'அந்த ஓட்டப்பந்தயப் புலி'யின் வாலைப் பிடித்த 'முட்டாள்' புத்திசாலிகள்' (3)
நாட்டின் ஊழல் பற்றி சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும் நமக்குள்ள யோக்கியதை?
‘மக்கள்
தன்மானமிழந்தால், ஊழல்வாதிகளிடம் அரசு சிக்கி, அந்த
நாடு அழியும்; மக்களுக்கு தன்மானம் வந்தால், அந்த ஊழல்வாதிகள் ஒழிவார்கள்;
ஊழல் சொத்துக்கள் பறிமுதல் மூலம் அந்த நாடும் வளரும்;
என்பதை
மலேசியா இன்று நிரூபிக்கிறது; நாளை தமிழ்நாடு நிரூபிக்கும்;
தமிழ்நாட்டிலும் தன்மானம் இருக்கிறது என்று.’ (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_10.html
)
'நாளை
தமிழ்நாடு நிரூபிக்கும்; தமிழ்நாட்டிலும் தன்மானம் இருக்கிறது என்று'
என்று
எந்த துணிச்சலில் நான் கணித்தேன்? என்பதற்கான
விளக்கத்திற்கு முன்;
ஒரு
நாட்டில் வாழும் தன்மானமுள்ளவர்கள் எப்படி இருக்க வேண்டும்? என்ற கேள்விக்கான விடையை,
கீழ்வரும் செய்தி தந்துள்ளது. அந்த செய்தியின் பின்னணி
வருமாறு.
‘மலேசியாவில் தேர்தல் முடிவு கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி, ஆளுங்கட்சி தோற்று, எதிர்க்கட்சிகளின் கூட்டணித்தலைவரான மகாதீர் முகம்மது, மலேசியாவின் பிரதமராகியுள்ளார். 93 வயதுள்ள அவர், மாடிப்படிகளில் துணையின்றி நடக்கும், அவரின் சுறுசுறுப்பானது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அதை விட முக்கியமாக,
கணக்கில் அடங்காத ஊழல் சொத்துக்களை எல்லாம்
சட்டபூர்வமாக அவரின் அரசு கையகப்படுத்தி வருவதானது,
தமிழ்நாட்டிலும் அது மலேசியாவைப் போலவே,
எதிர்பாராத வகையில் விரைவில் அரங்கேறும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது.
(https://en.wikipedia.org/wiki/1Malaysia_Development_Berhad_scandal & ‘the Malaysian government first seized an
object or item allegedly bought using 1MDB-related funds, as identified by the
United States Department of Justice (DoJ). The Malaysian government secured
ownership of the luxury yacht through the mutual legal assistance treaties
between Malaysia, Indonesia and the US.’;
https://www.straitstimes.com/asia/se-asia/seizure-of-equanimity-a-turning-point-in-1mdb-saga-the-star-columnist
)
2018 மே மாதத்திற்கு
முன், மேலே குறிப்பிட்டவை எல்லாம்
மலேசியாவில் நடக்கும் என்று, மலேசியாவில் எவரும் கற்பனை கூட செய்திருக்க முடியாது.’
(http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_10.html
)
மேலே
குறிப்பிட்டவாறு, மலேசிய அரசால் கைப்பற்றப்பட்ட, ஊழல் பணத்தில் வாங்கிய
அதீத விலையுள்ள உல்லாசக் கப்பல் மலேசியாவில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதனை உள்ளே சென்று பார்வையிட்ட மலேசிய நிதி அமைச்சர் லிம்
குவான் இங்க் கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
"கனவில் கூட
காணமுடியாதவாறு ஆடம்பரமாக உள்ள அந்த கப்பலைப்
பார்த்த போது, மிகவும் சோகமடைந்தேன்; ஏனெனில் மக்களின் பணத்தைக் களவாடி அது வாங்கப்பட்டது என்பதை
உணர்ந்து.
அந்த
பணத்தைக் கொண்டு எவ்வளவு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியிருக்க முடியும்? என்று உணர்ந்தபோது, நான் கோபப்பட்டேன்." (‘Finance Minister Lim Guan Eng
said he felt sad as the yacht and various luxury items inside the vessel were
purchased using the people’s money for personal gain.
“Everything you could ever dream
of is on that yacht, including items that you could never have imagined.
“But when I realised all those
things were bought using the people’s money, I felt sad and angry because (the
money) could have been used for the people’s benefit,” he said. (https://sg.news.yahoo.com/felt-sad-angry-says-guan-092129542.html
)
நாட்டில்
நடக்கும் அநீதிகளைக் கண்டு, சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும் ஒரு யோக்கியதை வேண்டும்.
யோக்கியதை இல்லாதவர்கள் எல்லாம் அவ்வாறு மீடியா வெளிச்சத்துடன் 'நடிக்க' அனுமதிப்பதானது, அந்த நாட்டிற்கே இன்னும்
அதிக கெடுதலை விளைவிக்கும்;
என்பதை
அறிந்த நான், மேலே குறிப்பிட்ட கருத்தை
வெளியிட்ட மலேசிய நிதி அமைச்சர் லிம்
குவான் இங்கின் யோக்கியதை என்ன? என்று ஆராய்ந்தேன்.
மலாக்கா
முதலமைச்சரால் கற்பழிக்கப்பட்ட 15 வயது பெண் கைது
செய்யப்பட்டு, முதலமைச்சர் மீது சட்ட நடவடிக்கை
இல்லாததைக் கண்டித்து லிம் குவான் இங்
எழுதினார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டு
(http://home.clara.net/heureka/sunrise/lim-guan.htm
), ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவித்தார். பின் 5 வருடங்கள் தேர்தலில் நிற்க அனுமதி மறுக்கப்பட்டார். மனம் தளராமல் அரசியலில்
பயணித்து, 2008 தேர்தலில் தமது கட்சிக்கு அதீத
இடங்களில் வெற்றி பெற வைத்து, பினாங்க்
மாநில முதல்வரானார். ஆனால் அப்போது மலேசியாவின் மத்திய அரசினை ஆண்ட கட்சிக்கு, இவர்
எதிர்க்கட்சி முதல்வராக இருந்ததால், சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எனினும் பினாங்க் மாநில அரசில் இருந்த ஊழலை ஒழித்து, மாநில
அரசின் கடன்களை எல்லாம் அடைத்து, வளர்ச்சியிலும், வேலைவாய்ப்புகளிலும் மலேசியாவின் முன்னணி மாநிலமாக மாற்றினார். அரசுத்திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்தகாரர்களுக்கு எதிராக மக்களிடம் 2 வாரங்களுக்குள் ஆட்சேபணை வராத பின் தான்,
ஒப்பந்தகாரர்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டார்கள். ஆட்சியில் 'திறமை, பொறுப்பேற்பு, வெளிப்படை' (Competency,
Accountability and Transparency (CAT) in governance) என்பதை
தாரக மந்திரமாக செயல்படுத்தினார்.' (https://en.wikipedia.org/wiki/Lim_Guan_Eng
)
கடந்த
2018 மே தேர்தலுக்குப் பின், மலேசியாவில் அரங்கேறியுள்ள பிரதமர் மஹாதீர் தலைமையில், லிம் குவான் இங்க் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மலாய் மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் சீனர்
லிம் குவான் இங்க் நிதி
அமைச்சரானது, இதுவே முதல் முறையாகும்.
தமிழ்நாட்டில் நாம் போற்றும், பாராட்டும் தலைவர்களின் யோக்கியதையானது, மேலே குறிப்பிட்ட மலேசியாவின் லிம் குவான் இங்கைப் போல இருக்கிறதா? என்ற ஆய்வுக்கு உட்படுத்தி பயணித்திருந்தால், தமிழ்நாட்டில் தமிழர்கள் சீரழிந்து, பிற மாநிலத்தவர், வெளிநாட்டினர் வளர்ச்சி போக்கில், இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்திருக்குமா? (‘பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில்; தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா? வீழ்ந்து வருகிறார்களா?; http://tamilsdirection.blogspot.com/2016/09/1967.html )
மலேசியாவின் லிம் குவான் இங்கைப் போலவே, மத்திய அரசினை விமர்சித்த 'குற்றத்திற்காக' நள்ளிரவில் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்த, இந்திய அளவில் பிரபலமான ஒரே பத்திரிக்கையாளர் குருமூர்த்தி ஆவார். (https://books.google.com.sg/books?id=hDmn6LI_ZDEC&pg=PA88&lpg=PA88&dq=Gurumurthy+arrest+by+cbi&source=bl&ots=tZfTKyts58&sig=jDhXTk15nD2rLZEWdQD_PzkrMm0&hl=en&sa=X&ved=2ahUKEwjcr__TguncAhUVWysKHSYmBUw4FBDoATAFegQIBRAB#v=onepage&q=Gurumurthy%20arrest%20by%20cbi&f=false )
மலேசியாவின் லிம் குவான் இங்கைப் போலவே, மத்திய அரசினை விமர்சித்த 'குற்றத்திற்காக' நள்ளிரவில் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்த, இந்திய அளவில் பிரபலமான ஒரே பத்திரிக்கையாளர் குருமூர்த்தி ஆவார். (https://books.google.com.sg/books?id=hDmn6LI_ZDEC&pg=PA88&lpg=PA88&dq=Gurumurthy+arrest+by+cbi&source=bl&ots=tZfTKyts58&sig=jDhXTk15nD2rLZEWdQD_PzkrMm0&hl=en&sa=X&ved=2ahUKEwjcr__TguncAhUVWysKHSYmBUw4FBDoATAFegQIBRAB#v=onepage&q=Gurumurthy%20arrest%20by%20cbi&f=false )
எனவே லிம் குவான் இங்கை
போலவே, ஊழலை எதிர்த்து சோகமும்,
கோபமும் கொள்ள யோக்கியதை குருமூர்த்திக்கு இருக்கிறது. எனக்கும் இருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் அது சரியா என்று
நான் பணியாற்றிய கல்லூரிகளில் விசாரித்து தெரிந்து கொள்ளலாம். மாணவராக 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், 1968 வரை நடந்த இந்தி
எதிர்ப்பு போராட்டங்களில் (தி.மு.க
அரசு ஆட்சிக்கு வந்து, திருச்சியில் அச்ச்சுறுத்தலுக்கு உள்ளான ஒரே மாணவர் தலைவர்)
கலந்து கொண்டவன் நான்.
நமது மனசாட்சிக்கு உட்பட்டு, நமது யோக்கியதையை தொடர்ந்து மறு ஆய்வுக்குட்படுத்தி வளர்த்து வாழ்வதன் மூலமே, குற்ற உணர்வின்றி, இன்பங்களை மட்டுமல்ல, துன்பங்களையும் 'அனுபவித்து' வாழ முடியும் ( http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html & http://tamilsdirection.blogspot.com/2016/02/style-definitions-table.html); தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கும் பங்களித்து.
நமது மனசாட்சிக்கு உட்பட்டு, நமது யோக்கியதையை தொடர்ந்து மறு ஆய்வுக்குட்படுத்தி வளர்த்து வாழ்வதன் மூலமே, குற்ற உணர்வின்றி, இன்பங்களை மட்டுமல்ல, துன்பங்களையும் 'அனுபவித்து' வாழ முடியும் ( http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html & http://tamilsdirection.blogspot.com/2016/02/style-definitions-table.html); தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கும் பங்களித்து.
மாணவர்
பருவம் முதல் பணியாற்றும் நிகழ்காலம் வரை, அநீதியை எதிர்த்து
எந்த போராட்டத்திலும் ஈடுபடாமல், 'பாதுகாப்பு மண்டிலத்தில்' (Comfort Zone) வாழ்பவர்களில் சிலர்,
தமக்கு அந்த யோக்கியதை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, அத்தோடு 'அடங்காமல்', மீடியா வெளிச்சத்தில் முன்னணியில் இருப்பதை, இனியும் அனுமதிக்கலாமா?
அந்த
போக்கானது எப்போது, எப்படி தமிழ்நாட்டில் அரங்கேறியது?
தமிழ்நாட்டில்
ஈ.வெ.ரா, உ.வெ.சா போன்று
எல்லோரின் பெயர்களிலும் முதல் எழுத்தானது, அவர்களின் சொந்த ஊரின் முதல் எழுத்தாக இருந்தது. அத்தகையோர் மேக்ரோ உலகில் பிரபலமான பின்னர், ஆர்வமுள்ளவர்கள் அவர்களின் சொந்த ஊரில், மைக்ரோ உலகத்தில், அவர்களின் யோக்கியதையை விசாரித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் இருந்தன. அதாவது
மேக்ரோ உலகில் வாழ்ந்த பிரபலங்களின், சொந்த ஊர், மைக்ரோ உலக
நல்ல/கெட்ட யோக்கியதையை விசாரித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அப்போது இருந்தன.
இன்று
தமிழ்நாட்டில் உள்ளவர்களின் பெயர்களில்,அவர்களின் சொந்த ஊரின் முதல் எழுத்து இல்லை. தமது சொந்த ஊரை
விட்டு, நகரங்களிலும், பெருநகரங்களிலும் வாழ்பவர்களின் சொந்த ஊரின் யோக்கியதையை விசாரித்து அறிவதற்கு அது தடையாகும். அது
போலவே, பணிமாற்றத்திற்கு உள்ளானவர்களின், கடந்த கால பணி யோக்கியதையையும்
எளிதில் அறிய முடியாது. சொந்த
ஊரில், வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில், 'சுயலாப கள்வராக' வாழ்ந்து கொண்டு, நல்ல பேர் எடுக்க
முடியாது. அதுவே மைக்ரோ உலகத்தின் தனித்தன்மையாகும்; இன்றும் கூட
அங்கு
கெட்ட பேர் எடுத்து, பின்
நகரங்களுக்கும், பெரு நகரங்களுக்கும் சென்று,
'பகுத்தறிவு, புரட்சி, முற்போக்கு, மனித உரிமை, ஆன்மீகம்'
போன்ற ஏதாவது ஒன்றில் பிரபலமாகி, மேக்ரோ உலக மனிதராக இன்று
நம்மிடையே பலர் வலம் வந்து
கொண்டிருக்கிறார்கள்; மீடியா வெளிச்சத்தின் துணையுடன். அவர்களின் மைக்ரோ உலக தீய யோக்கியதையை,
மேக்ரோ உலகின் கவனத்திற்கு கொண்டுவர விடாமல், மீடியா வெளிச்சம் உள்ளிட்ட அவர்களின் செல்வாக்கு தடைகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் நடுத்தட்டு, ஏழைகளாக வாழ்ந்தவர்களில், நமக்கு தெரிந்தவர்கள் ஊழல் வழிகளில் 'வளர்ந்து', இன்று 'ஆடம்பர வீடுகள்' அதீத விலை கார்களுடன் வலம் வருகிறார்கள்; வெளியில் தெரிந்தும், தெரியாமலும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சொத்துக்கள், வியாபார முதலீடுகள், எஸ்டேட்டுகள், தீவுகள், என வாங்கி குவித்து வருவதும் ஊடகங்களில் வெளிவருகின்றன.
தமிழ்நாட்டில் நடுத்தட்டு, ஏழைகளாக வாழ்ந்தவர்களில், நமக்கு தெரிந்தவர்கள் ஊழல் வழிகளில் 'வளர்ந்து', இன்று 'ஆடம்பர வீடுகள்' அதீத விலை கார்களுடன் வலம் வருகிறார்கள்; வெளியில் தெரிந்தும், தெரியாமலும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சொத்துக்கள், வியாபார முதலீடுகள், எஸ்டேட்டுகள், தீவுகள், என வாங்கி குவித்து வருவதும் ஊடகங்களில் வெளிவருகின்றன.
‘அரசியல்
பொதுவாழ்வு வியாபாரிகளுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்பு கொண்டு, பலன்கள் அனுபவிக்கும் ' 'வாழ்வியல் புத்திசாலிகள்' ஈட்டிய செல்வத்தில் மயங்கி, அவர்களுடன் நெருக்கமானவர்களும், அதே நோயில் சிக்கி
வருவதும், எனது சமூகவியல் ஆய்வில்
வெளிப்பட்டுள்ளது. அது போன்ற 'வாழ்வியல்
புத்திசாலிகள்'(?), முள்ளி வாய்க்கால் அழிவின் போது, தானோ, தனது குடும்பமோ, பிள்ளைகளோ
வீதியில் இறங்கி போராடாமல், பாதுகாப்பான மேல்தட்டு நிலையில் வாழ்ந்து கொண்டு, வீதியில் இறங்கி அதற்காக போராடாத தமிழ்நாட்டு தமிழர்களை, 'தமிழ் இன உணர்வு அற்றவர்கள்'
என்று குறை சொல்லியதும், எனது
சமூகவியல் ஆய்விற்கான முக்கிய சிக்னல் ஆனது. (http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_11.html
)
நேர்மையான சுயசம்பாத்தியம் இன்றி, சமூக ஒட்டுண்ணிகளாக 'புரட்சி, முற்போக்கு' என்ற பெயரில், தமிழ்நாட்டில் பலர் வாழ்கிறார்கள்; '24 காரட் யோக்கியர்கள்' போல, 'கடவுளால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் போல', தமிழ்நாட்டில் வாழ்பவர்களில் 'யார் யோக்கியர்? யார் தமிழர்?' என்று பிரகடனப்படுத்திக் கொண்டு; தமது வருமான மூலங்களை எல்லாம் 'இருட்டில்' வைத்துக் கொண்டு; தமது உணர்ச்சிபூர்வ பேச்சுக்கள் மூலமாக, அறிவுபூர்வ விவாதங்களை ஓரங்கட்டி, தப்பித்துக் கொண்டு.
மேக்ரோ உலகில் மேற்குறிப்பிட்டது போன்று வெளிப்பட்டு வரும் 'இரட்டை வேட' சிக்னல்களும் ;
மேக்ரோ உலகில் மேற்குறிப்பிட்டது போன்று வெளிப்பட்டு வரும் 'இரட்டை வேட' சிக்னல்களும் ;
மேக்ரோ
உலக 'அமாவாசைகளை' கேலியாக பார்க்கும் மைக்ரோ உலகில், 'தமிழ்நாட்டிலும் தன்மானம் இருக்கிறது' என்று வெளிப்பட்டு வரும் சிக்னல்களும்;
2018 மே மாதத்திற்கு
முன்பிருந்த மலேசியாவாக தமிழ்நாடு பயணிக்கிறதா, சில வேறுபாடுகளுடன்?
என்று
ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அதிசயிக்கலாம்.
No comments:
Post a Comment