Friday, February 10, 2017

தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (10)
'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளங்களுக்கும், 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கும் ;

உள்ள உறவானது ஆக்கபூர்வ திசையிலா? அழிவுபூர்வ‌ திசையிலா?


‘சுயலாப நோக்கின்றி, நேர்மையான சுய சம்பாத்தியத்துடன், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சி பற்றிய அக்கறையுள்ளவர்கள் எல்லாம், மீட்சிக்கான 'சரியான' திறவுகோலை தேடி வரும் காலக்கட்டம் இதுவாகும்.’ (http://tamilsdirection.blogspot.in/2016/09/depoliticize9.html )

'சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து, தமது நிலைப்பாடுகளை மக்கள் நலன் நோக்கில் (உடல். மனம் பிறர் சாரா போக்கில்- physically & mentally independent- இருந்தது வரையில், 'பெரியார்' செய்தது போல) 'திருத்திக் கொள்ளாமல்', பழைய திசையிலேயே பயணிக்கும், 'பெரியார்' ஆதரவு கட்சிகளெல்லாம் உதிர்ந்து, தமிழ்நாட்டின் வரலாற்றில் 'இழிவான இடம்' பிடிக்க போட்டி போடும் நிலை வந்தால் வியப்பில்லை. 'பெரியாரின்' முழு பொது வாழ்வையும், அவரின் தியாகங்களையும் கணக்கில் கொள்ளாமல், அவரைப் பற்றி 'இழிவாக', 'திராவிட உணர்ச்சிபூர்வ பாணியில்' பேசி/எழுதி வரும் 'இந்துத்வா' ஆதரவு பேச்சாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், 'பெரியார்' கட்சிகள் 'நன்றி' சொல்லவேண்டும். ஏனெனில் மேற்குறிப்பிட்ட தவறான திசையில் பயணிக்கும் 'பெரியார்' கட்சிகளுக்கு, 'ஆக்ஸிஜன்' வழங்கி,  'உயிருடன்' நீடிக்க உதவி வருபவர்களும் அவர்களே ஆவர்.

இத்தகைய சிக்கலான சூழலில்,  தமிழக பா.ஜ.க, மேற்குறிப்பிட்ட திசையில், தமிழ்நாடு மீள உதவும் திசையில் பயணிக்கிறதா? என்ற கேள்வியும் ஆய்விற்குரியதாகும்.”; (  http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

1857 முதலாம் இந்திய விடுதலைப் போரானது வெற்றி பெற்றிருந்தால், இன்று இந்தியாவானது, சுமார் 50க்கும் அதிகமான அரசர்களின் ஆட்சிகளில் இருந்திருக்கும் என்பதை மறந்து;

1947 இந்திய விடுதலைக்குப் பின்,  ஆக்கபூர்வ தேச கட்டுமானத்தில் ( Nation Building),  இந்தியாவில்;

வரலாறு, பாரம்பரியம், பண்பாடு, மொழி அடிப்படைகளில் இருந்த வந்த உள் அடையாளங்கள் எல்லாம்  (Sub Identities)  எல்லாம், 'ஆக்கபூர்வ' திசையில், 'இந்தியர்' என்ற அடையாளத்துடன், 'இணக்கமாகும் சமூக செயல்நுட்பம்' வளர்வதற்கு தடையாக;

நேரு குடும்ப சுயநல வாரிசு அரசியல் போக்கில், 'அடையாளச் சிக்கலை', 'அரசியல் சிக்கலாக'  திரித்து, இந்தியா பயணித்தது;

அதே சூழ்ச்சி வலையில், மனரீதியில் அடிமைப்பட்டு;

அந்த உள் அடையாளங்களின் சமூக வலிமை பற்றிய அறியாமையில், தமிழ்நாட்டில் 'உணர்ச்சிபூர்வமாக' பயணிக்கும் இந்துத்வா ஆதரவாளர்கள் எல்லாம், தமது 'உணர்ச்சிபூர்வ' செயல்பாடுகள் மூலமாக, தமிழ்நாட்டில் 'பிரிவினை' போக்குகளுக்கு 'ஆக்ஸிஜன்' வழங்கி காப்பாற்றி வருகிறார்கள். 

மேலே குறிப்பிட்டவாறு 'உணர்ச்சிபூர்வ பரிமாற்ற எதிர்ப்பில்' ('செனோபோபியா' நோயில் சிக்கியுள்ளார்களா? என்ற கேள்வி எழும் அளவுக்கு; https://en.wikipedia.org/wiki/Xenophobia ) ஒன்று பட்டுள்ள 'பெரியார்' ஆதரவாளர்களும் சரி, 'இந்துத்வா' ஆதரவாளர்களும் சரி, தமிழ்நாட்டில் 'தமிழர்' என்ற அடையாளமானது, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் 'ஆக்கபூர்வ' திசையில், 'இணக்கமாகும் சமூக செயல்நுட்பம்' ( Harmonising Social Mechanism) வளர்வதற்கு தடையாகவே, ஒருவருக்கொருவர் 'உதவி' பயணிக்கிறார்களா? அந்த திசையில் அறியாமையில் பயணிப்பவர்கள், இரு சாராரிலும் யார்? அல்லது இந்தியாவில் தேச கட்டுமானமானது ( Nation Building) தற்சார்பு பெறுவதை சீர் குலைக்க முயலும், அந்நிய சூழ்ச்சியில் சிக்கி, பயணிப்பவர்கள், இரு சாராரிலும் யார்? என்ற ஆய்வும் அவசியமாகி வருகிறது.

'தமிழர்' என்ற அடையாளத்தின் சமூக வலிமை தொடர்புள்ள சமூக ஆற்றல்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட இரு சாராரின் தவறான அணுகுமுறைகள் காரணமாக;

'சமூக மூச்சுத் திணறலுக்கு' உள்ளாகி, அந்த மூச்சுத் திணறலிலிருந்து தப்பிக்க உதவிய 'ஜன்னலாக',  அந்த ' தமிழர் அடையாள' அடிப்படையில், 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் மூலமாக‌, வெளிப்பட்டபோது;

திராவிடக் கட்சிகளும், பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், ஓரங்கட்டப்பட்டதற்கும்;

அந்த 'தமிழர்' அடையாள சமூக மூச்சுத் திணறலானது, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் மூலம் வெளிப்பட்டதற்கும் உள்ள தொடர்பும் ஆய்விற்குரியதாகும். அந்த 'ஜல்லிக்கட்டு போராட்ட ஆதரவு சக்திகள்' எல்லாம், ஆதாய அரசியலின் குவியமாகியுள்ள (Focus), சசிகலாவின் 'அரசியலை' எதிர்த்து, 'அலையாக' வளர்ந்து வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அவ்வாறு வளர்வது உண்மையானால், அந்த 'அலையானது', 'சுனாமியாக' வலுவாகி, உண்மையான பகுத்தறிவுக்கு விரோதமான, தமிழ்நாட்டின் சீரழிவுக்கு கேடயமான, 'ஆரிய - திராவிட' கருத்து கழிவினை, சுவடின்றி அழிக்கும் போக்கும் துவங்கி விட்டது.(http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_12.htmlஅந்த 'பெருமையானது'(?),  சசிகலா குடும்பத்திற்கும், 'பகுத்தறிவு' கண்களை மூடிக்கொண்டு அவர்களை ஆதரித்து வரும் தி.க. தலைவர் கி.வீரமணிக்கும் சொந்தமாகும்.

“தமிழ்நாட்டு அரசியலில் இப்போது நடைபெறுவது தேவாசுரப் போராட்டமே! அதாவது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டமே! நமது பார்வை முற்றிலும் இனநல பொதுநலப் பார்வையே - தந்தை பெரியார் பார்வையே!” - தி.க. தலைவர் கி.வீரமணி ( http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-condemns-union-government-10/slider-pf221468-273788.html )

வரலாறு, பாரம்பரியம், பண்பாடு, மொழி அடிப்படைகளில் இருந்த வந்த உள் அடையாளங்களின் சமூக வலிமை பற்றியும், அது வெளிப்படும் செயல் நுட்பம் பற்றியும், கவலைப்படாமல், மேற்கத்திய உலகின் 'ஆதிக்க சக்திகள்' எல்லாம், தத்தம் 'அரசியல்' சுயலாபங்களை பிரதானமாக கருதி, பயணித்து வந்த போக்கின் பாதக விளைவுகளில் ஒன்றே;

இன்று உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்தின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணங்கள் ஆகும்.

உலக அரசியலில், 'சுயநல நோக்கில்', பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல்;

இன்று உலகை அச்சுறுத்தி வரும் அனைத்து வகை ஆயுதபாணி தீவிரவாதங்களை தமது சுயநலன்களுக்காக வளர்த்தும், பின் அதே சுயநலன்களுக்காக எதிர்த்தும், வந்த மேற்கத்திய அரசுகள் எல்லாம்;

இன்று அதனால் விளைந்த, தத்தம் நாடுகளில் உள்ள மக்களின் கோபக் கனலை எதிர்கொள்ள முடியாமல், தவித்து வருகிறார்கள்.

அதன் தொடர்விளைவாக, உலகில் உள்ள அறிவுஜீவிகள் மத்தியில், 'அடையாளங்கள்' தொடர்பான ஆய்வுகளும், விவாதங்களும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

அந்த நோக்கில் குவாமி அந்தோணி அப்பையா என்ற அறிஞர், பிபிசி வானொலியில் (Radio 4 )  தொடர் உரை ஆற்ற உள்ளார். அது தொடர்பான தகவலானது, லண்டனில் வாழும் எனது நண்பர் தொல்காப்பியனின் உதவியால், எனது கவனத்தை ஈர்த்துள்ளது. ( This year’s BBC Reith Lecturer is Kwame Anthony Appiah, a British-born, Ghanaian-American philosopher, cultural theorist and novelist. Appiah specialises in moral and political philosophy, as well as issues of personal and political identity, cosmopolitanism and nationalism. His four lectures under the banner "Mistaken Identities" will focus on four themes: Colour, Country, Creed and Culture. They will be recorded in London, Glasgow, Accra, in Appiah’s adopted hometown of New York, and will be broadcast on Radio 4 in October and November.- After studying at Cambridge, Appiah taught at some of the world’s top universities including Yale, Cornell, Duke, and Harvard, and lectured at many other institutions across the world. In 2014 he became Professor of Philosophy and Law at New York University, where he teaches both in New York and in Abu Dhabi.
He has published widely in African and African-American literary and cultural studies. His award-winning “In My Father’s House” explores the role of African and African-American intellectuals in shaping contemporary African cultural life, which has been a life-long passion of Appiah’s. ; http://www.bbc.co.uk/programmes/articles/2sM4D6LTTVlFZhbMpmfYmx6/kwame-anthony-appiah )

மனிதர் தமக்குள்ள அடையாளங்களின் தூண்டுதல்களால் எவ்வாறு ஆக்கபூர்வமாகவும், அழிவுபூர்வமாகவும், செயல்படும் வாய்ப்புகள் உள்ளன' என்பதானது, அவரது உரையில் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.
“We’ll learn how those identities play both positive and negative roles in their lives and in ours, and how we might escape some of the negatives if we understood some of the many mistakes we make about identity.” - Kwame Anthony Appiah,

தமிழ்நாட்டிலும், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளங்களுக்கும், 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கும் உள்ள உறவானது ஆக்கபூர்வ திசையில் பயணிக்கிறதா? அல்லது அழிவுபூர்வ திசையில் பயணிக்கிறதா? என்ற விவாதத்தை;

திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும், 'உணர்ச்சிபூர்வ' இரைச்சல்களை தவிர்த்து, முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன். (http://tamilsdirection.blogspot.in/2016/07/normal-0-false-false-false-en-in-x-none_18.html )


No comments:

Post a Comment