Saturday, August 25, 2018

'பாபநாசம்' சிக்னலின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக 'கோலமாவு கோகிலா'? (2);



ஊழலின் சமூக முதுகெலும்பாக, இனியும் நாம் பயணிக்கலாமா?


'கோலமாவு கோகிலா' குடும்பத்தினர் சவால்களை எவ்வாறு சந்தித்தனர்? என்று, அந்த திரைப்படத்தில் வந்த சம்பவங்களை ஆராய்ந்தால், அதில் கீழ்வரும் சூட்சமம் வெளிப்படும்.

சவால்களை சந்திக்கும் போது, நீ இப்போது உள்ளதை விட, இன்னும் வலுவாக வேண்டும். புதிய கண்ணோட்டங்கள்(new perspectives), புதிய திறமைகள் (new skills),  எல்லைகளை அதிகரித்தல்(pushing boundaries.) ஆகியவற்றை உருவாக்க வேண்டும். உன்னை எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றி கொள்ள, உனது புரிதலை விரிவாக்க வேண்டும்.

‘When you are challenged, you are asked to become more than you were. That means creating new perspectives, acquiring new skills and pushing boundaries. In other words you have to expand your understanding in order to be able to overcome the obstacles facing you.’  (https://medium.com/personal-growth/dont-take-the-path-of-least-resistance-5dc7ec3f2892 )

தமிழ்நாட்டில் தன்மானக்கேடான குறுக்கு வழிகளைத் தவிர்த்து வாழும், சாமான்யர்களின் குடும்பங்களில்  எல்லாம், தாம் சந்திக்கும் சவால்களை எல்லாம், மேலே குறிப்பிட்ட வழிமுறைகளில், தத்தம் அறிவு, அனுபவ அடிப்படைகளில், சந்தித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் மேல் மட்டத்தில் வாழ்பவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், கட்சிகளின் தலைவர்கள், பிரபல பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம், ஆளும்/ஆண்ட கட்சிகளில், தம்மால் முடிந்த அளவுக்கு, 'பலன்களை'(?) வசூலித்து வருவதைப் போலவே, தமக்கு 'அந்த' வாய்ப்புகளற்ற நிலையில், ‘ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், ‘எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு 'கொள்ளையடித்த பணத்தில் நமது பங்கு' என்று வாக்காளர்களில் பெரும்பாலோர் வசூலித்தார்கள்; இனி வரும் தேர்தல்களிலும் வசூலிப்பார்கள்

ஊழலை ஒழிக்காமல், அரசியல் ரவுடிகளின் தரகர்களின் பிடியில் சமூகமானது சிக்கிய பின், சாமன்யர்களின் உயிர் பிழைப்பே சவால்களான பின்னால், சமூகத்திற்கான நேர்மை வழிகாட்டிகள் சீர்குலைந்து விடும். ஊழல் புரையோடிய சமூகத்தில், திருக்குறள்(292) வழியில் கிடைக்கும் பண வாய்ப்புகளை துடுப்புகளாக கருதி, தமது அறிவு அனுபவ அடிப்படைகளில் தமக்கான நேர்மை வழிகாட்டி திசையில் தான், 'கோலிசோடா' திரைப்படத்தில் கோயமேடு கூலிகளான விட‌லைப்பசங்களும், 'கோலமாவு கோகிலா' குடும்பத்தினரும் பயணித்தார்கள்.

'கோலிசோடா' திரைப்படத்தில், கோயமேடு மார்க்கெட்டில் கூலிகளாக இருந்த விடலைப்பசங்கள் ஒன்று சேர்ந்து, பூட்டிய அறையில் சரியான வாய்ப்பு கிடைத்த போது, அனைவரையும் அச்சுறுத்தி வந்த ரவுடியை அடித்து நொறுக்கி, பின் 'அதனை வெளியில் சொல்லி அவமானப்பட வேண்டாம்' (தமிழ்நாட்டில் அதிகாரத்தை 'அடிவருடி', மேல் மட்டத்தில் வாழ்பவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், கட்சிகளின் தலைவர்கள், பிரபல பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் வாழ்ந்து வருவதைப் போலவே) என்று அந்த ரவுடிக்கு அறிவுரை வழங்கி, ஒன்றுமே நடக்காதது போல அந்த அறையை விட்டு வெளியே வந்தார்கள். 'கோலமாவு கோகிலா' குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, அதற்கும் மேலாக காரியத்தை முடித்து, பின் 'அந்த திறமைகளை' தவறாக குறுக்கு வழியில் பணம் சேர்க்க விரும்பாமல், கோலமாவு விற்பனையைத் தொடங்கினார்கள்.

அதே 'கோலிசோடா', 'கோலமாவு கோகிலா' வழியில் தான்;

மக்களின் கோபமும் வெறுப்பும் அதிகரித்துள்ள நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு  நம்பிக்கையுள்ள தலைவர் இருந்தால், ஆளுங்கட்சிக்கு எதிர்பாராத தோல்வியையும், அதே மக்கள் தருவார்கள்;

என்பதை நிரூபிக்கும் வகையில், திருமங்கலம் ஃபார்முலாவின் வெற்றியில் பயணித்த ஆளுங்கட்சியான தி.மு.-விற்கு, அடுத்து வந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் எதிர்பாராத தோல்வியையும் பரிசளித்தார்கள்; கருத்துக் கணிப்புகளை நம்பியவர்களை எல்லாம் முட்டாளாக்கி

அதிலும் பாடம் கற்காமல், அடிமட்டத்தில் கவுன்சிலர் முதல் மேல் மட்டம் வரையில், அவரவர் வலிமைக்கு ஏற்ப, கட்சி, சாதி வேறுபாடுகளை ஓரங்கட்டி, கூட்டுக் கொள்ளை தொடர்ந்ததால், திருமங்கலம் ஃபார்முலாவானது வளர்ந்து, கட்சிகளின் அரசியலை ஒழித்து, ஆர்.கே.நகர் ஃபார்முலாவாக வளர்ந்து, அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெற்ற வெற்றிகளை விட, பெரிய வெற்றியை, சசிகலா படத்தைத் தவிர்த்த சுயேட்சை வெற்றி பெற வழி வகுத்தது. இனி ஊழல் பிரமீடு நொறுங்கும் வரையில், தமிழ்நாட்டின் தேர்தல்கள் எல்லாம், ஆர்.கே.நகர் பாணியில் தான் நடக்கும்;

என்பதும் எனது கணிப்பாகும். ஆனால் ஆர்.கே.நகர் பாணியில் வெற்றியில் பயணிப்பவர்கள் உரிய பாடங்கள் கற்காமல், திருமங்கலம் பாணியில் தி.மு.க பயணித்தது போல பயணித்தால், சரியான வாய்ப்பு கிடைக்கும் போது, சாமான்யர்கள் தரப் போகும் பாடமானது, இன்று ம‌லேசியாவும், தென் கொரியாவும் பயணிக்கும் திசையில்‍ - ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் தண்டித்து, அவர்களின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து - தமிழ்நாடும் பயணிக்கும். அது தொடர்பான சிக்னல்கள் இப்போதே வெளிப்படத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டில், இந்தியாவுக்கே முன்னுதாரணமாக, அரசு வேடிக்கை பார்க்க, டாஸ்மாக் கடைகளை பெண்களே அடித்து நொறுக்கி, அரசு பயந்து அக்கடைகளை அகற்றுவதும், லஞ்சம் வாங்கும் போலீசாரை இளைஞர்கள், ஃபோனில் வீடியோ எடுத்து, 'வாட்ஸ் ஆஃபில்' பரப்பி, அந்த போலீசார் சஸ்பெண்ட் ஆகி வருவதும், அரசியல் கட்சிகளை ஓரங்கட்டி, தமிழ்நாட்டில் ஆங்காங்கே பெண்களே பொதுப் பிரச்சினைகளுக்காக சாலை மறியல் மூலம் தீர்வு கண்டு வருவதும்;

தமிழ்நாட்டு அரசியல் கொள்ளைக்காரர்களுக்கு நெருங்கி வரும் ஆபத்தின் அறிகுறிகள் ஆகும்.

தமிழ்நாட்டில் ...தி.மு.கவில் ஆட்சியிலும், கட்சியிலும் பதவிகளில் இல்லாத, அடிமட்ட தொண்டர்கள் தான்;

ஜெயலலிதாவின் மீதுள்ள உண்மையான விசுவாசம் உந்த;

கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்ற கூறுகளில் பலவற்றை வெளிப்படுத்தி;

தமிழ்நாட்டில் அரசியல் பரம பதம் விளையாட்டானது;

ஏணியில் பயணிக்கத் தொடங்கும் காரணகர்த்தாக்கள் ஆன ஹீரோக்கள் என்பதை;

நானறிந்தவரையில் அடையாளம் கண்டு பாராட்டியது துக்ளக் இதழ் (துக்ளக் 23.8.2017 தலையங்கம்) மட்டுமே ஆகும.’ என்பதையும்;

' மாவட்டம், ஒன்றியம் என்று அடுத்தடுத்த மட்டங்களில் பயணிப்பவர்கள் எல்லாம்;

மேலே குறிப்பிட்ட ஹீரோக்கள் வாழும் கிராமங்களில் மண்ணைக்கவ்வி வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன், மேற்குறிப்பிட்ட ஹீரோக்கள் வாழும் ஒரு கிராமத்தில், 'அதிவேக பெரிய' பணக்காரர் தமது மகன் திருமணத்திற்கு வெளியூர் செல்ல ஏற்பாடு செய்திருந்த பேருந்தில், பயணிக்க, அந்த கிராமத்தில் சுமார் 30 பேர்களுக்கு மேல் ஆட்களை கூட்ட முடியாமல், அந்த பேருந்து பயணித்தது.' என்பதையும்;

ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2017/08/blog-post_27.html ) அதாவது மைக்ரோ உலகமாக உள்ளகிராமங்களில் எல்லாம் பொதுவாழ்வு வியாபாரிகளின் சாயமானது வெளுக்கத் தொடங்கி விட்டது; மேக்ரோ உலகில் பணத்திற்கும் செல்வாக்கிற்கும் வாலாட்டி, மேல்த்தட்டு வாழ்க்கையிலான தமது 'சொகுசு மண்டிலத்தை' (Comfort Zone) தன்மானம் இழந்து பாதுகாக்கும் போக்கு நீடித்து வரும் சூழலில்.

தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான சமூக அழுத்தமானது பாரபட்சமின்றி வெளிப்பட்டால் தான்,

ஊழல் குற்றவாளிகளுக்கு உதவ, ஊழல் வலையில் சிக்கிய நீதிபதிகளும்  அஞ்சுவார்கள். ஊழலில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை எல்லாம், தமிழ்நாட்டில் பள்ளிகளை சீரமைத்தல், சாலைகளை சீரமைத்தல், குடிநீர் பற்றாக்குறையை ஒழித்தல் போன்ற பொது காரியங்களுக்கு செலவிட வேண்டிய நெருக்கடியை மத்திய, மாநில அரசுகளும் உணரும்; ( http://tamilsdirection.blogspot.in/2017/11/cognitiveskills.html  )

அந்த விளைவிற்கான 'ஊழல் எதிர்ப்பு கோப அலை'யானது உருவாகும் வரை, அரசியல் கொள்ளையர்களின் பணத்தை எல்லாம், கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க கட்டணம், வாக்குகள் விற்பனை, உள்ளிட்டு, தம்மால் முடிந்த வழிகளில் மக்கள் வசூலிப்பதை, தேர்தல் ஆணையமும், நீதி மன்றங்களும் தடுக்க முடியாது, என்பதையே ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு உணர்த்துகிறதா? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும்.    (‘திராவிட அரசியலை முடித்து வைத்த 'பணத்துவா'; http://tamilsdirection.blogspot.com/2017/12/3_26.html  )

அவ்வாறு கோப அலையானது, சுனாமியாக வளர விடாமல் தடுத்து வரும் சமூக செயல்நுட்பம் எது? என்று கண்டுபிடித்து, அதனை சீர்குலைத்தால், அந்த சுனாமியில் மலேசியாவிலும், தென் கொரியாவிலும் நடந்து வருவது போல, அரசு அதிகாரத்தை ஊழல்கள் மூலமாக சொத்து சேர்க்கப் பயன்படுத்தியவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டு, ஊழல் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்; தமிழ்நாட்டிலும்.

'எந்த நாட்டிலும் தன்மானம் கெட்ட புலமையாளர்களின் ஆதரவின் துணையுடனே தான், சுயலாப கள்வர்கள் எல்லாம், தலைவர்களாக தலையெடுத்து, அந்த நாட்டை சீரழிக்க முடியும்' என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

அவ்வாறு தன்மானம் கெட்டு, ஊழல் அரசியல் தலைவர்களின் துதி பாடி, ஊழல் பிரமீடின் 'சமூக முதுகெலும்பாக' செயல்படும், தமிழ்நாட்டில் மேல் மட்டத்தில் வாழும் பத்திரிக்கை அதிபர்கள், பிரபல பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம், ஆளும்/ஆண்ட கட்சிகளில், தம்மால் முடிந்த அளவுக்கு, தமது பங்களிப்புக்கு ஏற்ற‌ 'பலன்களை'(?) வசூலித்து வாழ்கிறார்கள்; நம்மிடையே நமது உற்றமாகவும் சுற்றமாகவும்.

அவ்வாறு ஊழலின் சமூக முதுகெலும்பாக நம்மிடையே வாழ்பவர்களை திருத்த வேண்டும். அதில் தோற்றால், அவர்களை நமது சமூக வட்டத்தில் இருந்து அகற்ற வேண்டும். அதை செய்யாமல், இரண்டும் கெட்டானாக, நாம் பயணித்தால், நாமும் ஊழலின் சமூக முதுகெலும்பு ஆக மாட்டோமா?

நீரழிவு நோயாளியின் காலில் 'காங்கிரின்' நோய் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு காலை வெட்டி அகற்றாவிட்டால், அந்த நோயாளியின் உயிருக்கே ஆபத்தாகி விடும். (https://www.healthline.com/health/gangrene-diabetes ) அது போல 'சமூக காங்கிரின்' நோயாக நம்மிடையே வாழ்பவர்களை எல்லாம் அகற்றாவிட்டால், நாமும் அவர்களைப்போலவே 'சமூக காங்கிரின்' நோய்க்கிருமிகளாக சமூகத்தை சீரழிக்கும் பட்டியலில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா? தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தைத் தூண்டிய அந்த 'சமூக காங்கிரின் நோயானது', நாம் ஏமாந்தால், அந்த மரணத்தை நிச்சயமாக்கி விடாதா?

‘வ.உ.சி, திரு.வி.க, ஈ.வெ.ரா, ராஜாஜி, அண்ணா, காந்தி, நேரு போன்ற இன்னும் பலரின் பொதுவாழ்வில் வெளிப்பட்ட‌ நிறை, குறைகளிலிருந்து, எனது அறிவு அனுபவ அடிப்படைகளில் பாடங்கள் கற்று;

தனி வாழ்விலும், பொதுவாழ்விலும், வெளிப்படும் சிக்னல்களை பாரபட்சமின்றி உணர்ந்து, ஒதுங்குவதற்கும், ஒதுக்குவதற்கும் திருக்குறள் (350) வழியில், அதற்கான‌ துணிச்சலுடனும், எனது வரை எல்லைகள் (limitations) பற்றிய புரிதலுடனும், பய‌ணிப்பதால்; (https://medium.com/@benjaminhardy/23-smart-ways-to-increase-your-confidence-productivity-and-income-5ee8a3158f31  );


அந்த இலக்கில் வெற்றி பெறுவதானது, நிச்சயமாகி வருகிறது. எனவே தமிழ்நாடானது தமிங்கிலீசர் நாடாகி வரும் போக்கானாது பின் திரும்ப (Reverse), தமிழ்நாடு மீளும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.’ (http://tamilsdirection.blogspot.com/2017/11/blog-post.html )  

(வளரும்)

No comments:

Post a Comment