Saturday, February 3, 2018



1944இல் முளை விட்டதானது முடிவுக்கு வருகிறது;





தமிழ்நாட்டில் அமாவாசைகளின் புரட்சியானது தொடங்கி விட்டது


தமிழ்நாட்டு அரசியலில் 'கரணம் தப்பினால் காமெடி பீஸ்' என்ற உச்சக்கட்ட காட்சியில் (Climax), தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலினும், பிரதமர் மோடியும் சிக்கியிருப்பதாக, எனக்கு படுகிறது.

அதனை விளங்கிக் கொள்ள வேண்டுமானால், 1967க்குபின் தமிழ்நாட்டில் கிராமம் முதல் நகரம் வரை புதிதாக, தேசியக் கட்சிகளை ஓரங்கட்டி, அரங்கேறிய கீழ்வரும் வலைப்பின்னலையும், அந்த வலைப்பின்னலானது, 'அரசியல் அமாவாசை செயல்நுட்பத்தில்' செல்லரித்து, இன்று 'திராவிடக் கட்சிகளிடமிருந்து விலகி, 'புத்திசாலி' உள்ளூர் மேய்ப்பர்களிடம் சிக்கி, திராவிடக் கட்சிகளின் மேல் மட்டத் தலைவர்களை கோமாளிகள் ஆக்கி வரும் போக்கினையும் புரிந்து கொள்ள வேண்டும்.

‘1967க்குப்பின் அரசு துறைகளில் எந்த அளவுக்கு லஞ்சம் வளர்ந்துள்ளதோ, அந்த அளவுக்கு, அரசை மட்டும் நம்பாமல், 'செல்வாக்குள்ள' நபரின் தயவுடனேயே தான், கிராமம் வரை வாழ முடியும் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது.

பிறப்பு சான்றிதழ், பள்ளியில் சேர்த்தல், சாதி சான்றிதழ், வேலையில் சேர்தல், தொழில்/கடை தொடங்குதல், தெரு ஓரம் வியாபாரம், இறப்பு சான்றிதழ், காவல் நிலையம், நீதிமன்றம் என்று ஒரு மனிதர் பிறந்தது முதல் இறக்கும் வரை, இறந்து இறுதி சடங்கை நிறைவேற்றும் வரை, அந்தந்த காரியங்களுக்கு உதவும்  'செல்வாக்கான' நபரின்,  தயவு தேவைப்படுகிறது.
அப்படிப்பட்ட 'செல்வாக்கான' நபர்கள் தெரு/கிராமம். வட்டம், மாவட்டம், மாநிலம் என்ற அடிப்படையில் வலைப்பின்னல் கொண்ட இரண்டு கட்சிகள் தி.மு. மற்றும் ...தி.மு. ஆகும்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html )

1969க்குப் பிறகு தி.மு. தலைவர் கருணாநிதி முதல்வரான போக்கில், ஆதாய அரசியலானது வலிமை பெற்று வளர்ந்தது. அந்த போக்கில் அரசியல் நீக்கமும் (Depoliticize) வலிமையாகி 'அமாவாசை' செயல்நுட்பமானது, ஆளுங்கட்சியில் 'அதீதமாக' வளர வழி வகுத்தது.

கடந்த 2016 சட்ட மன்ற தேர்தலின் போது, ஆண்ட/ஆளும் கட்சிகளின் தலைமைகளுக்கு அந்தந்த கட்சிகளின் 'அமாவாசைகள்' கொடுத்த 'திருகு வலிகள்' எல்லாம் கடுமையாக இருந்தன.

தலைமைக்கு விசுவாசம் காட்டுவதை விட தமக்கு 'படியளக்கும்' மாவட்ட தலைகளுக்கு 'விசுவாசம்' காட்டும் அமாவாசைகள் எல்லாம், ஆளும்/ஆண்ட கட்சிகளில் அதிகரித்து விட்டார்களா? என்ற கேள்வியை, கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பின், ஜெயலலிதா மூலம் வெளிப்பட்ட கீழ்வரும் சான்று எழுப்புகிறது.

லோக்சபா தேர்தலில், 37 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தோம். அதன்படி, சட்டசபை தேர்தலில், 217 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இரண்டு ஆண்டுகளில், அதிருப்தி ஏற்படும் வகையில், நாம் எதுவும் செய்யவில்லை; ஆனாலும், அதிக இடங்களை இழந்துள்ளோம். இதற்கு காரணம், நம் கட்சியினர் செய்த உள்ளடி வேலைதான். நான் நம்பிய பலர் துரோகம்செய்து விட்டனர். (இவ்வாறு கூறும் போது கண் கலங்கினார்)
சிலர் எனக்கு விசுவாசமாக இருக்காமல், மாவட்ட செயலர்களுக்கும், பிறருக்கும் விசுவாசமாக உள்ளனர்.

தி.மு..,வை வளர விடக்கூடாது என, உழைக்கிறோம். சிலர் அக்கட்சியுடன் கைகோர்த்து, நம் வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர். அவர்கள் பட்டியல் என்னிடம் உள்ளது. பணத்தை பதுக்கியவர்கள் விவரமும் உள்ளது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பதவி இல்லாமல், சாதாரண தொண்டனாக இருக்கும் போது நல்லவராக இருக்கின்றனர். அவர்கள் கஷ்டத்தை பார்த்து, பதவி கொடுத்தால், தங்களுடைய சுயரூபத்தை காட்டுகின்றனர். “ (http://www.dinamalar.com/news_detail.asp?id=1545868 )

எந்த தொகுதியிலும் தி.மு.க-வில் பணத்துக்கு விலை போகாத ஆதரவாளர்களாக இருப்பவர்களில் பெரும்பாலோர் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்கள், என்பது எனது கணிப்பாகும். அவர்களும் 'டெபாசீட்' வாக்குகளின் எண்ணிக்கையை விட குறைவானவர்களே என்பதானது, ஆர்.கே.நகர் தேர்தல் முடிவின் மூலம் வெட்ட வெளிச்சமானது.

அதே போல ...தி.மு.-வில் பணத்துக்கு விலை போகாத ஜெயலலிதாவின் விசுவாசிகள் நடுத்தர. ஏழைப் பிரிவுகளில், குறிப்பாக கிராமங்களில் கணிசமானோர் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் ஜெயலலிதா அப்பொல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பேயே, ஜெயலலிதா சிறைக்கு போனதற்கு சசிகலா குடும்பமே காரணம் என்று அந்த குடும்பத்தின் மீது வெறுப்புடன் இருந்தார்கள். இன்று ஜெயலலிதாவின் மர்மமான சிகிச்சை மற்றும் மரணம் தொடர்பாக வலம் வரும் வதந்திகள் எல்லாம், மீடியாவில் வெளிப்படுவதற்கு முன்பேயே, அவர்களின் உரையாடல்களில் வெளிப்பட்டது எனக்கு வியப்பைத் தந்தது. அது போல அவர்கள் மத்தியில் தி.மு. தலைவர் கருணாநிதி மீது வெறுப்பு வெளிப்பட்ட அளவுக்கு, ஸ்டாலின் மீது வெறுப்பானது வெளிப்படவில்லை என்பதும் எனக்கு வியப்பைத் தந்தது.

போயஸ் கார்டன் மட்டுமல்ல, எவ்வளவு பெரிய அதிகார பீடமாக இருந்தாலும், அந்த அதிகார பீடங்களில் அடிமட்டங்களில் பணியாற்றுபவர்கள் எல்லாம் ஒப்பீட்டளவில் மேல் மட்டத்தில் உள்ளவர்களை விட, மனசாட்சிக்கு கொஞ்சம் பயந்து வாழ்பவர்கள் என்பதும், 'அரண்மனை இரகசியங்கள்'அத்தகையோர் மூலம் கசிவதை, டிஜிட்டல் யுகத்தில், தடுக்கும் வழிமுறைகள் இல்லை என்பதும் எனது கருத்தாகும்.

ஜெயலலிதா மர்மமான முறையில் அப்பொல்லோவில் சேர்ந்தவுடனேயே, பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக ஜெயலலிதாவின் விசுவாசிகள் மத்தியில்;
போயஸ் கார்டனில் இருந்த கேமிராக்களும், ஏற்கனவே உடல்நலக்குறைவில் இருந்த முதல்வருக்கான மருத்துவ கண்காணிப்பும், ஆம்புலன்ஸும் என்னாயிற்று? அப்போல்லோவில் இருந்த கேமிராக்கள் என்னவாயிற்று? எவ்வளவு மோசமான தொத்து நோயாக இருந்தாலும், உரிய நோய்ப்பாதுகாப்பு உடைகளுடன் நோயாளிக்கு வேண்டியவர்கள் பார்க்கும் நடைமுறைகள் எல்லாம் பொது மக்களுக்கு தெரியும், என்பது தெரியாமல் ஆளுநர் உள்ளிட்டு எந்த கட்சித் தலைவரையும் ஏன் அனுமதிக்கவில்லை?

என்று வலம் வந்த, இன்னும் பல‌ கேள்விகளை எல்லாம், அப்போதே ஸ்டாலின் எழுப்பி, சசிகலா குடும்ப அரசியலை எதிர்ப்பதில், சமரச போக்கிற்கான அறிகுறி ஏதுமின்றி பயணித்திருந்தால்;

பணத்திற்கு விலை போகாத ஜெயலலிதாவின் விசுவாசிகளில் பெரும்பாலோரின் ஆதரவினைப் பெற்று

தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதற்கான குவியமின்றி தவித்த போக்கில், .பி.எஸ் புரட்சி செய்து குவியமாவதற்கு முன்பேயே; (‘நிமிர்ந்தது ஓபிஎஸ் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் சுயமரியாதையும் கூட’ ; 
http://tamilsdirection.blogspot.com/2017/02/digital-age-2017.html 

ஸ்டாலின் நம்ப முடியாத அளவுக்கு இன்னும் வலிமையான குவியமாக இருந்த வாய்ப்பினை, 'இரண்டும் கெட்டான்' போக்கில், அப்போல்லோவிற்கு சென்று, கீழ் தளத்துடனே திரும்பி வந்து, ஜெயலலிதா விசுவாசிகளின், பொதுமக்களின் கேலிக்குள்ளான தலைவர்களில் ஒருவராக அவர் வெளிப்பட்டதானது, அவரின் அரசியல் தற்கொலைப் பயணத்தை துவக்கியதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின், பொதுமக்களிடம் அந்த 'மர்ம மரணம்' ஏற்படுத்திய வீச்சினைப் பற்றியும், பொதுமக்களின் கருத்துருவாக்க செயல்நுட்பம் (Public Opinion Mechanism) பற்றியும், புரிதலின்றி;

ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' குறித்த விசாரணை கோருவதற்குப் பதிலாக, சசிகலாவை தரிசித்து ஆதரவு நல்கிய கட்சித் தலைவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், துணை வேந்தர்கள் எல்லாம், 'எந்த அளவுக்கு இழிவான அமாவாசைகளாக' பொது மக்கள் பார்வையில் வெளிப்பட்டார்கள்?

அதன் தொடர்விளைவாக தி.மு., ...தி.மு. மட்டுமின்றி, பா.., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகளிலும் 'அமாவாசைகளாக' யணித்தவர்களின்  'நம்பிக்கை' எந்த அளவுக்கு அதிகரித்தது? வெட்கப்பட்டு 'அமாவாசைகளாக' மாற தயங்கியவர்கள் எல்லாம், அந்தந்த கட்சிகளில் எவ்வாறு அமாவாசைகளாக மாறத் தொடங்கினார்கள்?

என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடைகள் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவில் வெட்ட வெளிச்சமானது.

அதற்கு முன் 2ஜி வழக்கு குற்றவாளிகள் விடுதலையானதும், அதன் தொடர்ச்சியாக நோட்டாவிடம் பா.. தோற்றதும், பிரதமர் மோடியின் ஊழல் ஒழிப்பை தமிழ்நாட்டில் கேலிக்குள்ளாக்கியது மட்டுமல்ல;

பண நீக்கம் மூலமும், ஆதார் மூலமும், ஜி.எஸ்.டி மூலமும் வந்த துயரங்களை எல்லாம், 'மோடியை மீட்பராக' கருதி பொறுத்துக் கொண்ட மக்கள் மத்தியில், மோடி மீது நம்பமுடியாத அளவுக்கு கோபம் அதிகரித்து வருவதையும் அத்தகையோருடன் உரையாடும் போது எனக்கு புரிந்தது.

தமது உள்ளத்தில் உள்ள கருத்தினை மறைத்து, யாருடன் உரையாடினாலும், தனது லாபத்திற்கு/முன்னேற்றத்திற்கு உதவும்  கருத்தையே வெளிப்படுத்தி வாழ்ந்து வரும், மனித இயல்புக்கு விரோதமான மனநோயாளிகள் எல்லாம் பெரும்பாலும் வசதியான, மேல் நடுத்தட்டு பிரிவினர்களாக இருக்கிறார்கள். அத்தகையோரோடு உரையாடினால், தமிழ்நாட்டின் போக்கு பற்றிய சிக்னல்களை அறிய முடியாது. கல்லூரி மாணவர்களும், படித்த இளைஞர்களும் நம் மீது அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தால் மட்டுமே, ஒளிவு மறைவின்றி நம்மிடம் உரையாடுவார்கள். தி.மு.கவை நம்ப வைத்து, ஏமாற்றிய கருத்துக் கணிப்புகள், வெளிப்பட்டதற்கான காரணங்கள் இவையாக இருக்கலாம். 

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் இன்னொரு போக்கும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் வளர்ந்து வருகிறது.

கட்சி அரசியலில் பா.. உள்ளிட்டு அனைத்து கட்சிகளும் 'அமாவாசை சமூக செயல் நுட்பத்தில்' சிக்கி சீரழிந்து வந்தாலும்;

'அரசியல் நீக்கம்' போக்கில் வளர்ந்த 'திராவிட அரசியலானது', தலைவர்களின் வழிபாட்டு போக்கு வளர்ந்த வேகத்தில், அறிவுபூர்வ வலிமையை இழந்ததோடு மட்டுமின்றி, இன்று கல்லூரி மாணவர்கள், மற்றும் படித்த இளைஞர்கள் மத்தியில் 'உணர்ச்சிபூர்வ தமிழ் உணர்வு, பகுத்தறிவு' போக்குகள் எல்லாம் கேலிக்குள்ளாகி;

'இந்தியர்' என்ற அடையாளத்தை நம்பமுடியாத அளவுக்கு வலிமையாக்கி வருவது மட்டுமின்றி,

கம்யூனிஸ்ட் உள்ளிட்டு அனைத்து கட்சிகளிலும் இந்துக்களாக உள்ள ஆதரவாளர்கள் மத்தியில், 'இந்துத்வா' ஆதரவு போக்கினை, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு வளர்த்து வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, தி.மு. வில் உள்ளவர்களில் 90% இந்துக்கள் என்று அறிவித்து, கோவிலுக்கு சென்று, இந்து மதத்தலைவர்களை சந்தித்து,  ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக 'முதல்வராக' இருந்த வாய்ப்பினை 'மயிரிழையில்' இழந்ததையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

‘2011 சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் வென்ற தி.மு. கூட்டணியானது, 2016 சட்டமன்ற தேர்தலில் 98 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வாக்குகள் சேகரிப்பில், 'பொறுப்பு கணக்கில்' (Accountability), ...தி.மு.  எந்த அளவுக்கு பலகீனமாகியது?, தி.மு.கவில் ஸ்டாலின் முயற்சியால்,  எந்த அளவுக்கு பலமானது? என்பதை, 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அவருக்கு, ...தி.மு.கவைப் போல, கட்சிக்குள் 'தடைகளின்றி' செயல்பட வாய்ப்பிருந்திருந்தால், தி.மு. இன்னும் அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்க போட்டி போடும் நிலைக்கு வந்திருக்கக் கூடுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இரண்டு கட்சிகளிலும், சில தொகுதிகளில், 'மிக அதிக வித்தியாசத்தில்' வெற்றி பெற்றதற்கு காரணம்; தொகுதி மக்களுக்கு சேவை செய்ததன் மூலமா? அல்லது 'திறமையான வலைப்பின்னல்மூலமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ 
( ‘2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்பட்ட 'சிக்னல்'; அரசியல் வெளி (Political Space) காலியாகி விட்டதா? அந்த அரசியல் வெற்றிடத்தை ஆக்கிரமிக்கும்,சமூக செயல்நுட்பம்?’; 
http://tamilsdirection.blogspot.com/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html )
 
அவ்வாறு 'மயிரிழையில்' ஆட்சிப் பொறுப்பேற்பதை தவற விட்ட தி.மு.கவானது, ஆர்ட்.கே.நகர் தேர்தலில் டெபாசீட் இழக்கும் அளவுக்கு, 'அமாவாசை' நோயில் சிக்கிய போக்கினை மேலே பார்த்தோம்.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் இந்துத்வா ஆதரவு போக்கிற்கு, வைரமுத்து ஆண்டாள் சர்ச்சையின் மூலம் 'வடிகால் அமைத்து', ஏற்கனவே டெபாசீட் இழந்துள்ள தி.மு.கவை நோட்டாவுடன் போட்டி போட வைக்கப் போகிறதா? என்ற கேள்வியை எழுப்பும் அளவுக்கு;

ஒப்பிட்டளவில் நேர்மையான சுயசம்பாத்தியத்துடனும், அறிவுபூர்வ வலிமையுடனும், பயணிப்பவர்களில் பெரும்பாலோர் 'ஆண்டாள் சந்நிதியில் வைரமுத்துவை மன்னிப்பு கேட்க வைக்கும்' கோரிக்கையில் குவிந்து வருகையில்;

வைரமுத்துவின் ஆதாரம் பொய் என்று நிரூபிக்கப்பட்ட பின்னும், வைரமுத்துவை ஆதரிப்பவர்களின் அறிவுபூர்வ வலிமையானது பலகீனமாகி வருவதும்;

அதிலும் வியப்பாக மோடி மீது வெளிப்பட்டுள்ள கோப அலைக்கு சம்பந்தமில்லாமல், மேலே குறிப்பிட்டுள்ள போக்குகள் வெளிப்பட்டு வருவதும்;

தமிழ்நாட்டில் அடுத்து வரும் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது, என்பது எனது கணிப்பாகும்.

வைரமுத்துவின் பங்களிப்பால், 'ஆண்டாள் சர்ச்சை'யின் மூலமாக;
'திராவிட' பிம்பங்களும், அதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கான தடைகளும் உடைகின்ற போக்கில் தான், அது சாத்தியமாகும். (http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_28.html

அது சாத்தியமாகும் போது தான், கிராமம் முதல் தலைநகரம் வரை பரந்து குவிந்து, தமிழர்களில் கணிசமானோரை தரகர்களாகவும், திருடர்களாகவும், ரவுடிகளாகவும் ஊக்குவித்து வரும் ஊழல் பிரமீடு உடைந்து நொறுங்கும். அந்த ஊழல் பிரமீடு உடைந்து நொறுங்கினால் தான், ஊழல் சுனாமியில் வளர்ந்துள்ள ஆங்கிலவழிக் கல்வி வியாபாரமும் முடிவுக்கு வந்து, தமிழ்வழிக் கல்வியும் (எனவே தமிழும்) தமிழ்நாடும் மானமும் அறிவும் உள்ள மீட்சிப் பாதையில் பயணிக்க முடியும்.

வடநாட்டில் பிரதமர் மோடி ஊழலை எதிர்த்து பேசுவதற்கு வரவேற்பு இருக்கலாம்; 'வடநாட்டு லல்லுக்கள்' சிறையில் இருப்பதால்.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி ஊழலை எதிர்த்து பேசினால், அது 'வடிவேல் பாணி' காமெடியாகி விடும்; 'தமிழ்நாட்டு லல்லுக்கள்' பிடியில் தமிழ்நாடு தொடர்வதால்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தமிழக பா,, மட்டுமல்ல, அதனுடன் கூட்டணி சேரும் கட்சிகளும் நோட்டாவுடன் போட்டி போடுவதை தவிர்க்க வேண்டுமானால்;

தமிழ்நாட்டின் ஊழல் பிரமீடு உடைந்து நொறுங்கி, திராவிட நோயில் சிக்கியசெருப்பு அரசியலிலிருந்து 
(http://tamilsdirection.blogspot.com/2018/01/2-same-side-goal.html)   தமிழக பா.. விடுதலை பெற்றாக வேண்டும்; தமிழும், தமிழ்நாடும் மீட்சியை நோக்கி பயணிக்க வழி செய்து.
(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

தமது கட்சியில் ஊடுருவியுள்ள 'அமாவாசைகளை' எவ்வாறு அடையாளம் கண்டு, அகற்றி, கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்த வலிமையுடன், அடுத்து வரும் தேர்தலை ஸ்டாலின் சந்திப்பார்? என்பதைப் பொறுத்தும்;

தமிழ்நாட்டின் 'திராவிட லல்லுக்களை' எவ்வாறு சிறைக்கு தள்ளி, தமிழ்நாட்டின் ஊழல் பிரமீட்டை பிரதமர் மோடி தகர்க்கப் போகிறார்? என்பதைப் பொறுத்தும்;

'கரணம் தப்பினால் காமெடி பீஸ்' என்ற உச்சக்கட்ட காட்சியில் (Climax),  தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலினும், பிரதமர் மோடியும் சிக்கியிருப்பதாக, எனக்கு படுகிறது


இந்தியர்களில் காலனிய மன அடிமைகளான (Colonization of the Indian Mind) 'காலனிய மன நோயாளி'களிடமிருந்து 'தனித்துவமாக' (Unique) வேறுபட்ட 'திராவிட மன நோயாளிகள்' பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html

அந்த திராவிட மனநோயாளித் தலைவர்கள் ஊக்குவித்து வளர்த்த 'திராவிட அமாவாசைகள்’ எல்லாம் புரட்சி செய்து, அசைக்க முடியாத சக்தியாக இருந்த பிரதமர் மோடிக்கே, தமிழ்நாட்டு அரசியல் சதுரங்கத்தில் 'செக்' வைத்து விட்டார்கள்: ஆட்டம் இன்னும் முடியவில்லை; உச்சக்கட்ட காட்சியில் (Climax) முடிவு தெரியும் காலமும் அதிக தொலைவில் இல்லை.

No comments:

Post a Comment