Saturday, April 14, 2018


சென்னை .பி.எல் கிரிக்கெட் விளையாட்டு எதிர்ப்பானது;


ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் முன்னேற்றமா? பின்னேற்றமா? (1)


சமூகத்தில் நடப்பவைகள் புறத்தில் நல்லவையாக, அல்லது கெட்டவையாக, நடந்தாலும், நல்லவைகளுக்குள்ளும், கெட்டவைகளுக்குள்ளும், சமூகம் பற்றியசிக்னல்களும், இரைச்சல்களும் கலந்தே இருக்கும். நமக்குள்ள அறிவு, அனுபவ அடிப்படைகளில், இரைச்சலை நீக்கி, ‘சிக்னலைஉணர முடியும். அந்த வகையில், அண்மையில் சென்னையில் .பி.எல் கிரிக்கெட் விளையாட்டிற்கு எதிராக நடந்த போராட்டமானது, எனது கவனத்தை ஈர்த்துள்ளது.

'பெரியார்' இயக்கத்தில் நான் இருந்த காலத்தில், 'கிரிக்கெட்' விளையாட்டினை ஆய்வுக்கு உட்படுத்தி எழுதிய கட்டுரையானது, 'கிரிக்கெட் விளையாட்டு எதிர்ப்பின்' முக்கியத்துவம்' என்ற தலைப்பில், தி. நாளேடான 'விடுதலை' முதல் பக்கத்தில் வெளிவந்தது. ஆங்கில வார இதழ்களிலும் 'வாசகர் மடல்' பகுதிகளில், அது தொடர்பாக, எனது மடல்கள் வெளிவந்தன. நெருக்கடி காலத்தில் தான் மேற்கொண்ட எதிர்ப்புகளின் ஊடே, 'கிரிக்கெட் போதை'யின் பாதகத்தை பற்றி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி எழுதியிருந்ததை, அண்மையில் படிக்க நேர்ந்தது.

'சுதேசி' நோக்கில், கிரிக்கெட் எதிர்ப்பில், எனது அளவுக்கு, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் கூட, அந்த காலக்கட்டத்தில், எவரும் இருந்திருப்பார்களா? என்பதும் சந்தேகமே.

எந்த காலக்கட்டத்தில், கிரிக்கெட் தோன்றியது? பிரிட்டன் காலனி அரசாக வளர்ந்த போக்கில், அந்த விளையாட்டும் எவ்வாறு வளர்ந்தது? பின் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விடுதலைக்குப் பின்னும், அந்நாடுகளில் எல்லாம் மேற்கத்திய வழிபாட்டை ஊக்குவிக்கும் 'காலனிமயமாக்கும் மன நோயில்' (Colonization of the mind) சிக்க வைக்கும் பங்கினை, எவ்வாறு கிரிக்கெட் வகிக்கிறது? என்பதை எல்லாம் மேலே குறிப்பிட்ட கட்டுரையில் விளக்கியிருந்தேன்.

கிரிக்கெட்டை 'பார்ப்பான் விளையாட்டு' என்று 1980களில் கேலி பேசிய 'பெரியார்' ஆதரவாளர்களில் பலர், இன்று 'கிரிக்கெட் ரசிகர்களாக மாறியுள்ளார்கள்; 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' நோயிலிருந்து (http://tamilsdirection.blogspot.sg/2017/09/blog-post_20.html) கிரிக்கெட்டானது, எந்த சமூக செயல்நுட்பத்தில் 'விடுதலை' ஆனது, என்ற ஆய்விற்கும் வழி வகுத்து.

தமிழ்நாட்டில் ஆங்கிவழிக்கல்வி குக்கிராமங்கள் வரை பரவி வரும் போக்கில், கிரிக்கெட் போதையும் கூடவே பரவி வருகிறது. பிறர் மத்தியில் தம்மை உயர்த்திக் காட்டும் மனநோயும் அதன் மூலம் வளர்கிறது.

அத்தகையோரெல்லாம், கிரிக்கெட் 'மேட்ச்' காலங்களில், என்னிடம் ''ஸ்கோர்' எவ்வளவு?' என்று கேட்கும் போது, 'கிரிக்கெட் தெரியாது; ஸ்கோர் தெரியாது' என்று சொன்னவுடன், 'வித்தியாசமான மனிதப் பிறவியை' பார்த்தது போல, அவர்களின் 'ரியாக்சன்'(Reaction) இருந்ததுண்டு.

சென்னை .பி.எல் கிரிக்கேட் போட்டியை எதிர்த்து நடந்த போராட்டம் தொடர்பாக, முகநூலில் வெளிப்பட்ட ஒரு கருத்து:

"போராடங்களுக்காக வீதிக்குவருவதற்கான சூழலை, தேவையை,,இப்பெரும் கட்சிகளுக்கு,அவர்களையும் மீறி இவை உண்டாக்குகின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.


சல்லிக்கட்டு போராட்டம் தொடங்கிவைத்த இந்த புதிய சூழல் மேலும் வளர்த்தெடுக்கப்படுவதன் மூலமே, தமிழகத்திற்கான நலன்களை,கட்சி சுயநலன்களைத் தாண்டி அடையமுடியும்."

தி.மு. உள்ளிட்ட பெரிய கட்சிகளை எல்லாம் ஓரங்கட்டி

சல்லிக்கட்டு போராட்டம்’ தொடங்கி வைத்த இந்த புதிய சூழல் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்ற ஆய்விற்கு, .பி.எல் கிரிக்கெட் எதிர்ப்பு போராட்டமானது விடையளித்துள்ளது.

1980களில் தஞ்சை சரபோசி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில், 'National Anti-Cricket Association' என்ற அமைப்பை தொடங்கி, சென்னையில் கிரிக்கெட் நடக்கும் காலங்களில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்துவது பற்றி பரிசீலித்ததுண்டு. எதிர்பார்த்த ஆதரவு கிட்டாததால், அது நிறைவேறவில்லை.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், 'ரசனை' என்பதானது காலனிய ஆட்சியில் என்ன திரிதலுக்கு உள்ளானது? அந்த திரிதலானது, இந்திய விடுதலைக்குப் பின், தமிழ்நாட்டில் .வெ.ரா அவர்கள் முன்னெடுத்த 'தாய்மொழி தமிழ் அடையாள இழப்பு' மூலம் எவ்வாறு தனித்துவமாக தமிழ்நாட்டை சீரழித்து வருகிறது? என்ற ஆய்வுக்கு 'கிரிக்கெட் ரசனை'யானது உதவும்.

கிரிக்கெட் ரசனையானது, இந்தியாவில் மோதலை சந்திக்கத் தொடங்கியுள்ளதும், ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாகும்.

பாகிஸ்தான் நாட்டுடன் மோதல் போக்கில், கிரிக்கெட் ரசனையானது, 'இந்தியர்' என்ற அடையாளம் தொடர்புடையநாட்டுப்பற்றுடன் மோதியது தொடர்பான ஆய்வுக்கு பல ஏற்கனவே நடந்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் (திராவிடர், திராவிட, தமிழர் குழப்பங்களில் சிக்கியுள்ள‌) 'தமிழர்' என்ற அடையாளம் தொடர்புடைய‌தாக சித்தரித்து, காவிரிப்பிரச்சினையை காரணம் காட்டி, கிரிக்கெட் ரசனையுடன் நடந்துள்ள மோதலானது வித்தியாசமானது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை, தமிழ்நாட்டில் எந்த விளையாட்டுப்போட்டிகளையும் நடத்தக்கூடாது, என்று .பி.எல் கிரிக்கெட் எதிர்ப்பு போராட்ட தலைவர்கள் அறிவித்துள்ளனர்

.பி.எல் கிரிக்கெட் போட்டியில் வர்ணனைக்கு ஒப்பந்தமாகியிருந்த ஆர்.ஜே.பாலாஜி, அதிலிருந்து விலகி, வருமான இழப்புக்குள்ளானதை விளக்கியிருந்தார். .பி.எல் போட்டிகள் எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறியதால், விளம்பரம் உள்ளிட்ட வியாபாரங்கள் முதல் தெரு ஓர வியாபாரங்கள் வரை,  எந்தெந்த பிரிவினருக்கு, எவ்வளவு வருமான இழப்பு ஏற்பட்டது? என்ற ஆய்வுகள் மீடியாவில் வெளிவராவிட்டாலும், வருமான இழப்பிற்கு உள்ளானவர்களின் சாபங்களை எல்லாம், சீமான், பாரதிராஜா உள்ளிட்ட போராட்ட தலைவர்கள் இயற்கையின் போக்கில் சந்திப்பதை தவிர்க்க முடியுமா? விளையாட்டு ரசனைக்கு எதிரான போராட்டமானது, அத்துடன் நிற்காமல், காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை, தமிழ்நாட்டில் திரைப்படங்கள் திரையிடக்கூடாது என்று போராடுவார்களா? இல்லையென்றால், காவிரிப்பிரச்சினைக்கு விளையாட்டு ரசனையை மட்டும் பாரபட்சமாக எதிர்த்தது நேர்மையாகுமா?

பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் ஊறு விளைவிக்காமல், ஆனால் அரசே அடிபணியும் அளவுக்கு, .வெ.ரா அவர்கள் தலைமையில் நடந்த 1938 இந்தி எதிர்ப்பு போராட்டமானது, இந்தியாவிற்கே வழிகாட்டி ஆகும்.

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மறுபதிப்பாக, 2018 மகாராட்டிர மாநில விவசாயிகள் போராட்டமும், பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் சேதமின்றி, பிரமிக்கும் வெற்றியில் முடிந்துள்ளது. (https://en.wikipedia.org/wiki/Kisan_Long_March,_Maharashtra )

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பாணியிலிருந்து தடம் புரண்டு, .வெ.ரா அவர்களால் கண்டிக்கப்பட்ட 'காலித்தன, சண்டித்தன' போராட்டங்கள் மூலம், பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் கேடான போராட்டங்களை முன்னெடுத்து, .பி.எல் கிரிக்கெட் எதிர்ப்பு  போராட்டமானது 'பின்னேறியுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக:

கவர்னர் கையெழுத்திட்டு சட்டம் நிறைவேறிவிட்டது. மாணவர்கள் போராட்டம் சரித்திரம் படைத்து விட்டது. ஆனால் அதைக் கொண்டாட முடியாமல் போராட்டம் கலவரத்தில் முடிந்தது மனதை வலிக்கச் செய்கிறது. கடைசி நாள் வரை அமைதியாக இருந்த மாணவர்கள் எப்படி வன்முறையில் ஈடுபடுவார்கள்? போலீசார் நினைத்திருந்தால் முதல் நாளிலேயே மெரினாவில் கூடவிடாமல் போராட்டக்காரர்களை அடித்து விரட்டி இருக்க முடியும். அவர்கள் கடைசி நாள் வரை பாதுகாப்பு அளித்தனர். கலவரத்துக்கு காரணம் யார்? என்பது மர்மமாக இருக்கிறது." என்ற நடிகர் ராகவா லாரன்ஸின் கருத்தை குறிப்பிட்டு:

"போராட்டத்தின் ஊடே, எது தீர்வு? என்று வழிகாட்டும் நம்பகத்தன்மையுள்ள குழு தலைமை உருவாகியிருந்தால், போராட்டத்தின் முடிவில் வன்முறை வெடித்திருக்குமா? அவ்வாறு குழு தலைமை உருவாக இருந்த வாய்ப்பானது, 'சுயலாப அரசியல்' நோக்கில் ஊடுருவிய சக்திகள் மூலம் சிதைக்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு விடை காணாமல், அடுத்து இது போன்று அரங்கேறும் போராட்டமும் வெற்றி பெற வாய்ப்பில்லை." என்று எனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2017/01/blog-post_27.html

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தினை 1938 இந்தி எதிர்ப்பு போராட்ட பாணியில்  உலகே வியக்கும் அளவுக்கு முன்னெடுக்க முக்கிய பங்கு வகித்த; (‘1938  -  1965  -   2017’; http://tamilsdirection.blogspot.sg/2017/01/1938-1965.html )

 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி, ராகவா லாரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி போன்றவர்கள் எல்லாம், .பி.எல் கிரிக்கெட் எதிர்ப்பு போராட்டத்தில் ஏன் அந்த அளவுக்கு பங்கு வகிக்கவில்லை?

இந்தியாவில் புதிய வியாபார வேலை வாய்ப்புகளை பெருக்கவும், அதில் தமிழ்நாடு பலன் பெறவும், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சியால் சென்னையில் நடந்த பாதுகாப்பு கண்காட்சியை, அறிவுள்ள தமிழர்கள் எல்லாம் வரவேற்பார்கள். (http://www.newindianexpress.com/nation/2018/apr/09/defexpo-2018-us-aerospace-giants-target-iafs-multi-role-combat-aircraft-deal-1798924.html )

ஆனால் .பி.எல் கிரிக்கெட் எதிர்ப்பு போராட்ட தலைவர்களில் ஒருவர், அபத்தமாக பேசுவதற்கு இலக்கணமாகும் வகையில், கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில், ராணுவ கண்காட்சி நடக்கிறது. அதற்காக, எடுத்து வரப்பட்டுள்ள ராணுவ தளவாடங்களை, திருப்பி எடுத்துச் செல்லப் போவதில்லை. அவற்றை, தமிழக மக்களுக்கு எதிராக திருப்புவர். அந்த யுத்தத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.” - சினிமா இயக்குநர் கவுதமன் (http://www.dinamalar.com/news_detail.asp?id=1998410 )

இவ்வாறு அபத்தமாக தமிழ்நாட்டில் பேசுவதற்கு, 'பிரபாகரன் போதை' எந்த அளவுக்கு பங்களித்துள்ளது? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

.பி.எல் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களில் பெரும்பாலோர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை, அறிவுபூர்வ விமர்சன பார்வையின்றி, உணர்ச்சிபூர்வமாக பாராட்டி வருபவர்கள் ஆவர். (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html ) 

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின், பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தினை உணர்ச்சிபூர்வ போக்கில் பாராட்டுபவர்கள் எல்லாம்


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தமிழ்நாட்டில் 'சாகும் வரை உண்ணாவிரதம்' என்ற 'காந்தி வழி' போராட்டத்தினை  ஏன்மேற்கொண்டார்

என்றதகவலை அறிவுபூர்வ ஆய்வுக்கு உட்படுத்துவார்களா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment