Wednesday, August 15, 2018

'அந்த ஓட்டப்பந்தயப் புலி'யின் வாலைப் பிடித்த 'முட்டாள்' புத்திசாலிகள்' (4)



ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலாக மலேசியாவின் முன்னாள் பிரதமர்  நசீப் துன் ரசாக்?



ஆதாய அரசியலை ஊக்குவித்து பயணிக்கும் ஆளுங்கட்சிக்கு, அந்த ஆதாய அரசியலே, அந்த கட்சியின் தலைவருக்கு மரண அடியாக முடியும்;

என்பதற்கு 2018 மே மாதம் வரை மலேசியாவின் பிரதமராக நசீப் துன் ரசாக் இருந்த போது எவ்வளவு செல்வாக்குடன் இருந்தார்? 2018 மே மாதத்தில், எதிர்பாராத வகையில் தோல்வியைத் தழுவி, இன்று அவரும் அவரது கட்சியும் எந்த நிலையில் உள்ளார்கள்? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து ஆச்சரியப்படலாம்.

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான ...தி.மு.கவைத் தோற்கடித்து, சட்டசபை எதிர்க்கட்சியான தி.மு.,-வை டெபாசீட் இழக்க வைத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 'சசிகலா தினகரன்' கட்சி, மற்றும் காங்கிரஸ், பா.. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கீழ்வரும் சிக்கலை சந்தித்துள்ளன.

கொள்கையைப் பின் தள்ளி, தனிநபர் விசுவாசம் என்ற அடிப்படையில் தலைமைக்கும், அந்தந்த கட்சிகளில் உள்ள குழுக்களின் தலைவர்களுக்கும், விசுவாசமாக செயல்படும் தொண்டர்கள் எல்லாம், ஆதாய அரசியலில், அந்த கட்சிகள் எல்லாம் சிக்கி பயணிப்பதன் அறிகுறிகள் ஆகும்

அதன் சமூகத்தூண்டலின் (Social Induction) விளைவாகவே, தமிழ்நாட்டில் கணிசமான மக்களும் ஆதாய அரசியல் போக்கில், கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்கவும், தேர்தல்களில் வாக்கு போடவும், எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு 'கொள்ளையடித்த பணத்தில் நமது பங்கு' என்று கறக்க ஆரம்பித்தார்கள். அதன் உச்சக்கட்டமாக ஆர்.கே.நகர் தேர்தலில், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பெற்ற வெற்றிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி, தினகரன் வெற்றி பெற்றுள்ளார்; இனி அந்த திசையில் தான் அனைத்து கட்சிகளும் பயணித்தாக வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தி

அதே நேரத்தில், மக்களின் கோபமும் வெறுப்பும் அதிகரித்துள்ள நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு மக்களின் நம்பிக்கையுள்ள தலைவர் இருந்தால், ஆளுங்கட்சிக்கு எதிர்பாராத தோல்வியையும், அதே மக்கள் தருவார்கள்;

என்பதை நிரூபிக்கும் வகையில், திருமங்கலம் ஃபார்முலாவின் வெற்றியில் பயணித்த ஆளுங்கட்சியான தி.மு.-விற்கு, அடுத்து வந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் எதிர்பாராத தோல்வியையும் பரிசளித்தார்கள்.

அப்போது இருந்த வெறுப்பு, கோபம் போன்றவற்றை விட, மிக அதிகமான வெறுப்பும், கோபமும், சாதாரண மக்களிடமும், குறிப்பாக மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் இப்போது இருப்பதாக தெரிகிறது. ஆனால் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைவரோ, கட்சியோ அவர்கள் பார்வையில் வெளிப்படாத வரை, அந்த கோபமும், வெறுப்பும், வெளிப்பட வழியின்றி, அதிகரித்து வருகின்றன.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில்,எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு 'கொள்ளையடித்த பணத்தில் நமது பங்கு' என்று வாக்காளர்களில் பெரும்பாலோர் வசூலித்தார்கள்; இனி வரும் தேர்தல்களிலும் வசூலிப்பார்கள்; மேல் மட்டத்தில் வாழ்பவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், கட்சிகளின் தலைவர்கள், பிரபல பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம், ஆளும்/ஆண்ட கட்சிகளில், தம்மால் முடிந்த அளவுக்கு, 'பலன்களை'(?) வசூலித்து வருவதைப் போலவே.

இன்று தமிழ்நாட்டில் சாமான்ய மக்களிடம் மிக அதிகமான வெறுப்பும் கோபமும் இருந்தாலும், அதன் மூலம் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்க என்ன செய்ய வேண்டும்?

என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

ஊழல் செயல்பாடுகளை ஒழிக்காமலும், அடிமட்டத்தில் உள்ள பொதுப்பிரச்சினைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து துணை புரிந்து, அப்பிரச்சினைகளை தீர்ப்பதில் தமக்குள்ள சுயலாபநோக்கற்ற சமுக அக்கறையை நிரூபிக்காமலும், பா.. உள்ளிட்டு எந்த கட்சியும், இனி தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாது.’(‘2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்பட்ட 'சிக்னல்'; அரசியல் வெளி (Political Space) காலியாகி விட்டதா? அந்த அரசியல் வெற்றிடத்தை ஆக்கிரமிக்கும்,சமூக செயல்நுட்பம்?’ (http://tamilsdirection.blogspot.com/2016/05/

அந்த சமுக செயல்நுட்பமானது செயல் பட வேண்டுமானால், சமூகத்தில் அதற்கான தேவைகளும் (Needs), ஈடுபாடுகளும் (Interests), எந்த அடையாள திசையின் அடிப்படையில் வெளிப்பட்டு வருகின்றன? என்பதற்கான 'சிக்னல்களையும்' அடையாளம் காண வேண்டும்? (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

அந்த வெற்றிக்கான சமுக செயல்நுட்பமானது, எந்த அடையாள திசையில் பயணித்தாக வேண்டும்? 

என்ற திறவுகோலானது, கீழ்வரும் ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

கடந்த 40 வருடங்களில் தி.மு. விற்கும், ...தி.மு. விற்கும் இடையில் நடந்த அரசியல் போட்டியில், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் இடையிலான 'பிரிதல் கோடானது' (fault line: a divisive issue or difference of opinion that is likely to have serious consequences.) வெளிப்பட்டது ;

அதன் தொடர்ச்சியாக, மாநில அரசியல் போக்கின் 'இயல்பு விலகலுக்கும்' (drift), தேசியப் போக்கிற்கும் இடையிலான பிரிக்கும் கோடானது' (dividing line) வளர்ந்து, அதன் விளைவாக ...தி.மு.-வானது, தேசியப் போக்கினை உட்கிரகித்தது (subsumed). அதன் தொடர்விளைவாக, தமிழ்நாட்டில் செல்வாக்குடன் இருந்த ஒரே தேசியக்கட்சியான காங்கிரஸ் கட்சியானது ஓரங்கட்டப்பட்ட விளைவில் முடிந்தது."

‘In over four decades of DMK vs AIADMK rivalry, the fault lines of MGR-Jaya vs MK also became the dividing line between the regional drift and the national current in which the AIADMK subsumed the nationalist stream, leading to the marginalisation of the only relevant national party, the Congress. Result, the AIADMK became the nationalist regional party, and DMK remained the regionalist regional party.’; S.Gurumurthy;  http://www.newindianexpress.com/opinions/columns/s-gurumurthy/2018/aug/13/karunanidhi-the-human-dynamo-1856982.html

தி.மு. தலைவர் கருணாநிதி காமராஜரை கேலி கிண்டல் செய்து எழுதிய, பேசிய காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர் காமராஜரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். தி.மு.க-வில் இருந்து பிரிந்த பின், காமராஜர் தலைமையிலான காங்கிரசில் சேர முனைந்தார். காமராஜர் அதற்கு இணங்காததாலேயே,.தி.மு. தொடங்கினார்;

என்பதை நாத்தீகம் ராமசாமி தனது 'நாத்தீகம்' இதழில் வெளிப்படுத்தியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் காமராஜருக்கு நெருக்கமாக, அவரது கட்சியில் இருந்த (இப்போது துக்ளக் ஆசிரியர்) குருமூர்த்தியும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே 'திராவிடர்/திராவிட/தமிழர்' குழப்பங்களுடன் தேசிய எதிர்ப்பு திசையில் பயணித்து வந்த தமிழ்நாட்டில், .தி.மு. தொடங்கிய பின், எம்.ஜி.ஆரை 'மலையாளி' என்று தி.மு. வசை பாடத் தொடங்கியது. 1967இல் தி.மு. ஆட்சிக்கு வந்து, ஆதாய அரசியலை ஊக்குவித்ததால், 'அரசியல் நீக்கம்' முளை விட்டு வளர்ந்து, தேசிய எதிர்ப்பின் வலிமையைக் குறைத்தது. 1971இல் இந்திரா காங்கிரஸ்தி.மு. தேர்தல் கூட்டணியில், அந்த தேசிய எதிர்ப்பானது, குறையும் போக்கு அதிகரித்தது. 1967 வரை வீரியத்துடன் தேசிய எதிர்ப்பு போக்கில், காங்கிரசை எதிர்த்து பயணித்திருந்த பின்னணியில். 

அதாவது 'இந்திய தேசிய எதிர்ப்பு' போக்கில் பயணித்த தமிழ்நாட்டின் திராவிட அரசியலானது, மேற்குறிப்பிட்ட காரணங்களால், அந்த போக்கிலிருந்து இயல்பான விலகலுக்கு (Drift) உள்ளானது. அதன் தொடர்விளைவாக தி.மு.க தலைவர் கருணாநிதி எதிர்ப்பானது, அவரின் பங்களிப்பாலேயே, அந்த இயல்பான விலகல் திசையில், இந்திய தேசியத்தை உள்வாங்கி, திராவிட அரசியலானது பயணிக்கும் போக்கிற்கு வழி வகுத்தது. 


அதாவது திராவிட அரசியலில் இருந்த இந்திய தேசிய எதிர்ப்பு பலகீனமான போக்கும், திராவிட அரசியலால், தமிழ்நாட்டு தேசியக் கட்சியான காங்கிரஸிடமிருந்து அந்நியமாகியிருந்த 'தமிழ்/தமிழர்'அடையாளப் போக்கும், அ.இ.அ.தி.மு.கவில் சங்கமமானதால்,  தமிழ்நாட்டு அரசியலில், காங்கிரஸ் கட்சியானது, இந்திரா காட்டிய திசையில், திராவிடக் கட்சிகளின் வாலாகவே பயணிக்கும் அளவுக்கு பலகீனமானது; காமராஜரின் மறைவுக்குப் பிறகு.

அந்த பின்னணியில் தான், மேலே குறிப்பிட்ட, கீழ்வரும் சமூக செயல்நுட்பத்தினைப் புரிந்து கொள்ள முடியும்.

எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் இடையிலான 'பிரிதல் கோடானது' (fault line: a divisive issue or difference of opinion that is likely to have serious consequences.) வெளிப்பட்டது ;

அதன் தொடர்ச்சியாக, மாநில அரசியல் போக்கின் 'இயல்பு விலகலுக்கும்' (drift), தேசியப் போக்கிற்கும் இடையிலான பிரிக்கும் கோடானது' (dividing lin) வளர்ந்து, அதன் விளைவாக ...தி.மு. வானது, தேசியப் போக்கினை உட்கிரகித்தது (subsumed). அதன் தொடர்விளைவாக, தமிழ்நாட்டில் செல்வாக்குடன் இருந்த ஒரே தேசியக்கட்சியான காங்கிரஸ் கட்சியானது ஓரங்கட்டப்பட்ட விளைவில் முடிந்தது.’

இன்று தமிழ்நாட்டில் தேய்ந்த நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சியும், வளர விரும்பும் தமிழக பா... வும், மேலே குறிப்பிட்ட இடத்தில் இருந்து தான், இனி பயணிக்க வேண்டும்; எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய மூன்று தலைவர்களுமே மறைந்துள்ள நிலையில்.

இரண்டு கட்சிகளுமே ஏற்கனவே தி.மு.-வுடன் கூட்டணியில் பயணித்த கட்சிகளாகும். எனவே எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் சுயலாப நோக்கற்றஅபிமானிகளின் வெறுப்புக்கு உள்ளான கட்சிகளாகும்.

தேசியப் போக்கினை உட்கிரகித்து ...தி.மு.  வளர்ந்த சமூக செயல்நுட்பத்தினை மேலும் வளர்த்தே, அந்த இரண்டு கட்சிகளில் ஒன்று, தனித்தே தமிழ்நாட்டை ஆளுங்கட்சியாக வளர முடியும்.

தமிழ்நாட்டில் 'திராவிடர்/திராவிட/தமிழர்' குழப்பங்களுடன் தேசிய எதிர்ப்பு திசையில் பயணித்து வந்தவர்கள் எல்லாம் இன்று 50 வயதுக்கும் அதிகமானர்கள்; அவர்களில் பெரும்பாலோர் 60 வயதுக்கும் அதிகமானவர்களே; அவர்களிலும் பலர் தி.மு. குடும்ப அரசியல் மீது வெறுப்புடனேயே தி.மு. ஆதரவாளர்களாக பயணித்து வருகிறார்கள். ஜெயலலிதா மர்மமான முறையில் அப்போல்லோவில் சேர்ந்தது முதல், இன்று வரையில் தி.மு. பயணித்த முறையில், தி.மு.கவும் 'அமாவாசைகளின் புரட்சியில்' சிக்கி, தி.மு. வின் வாக்கு சேகரிப்பு வலைப்பின்னல் மிகவும் பலகீனமாகி விட்டதை, ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு உணர்த்தியுள்ளது. (http://tamilsdirection.blogspot.com/2017/09/2-18.html )

தமிழ்நாட்டில் குக்கிராமங்கள் வரை ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் வளர்ந்து வரும் சூழலிலும், கிராமங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு சென்று, வருடத்திற்கு ஒரு முறையாவது தமது கிராமத்திற்கு வந்து செல்பவர்கள் மூலமாகவும், கிரிக்கெட் கிராமங்களில் ஊடுருவி வருவதன் மூலமாகவும், இது போன்ற வழிகளில் தமிழ்நாட்டில் நம்பமுடியாத அளவுக்கு 'இந்தியர்' என்ற அடையாளம் வலுப்பெற்று வருகிறது. 'தமிழ்வழிக்கல்வியின்' மரணப்பயணத்தால், 'தமிழர்' அடையாளமானது பலகீனமாகி வருகிறது. (‘தமிழும், தமிழ் உணர்வும்,  மாணவர்களின்  கேலிப்பொருள் வரிசையில் ?’; http://tamilsdirection.blogspot.com/2015/06/

அவ்வாறு தமிழ்நாட்டில் 'இந்தியர்' அடையாளம் வளர்ந்த போக்கில் தான்;

மேலே குறிப்பிட்ட 'மாநில அரசியல் போக்கின் 'இயல்பு விலகலுக்கும்' (drift), தேசியப் போக்கிற்கும் இடையிலான 'பிரிக்கும் கோடானது', உருவான பின்னணியில்;

...தி.மு. வானது அதன் விளைவாக, தேசியப் போக்கினை உட்கிரகித்து (subsumed).', அது தொடர்பான சமூக செயல்நுட்பம் அரங்கேறியது.

அவ்வாறு தேசியப் போக்கினை உட்கிரகித்து எம்.ஜி.ஆர் பயணித்த போக்கில், தமிழின் வளர்ச்சியும் முக்கிய இடம் பெற்றதை, ஏற்கனவே கீழ்வருமாறு பதிவு செய்துள்ளேன்.

அண்ணாதுரையின் செல்வாக்கில் பெரியார் நீதிக்கட்சியை 1944இல் 'திராவிடர் கழகம்' என்று மாற்றினார். பிராமணர்களுக்கு திராவிடர் கழகத்தில் இடமில்லை என்பதோடு,  செல்வத்திலும் புலமையிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்திருந்த நீதிக்கட்சியில் இருந்தபிராமணரல்லோதோரும் இல்லாமல், 'திராவிடர் கழகம்' பயணித்ததுஎன்பதை  ' இந்தியாவில்வித்தியாசமானதமிழ்நாடு ' என்ற தலைப்பிலான  முந்தையப் பதிவில் பார்த்தோம்.

அதன் தொடர்விளைவாக தமிழ்நாட்டில் அறிவுபூர்வக் கூறுகள் பலகீனமாகி, உணர்ச்சிபூர்வ கூறுகள் வலுவடைந்ததா? என்பதும், அந்த போக்குகளில் சிக்கியதால், தமிழுக்கு பெரும் பாதிப்புகள் விளைந்ததா? என்பதும் ஆய்விற்குரியவையாகும். அந்த பாதகமானப் போக்குகளுக்கு விதி விலக்காக, இடையில் எம்.ஜி.ஆர் முதல்வரான பின்,  கி..பெ.விஸ்வநாதன் போன்றோர் ஆலோசனைகளால், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கி, அரசியல் தலையீடு, ஊழல் போன்றவற்றிற்கும், நிதிப் பற்றாக்குறைக்கும் இடமில்லாமல் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்து, பேரா.வி.அய்.சுப்பிரமணியத்தை முதல் துணை வேந்தராக அமர்த்தினார். தமிழ்ப் பல்கலைக் கழகக் கட்டிடங்கள்,  கணபதி ஸ்தபதி மேற்பார்வையில் பாராம்பரிய வடிவமைப்பில், ஊழலுக்கும், ‘மிசனுக்கும்இடமின்றி உருவாகின.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் இது போன்றவை தமிழுக்கு எதிர்பாராமல் கிடைத்த நல்ல வாய்ப்பாகும்.ஆனால் அந்த பாதகமான போக்குகளில் எம்.ஜி.ஆரும் சிக்கி தோற்றதற்குச் சாட்சியாக, 'ஐந்திறம் சர்ச்சை' (ainthiRam controversy)  விளைந்தது.’ (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

அது போலவே, தமிழ் இசையின் வளர்ச்சியில் எம்.ஜி.ஆர் எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருந்தார்? என்பதையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

மதுரையில் 1981-இல் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில், முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையில், 'திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளில் தமிழிசை எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது?' என்று வீ.பா.கா. சுந்தரம் உரையாற்றினார். உடனே எம்.ஜி.ஆர் மேடையில் ஏறி, 'நான் இப்போது முதல்வர். தமிழிசை வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்? என்று சொல்லுங்கள்; செய்கிறேன்" என்று அறிவித்து; பின் வீ.பா.கா சுந்தரத்தை அணைத்து, அவரின் காதருகே, ", ரி, , , , , நி, தமிழா?" என்று எம்.ஜி.ஆர் கேட்க, உடனே வீ.பா.கா.சுந்தரம் "ஆமாம் ஐயா. வாய்ப்பு தந்தால் நேரில் விளக்குகிறேன்' என்று சொன்னார். அதன்பின் சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி, சில காலம் கழித்து மறைந்தார்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

எம்.ஜி.ஆர் பயணித்த திசையிலிருந்து தடம் புரண்டு, புலமையாளர்கள் நெருங்க முடியாத அளவுக்கு, தாமாகவே சிறையில் சிக்கி ஜெயலலிதா பயணித்தார்; அதன் காரணமாகவே, தி.மு. மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர உதவினார்; அந்த போக்கிலேயே மர்மமான முறையில் மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாகி மரணமடைந்தார்.

எனவே எம்.ஜி.ஆர் வழியில் தமிழ் தொடர்பானவற்றின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தேசியப் போக்கில், தமிழ்நாட்டை வளர்த்தெடுப்பதற்கான சமூக சூழலே, தமிழ்நாட்டில் உள்ளது. அந்த திசையில் காங்கிரஸ் கட்சியும், பா..கவும் பயணிக்காததன் காரணமாகவும், மக்கள் செல்வாக்குடன் புதிய கட்சி தொடங்கிய, தொடங்கும் எவருமே, ஊசலாட்டமின்றி அந்த திசையில் பயணிக்க துணிச்சலின்றி இருக்கும் வரையிலும், தமிழ்நாடானது ஆர்.கே.நகர் பாணியில் தான் பயணிக்கும்;

என்பது எனது ஆய்வு முடிவாகும்

‘வடநாட்டில் பிரதமர் மோடி ஊழலை எதிர்த்து பேசுவதற்கு வரவேற்பு இருக்கலாம்; 'வடநாட்டு லல்லுக்கள்' சிறையில் இருப்பதால்.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி ஊழலை எதிர்த்து பேசினால், அது 'வடிவேல் பாணி' காமெடியாகி விடும்; 'தமிழ்நாட்டு லல்லுக்கள்' பிடியில் தமிழ்நாடு தொடர்வதால்.’ என்பதையும்;


‘தமிழ்நாட்டு அரசியலில் 'கரணம் தப்பினால் காமெடி பீஸ்' என்ற உச்சக்கட்ட காட்சியில் (Climax), தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலினும், பிரதமர் மோடியும் சிக்கியிருப்பதாக, எனக்கு படுகிறது.’  என்பதையும்;


ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘1944இல் முளை விட்டதானது முடிவுக்கு வருகிறது; தமிழ்நாட்டில் அமாவாசைகளின் புரட்சியானது தொடங்கி விட்டது.’ ; http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none.html )

இன்று ஆட்சியில் உள்ள ...தி.மு. வானது, குழுக்களின் சண்டையிலும், ஊழல் குற்றச்சாட்டுகளிலும் சிக்கி பயணிப்பதில் இருந்து மீள்வதாக தெரியவில்லை. ஆர்.கே.நகரில் ரூ20 டோக்கனுள்ளவர்களுக்கு எல்லாம் பணம் போய் சேராத வரையில், உள்கட்சி மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், 'சசிகலா - தினகரன்' கட்சியானது, 'ஆர்.கே.நகர் வெளிச்சத்தில் மறைந்த விட்டில் பூச்சியாகும்' வாய்ப்பும் உள்ளது. 

ஆர்.கே.நகர் பாணியில் பயணித்து, ஆளும் அ.இ.அ.தி.மு.க அல்லது ‘சசிகலா – தினகரன்’ கட்சி, வரும் சட்டமன்ற தேர்த‌லில் ஆட்சியைப் பிடித்தாலும், அதே ஆதாய அரசியல் மூலமாக, அவர்களுக்கு அகல பாதாளம் காத்திருக்கும்;

என்பதற்கு நிகழ்கால சாட்சியாக‌, 2018 மே மாதம் வரை மலேசியாவின் பிரதமராக இருந்த நசீப் துன் ரசாக், அந்த ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்.

No comments:

Post a Comment