Thursday, February 1, 2018


'திராவிட பிம்பங்களின்’ துணையில் வளர்ந்த ஊழல் பிரமீடும் உடைகிறதா?


ஆண்டாள் சர்ச்சையும் பேருந்து கட்டண உயர்வும்



 

'தமக்கு தமிழ்த் தாய்ப்பால் கொடுத்த ஆண்டாளை தாம் இழிவுபடுத்துவேனா?' என்று சொல்லி, 'செய்யாத குற்றத்திற்கு வருத்தம் தெரிவித்தேன்' என்று வைரமுத்து தொலைக்காட்சியிலும், கட்டுரையிலும் வெளிப்பட்ட விளக்கத்துடன் ஒப்பிட வேண்டிய பகுதி வருமாறு:

ஆய்வுக்கட்டுரையின் வடிவம், ‘கருது கோளில்’ (hypothesis) தொடங்கி,  ஆய்வுமுறையில்’ (research methodology) மூழ்கி முத்தெடுத்து, இறுதியில்ஆய்வாளரின்கருத்தோடு’ (Conclusion) முடியும். வைரமுத்துவின் கட்டுரை மேற்சொன்ன வகையிலானஆய்வுக்கட்டுரைதான்……………… “அறிவியலாளன் வைரமுத்து, இயற்கை ரசிகன் வைரமுத்து, பகுத்தறிவாளன் வைரமுத்து என தனது பலமுகங்களை வெளிப் படுத்தும்போதே, ‘ஆண்டாள் யார், கண்ணன் யார், நான் யார், தன் கருத்து என்ன என்பவற்றைத் தெளிவாக வெளிப்படுத்திவிடுகிறார்………… தேவர்க்குத் தொண்டு செய்யும் பெண்கள், ‘தேவர் அடியாள்கள் என முதலில் அழைக்கப் பட்டுப் பின்னர், தேவதாசிகள், தேவடியா எனத் திரிந்து விட்டது என்று கருதினால், அந்தத் தொண்டை வைணவ மதத்தின் அனைத்துப் பிரிவுப் பெண்களும் செய்திருக்கவேண்டும். ஆனால் செய்ய வில்லை என்பதே வரலாறு தரும் சான்று. ஆண்டாள் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த பெண்ணில்லை என்று கூறுவதின் மூலம், பார்ப்பனரல்லாத பெண்கள் மட்டுமே தேவதாசிகளாக மாற்றப் பட்டுள்ளனர் என்பதைத் தெளிவு படுத்துகிறார்……… தேவதாசி முறையைச் சந்தைப்படுத்தப் பார்ப்பனர்கள் கடைப்பிடித்த வழிமுறை பற்றி கீழ்வரு மாறு விவரிக்கிறார் வைரமுத்து………..பார்ப்பனரல்லாத பெண்களைப் பார்ப்பனர்களுக்குத் தாசிகளாக மாற்றுவதே நோக்கம். அதற்குப் பயன்பட்டவள்தான் ஆண்டாள்.
(‘திராவிட ஆய்வாளர் வைரமுத்துவின்தமிழை ஆண்டாள்”; http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-jan18/34510-2018-01-31-05-52-07 )

ஆண்டாள் தொடர்பாக 'தேவதாசி' என்ற சொல்லை வைரமுத்து பயன்படுத்தியதற்கான சான்று பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. எனவே வைரமுத்துவின் ஆய்வானது, பிழையான ஆய்வு முறைக்கு (research methodology) முன்னுதாரணமாகாதா? ‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?’ ( http://tamilsdirection.blogspot.in/2016/01/  )  என்று நான் வெளிப்படுத்திய பதிவினை மேற்கண்ட கட்டுரையை வெளியிட்டுள்ள 'கீற்று' இதழின், 'பெரியார்' கொள்கை ஆதரவாளர்களின், பார்வைக்கு அனுப்பியும் இன்று வரை, உரிய சான்றுகளுடன் அதை மறுத்ததாக தெரியவில்லை.

ஆண்டாளை வழிபடும் ஆத்தீக தமிழர்களை நோக்கி, துவக்கத்தில் குறிப்பிட்ட விளக்கத்தைக் கொடுத்த வைரமுத்து; மேலே குறிப்பிட்ட கட்டுரை மூலம் வெளிப்படும் வைரமுத்து; இரண்டில் எது உண்மையான வைரமுத்து? இரண்டுமே நிஜமென்றால், வைரமுத்துவின் இரட்டை வேடப் போக்கிற்கு அது சான்றாகி விடாதா

'இரட்டைக் குழல் துப்பாக்கி' என்று பெருமையுடன் செயல்படும் தி. தமிழ் மொழியையும், இலக்கியங்களையும் தமிழருக்கு கேடென பிரச்சாரம் செய்து பயணிக்க, இன்னொரு குழலான தி.மு.கவோ 'கடவுள் வாழ்த்திற்குப்' பதிலாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' என்று மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலை வெட்டி அறிமுகம் செய்து, கோவை செம்மொழி மாநாட்டில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசைத்த போது எங்கோ பார்த்தபடி அன்றைய முதல்வர் கருணாநிதி அமர்ந்து விட்டு, பின் 'தேசிய கீதம்' இசைத்த போது எழுந்து நின்று (http://www.fx16tv.com/news/did-karunanithi-insult-tamil-thai-vaazhthu), 'தமிழ்த் தாயையும்' அவமதித்த செயலைக் கண்டிக்கும் துணிவற்ற தமிழ்/திராவிட கட்சிகள் எல்லாம்; ( குறிப்பு கீழே)

'தமிழை யார் இனி இழிவு செய்தாலும்' கண்டிப்பதற்கு அருகதை உள்ளவர்களா? அத்தகையோர் பொதுவாழ்விலிருந்து ஒதுங்காமல், உண்மையான தமிழ்ப் பற்றாளர்களின் குரலானது எடுபட வழியுண்டா? தமிழை இழிவுபடுத்தியதைக் கண்டிப்பதிலும் இத்தகைய 'இரட்டை வேடப் போக்கு' தொடர்வதானது தமிழ்நாட்டிற்கு நல்லதா


திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகள் எல்லாம், வெளிச்சத்திற்கு வராமல் தடுத்து வரும் அந்த 'இரட்டை வேடப் போக்கு' ஒழிய வேண்டாமா? (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html  )

அது போலவே;

தமிழ்நாட்டில் ஊழல் பேராசையில் கிரானைட், தாது மணல், ஆறுகள், ஏரிகள், காடுகள் எல்லாம் சூறையாடப்பட்டு, அச்சுறுத்தியும் கொலை செய்தும் தனியார் சொத்துக்களை அபகரித்து, ஊழல் சுனாமியில் ஆங்கிலவழி தனியார் பள்ளிகள் பெருகி, தமிழ்வழிக்கல்வியையும், தமிழையும் சீரழித்து, தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாத மாணவர்கள் அதிகரித்து வரும் போக்குகளை எதிர்க்காமல், அந்த‌ போக்குகளுக்கு காரணமான பிதாக்களை துதிபாடி பிழைத்த கவிஞர்களில் முதலிடம் வகிப்பவர் வைரமுத்து ஆவார்.

வைரமுத்து போன்றவர்களின் 'தமிழ்ப்பணியானது' மேலே குறிப்பிட்ட 'ஊழல் பிதாக்களுக்கு' எந்த அளவுக்கு கவசமாக செயல்பட்டது? ஒரே நேரத்தில் ஆத்தீகத் தமிழர்களையும், 'பெரியார்' போதையாளர்களையும் முட்டாளாக்கி, தமிழ்நாட்டை சூறையாடும் 'இரட்டைக் குழல் இரட்டைவேடப் போக்கிலான' சமூக செயல்நுட்பமானது, அதற்கு துணை புரிந்ததா?

அந்த சமூக செயல்நுட்பத்தில் 'அதி திறமைசாலியான' தி.மு. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவின் காரணமாக, 'தனது வழக்கமான' பணிகளை ஆற்ற முடியாமல் ஒதுங்கியதன் விளைவாக;

இன்று தி.மு. திசை தெரியாமல் பயணிப்பதானது;

'குட்கா' ஊழலில், 'மாநில உரிமைக்கு விரோதமான'(?) மத்திய அரசின் சி.பி. விசாரணை கோரிக் கொண்டே;

ஊழலில் சிக்கி, மூச்சுத் தடுமாறி வரும் தமிழ்நாட்டில் ஆளுநரின், சட்டத்திற்குட்பட்ட ஆய்விற்கு, சாதாரண மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது? என்பது கூட தெரியாமல்;

ஆளுங்கட்சியின் நலனுக்கு உதவும் வகையில், ஆளுநரின் ஆய்வை எதிர்த்து போராடி வருவதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

தமிழ்நாட்டில் 'பிரபல' எழுத்தாளர்களாகவும், 'ஆன்மீக சொற்பொழிவு' உள்ளிட்ட பேச்சாளர்களாகவும், கவிஞர்களாகவும் வலம் வரும் 'அறிவுஜீவிகளும்', அரசியல் கட்சித் தலைவர்களைப் போலவே, அதே வகை நெருக்கடியை, மக்கள் மன்றத்தில் சந்தித்து வருகிறார்கள். ( ‘'மாய உடை அணிந்திருப்பதாக மக்களை ஏமாற்றி, 'நிர்வாணமாக' ஊர்வலம் வந்த; 'அரசனைப் பார்த்து,  கைக்கொட்டி அந்தச் சிறுவன் சிரிப்பது',  வாஸந்திக்கு தெரியவில்லையா?’; http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_12.html ) உலக அளவில் அநீதிக்கு எதிரான போராட்டங்களையும், தியாகங்களையும், தமது 'படைப்புகளின்'(?) 'முதலில்லா மூலதனமாக்கி' (capital without investment), 'உள்ளூர் கொடுங்கோலர்களை உரசாமலும், வாய்ப்பு கிடைத்தால் நேசமாகியும்', தமது வசதி வாய்ப்புகளை பெருக்கும் 'அமாவாசைகளா அவர்கள்?' என்ற கேள்வியையும், அந்த நெருக்கடியானது எழுப்பியுள்ளது.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கட்சித் தலைவர்களின் 'அரசியல் அடித்தளத்தையே' கேள்விக்குறியாக்கும் வகையில், ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின், பா.. ராமதாஸ், வி.சி திருமா உள்ளிட்டு தமிழ்நாட்டு அரசியலில் வலம் வரும் இன்னும் பலதலைவர்களுக்கு உள்ள செல்வாக்குகளின் வலிமையானது;

எந்த அளவுக்கு 'பலகீனமாக'  உள்ளது ? என்பதானது;

அவர்களின் ஆதரவாளர்களில் உள்ள 'அமாவாசைகளின்' எண்ணிக்கையை பொறுத்தது.

எனவே தமது ஆதரவாளர்களில் 'அமாவாசைகள் யார்?' என்று ஆராய வேண்டிய அவசியத்தை, தமிழ்நாட்டில் கட்சித்தலைவர்களுக்கு ஏற்படுத்தி;
ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த சந்தேகப் பார்வையில், 'நாமும் சிக்கி விட்டோமா?' என்ற சந்தேகத்துடன், அந்தந்தகட்சித்தலைவர்களை, தொண்டர்கள் அணுக வேண்டிய நெருக்கடியையும் ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.’ (‘ஜெயலலிதாவின்மர்ம மரணமானது, 'அரசியல் அமாவாசைகளுக்கு' முடிவு கட்டும்; தமிழ்நாட்டின்  சமூக அதிர்ச்சி வைத்தியமா ?’; http://tamilsdirection.blogspot.in/2017/04/1967.html )

ஆக ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னும், கருணாநிதியின் கட்சி அரசியல் செயல் இழப்பிற்குப் பின்னும், ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும், 'அரசியல் அமாவாசைகளின்' ஆட்டங்களை தாக்குப் பிடிக்க முடியாமல் குழம்பியுள்ள சூழலில்; 

தமிழ்நாட்டில் தங்களின் 'வரை எல்லைகள்' தெரியாமல், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பொங்கலுக்கு முன், எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத 'திடீர்' வேலை நிறுத்தம் மூலமாக, மக்களின் கோபக்கனலுக்கு உள்ளானார்கள்

பராமரிக்கப்படாத அரசு பேருந்துகளில் 'எக்ஸ்பிரஸ்' என்ற பேரில் அதிக கட்டணம் கொடுத்து, அதிக நேரம் பயணித்ததையும், நன்கு பராமரிக்கப்பட்ட தனியார் பேருந்துகளில் சாதாரண கட்டணம் கொடுத்து, குறைந்த நேரத்தில் பயணித்ததையும் அறிந்த பொது மக்கள் எல்லாம்;

தனியார் பேருந்துகள் லாபத்தில் ஓட, அரசுப் பேருந்துகள் மட்டும் ஏன் நட்டத்தில் ஓட வேண்டும்?

அந்த லட்சணத்தில் நடந்த திடீர் வேலை நிறுத்தத்தை ஆதரித்த கட்சிகள் மீதும் மேலே குறிப்பிட்ட கோபக்கனலின் ஒரு பகுதி திரும்பியது.

பின் திடீரென உண்மையில் தாங்க முடியாத அளவுக்கு 'திடீர் பெருந்து கட்டண உயர்வானது' மாணவர்கள் உள்ளிட்டு அனைத்து பிரிவினரின் கோபக்கனலை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.

முன்பு 'திடீர்' வேலை நிறுத்தத்தை சமூக பொறுப்பின்றி ஆதரித்த அதே கட்சிகள் இப்போது 'திடீர்' பேருந்து கட்டண உயர்வினை எதிர்த்தால், அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வருமா? மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள் இருப்பதானது, ஆளுங்கட்சிக்கு இன்னும் அதிக சமூக பொறுப்பின்றி ஆளத் தூண்டாதா? அந்த துணிச்சலிலேயே 'திடீர்' பேருந்து கட்டணம் அரங்கேறியுள்ளதா?

அந்த போக்கில், ஆண்டாள் சர்ச்சையில், வைரமுத்துக்கு எதிரான கோபக்கனலானது, தி.மு.கவிற்கு எதிராக திரும்பிய போக்கில்;

தி.மு.கவினரில் யார் யாருக்கு எவ்வளவு தனியார் பேருந்துகள் ஓடுகின்றன? என்ற புள்ளி விபரங்கள் இணையத்தில் வெளி வந்துள்ளன. அதைத் தொடர்ந்து ...தி.மு.கவினரில் யார் யாருக்கு எவ்வளவு தனியார் பேருந்துகள் ஓடுகின்றன? என்ற புள்ளி விபரங்கள் இணையத்தில் வெளி வந்துள்ளன. ஏற்கனவே இலாபத்தில் இயங்கி வந்த அந்த பேருந்துகளில் ஏன் கட்டண உயர்வினை அமுல்படுத்த வேண்டும்? அதைச் செய்யாமல், தி.மு. பேருந்து கட்டண உயர்வினை எதிர்த்து போராடுவதில் நேர்மை உண்டா? என்ற கேள்விகளும் எழத் தொடங்கியுள்ளன?

அரசுப் பேருந்துகள் எந்தெந்த வழிகளில் நட்டமடைகின்றன? பேருந்து வழித் தடங்கள் எல்லாம் ஆண்ட/ஆளும் கட்சியினரின் 'பிடிக்குள்'எவ்வாறு சிக்கின? 'அந்த அரசுப் பேருந்து' நட்டத்திற்கும், 'இந்த தனியார் பேருந்து' லாபத்திற்கும் பங்களிக்கும் வகையில், 'என்னென்ன வகைகளில்' தொடர்புகள் உள்ளன?

'சர்க்காரியா கமிசன்' போல, இன்னும் விரிவான விசாரணை கமிசனின் வளையத்தில் மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடை கண்டு, இரண்டையும் ஒழித்து, 1967க்கு முன் டி.வி.எஸ் போன்று சட்டத்திற்கு உட்பட்டு, திறந்த (Transparent) மற்றும் பொறுப்பேற்பு (Accountability) பண்புகளை வெளிப்படுத்திய, பயணிகளின் அதிகரிப்பிற்கு ஏற்ப, அதிக பேருந்துகளை இயக்கி, பேருந்துகளின் மேற்கூறையிலும், பேருந்துக்குள்ளும் ஆடுமாடுகளைப் போல முண்டியடித்து பயணிப்பதற்கு வழியில்லாத, திடீர்' கட்டண உயர்வுக்கு வழியில்லாத, தனியார் மற்றும் (அரசு போக்குவரத்து துறை சுமையிலிருந்து விடுபடும்போது) ஆர்வமுள்ள அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பிலான தனியார் பேருந்துகள் மூலம்;

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசுப் போக்குவரத்து நட்டத்தை பொதுமக்கள் தலையில் ஏற்றியுள்ள‌, பொதுமக்களுக்கு போதாத பாதுகாப்பற்ற போக்குவரத்து முறையை ஒழிக்க வேண்டும்.

வைரமுத்துவின் பங்களிப்பால், 'ஆண்டாள் சர்ச்சை'யின் மூலமாக;

'திராவிட' பிம்பங்களும், அதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கான தடைகளும் உடைகின்ற போக்கில் தான், அது சாத்தியமாகும். (http://tamilsdirection.blogspot.in/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) அது சாத்தியமாகும் போது தான், கிராமம் முதல் தலைநகரம் வரை பரந்து குவிந்து, தமிழர்களில் கணிசமானோரை தரகர்களாகவும், திருடர்களாகவும், ரவுடிகளாகவும் ஊக்குவித்து வரும் ஊழல் பிரமீடு உடைந்து நொறுங்கும். அந்த ஊழல் பிரமீடு உடைந்து நொறுங்கினால் தான், ஊழல் சுனாமியில் வளர்ந்துள்ள ஆங்கிலவழிக் கல்வி வியாபாரமும் முடிவுக்கு வந்து, தமிழ்வழிக் கல்வியும் (எனவே தமிழும்) தமிழ்நாடும் மானமும் அறிவும் உள்ள மீட்சிப் பாதையில் பயணிக்க முடியும்.

வடநாட்டில் பிரதமர் மோடி ஊழலை எதிர்த்து பேசுவதற்கு வரவேற்பு இருக்கலாம்; 'வடநாட்டு லல்லுக்கள்' சிறையில் இருப்பதால்.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி ஊழலை எதிர்த்து பேசினால், அது 'வடிவேல் பாணி' காமெடியாகி விடும்; 'திராவிட லல்லுக்கள்' பிடியில் தமிழ்நாடு தொடர்வதால்.
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தமிழக பா,, மட்டுமல்ல, அதனுடன் கூட்டணி சேரும் கட்சிகளும் நோட்டாவுடன் போட்டி போடுவதை தவிர்க்க வேண்டுமானால்;
தமிழ்நாட்டின் ஊழல் பிரமீடு உடைந்து நொறுங்கி, திராவிட நோயில் சிக்கியசெருப்பு அரசியலிலிருந்து ( http://tamilsdirection.blogspot.in/2018/01/2-same-side-goal.html  )   தமிழக பா.. விடுதலை பெற்றாக வேண்டும்; தமிழும், தமிழ்நாடும் மீட்சியை நோக்கி பயணிக்க வழி செய்து.

குறிப்பு :

தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் பணிவுடன் நின்றுகொண்டு, கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்திருக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதியை வாழ்த்தும் சுவரொட்டிகளை சென்னையில் பார்த்து நான் அதிர்ந்திருக்கிறேன். பின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மேடையில் அவ்வாறே அவ்வேடமணிந்தவர்கள் கருணாநிதியை வாழ்த்திய செய்தியை, நான் ஊடகங்களில் படித்திருக்கிறேன், இவ்வாறு இந்தியாவில் வேறு எந்த மொழி மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் எதிர்ப்பின்றி நடக்க வாய்ப்பில்லை.

6 comments:

  1. //கோவை செம்மொழி மாநாட்டில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசைத்த போது எங்கோ பார்த்தபடி அன்றைய முதல்வர் கருணாநிதி அமர்ந்து விட்டு, பின் 'தேசிய கீதம்' இசைத்த போது எழுந்து நின்று, 'தமிழ்த் தாயையும்' அவமதித்த செயலைக் கண்டிக்கும் துணிவற்ற தமிழ்/திராவிட கட்சிகள் எல்லாம்;// பாஜக வினர் இதற்கு ஆதாரமாய் வைத்துள்ள வீடியோவில் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது கலைஞர் மற்றும் ஒருவரும் உட்கார்ந்து இருப்பது தெரிகிறது. அவர் உடல்நலிவுற்ற தமிழறிஞர் கா.சிவதம்பி போல் தெரிகிறது. ஆனால் தேசிய கீதத்திற்கு கலைஞர் நிற்பது தொடர்பான ஆதாரம் வெளிப்படவில்லை என்றே கருதுகிறேன். உங்களிடம் ஆதாரம் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. In your link some information are there but no any video attachment.

      Delete
    2. See the photo in the news. Is photo no evidence?

      Delete
    3. If it was true,that was to be condemned also.no exemption to anyone.

      Delete