Saturday, August 11, 2018

'அந்த ஓட்டப்பந்தயப் புலி'யின் வாலைப் பிடித்த 'முட்டாள்' புத்திசாலிகள்' (2)



தமிழ்நாட்டின் மீட்சிக்கு மலேசியா வழி காட்டுகிறதா?


'செத்தும் கொடுத்தார் சீதக்காதி' என்ற கதையைப் போலவே, தி.மு. தலைவர் கருணாநிதியின் மரணத்தின் மூலமாக, மெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் எழுப்புவதற்கு இருந்த 'வழக்கு தடைகள்' எல்லாம் நீங்கி விட்டன

அந்த வழக்குகளைத் தொடர்ந்தவர்கள் எல்லாம் உண்மையான பொதுநல அக்கறையில் தொடர்ந்தார்களா? அல்லது ஜெயலலிதா எதிர்ப்பு அரசியலுக்காக தொடர்ந்தார்களா? என்பது அவ்வாறு தொடர்ந்தவர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம். எப்படியிருந்தாலும் இனிமேல் எவரும் அது போன்ற வழக்கு தொடர்ந்தால், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி கல்லறைகள் அகற்றுப்பட்டு, புதைத்த பெட்டிகள் எல்லாம் காந்தி மண்டப வளாகத்தில் அரசு மரியாதையுடன் மீண்டும் புதைக்கப்படுதல், எதிர்காலத்தில் நடந்தால் வியப்பில்லை: ரஷ்யாவில் ஸ்டாலின் கல்லறைக்கு நடந்ததைப் போல. (https://www.nytimes.com/1970/06/21/archives/bust-placed-on-stalin-gravel-behind-lenin-mausoleum.html?sq=lenin%2520mausoleum&scp=14&st=cse )

சுற்றுலாப்பயணிகளில் பெரும்பாலோர் மத நம்பிக்கை உடையவர்களா? அவர்கள் எல்லாம் கல்லறைகளில் ஆவிகளின் நடமாட்டங்கள் இருப்பதாக நம்புபவர்களா? உலகில் எந்த நாட்டிலும் சுற்றுலாவிற்கான இடங்களில் கல்லறைகள் கட்டியுள்ளார்களா

சுற்றுலா மூலமாக கிடைக்கும் வருமானம், வேலைவாய்ப்புகள் பற்றிய புரிதலானது, தமிழ்நாட்டில் பெரும்பாலோருக்கு இருந்திருக்குமானால், ஈரோடு அருகில் உள்ள அரச்சலூர் இசைக்கல்வெட்டு சரியான பாதுகாப்பு, பராமரிப்பு, முக்கியத்துவம் இன்றி இருக்குமா?

அரச்சலூர் இசைக்கல்வெட்டு தொடர்பாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை இசைக்கல்வெட்டு தொடர்பாகவும், சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே, அந்த முக்கியத்துவத்தை  நான் வெளிப்படுத்தியபோதே 'விழித்திருந்தால்', எவ்வளவு சுற்றுலா வருமானமும், எண்ணற்ற வேலை வியாபார வாய்ப்புகளும் பெருகியிருக்கும்? இனியும் அது தாமதமாகலாமா? 'எந்திர' தமிழ்ப்புலமையால் வந்த விளைவா இது? என்ற விவாதங்களை, இனியும் தாமதிப்பது, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாகும். (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

அது மட்டுமல்ல, காந்தி மண்டபம் தேசியத்தலைவர்களுக்கானது; மெரினா திராவிடத் தலைவர்களுக்கானது என்ற வாதம் எழுப்பியதானது, சென்னை பெரியார் திடலில் புதைக்கப்பட்ட .வெ.ரா அவர்களுக்கு பெருமையா? சிறுமையா? என்ற கேள்விக்கு இடம் அளித்துள்ளது. கீழ்வருவதை கணக்கில் கொண்டால், அது .வெ.ரா அவர்களுக்கு பெருமையே; என்பதானது தெளிவாகும்.

கம்யூனிஸ்ட் தலைவர் மறைந்த ராமமூர்த்தி தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளபடி, அண்ணா தமது கட்சிக்காரர்களின் ஊழலைக் கட்டுப்படுத்த முடியாமல், மனமுடைந்து மறைந்தவர் ஆவார். முதல்வராகி ஊழலற்ற ஆட்சி வழங்கிய எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டு, தேர்தல் நடந்து, மீண்டும் முதல்வரான பின், அந்த ஆட்சியும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர். கருணாநிதியோ சர்க்காரிய கமிசனால் 'அறிவியல்பூர்வ ஊழல்' குற்றச்சாட்டிற்கு உள்ளாகி, பின் இந்திராவின் தயவால், நீதிமன்ற வழக்குகளில் இருந்தும், தண்டனையில் இருந்தும் தப்பியவர் ஆவார்.

அது மட்டுமல்ல;

காமராஜரை சத்தியமூர்த்தி பவனில் புதைத்திருந்தால், அவரது நினைவிடத்திற்கு வருடம் முழுவதும் எவ்வளவு மரியாதை கிடைத்திருக்கும்? இப்போது காந்தி மண்டப வளாகத்தில் உள்ள நினைவிடத்திற்கு என்ன மரியாதை கிடைத்து வருகிறது? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்

அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில், மெரினாவில் கருணாநிதியின் சமாதிக்கு காலம் செல்ல, செல்ல எந்த அளவுக்கு மரியாதை கிடைக்கும்? அண்ணா அறிவாலயத்தில் புதைத்திருந்தால், வருடம் முழுவதும் எவ்வளவு மரியாதை கிடைத்திருக்கும்? என்பதை அவரவர் அறிவு, அனுபவ அடிப்படைகளில், ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்

ஜெயலலிதா 'மர்மமான' முறையில் போயஸ் கார்டனில் இருந்து அப்பொல்லோவிற்கு புறப்பட்டது முதல் இன்று வரையில்;

'it’s a Mad Mad Mad Tamilnadu' என்ற படமானது, ஆங்கிலமும் தமிழும் கலந்த 'ஹாலிவுட்'(Hollywood) படமாக வெளிவந்து வசூலில் சாதனை படைக்கும் அளவுக்கு, வாய்ப்புள்ள திரைக்கதையை உருவாக்க துணைபுரியும் சம்பவங்கள் மீடியா வெளிச்சத்திலும், 'இருளிலும்' அரங்கேறி வருகின்றன.” (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

மேலே குறிப்பிட்டவை எல்லாம், 'It’s a Mad Mad Mad Tamilnadu'- ஹாலிவுட் திரைப்பட   திரைக்கதைக்கான உள்ளீடுகளை வழங்கினால் வியப்பில்லை.

பெரும்பாலான கல்லூரி மாணவர்களும், படித்த இளைஞர்களும், மேலே குறிப்பிட்ட திரைக்கதைக்கான நகைச்சுவைக் காட்சிகளை கற்பனையாக ரசிக்கத் தொடங்கி விட்டார்கள்:

என்பதை இணையம் மூலம் உணர முடிகிறது.

மனிதர்களின் பலகீனங்களை(Weakness) 'சுயலாப மூலதனமாக்கி' வளர்ந்து, தமிழ்நாட்டையும் தமிழையும் சீரழித்த 'அந்த சமூக செயல்நுட்பம்' முடிந்துள்ளதன் விளைவாக, சென்னை வெள்ள நிவாரணமும், 1938 இந்தி எதிர்ப்பு போராட்ட பாணியில் நடந்தஜல்லிக்கட்டு போராட்ட கடைசிக்கட்ட வன்முறை முயற்சியை செல்லாக்காசாக்கிய போக்கும், வெளிப்படுத்திய ஆக்கபூர்வ திசையில், மனிதர்களின் பலங்களையும்(Strength), சுயலாப நோக்கற்ற தியாகங்களையும் 'சமூக மூலதனமாக' கொண்டு, தமிழ்நாடும், தமிழும் மீளும் போக்கு துவங்கி விட்டது; என்பது எனது கணிப்பாகும். (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_5.html    )

சுற்றுலா மூலமாக கிடைக்கும் வருமானம், வேலைவாய்ப்புகள் பற்றிய புரிதலுட‌ன்;

தொழிற்சாலைகளை எல்லாம் குற்றம் கண்டு மூடுவதற்குப் பதிலாக, உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளதைப்போல, பாதுகாப்பாக செயல்பட வைத்து, அடிக்கடி பந்த், போக்குவரத்து இடையூறுகள் மூலம் புதிய தொழிற்சாலைகள், திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வர பயப்படுவதை உணர்ந்து, அந்த கட்சிகளை எல்லாம் செல்லாக்காசாக்கி, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் திசையில் தமிழ்நாடு பயணிக்கத் தொடங்கி விட்டது;

என்பதும் எனது கணிப்பாகும்.

மனிதர்களின் பலங்களும்(Strength), சுயலாப நோக்கற்ற தியாகங்களும் தமிழ்நாட்டில் வெளிப்பட்டு வருவதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

சில வருடங்களுக்கு முன், என்னை வியப்பில் ஆழ்த்திய தகவல் அது.

திருச்சி  NIT-இல் சுமார் 10 மாணவ நண்பர்கள் தமது பணத்தில், அங்கு சில நாட்கள் நடந்த மாணவர் விழாவில், 'தற்காலிக உணவகம்' நடத்தி, அதன் மூலம் ஈட்டிய சில லட்சம் ரூபாய்கள் மூலமாக, அருகிலுள்ள கிராமத்தில், 'சமுதாய கூடம்' கட்டித் தந்துள்ளார்கள்: ஏற்கனவே தாம் புரிந்து வந்த உதவிகளின் தொடர்ச்சியாக.

தெலுங்கு, வடமாநில மாணவர்கள் முன்னணி பங்காற்றிய அக்குழுவில் தமிழ் மாணவர்களும் இருந்தனர். விளம்பரமின்றி, தமது மன திருப்திக்கு நடந்த காரியம் அது.

சென்னையில் படிக்கும் பொறியியல் மாணவ நண்பர்கள் ஒரு குழுவாக, கீழ்வரும் உதவியை செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும், தாம்பரம் அருகில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களில், 'உதவிக்கு தகுதியானவர்களை' தேர்ந்தெடுத்து, அவர்களின் படிப்புக்கு பண உதவி செய்து வருகிறார்கள்.

மீடியா வெளிச்சத்திற்கு வராமல், தமிழ்நாட்டில் 'உள்மறையாக' (Latent), மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வெளிப்பட்டு வந்த, இது போன்ற போக்குகளின் தொடர்ச்சியே, 2015 டிசம்பர் வெள்ள நிவாரணங்களும், அதன் அடுத்த கட்ட வெளிப்பாடே, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டங்களும் ஆகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post.html )

தமிழ்நாட்டில் ஆங்காங்கே அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்களின் முயற்சியால், அந்தந்த கிராம மக்களின் ஒத்துழைப்போடு, தனியார்ப் பள்ளிகளையும் விஞ்சும் அளவுக்கு, நவீன வசதிகளுடன் அந்த அரசு பள்ளிகள் 'மீட்சி' பெற்று வருகின்றன. இவை போன்ற நல்ல முயற்சிகளுக்கும், அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ள ஏழைப்பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் விளம்பரமின்றி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் உதவும் போக்கும் அதிகரித்து வருகின்ற‌ன.

தமிழ்நாட்டில் 'அரசியல் நீக்கம்' (Depoliticize) வளர்ந்த வேகத்தில், ஆதாயத்தொண்டர்கள் 'பலத்தில்', கட்சிகளின் சமூக அடித்தளமே செல்லரித்து போன நிலையில், அரசியல் கட்சிகள் பயணித்து வரும்;

சொந்த வாழ்வில் இழிவான சமரசங்களுடன் கோழையாக வாழ்ந்து கொண்டு, தமது 'சொகுசு பாதுகாப்பு மண்டிலம்' (Comfort Zone) சீர்குலைய வாய்ப்புள்ள, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை இருக்கும் அரசியல் ரவுடிகள் 'வரைந்த', 'இலட்சுமணன் எல்லை'களைத்(https://en.wikipedia.org/wiki/Lakshmana_rekha) தாண்டாமல், புறத்தில் 'வீரமாக' பேசியும் எழுதியும், குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளை உசுப்பி காவு கொடுக்கும் 'முற்போக்குகளும்', 'மனித உரிமை தாதாக்களும்', வாழும் தமிழ்நாட்டில் தான், மேலே குறிப்பிட்ட போக்குகளும் வெளிப்பட்டு வருகின்றன

‘பாழடைந்து அல்லது ஊழல் கட்டுமானத்தில் சிக்கிய கட்டிடங்கள் எல்லாம் மழையில் வெள்ளத்தில் இடிந்து விழுவதற்கு முன்பேயே, அக்கட்டிடங்களில் கட்டுமானப் பொருட்களின் அணுக்களும் (atoms) மூலக்கூறுகளும் (molecules) பாழடைவதற்கான மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதை, 'சேதமற்ற ஆய்வு' (Non-Destructive Testing) முறையில் முன்கூட்டியே கணிக்க முடியும்; சேதங்களையும் தவிர்க்க முடியும்; மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ள கட்சிகளின் ஆட்சிகளில்.

அது போலவே சமூகத்திலும் தமிழ்நாட்டில் இன்றுள்ள மேக்ரோ உலகமானது இடிந்து விழுவதற்கு முன்பேயே, சமூகவியலுக்கான‌ 'சேதமற்ற ஆய்வு' (Social Non-Destructive Testing) முறையில், நான் விடுத்துள்ள அபாய எச்சரிக்கைளில்;


கட்டிடங்கள் போலின்றி, சமூக எந்திரவியலில் (Social Mechanics) மைக்ரோ உலகில் வீழ்ந்து வரும் போக்குகளுனேயே, புதிய மேல்கட்டுமானத்திற்கான போக்குகளும் முதலில் மைக்ரோ உலகில் தான் வெளிப்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

ஆதாய அரசியல் பலத்தில் பயணித்த மலேசிய ஆளுங்கட்சியானது கடந்த 2018 மே தேர்தலில், எவரும் எதிர்பார்க்காத தோல்வியைத் தழுவியுள்ளது.

2018 மே மாதம் வரை மலேசியாவின் பிரதமராக இருந்த நசீப் துன் ரசாக்  தேர்தலில் வெற்றி பெறுவார் என்றே பெரும்பாலோர் கருதினார். அப்போது சிங்கப்பூரில் இருந்த நான், ஆளுங்கட்சிக்கு கூடிய கூட்டம் எல்லாம் 'ஆதாய அரசியல் கூட்டம்' என்பதையும், மஹாதீர் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் கலந்து கொண்டோர் எல்லாம் உண்மையான மாற்றம் விரும்பிய ஈடுபாடுகளுடன் கலந்து கொண்ட கூட்டம் என்பதையும், தொலைக்காட்சி ஓளிபரப்புகளை எல்லாம் கூர்ந்து கவனித்து உணர்ந்தேன். தேர்தலில் மஹாதீர் கூட்டணி வெற்றி பெற்றால் வியப்பில்லை, என்று எனது மகனிடம் தெரிவித்தேன்; கடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஊடகக்கணிப்புகளுக்கு மாறாக, அ.இ.அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்து, தேர்தல் முடிவுக்கு முன்பேயே எனது கணிப்பினைப் பதிவு செய்தது போலவே. ( May 1, 2016 ; ‘தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?’; http://tamilsdirection.blogspot.com/2016/05/blog-post.html   )

ம‌லேசியாவில் தேர்தல் முடிவு கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி, ஆளுங்கட்சி தோற்று, எதிர்க்கட்சிகளின் கூட்டணித்தலைவரான‌ மகாதீர் முகம்மது, மலேசியாவின் பிரதமராகியுள்ளார். 93 வயதுள்ள அவர், மாடிப்படிகளில் துணையின்றி நடக்கும், அவரின் சுறுசுறுப்பானது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அதை விட முக்கியமாக, கணக்கில் அடங்காத ஊழல் சொத்துக்களை எல்லாம் சட்டபூர்வமாக அவரின் அரசு கையகப்படுத்தி வருவதானது, தமிழ்நாட்டிலும் அது மலேசியாவைப் போலவே, எதிர்பாராத வகையில் விரைவில் அரங்கேறும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது. (https://en.wikipedia.org/wiki/1Malaysia_Development_Berhad_scandal &  ‘the Malaysian government first seized an object or item allegedly bought using 1MDB-related funds, as identified by the United States Department of Justice (DoJ). The Malaysian government secured ownership of the luxury yacht through the mutual legal assistance treaties between Malaysia, Indonesia and the US.’; https://www.straitstimes.com/asia/se-asia/seizure-of-equanimity-a-turning-point-in-1mdb-saga-the-star-columnist )

2018 மே மாதத்திற்கு முன், மேலே குறிப்பிட்டவை எல்லாம் மலேசியாவில் நடக்கும் என்று, மலேசியாவில் எவரும் கற்பனை கூட செய்திருக்க முடியாது. 1967-இல் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் என்று அண்ணா நினைத்திருந்தால், பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டிருப்பாரா?

சில வருடங்களுக்கு முன் கோவை சென்றிருந்த போது, வாடகைக்கார் பயணத்தில், அந்த ஒட்டுநரோடு உரையாடினேன். அதில் கீழ்வரும் கணிப்பானது வெளிப்பட்டு என்னை வியப்பில் ஆழ்த்தியது.

இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் கட்சிக்காரர்களின் ஊழல் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்தால், டாஸ்மாக் வருமானமின்றியும், மக்களுக்கு கூடுதல் வரியின்றியும், கடன்சுமையின்றியும் தமிழக அரசை நடத்தலாம்; பல மக்கள் நலத்திட்டங்களை எல்லாம் செயல்படுத்தலாம்.

மலேசியா அந்த திசையில் இன்று பயணிக்கிறது. நாளை தமிழ்நாடும் அதே திசையில் பயணிக்கும்; தமிழ்நாட்டின் மைக்ரோஉலகத்தில் ஊழல்வாதிகள் வெறுக்கப்படும் போக்கு அதிகரித்து வருவதால்.

"மலேசியர்களுக்கு தன்மானம் வேண்டும்" என்று அண்மையில் மாணவர்களிடையே மலேசிய பிரதமர் மஹாதீர் ஆற்றிய உரையின் பகுதி கீழே:


“"தன்மானமிழந்த ஜப்பானியர்கள் தற்கொலை புரிந்து கொள்வார்கள். அரசின் பணத்தை திருடுவது தன்மானக்கேடாகும். மாதம் RM4000க்கு மேல் சம்பாதிப்பவர்கள் அரசிடம் வாங்கிய கல்விக்கடனை அடைக்க வேண்டும். உங்களுக்கு உரிமையில்லாத‌ பணத்தை திருடினால், அதுவே உங்களின் பழக்கமாகி வளர்ந்து, பின் உங்களை பழிவாங்கி விடும்".


“the Japanese were a good example of hardworking and successful citizens, adding that they had a strong sense of shame, and committed harakiri if they felt they had failed in any way.”
"I do not know in Malaysia if we have sense of shame because our sense of shame is when we are badly dressed or caught stealing something," he said. “Things that don't belong to you, grows in you, and that habit will be your downfall. I think you have seen this thing happening around you. I am not making reference to anybody. Just a general statement," he said, eliciting laughter and claps from the audience. (https://www.straitstimes.com/asia/se-asia/mahathir-says-unpaid-student-loans-amounting-to-rm39-billion-nearly-same-as-1mdb-debt )


மக்கள் தன்மானமிழந்தால், ஊழல்வாதிகளிடம் அரசு சிக்கி, அந்த நாடு அழியும்; மக்களுக்கு தன்மானம் வந்தால், அந்த ஊழல்வாதிகள் ஒழிவார்கள்; ஊழல் சொத்துக்கள் பறிமுதல் மூலம் அந்த நாடும் வளரும்; 


என்பதை மலேசியா இன்று நிரூபிக்கிறது; நாளை தமிழ்நாடு நிரூபிக்கும்; தமிழ்நாட்டிலும் தன்மானம் இருக்கிறது என்று. 


குறிப்பு: இன்று ஆர்.கே,நகர் பாணியில் தமிழ்நாட்டின் பயணம் நீடிப்பதால்;

திருப்பரங்குன்றத்துடன் திருவாரூருக்கும் இடைத்தேர்தல்கள் நடந்தால், ஆர்.கே.நகர் பாணியில், ஆளும் அ.இ.அ.தி.மு.கவும், சசிகலா - தினகரன் கட்சியும் வெற்றிக்கு போட்டிப் போட, தி.மு.க 'டெபாசீட்'டை தக்க‌ வைக்கவும், பா.ஜ,க நோட்டாவை தோற்கடிக்கவும் முயற்சிக்கும் வகையில் தேர்தல் வெற்றிகள் அமையும்; ஆர்.கே.நகர் பாணியிலிருந்து தடம் புரண்டு, தமிழ்நாடெங்கும் பேனர்களில் சசிகலாவுக்கு முக்கியத்துவம் தந்துள்ளதால், வெற்றி வாய்ப்பானது, ஆளும் கட்சியான‌ அ.இ.அ.தி.மு.கவுக்கே அதிகம் உள்ளது; என்பதும் எனது கணிப்பாகும். எனது கணிப்பு பொய்த்தால் நல்லது, என்பதும் எனது விருப்பமாகும்.

No comments:

Post a Comment