'வாழ்க்கை பரமபத விளையாட்டில்' முட்டாள்களாகி வரும் 'புத்திசாலிகள்' (1);
மேற்கத்திய மோகமானது, 'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும்' வழியா?
தமிழ்நாட்டில்
மைக்ரோ உலகமானது, மேக்ரோ உலகத்திலிருந்து 'அரசியல் நீக்கம்' (Depoliticize) காரணமாக துண்டிக்கப்பட்டு பயணித்து வருவதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
‘நடுமட்டத்திலும்,
கீழ்மட்டத்திலும் வாழ்பவர்களுக்கு ஒப்பீட்டளவில் இழப்புகளை எளிதில் சந்திக்க முடியும் என்பதால்;
தமிழ்நாட்டில்
'உண்மையான தன்மானத்துடன்' வாழ்பவர்கள் எல்லாம் ஒப்பீட்டளவில் நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் அதிகமாகவும், மேல் மட்டத்தில் குறைவாகவும்
இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின்
'மர்மமான' மறைவானது, மேல் மட்டத்தில் தன்மானக்கேடான
முறையில் வாழ்பவர்களை எல்லாம் மீடியா வெளிச்சத்தில் கொண்டு வந்து, மைக்ரோ உலகத்தில் வாழ்பவர்களிடையே கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கி விட்டதால்;
மேக்ரோ
உலகமானது 'தன்மான மீட்பு' நோக்கி, மாற வேண்டிய நெருக்கடியில்
சிக்கியுள்ளது; மேக்ரோ உலகத்திற்கான மாற்றங்களின் 'முளைகள்' எல்லாம் மைக்ரோ உலகத்திலிருந்து தான் தொடங்கும்;
என்ற
சமுகவியல் விதியை நிரூபிக்கும் வகையில்.’ (http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_28.html
)
டிஜிட்டல்
உலகத்தில், தமிழ்நாட்டில் மேல் மட்டத்தில் மேக்ரோ
உலக சூழலில்;
சமூகத்திற்கு
கேடான வழிகளில் 'அதிவேக பணக்காரர்கள்' ஆனது தெரிந்தும், அவர்களுக்கு வாலாட்டி , இழப்புகளை
'சூதாக' பிறர் பக்கம் தள்ளி, வெளிப்படும் லாபங்களை எல்லாம் மனசாட்சியின்றி அபகரித்து,
'பாதுகாப்பான சொகுசு மண்டிலத்தில்' (Secure Comfort Zone) வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கும்
'புத்திசாலிகள்' (?) மத்தியில்;
தன்மானக்கேடான
முறையில் வாழ்பவர்களும், அத்தகையோர் குடும்பங்களில் அதிகரித்து வரும் சீர்குலைவுகளும், இழப்புகளும்;
மைக்ரோ
உலகில் வாழும் சாமான்யர்களின் பார்வைக்கு உள்ளாகி வருவதானது அதிகரித்து வருகிறது.
'நல்லதுக்கும்,
நல்லவர்களுக்கும் கேடான காலம்' என்ற நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் மாறி
வரும் போக்கில்;
"இப்போதெல்லாம் பண்ணிய
பாவங்களுக்கு தண்டனைகள் எல்லாம், அடுத்த ஜென்மத்திற்கு தள்ளி போகாமல், இந்த ஜென்மத்திலேயே கிடைத்து
விடுகிறது';
என்பது
போன்ற உரையாடல்களும் அவர்கள் மத்தியில் வெளிப்பட்டு வருகிறது.
மனசாட்சியை
அடகு வைத்து, சமூக ஒழுக்க நெறிகளை
'வேஸ்ட்' (Waste) என ஒதுக்கி, 'செல்வாக்கான'
நபர்களுக்கு வாலாட்டியே, 'பாதுகாப்பான சொகுசு மண்டிலத்தில்' 'புத்திசாலிகளாக'(?) வாழ்ந்து வந்தவர்கள் எல்லாம், கேலிக்கும், கிண்டலுக்குமுள்ளான
முட்டாள்களாக வெளிப்படும் படலமும் தொடங்கி விட்டது.
வாழ்க்கை
பரமபதத்தில் ஒரு மனிதரின் வாழ்வில்
முக்கிய கட்டங்களில் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் தென்படும். அதில் அவர் தேர்ந்தெடுக்கும் வழியில்
பயணித்து, அதனால் வரும் ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்தித்தாக வேண்டும்.
உதாரணமாக
இந்திய விடுதலைக்கு முன், 'சென்னை ராஜதானியின்' நிர்வாக தலைமைப் பொறுப்பினை ஏற்குமாறு, ராஜாஜி மூலமாக, காலனி அரசு ஈ.வெ.ரா அவர்களுக்கு தூது
விட்ட போது, அதனை ஏற்கும், மறுக்கும்
இரண்டு வழிகள் ஈ.வெ.ராவிற்கு
தென்பட்டன. அவர் மறுக்கும் வழியை
தேர்ந்தெடுத்து பயணித்தார்.
அது
போலவே, அண்ணாவின் செல்வாக்கில் சிக்கி, 1944இல் நீதிக்கட்சியை ' திராவிடர்
கழகமாக' மாற்றி பயணித்த ஈ.வெ.ரா,
அதன் விளைவாக தமது கட்சியில் 'பொதுவாழ்வு
வியாபார போக்கு' முளை விட்டு வீரியத்துடன்
வளர்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, 1948 துத்துக்குடி மாநாட்டில் அதை வெளிப்படுத்திய ஈ.வெ.ரா அவர்களுக்கு,
என்னென்ன மாற்று வழிகள் இருந்தன? என்பதானது ஆய்விற்குரியதாகும்.
1947 இந்திய விடுதலையை
தி.க தலைவர் பொறுப்பில்
இருந்த ஈ.வெ.ரா
அவர்கள் 'துக்க தினமாக' அறிவித்தபோது, தி.க பொதுச்
செயலாளராக இருந்த அண்ணா அதை 'இன்ப நாளாக'
வரவேற்ற போதே, இருவரும் பிரிந்திருக்க வேண்டாமா? இருவருமே தம் முன் இருந்த
அந்த வழியைத் தேர்ந்தெடுக்காதது ஏன்? மாறாக, 1948 தூத்துக்குடி மாநாட்டிற்குப் பின், அடுத்து நடந்த
மாநாட்டில், அண்ணாவை சாரட் வண்டியில் உட்கார வைத்து, ஈ.வெ.ரா ஊர்வலத்தில் நடந்த அளவுக்கு
'சமரசமாகி', அதுவும் நீடிக்காமல், ஒருவர்
மீது ஒருவர் உணர்ச்சிபூர்வமாக வசை பாடி, 1949இல்
பிரிந்து, அதன் தொடர்விளைவாக 1967இல்
அண்ணா முதல்வரான பின், அதே உணர்ச்சிபூர்வ போக்கில்
சமரசமாகி, பொதுவாழ்விலிருந்து 'முனிவராக ஒதுங்க விரும்புவதாக' அண்ணாவிடம் ஈ.வெ.ரா
அவர்கள் புலம்பியதும்;
மருத்துவமனையில்
தம்மை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியிடம், தமது கட்சியினரின்
பொதுவாழ்வு வியாபாரப் போக்கினை கட்டுப்படுத்த முடியாததால், தாம் ' விரைவில் மரணமடைய விரும்புவதாக' அண்ணா அவரிடம் புலம்பியதும் வெளிப்படுத்தும் கேள்வியாக;
தமது
பொதுவாழ்வு பரமபத விளையாட்டில், சிக்கலான கட்டங்களில், ஈ.வெ.ரா
அவர்களும், அண்ணாவும், சமூகத்திற்கு கேடான விளைவுகள் ஏற்படுத்தும் வழிகளை, தத்தம் 'அறியாமையால்' தேர்ந்தெடுத்து பயணித்தார்களா? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும்.
சமூகத்தின்
மேல் மட்டமான மேக்ரோ உலகத்தில் வாழ்ந்த ஈ.வெ.ரா
தொடர்பான உதாரணத்தைப் போலவே;
மைக்ரோ
உலகத்தில் வாழும் மனிதர்கள் தொடர்பான பல உதாரணங்களை நான்
பார்த்திருக்கிறேன்.
1967க்கு முன்
தமிழ்நாடு எப்படி இருந்தது? என்பது தெரிந்தவர்களுக்கு, கீழ்வரும் சீரழிவுகள்
எவ்வாறு அரங்கேறின? என்பது விளங்கும்.
'புறத்தில்
முற்போக்கு அல்லது ஆன்மீகம்', அகத்தில் 'சுயலாப கணக்குகள்' என்று வாழ்ந்தவர்களின் எண்ணிக்கையானது, 1967இல் அதிகரிக்கத் தொடங்கி,
1969இல் 'வேகமாகி', 1991 முதல் வீரியம் பெற்ற போக்கில்;
1970களின் பிற்பகுதியில்,
'திராவிட ஊழல்' அறிமுகப்படுத்திய ஆங்கிலவழிக்கல்வி வியாபாரம் அரங்கேறியபோது;
சீர்குலையாமல்
இருந்த அரசுப்பள்ளிகளிலும், தனியார்ப் பள்ளிகளிலும் 'தமிழ்வழிக்கல்வி';
உரிய
வசதிகள் இன்றி அவசர கதியில் துவங்கப்பட்ட
தனியார்ப் பள்ளிகளில் 'ஆங்கிலவழிக்கல்வி';
என்ற
இரண்டு வாய்ப்புகள், மேலே குறிப்பிட்ட இரட்டை வேடப் போக்குகள் வளர்ந்து வந்த சமூக சூழலில்
வாழ்ந்த, 'இளம்
பெற்றோர்களின்' பார்வைக்குப்பட்டது.
ஏற்கனவே
'தாய்ப்பால் பைத்தியம்' என்று தாய்மொழிவழிக்கல்வியை இழிவு செய்து ஈ.வெ.ரா
அவர்கள் 'உணர்ச்சிபூர்வமாக' தமிழ்நாட்டை 'பண்படுத்தியிருந்த' (?) சுழலில்;
குழந்தைகளின்
அடிப்படைக்கல்வியானது தாய்மொழிவழிக் கல்வியில் இருந்தால் தான் , குழந்தைகளின் புலனறிதிறன் தொடர்பான மூளை வளர்ச்சி (Cognitive Skills Development) நடைபெறும்
என்ற உலக ஆய்வுகள் எல்லாம்
(http://tamilsdirection.blogspot.sg/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html );
புறக்கணிக்கப்பட்டு,
'புலமை வறட்சி' போக்கில், திராவிடக் கட்சிகளின் செல்வாக்கில் தமிழ்நாடு பயுணித்த சூழலில்;
'வாழ்க்கை
பரமபத விளையாட்டில்' 'படித்த' (?) பெற்றோர்கள் எல்லாம் தமிழ்வழிக்கல்வியை விடுத்து;
ஆங்கிலவழி
நர்சரி பள்ளிகளில் தமது குழந்தைகளை சேர்த்து,
'மம்மி, டாடி' என்ற திரிந்த மேற்கத்திய
பண்பாட்டு சூழலில், 'அமெரிக்க கனவுகளுடன்', 'முழு மூச்சாக', 'தாமும்
தமது குடும்பமும் புத்திசாலித்தனமாக பிழைப்போம்' என்ற இலட்சியத்திற்கு தங்கள்
வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்தார்கள்.
அந்த
போக்கின் விளைவாக, தமிழ்நாட்டிலிருந்து சென்று, இன்று அமெரிக்காவில் வாழும் இளம் பெற்றோர்களின் குழந்தைகளை
பராமரிக்கும் 'சம்பளமில்லாத வேலைக்காரர்களாக', மருமகன் அல்லது மருமகள் தரப்பில் வரும் அவமானங்களை வெளியில் சொல்ல முடியாமல் சகித்துக் கொண்டு வாழும் பெற்றோர்களும்;
இந்தியாவில்
தமக்கு சொத்து, அல்லது 'சம்பளமில்லாத வேலைக்காரர்' என்று எந்த வகையிலும் 'பயன்படாத'
பெற்றோர்களை எல்லாம் ' நியுசென்ஸ்' என்று ஒதுக்கி வாழ்வதும்;
'சுயலாப
நோக்கற்ற மனித உறவுகள்' எல்லாம்
குடும்பங்களில் வற்றி வருவதன் காரணமாக, திருமணமாகி சில வருடங்களிலேயே விவாகரத்துகளும்,
தற்கொலைகளும், ஆதரவற்ற குழந்தைகளும், முதியவர்களும், நம்ப முடியாத அளவுக்கு
எண்ணிக்கையில் அதிகரித்து வருவதும்;
பள்ளி
மாணவர்களிடையேயும் தற்கொலை, கொலை, திருட்டு நோய்கள் இடம் பெற்று வருவதும்;
தமிழ்நாட்டிலேயே
தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாத 'தமிழ் தற்குறி' மாணவர்களின் எண்ணிக்கையானது அதிவேகமாக அதிகரித்து வருவதும்;
இப்படிப்பட்ட
சமூக நோய்கள் எல்லாம் 'பிராமணர், பிராமணரல்லாதோர்', 'கிராமம், நகரம்' என்ற வேறுபாடுகள் இன்றி,
அனைத்து பிரிவு மக்களையும் பாதித்து வருவதும் (‘திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional
Checks) சமூக செயல்நெறி மதகுகள் (2) ; பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி‘ ; http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html
)
மேற்குறிப்பிட்ட
சமூக நோய்களின் வெளிப்பாடாக;
'கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணைகள் கட்டிக் கொள்ள ஆட்சேபணையில்லை' என்று ஆளுங்கட்சியாக இருந்து தமிழக சட்டசபையில் அறிவித்த கட்சியும், ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் தொடங்க அனுமதித்த கட்சியும், எம்.பியாக இருந்து பாராளுமன்றத்தில் அதை கண்டிக்காத கட்சியும், இன்று அந்த பிரச்சினைகள் தொடர்பான போராட்டங்களிலும் முன்னுக்கு நிற்கும் அவலமானது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் நடக்க வாய்ப்பில்லாத கேலிக்கூத்தாகும்.
'கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணைகள் கட்டிக் கொள்ள ஆட்சேபணையில்லை' என்று ஆளுங்கட்சியாக இருந்து தமிழக சட்டசபையில் அறிவித்த கட்சியும், ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் தொடங்க அனுமதித்த கட்சியும், எம்.பியாக இருந்து பாராளுமன்றத்தில் அதை கண்டிக்காத கட்சியும், இன்று அந்த பிரச்சினைகள் தொடர்பான போராட்டங்களிலும் முன்னுக்கு நிற்கும் அவலமானது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் நடக்க வாய்ப்பில்லாத கேலிக்கூத்தாகும்.
மேலே
குறிப்பிட்டவை எல்லாம், தமிழ்நாட்டின் மைக்ரோ
உலகத்தில், பரமபத விளையாட்டில், 'புத்திசாலிகள்' என்று தம்மை கருதிக்கொண்டு பயணித்தவர்கள் எல்லாம் சந்தித்து வரும் விளைவுகளாகும். அந்த புத்திசாலிகள் எல்லாம்
தமது வாழ்க்கை பரமபத விளையாட்டில், தமது குடும்பப் பிள்ளைகளை
எல்லாம், ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளியில் சேர்க்கும் வழியை தேர்ந்தெடுத்து பயணித்து, அதனால் மேலே குறிப்பிட்ட விளைவுகளை
'அனுபவித்து வரும்' முட்டாள்கள் ஆவர்.
புறத்தில்
'பெரியார்' ஆதரவாளராக 'காட்சி' தந்து, தமிழில்
ஆழ்ந்த புலமையின்றி, ஆங்கில அறிவின்றி, சராசரி பொது அறிவில் தமிழ்
இலக்கியங்களை கேலி, கிண்டல் செய்து, தம்மை 'புத்திசாலிகளாக’ கருதி, மனசாட்சியின்றி சமூகக் கேடான வழிகளில் பணம் ஈட்டி, 'திராவிட
அரசியல் கொள்ளையர்களுக்கு 'எடுபிடி'யாக பயணித்தவர்களும், 'அந்த முட்டாள்களின்'
வரிசையில் இடம் பெற்றவர்கள் ஆவர்;
'தாய்மொழி அடையாள இழப்பு' போதைகள் தொடர்பான 'சமூகவியல் ஆய்விற்கான சோதனை மாதிரிகளாகவும்' (Sociology
experimental specimens) வெளிப்பட்டு.
தமிழ்நாட்டில்
தமிழ்வேர் மீட்பு முயற்சிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகின்றன.
பேராசிரியர்,
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற
உயர்பதவிகளில் இருப்பவர்களில் இன்றும் தமது குடும்பப் பிள்ளைகளை
தமிழ்வழி அரசுப்பள்ளிகளில் படிக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் தமிழ்வேர் மீட்சிக்கான நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர்.
மேக்ரோ
உலகத்திற்கான மாற்றங்களின் 'முளைகள்' எல்லாம் மைக்ரோ உலகத்திலிருந்து தான் தொடங்கும்;
என்பதற்கான
அறிகுறிகள் எல்லாம் தமிழ்நாட்டில் வெளிப்பட தொடங்கியுள்ளன; வாழ்க்கை பரமபத விளையாட்டில், மேற்கத்திய மோகமானது, 'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும்' வழி என்பதானது வெட்ட
வெளிச்சமாகி;
அதில் 'முற்போக்கு மேற்கத்திய மோகத்தில்', 'பெரியார்' ஆதரவாளர்களாக வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர், 'தாய்மொழி அடையாள இழப்பு' போதைகள் தொடர்பான சமூகவியல் ஆய்விற்கான சோதனை மாதிரிகளாகவும் (Sociology experimental specimens) வெளிப்பட்டு.
அதில் 'முற்போக்கு மேற்கத்திய மோகத்தில்', 'பெரியார்' ஆதரவாளர்களாக வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர், 'தாய்மொழி அடையாள இழப்பு' போதைகள் தொடர்பான சமூகவியல் ஆய்விற்கான சோதனை மாதிரிகளாகவும் (Sociology experimental specimens) வெளிப்பட்டு.
No comments:
Post a Comment