Thursday, February 16, 2017

தமிழர்களின் அடையாளச் சிதைவும்,அரசியல் நீக்கமும்(depoliticize)(11)     'அடையாளம் சீர் மீட்பு' (Identity Rescue Operation):     

பொதுவாழ்வு வியாபாரிகளின் நிறம் 'கறுப்பு'

தமிழின், தமிழரின் அடையாள நிறம் 'காவியை' மீட்போம்


“1967க்குப் பின் முதல்முறையாக, முதல்வர் பன்னீர்செல்வத்தின் அரசானது, மக்களை மதித்து, உணர்ந்து, செயல்படத் தொடங்கிய போக்கானது, ராஜபட்சே பாணி சசிகலா குடும்ப சுயநல அரசியலில், 'கருச்சிதைவுக்கு' உள்ளாகியுள்ளது.” என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

தமிழக வரலாற்றில் 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் விட, அதிக முக்கியத்துவத்துடன் ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டிய அளவுக்கு, அந்த 'கருச்சிதைவு' முக்கியமானதாகும்;

1938, 1965 போராட்டங்களில் வெளிப்பட்ட சமூக ஆற்றல்களின் 'யோக்கியதையையும்' புரிந்து கொள்ள.

1967இல் அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சியை பிடித்தபோது, என்ன நடந்தது? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 

“1967 ஆட்சி மாற்றத்தின் போது, அந்த (முளையிலேயே கிள்ளும்) வலிமை தமக்கில்லை என்பதை அன்றைய முதல்வர் அண்ணா உணர்ந்து, மருத்துவமனையில் தம்மை சந்தித்த, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம், தாம் விரைவில் மரணமடைய விரும்புவதாக தெரிவித்த செய்தியை, அவர் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அதே காலக்கட்டத்தில், பொதுவாழ்வில் மனம் வெறுத்து, தாம் முனிவராக விரும்புவதாக அண்ணாவிடம், ஈ.வெ.ரா அவர்கள் தெரிவித்து, அதை அண்ணா தடுத்திருக்கிறார். அதாவது அரசமைப்பிலும், பொது வாழ்விலும், தவறுகளை தடுக்கக் கூடிய வெளிப்படையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability) பலகீனமாகிவிட்டதை அந்த இரு தலைவர்களும் அந்த காலக் கட்டத்திலேயே உணர்ந்ததன் விளைவுகளாலேயே, முதல்வர் பொறுப்பில் இருந்தவரும், அவரை உருவாக்கிய கட்சியின் தலைவராக இருந்தவரும் மனம் வெறுத்து, மேற்குறிப்பிட்ட உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்களா? என்பது ஆய்விற்குரியதாகும்.” (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html )

1967இல் இருந்த பொதுவாழ்வு சூழலானது, அண்ணாவையும், ஈ.வெ.ரா அவர்களையும் மனம் வெறுத்து, பொது வாழ்விலிருந்து ஓதுங்கும் எண்ணத்தை தோற்றுவித்தது. 1944 முதல் அவர்கள் இருவரும் 'தொகுவிசைகளாக' (Resultant Forces) பயணித்த வழிமுறைகளே, அந்த விளைவிற்கு காரணம் என்ற ஆய்வில் ஈடுபட்டு, நிவாரணத்திற்கு முயற்சிக்கும் வயதை,  இருவரும் அன்று கடந்து விட்டார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1967இல் இருந்த பொதுவாழ்வு சூழலிருந்து, தலைகீழாக;

தமிழ்நாடானது கட்சி சாரா மாணவர்கள், இளைஞர்களின் சுயநலம் பாரா உண்மையான பொதுநல அக்கறையில், சென்னை வெள்ள நிவாரணங்கள் மூலமாகவும், வெளியில் தெரியாமல், பாதிக்கப்பட்டவர்களுக்குதவி வரும் நிவாரணங்கள் மூலமாகவும், ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி மூலமாகவும்;

ஆக்கபூர்வ பொதுவாழ்வு சூழலுக்கான சமூக ஆற்றல்களானது 'சுனாமி'யாகும் போக்கில், அலையாக வெளிப்பட்டுள்ளது. அதை உணரும் வாய்ப்பானது, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் மூலம், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கிடைத்தது.

1967இல் அண்ணா முதல்வரான போக்கின் தொடக்கமானது, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவு போக்கில் பயணித்து, 2017இல் முதல்வர் பன்னீர்செல்வம் ஆட்சியில், மக்களை மதித்து, உணர்ந்து, செயல்படத் தொடங்கிய போக்கானது, சென்னை வெள்ள நிவாரணம், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்ட வெற்றிகள்,  கிருஷ்ணா நதி நீர் மூலம் சென்னை குடிநீர் சிக்கலை தீர்த்தது, போன்றவை மூலம் வெளிப்பட்டு;

'குடிநீர் பிரச்சினை' உள்ளிட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இனி தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பயணிக்க தொடங்கிய கட்டத்தில், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்புட்ன், சென்னை கடற்கரை எண்ணெய் கழிவுகள் அபாய மீட்பில் முதல்வர் ஈடுபட்டிருந்த சமயத்தில்;

அந்த 'கருக்கலைப்பு' நடந்துள்ளது: அநேகமாக 1967இல் தொடங்கிய 'திராவிட' அரசியலின் 'முடிவாக'.

1967இல் இருந்த பொதுவாழ்வு சூழலிருந்து, தலைகீழாக;

தமிழ்நாடானது கட்சி சாரா மாணவர்கள், இளைஞர்களின் சுயநலம் பாரா உண்மையான பொதுநல அக்கறையில் 'சுனாமி'யாகும் போக்கில், அலையாக வெளிப்பட்டுள்ள சமூக ஆற்றல்களின் கோபத்திற்கும் வெறுப்புக்குமான குவியமாக, 'சசிகலா குடும்ப அரசியலானது' முன்புத்தியில்லாத, தற்கொலைப் பாதையில், பயணிக்கத் தொடங்கியுள்ளது.

பொதுவாழ்வு வியாபாரத்திலிருந்து தமிழ்நாடு மீளத் தொடங்கியுள்ள உச்சக்கட்டத்தில் (Climax);

சசிகலா குடும்ப அரசியலின்'' கவசங்களாக, 'காவிமய எதிர்ப்பு', (ஆய்வுகள் மூலம் 'செல்லாக்காசாகி'யுள்ள) 'ஆரிய Vs திராவிட',  'தனித் தமிழ்நாடு' போதைகள் பயன்பட வாய்ப்புகள் இருப்பதும், ஊடகங்களில் வெளிப்பட்டுள்ளன.

“Natarajan has nurtured close ties with fringe Tamil extremist groups and far left cultural organisations that hide sinister separatist plans under a benign public agenda. Dravida Kazhagam leader Veermani is a good friend of Natarajan reflected by his frequent statements supporting Sasikala's ascension. A key member and advisor of Sasikala, Divakaran, made an incendiary speech threatening to play the Tamil race card.
It is alleged that some of the disturbance during the Jallikattu protests was engineered by fringe groups at the behest of Mannargudi Mafia to discredit OPS. Political observers in TN believe that resorting to such a game-plan of using street violence cannot be ruled out.” (https://swarajyamag.com/politics/can-ops-survive-the-machinations-of-the-mannargudi-mafia )

‘மாணவர்கள், இளைஞர்கள், சாதாரண மக்கள் எல்லாம், 'வெள்ள நிவாரணம்' மூலம் வெளிப்படுத்திய சமூக போக்கின் தொடர்ச்சியே, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம். அதனை உணர்ந்து, 1967க்குப் பின் முதல்முறையாக,  முதல்வர் பன்னீர்செல்வத்தின் அரசானது, மக்களை மதித்து, உணர்ந்து, செயல்படத் தொடங்கிய போக்கானது, ராஜபட்சே பாணி சசிகலா குடும்ப சுயநல அரசியலில், 'கருச்சிதைவுக்கு' உள்ளாகியுள்ளது. பேரா.அ.மார்க்ஸ் போன்றவர்கள், 'காவி'க்கும் தமிழுக்கும் உள்ள வரலாற்று ரீதியிலான ஆழமான தொடர்பை விளங்கிக் கொள்ளாமல், 'மேற்கத்திய முற்போக்கு' குறிப்பாயத்திற்கு (Western Paradigm) அடிமையாகி, ‘காவியை' சமஸ்கிருதத்தின் 'ஏகபோக'மாக கருதி, 'காவிமய ஆபத்து' என்ற போர்வையில், அந்த 'கருச் சிதைவுக்கு' துணை போனார்களா? இனி, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு தடையாகவே, தமது பயணத்தை தொடரப் போகிறர்களா, தமிழ்நாட்டை சீரழித்த சக்திகளின் 'நண்பராக'?, என்பதானது, வெகு விரைவில் தெளிவாகும். (‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?; Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil politics; http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) தமிழ்நாட்டை சீரழித்த சக்திகளின் தேய்ந்து வரும் போக்கினையே, அரசியல் நீக்கத்தில் (Depoliticize) பயணித்து வந்த 'ஆதாய அரசியலை', மாணவர்களும், இளைஞர்களும் ஓரங்கட்டி, சாதித்த‌ ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியானது உணர்த்தியுள்ளது.’ (http://tamilsdirection.blogspot.in/2017/02/xenophobia-httpsen.html )

‘மேலே குறிப்பிட்டவாறு 'உணர்ச்சிபூர்வ பரிமாற்ற எதிர்ப்பில்' ('செனோபோபியா' நோயில் சிக்கியுள்ளார்களா? என்ற கேள்வி எழும் அளவுக்கு; https://en.wikipedia.org/wiki/Xenophobia ) ஒன்று பட்டுள்ள 'பெரியார்' ஆதரவாளர்களும் சரி, 'இந்துத்வா' ஆதரவாளர்களும் சரி, தமிழ்நாட்டில் 'தமிழர்' என்ற அடையாளமானது, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் 'ஆக்கபூர்வ' திசையில், 'இணக்கமாகும் சமூக செயல்நுட்பம்' ( Harmonizing Social Mechanism) வளர்வதற்கு தடையாகவே, ஒருவருக்கொருவர் 'உதவி' பயணிக்கிறார்களா? அந்த திசையில் அறியாமையில் பயணிப்பவர்கள், இரு சாராரிலும் யார்? அல்லது இந்தியாவில் தேச கட்டுமானமானது ( Nation Building) தற்சார்பு பெறுவதை சீர் குலைக்க முயலும், அந்நிய சூழ்ச்சியில் சிக்கி, பயணிப்பவர்கள், இரு சாராரிலும் யார்? என்ற ஆய்வும் அவசியமாகி வருகிறது.

'தமிழர்' என்ற அடையாளத்தின் சமூக வலிமை தொடர்புள்ள சமூக ஆற்றல்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட இரு சாராரின் தவறான அணுகுமுறைகள் காரணமாக;

'சமூக மூச்சுத் திணறலுக்கு' உள்ளாகி, அந்த மூச்சுத் திணறலிலிருந்து தப்பிக்க உதவிய 'ஜன்னலாக',  அந்த ' தமிழர் அடையாள' அடிப்படையில், 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் மூலமாக‌, வெளிப்பட்டபோது;

திராவிடக் கட்சிகளும், பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், ஓரங்கட்டப்பட்டதற்கும்;

‘அந்த 'தமிழர்' அடையாள சமூக மூச்சுத் திணறலானது, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் மூலம் வெளிப்பட்டதற்கும் உள்ள தொடர்பும் ஆய்விற்குரியதாகும். அந்த 'ஜல்லிக்கட்டு போராட்ட ஆதரவு சக்திகள்' எல்லாம், ஆதாய அரசியலின் குவியமாகியுள்ள (Focus), சசிகலாவின் 'அரசியலை' எதிர்த்து, 'அலையாக' வளர்ந்து வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அவ்வாறு வளர்வது உண்மையானால், அந்த 'அலையானது', 'சுனாமியாக' வலுவாகி, உண்மையான பகுத்தறிவுக்கு விரோதமான, தமிழ்நாட்டின் சீரழிவுக்கு கேடயமான, 'ஆரிய - திராவிட' கருத்து கழிவினை, சுவடின்றி அழிக்கும் போக்கும் துவங்கி விட்டது.’ (http://tamilsdirection.blogspot.in/2017/02/depoliticize-10.html )

பிரமிக்க வைக்கும் தியாகத்துடனும், உண்மையுடனும், நேர்மையுடனும் பொதுவாழ்வில் பயணித்த ஈ.வெ.ரா அவர்கள், 1944இல் காலனிய சூழ்ச்சியில் 'திராவிடர்' அடையாளத்தை, மேற்கத்திய 'ரேஸ்' (Race) பொருளில் அரங்கேற்றி, திராவிடர் கழகத்தில், சமூக இழிவு ஒழிப்பு அடையாளமாக 'கறுப்பு சட்டையை' அறிமுகப்படுத்தினார். அப்போதே, தி.க பொதுச் செயலாளராக இருந்த அண்ணாதுரை, 'கறுப்பு சட்டையை' அலட்சியப்படுத்தி, ஈ.வெ.ராவின் கோபத்திற்குள்ளானார். ஈ.வெ.ரா மறைவிற்குப் பின், 'பெரியார் சமூக கிருமிகளின்' வளர்ச்சியில், நடராஜன் அரவணைப்பில், பொதுவாழ்வு வியாபாரிகளின் நிறமாக 'கறுப்பு', 'முதிர்ந்து' காட்சியளிப்பதில், வியப்பில்லை; கருவிலேயே குற்றம் இருந்ததால்.

பொதுவாழ்வு வியாபாரத்தின் குவியமாகியுள்ள சசிகலா குடும்ப அரசியலுக்கும், பொதுவாழ்வு வியாபாரத்திற்கு எதிரான தமிழ்நாட்டிற்கும் இடையே போர் துவங்கி விட்டது, என்பதற்கான அறிகுறிகளும் வெளிப்பட்டுள்ளன; சசிகலாவின் 'பினாமி'யாக பழனிச்சாமி முதல்வரான போக்கில். 'ஆதாய ஆவமரியாதை அரசியல்' குவியமாகியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலுக்கும்', 'சுயலாப நோக்கற்ற சுயமரியாதை மீட்சி அரசியலுக்கும்' இடையே நடக்கும் போர் அதுவாகும். ( ‘At the end of 12 days of political crisis, …… the team from Mannargudi defeated the rest of Tamil Nadu …Convict number 9234 has won the battle but will she win the war is the question. ‘; http://www.firstpost.com/politics/sasikala-vs-panneerselvam-in-chennais-political-match-mannargudi-defeats-tamil-nadu-3287650.html  & “தமிழர்களே, பாராட்டுக்கள். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரால் சிறைக்கம்பிகளுக்கு பின்னே இருந்து இயக்கப்படுகிற ஒரு அரசாங்கத்தை 4 ஆண்டுகள் பார்க்கப்போகிற சிறப்பை அடைந்திருக்கிறீர்கள். பழனிசாமி, சிறையில் இருந்து கட்டளைகளை பெற்று நிறைவேற்றுவார்”- சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ; http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/17010042/1068777/Tamilnadu-Running-the-government-from-behind-prison.vpf   ) 

பொதுவாழ்வு வியாபாரிகளின் நிறமாக‌ 'கறுப்பு''ம், அந்த 'கறுப்பின்' வால்களாக தேர்தல் அரசியலில் பயணித்த வந்த சிகப்பும்;

'காவி'க்கும் தமிழுக்கும் உள்ள வரலாற்று ரீதியிலான ஆழமான தொடர்பை விளங்கிக் கொள்ளாமல், 'மேற்கத்திய முற்போக்கு' குறிப்பாயத்திற்கு (Western Paradigm) அடிமையாகி, ‘காவியை' சமஸ்கிருதத்தின் 'ஏகபோக'மாக கருதி, 'காவிமய ஆபத்து' என்ற போர்வையில், 'காவிமய' எதிர்ப்பில்' ஒன்றாகி,

கட்சி சாரா மாணவர்கள், இளைஞர்களின் சுயநலம் பாரா உண்மையான பொதுநல அக்கறையில் 'சுனாமி'யாகும் போக்கில், அலையாக வெளிப்பட்டுள்ள சமூக ஆற்றல்களின் கோபத்திற்கும் வெறுப்புக்குமான குவியமாகியுள்ள‌, 'சசிகலா குடும்ப அரசியல்' பாதுகாப்பு முயற்சியில், சுவடின்றி அழியப் போகிறர்களா?

அல்லது சமூக ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்கப் போகிறர்களா?

தமிழ்நாட்டிலும், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாள குழப்பங்களிலிருந்து 'விடுதலை'யாகி, குழப்பமற்ற 'தமிழர்' அடையாளத்திற்கும் (‘யார் தமிழர்?’; http://siragu.com/?p=3527 ), 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கும் உள்ள உறவானது ஆக்கபூர்வ திசையில் பயணிக்க ஏதுவாக', 'காவி'க்கும் தமிழுக்கும் உள்ள வரலாற்று ரீதியிலான ஆழமான தொடர்பின் அடிப்படையில், தமிழின், தமிழரின் அடையாள நிறம் 'காவியை' மீட்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

மாணவர்களிடமிருந்தும், இளைஞர்களிடமிருந்தும் அந்நியமாகி, பொதுவாழ்வு வியாபாரிகளின் நிறமாக‌, நடராஜ‌னிடம் 'அடைக்கலமாகி', 'கறுப்பு' ஒழிந்து வரும் வேளையில்.  

Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?; Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil 
politics;http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html

மனிதர்களைப் போலவே, மனித சமூகத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் தோன்றும் அடையாளக் கூறுகளும், பிறப்பு, வளர்ச்சி/வீழ்ச்சி, மரணம், மறு பிறப்பு என்ற சுழற்சியில் பயணிக்கும். அந்த வகையில், 1944இல் காலனிய சூழ்ச்சியில் சிக்கி தோன்றிய தி.க-வின் 'கறுப்பு' நிறமானது, இன்று பொதுவாழ்வு வியாபாரிகளின் 'கறுப்பு' நிறமாக மரணிக்கும் காலம் நெருங்கி விட்டது. தங்களுக்குப் பிடிக்காத புத்தகங்களையும் திரைப்படங்களையும் அரசு தடை செய்ய வேண்டும் என்று கோருதல், பெரியாரால் 'காலித்தனம்' என்று கண்டிக்கப்பட்ட போராட்ட வடிவங்களை செயல்படுத்துதல், உணர்ச்சிபூர்வ இரைச்சலில், அறிவுபூர்வ சிகனல்களை சுவடின்றி மறையச் செய்தல் ஆகிய போக்குகளில், 'பெரியார்' கட்சிகளில் பயணிப்பவர்களின் 'கறுப்பு சட்டை'யானது எதை உணர்த்துகிறது? (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html) பொதுவாழ்வு வியாபாரத்தை எதிர்த்து, தமிழையும், தமிழ்நாட்டையும் மீட்பவர்களின் 'நிறமாக' காவி வளர வேண்டிய சமூக தேவையும், சூழலும் கனிந்து வருகிறது. 'கடந்த கால அடிமைகளாக' வாழ்பவர்கள் எல்லாம், சமூக ஓரத்தில் நின்று, வேடிக்கை பார்ப்பதைத் தவிர, வேறு வழியில்லை.

குறிப்பு: பேரா.அ.மார்கஸ் உள்ளிட்டு எவரும் மேற்குறிப்பிட்ட பதிவை அறிவுபூர்வமாக எதிர்த்து, ஏதேனும் வெளிப்படுத்தியிருந்தால், அதனை எனது பார்வைக்கு அனுப்பினால், நன்றியுடனும், திறந்த மனதுடனும் பரிசீலிப்பேன்.

2 comments:

  1. //
    பொதுவாழ்வு வியாபாரிகளின் நிறமாக‌ 'கறுப்பு''ம், அந்த 'கறுப்பின்' வால்களாக தேர்தல் அரசியலில் பயணித்த வந்த சிகப்பும்;

    'காவி'க்கும் தமிழுக்கும் உள்ள வரலாற்று ரீதியிலான ஆழமான தொடர்பை விளங்கிக் கொள்ளாமல், 'மேற்கத்திய முற்போக்கு' குறிப்பாயத்திற்கு (Western Paradigm) அடிமையாகி, ‘காவியை' சமஸ்கிருதத்தின் 'ஏகபோக'மாக கருதி, 'காவிமய ஆபத்து' என்ற போர்வையில், 'காவிமய' எதிர்ப்பில்' ஒன்றாகி,//

    இது குறித்து விரிவாக விளக்க வேண்டுகிறேன். பொ.முருகானந்தம், திண்டுக்கல்.

    ReplyDelete
    Replies
    1. நானும் முயற்சிக்கிறேன். ஆரவமுள்ள எவர் முயற்சித்தாலும் (ஆதரவாகவும், எதிர்ப்பாகவும்) வரவேற்கிறேன்.

      Delete