Saturday, August 20, 2016

உலக தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்களில்; 

தொல்காப்பியம் அடிப்படையில்  'இசை மொழியியல்' (Musical Linguistics) ஆய்வுப் புலம்


“தொல்காப்பியத்தில் நான் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறை உருவாக வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில் சந்தைப் படுத்தக் கூடிய கணினி இசை  மொழியியல் பயன்பாட்டு மென்பொருட்கள் (Marketable Computational Musical Linguistics Application Software) உருவாகவும் வாய்ப்புள்ளது.” என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 
 ( ‘'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்'  ‘;http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

அந்த புதிய ஆய்வு துறையில், திருச்சி NIT, ECE Dept-இல், ஆய்வு பரிசோதனைகளும் தொடங்கியுள்ளன.

தொல்காப்பியத்தில் 'இசை மொழியியல்' கண்டுபிடிப்பை, பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின்  ஆய்வு பார்வைக்கு, கொண்டு செல்லும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.

கோயம்புத்தூர் PSG Tech, Electronics & Communication Engineering (ECE) dept சார்பில், பல கல்லூரிகளிலும் பணியாற்றும் பொறியியல் ஆசிரியர்களுக்கான‌, Faculty Development Programme-இல், கடந்த 06 – 08 -  2016 அன்று, "Research Perspectives in Music Signal Processing" என்ற தலைப்பில்,  ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியில் செயல் விளக்க உரையாற்றினேன். அன்று மாலை கடைசி session –இல் " Musical Linguistics & Natural Language Processing "  என்ற தலைப்பில் விளக்க உரையாற்றினேன்.

அந்த விளக்க உரையில் ‘Musical Phonetics in tholkAppiam ‘என்ற தலைப்பில், ‘T’he journal from the International Institute of Tamil Studies’,( December 2013  issue - Taramani, Chennai) இதழில் வெளி வந்த எனது ஆய்வு கட்டுரையையும் விளக்கினேன். தொல்காப்பியம் அடிப்படையில், 'இசை மொழியியல்' என்ற புதிய ஆய்வுதுறை உருவாகி இருப்பதையும், அதன் அடிப்படையில்,  Natural Language Processing  மூலம், சந்தைப்படுத்தக்கூடிய (Marketable)  பயன்பாட்டு  மென் பொருட்களை (Application Software) எவ்வாறு உருவாக்க முடியும் என்று விளக்கினேன். மேலும் தொல்காப்பியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 'இசை மொழியியல்' என்பதானது, சமஸ்கிருத எழுத்துகளின் தோற்றம் பற்றிய, பாணினியின்  'அஷ்டதாயி' இலக்கண நூல் தொடர்பான, 'மகேஸ்வர சூத்திரங்களுடன்' எந்த அளவுக்கு ஒத்து வருகிறது? என்பது பற்றிய ஆய்வுகளுக்கும் இடம் இருப்பதை, அவர்களிடம் விளக்கினேன்.

‘The musical origin of the Sanskrit alphabets explained in the  Māheshvara Sutras referred to in the Aṣṭādhyāyī of Pāṇini , seems to conform to the above discovery in tholkAppiam; proving the probable complimentary dimensions of Tamil and Sanskrit in the musical phonetics.’(குறிப்பு கீழே)

'முனைவர் பட்டம் பெறுதல்', 'பதவி உயர்வு பெறுதல்' போன்றவற்றை தாண்டி, ஆய்வுகளில் ஈடுபடுதலில் இன்பம் உணர்வதே (Experiencing Joy), ‘எனது ஆய்வுகளின் வெற்றிகளின் இரகசியம்’ என்பதையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html   & http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none.htmlவாழ்வதற்கு பணம் தேவையே. ஆனால் 'வாழ்வதே பணத்திற்காக' என்ற போக்கானது, நம்மை 'மனித நாய்களாக' மாற்றி விடாதா? (http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html)

பங்கேற்ற ஆசிரியர்கள் காட்டிய ஆர்வமும்,  துறைத் தலைவரும் , பேராசிரியர்களும் வெளிப்படுத்திய ஆர்வமும், எனக்கு  'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறையின் அரங்கேற்றத்தில் நம்பிக்கை தந்தது.( http://musictholkappiam.blogspot.in/ )

உலகில் உள்ள பல்கலைக் கழகங்களில் 'மொழியியல்'(Linguistics)  என்ற துறையும், அதன் அடிப்படையில் இயற்கை மொழி செயலாக்கல் (Natural Language Processing) மற்றும் கணினி மொழியியல் (Computational Linguistics)  என்ற துறைகளும் உள்ளன. அந்த துறைகளில், தொல்காப்பியம் அடிப்படையில்  'இசை மொழியியல்' என்ற ஆய்வுப் புலம் உருவாகும் நாள் தொலைவில் இல்லை.

குறிப்பு:

தமது புலமையின் வரைஎல்லை (limitation)  பற்றிய புரிதலின்றி, புலமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமின்றி, 'பகுத்தறிவு' என்ற போர்வையில், சாதாரண பொது அறிவின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பி, அறிவுக் களஞ்சியமான பழந்தமிழ் இலக்கியங்களை, 'மூட நம்பிக்கை, குப்பை' என்று வெறுத்து, ஒதுக்கும் போக்கானது, ஒரு சமூக 'பகுத்தறிவு' இயக்கமாக, உலக வரலாற்றில், எந்த காலக்கட்டத்திலும், எந்த நாட்டிலும் நடந்திருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். சமஸ்கிருத இலக்கியங்களை 'மூடநம்பிக்கை, குப்பை' என்று வடநாட்டில் எந்த பகுத்தறிவு/மார்க்சிய புலமையாளராவது கண்டித்திருக்கிறார்களா? (http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_16.html)

No comments:

Post a Comment