Sunday, February 11, 2018


தமிழ்நாட்டின் ‘செருப்பு அரசியல் (3);         


 எச் ராஜாவுக்கு முன்னோடியான பிரதமர் நேரு ?



தமிழ்நாடானது மீட்சிப் பாதையில் முன்னேற தொடங்கி விட்டது



'இந்திய விடுதலையை' நிராகரித்து, பிரிவினை கோரிக்கையுடன் பயணித்த .வெ.ரா அவர்களை உணர்ச்சிபூர்வமாக கண்டித்ததில், எச் ராஜாவுக்கு முன்னோடியாக பிரதமர் நேரு இருந்திருக்கிறார். அது போன்ற கண்டனங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் 'தேச கட்டுமானத்தை' (Nation Building) சீர் குலைத்து, பிரிவினை முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுத்து வந்துள்ளன.

1857 முதலாம் விடுதலைப் போரானது வெற்றி பெற்றிருந்தால், இன்று இந்தியாவில் 50க்கும் அதிகமான அரசாட்சிகள், இன்றைய 'பூடான்' போல, இந்திய வரைபடத்தை நிரப்பியிருக்கும், என்பதை மறந்தும்;

இந்திய விடுதலைக்கு முன், .வெ.ராவின் 'திராவிடநாடு பிரிவினை' கோரிக்கையை, ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும் ஆதரித்திருந்தார்கள், என்பதை மறந்தும்;

இந்திய விடுதலைக்குப்பின் நடந்த 1952 பொதுத் தேர்தலில், .வெ.ராவின் பிரிவினையை கோரிக்கையை ஆதரித்த வேட்பாளர்கள் பெற்ற வெற்றியில், காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், 'கட்சித் தாவல்' மூலமே காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடிந்தது, என்பதை மறந்தும்;

அதன்பின் முதல்வர் காமராஜரை .வெ.ரா ஆதரித்த போக்கில், 1957 தேர்தலில் தான் காங்கிரஸ் உண்மையான ஜனநாயக முறையில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது, என்பதை மறந்தும்;

அதற்குப் பிறகு,  சீனப் போருக்குப் பின், தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த பிரதமர் நேரு, பொதுக்கூட்டத்தில் .வெ.ராவின் பிரிவினை கோரிக்கையைக் குறிப்பிட்டு, கோபமாக 'இந்தியாவில் இருக்கப் பிடிக்கவில்லையென்றால், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்' என்று பேசினார்.  அதற்குப் பின் நடந்த 1967 தேர்தலில் தமிழ்நாட்டின் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட‌ காங்கிரஸ் கட்சியானது, இன்றுவரை திராவிடக்கட்சிகளின் வாலாகவே பயணித்து வருகிறது.

எனவே எச்,ராஜா போன்ற பா.. தலைவர்கள் எல்லாம் .வெ.ராவை, நேரு பாணியில், உணர்ச்சிபூர்வமாக கண்டிக்கும் வரையில், தமிழ்நாட்டில் பா..கவானது நோட்டாவுடன் தான் போட்டி போட வேண்டியிருக்கும்.

சுயலாப நோக்கின்றி வாழ்ந்து, மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள தலைவர்களை இழிவுபடுத்தி கண்டிக்கும் தலைவர்கள் உள்ள எந்த‌ கட்சியும் தமிழ்நாட்டில் எடுபட முடியாது.

தனது திரைப்படம் தோல்வியடைந்ததால் மனமுடைந்த தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர், தமது பூஜை அறையில் இருந்த முருகன் சிலையை செருப்பால் அடித்து விட்டு, பின் அதே சிலையை கட்டிப்பிடித்து அழுத சம்பவத்தை அவரே பத்திரிக்கையில் வெளிப்படுத்தினார்.

நமது நலனில் அக்கறை உள்ளவர் என்று நாம் மிகவும் மதிக்கும் நபர், நமக்கு பிடிக்காத செயலை செய்யும் போது, அவர் மேல் கோபப்படாமல் வருத்தப்படுவதே பொதுவான மனித இயல்பு ஆகும்.

பொது மக்களுக்கும் பொதுச்சொத்துக்கும் பங்கமின்றி, தமது காசில் கடையில் விற்ற பிள்ளையார் பொம்மைகளை விலைக்கு வாங்கி உடைத்தல் போன்ற போராட்டங்களை ஈ.வெ.ராவும், அவர் கட்சியினரும் நடத்திய போது, அதை அவ்வாறு பொறுத்துக் கொண்ட ஆத்தீகர்கள் தான் அந்த காலக்கட்டத்தில் இருந்தார்கள். மாறாக ' பெரியாரை செருப்பால் அடிப்பேன்' என்று உணர்ச்சிகரமாக பேசி விட்டு, பின் தேர்தலில் ஆதரவு கேட்டு திராவிடக் கட்சி தலைவர்களின் வாசலை மிதிக்கும்; தமது குடும்ப விழாக்களுக்கு அவர்களை அழைக்கும்; 'இரட்டை வேட' பக்தர்கள் அந்த காலக்கட்டத்தில் வாழவில்லை.’ (http://tamilsdirection.blogspot.in/2018/01/2-same-side-goal.html )

'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்களுடனும் 'திராவிட நாடு பிரிவினை'கோரிக்கையுடன் பயணித்த ஈ.வெ.ராவின் வெறுப்பு அரசியலை ஆத்தீக தமிழர்கள் எல்லாம் பெருந்தன்மையுடன் பொறுத்துக் கொண்ட போக்கில்,  'பிரிவினை' கோரிக்கைகள் எல்லாம் சர்வதேச அரசியல் மாற்றங்களில் 'பகடைக்காயாக' மாறி வருவது பற்றிய தகவல்கள் எல்லாம், ஆங்கிலம் தெரியாத ஈ.வெ.ராவின் பார்வைக்கு வந்ததாக, அவரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் வெளிப்படுத்தவில்லை. 'கடந்த கால அடிமையாக' அவர் பயணித்ததால், மாணவர்களிடமிருந்தும், இளைஞர்களிடமிருந்தும் அவர் அந்நியமான வேகத்தில், அவர்கள் மத்தியில் தி.மு.கவின் கவர்ச்சிகர பேச்சுக்கும், எழுத்துக்கும் செல்வாக்கானது அதிகரித்தது.

1967 வரை தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா மட்டுமே முன்னெடுத்த 'வெறுப்பு அரசியலானது' அவரையும், அவரது கட்சியையும் மக்கள் செல்வாக்கில் பலகீனப்படுத்தி வந்த போக்கின் உச்சக்கட்டமாக, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அவர் கண்டித்ததானது மக்களிடம் எடுபடாமல் போனதுடன், அந்த போராட்டத்தில் போராடிய மாணவர்களால் அவர்  அவமதிக்கப்பட்டார். 

‘1944க்கு முன் இருந்த தமிழ்நாடு எப்படி இருந்தது? இன்று தமிழ்நாடு எப்படி இருக்கிறது? முகப்புத்தகங்களில அவரவருக்கு பிடிக்காத தலைவர்கள் பற்றி எவ்வளவு இழிவாக எழுத்துக்கள் மூலமாகவும், படங்கள் மூலமாகவும் இழிவுபடுத்துகிறார்கள். அவ்வாறு தமக்குப் பிடிக்காத தலைவர்களை இழிவுபடுத்துவதில்  மட்டும் இந்துத்வா ஆதரவாளர்கள்/எதிர்ப்பாளர்கள், பெரியார் ஆதரவாளர்கள்/ எதிர்ப்பாளர்கள் என்று உணர்ச்சிபூர்வ போதையாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட உணர்ச்சிபூர்வ இழிவு போக்குகள் முடிவுக்கு வர வேண்டாமா?’ (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

தி.மு.கவில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் 1967வரை ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி கண்டித்து பயணித்த போக்கிலிருந்து ஆண்ணா வேறுபட்டு, எந்த தலைவரின் மீதும் தனிப்பட்ட முறையில் கண்டித்து இழிவுபடுத்தும் 'வெறுப்பு அரசியலில்' ஈடுபடாமல், எதிர்க் கொள்கையாளர்களின் தியாகங்களையும் 'மதிக்கும் அரசியலை' முன்னெடுத்து பயணித்ததால் தான், 1967இல் முதல்வரான பின்னும், ஆட்சியில் சிக்கல்களை சந்தித்த போதெல்லாம், 'ஈகோ'(Ego)வில் சிக்காமல், காமராஜரிடம் ஆலோசனைகள் கேட்டார். காமராஜரும் அவருக்கு ஆலோசனைகள் கூறினார்.

தமது வாழ்வில் உண்மையாகவும், நேர்மையாகவும், தமது கொள்கைக்காக இழப்புகளை சந்தித்து வாழ்பவர்கள், நமக்கு எதிரான கொள்கையில் பயணித்தாலும், மதிக்கத்தக்கவர்களே ஆவர். அவர்களோடு அறிவுபூர்வமாக விவாதத்தினை முன்னெடுக்கும் போது, அவர்கள் அறிவுக்கு உண்மை வெளிப்படும்போது, அவர்களும் உண்மையின் திசையிலேயே பயணிப்பார்கள்.

நான் 1970களின் பிற்பகுதியில் தஞ்சை சரபோசி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில், பெரியார் இயக்கத்தில் தீவிரமாக பங்களித்த காலத்தில்;

'விடுதலை' நாளிதழை தினமும் (Dept Staff Room) துறை ஆசிரியர்கள் அறைக்கு எடுத்து வருவேன். சக பிராமண பேராசிரியர்கள் அதை படிப்பார்கள். சில சமயம் அது தொடர்பாக விவாதிப்பார்கள். கல்லூரியில் பொதுப் பிரச்சினைகளுக்கு நீதி கேட்டு நான் போராடிய போது, அவர்கள் எல்லாம் எனக்கு பக்க பலமாக இருந்தார்கள். அவ்வாறு நான் முன்னெடுத்த போராட்டங்களுக்கு கல்லூரி முதல்வரின் வெறுப்பை பற்றிய கவலையின்றி,துணிச்சலுடன் எனக்கு பக்க பலமாக இருந்த குடுமி, பஞ்சகட்ச உடையிலேயே கல்லூரிக்கு வரும் (தற்காலிக) சமஸ்கிருத பேராசிரியராக இருந்த ரகுராமனை, போதுமான மாணவர்கள் சமஸ்கிருத வகுப்பில் சேரவில்லை என்ற அடிப்படையில், கல்லூரி முதல்வர் அவரை பணி நீக்கம் செய்ய முயற்சித்த போது, அதை எதிர்த்து, அவரின் பணியைக் காப்பாற்றுவதிலும் நான் முக்கிய பங்கு வகித்தேன். நான் மறந்திருந்தாலும், இன்றும் என்னை சந்திக்கும் போதெல்லாம், அதனை அவர் நன்றியுடன் நினைவு படுத்தி, உரையாடுவார்.

மார்க்சிய- வெனினிய கொள்கையை அறிவுபூர்வமாக விமர்சித்து காலத்தில், அந்த கொள்கையாளர்களுடன்  நல்லுறவிலேயே இருந்தேன்.. உடன்படும் நிலைப்பாடுகளில் ஆதரவளித்தும் பயணித்திருக்கிறேன். தஞ்சையில் நடந்த 'தமிழ் மக்கள் இசை விழா'வில் ஒவ்வொரு வருடமும் பங்கேற்று ஆய்வுரையும் நிகழ்த்தியிருக்கிறேன்.

அன்று ஈ.வெ.ரா வின் கொள்கைகளை ஏற்று வாழ்ந்த காலத்திலும் சரி;

இன்று அவரின் கொள்கைகளை, எனது ஆய்வுகளின் அடிப்படைகளில், அறிவுபூர்வமாக விமர்சித்து வரும் இக்காலத்திலும்;

தமது வாழ்வில் உண்மையாகவும், நேர்மையாகவும், தமது கொள்கைக்காக இழப்புகளை சந்தித்து வாழ்பவர்கள், நமக்கு எதிரான கொள்கையில் பயணித்தாலும், அவர்களை நான் மதித்து பழகுகிறேன்; அவர்களும் அது போலவே, என்னையும் மதித்து பழகுகிறார்கள்.


'எந்த பக்கம் காற்றடிக்கிறது?' என முன்கூட்டியே 'நுகர்ந்து' வாழும் 'அமாவசைகளின் புரட்சியில்' சிக்கியுள்ள நாடாக தமிழ்நாடு இன்று இருக்கிறது. (http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none.html ) அமாவாசைகள் படை சூழ வாழும் தலைவர்கள் எல்லாம், அந்த அமாவாசைகளில் யார், யார், எப்போது, எப்படி முதுகில் குத்துவார்? என்ற அச்சத்துடனே, சாகும் வரை வாழும் வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா, எத்தனை ஆயிரம் கோடி கொள்ளையடித்த சொத்து இருந்தாலும் ?

தமது சொந்த வாழ்விலும், பொது வாழ்விலும் 'சுயலாப' வியாபாரிகளாக வாழ்பவர்களில் (திருக்குறள் 813-இன்படி 'கள்வர்'), என்னை அறிந்து, என்னை மிகவும் பாராட்டி நெருக்கமாக முனைபவர்களை எல்லாம், மிகுந்த எச்சரிக்கையுடன், என்னை அண்ட விடாமல், அத்தகையோரை எல்லாம் சமூக நோய்க்கிருமிகளாக கருதி, அந்த‌ சமூக நோய்க்கிருமிகளின் வாடையின்றி  நான் வாழ்கிறேன். இந்துத்வா ஆதரவாளர்களாக இருந்தாலும், எதிர்ப்பாளர்களாக இருந்தாலும் உணர்ச்சிபூர்வமாக தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி கண்டிப்பவர்களை எல்லாம், எனது சமூக வட்டத்தில் நான் அனுமதிப்பதில்லை.

‘‘திறந்த மனதின்றி, கோபத்துடன் வாழ்பவர்களின் மூளையில், சமூகத்தில் வெளிப்படும் 'சிக்னல்களை' தவறாக புரிந்து கொண்டு, தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புகள் இருப்பதை, ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. ; People with anger disorder wired to misunderstand social cues: New study; http://www.dnaindia.com/health/report-people-with-anger-disorder-wired-to-misunderstand-social-cues-says-study-2232386  ) என்பதையும்;

‘மீடியா வெளிச்சத்தில் வெளிப்படையாக 'பாராட்டு, புகழ்' போதையில் வலம் வருபவர்களை விட, மீடியா வெளிச்சத்திற்கு வராமல், பாராட்டு, புகழ் உள்ளிட்ட போதைகளில் சிக்காமல்;

அடி ஓட்டத்தில் (under current) பயணிப்பவர்களின் முயற்சிகளே, சமூக அரசியல் மாற்றங்களில் தீர்மானகரமான (Decisive) செல்வாக்கு செலுத்துகின்றன.’ என்பதையும்;

அவ்வாறு கடந்த சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக, தமிழ்நாடு பயணித்த வந்த போக்கில், தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேறிய ' கச்சத் தீவு' தொடர்பான தீர்மானம் உள்ளிட்டு, நான் மீடியா வெளிச்சத்திற்குள் வராமல் பங்களித்த பலவற்றில் சிலவற்றை குறிப்பிட்டும்;

ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘நாடு பயணிக்கும் போக்கில்:
நாம் எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும்?’; http://tamilsdirection.blogspot.in/2016/07/blog-post.html )

ஆண்டாள் சர்ச்சையில் எச்.ராஜா வைரமுத்துவை தனிப்பட்ட முறையில் இழிவு படுத்தியதை ஓரங்கட்டி, அறிவுபூர்வ விவாதங்கள் இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியில் வெளிப்பட்டு வருகின்றன. (http://tamilsdirection.blogspot.in/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) ஆனால் இன்றுவரை ஆண்டாள் தொடர்பாக‌ தான் பயன்படுத்திய ஆதாரம் பொய் என்று அம்பலமான பின்னும், 'தவறே செய்ய வில்லை' என்று வைரமுத்து சாதிப்பது அறிவுபூர்வ போக்காகுமா?

ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை கோராமல், சசிகலாவை தரிசித்து ஆதரவு நல்கிய இந்துத்வா எதிர்ப்பு தலைவர்களை, 'இந்துத்வா எதிர்ப்பு  அறிவுஜீவிகளில் எவராவது கண்டித்திருந்தால், அது பாராட்டத்தக்கதாகும். இல்லையென்றால், தமிழ்நாட்டில் இந்துத்வா எதிர்ப்பு என்பது ' திராவிட ஊழல் பாதுகாப்பு' கவசமாக பொதுமக்கள் பார்வையில் வெளிப்படாதா? அத்தகைய இந்துத்வா எதிர்ப்பு முகாம்களில் வெளிப்படும் உணர்ச்சிபூர்வ பேச்சுக்கள் எழுத்துக்கள் எல்லாம், கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகாதா?

இந்துத்வா ஆதரவு முகாமில் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் உணர்ச்சிபூர்வ பேச்சுகள் எல்லாம் செல்வாக்கு இழந்து, அறிவுபூர்வ விவாதங்கள் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில்;

இந்துத்வா எதிர்ப்பு முகாமில், செய்த தவறை ஒப்பு கொள்ள மறுக்கும் போக்கு வளர்ந்து வருமானால்;

சமூக கோளக்கொல்லை பொம்மையாகி விட்ட இந்துத்வா எதிர்ப்பில், தமிழ்நாடு 'காவிமயமாகி' வருவது வெட்ட வெளிச்சமாகி வரவில்லையா?



'கால தேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாத கொள்கைகள் எல்லாம் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய கழிவுகளாகும். நீண்டகாலமாக கழிவு அகற்றப்படாமல் பயணிக்கும் கட்சிகளும், காலப் போக்கில், சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய கழிவுகளாகும். 'பெரியார் கட்சிகள்' எல்லாம் அந்த நிலையை நெருங்கிக் கொண்டிருப்பதாக, நான் கருதுகிறேன். 'இந்துத்வா எதிர்ப்பு' என்பதானது, சமூக கோள‌க்கொல்லை பொம்மையாகி வருவதும், அதன் விளைவே என்பதும் எனது கருத்தாகும்.

‘பொதுவாழ்வு வியாபாரிகளின் நிறமாக‌ 'கறுப்பு''ம், அந்த 'கறுப்பின்' வால்களாக தேர்தல் அரசியலில் பயணித்த வந்த சிகப்பும்;

'காவி'க்கும் தமிழுக்கும் உள்ள வரலாற்று ரீதியிலான ஆழமான தொடர்பை விளங்கிக் கொள்ளாமல், 'மேற்கத்திய முற்போக்கு' குறிப்பாயத்திற்கு (Western Paradigm) அடிமையாகி, ‘காவியை' சமஸ்கிருதத்தின் 'ஏகபோக'மாக கருதி, 'காவிமய ஆபத்து' என்ற போர்வையில், 'காவிமய' எதிர்ப்பில்' ஒன்றாகி;

(குறிப்பு கீழே )

கட்சி சாரா மாணவர்கள், இளைஞர்களின் சுயநலம் பாரா உண்மையான பொதுநல அக்கறையில் 'சுனாமி'யாகும் போக்கில், அலையாக வெளிப்பட்டுள்ள சமூக ஆற்றல்களின் கோபத்திற்கும் வெறுப்புக்குமான குவியமாகியுள்ள‌, 'சசிகலா குடும்ப அரசியல்' பாதுகாப்பு முயற்சியில், சுவடின்றி அழியப் போகிறர்களா?

அல்லது சமூக ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்கப் போகிறர்களா?’ (http://tamilsdirection.blogspot.in/2017/02/depoliticize11-identity-rescueoperation.html )
எப்படி இருந்தாலும், உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலை ஓரங்கட்டி, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்து, தமிழ்நாடானது மீட்சிப் பாதையில் முன்னேற தொடங்கி விட்டது. 


குறிப்பு :

உணர்ச்சிபூர்வ போக்குகளை கண்டித்து, அறிவுபூர்வ விவாதத்தினை முன்னெடுக்கும் ராஜிவ் மல்கோதராவின் இந்துத்வா;



உணர்ச்சிபூர்வ இழிவுபடுத்தும் போக்கினை வெளிப்படுத்தும் எச்.ராஜாவின் இந்துத்வா;



என்று பிரித்துணராத வகையில் இந்துத்வாவை அணுகுவது போலவே;

'காவியும்' அணுகப்படுகிறது.



'காவி' தொடர்பான நிறமும், மருத்துவ குணமும், அந்த‌ செடியும் உலக அளவில் பல நாடுகளிலும் முக்கியத்துவம் பெற்றவை. இதுவரை கிடைத்துள்ள சான்றுகளின்படி, மேற்கு ஆசிய பகுதியிலிருந்து, காஷ்மீர் வழியாக இந்தியாவில் அறிமுகமானது காவியாகும். அநேகமாக புத்த மதம் மூலமாக மத வழிபாட்டில் நுழைந்திருக்கலாம். ( https://en.wikipedia.org/wiki/Saffron  )



இந்தியாவில் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் 'காவி' தொடர்பான சான்றுகளையும் தேடி சேகரித்து வருகிறேன். காவியானது தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பில்லாத, சமஸ்கிருதத்தின், காலனியம் மூலம் நுழைந்த 'பிராமண' அடையாளத்திற்குப்பட்டவர்களின், ஏக போக அடையாளமாக, 'இனம்', 'சாதி' திரிதலைப் போல, நுழைந்திருக்கலாம், என்று கருதுகிறேன். போதுமான சான்றுகள் கிடைத்தபின், தமிழுக்கும், தமிழர்களுக்கும் காவிக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.

No comments:

Post a Comment