Tuesday, August 21, 2018

உணர்ச்சிபூர்வ இருட்டில் மறைக்கப்பட்ட உண்மைகள்:



கர்நாடக இசையில் கிறித்துவப் பாடல்களைப் பாடுவதற்கு எதிர்ப்பா?



கர்நாடக இசையில் கிறித்துவப் பாடல்களைப் பாடும் இந்து கர்நாடக இசைக்கலைஞர்களை, தற்போது 'இந்துத்வா' ஆதரவாளர்கள் எதிர்த்து வரும் பிரச்சினை தொடர்பாக

'ராகத்திற்கு மதம் கிடையாது. இந்துக்கள் மட்டுமே கர்நாடக இசையில் பாட வேண்டும்; என்பது பிழையாகும்' என்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

“The very premise of this outrage is flawed and shows the so-called saviours’ avarice in passing off one aspect of Carnatic music as its entirety: that only Hindus are allowed to sing Carnatic music because it is an art form of bhakti propagated by the trinity of Thyagaraja, Dikshitar and Shyama Shastri. What about the countless other composers? It isn’t only words that make up a song or a concert. There are secular elements that allow music to be adapted to various faiths – a raga has no religion, nor does a tani avartanam. A handful of people cannot decide who can lay claim to the shared heritage of a land.” (https://thewire.in/communalism/in-tamil-nadu-non-hindu-carnatic-musicians-are-being-othered )

மேலே குறிப்பிட்ட வாதத்தில் இருளில் மறைந்த சில உண்மைகள், கீழ்வரும் கட்டுரை மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

‘The Carnatic Christian Conundrum: It’s An Alarming Case Of Cultural Appropriation’; https://swarajyamag.com/ideas/the-carnatic-christian-conundrum-its-an-alarming-case-of-cultural-appropriation
 
பிரபல கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராம் 2008‍இல் ஏசுவையும், மேரியையும் போற்றி கர்நாடக இசை ஆல்பங்கள் வெளியிட்டார். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில், கர்நாடக இசையில், 'காப்பியடிக்கப்படாமல்' படைப்பாற்றலுடன் உருவான பாடல்கள் (original Christian songs set in Carnatic music)  அவையாகும். தற்போது உருவாகியுள்ள சர்ச்சையில், கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவராகிய தியாகராஜரின் பாடல் வரிகளை காப்பியடித்து, அந்த வரிகளில் இந்து கடவுளான 'ராமா' என்ற சொல்லினை நீக்கி விட்டு, கிறித்துவக்கடவுளின் பெயரைப் பயன்படுத்தியுள்ளது இசை நேர்மையாகுமா? அதனை இருளில் மறைத்து, மேலே முதலில் குறிப்பிட்டுள்ள கட்டுரையானது வெளிவந்துள்ளது சரியா?

கர்நாடக இசையில் 'காப்பியடிக்கப்படாமல்' படைப்பாற்றலுடன் உருவான பாடல்களை (original Christian songs set in Carnatic music) கர்நாடக இசை பயின்ற கிறித்துவர்கள் பாடுவதை, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டு யாரும் எதிர்க்கவில்லை. அவ்வாறு உருவான பாடல்கள் தொடர்பாக;

இந்து கடவுள்கள் தொடர்பான கர்நாடக இசைப்பாடல்களை கிறித்துவப் பாடகர்கள் பாடுவதும், கிறித்துவக் கடவுள்கள் தொடர்பான கர்நாடக இசைப்பாடல்களை இந்து பாடகர்கள் பாடுவதும், காசுக்காகப் பாடினார்களா? இசை ஆன்ம திருப்திக்காக பாடினார்களா? என்பது அவரவர் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.

அதே நேரத்தில், கிறித்துவ பாடல்களில் உள்ள கிறித்துவ கடவுளின் பெயருக்குப் பதிலாக இந்து கடவுளின் பெயரை நுழைத்து பாடுவதும், இந்து பாடல்களில் உள்ள இந்து கடவுளின் பெயருக்குப் பதிலாக கிறித்துவகடவுளின் பெயரை நுழைத்து பாடுவதும், மதநல்லிணக்க விரோதப் போக்காகும்.

பெரிய புராணத்தில், ஆனாயநாயனார் குழல் இசையில் மோகன ராகத்தில் 'நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை இசைத்து, இறைவனோடு ஒன்றி, 'எல்லையில்லா  (infinite) மகிழ்ச்சி' என்றால் என்ன? என்பதை, எனக்கு புரிய வைத்தார். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2447 )

இசையோடு மந்திரத்தை இசைத்து, அந்த கணமே இறைவனோடு ஒன்றி முக்தியடையும் வாய்ப்பானது கிறித்துவ மதத்தில் கிடையாது. ஆனாலும், இந்து கடவுள்களுக்கான கர்நாடக இசை வகைகளை 'காப்பியடித்து';

'ஏசு சுப்ரபாதம்', 'கிறிஸ்து பாகவதம்', 'ஏசு சகஸ்ரநாமம்' வெளிவந்துள்ளன. இந்து கடவுள்களுக்கு பாத யாத்திரை, கிரிவலம் மேற்கொள்ளப்படுவது போல, கிறித்துவ கடவுள்களுக்கும் மேற்கொள்ளப்படுவதும், வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆக தமிழ்நாட்டில் கிறித்துவமதமானது இந்து மதத்தின் வழிபாட்டு முறைகளையும், இசை, நடனவகைகளையும் காப்பியடித்து வளர்கின்றன.

அது போல ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் அங்குள்ள மக்களின் மதங்களில் உள்ள வழிபாட்டு முறைகளையும், இசை, நடனவகைகளையும் காப்பியடித்து வளர்கின்ற போக்கு இருந்தாலும் வியப்பில்லை. இந்த போக்கானது, கிறித்து மதத்தின் ஆன்ம உயிருக்கு (Christian Spirit) ஆபத்தாகும் வாய்ப்புகளும் இருக்கின்றன; கீழ்வரும் போக்கில்

மேற்கத்திய உலகில் பக்தர்கள் இன்றி, கிறித்து ஆலயங்கள் மூடப்பட்டு வருகின்றன; இடிக்கப்பட்டு வேறு கட்டிடங்கள் ஆகி வருகின்றன. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் ஏற்றுமதி செய்யப்படும் அளவுக்கு, மேற்கத்திய நாடுகளில் உள்ள கிறித்துவர்களில் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் உற்பத்தியாவதானது, வெகு வேகமாக குறைந்து வருகின்றது. வரும் காலத்தில் போப்பும், கார்டினல்களும், பெரும்பாலும் ஆசிய, ஆப்பிரிக்கா நாடுளில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் சொந்த மதங்களில் இருந்து, காப்பியடித்து உருவான 'கலவையாக' கிறித்துவ மதம் இருக்கும். கிறித்துவ மதத்திற்கான தனித்துவஆன்ம உயிருக்கு (Christian Spirit) அதை விட பெரிய ஆபத்து இருக்க முடியாது.

ஒரு மனிதர் தமது மதம் உயர்ந்தது என்ற ஆணவத்தோடு, அடுத்த மனிதரின் மதத்தினை தாழ்வாக கருதி, மதமாற்றம் செய்ய முயல்வதானது, ஒரு மனிதருக்கான நாகரீக வரை எல்லைகளை (limitations) மீறிய அநாகரீக செயலாகும். அதிலும் அடுத்த மனிதரின் ஏழ்மையைப் பயன்படுத்தி அந்த முயற்சியில் ஈடுபடுவதானது, அந்த அநாகரீகத்தின் உச்சமாகும். அந்த நோக்கத்தை உள்மறைத்து (Hidden Agenda), அடுத்த மதத்தின் தனித்துவமான இசை, நடனம் உள்ளிட்ட கலைகளை அபகரிக்க முயல்வதோடு நில்லாமல், மனித உரிமை, நாகரீகம் என்று அதனை நியாயப்படுத்த முயல்வதானது, கண்டிக்கத்தக்கதாகும். 

‘தமிழ்நாட்டில் தமிழின் பெயரால் 'டிரஸ்ட்' ஆரம்பித்து, அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபடும் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் மேலே குறிப்பிட்ட நபர்கள் எல்லாம் பங்கேற்று, அந்த மோசடியை கெளரவமாக மறைக்க உதவும் கெளரவ முகமூடிகளாக செயல்படுவதானது, தமிழுக்கு கேடாகாதா? (‘The payments to a trust’s beneficiaries could be used in the laundering process because these payments do not have to be justified as a payment for a transfer of assets or service rendered.’; https://www.capgemini.com/wp-content/uploads/2017/07/The_Growing_Threat_of_Money_Laundering.pdf & https://www.indiatoday.in/opinion/mc-rajan/story/unmasking-of-a-literary-heir-87453-2010-12-21 ) என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_17.html ) 'அந்த கெளரவ முகமூடிகள்' வரிசையில் கர்நாடக இசையும் இடம் பெற்று வருகிறதா? அந்த போக்குடன் பரிமாற்ற நட்புடன், திராவிட அரசியல் கொள்ளையர்களின் கெளரவ முகமூடிகளாக 'தமிழ், பகுத்தறிவு, சமூக நீதி, இந்துத்வா எதிர்ப்பு' போன்றவை எல்லாம் வெளிப்படுகின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இந்து மதத்தில் சாதி உயர்வு/தாழ்வு, தீண்டாமை ஆகிய சமூக நோய்கள் எல்லாம் காலனி ஆட்சியில் அறிமுகமானவை;

என்பது தொடர்பான சான்றுகளை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன். (‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?’; http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

அந்த சமூக நோய்களை காரணம் காட்டி, மதமாற்றங்களை ஊக்குவித்த கிறித்துவ மதத்தில், தமிழ்நாட்டில் அந்த நோய்களின் அடிப்படைகளிலான சாதி மோதல்களில், பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் சிக்கி, கிறித்துவ மத அமைப்புகள் விழி பிதுங்கி வருவது உண்மையா? ஆம் எனில்;

'இன்னொரு நாட்டினை அடிமைப்படுத்தும் நாடானது, தன்னைத்தானே அடிமையாக்கிக் கொள்ளும்

என்று காரல் மார்க்ஸ் 'அயர்லாந்தின் விடுதலை' தொடர்பாக எழுதிய கட்டுரையானது, எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

இன்று பிரிட்டனில் குடியேறிய ஆசிய, ஆப்பிரிக்க மக்களின் செல்வ, செல்வாக்கு வளர்ச்சியைக் கண்டு, அங்கு வாழும் வெள்ளையர்களில் பலர் பொறாமையிலும், கோபத்திலும் சிக்கி வருகிறார்களா? அங்கு அரசியலில் நிறவெறிக் கட்சிகள் எல்லாம், ஐரோப்பாவில் உள்ளதைப் போலவே, வலிமையாகி வருகின்றனவா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து வியப்படையலாம்.

தமிழ்நாட்டில் கிறித்துவமதமானது இந்து மதத்தின் வழிபாட்டு முறைகளையும், இசைநடனவகைகளையும் காப்பியடித்து வளர முனையும் போக்கின் மூலமாக‌, கிறித்துவ மதத்தின் ஆன்ம உயிருக்கு (Christian Spirit) ஆபத்தாகும் வாய்ப்பினை தவிர்க்க முடியாது.

அந்த ஆபத்தினை எதிர்க்கும் கிறித்துவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களின் கிறித்துவ ஆன்ம உயிர் பாதுகாப்பு முயற்சிகள் எல்லாம் அச்சுறுத்தல்கள் மூலமாக ஒடுக்கப்படுவதையும் நான் அறிவேன்

கிறித்துவர்களிலும் முஸ்லீம்களிலும் அது போன்ற நேர்மையாளர்கள் எல்லாம், தத்தம் மதங்களில் உள்ள சொத்துக்கள் எல்லாம் ஊழல்பெரும்பசிக்கு இரையாவதை எதிர்த்தும் போராடி வருகிறார்கள்; இந்துக்களில் நேர்மையான பக்தர்கள் எல்லாம், இந்து கோவில்களின் சொத்துக்கள் அது போல ஊழல்பெரும்பசிக்கு இரையாவதை எதிர்த்து போராடி வருவதைப் போலவே

கர்நாடக இசையாக இருந்தாலும், கோவில் சொத்துகளாக இருந்தாலும், நேர்மையற்ற போக்குகளை எதிர்ப்பதில், நேர்மையாக வாழும் இந்துக்களும், முஸ்லீம்களும், கிறித்துவர்களும் ஓன்றுபட்டு போராடினால் தான், அந்தந்த மதங்களில் உள்ள நேர்மையற்ற ஊழல் பேர்வழிகள் எல்லாம் அடங்குவார்கள்.

No comments:

Post a Comment