தமிழ் இலக்கியங்கள் தமிழர்களுக்குக் கேடானதா?
தி.கவிற்கும், தி.மு.கவிற்கும் இடையே வேறுபாடுகள்?
தமிழ்
தொடர்பான புலமை வீழ்ச்சி தொடங்கிய காலக்கட்டங்களில்;
தமிழில் புலமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமின்றி, இலக்கண அறிவின்றி செவி புலன் அறிவில் எதுகை மோனையை பயன்படுத்தி, உணர்ச்சிபூர்வமாக பேசுவதும், எழுதுவதும் வளர்ந்த 'வழிபாட்டுப் போக்கில்';
தமிழில் புலமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமின்றி, இலக்கண அறிவின்றி செவி புலன் அறிவில் எதுகை மோனையை பயன்படுத்தி, உணர்ச்சிபூர்வமாக பேசுவதும், எழுதுவதும் வளர்ந்த 'வழிபாட்டுப் போக்கில்';
அந்த
வழிபாடு ஏற்படுத்திய சமூக தேவைகளின் அடிப்படைகளில்,
திருவள்ளுவர் உள்ளிட்ட பிம்பங்களுக்கு தேவைகள் உருவானதன் வடிகாலாகவே, பழந்தமிழ் இலக்கிய படைப்பாளர்களின் தோற்றங்களை உருவாக்கும் போக்குகள் வெளிப்பட்டனவா? என்ற ஆய்வுக்கான நேரம்
வந்து விட்டதாக கருதுகிறேன்.
1953இல் பாரதிதாசன்
தூண்டி, வேணுகோபால் சர்மா திருவள்ளுவரின் தோற்றத்தை, எந்த சான்றுகளும் இன்றி,
கற்பனையாக, ஓவியமாக வரைந்து, அன்றைய முதல்வர் பக்தவச்சலம், தி.மு.க
தலைவர் அண்ணா ஆகியோரின் ஏகமனதான பாராட்டுடன், அண்ணா பரிந்துரையின் பேரில்
முதல்வர் பக்தவச்சலம் அந்த திருவள்ளுவரின் தோற்றத்திற்கு
தமிழக அரசின் அங்கீகாரத்தை வழங்கினார். ( https://www.quora.com/in/Tamil-Literature-Who-drew-the-Thiruvalluvar-picture-first
)
அது
தொடர்பாக, ஈ.வெ.ரா
அவர்கள் அந்த காலக்கட்டத்தில் என்ன
கருத்தை பேச்சாகவோ, எழுத்தாகவோ வெளியிட்டார்? என்பதை இனி தான் ஆராய
வேண்டும்.
தாய்மொழி
தமிழையும், தமிழ் இலக்கியங்களையும் தமிழருக்கு கேடென ஈ.வெ.ரா
அவர்கள் பிரச்சாரம் செய்து வந்த சூழலில், 1967இல்
அண்ணா முதல்வராகி, இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டினை நடத்தி, திருவள்ளுவர் மட்டுமின்றி, 'தீ பரவட்டும்' என்று
அண்ணாவால் கண்டிக்கப்பட்ட 'கம்ப ராமாயணத்தை' எழுதிய
கம்பருக்கும், மற்ற பழந்தமிழ் இலக்கிய
படைப்பாளர்களுக்கும், சென்னை மெரினாவில் சிலைகள் அமைத்தார். அந்த தோற்றங்கள் எல்லாம்,
திருவள்ளுவர் தோற்றத்தை போலவே, எந்த சான்றுகளும் இன்றி,
கற்பனையில் வடிக்கப்பட்டவையா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அண்ணாவின்
' அந்த' சாதனை தொடர்பாகவும் ஈ.வெ.ரா
அவர்கள் என்ன கருத்து வெளியிட்டார்?
என்பதையும் ஆராய வேண்டும்.
அது
போலவே, ஈ.வெ.ரா
அவர்களின் தமிழ் இலக்கியங்களை கண்டிக்கும் போக்கிற்கு வலிவு சேர்த்து பயணித்த அண்ணா, அந்த நிலைப்பாட்டிருந்து மாறி, தமிழ்
இலக்கியங்களையும், அதன் படைப்பாளர்களையும் போற்றி, சிலைகள்
எடுக்கும் அளவுக்கு மாறியது தொடர்பாக, அறிவுபூர்வ விளக்கங்களை அண்ணா வெளிப்படுத்தியுள்ளாரா? என்பதையும் ஆராய வேண்டும்.
'பெரியார்
குறுகிய இன அடிப்படையில் பயன்படுத்திய
'திராவிடர்' என்ற சொல்லை விடுத்து,
பிராமணர்களை கட்சியில் சேர்த்து, பரந்த புவியியல் அடிப்படையிலான 'திராவிட' என்ற சொல்லை தேர்தெடுத்து'
'திராவிட முன்னேற்ற கழகம்' தொடங்குவதாக விளக்கம் அளித்த அண்ணா;
அதற்கு
பின்னும், 'தி.கவும், தி.மு.கவும் இரட்டைக்குழல்
துப்பாக்கி போல செயல்படும்' என்று
அறிவித்ததில் கொள்கை பூர்வ அறிவு நேர்மை இருந்ததா? என்ற அறிவுபூர்வ விவாதத்தை
இனியும் தாமதப்படுத்தலாமா?
'திராவிடர்'
என்பதில் ஈ.வெ.ரா
அவர்களிடமிருந்து வேறுபட்டு பயணித்த அண்ணா, தமிழ் இலக்கியங்கள் தொடர்பாகவும், அவ்வாறு வேறுபட்டு பயணித்தற்கு அறிவுபூர்வ நியாய விளக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளாரா? என்பதையும் ஆராய வேண்டும்.
“‘The History of the Decline and
Fall of the Roman Empire’ (http://en.wikipedia.org/wiki/The_History_of_the_Decline_and_Fall_of_the_Roman_Empire
)
என்ற ஆறு தொகுப்புகள் கொண்ட
புத்தகத்தில் 'சில' பக்கங்களில் இருந்தவற்றை
மட்டும், 'ரோமாபுரி
ராணிகள்' என்ற தலைப்பில் அண்ணாதுரை இளைஞர்களின்
பாலுணர்வு கவர்ச்சி தொடர்பான உணர்ச்சியைத் தூண்டும்
வகையில் புத்தகம் எழுதியது சரியா? அந்த ஆறு தொகுப்புகள்
கொண்ட புத்தகத்தின் சாராம்சத்தை - பண்பாட்டு வீழ்ச்சி சமூக வீழ்ச்சிக்கு அடிகோலும்
- என்ற கருத்தை அவர் ஏன் நூலாக
வெளியிடவில்லை? 1967இல் முதல்வரான பின்
அவர் எழுதிய 'கம்பரசம்' என்ற அதே போன்ற
இன்னொரு நூலை ஒருவர் நினவூட்டியபோது,
'நான் மறக்க விரும்புவதை நினைவூட்ட வேண்டாம். ' என்று அவர் சொன்னது ஏன்?
அதன் மூலம் 'குதிரைத் தப்பி ஓடிய பின் லாயத்தைப்
பூட்டிய கதை' நினைவுக்கு வருவது
தவறா?”
(http://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html )
(http://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html )
‘தமிழ்
இலக்கியங்கள் தொடர்பாக பெரியார் தெரிவித்த கருத்துகளின் பின்னணியில், கடந்த சில வருடங்களில்,
'தொல்காப்பியரும்,
வள்ளுவரும், இளங்கோவும் நின்று கொண்டு, உட்கார்ந்த நிலையில் உள்ள தி.மு.க தலைவர்
கலைஞர் கருணாநிதியை வாழ்த்தும் சுவரொட்டிகளும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மேடையில் அதை
நடித்துக் காட்டிய நிகழ்ச்சிகளும் ஆழ்ந்த ஆய்விற்குரியவையாகும். அதாவது அறிவுபூர்வ போக்கு பலகீனமாகி, உணர்ச்சிபூர்வ போக்குகள் வளர்ந்த காலக் கட்டத்தில், தமிழ்
மொழி, பாரம்பரியம், பண்பாடு, போன்ற தமிழரின் 'ஆணி வேர்கள்' தமிழர்க்குக்
கேடானவை என்ற பிரச்சாரத்தை வலிமையுடன்
பெரியார் மேற்கொண்டு வந்தார். 1949இல் தி.மு.க தோன்றி, 'இரட்டைக்
குழல் துப்பாக்கி' என்று அறிவிப்புக்கு இணங்க, பெரியாரின் நிலைப்பாட்டை ஒட்டி, அந்தப் பிரச்சாரப் போக்கில் தி.மு.க
பயணித்ததா? அதில் அண்ணாவின் நிலைப்பாட்டிற்கும், கலைஞர் கருணாநிதியின் நிலைப்பாட்டிற்கும் எப்போது வேறுபாடு முளைவிட்டு, வளர்ந்து, மேலேக் குறிப்பிட்ட விளைவில் இன்று உள்ளது என்பதும் ஆழ்ந்த ஆய்விற்குரியதாகும்.
மேலேக்
குறிப்பிட்ட போக்குகள் தமிழை வளர்த்ததா? அல்லது வீழ்ச்சித் திசையில் பயணிக்கச் செய்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். ‘
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html)
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html)
தமது
கொள்கையில் சிக்கியவர்களை எல்லாம், தாய்மொழி அடிப்படையிலான
'அடையாள இழப்புக்கு' உட்படுத்தி, அதன் விளைவான உலக
ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ள பலவகை போதைகளுக்கு ஆட்படும் வாய்ப்புகளைக் கூட்டி, அதன் தொடர்விளைவாக 'திராவிட'
ஊழல் திமிங்கிலங்களுக்கு 'ஒட்டுண்ணி பெரியார்' கவசங்களாகவும், 'பணத்துக்கு வாலாட்டி தன்மானம் இழந்து வாழ்வியல் புத்திசாலிகளாகவும்'(?), வாழும் தமிழர்கள் எல்லாம், ஆங்கிலவழிக்கல்வி வியாபார சமூக முதுகெலும்பாகி;
'தமிழ்வேரழிந்த
தமிங்கிலீசர்கள்' எண்ணிக்கையானது அந்த ஆங்கிலவழிக்கல்வி மூலமாக
அதிவேகமாக அதிகரித்து, தமிழ் வேரழிந்த நாடாக தமிழ்நாடு வெகு சீக்கிரம் மாறும்
அபாயத்தில் சிக்கி விட்டது; 'போர்க்கால' அடிப்படையில் 'தமிழ்வழிக்கல்வி மீட்பு' மூலம் 'தமிழ்வேரை மீட்கும்' அவசியத்தை உணர்த்தி.’
(http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_20.html )
(http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_20.html )
ஈ.வெ.ரா
அவர்கள் தமது கொள்கையில் சிக்கியவர்களை எல்லாம், தாய்மொழி அடிப்படையிலான 'அடையாள இழப்புக்கு'
உட்படுத்தி, அதன் விளைவான உலக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ள பலவகை போதைகளுக்கு ஆட்படும்
வாய்ப்புகளைக் கூட்டிய போக்கிற்கு;
தமிழ்
இலக்கியங்கள் தொடர்பாக அண்ணாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களும், 'இரண்டும் கெட்டான்'
போக்கில், அந்த 'அடையாள இழப்பு' என்பதானது;
'கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், வீரமணி' உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் பெயர்களை சொல்லி அழைப்பதே 'அவமரியாதை'யாக கருதப்படும் அளவுக்கும், அந்த போக்கில் அரங்கேறிய ஆட்சிகளில் 'தரகு, கள்ளச்சாராய விற்பனை, ரவுடி' உள்ளிட்ட பின்னணியில் 'வளர்ந்து அதிவேக பணக்காரரானவர்களுக்கு' அவர்களின் உற்றத்திலும், சுற்றத்திலும், சாதியிலும், கட்சிகளிலும் கிடைக்கும் 'அதீத' மரியாதையானது, ' வாழ்வியல் முன்மாதிரியாக' போற்றப்படும் அளவுக்கும், அவர்களில் 'அதி புத்திசாலிகள் தமிழ்த் தேசிய புரவலர்களாக' உணர்ச்சிக் கவிஞர்களாலும், பேச்சாளர்களாலும், எழுத்தாளர்களாலும், 'இந்துத்வா, பார்ப்பன எதிர்ப்பு' (?) தலைவர்களாலும் புகழப்படும் அளவுக்கும், விளைவுகளை ஏற்படுத்தி, கீழ்வரும் கேள்வி எழவும் காரணமானது.
1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் அறிவுபூர்வமாக, மாணவர்களை காந்தி வழியில் ஈடுபடுத்தாமல் சமூக பொறுப்புடன் நடந்த போக்கிலிருந்து தடம் புரண்டு, அண்ணா, ராஜாஜி ஊக்குவிப்பில், 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உணர்ச்சிபூர்வ தற்கொலைப் போக்குகளையும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் போக்குகளையும், தமிழ்நாட்டின் சீரழிவிற்கு அறிமுகப்படுத்தி;
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html)
1967இல்
ஆட்சிக்கு வந்ததில் முளைவிட்டு, இன்று உச்சத்தில்
உள்ள, அரசியல் கொள்ளையர்களுக்கு 'வாலாட்டி வளமாகும்' தன்மானக்கேடான போக்குகளையும் அரங்கேற்றிய
பாதக விளைவுகளில் முடிந்துள்ளதா?
அது
சரியென்றால், அந்த கேடுகளுக்கு காரணமாக அறிவுபூர்வமற்ற, தமிழ் இலக்கியங்கள் தொடர்பான,
'அந்த' 'இரட்டைக் குழல் துப்பாக்கி' சமூக செயல்நுட்பத்தினை
வீழ்த்தாமல், தமிழின், தமிழ்நாட்டின் மீட்சி சாத்தியமா? என்ற நோக்கிலேயே, மேலே குறிப்பிட்ட
ஆய்வுகள் எல்லாம் நடைபெற வேண்டும்.
மேலே குறிப்பிட்ட 'அந்த' 'இரட்டைக் குழல் துப்பாக்கி' சமூக செயல்நுட்பத்தில், தமிழ்நாட்டில் முளை விட்டு 'தடம் புரண்ட' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப் போக்கும் 'சங்கமாகி', 'முள்ளிவாய்க்கால் முற்றமாக' முடிந்த சமூக செயல்நுட்பத்தினை ஆராய வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
மேலே குறிப்பிட்ட 'அந்த' 'இரட்டைக் குழல் துப்பாக்கி' சமூக செயல்நுட்பத்தில், தமிழ்நாட்டில் முளை விட்டு 'தடம் புரண்ட' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப் போக்கும் 'சங்கமாகி', 'முள்ளிவாய்க்கால் முற்றமாக' முடிந்த சமூக செயல்நுட்பத்தினை ஆராய வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
‘பிறந்த
மண்ணும், தாய்மொழியும், பண்பாடும், பாரம்பரியமும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புடையதாகும்.
தமிழ்நாட்டில் பிரிவினை கோரிக்கையை முன்னெடுத்த ஈ.வெ.ரா அவர்கள் அந்த நெருக்கமான தொடர்பு பற்றிய புரிதல் இல்லாமலும், தமிழ் மொழியும், பண்பாடும், பாரம்பரியமும் தமிழருக்கு கேடானவை என்று தவறாகவும், அன்றைய தஞ்சை மாவட்டம் அளவுக்கு தனிநாடு கிடைத்தாலே போதும் என்றும், 'திராவிட/தமிழ் நாடு' பிரிவினையை முன்னெடுத்ததானது, தமிழ்நாட்டில் 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று, தமிழ் மொழிக்கும், தமிழர் நலனுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாக வளர்ந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
தமிழ்நாட்டில் பிரிவினை கோரிக்கையை முன்னெடுத்த ஈ.வெ.ரா அவர்கள் அந்த நெருக்கமான தொடர்பு பற்றிய புரிதல் இல்லாமலும், தமிழ் மொழியும், பண்பாடும், பாரம்பரியமும் தமிழருக்கு கேடானவை என்று தவறாகவும், அன்றைய தஞ்சை மாவட்டம் அளவுக்கு தனிநாடு கிடைத்தாலே போதும் என்றும், 'திராவிட/தமிழ் நாடு' பிரிவினையை முன்னெடுத்ததானது, தமிழ்நாட்டில் 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று, தமிழ் மொழிக்கும், தமிழர் நலனுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாக வளர்ந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
மண்ணோடு
பற்றற்ற ஐரோப்பிய கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் இலங்கை தமிழர்களிடையே உருவான போக்கிற்கு;
தமிழ்நாட்டில் இயற்கை கனி வளங்களை சூறையாடிய 'ஊழல்' கொள்ளையர்களை எதிர்க்காமல், 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு’ கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் உருவான போக்கானது;
தமிழ்நாட்டில் இயற்கை கனி வளங்களை சூறையாடிய 'ஊழல்' கொள்ளையர்களை எதிர்க்காமல், 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடு’ கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் உருவான போக்கானது;
எந்த
அளவுக்கு பங்களிப்பு வழங்கியுள்ளது? என்ற ஆய்விற்கு;
மேலே
குறிப்பிட்ட, தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம்
புரண்ட' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப்
போக்கும்;
1980களில் சங்கமமான
சமூக செயல்நுட்பத்தினை ஆராய்வதும் அவசியமாகி விட்டது.’ (http://tamilsdirection.blogspot.in/2017/02/blog-post_19.html
நம்மைச்
சுற்றி நடக்கும் நல்லவைகளிலும், தீயவைகளிலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு
இருக்கிறது. தீமைகள் புரிந்த குற்றவாளிகளுக்கும் நமக்கும் அளவில் மட்டுமே வேறுபாடு என்பதையும் நாம் மறக்கக் கூடாது.
நிகழ்கால
வரலாற்றில் என்னைக் காயப்படுத்திய சம்பவங்களில் ஆப்கானிஸ்தானில் 2001 மார்ச்சில் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டதும் ஒன்றாகும். மீடியாக்களில் அதை செய்தவர்கள் தாலிபான்
தீவிரவாதிகள் என்று வெளியானது. ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்கா தாலிபன் இயக்கத்தை வளர்த்தது எனக்கு நினைவுக்கு வந்தது. தனது பொருளாதார நலன்களுக்காகவே
அது போன்று அமெரிக்க செயல்பட்டதும், அமெரிக்காவை சொர்க்கபூமியாகக் கருதி அங்கு குடியேறியுள்ள நமது உறவினர்களும், நண்பர்களும்
எனது நினைவுக்கு வந்தார்கள். 'உலகம் எக்கெடு கெட்டால் என்ன? நாமும் நமது குடும்பமும் புத்திசாலிகளாகப்
பிழைப்போம்' என்று வாழும் நாமும், நமது குடும்பமும், நண்பர்களும்
அந்த பாமியான் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டதற்கு மறைமுக குற்றவாளிகள் இல்லையா? என்பது பற்றி நான் ஏற்கனவே பதிவு
செய்துள்ளேன்.
(’ Lesson from Bamiyan Buddha’;
https://veepandi.blogspot.com/2013/01/v-behaviorurldefaultvmlo.html)
https://veepandi.blogspot.com/2013/01/v-behaviorurldefaultvmlo.html)
மேலே
குறிப்பிட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் ஈ.வெ.ரா
அவர்கள் மீதோ, அண்ணா மீதோ குறைகளை கண்டுபிடித்து,
கண்டிக்கும் நோக்கில் மேற்கொள்வது தவறாகும்.
இன்றுள்ள
சீரழிவிலிருந்து தமிழையும், தமிழ்நாட்டையும் மீட்பதில், சுயலாப நோக்கின்றி, உண்மையான சமூக அக்கறையுடன் தீர்வு
நோக்கி, ஆக்கபூர்வமாக பயணிப்பவர்கள் எல்லாம்;
சீரழிவில்
நம் ஒவ்வொருவருக்கும், அளவில் வேறுபட்டாலும், அதில் பங்கிருக்கிறது என்பதை உணர்ந்து:
உணர்ச்சிபூர்வ
இரைச்சலை ஒதுக்கி, அறிவுபூர்வமாக தீர்வுகளை தேடும் நோக்கிலேயே, மேலே குறிப்பிட்ட ஆய்வுகளில்
ஈடுபடுவதானது பலனளிக்கும்.
No comments:
Post a Comment