைப்பாடு போதையில்' பயணிப்பவர்களை, நான் 'அனுபவித்திருக்கிறேன்'. எனவே அத்தகையோரை சந்திப்பதையும், தற்செயலாக சந்திக்க நேர்ந்தால், அவர்களுடன் விவாதிப்பதையும், இயன்ற அளவு தவிர்த்து வருகிறேன்; 'கர்நாடக இசை உயர்வு போதை', ' தமிழ் இசை உயர்வு போதை'யாளர்களை தவிர்த்து வருவது போலவே. ‘ (http://tamilsdirection.blogspot.in/2017/07/its-mad-madmad-tamilnadu.html )

அது போலவே, தமிழ்நாட்டில் தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிக்க வைத்து, அதற்கு வருத்தம் கூட தெரிவிக்காமல்,  'தமிழ்வழிக் கல்வி ஆதரவாளர்களாக' வலம் வருபவர்களையெல்லாம், 'தமிழ் வேர்க் கொல்லிகளாக' கருதி, ஒதுக்கி வாழ்ந்து வரும் நான்;

அந்த போக்கில் விதி விலக்காக வாழ்ந்து வரும் எழுத்தாளர் நலங்கிள்ளியை, நானே தேடி, வரவழைத்து, விருந்தோம்பி, தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கான ஆக்கபூர்வமான வழிமுறைகளை விவாதிக்க கிடைத்த வாய்ப்பினை;

 எனது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதுகிறேன்.

அவர் எனக்கு வழங்கிய புத்தகங்களில் ஒன்றாகிய 'ஆங்கில மாயை' என்ற நூலைப் படித்து வியந்தேன். தமிழில் இந்த அளவுக்கு அறிவுபூர்வமாக உழைத்து நூல் எழுதி, வெளிவருவதானது, அபூர்வம் என்றும் கருதுகிறேன். அந்த நூலில் தாய்மொழிவழிக்கல்வியின் பலன்கள் தொடர்பான ஆய்வுகள் (http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html), அதன் அடுத்த பதிப்பில் இடம் பெற வேண்டும், என்பதும் எனது விருப்பமாகும். இந்துத்வா எதிர்ப்பில் பயணித்துவரும், அவரின் 'ஆங்கில மாயை' மற்றும் 'ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே' ஆகிய இரண்டு நூல்களுமே, தாய்மொழிவழிக்கல்வியின் முக்கியத்துவத்தை, 'உள்மறை' (Latent) நோக்கமாக கொண்டவை என்று நான் கருதுகிறேன். எனவே ஆரம்பப்பள்ளி படிப்பானது, தாய்மொழிவழியில் இருந்தால் தான், குழந்தைகளின் புலன் உணர் மூளை வளர்ச்சி விருத்தியாகி (Cognitive skills development), அதன்பின் ஆங்கிலவழி உள்ளிட்ட பிறமொழி வழியும், அவர்கள் சிறப்பாக கற்பார்கள், என்பது பற்றிய உலகலாவிய ஆய்வு முடிவுகள் (மேலுள்ள பதிவில்), அந்நூல்களில் இடம் பெறுதல், கூடுதல் பலன் தரும் என்பதும், எனது கணிப்பாகும். அப்பதிவு இந்துத்வா சார்பு 'சுதேசி செய்தி' இதழிலும் வெளிவந்துள்ளதால், இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு வேறுபாடுகளைத் தாண்டி, தமிழ்வழிக்கல்வி மீட்சி முயற்சிக்கு ஆதரவு கிட்டும் வாய்ப்பும் கூடியுள்ளது. (‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா?(8) - தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_19.html )

அந்நூலில் (பக்கம் 27- 28),வெளிப்பட்ட கீழ்வரும் பகுதியானது, எனது ' சமூகவியல்' தொடர்பான கவனத்தை ஈர்த்தது.

விஜய் தொலைக்காட்சியில், 'நீயா? நானா? (18.08.2011) நிகழ்ச்சியில், 'ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது சரியே' என்று வாதிட்ட மீனா,' சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி மாமன் என்னும் சொல்லுக்கு, ' பறைப் பெண்கள் தங்கள் கணவரை அழைக்கும் பெயர்' (Tamil Lexicon, University of Madras , தொகுதி 5, பக்கம்: 3162) என்று ஓர் அர்த்தத்தைக் கொடுத்திருப்பதாக மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.'

Lexicon  என்பதானது, அது உருவாகும் காலம் வரை, அந்த மொழியில் உள்ள வேர்ச்சொற்கள் உள்ளிட்டு, கால ஓட்டத்தில் அச்சொற்களின் பொருளில் வெளிப்பட்டு வரும் மாற்றங்களை எல்லாம், உரிய சான்றுகளுடன் வெளிப்படுத்தும் மொழியியல்  (Linguistics) தொடர்பான‌   எக்ஸ் –ரே(X-Ray) கருவியாகும்.  நமது உடலில் உள்ள நிறைகளை காட்டும் எக்ஸ் ரே கருவி மீது மகிழ்ச்சி கொள்வதும், நமது நோய்களை காட்டும்போது வருத்தப்படுவதும், எந்த அளவுக்கு சரியோ, அது போலவே, எந்த மொழி தொடர்பாகவும் வெளிவரும் Lexicon  மீது, நாம் வருத்தப்படுவதானது சரியாகும்.

அதை உருவாக்கியவர்கள், தமது நிலைப்பாட்டினை வலிந்து திணிக்கும் சார்பு அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தால், அதை உரிய சான்றுகளுடன் விமர்சிப்பது வரவேற்கத்தக்கதாகும். மேலே குறிப்பிட்ட Tamil Lexicon தொகுப்பை, அந்த நோக்கில் அறிவுபூர்வமாக விமர்சித்து ஏதும் வெளிவந்ததாக தெரியவில்லை. ஆனால், மறைந்த வீ.ப.கா சுந்தரம் தனி ஆளாக தொகுத்து, பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட, 'தமிழிசைக் கலைக் களஞ்சியம்' தொகுதிகளில் (எனது தமிழிசை ஆய்வுகள் பற்றி குறிப்பிட்டிருந்தாலும்), அவரின் சார்பு அணுகுமுறை வெளிப்பட்டிருக்கிறது, என்பது எனது கருத்தாகும்.  அந்த விமர்சனம் வெளிவராமல், அந்நூலை உணர்ச்சிபூர்வ போக்கில் இருட்டடிப்புக்குள்ளாக்கிய தமிழ்ப் பேராசிரியர்கள் எல்லாம், தமிழின் வளர்ச்சிக்கு கேடானவர்கள், என்பதும் எனது கருத்தாகும்.

தமிழ்நாட்டில் 'சாதி', 'இனம்' போன்ற சொற்களின் பொருள் காலனிய ஆட்சியில், திரிதலுக்கு உள்ளாகி, 'சமூக ஒப்பீடு (Social Comparison) உயர்வு தாழ்வு தீண்டாமை' நோய்கள் எல்லாம், காலனிய சூழ்ச்சியில் அரங்கேறியது எவ்வாறு? என்பது தொடர்பான ஆய்வுகளை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html  ) அதே காலனிய சூழ்ச்சியில், 'பறை', 'பறையர்' தொடர்பான, எனது ஆய்வுகளையும் பதிவு செய்துள்ளேன்.( http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html  )

எனவே சங்ககால தமிழரின் எச்ச சொச்சங்கள் பற்றிய ஆய்விற்குரிய சிறப்புள்ள மக்கள் பிரிவினராக, இன்று 'பறையர்' என்ற சமூக அடையாளத்தில் உள்ள மக்கள் இருக்கக்கூடும், என்பதற்கான கூடுதல் சான்றாக, மேலே குறிப்பிட்ட ' மாமன்' என்ற சொல்லின் பொருளை, நான் கருதுகிறேன். பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும், கணவனை, 'மாமன்' என்று அழைத்து வருவதை நான் அறிவேன். இன்று 'தீண்டாமைக்கு' எதிரான சரியான கோபத்தில்,  உணர்ச்சிபூர்வ அணுகுமுறையில் அச்சொல் சிக்கி, Tamil Lexicon, University of Madras  மீது குறை காண்பதானது, அறிவுபூர்வமாகாது.

'பறையன்' தொடர்பாக Tamil Lexicon-இல் வெளிவந்துள்ள கீழ்வரும் பொருளானது என்னை வருத்தமடையச் செய்தது.

“தமிழன் tamiḻaṉ : 3. Caste man, as dist. fr. paṟaiyaṉ; பறைய னொழிந்த தமிழ்ச்சாதியான். “

ஆனால் Tamil Lexicon மீது வருத்தப்படாமல், அதில் அச்சொல்லுக்கான சான்றாக குறிப்பிட்டுள்ள வட்டார வழக்கின் மீது தான் நான் வருத்தப்பட்டேன். வாய்ப்பு கிடைக்கும் போது, அந்த வட்டார வழக்கானது, காலனியத்திற்கு முன்னா? பின்னா? உருவான சமூகவியல் காரணங்கள் யாவை? என்ற ஆய்வினை மேற்கொள்ள, அந்த வருத்தமானது, என்னைத் தூண்டியுள்ளது.

என்னிடம் உள்ள பதிப்பில் (1982), மேலே குறிப்பிட்டுள்ள பகுதியானது, வெள்ளை பூச்சால் மறைக்கப்பட்டிருக்கிறது. வன்பாக்கம் விஜயராகவன் சுட்டிக்காட்டியபின், அந்த பகுதியைக் கீறி, ஒளிபாய்ச்சி படித்தேன். அவ்வாறு ஏன் பூசி மறைக்கப்பட்டது? என்பதும் மேலே குறிப்பிட்ட ஆய்வில் இடம் பெற வேண்டும். நமது உடலில் கோளாறு இருப்பதை காட்டிய எக்ஸ்ரே-யில், அந்த பகுதியை, எக்ஸ் ரே தொழிலாளர் (X-Ray Technician) மறைத்து விட்டால், மருத்துவர் அந்த எக்ஸ்ரே அடிப்படையில், சிகிச்சையை முடிவு செய்ய முடியுமா? அது போன்ற கோளாறில், சென்னைப் பல்கலைக்கழகமானது சிக்கியுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேற்கத்திய எழுத்தாளர்களும், கணிதத்திலும், 'பறையர்' என்ற சொல்லை தவறாக பயன்படுத்துவதை, உரிய சான்றுகளுடன் கண்டித்தும் பதிவு செய்துள்ளேன். (‘Can the ancient Tamil word ‘pariah’ be rescued from the misuse in the western world?’; http://tamilsdirection.blogspot.in/2016/09/can-ancient-tamil-word-pariah-be.html & http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_58.html  )

மேலே குறிப்பிட்ட பதிவில் விளக்கியவாறு,டேவிட் சுலோன் விலசன் (David Sloan Wilson) என்ற மேற்கத்திய எழுத்தாளர், ‘RICHARD DAWKINS IS WRONG ABOUT RELIGION’ என்ற நூலில், 'பறையா' (pariah) என்ற சொல்லை இழிவுபடுத்தியுள்ளதையும், கணிதத்தில் (‘Group Theory’ in Modern Algebra of Mathematics), பேய்க்குழுவாக (monster group) வகைப்படுத்தப்பட்ட குழுக்களில் ஒன்றிற்கு 'பறையா'(pariah) என்று பெயர் இட்டு இழிவுபடுத்தியுள்ளதையும் (the term pariah was introduced by Griess (1982) to refer to the six sporadic simple groups that are not subquotients of the monster group), கண்டித்து, அந்த இழிவை நீக்க, மீனா போன்றவர்களும், சமூக நீதி ஆர்வலர்களும், மேலே குறிப்பிட்ட பதிவின் முடிவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், அல்லது அதைவிட இன்னும் அதிக செயல் சாத்தியமுள்ள கோரிக்கைகள் நிறைவேற, தம்மால் இயன்ற முயற்சிகளை இதுவரை மேற்கொண்டார்களா? இல்லையென்றால், இனியாவது மேற்கொள்வார்களா?

ஒரு மக்கள் சமூகத்தின் அடையாளங்கள் ஆனவை,  சமூக வரலாற்றில், அச்சமூகம் சந்திக்கும், சமூக தேவைகளின் அடிப்படைகளிலேயே உருவாகும். 'தமிழர்' என்ற அடையாளம் தமிழ்நாட்டில் எப்போது, எந்த தேவைகளின் அடிப்படையில் தோன்றியது? என்பது ஆய்விற்குரியதாகும்.

சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 'லெக்சிகனில்' 'தமிழர்' என்ற சொல்லுக்கு, 'விளிம்பில்லாத  தீர்த்த பாத்திரம்' என்ற பொருள் உள்ளது. சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட, பழந்தமிழ் இலக்கியங்களில் 'தமிழர், தமிழன்' போன்ற சொற்கள் இருப்பதாக தெரியவில்லை. தேவாரத்தில் ( 744,5) தான் 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்' என்று உள்ளது. 'ஆரியன் கண்டாய் திராவிடன் கண்டாய்' என்று அதில் இல்லை.

எனவே மொழி அடிப்படையிலான‌ 'தமிழன்' என்ற சொல்லை, புவியியல் (geographic) அடிப்படையிலான 'திராவிட' அடிப்படையில், 'திராவிடன்' என்று சொல்வது, தேவாரத்தில் இல்லை.

ஆரிய எதிர்ப்பு நோக்கில், இனம் தொடர்பான சொல்லாக‌, 'திராவிடர்' என்ற சொல், காலனி ஆட்சிக்கு முன், தமிழ்நாட்டில் இருந்ததற்கு சான்றுகள் இல்லை. உலகில் வெளிப்பட்டுவரும் ஆய்வுமுடிவுகளின் அடிப்படையில், 'இனம்' என்ற பொருளில், 'திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்துவது என்பது, அறிவுபூர்வமாக சரியா?.... 'தமிழர்' என்ற அடையாளம் இன்று வரை குழப்பமாகவே சிதைந்துள்ளது. தமிழ்நாட்டில் வடமொழி தெரியாத, தமிழையேத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களை 'தமிழர்' ‍ஆக ஏற்க மறுக்கின்ற போக்கும் உள்ளது. கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட பெரியாரையும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வை.கோ போன்றோரையும் 'தமிழர்' ‍ஆக ஏற்க மறுக்கின்ற போக்கும் உள்ளது. இக்குழப்பம் தீராமலேயே  இரு போக்கினருமே தனித் தமிழ்நாடு என்ற உணர்ச்சிபூர்வமான‌ போக்கில், அடையாளச் சிதைவை வளர்த்து வருகிறார்கள். .. 'தமிழர்' என்ற அடையாளத்தை, குழப்பங்களுக்கு இடமில்லாமல், எவ்வாறு வரையறுப்பது? என்பது போன்ற கேள்விகளுக்கு,  லண்டனில் வாழும் எனது நண்பர் வே.தொல்காப்பியன் எழுதியுள்ள,  'யார் தமிழர்' என்ற கட்டுரை மிகவும் பயனுள்ள விடைகளை தரவல்லதாகும். (‘யார் தமிழர்?’; http://siragu.com/?p=3527) …….'இந்தியர்' என்ற அடையாளமும் மத்தியில் பொறுப்பில் உள்ள அமைச்சர்களின் தத்தம் வட்டார, சாதி, மதப் பற்றுகள் காரணமாக சிதைக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களில்,  அகில இந்திய அரசியல் கட்சிகளின் குறுகிய நோக்கிலான சுயநல அரசியல் நிலைப்பாடுகள்,  இந்த சிதைவின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளன.”… 'தமிழ் இலக்கியங்கள்', 'பாரம்பரியம்', 'பண்பாடு' தமிழர்க்கு கேடானவை என்ற அடிப்படையில், பெரியார் இயக்கங்கள் 'திராவிடர்' என்ற அடையாளத்தை முன்னிறுத்தி,  மேற்கொண்ட 'சாதி எதிர்ப்பு' ஆனது, 'தமிழர்' என்ற அடையாளத்தை பலகீனப்படுத்தும் அளவுக்கும், சாதிப்பற்று வலிமை பெறும் அளவுக்கும்,  எதிர்வினையாக (reaction)  அமைந்ததா? என்பதும் ஆய்விற்குரியதேயாகும். அந்த போக்கில் 'திராவிடர்' என்பதும், தமிழரின் அடையாளச் சிதைவை அதிகப்படுத்தி, அரசியல் நீக்கம் மற்றும் அதன் தொடர்விளைவான ஊழல் அரசியலுக்கும், சுயநலக் கள்வர்கள் அதிகரிப்பிற்கும் வழி வகுத்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
(‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)  (3)-                   'திராவிடர்'  'இன‌' அடையாளம்   'அழிவுபூர்வ' சமூக தளவிளைவினை (Destructive Social Polarization)  அடித்தளமாகக் கொண்டதா?’; http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_11.html )

தனித்தமிழ் ஆர்வலர்களால் தமிழின் வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள தடைகளை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/07/fetna.html) அது போலவே, 'தீண்டாமைக்கு' எதிரான சரியான  கோபத்தில், அறிவுபூர்வ அணுகுமுறையில் இருந்து விலகி, உணர்ச்சிபூர்வ அணுகுமுறையில் பயணிப்பதும், சுயநினைவின்றி சமூகநீதிக்கு தடைகளாகிவிடும் அபாயமும் இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. கீழே குறிப்பில் உள்ளது போன்ற பல ஆய்வுகளின்படி, 'ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது' என்ற போக்கானது, இன்றைய ஆங்கிலோ- இந்தியர்களைப் போல, தமிழ்வேரற்ற தமிழர்களாக்கும் அபாயம் பற்றி, எவரும் விவாதிக்கவில்லையென்றால்,  அது வருத்தத்திற்குரியதே ஆகும். அந்த தமிழ் வேரழிக்கும் போக்கில் சிக்காமல், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும், தமிழானது, வானொலியிலும், தொலைக்காட்சியிலும், பயணித்து வருவதானது, பாராட்டத்தக்கதாகும்.

குறிப்பு:

எந்த மொழியாக இருந்தாலும், மொழி என்பதானது, வெறும் பேசுவது, படிப்பது, எழுதுவது என்பதை தாண்டி;

ஒரு மொழியின் மூலமாக நமது சிந்தனை முறையும், கண்ணோட்டமும் மாற்றங்களுக்கு உள்ளாவதை, கீழே உள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

“If you have ever tried to learn a new language, you might have noticed that it is not only about learning the alphabet, vocabulary and grammar. It also involves learning a new way of thinking and expressing yourself.


Language carries references to the culture to which it belongs and, by interacting with a language, we gain an insight into a particular culture……..Whorf said, “because the language we speak affects the way we think, it also affects the way we view the world around us. We habitually formulate our perceptions of the world in language, according to the particular biases and prejudices inherent in whatever language we know. Thus, language limits the way we perceive reality, the way we think about it, and the way we talk about it. But it need not do so. If we are aware of those limitations, we can compensate for them and view the world freshly and newly.”……….. From the above, we can see that if language affects the way we speak and is intimately related with culture, there will be a close relationship between the mind and culture through language. Looking at some ancient languages, we find that the more sophisticated the language is, the more developed the civilization, and perhaps the opposite is also true. George Orwell, who made a life-long study of language, held that “the decay of a civilization can be seen in the declining levels of sincerity in the words and minds of its citizens.” ” -  ‘Language and Culture’ -Article By Pinar Akhan; http://library.acropolis.org/language-and-culture/  ( ‘பொது அரங்கில் நகைச்சுவைகளை ரசிக்க முடியாமல்; சொந்த காசில் சூன்யம்வைத்துக் கொள்பவர்களின் நாடாகி வருகிறதா, தமிழ்நாடு?’; http://tamilsdirection.blogspot.in/2017/07/blog-post_16.html )

No comments:

Post a Comment