நிமிர்ந்தது
ஓபிஎஸ் மட்டுமல்ல;
தமிழ்நாட்டின்
சுயமரியாதையும் கூட
‘'ஜெயலலிதா'
என்ற கேடயத்தின் வலிமை பற்றிய, அந்த 'வலிமையை' இழந்து, 'அந்த கேடயத்தின் இடத்தை
ஆக்கிரமிப்பதில்' உள்ள 'புதை குழிகள்' பற்றிய,
'அறியாமையில்', டிஜிட்டல் யுகத்தில் (Digital Age),
"அப்போல்லோ மருத்துவமனையையும் போயஸ் தோட்டமாகவே கருதிக் கொண்டு, யாரையும் உள்ளே விட மறுத்த சசிகலாவுக்கு
"சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறோம்" என்று அப்போது உறைத்திருக்க நியாயமில்லை" ( 'புதிய ஜனநாயகம்';ஜனவரி 2017) என்பதன் விளக்க உரையே, இனி நடக்க இருக்கும்
வரலாறு ஆகும்.’;( ‘'மாய உடை அணிந்திருப்பதாக
மக்களை ஏமாற்றி, 'நிர்வாணமாக' ஊர்வலம் வந்த; 'அரசனைப் பார்த்து, கைக்கொட்டி
அந்தச் சிறுவன் சிரிப்பது', வாஸந்திக்கு
தெரியவில்லையா?; http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_12.html
)
தமிழ்நாட்டில்
முதல்வர் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா நீதிமன்ற தண்டனை மூலம் பெங்களுருவில் சிறை சென்றவுடன், தமிழ்நாட்டில்
காவல் துறையின் கைகள் கட்டப்பட்டு, ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையை, தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ள
எவரும் மறக்க முடியாது. ( http://www.thehindu.com/news/national/tamil-nadu/violence-erupts-in-tamil-nadu-after-jayalalithaa-conviction/article6452826.ece)
சொத்துக்
குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் உச்ச
நீதிமன்ற தீர்ப்பு வர உள்ள நிலையில்,
அதுவரை ஆளுநர், தமிழக முதல்வர் பிரச்சினையில் முடிவெடுக்க தாமதிப்பதில், சட்டப்படி தவறில்லை என்பதையும் முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொராப்ஜியும்
கருத்து தெரிவித்து உள்ளார். ( "Governor can defer the swearing-in
till the verdict of the Supreme Court,'' Sorabjee told TOI .”; http://timesofindia.indiatimes.com/india/governor-likely-in-tamil-nadu-today-but-may-bide-time-over-sasikalas-ascension/articleshow/57049809.cms
)
மேலே
குறிப்பிட்ட பின்னணியில், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல், சசிகலாவின்
பொதுச் செயலாளர் பதவியானது, தேர்தல் கமிசனால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், உடனே முதல்வராக ஆளுநரை
கட்டாயப்படுத்தவதானது, தமிழ்நாட்டின் பொதுநலனுக்கு எதிரானது ஆகாதா? சசிகலாவை ஆதரித்து வந்துள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும், தி.க தலைவர்
கி.வீரமணிக்கும் அது தெரியாதா?
சசிகலாவின்
பொதுச்செயலாளர் நியமனத்தை, தேர்தல் கமிசன் நிராகரித்துள்ள நிலையில், அடுத்து வரும் இடைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.கவின்
சார்பில் போட்டியிட, 'பொதுச் செயலாளர்' கையெழுத்தை எவரும் போடமுடியாத இக்கட்டான நிலையில், அக்கட்சி உள்ளது.
அந்த
சிக்கலை சரி செய்யாமல், எம்.எல்.ஏ ஆக
இல்லாத சசிகலா, 'முதல்வராக' முயற்சிப்பதானது, சட்டப்படி சரியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இயற்பியலில்
(Physics), வளையும் தன்மையுள்ள
(Elastic) பொருட்களின் வளையும்
தன்மைக்கும், 'மீட்சி எல்லை' (Elastic Limit) என்று
ஒன்று உண்டு. அதற்கு மேலும் வளைத்தால் அப்பொருள் உடைந்து விடும்; அல்லது அந்த எல்லையை நெருங்கும்
போது, மீட்சி விசையும் பெருமமாகி, தம்மை பிடித்து வைத்திருக்கும் கரங்களில் இருந்து, 'திமிறி' வெளியேறி விடவும் வாய்ப்புண்டு.
தமிழ்நாட்டில்
அரசியல் இயற்பியலில்( Political Physics), 'சுயலாப' நோக்கில் ஜெயலலிதாவை, 'வளைந்து' வணங்கி வந்தவர்களில், 'தமது வளைவிற்கு' எதிர்பார்த்த
பலன் கிடைக்காத காரணத்தால், 'திமிறி' வெளியேறி, தி.மு.கவில்
சேர்ந்து, அக்கட்சித் தலைவருக்கு 'வளைந்து' பலன் பெற்றவர்களும் இன்னும்
அரசியலில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசியலில்
'எஜமானருக்கு' துணையாக எவ்வளவு காலம் இருந்தாலும், எஜமானரின் மறைவிற்குப் பின், 'சூழ்ச்சிகரமாக' அந்த எஜமானர் இடத்தை
அந்த துணையாள் பிடித்தாலும்;
தமது
'வரை எல்லைகள்'(limitations) தெரியாமல்,
அந்த எஜமானரின் கட்டமைப்பை(Structure) 'வளைத்தால்', அந்த கட்டமைப்பே அந்த
துணையாளின் 'சமாதி' ஆகிவிடும், என்பதை நிரூபிக்கும் வகையில், சசிகலா பயணிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இயற்பியல் மீட்சியியலில் (Elasticity in Physics) இல்லாத, அரசியல் இயற்பியல் தொடர்பான மீட்சியியலில் ( Elasticity in Political Physics) வெளிப்பட்டுள்ளது இதுவாகும்.
இயற்பியல் மீட்சியியலில் (Elasticity in Physics) இல்லாத, அரசியல் இயற்பியல் தொடர்பான மீட்சியியலில் ( Elasticity in Political Physics) வெளிப்பட்டுள்ளது இதுவாகும்.
காலில் விழுவதையும், ஆடம்பர பேனர்கள் வைப்பதையும் கண்டித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சியிலும், இன்றைய முதல்வர் தேசிய கொடி ஏற்றிய குடியரசு தின நிகழ்ச்சியிலும் பங்கேற்று, தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியை வெறுப்பவர்களில் பலரும் ஆதரிக்கத் தொடங்கும் அளவுக்கு, 'அரசியல் நாகரீகத்துடன்', தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பயணிக்கும் திசைக்கு எதிரான, 'அரசியல் தற்கொலை' திசையில், முதல்வர் ஓபிஎஸ்ஸை அவமதித்து, சசிகலா பயணிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சசிகலாவின்
"சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளும்' முயற்சியில், அரசியல் விஞ்ஞானத்தில்( Political Science) புதிய
ஆராய்ச்சிக்கு வழி வகுக்கும் 'ஓபிஎஸ்
நிகழ்வு' ( ‘OPS PHENOMENON’ ) என்பதானது வெளிப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சமாதியில் 'தியானம்' இருந்து, பின் உலகிற்கு அறிமுகமாகியுள்ள
தமிழ்க முதல்வர் ஓபிஎஸ், தமிழ்நாட்டு அரசியல் போக்கில், 'தனித்துவமான' (Unique) மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதனை கீழ்வரும் கட்டுரை
நன்கு விளக்கியுள்ளது.
‘தமிழகக்
கட்சி வரலாற்றில் உட்கட்சி ஜனநாயகம் மேலோங்கி இருப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சியில் கூட, ஜனநாயகம் இருப்பதான
தோற்றத்தை ஏற்படுத்தியுள்ள, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கட்சியிலும் கூட, இத்தகைய நெருக்கடியில்
ஒருவர் வெளியில் வந்து கூட கட்சித் தலைமையை
எதிர்த்தோ அல்லது கட்சிக்குள் நிலவி வரும் ஆதிக்கவாத சக்திகளை எதிர்த்தோ இப்படி பேசுவது நடவாத காரியமாகும்.
இந்த
வகையில் பன்னீர்செல்வத்தின் பேச்சு ஏதோ அதிமுக-வை
கைப்பற்றும் சக்திகளுக்கு எதிரானதாக மட்டுமல்லாது, பொதுவாக எந்த ஒரு அமைப்பிலும்
தனி மனிதன் தீமைக்கு எதிராக செயல்படுவதன் உத்வேகத்தையும் கடமையுணர்ச்சியையும் அரசியலுக்கப்பாற்பட்டு, அற ரீதியாக நிலைநாட்டுவதாக
அமைந்துள்ளது என்ற கோணத்திலும் பார்க்க
வாய்ப்புண்டு.
இந்த
வெளிப்படையான நிதானத்திற்குப் பிறகான உண்மை வெளிப்பாட்டிற்கு புறக்காரணங்களைக் காரணம் காட்டி, 'இவரால் தூண்டப்பட்டார்', 'ஏன் இதனை அவர்
முன்னமேயே கூறவில்லை' என்று பல்வேறு விதமாக சந்தேகங்களைக் கிளப்புவது என்றும் எடுபடப்போவதில்லை. ஏனெனில் பன்னீர்செல்வத்தின் உண்மை வெளிப்பாடு இந்த ஹேஷ்யங்களையும் அரசியலுக்கே
உரித்தான யூக சொல்லாடல்களையும் உடைத்து
நொறுக்கியுள்ளது.
இதற்கு
முன்பு பலரும் 'காலில் விழும் கட்சி', 'அடிமைகள்' 'உட்கட்சி ஜனநாயகம்' இல்லாத கட்சி என்றும் வர்ணிக்கப்பட்ட ஒரு கட்சியிலிருந்து, கேலி
பேசப்பட்ட கட்சியிலிருந்து இத்தகைய போர்க் குரல் வெளிவந்திருப்பது தமிழகத்தில் செயல்படும் 'உட்கட்சி ஜனநாயகம்' இருப்பதான மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ள கட்சிகளுக்குமே பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பேட்டி என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.’
(‘ஓபிஎஸ்
'கெத்து' பேட்டியும் ஓர் உளவியல் பார்வையும்!’-
முத்துக்குமார்; http://tamil.thehindu.com/opinion/blogs/ & http://tamil.oneindia.com/news/tamilnadu/we-must-prevent-the-mafia-from-capture-the-power-the-state-273736.html )’
ஈ.வெ.ரா அவர்களின்
கொள்கையில் 'மயங்கி', 'பார்ப்பன எதிர்ப்பிலான தனித் தமிழ்நாடு' போதையில், 'இயற்பியல் பேராசிரியராக' பணியாற்றி, பயணித்து
வந்தவன் நான். அந்த பயணத்தின் போது
ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்கள்
காரணமாகவே, 'இசையின் இயற்பியல்' (Physics of Music) ஆய்வு நோக்கி, திசை திரும்பி பயணித்தேன்.
அந்த பயணத்தின் போக்கில், உலகின் கவனத்தை ஈர்க்க வல்ல கண்டுபிடிப்புகளை, நான்
வெளிப்படுத்தியிருந்தாலும்;(http://tamilsdirection.blogspot.in/2016/08/linguistics-musical-linguistics.html
)
தமிழ்நாட்டின்
இன்றைய சீரழிவிற்கான கீழ்வரும் 'மூலத்தை' (Source), நான்
கண்டுபிடித்ததையே, எனது கண்டுபிடிப்புகளிலேயே மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன்.
தமிழ் இலக்கியங்கள்
தொடர்பான தமது புலமையின் வரை எல்லைகள் பற்றிய புரிதலின்றி பயணித்து, 1944இல் ஈ.வெ.ரா
அவர்கள் முயற்சியில், தமிழில் 'இனம்' என்ற சொல்லின் பொருள் திரிந்து, உணர்ச்சிபூர்வ
'ஆரிய திராவிட' வெறுப்பு அரசியலானது, முளை விட்டு வளர்ந்து, தமிழ்நாட்டில் 'இந்துத்வா
ஆதரவு, எதிர்ப்பு' உள்ளிட்டு, சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை ஓரங்கட்டி, பொதுவாழ்வை மூலதனமில்லாத
வியாபாரமாக்கி, பல்லாயிரம் கோடி சொத்துக்கள் உள்ள அதிபர்கள் பலர் வலம் வர காரணமானது.
தொத்து
நோய் கிருமிகளிலிருந்தே, அந்த
தொத்து நோய்க்கான மருந்துகள் உருவாகின்றன. (‘Vaccines
contain the same germs that cause disease. (For example, measles vaccine
contains measles virus, and Hib vaccine contains Hib bacteria.) But they have
been either killed or weakened to the point that they don't make you sick. Some
vaccines contain only a part of the disease germ.
A vaccine stimulates your immune system to produce
antibodies, exactly like it would if you were exposed to the disease. After
getting vaccinated, you develop immunity to that disease, without having to get
the disease first.’; https://www.cdc.gov/vaccines/vpd/vpd-vac-basics.html
)
1944இல் முளைவிட்ட அந்த
நோயின் உச்சக்கட்ட வெளிப்பாடான சசிகலா நிகழ்வானது (Sasikala Phenomenon), 'ஆரிய - திராவிட' துணையுடன்
(http://tamilsdirection.blogspot.in/2016/12/blog-post.html
) வெளிப்பட்டுள்ளதும்;
அந்த
பொதுவாழ்வு நோயினை குணப்படுத்தும் மருந்தாக, 'ஓபிஎஸ் நிகழ்வானது' (OPS PHENOMENON), அந்த நோயின் உச்சக்கட்டத்தில்
வெளிப்பட்டுள்ளதும்;
தமிழ்நாட்டின்
மீட்சிக்கான நம்பிக்கையூட்டும் அதிசயமாகும்.
No comments:
Post a Comment