Monday, August 28, 2017

அரசியல் பரமபதத்தில் (1):
ஸ்டாலினும்,சசிகலாவும் பாம்பின் தலைக்கு தாவுகிறார்களா?


வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி, தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளின் பின்னணியில் உள்ள சாதக, பாதகங்களை தெரியாமல், பணம் ஈட்டுவதிலும், செல்வாக்கிலும் முன்னேற வேண்டும் என்று பயணிப்பவர்களின் வாழ்வோடு ஒப்பிடக்கூடியது, பரமபதம் விளையாட்டு ஆகும்.

சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்த போது, அங்கு என் பேத்தியுடன் அடிக்கடி நான் அதை விளையாடினேன். உலக அளவில் குழந்தைகள் விளையாட்டுகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ள பரம பதம் விளையாட்டானது, காலனியத்திற்கு முன் ஆடிய விளையாட்டின் சமூக அம்சம் நீக்கப்பட்டு, சிதைந்துள்ள (distorted) விளையாட்டாகும்;

என்பதை கீழ்வரும் கட்டுரையை படித்த பின் தெளிவானது; அதை போல, தமிழரின் பண்பாட்டில் எவை, எவை, எந்த அளவுக்கு காலனிய கட்டத்தில் சிதைந்து, குருட்டு பகுத்தறிவு வளர இடமளித்தது? என்ற கேள்வியையும் எழுப்பி. (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html  )

‘பரமபதம் என்ற ஸ்நேக் அண்டு லேடர்ஸ்’ ; http://vidhoosh.blogspot.in/2009/12/blog-post_03.html

காலனியத்திற்கு முன் ஆடப்பட்ட அந்த விளையாட்டின் படமானது, அக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.




மேற்குறிப்பிட்ட‌ பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது. இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.

கீழ்ப்படியாமை, அகந்தை, ஈனம், களவு/திருட்டு,  பொய்/புரட்டு, மதுபானம் அருந்துதல், கடன், கொலை, கோபம்/வெஞ்சினம்/வஞ்சம்,  கர்வம், பெருமை, காமம் ஆகிய இடங்களில் பாம்புகள் காணப்பட்டன.

தமிழில் 'இனம்', 'சாதி' போன்ற சொற்களின் பொருள் திரிந்து, 1944இல் 'திராவிடர் கழகம்' மூலம், 'குருட்டு பகுத்தறிவு' வளர்ந்த வேகத்தில், 'பாவம், புண்ணியம்' எல்லாம் மூடநம்பிக்கைகளாக பிரச்சாரம் செய்யப்பட்டு, அதன் விளைவாக பரம பதம் விளையாட்டிலும், அந்த சமூக அம்சங்கள் நீக்கப்பட்டனவா? என்பதையும், திரிந்துள்ள இன்றைய பரம பதம் விளையாட்டோடு ஒப்பிட்டு, ஆராய எண்ணியுள்ளேன்.

தமிழ்நாட்டின் பொதுவாழ்வில் ஏற்கனவே இருந்த பரம பதம் விளையாட்டில்,
சீரழிவை நோக்கிய திருப்பு முனையானது, 1944இல் துவங்கியதை, எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.

1944இல் நிகழ்ந்த பாதகமான சமூக மடைமாற்றத்தின் தொடர்விளைவாகவே, 1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது; ராஜாஜியின் ஆலோசனை மிகுந்த ஆதரவுடன்.

அதன்பின், தமிழ்நாட்டில் சமூகத்தில், பொதுவாழ்வில்,அரசியலில்:

கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவை வளர்ந்தனவா? வீழ்ந்தனவா?

கீழ்ப்படியாமை, அகந்தை, ஈனம், களவு/திருட்டு,  பொய்/புரட்டு, மதுபானம் அருந்துதல், கடன், கொலை, கோபம்/வெஞ்சினம்/வஞ்சம்,  கர்வம், பெருமை, காமம், போன்றவை வளர்ந்தனவா? வீழ்ந்தனவா?

இன்று குடும்பங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வெளிப்படும் குடும்ப சீர்குலைவு, கைவிடப்படும் குழந்தைகள், முதியவர்கள், வன்முறை, கொலை, தற்கொலை, திருட்டு, ஊழல் எல்லாம் திடீரென்று  வானத்திலிருந்து குதித்துவிடவில்லை.

1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தபின், ஈ.வெ.ரா அவர்கள் மனம் வெறுத்து முனிவராக பொதுவாழ்விலிருந்து ஒதுங்க விரும்புவதாக அன்றைய முதல்வர் அண்ணாவிடம் தெரிவித்ததும்;‌

முதல்வராயிருந்த அண்ணா, மனம் வெறுத்து சீக்கிரம் மரணத்தை தழுவ விரும்புவதாக, மருத்துவமனையில் தம்மை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தியிடம் தெரிவித்ததும்;

தமிழ்நாட்டில் தாம் அரங்கேற்றிய தி.மு.க ஆட்சியில் மது விலக்கு ஒழிந்த பின், மனமுடைந்து ராஜாஜி மறைந்ததும்;

தமிழ்நாட்டின் அரசியல் பரம பதம் விளையாட்டில் பாம்புகளின் செல்வாக்கை உணர்த்தியதா? 

அதன் விளைவுகளை தான் இன்று தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறதா?

டிஜிட்டல் யுகத்தில் முதல்வரின் வீட்டில், கண்காணிப்பு கேமிராக்கள், உதவியாளர்கள், அரசு செலவில் இருந்த பாதுகாப்பு அமைப்புகள் எல்லாவற்றையும் முட்டாளாக்கி, போயஸ்கார்டனில் இருந்து, முதல்வராக இருந்த ஜெயலலிதா என்ன நிலையில், அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டார்? மர்மமாக மருத்துவமும், மரணமும் நடந்ததா?

என்பது தொடர்பான அதிர்ச்சி தரும் வதந்திகள் எந்த அளவுக்கு, குக்கிராமங்கள் வரை பரவியுள்ளன?

குடும்ப அரசியலில் சிக்கிய தி.மு.கவிடம் இருந்து பாடம் கற்று, அ.தி.மு.கவில் பொதுச்செயலாளர் எப்படி தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்? என்ற, எம்.ஜி.ஆர் உருவாக்கிய, விதிமுறையைப் பற்றி கவலைப்படாமல்;

இன்னொரு ஜெயலலிதாவாக செயல்படும் பாம்பின் தலையை தழுவிய சசிகலா;

சிறைக்கு சென்று, அடுத்து நடந்த ஆர்.கே நகர் தேர்தல் பிரச்சாரத்தில் சசிகலாவின் படத்தை தவிர்த்தே தினகரன் பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்த அவமானத்திற்குள்ளாகி, கூவத்தூரில் தமது தீனிக்கு இரையானவர்களில் பெரும்பாலோரின் முயற்சியில் க‌ட்சியை விட்டே, மொத்த குடும்பமாக வெளியேற்றப்படும் அவமானத்திற்கு உள்ளாகி, அதிலும் பாடம் கற்று கெளரவமாக ஒதுங்காமல், கூவத்தூர் பாணியில்,  புதுச்சேரியை அரங்கேற்றி;

ஆளுங்கட்சியின் முதல்வரை மாற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்ட சட்டபூர்வ முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளாமல்;

ஆளுநரின் அதிகாரபூர்வ வரை எல்லைகள் பற்றி தெரியாமல், அந்த வேலையை செய்யுமாறு, புதுச்சேரி புகழ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுக்க;

எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில், ஸ்டாலின் தமக்குள்ள சட்டபூர்வ வழிமுறைகள் மூலம், சட்டசபையைக் கூட்டி, நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்காமல்;

புதுச்சேரி புகழ் எம்.எல்.ஏக்களே ஆளுநரிடம் கோராத கோரிக்கையை, சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டி, தி.மு.க ஆளுநரிடம் கோரியுள்ளதும், அதற்காக குடியரசு தலைவரையும் சந்திக்கப்போவதாக அச்சுறுத்துவதும்;

இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் தி,மு.கவின்  செல்வாக்கை எந்த அளவுக்கு குறைத்துள்ளது? என்பதானது, அடுத்து நடக்க உள்ள தேர்தல்களில் வெளிப்படும்; ஏற்கனவே சட்டசபையில் அரசைக் கவிழ்க்க கிடைத்த அரிய வாய்ப்பினை தவற விட்டு, சட்டமனறத்தை கேலிக்கூத்தாக்கி, பின் மன்னிப்பு கேட்டு முகத்தைக் காப்பாற்றியுள்ள பின்னணியில்.  (Stalin Owned Responsibility & Apologised Over Assembly Ruckus: DMP Spokesperson; http://www.timesnownews.com/newshour-shorts/video/stalin-owned-responsibility-apologised-over-assembly-ruckus-dmp-spokesperson/56300)   

ஆளுங்கட்சியில் யார் முதல்வர்? என்பதில் ஆளுநர் தலையிட முடியுமா?
எதிர்க்கட்சித்தலைவர் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்யாமல், தனது பணியை செய்யுமாறு ஆளுநரை நிர்பந்திக்க முடியுமா?

மாநில முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்ஸை மிரட்டி, ராஜினாமா கடிதம் பெற்று, ஆளுநருக்கு அனுப்பி, பின் எடப்பாடியை முதல்வராக்கிய சூழலில், அச்சுறுத்தி ராஜினாமா பெற்றதாக பதவியிழந்த முதல்வர் ஆளுநரிடம் எழுத்துபூர்வமாக முறையிட்ட பின் தான், ஆளுநர் முதல்வர் எடப்பாடியை சட்டசபையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்திரவிட்டார். அதை மறந்து, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையானது (http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-governor-indulging-politics-says-mk-stalin/articlecontent-pf260223-294397.html ),பெரும்பான்மை பலம் இழந்ததாக கருதும் எதிர்க்கட்சித்தலைவர் தனக்குள்ள சட்டபூர்வ வாய்ப்புகளில் ஈடுபடாமல், அந்த வேலையை, ஆளுநரை செய்யுமாறு நெருக்குவது, கேலிக்கூத்தாகாதா? சட்டங்களையும், சம்பிரதாயங்களையும் கேலிக்குள்ளாக்கி, முதல்வர் ஜெயலலிதா அப்போல்லோவில் சேர்ந்தது முதல் இன்றுவரை, சசிகலா குடும்பம் நடத்தி வரும் அராஜக அரசியலுக்கு, இப்படிப்பட்ட எதிர்க்கட்சித்தலைவர் தமிழ்நாட்டிற்கு வாய்த்ததும் ஒரு முக்கிய காரணமாகும்; 

சசிகலா முதல்வராகி விடுவார் என்ற கனவில், அவரை 'தரிசித்து', தங்களின் அரசியல் அடித்தளத்தை, மற்ற தலைவர்கள் எல்லாம் நாசமாக்கிக் கொண்ட  சூழலில்;

என்று தெளிவுபடுத்த வேண்டிய ஊடகங்கள் எல்லாம், சுயநல அரசியலுக்கு விலை போனால்;

மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில், ஊடகங்கள் எல்லாம் கேலிப்பொருளாகி விடாதா?‌


ஆளுநரை சந்தித்த 'புதுச்சேரி' எம்.எல்.ஏக்கள் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம், என்று தெரிவித்துள்ளதை கணக்கில் கொள்ளாமலும்,

கூவத்தூர் பாணியில், அந்த எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜனநாயக கேலிக்கூத்தை கணக்கில் கொள்ளாமலும்,

சசிகலா குடும்ப அரசியல் சூதாட்டத்திற்கு, தி.மு.க துணை புரிகிறதா? அல்லது ஆளுநரின் அதிகார எல்லைகள் பற்றிய புரிதலின்றி, பொறுமையிழந்து ஆட்சிக்கு வர எண்ணி, நிலை தடுமாறுகிறதா? அந்த கேலிக்கூத்தில், காங்கிரசையும், கம்யூனிஸ்ட் கட்சிகளையும், சிக்க வைத்துள்ளதா, குடியரசு தலைவர் சந்திப்பின் மூலம்? 

தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.கவில் ஆட்சியிலும், கட்சியிலும் பதவிகளில் இல்லாத, அடிமட்ட தொண்டர்கள் தான்;

ஜெயலலிதாவின் மீதுள்ள உண்மையான விசுவாசம் உந்த;

கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்ற கூறுகளில் பலவற்றை வெளிப்படுத்தி;

தமிழ்நாட்டில் அரசியல் பரம பதம் விளையாட்டானது;

ஏணியில் பயணிக்கத் தொடங்கும் காரணகர்த்தாக்கள் ஆன ஹீரோக்கள் என்பதை;

நானறிந்தவரையில் அடையாளம் கண்டு பாராட்டியது துக்ளக் இதழ் (துக்ளக் 23.8.2017 தலையங்கம்) மட்டுமே ஆகும.

தமிழ்நாட்டில் குடும்ப ஊழல் அரசியலுக்கு எதிரான மக்களின், குறிப்பாக  மாணவர்களின், இளைஞர்களின் கோபமான சமூக காற்றழுத்த தாழ்வு மண்டிலமானது;

சமூக சுனாமியாக வடிவெடுக்க தடையாக இரண்டு குவியங்களாக இருந்த தி.மு.க அரசியலும், சசிகலா அரசியலும், சுப்பிரமணிய சுவாமி கணித்தபடி, ஒன்றானால்;

அது நிச்சயம் தமிழ்நாட்டிற்கு விடிவைத் தரும், சமூக சுனாமி உருவாக வழி வகுக்கும், என்பதும் எனது கணிப்பாகும்.


தமிழ்நாட்டில் 1944இல் நடந்த பாதகமான சமூக மடைமாற்றத்தின் தொடர்ச்சியாக உருவான திராவிட அரசியலானது;

இந்திய அளவில், நேரு அறிமுகப்படுத்திய குடும்ப அரசியல் நோயில் சிக்கி, பயணித்ததன் தொடர்விளைவுகளான;

தி.மு.க குடும்ப அரசியலும், சசிகலா குடும்ப அரசியலும், காங்கிரஸ் துணையுடன் சங்கமமாகி;

அந்த சமூக சுனாமியில் சிக்கி, மடிவதானது, இயற்கையின் விதியாக இருந்தாலும், வியப்பில்லை.

திராவிட மனநோயாளிகளாக காலில் விழும் கலாச்சாரத்தில் மகிழும் மாநிலத் தலைவர்களின் வழியில்(http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ):

மாவட்டம், ஒன்றியம் என்று அடுத்தடுத்த மட்டங்களில் பயணிப்பவர்கள் எல்லாம்;

மேலே குறிப்பிட்ட ஹீரோக்கள் வாழும் கிராமங்களில் மண்ணைக்கவ்வி வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன், மேற்குறிப்பிட்ட ஹீரோக்கள் வாழும் ஒரு கிராமத்தில், 'அதிவேக பெரிய' பணக்காரர் தமது மகன் திருமணத்திற்கு வெளியூர் செல்ல ஏற்பாடு செய்திருந்த பேருந்தில், பயணிக்க, அந்த கிராமத்தில் சுமார் 30 பேர்களுக்கு மேல் ஆட்களை கூட்ட முடியாமல், அந்த பேருந்து பயணித்தது.

கிராமப்புறங்களில் நடுத்தர ஏழை மக்களில் தான் மேலே குறிப்பிட்ட ஹீரோக்கள் இடம் பெற்றுள்ள சமூக சூழலில்;

மேல் நடுத்தட்டு, பணக்காரர்களில் பெரும்பாலோர், 'காரியம் சாதிக்க' தமக்கு வாய்த்திருந்த 'செல்வாக்கு' நபர்கள் எல்லாம், 'கோமாளிகளாக' வலம் வருகையில், அந்த நகைச்சுவைகளை ரசிக்க முடியாத அளவுக்கு,  காரியம் சாதிக்க அடுத்து நமக்கு யார் 'செட்' ஆவார்கள்? என்ற தேடலில்,  குழம்பி தவிக்கிறார்களா?

நமது குடும்பப்பிள்ளைகளை நல்ல பள்ளியில்/கல்லூரியில் சேர்க்க வேண்டுமே?

 +2 தேர்விலும், அடுத்து அடுத்து வரும் தேர்வுகளிலும், கமுக்கமாக வெளியில் தெரியாமல், குறுக்கு வழிகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமே?

அதே போல அரசு வேலைகள் அல்லது நல்ல தனியார் கம்பெனிகளில், குறுக்கு வழிகளில்,வேலை பெற வேண்டுமே? என்பது போன்ற இன்னும் பலவற்றில் மூழ்கி;

ஊழல் சாம்ராஜ்யத்தில் மவுலிவாக்க அடுக்குமாடிகள் மழையில் விழுந்தால் என்ன?

ஏரிகள், ஆறுகள், தாதுமணல், கிரானைட், ஆற்று மணல் கொள்ளை போனால் என்ன?

கொலை, கொள்ளை, ஊழல் குற்றவாளிகள் தப்பிக்க துணை போனால் என்ன?

அத்தகையோரின் செல்வாக்கு நமக்கு லாபம் என்றால், நல்லது தானே;

என்ற திசையில் பயணிக்கிறார்கள். (http://tamilsdirection.blogspot.in/2017/07/blog-post_16.htmlசமூக ஒப்பீடு நோயில் சிக்கி (Social Comparison infection), பணத்தில், செல்வாக்கில் யார் பெரிய ஆள்? என்று குடும்ப அளவிலும், தமது சமூக வட்டத்திலும் போட்டி போடும் நோயை பிரதிபலிக்கும், அவர்களின் உரையாடல்களை தேர்ந்தெடுத்து;

(பணம், செல்வாக்கு போன்ற) எலும்புத் துண்டுகளுக்கு சண்டை போடும் தெரு நாய்களாக சித்தரிக்கும் நகைச்சுவை காட்சிகள், இதுவரை, எந்த திரைப்படத்திலும் வெளிவரவில்லை, என கருதுகிறேன். ஆங்கில அறிவின்றி, தமிழிலும் ஆழ்ந்த புலமையின்றி, 'குருட்டு பகுத்தறிவுடன்', 'யார் அதி புத்திசாலி?' என்ற நோக்கில், அதே போன்ற உரையாடல் சண்டைகளையும், 'பெரியார் சமூக கிருமிகளிடம்' நான் அனுபவித்திருக்கிறேன்.

மேற்குறிப்பிட்ட திசையில், 'பெரியார் சமூக கிருமிகள்' உள்ளிட்டு 'வாழ்வியல் புத்திசாலிகளாக, 'பணமே பிரதானம்' என்று பயணிப்பவர்கள் எல்லாம், வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு - வாழ்வியல் பரமபதத்தின்- தண்டனைகளை அனுபவித்து வருவதும்:


மேலே குறிப்பிட்ட ஹீரோக்களின் பார்வைக்கும் வந்து கொண்டிருப்பதும், அடுத்த பிறவி வரை தள்ளிப் போகாமல், இந்த பிறவியிலேயே சமூக பாவிகள் எல்லாம் தண்டனைகள் அனுபவிக்கிறர்கள், என்று அவர்களின் உரையாடல்களில் வெளிப்படுவதும், எனக்கு வியப்பை அளித்து வருகிறது; தமிழ்நாடு ஏணியில் பயணிக்கத் தொடங்கியுள்ளதன் அறிகுறியாக. 

‘தமிழென்றும் தமிழ் உணர்வென்றும் பகுத்தறிவென்றும்
வாழ்கின்ற சுயலாபக் கள்வரை
மனதில் நினைப்பதும் பாவம், முகத்தில் முழிப்பதும் பாவம்’

என்று வாழ்வதன் மூலம், அந்த ஏணியின் பயணத்திற்கு நாமும் பங்களிக்க முடியும், என்பதும் எனது அனுபவமாகும்; ஆக்கபூர்வமாக வாழும் வகையில், 'மார்ஃபிக் ஒத்திசைவு' (Morphic Resonance) திசையிலும் பயணிக்க ஏதுவாக (https://www.sheldrake.org/research/morphic-resonance ).


No comments:

Post a Comment