Saturday, July 1, 2017

தமிழின்  அடுத்த கட்ட (Next Phase) புலமை? (3)


ஐ.ஐ.டி(I.I.T), என்.ஐ.டி(N.I.T), சாஸ்திரா(SASTRA) போன்ற உயர்தர நிறுவனங்களில் பயின்றவர்கள்/பயில்பவர்கள் மீது, எனக்குள்ள‌ நம்பிக்கை ?


“தமிழ்வழிக்கல்வி மீட்சி என்பதானது, தமிழை மரணப்படுக்கையிலிருந்து மீட்கும். மீட்சிக்குப் பின், தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில்; 

இன்றைய அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கவல்ல அறிவுப் புதையலாக, பழந்தமிழ் இலக்கியங்கள் உதவுகின்றன;

என்பதை நிரூபிக்கவல்ல எனது ஆய்வுகளை தொடர்ந்து செய்வதற்கான சூழலும், ஆதரவும்;

பணம் சம்பாதிக்க வாலாட்டும் நாய்களும், பணத்தைத் தவிர, புலமை,தொண்டு, நேர்மை உள்ளிட்ட எவற்றையும் மதிக்க தெரியாத கழுதைகள் ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழ்நாட்டில் இல்லை, என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன்.

எனது R & D projects, மற்றும் அவற்றின் அடிப்படையில் உருவாகி வரும் வியாபார வாய்ப்புகள் மூலம், எனக்கு வரும் நிகழ்கால/எதிர்கால வருமானங்களை தெரிந்து கொள்வதில் மட்டுமே ஆர்வமுள்ள, தமிழ் உள்ளிட்ட எனது ஆய்வுகள் பற்றி அறியும் ஆர்வமற்ற;

'வாலாட்டி' வசதியாகும் அறிவில் 'நிபுணரான'(?), மற்றும் அறிவு 'வாசனை தெரியாத', மனிதர்களின் 'வாடையின்றி' வாழ, மேலே குறிப்பிட்ட வழியைத் தவிர, வேறு வழி இருப்பதாக, எனக்கு தெரியவில்லை.”  (‘பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில்; தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா?     வீழ்ந்து வருகிறார்களா?’; http://tamilsdirection.blogspot.sg/2016/09/1967.html )

'பெரியார்' ஈ.வெ.ராவின் தமிழ் மொழி, இலக்கியங்கள் பற்றிய தவறான‌ கருத்துக்கள்  தொடர்பான, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்காமல், காலனி சூழ்ச்சியில் 'இனம்' என்ற சொல்லின் பொருளைத் திரித்து, அரங்கேறிய 'ஆரிய‍ ‍திராவிடர்' கொள்கையில் உணர்ச்சிபூர்வமாக பயணித்து வருவதால் விளைந்த‌, தமிழ்வழிக்கல்வியின் மீட்சிக்கு இருந்துவரும் தடைகள் எல்லாம் நீங்கி;

தமிழ்வழிக்கல்வியும் (எனவே தமிழும்) மீளும் என்ற நம்பிக்கையை;

ஆர்.எஸ்.எஸும், மோடி அரசும் ஏற்படுத்தி உள்ளார்கள். (‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil? Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil politics’; http://tamilsdirection.blogspot.sg/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

எனவே தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில்;
 
இன்றைய அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கவல்ல அறிவுப் புதையலாக, பழந்தமிழ் இலக்கியங்கள் உதவுகின்றன;

என்பதை நிரூபிக்கவல்ல எனது ஆய்வுகள் நோக்கி, கூடுதல் கவனம் செலுத்த எண்ணியுள்ளேன்.

'இன்றைய அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கவல்ல அறிவுப் புதையலாக, பழந்தமிழ் இலக்கியங்கள் உதவுகின்றன'

என்பதை செயல்பூர்வமாக, தாமதமின்றி நிரூபிக்க வேண்டும் என்று, என்னை சிங்கப்பூரில் வாழும் எனது மகன் தூண்டியதற்கான பின்னணியை, சுருக்கமாக குறிப்பிட வேண்டும்.

திருச்சி என்.ஐ.டி இல்  எனது ஆய்வுத் திட்டத்தின் ( R & D Project- Deciphering music from the Building Architecture) முதல் கட்டமானது, 2017 ஏப்ரலில் முடிந்த பின், கிடைத்த கால இடைவெளியில், சிங்கப்பூரில் வாழும் எனது மகன் திருச்சி வந்து, என்னை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றார். பின் அவராகவே எனக்கென்று ஒரு அதிகாரபூர்வ இணையதளம் (website) உருவாக்க, எனது ஆய்வுகள் பற்றி என்னிடம் 'தோண்ட' தொடங்கினார். தோண்ட, தோண்ட, ஒவ்வொன்றாக வெளிவந்து, அவற்றை தொகுத்து, அவர் இணைய தளத்தை இணைய ஏற்றம் செய்த பின், அதைப் பார்த்து, நானே மலைத்துப் போனேன்.  http://drvee.in/

எனது ஆய்வில் 15 ஆய்வுத் திட்டங்கள் உள்ளன. http://drvee.in/?page_id=21

நானறிந்தவரையில், தமிழ்நாட்டில் எந்த பல்கலைக்கழகத்திலும், எந்த ஒரு துறையிலும் 'புதிய கண்டுபிடிப்புகள்' என்ற வகையில், இவ்வளவு திட்டங்கள் இன்று உள்ளதா? என்பது கேள்விக்குறியே ஆகும்.

மேலே குறிப்பிட்ட 15 ஆய்வுத் திட்டங்களில், தமிழ் இலக்கியங்கள் தொடர்பாகவும், புதிய வியாபார வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உள்ளவற்றிற்கு உடனடி கவனம் செலுத்தி, அந்த வாய்ப்புகளை உருவாக்கி காட்டினால்,  புதிய வியாபார வேலை வாய்ப்புகளுக்காக, தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் நோக்கி, உலக அளவில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டத் தொடங்குவார்கள். உலகில் தொன்மை மொழிகளில் (ancient languages) அந்த திசையில் பயணிக்கும் முதல் மொழியாக தமிழ் வெளிப்படும். அதன் மூலம் சமஸ்கிருதம், கிரேக்கம்,சீனம் உள்ளிட்ட‌ மற்ற மொழிகளில் உள்ள தொன்மை இலக்கியங்கள் நோக்கியும், ஆய்வுப் படையெடுப்பு தொடங்கும்.

மேலே குறிப்பிட்டவை எல்லாம், எனது மகன் எனக்கு விளக்கி சொன்னவை ஆகும்.

அதை ஏற்று, அந்த திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளேன்.

எனது முயற்சியை விளங்கி, ஆக்கபூர்வமாக ஆதரவளிக்கும் நிலையில் தமிழ் ஆதரவாளர்கள் இல்லை என்பது எனது அனுபவங்கள் ஆகும். (‘தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும், 'சுயநினைவற்ற'  பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா? தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும்’ ; http://tamilsdirection.blogspot.sg/2016/07/fetna.html )

தமிழின் சீரழிவிற்கு பங்களிப்பு வழங்கிய 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள் மீது நான் கோபப்படவில்லை: சுயலாப நோக்கற்று வாழ்ந்த அவரின் தியாகத்தை மதிப்பதால்.

அது போல சுயலாப நோக்கற்று பயணிக்கும், தமிழ் ஆர்வலர்கள் மீதும் நான் கோபப்படவில்லை; தமிழின் வளர்ச்சிக்கு அவர்கள் தடைகளாக பயணித்தாலும்.

திருச்சி என்.ஐ.டி, சாஸ்திரா பல்கலைக்கழகம் மூலம் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுடன் தொடர்பில் உள்ள எனக்கு, மாணவர்கள் மீதும், இளைஞர்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. 

அதிலும் கிராமப் பின்னணியில், பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் பயின்று (ஆய்வுக்கான புலனறிவு -cognitive skills- அதிகம் உள்ளதால்  http://tamilsdirection.blogspot.sg/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html ), இன்று ஐ.ஐ.டி, என்.ஐ.டி, சாஸ்திரா போன்ற உயர்தர நிறுவனங்களில் பயின்றவர்கள்/பயில்பவர்கள் மீது, மிகுந்த நம்பிக்கை இருக்கிறது; என்னைப் பின்பற்றி, தமிழ் இலக்கியங்கள் துணையுடன், புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ஆய்வுகளில் ஈடுபடுவார்கள்.

“சங்க இலக்கியங்கள் என்றாலே அகம், புறம், என்றும், காதலும், வீரமும் என்றும் அணுகும் போக்கிலிருந்து, 'தமிழை' விடுவிக்கும் அறிகுறிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.” (http://tamilsdirection.blogspot.sg/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html )

Note: 

Tholkappiam based Musical Linguistics emerging as new field of Research for Natural Language Processing (NLP) product development; https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_17.html


The Origins of Tamil Classical Music’ Organized by the Centre for Singapore Tamil Culture  




The complimentary dimensions of Tamil & Sanskrit are referred in the above talk.  

No comments:

Post a Comment