தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (13)
சமூக நச்சு விவசாயத்தின் வேலிகளாக, 'நச்சுப் புல்' மனிதர்கள்
‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை’ – ஔவையார்
சமூக விவசாயத்திற்கான சமூக நீராக, சமூக ஆற்றல் (Social Energy) பயன்படுகிறது.
'பொசிதல்' என்றால், கசிதல் ஆகும்.
ஒரு நல்ல சமூகத்தில் நல்ல சமூக விவசாயமானது நடைபெறும்போது;
சமூக நீரில் பெரும் பகுதியை பெற்று வளரும், 'நெல்'களாக, நிறைய
'நல்' மனிதர்களும்;
'பொசிதல்' மூலம பலன் பெற்று, எண்ணிக்கையில் குறைவாகவே
'புல்' மனிதர்களும் இருப்பார்கள். அதிலும் 'நச்சுப் புல்' மனிதர்கள் இன்னும் குறைவாக
இருப்பார்கள். தமிழ்நாடானது 1967க்கு முன் அவ்வாறு தான் இருந்தது; இன்றைய மாணவர்களும்,
இளைஞர்களும் நம்பத் தயங்கும் அளவுக்கு. (http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html
)
தமிழ்நாட்டில் தமிழர்களில்
இயல்பில் பலகீனமானவர்கள் எல்லாம், 'திரிதல்' நோய்க்கு உள்ளாகி, சமூக நச்சு விவசாயத்தில் சிக்கி,
'நச்சுப் புல்களின்' ஆதிக்கத்தில்', 'நெல்' மனிதர்களை தேட வேண்டிய நெருக்கடியில்,
தமிழ்நாடு சீரழிந்துள்ளது. அகத்தில் சாதிப் பற்றுடன்,
புறத்தில் சாதி வேறுபாடற்ற தமிழர் பற்றுடன் 'காட்சி' தந்த, 'புல்' மனிதர்கள் எல்லாம்,
அந்த நெருக்கடியை வளர்த்து விட்டுள்ளார்கள்.
‘எனக்கு நேரம் கிடைக்கும்
போதெல்லாம் உற்சாகமாக நான் ஆராய்ந்து வரும் சொற்கள் 'இயல்பு', மற்றும் (திராவிடக்
கட்சிகளின் 'தமிழர்', 'திராவிடர்', 'திராவிட', குழப்பங்களுக்குள்ளாகியுள்ள,) 'இனம்' போன்றவையாகும். தொல்காப்பியம், திருக்குறள்
உள்ளிட்டு பழந்தமிழ் இலக்கியங்களில், இந்த சொற்கள் இடம் பெற்றுள்ள பகுதிகள், என்னை மிகவும்
ஈர்த்து வரும் பகுதிகளாகும்.
உதாரணமாக 'இயல்பு'
என்ற சொல் கீழ்வரும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளது.
‘இயல்பினான்
இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம்
தலை’ - திருக்குறள்
- 47
இல்வாழ்க்கையின் பண்பும்
பயனும் பற்றி கீழ்வரும் திருக்குறள் விளக்குகிறது.
‘அன்பும்
அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’ -திருக்குறள் - 45
இன்று தமிழ்நாட்டில்
உள்ள குடும்பங்கள் பற்றி, எனது அறிவு, அனுபவ அடிப்படையில், என்ன 'பண்பும் பயனும்'
உள்ளன? என்றும் ஆராய்கிறேன். அப்பா, அம்மா, கணவன், மனைவி, சகோதரன், சகோதரி, மகன், மகள்
உள்ளிட்ட குடும்ப உறவுகளில், எந்த அளவுக்கு 'அன்பும் அறனும்' செல்வாக்கு செலுத்துகின்றன? என்பதும், அந்த ஆராய்ச்சியில் அடக்கம். 'அன்பும் அறனும்' பலகீனமாகி, குடும்ப உறவுகள்
உள்ளிட்ட மனித உறவுகளில், 'லாப நட்டம்' பார்த்து பழகும் 'பண்பும்', அதன் மூலம் கிடைக்கும்
'செல்வம், செல்வாக்கு' ஆகிய பயன்களும் பெறுவது என்பதும், 'வாழ்வியல் புத்திசாலித்தனம்'
ஆகிவிட்டது.’ (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html
)
சீரழிவின் உச்சக்கட்டமாக;
தமிழக முதல்வராயிருந்த
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், 'காற்றுள்ளவரை தூற்றிக் கொள்ளும் பேராசையில்', பொதுவாழ்வு
வியாபாரிகள் எல்லாம், கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஓரங்கட்டி, பணம் ஈட்ட, 'ஓடும்' ஓட்டப்பந்தயம்
போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம், ‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF
) என்ற உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை
திரைப்படத்தை நினைவு படுத்துகின்றன.
'it’s a Mad Mad
Mad Tamilnadu' என்ற, உலக அளவில் பெரும் வெற்றி
பெறக்கூடிய திரைப்படத்திற்கான சம்பவங்கள்
பல, தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன:’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_12.html
) ஆங்கில வழிக் கல்வி
மேற்கத்திய மோகத்தில், அரங்கேறி வரும் தமிங்கிலீசின் செல்வாக்கில், தமிழின் தகவல் பரிமாற்ற
வலிமையானது சீரழிவதும், திரைப்பட நகைச்சுவை காட்சிகளுக்கு மூலமாகி (Sources) வருகின்றன. பொதுவாழ்வில் எளிமையின்
இலக்கணமாக போற்றப்படும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவ
சிகிச்சை/மரணம் பற்றியும், கிரானைட் ஊழல் பற்றியும் மூச்சு விடாமல், முதல்வராக முனைந்த
சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்து, அந்த திரைப்படத்திற்கான கோமாளிகள் வரிசையில்
இடம் பெற்றுள்ளார். (https://tamilsdirection.blogspot.com/2016/12/blog-post.html )
இன்று 'சமூக நச்சு
அறுவடையை' சந்தித்துள்ள தமிழ்நாட்டில், அடுத்த சமூக விவசாயம் தொடங்க உள்ள கட்டத்தில்;
மேலே குறிப்பிட்ட திரைப்படத்திற்கான
நகைச்சுவை காட்சிகள் அரங்கேறிவருகின்றன.
‘1944-இல் திராவிடர்
கழகம் உருவான பின், பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் ஆனவை, உணர்ச்சிபூர்வமாக தடம்
புரண்டதன் காரணமாக, எவ்வாறு திராவிட மனநோயாளித்தனம் உருவாகி;
இன்று தமிழ்நாடு சந்தித்து வரும் சமூக நச்சு விவசாய அறுவடையின் தோற்றுவாயாக, தமிழில் 'இனம்' திரிந்து, 1944-இல் சமூக ஆற்றலானது, உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில், சமூக நச்சு விவசாயத்திற்காக, காலனிய சூழ்ச்சியில், திசை திருப்பப்பட்டதா? என்ற அறிவுபூர்வ விவாதம் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டது.
‘திறமைமிக்க விவசாயிகள் விதையையும், அதை விதைத்து பராமரிக்கும் முறையையும் வைத்தே, அறுவடை எப்படி இருக்கும்? என்று கணித்து விடுவார்கள். அது போல சமூகத்தில் புதியவை முளைவிட்டு, வளரும் போக்கானது, அதற்கான 'அறுவடையில்' முடிவதைத் தடுக்க முடியாது………………..இயற்கையில் 'அறுவடை' முடிந்தபின், அடுத்த விவசாயத்திற்கான விதைகள் தயாராகி விடும். மனிதர்கள் தொடர்பின்றி, வளரும் காடுகளிலும் முதிர்ந்த மரங்கள் மரணமடையும் போது, புதிய மரங்கள் வளர்ந்து காடுகளை அழியாமல் காக்கும் இயற்கையும் அப்படியே.
அப்படியென்றால், தமிழ்நாட்டில்
முளை விட்டுக்கொண்டிருக்கும் 'புதிய விதைகள்' யாவை? அவற்றில் 'நல்ல விதைகள் யாவை? நச்சு
விதைகள் யாவை? நச்சு விதைகளை அடையாளம் கண்டு, முளையிலேயே அகற்றாவிட்டால், தமிழ்நாடு
மீண்டும் ஒரு நச்சு அறுவடையை சந்தித்தாக வேண்டும். அந்த நச்சு அறுவடை நடைபெறும்போது, தமிழும், பாரம்பரியமும்,பண்பாடும்
தமிழர்களிடையே மறைந்து, தமிழ் வேரற்ற தமிங்கீலிசர்கள் நாடாக தமிழ்நாடு மாறி விடும்.
தமிழ்நாட்டில் அறிவிலும், உழைப்பிலும், பிற மாநிலத்தவர் செல்வாக்குடன் வாழ, அவர்களை
நத்தி பிழைக்கும் தரகர்களும், திருடர்களுமாக அந்த வேரற்ற தமிங்கீலிசர்கள் வாழ்வார்கள்.’
(http://tamilsdirection.blogspot.com/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_23.html
)
எனவே நல்ல விதைகளாக
வாழும் 'நெல்' மனிதர்கள் எல்லாம், மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ வேண்டிய கட்டம் இதுவாகும்;
மீண்டும் தமிழ்நாட்டில் சமூக நச்சு விவசாயம் தொடங்குவதை, தடுக்க வேண்டும் என்றால்.
தமிழ்நாட்டில் தமதளவில்
மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, நேர்மையாக வாழ்பவர்கள் எல்லாம் எச்சரிக்கையுடன் வாழவில்லையென்றால்,
அந்த 'கவனக் குறைவுக்கு' விலையாக, நம்ப முடியாத இழப்புகளை சந்தித்தாக வேண்டும். அவ்வாறு
'அனுபவித்து', மிகுந்த எச்சரிக்கையுடன் வாழும்போதும், வித்தியாசமான சிக்கலையும் சந்திக்க
நேரிடுகிறது.
ஊழல் மூலம் அதிக வருமானம்
ஈட்ட வாய்ப்பிருந்தும், நேர்மையாக பணியாற்றி வருபவர்களையெல்லாம் மதித்து, நமது சமூக
வட்டத்தில் அனுமதிப்பதிலும் ஆபத்து இருக்கும் நாடாக, தமிழ்நாடு சீரழிந்துள்ளது.
அவர்களில், பொதுவாழ்வு
வியாபாரிகளின் சமூக முதுகெலும்பாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை, நமது சமூக வட்டத்தில்
அனுமதித்தால், அதன் விளைவாக, நல்ல 'நெல்' மனிதர்களாக வாழும் நம்மைப் போன்றவர்கள் எல்லாம்,
அந்த 'சமூக நச்சு' வாடையில், 'மலட்டு விதைகளாக' மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது.
‘மேல் நடுத்தட்டு,
பணக்காரர்களில் பெரும்பாலோர், 'காரியம் சாதிக்க' தமக்கு வாய்த்திருந்த 'செல்வாக்கு'
நபர்கள் எல்லாம், 'கோமாளிகளாக' வலம் வருகையில், அந்த நகைச்சுவைகளை ரசிக்க முடியாத அளவுக்கு, காரியம் சாதிக்க அடுத்து நமக்கு யார் 'செட்' ஆவார்கள்?
என்ற தேடலில், குழம்பி தவிக்கிறார்களா?
நமது குடும்பப்பிள்ளைகளை
நல்ல பள்ளியில்/கல்லூரியில் சேர்க்க வேண்டுமே?
+2 தேர்விலும், அடுத்து அடுத்து வரும் தேர்வுகளிலும்,
கமுக்கமாக வெளியில் தெரியாமல், குறுக்கு வழிகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமே?
அதே போல அரசு வேலைகள்
அல்லது நல்ல தனியார் கம்பெனிகளில், குறுக்கு வழிகளில்,வேலை பெற வேண்டுமே? என்பது போன்ற
இன்னும் பலவற்றில் மூழ்கி;
ஊழல் சாம்ராஜ்யத்தில்
மவுலிவாக்க அடுக்குமாடிகள் மழையில் விழுந்தால் என்ன?
ஏரிகள், ஆறுகள், தாதுமணல்,
கிரானைட், ஆற்று மணல் கொள்ளை போனால் என்ன?
கொலை, கொள்ளை, ஊழல்
குற்றவாளிகள் தப்பிக்க துணை போனால் என்ன?
அத்தகையோரின் செல்வாக்கு
நமக்கு லாபம் என்றால், நல்லது தானே;
என்ற மன நிலையில் வாழ்பவர்கள்
எல்லாம், பெரும்பாலும் 'எந்த வழியிலாவது மேல்தட்டு' வாழ்க்கைக்கு ஏங்கும் நடுதரவாசிகளாகவும்,
மேல் தட்டு, பணக்காரர்களுமாகவுமே இருக்கிறார்கள்; பொதுவாழ்வு வியாபாரிகளின் சமூக முதுகெலும்பாக
வாழ்ந்து கொண்டு.
இவ்வாறு ‘புத்திசாலித்தனமாக’(?) வாழ்ந்து வருபவர்கள் எல்லாம், வெளியில் சொல்ல முடியாத, வெவ்வேறு
வகையிலான தண்டனைகளையும் அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்கள்; தமிழ்நாட்டிற்கு பெரும்பாலும்
புதிதாக; 1970களின் பிற்பகுதிகளில் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரம் அறிமுகமானதன் பலனாக.’
(http://tamilsdirection.blogspot.com/2017/07/blog-post_16.html
)
'திராவிட' அரசியல்
கொள்ளைக்காரர்கள் எல்லாம், தேசிய, இந்துத்வா, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களான அடிவருடிகள்
துணையுடன் முன்னெடுத்த சமூக விவசாயத்தின் வேலிகளாக வலம் வரும்;
உணர்ச்சிபூர்வ
கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், ஆகிய 'நச்சுப்' புல் மனிதர்களை எல்லாம்;
நல்ல 'நெல்' மனிதர்களாக
வாழ்பவர்கள், தத்தம் சமூக வட்டத்தில், அவர்களை அனுமதித்தால்;
அந்த 'சமூக நச்சு'
வாடையில், அந்த சமூக வட்டமே, 'மலட்டு விதைகளாக' மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது.
'எந்த வழியிலாவது மேல்தட்டு'
வாழ்க்கைக்கு ஏங்கும் நடுதரவாசிகளாகவும், மேல் தட்டு, பணக்காரர்களுமாகவும் இருப்பவர்களில்
பலரும் அந்த வகையில் சமூகத்திற்கு ஆபத்தானவர்களே ஆவர். தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில்
படிக்க வைத்து, வருத்தம் கூட தெரிவிக்காமல், அதனையும் மறைத்து, தமிழ்வழிக்கல்வி புரவலராகவும், ஆதரவாளராகும் வலம் வருபவர்கள் எல்லாம், மிகுந்த ஆபத்தான, வீரியம் மிக்க நச்சு விதைகள் ஆவர்.
மாறாக, தமிழ்வழிக்
கல்வி ஆதரவாளர்களாக இருந்துகொண்டு, தமது குடும்பப் பிள்ளைகளை அரசு அல்லது அரசு உதவி
பெறும் தமிழ்வழிப் பள்ளிகளில் படிக்க வைத்தவர்கள் எல்லாம், தமிழ்நாட்டின் மீட்சிக்கான
நல்ல விதைகள் ஆவர்; இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு உள்ளிட்ட எந்த கொள்கையின் ஆதரவாளராக இருந்தாலும்.
‘நடுத்தர ஏழை மக்கள்
மட்டத்தில் தொடங்கி, இன்று சசிகலாவை குவியமாகக் கொண்டு, 'சுனாமியாக' வளர்ந்துள்ள 'குடும்ப
அரசியல் ஊழல் எதிர்ப்பு அலையை' உணர்ந்து, 'படித்த தமிழர்கள்' எல்லாம் அந்த அலையோடு,
தமிழின், தமிழரின் அடையாள 'காவி மீட்பு' நோக்கில்,
நெறிப்படுத்தும் வாய்ப்பினை தவற விட்டால், தமிழ் 'இன்னொரு பாலி' மொழியாகி (https://en.wikipedia.org/wiki/Pali
);
தமிங்கிலீசர்கள் (பெரும்பாலும்
தரகர்களாகவும், திருடர்களாகவும்) வாழும் நாடாக, தமிழ்நாடு சீரழியும் வாய்ப்பும், எனது
ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.(‘தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும்
பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?’; https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )
சீரழிந்துள்ள தமிழ்நாட்டில்,
சீரழிவுக்கான 'வித்துக்களை', திறந்த மனதுடன் தேடி அழிக்க தயங்கினால், மீட்சிக்கு வழியில்லை
என்பதும், கவனிக்கத் தக்கதாகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2017/04/depoliticize12-social-energy.html
)
இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு உள்ளிட்ட எந்த கொள்கையின்
ஆதரவாளராக இருந்தாலும், தனது அளவிலும், தனது
சமூக வட்டத்திலும் தீய போக்குகளுடன் சமரசமாகி, வெளியே 'வீரர்களாக' கவிதை, பேச்சு, எழுத்து
மூலமாக வலம் வந்தவர்களே, சமூக நச்சு விவசாயத்தின் முதுகெலும்பாக பங்களித்து வருகிறார்கள்;
அடி மட்டத்தில் (Micro level), தாம் பிறந்த, வாழ்ந்த/வாழும், பணியாற்றும் இடங்களில், தம்மை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்புள்ளவர்களிடம், தமது 'சுயரூபம்' அம்பலமாயிருந்தாலும், அதனால் பாதிப்பின்றி, மேல் மட்டத்தில் (Macro level) மீடியா வெளிச்சத்துடன் வலம் வந்து கொண்டு. (‘Why Karl Marx on castes in India, Noam Chomsky on Nandigram and Amartya Sen on Modi, were wrong?’ ; http://veepandi.blogspot.com/2017/06/why-karl-marx-on-castes-in-india-noam.html )
அடி மட்டத்திற்கும், மேல் மட்டத்திற்கும் இடையில் இருந்த தடையானது (insulation), சாதாரண மக்களிடம் நீங்கி, 'நிர்வாணமாகி' வரும் கட்சிகளும், தலைவர்களும், 'ஆதாய தொண்டர்கள்' மூலம் பயன்படுத்திய 'அமாவாசை திரையும்' (http://tamilsdirection.blogspot.in/2017/04/1967.html), ஜெயலலிதாவின் மரணத்தின் மூலம் கிழிந்து, 'it’s a Mad Mad Mad Tamilnadu' என்ற திரைப்படத்திற்கான, சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.( https://tamilsdirection.blogspot.com/2017/07/its-mad-mad-mad-tamilnadu-its-mad-mad.html )
‘எந்த கட்சியும் கொள்கையும் சாராத, சாதாரண மக்களிடம் வெளிப்படும் 'சுயலாப நோக்கற்ற' இயல்பான அன்பு, நேர்மை போன்றவை, ஒப்பீட்டளவில், கட்சி/கொள்கை ஆதரவாளர்களிடம் குறைவு என்பதும் எனது அனுபவமாகும். அது எந்த அளவுக்கு ‘அரசியல் நீக்கம்'(Depoliticize) போக்குடன் தொடர்புடையது? 'கொள்கைக்காக' மனிதர்களை மதித்த காலம் மாறி, ‘அரசியல் நீக்கம்' போக்கில், அவர்களை எல்லாம், 'பொதுவாழ்வு வியாபாரிகளாக', சாதாரண மக்களில் பெரும்பாலோர் கருதுகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’(https://tamilsdirection.blogspot.com/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html) பொதுவாழ்வு வியாபாரத்திற்கான சமூக ஆற்றலானது, சாதாரண மக்களிடமிருந்து (சமூக ஆற்றல் மூலங்கள்) வெளிப்படுவதானது, வற்றி வருகிறது.
மீட்சிக்கான நல் விதைகளாக வாழும் மனிதர்கள் எல்லாம், சமூகத்திற்கு கேடான நச்சு விதைகளாக வாழ்பவர்களை எல்லாம், தத்தம் சமூக வட்டத்தினின்று அகற்றினால்;
அடி மட்டத்தில் (Micro level), தாம் பிறந்த, வாழ்ந்த/வாழும், பணியாற்றும் இடங்களில், தம்மை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்புள்ளவர்களிடம், தமது 'சுயரூபம்' அம்பலமாயிருந்தாலும், அதனால் பாதிப்பின்றி, மேல் மட்டத்தில் (Macro level) மீடியா வெளிச்சத்துடன் வலம் வந்து கொண்டு. (‘Why Karl Marx on castes in India, Noam Chomsky on Nandigram and Amartya Sen on Modi, were wrong?’ ; http://veepandi.blogspot.com/2017/06/why-karl-marx-on-castes-in-india-noam.html )
அடி மட்டத்திற்கும், மேல் மட்டத்திற்கும் இடையில் இருந்த தடையானது (insulation), சாதாரண மக்களிடம் நீங்கி, 'நிர்வாணமாகி' வரும் கட்சிகளும், தலைவர்களும், 'ஆதாய தொண்டர்கள்' மூலம் பயன்படுத்திய 'அமாவாசை திரையும்' (http://tamilsdirection.blogspot.in/2017/04/1967.html), ஜெயலலிதாவின் மரணத்தின் மூலம் கிழிந்து, 'it’s a Mad Mad Mad Tamilnadu' என்ற திரைப்படத்திற்கான, சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.( https://tamilsdirection.blogspot.com/2017/07/its-mad-mad-mad-tamilnadu-its-mad-mad.html )
‘எந்த கட்சியும் கொள்கையும் சாராத, சாதாரண மக்களிடம் வெளிப்படும் 'சுயலாப நோக்கற்ற' இயல்பான அன்பு, நேர்மை போன்றவை, ஒப்பீட்டளவில், கட்சி/கொள்கை ஆதரவாளர்களிடம் குறைவு என்பதும் எனது அனுபவமாகும். அது எந்த அளவுக்கு ‘அரசியல் நீக்கம்'(Depoliticize) போக்குடன் தொடர்புடையது? 'கொள்கைக்காக' மனிதர்களை மதித்த காலம் மாறி, ‘அரசியல் நீக்கம்' போக்கில், அவர்களை எல்லாம், 'பொதுவாழ்வு வியாபாரிகளாக', சாதாரண மக்களில் பெரும்பாலோர் கருதுகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’(https://tamilsdirection.blogspot.com/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html) பொதுவாழ்வு வியாபாரத்திற்கான சமூக ஆற்றலானது, சாதாரண மக்களிடமிருந்து (சமூக ஆற்றல் மூலங்கள்) வெளிப்படுவதானது, வற்றி வருகிறது.
மீட்சிக்கான நல் விதைகளாக வாழும் மனிதர்கள் எல்லாம், சமூகத்திற்கு கேடான நச்சு விதைகளாக வாழ்பவர்களை எல்லாம், தத்தம் சமூக வட்டத்தினின்று அகற்றினால்;
சமூக நீரின்றி, அந்த
நச்சு விதைகள் எல்லாம் தாமாகவே அழிந்து விடுவார்கள்.
சமூகத்தில் 'நல்லார்' பெருகினால் தான், தமிழ்நாட்டில் எல்லார்க்குமான 'மழை பெய்யும்'. மழை நீர் கேகரிப்புகளான ஏரிகள், குளங்கள், ஆறுகள் எல்லாம் 'ஊழல்' தீயினத்தின் பிடியிலிருந்து மீளும். தமிழ்நாட்டில் நீர் வறட்சியும், 'நல்' மனிதர்கள் வறட்சியும் நீங்கும்.
சமூகத்தில் 'நல்லார்' பெருகினால் தான், தமிழ்நாட்டில் எல்லார்க்குமான 'மழை பெய்யும்'. மழை நீர் கேகரிப்புகளான ஏரிகள், குளங்கள், ஆறுகள் எல்லாம் 'ஊழல்' தீயினத்தின் பிடியிலிருந்து மீளும். தமிழ்நாட்டில் நீர் வறட்சியும், 'நல்' மனிதர்கள் வறட்சியும் நீங்கும்.
No comments:
Post a Comment