Friday, February 3, 2017

பொருளில் உள்ள புலமை பற்றிய தமது வரை எல்லைகள் தெரியாமல் எழுதும்;
பொ வேல்சாமி  போன்ற எழுத்தாளர்களால் விளையும் சமூக கேடுகள்


Note: Due to blogger tech problems, replace ‘.in’  in the web address by ‘.com’, if the link does not open in the new window.


"சுமார் 1500 ஆண்டுகளாக தமிழ்மொழியின் இலக்கிய இலக்கணங்களை எப்படி கற்பித்து வந்தனர் என்பது இன்றுவரை புரியவில்லை. ஏனென்றால் வடமொழிக் கல்லூரிகள் செயலாற்றி வந்ததுபோல தமிழுக்கான எத்தகைய நிறுவனங்களும் செயல்பட்டதாக பதிவுகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. அதாவது அரசாங்க ஆதரவு அதற்கு இருந்ததாகத் தெரியவில்லை. (அப்படி ஏதாவது கல்வெட்டுக்கள் பட்டையங்கள் இருப்பின் நண்பர்கள் அதனை ஆதாரத்துடன் எழுதலாம்) நிலைமை இவ்வாறு இருக்கும்போது தேவாரம் பாடுவது தமிழ் வளர்ச்சி இல்லையா? என்பது போன்ற குதர்க்க கேள்விகளை சிலர் எழுப்புகின்றனர். தேவாரம் திருவாசகம் திருவாய்மொழிகள் என்பன படிப்பதற்கான நூல்கள் அல்ல, பாடுவதற்கான இசைப்பாடல்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்."  எழுத்தாளர் பொ வேல்சாமி,1 பிப்ரவரி, 2017 இல் தனது முகநூலில் வெளியிட்டுள்ள கருத்து.

தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை படித்ததன் மூலமே, எனது ஆய்வுகள் மூலம்,  'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' என்ற புதிய தொழில் வியாபார வாய்ப்புகளை உருவாக்கவல்ல கண்டுபிடிப்புகள் வெளிப்பட்டுள்ளன. (http://musicresearchlibrary.net/omeka/items/show/2447 &  http://tamilsdirection.blogspot.com/2016/08/linguistics-musical-linguistics.html  

)

தேவாரமும், பெரிய புராணத்தில் உள்ள ஆனாயநாயனார் புராணமும் உலகின் கவனத்தை ஈர்க்க வல்ல அரிய 'தமிழ் இசையியல்' (Tamil Musicology) தகவல்கள் கொண்ட சுரங்கம் என்பதை, அவை தொடர்பான எனது ஆய்வு கட்டுரைகளில் வெளியிட்டுள்ளேன். ('புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்''; https://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none.htmlhttp://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_9.html

 )

ஆனால் 'நாலாயிர திவ்ய பிரபந்தம்', கம்ப ராமாயாணம் உள்ளிட்ட வைணவ இலக்கியங்களில், அந்த அளவுக்கு 'தமிழ் இசையியல்' தகவல்கள் இல்லை என்பதும் எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெ.என்.யூ(JNU), ஐ.ஐ.டி(IIT), என்.ஐ.டி (NIT) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், முனைவர் பட்ட ஆய்வினை எவரும் துவங்கினால், அந்த ஆய்வுக்கு என்னால் இயன்ற உதவிகளையும் வழங்க இயலும். அதே போல, தமிழ்நாட்டில் 'உணர்ச்சிபூர்வ' போக்கிலான‌ வெறுப்பு நோயின் வளர்ச்சியும், தாம் எழுதும் பொருளில் உள்ள புலமை பற்றி, தமக்குள்ள‌ வரை எல்லைகள் (intellectual limitations) தெரியாமல் எழுதும் எழுத்தாளர்களின் வளர்ச்சியும், எந்த அளவுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது? என்பதையும் முனைவர் பட்ட ஆய்வாக மேற்கொள்ளலாம்.

தமிழ், தமிழர் தொடர்பான சான்றுகளில் இருப்பதை இருந்ததாக எழுதுவது சரி. ஆனால் இருந்து அழிந்து போன சான்றுகள், 1967-இல் முளை விட்டு, 1991 முதல் 'வீரியமாக' வளர்ந்து வரும்ஊழல் பேராசையில் மலைகளில் உள்ள கல்வெட்டுகள் உள்ளிட்ட சான்றுகள் அழிந்து வரும் நிலையில், அந்த 'ஊழல்' அழிவிலிருந்து தப்பித்து, த‌மிழ்நாடெங்கும் இன்னும் 'படியெடுத்து' ஆய்வுக்குள்ளாகாத கல்வெட்டுகளும் உள்ள நிலையில், கிடைத்த ஓலைச்சுவடிகள் முழுவதும் ஆராயப்படாத நிலையில்;

'இல்லை' என்று, காலனிய சூழ்ச்சியில் முளைவிட்டு வளர்ந்து வரும்,  'வெறுப்பு அரசியலுக்கு', 'தூபம்' போடும் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எல்லாம் 'வாதவியலுக்கு' (Logic) முரணானவை ஆகும். (‘எனது புரிதலில், விவாதத்தின் நோக்கங்கள்’; http://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.html

 )

உதாரணமாக தொல்காப்பியத்தில் ஒரு குறிப்பிட்ட உலோகம் குறிப்பிடப்படவில்லை என்பதை சான்றாக கொண்டு, தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் அந்த உலோகம் இல்லை என்று முடிவு செய்ய முடியுமா?

தமிழில் இது போன்ற எழுத்தாளர்கள் எல்லாம், தாம் எழுதும் பொருளில் உள்ள புலமை பற்றி, தமக்குள்ள‌ வரை எல்லைகள் (intellectual limitations) தெரியாமலும், அவை தொடர்பான புலமையாளர்களை சந்தித்து தெளிவு பெறாமலும், எழுதும் போக்கும், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் வீழ்ச்சியோடு தொடர்புடையதாகும்.

'அரசனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோர் முன்பும் கைக்கொட்டிச் சிரித்தானே, அந்தச் சிறுவனை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!' என்று எழுத்தாளர் வாஸந்தி தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டு 'அறிவு ஜீவிகளை' பார்த்து, 'அந்த சிறுவன்' கை கொட்டி 'சிரிக்கும் ஒலி' பற்றியும் ஏற்கனவே பார்த்தோம். 'பாரதி வழி, காந்தி வழி, பெரியார் வழி' உள்ளிட்ட 'எல்லா வழிகளும்', 'ஒரே வழியாக' சங்கமித்த பின், தமிழ்நாடானது, அரசியல் நீக்கத்தில் (Depoliticize), ஆதாய அரசியலில் தானே பயணிக்க நேரிடும்.  "அந்த கசப்பை வெகுஜன ஊடகங்களின் முன் பகிர்ந்து கொள்ள' பயந்து, திருக்குறள் (428) வழியில் வாழ்வதை, பகிரங்கமாக ஒத்துக் கொள்ளும் நேர்மையின்றி,  வாழ்ந்த/வாழும் அறிவு ஜீவிகள் எல்லாம், அதற்கு காரணமான, சமூக குற்றவாளிகள் இல்லையா? இன்று அந்த 'சமூக குற்றவாளிகளை' அடையாளம் காட்டும் 'சமூக தொண்டராக', சசிகலா வலம் வருவதில், வியப்புண்டோ? (http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_12.html

 & ‘Do the Prime Minister & the Supreme Court witness as the ineffective spectators w.r.t the hijacking of the TN Govt?; https://groups.yahoo.com/neo/groups/akandabaratam/conversations/topics/70472;_ylc=X3oDMTM2aGRzdmtmBF9TAzk3MzU5NzE0BGdycElkAzU3ODU5OTAEZ3Jwc3BJZAMxNzA1MDc1OTkxBG1zZ0lkAzcwNDcyBHNlYwNmdHIEc2xrA3Z0cGMEc3RpbWUDMTQ4NjM0Nzg2NAR0cGNJZAM3MDQ3Mg-- )

அந்த 'அறிவு ஜீவிகள்' எல்லாம் எந்த காலக் கட்டத்தில் உருவானார்கள்? தமது சொந்த வாழ்க்கையிலும், பணம் ஈட்டும் வழிகளிலும், 'இழிவான' மதிப்பீடுகளுடனும், சமரசங்களுடனும், வாழ்ந்து மேல்தட்டு சுக வாழ்வுக்கு அடிமையானவர்களின் எழுத்துக்கள்/ பேச்சுக்கள்/கவிதைகள் எல்லாம், எந்த அளவுக்கு, எந்த சமூக செயல்நுட்பத்தில், தமிழ்நாட்டில் நத்திப் பிழைத்துக் கொண்டே, எழுத்தில், பேச்சில் 'வீரமாக', 'முற்போக்காக' வலம் வருபவர்களை வளர்த்தது? என்பதும் ஆய்விற்குரியதாகும். சென்னை மெரினா ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் 'எழுத்தாளர்களின்' பங்களிப்பு எவ்வளவு? என்ற ஆய்வும் அதனுடன் தொடர்புடையதாகும். தமிழ்நாட்டில் யாராயிருந்தாலும், அவர்களின் பேச்சும், எழுத்தும், அவர்கள் வாழும் வாழ்வின் அடிப்படையிலேயே, தகவல் பரிமாற்ற வலிமை (Communication strength) பெறுகின்றன, அல்லது இழக்கின்றன; குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சாதாரண மக்களிடையே. 

தமிழ் இலக்கியங்கள் தொடர்பான தமது புலமையின் வரை எல்லைகள் பற்றிய புரிதலின்றி பயணித்து, 1944இல் ஈ.வெ.ரா அவர்கள் முயற்சியில், தமிழில் 'இனம்' என்ற சொல்லின் பொருள் திரிந்து, உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலானது, முளை விட்டு வளர்ந்து, தமிழ்நாட்டில் 'இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு' உள்ளிட்ட பெரும்பாலான எழுத்தாளர்களை ( சாதி, மத, கொள்கை பேதமின்றி) பாதித்துள்ள சமூக நோய் இதுவாகும். (‘A brief on Jayamohan’s article on EVR’; http://tamilsdirection.blogspot.com/2016/06/normal-0-false-false-false-en-in-x-none.html

 ) அதாவது வெறுப்பு அரசியலில் சிக்கியுள்ள எழுத்தாளர்கள் எல்லாம், தமது பார்வைக்கு வரும் சான்றுகளின் வரை எல்லைகள் (limitations)  பற்றிய புரிதலின்றி, 'உணர்ச்சிபூர்வமாக', தாம் ஏற்கனவே எடுத்துள்ள முடிவிற்கு சாதகமாக பயன்படுத்தி, பின்னர் அந்த அபத்தமானது வெளிப்பட்டவுடன், அதனை எந்த அளவுக்கு அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும் சந்திக்கிறார்கள்? என்பதைப் பொறுத்தே;


பொ வேல்சாமியாக இருந்தாலும், ஜெயமோகனாயிருந்தாலும், நானாக இருந்தாலும்;

அவரவர் யோக்கியதையானது அவரவர் மனசாட்சிக்கும், அவரவர் சமூக வட்டத்திற்கும் தெரியும். ஊடக செல்வாக்குள்ள 'அறிவு கோழைகள்' எல்லாம், ஊடகத்தில் அம்பலாமாகாமல் எளிதில் தப்பிக்கவும் தமிழ்நாட்டில் வாய்ப்பிருக்கிறது.

மேலே குறிப்பிட்ட சமூக நோயின் வளர்ச்சிப் போக்கில், சமூகத்திற்கு கேடான சிற்றின மனிதர்கள் வலிமை பெற்று, 'கேடான சமூகத் தூண்டல்' செயல்நுட்பம் ( Socially destructive Induction Mechanism) மூலம், இயல்பில் பலகீனமான மனிதர்களை தமது 'வால்களாக்கி', தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழித்த போக்கில், சாதி, மத, கொள்கை பேதங்களின்றி, 'வெளியில் தெரியாத சுயநல சமரசத்தில் ஒன்றி', பயணித்த தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பு எவ்வளவு? என்ற ஆய்வினையும் தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டதையும், 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் உணர்த்தியுள்ளது.

இது தொடர்பாக, மேலும் ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்கு:

1.    உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்சிக்கிய தமிழ்நாடு; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html


2.    தேவநேய பாவாணர் மட்டுமின்றி, பேரா.ந.சஞ்சீவி உள்ளிட்டு தமிழ். தமிழ் இசை ஆராய்ச்சிகளில், தாம் பயன்படுத்தும் சான்றுகளின் வரை எல்லைகள்(limitations) பற்றிய புரிதல் இன்றியும், உலக அரங்கில் அது தொடர்பாக வெளிப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் பற்றிய புரிதல் இன்றியும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பற்றி ஏற்கனவே பார்த்தோம். (refer post dt. June 5, 2013;’ தமிழாராய்ச்சியில் நடைபெறும் தவறுகளும், தமிழுக்கான விடுதலையும் (1)’ in font TM TTVALLUVAR)

இது போன்று, தமிழ், தமிழ் இசை போன்றவற்றை 'உயர்த்தி'க் காண்பிக்கும் 'உணர்ச்சிபூர்வ' ஆராய்ச்சிகள் காரணமாக, தமிழும், தமிழ் இசையும் உலக அரங்கில், 'கேலிக்குள்ளாகும்' ஆபத்தும் இருக்கிறது.’ ( ‘தேவநேய பாவாணர், பெரியார் ஈ.வெ.ரா போன்றவர்களை 'கேலிக்குள்ளாக்கும்' செயல்நுட்பம்?’; http://tamilsdirection.blogspot.com/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html

 )


3.    The Pitfalls in the Study & Translation  of the Ancient Tamil Texts (1) http://tamilsdirection.blogspot.in/2013/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html - சுமார் 150 பக்கங்களில் நிறைவடைந்துள்ள இந்நூலின் பிரதியானது(draft), ஆங்கில புலமையுள்ள நண்பரின் உதவியுடன், பழந்தமிழ் இலக்கிய வரிகளை ஆங்கில செய்யுள் வடிவில் மொழி பெயர்த்து, நெறிப்படுத்தி, அமெரிக்காவில் உள்ள Harvard University Press சார்பில் வெளியிடும் முயற்சியும் நடைபெறுகிறது. அதில் தவறினால், சிங்கப்பூரில், எனது மகன் முயற்சியில், இந்நூல் வெளிவரும். இந்நூல் வெளிவந்த பின், ஆங்கிலம், பிரஞ்சு உள்ளிட்டு பல‌ அந்நிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள, திருக்குறள், புறநானூறு உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்களில் உள்ள பிழைகள் தொடர்பான 'திருத்த பின்னிணைப்பு' (Appendix) வெளியிட வேண்டிய நெருக்கடியானது உணரப்படும். ('DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'; https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264


குறிப்பு:

தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வ போக்குகளை எதிர்த்து, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்கும் 'வினை ஊக்கியாக' (catalyst) செயல்படும் (எனது பார்வையில்) வெகு சிலரில், 'பெரியார்' கொள்கை ஆதரவாளரான திரு.பொ.முருகானந்தமும்  ஒருவராவார். அவர் எனது பார்வைக்கு உரியவைகளாக அனுப்பி வரும் பலவற்றில், மேலே குறிப்பிட்ட முகநூல் பதிவும் ஒன்றாகும். அவரைப் போன்றே லண்டனில் வாழும் - திருக்குறள் 788-இன் பொருளை செயல்பூர்வமாக வெளிப்படுத்திய-‌ தொல்காப்பியன், சிட்னியில் வாழும் மாணிக்கம் அர்ச்சுனமணி போன்ற இன்னும் பலர், இது போன்று உதவி வருவதால் தான், இது போன்ற பதிவுகளை என்னால் எழுத முடிந்தது. அவர்கள் உள்ளிட்டு எனது சமூக வட்டத்தில் உள்ளவர்கள் எல்லாம், எனது எழுத்திலும், பேச்சிலும் குறைகள் தென்பட்டாலும், அல்லது எனது எழுத்துக்கும், பேச்சுக்கும் விரோதமாக நான் வாழ்வதாக கருதினாலும், தயக்கமின்றி என்னிடம் தெரிவிப்பவர்கள் ஆவர். அவற்றை திறந்த மனதுடன் பரிசீலித்து, நான் என்னை நெறிப்படுத்திக் கொண்டு வாழ்கிறேன்; பிறர் 'தம்மை உயர்வாக நினைக்க வேண்டும் என்ற, சமூக ஒப்பீட்டு (Social Comparison) நோயில் சிக்கி - மற்றவர்களின் மதிப்புக்காக ஏங்கி – ‘அடிமையாக' வாழாமல், எனக்கு நானே ‘எஜமானராக’ இருந்து, இன்பங்களையும், துன்பங்களையும் 'அனுபவித்து'; (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html

 )

No comments:

Post a Comment