'ராஜ பட்சே' பாணி 'சசிகலா குடும்ப அரசியல்';
அடையாளம் காட்டிய சுப்பிரமணிய சுவாமிக்கு நன்றி
'பெரியார்' கட்சிகளாக இருந்தாலும் சரி, 'இந்துத்வா'
கட்சிகளாக இருந்தாலும் சரி;
‘குடையைக் கண்டு வெறித்த’ அந்த கால மாடு போல, ஒருவரை ஒருவர்
'எதிரி' போல அணுகுவது, என்பதானது, அந்த 'அணுகுமுறையில்' சிக்கியவர்களை எல்லாம், 'செனோபோபியா'
( Xenophobia - https://en.wikipedia.org/wiki/Xenophobia ) மனநோயாளியாக்கி விடும்.
நல்லவேளையாக, இன்றுள்ள மாணவர்களில் பெரும்பாலோர் அந்த
நோயில் சிக்கவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, சுப்பிரமணிய சுவாமி 'பொறுக்கி'
என்ற சொல்லை ( அதன் வரையறை- definition- பற்றிய புரிதலுடன்) வெளிப்படுத்திய போது, அந்த வரையறையின்படி
செயல்பட்டு, ( ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த)
அவர் சொன்னதை நிரூபிக்கும் வகையில், நாம் போராடுவதை தவிர்க்க வேண்டும்; என்று மாணவர்களில் சிலர் எச்சரித்ததும், இணையத்தில்
வெளி வந்திருந்தது.
'பெரியார்' கட்சிகளாக இருந்தாலும் சரி, 'இந்துத்வா'
கட்சிகளாக இருந்தாலும் சரி, அந்த கட்சிகளுக்குள் உள்ள உள் முரண்பாடுகள் பற்றிய புரிதலும்,
அந்த புரிதலின் அடிப்படையில்;
சமூகத்தின் நிகழ்வுகளில், அவற்றின் வெளிப்பாடுகளை புரிந்து,
செயலாற்றினால் தான்;
'அறியாமையில்', சுயநல சக்திகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பு
வழங்கும் தவறு செய்யாமல், வாழ முடியும்.
தி.க தலைவர் கி.வீரமணியும், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியும் 'சசிகலாவை' முதல்வராக்க, ஆதரிப்பதில், ஏன் ஒன்றுபட்டுள்ளார்கள்?
என்பது ஆய்வுக்குரியது; கேலிக்குரியது அல்ல.
'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பது அறிவு' திருக்குறள் 423
என்ற திருக்குறளின்படி, நாம் ஒருவர் வெளிப்படுத்தும்
கருத்தை அணுகும் அருகதை நமக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை, கீழ்வரும் சோதனை மூலம்,
நம்மை நாமே பரிசோதித்து கொள்ளலாம்.
அக்கருத்து நமது நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால்,
அந்த கருத்தின் மீதும், அதை வெளிப்படுத்தியவர் மீதும் கோபப்பட்டால், நமக்கு அந்த அருகதை
இல்லை.
‘எப்பொருள் எவர் வாய் என ஆய்ந்து அவர்பால்
வெறுப்பை உமிழ்வது அழிவு’-
'புது'க்குறள் வழியில்;
பேரா.அ.மார்க்ஸ் உள்ளிட்டு நானறிந்த பலர், அந்த அருகதையை
இழந்து பயணித்து வருகிறார்கள் என்பதையும், ஏற்கனவே எனது பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html)
அவ்வாறு 'உணர்ச்சிபூர்வ' வலையில் சிக்காமல், தமது அறிவு, அனுபவ அடிப்படைகளில் 'பிறர் கண்ணோட்டம் அறிதல்' (Empathy) உள்ளிட்டவைகள் மூலம், திருக்குறள் 423இன் படி, ஒருவர் வெளியிட்ட கருத்தின் 'மெய்ப் பொருள்' காண்பவர்களுக்கு மட்டுமே, 'அந்த' அருகதை இருக்கும்.
1980களில் தஞ்சை மன்னர் சரபோசி அரசு கல்லூரியில், கல்லூரி ஆசிரியர்களின், உரிமைகளுக்கான, போராட்டங்களில், நான் முன்னிலை வகித்த காலத்தில்;
பேரா.அ.மார்கஸ் தனது வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது, மாணவர்கள் 'அராஜகம்' மிகுந்திருந்த, அந்த சமயத்தில்;
தமது 'எடுபிடி மாணவர்கள்' பின் தொடர, ஒரு மாணவ தலைவர், வகுப்பு வாசலில் நின்று, ஒரு மாணவனை வெளியில் அனுப்புமாறு கேட்டிருக்கிறான். அதற்கு அ.மார்க்ஸ், வகுப்பு தேர்வு நடப்பதால், வகுப்பு முடிந்த பின் அனுப்புவதாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே;
அந்த மாணவ 'தலைவனின்' முதுகுக்குப் பின்னால் மறைந்திருந்த, 'எடுபிடி மாணவன் 'ஒருவன், சிம்புவின் பீப் பாடல் 'புகழ்' சொல்லை வெளிப்படுத்தியது தொடர்பான, நிகழ்வுகளை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.( ‘சங்க இலக்கியங்கள்-சமூகவியல் வெளிச்சத்தில்; சிம்புவின் 'பீப்' பாடல்’; http://tamilsdirection.blogspot.in/2016/08/blog-post.html ) இன்று 'சசிகலா குடும்ப வலைப்பின்னல்' முதுகுக்குப் பின்னால் 'ஒளிந்து', 'அதிவேக பணக்காரராகி' விட்டாரா? என்று நான் சந்தேகிக்கும் அதே நபரும், பேரா.அ.மார்க்சும், சசிகலா முதல்வராகும் கோரிக்கையில் ஒன்றுபட்டுள்ளதும், கலைவாணர் என்.எஸ்.கே பாணி 'காலத்தின் நகைச்சுவையாகும்'. மாணவர்கள், இளைஞர்கள்,சாதாரண மக்கள் எல்லாம், 'வெள்ள நிவாரணம்' மூலம் வெளிப்படுத்திய சமூக போக்கின் தொடர்ச்சியே, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம், அதனை உணர்ந்து, 1967க்குப் பின் முதல்முறையாக, முதல்வர் பன்னீர்செல்வத்தின் அரசானது, மக்களை மதித்து, உணர்ந்து, செயல்படத் தொடங்கிய போக்கானது, ராஜபட்சே பாணி சசிகலா குடும்ப சுயநல அரசியலில், 'கருச்சிதைவுக்கு' உள்ளாகியுள்ளது. பேரா.அ.மார்க்ஸ் போன்றவர்கள், 'காவி'க்கும் தமிழுக்கும் உள்ள வரலாற்று ரீதியிலான ஆழமான தொடர்பை விளங்கிக் கொள்ளாமல், 'மேற்கத்திய முற்போக்கு' குறிப்பாயத்திற்கு (Western Paradigm) அடிமையாகி, ‘காவியை' சமஸ்கிருதத்தின் 'ஏகபோக'மாக கருதி, 'காவிமய ஆபத்து' என்ற போர்வையில், அந்த 'கருச் சிதைவுக்கு' துணை போனார்களா? இனி, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு தடையாகவே, தமது பயணத்தை தொடரப் போகிறர்களா, தமிழ்நாட்டை சீரழித்த சக்திகளின் 'நண்பராக'?, என்பதானது, வெகு விரைவில் தெளிவாகும். (‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?; Let us say 'Goodbye to hate-politics' & embrace genuine pro-Tamil politics; http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html ) தமிழ்நாட்டை சீரழித்த சக்திகளின் தேய்ந்து வரும் போக்கினையே, அரசியல் நீக்கத்தில் (Depoliticize) பயணித்து வந்த 'ஆதாய அரசியலை', மாணவர்களும், இளைஞர்களும் ஓரங்கட்டி, சாதித்த ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியானது உணர்த்தியுள்ளது.

‘'பெரியார்' ஈ.வெ.ராவிற்குப் பின், நானறிந்த வரையில்,
தமிழில் 'அநாகரீகம்' என்ற அடையாளத்தில் உள்ள சொற்களை பயன்படுத்திய, 'ஊழல்' குற்றச்சாட்டிற்கு
உள்ளாகாத தலைவர் சுப்பிரமணியசுவாமி ஆவார். இருவருமே தாம் பயன்படுத்திய அந்த சொற்களுக்கு,
அறிவுபூர்வமான விளக்கமும் தந்துள்ளனர். உதாரணமாக, தான் பயன்படுத்திய ''பொர்க்கி' (porki) என்ற
சொல்லானது, 'ஆபாசமாக, வன்முறை தொனியில், அச்சுறுத்தும் வகையில், பேசி விட்டு, எதிர்ப்பைக்
கண்டு, ஓடி ஒளிபவர்' (One of the ways to recognise a porki is if his or her
language is vulgar hard porn, threatens violence but runs away on retaliation
) என்று சுப்பிரமணியசுவாமி தமது 'டுவிட்டரில்'
தெரிவித்துள்ளார். சுப்பிரமணியசுவாமியை 'வீரமாக' எதிர்த்து பேசி விட்டு, பின் சுப்பிரமணியசுவாமியின்
எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிந்த 'திராவிட' கட்சி
தலைவர்கள் யார்? யார்? என்ற ஆராய்ச்சியை, சுப்பிரமணியசுவாமியின் ''பொர்க்கி' (porki) தொடர்பாக,
அவரைக் கண்டித்து வருபவர்கள் ஆராயத் தொடங்கினால், ''பொர்க்கி' (porki) விவாதமும், ஆக்கபூர்வ
திசையில் பயணிக்கக் கூடும். 'பெரியார்' ஈ.வெ.ரா
வையும், சுப்பிரமணிய சுவாமியையும், அவர்களின் எதிர்ப்பாளர்கள் எல்லாம் இணையத்தில், 'உணர்ச்சிபூர்வமாக' இழிவுபடுத்தும் போக்கில் ஒன்றுபட்டுள்ளார்களா? என்பதும்
ஆய்விற்குரியதாகும். 'பெரியார்' ஈ.வெ.ரா, சுப்பிரமணிய சுவாமி ஆகிய அந்த இரண்டு
பேருமே சுயநலத்தில் பணம் சம்பாதிக்க பொதுவாழ்வில் இருந்தவர்கள் அல்ல. எனவே 'பொதுவாழ்வு
வியாபாரிகளும்', அவர்களின் எடுபிடிகளும், அந்த இருவரையும் கண்டிக்க அருகதை அற்றவர்கள்,
என்பதும் என் கருத்தாகும்.’
தமிழ்நாட்டின் அரசியல் போக்குகளில் திருப்பு முனைகளுக்கு
வழி வகுத்த, 'ஜெயலலிதா சசிகலா சொத்து குவிப்பு வழக்கு' மற்றும் 'ஜல்லிக்கட்டு ஆதரவு'
வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தானாகவே தொடுத்தவர் சுப்பிரமணியசுவாமி என்பதை மறந்து
விட முடியுமா?
அதே போல, முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னும், போர்
நடந்த போதும், பின்னும், இன்று வரையிலும், 'ஊசலாட்டமின்றி' ராஜபட்சேயை ஆதரித்து வருபவர்
சுப்பிரமணிய சுவாமி.
முள்ளிவாய்க்கால் போர் முடிந்து, கொலும்பில் ராஜபட்சே மற்றும்
இலங்கை ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், 'தமிழர்களின் உரிமை தொடர்பான சிக்கலை
தீர்க்கத் தவறினால், மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும்' என்று பேசிய, சுப்பிரமணிய சுவாமியின்
துணிச்சலான பேச்சினை, அப்போதே பாராட்டி, நான் இணையத்தில் கருத்து வெளியிட்டேன்.
நாம் வாழும் சமுக அமைப்பில் உள்ள மனிதர்கள் எல்லாம்
'சமம்' என்பது படிக்க, கேட்க, இனிப்பாக இருந்தாலும்;
ஒரு சமூகம் செயல்படும் செயல்நுட்பத்தில்
அடிமட்டத்தில் உள்ள மனிதர்கள் தொடங்கி, மேல் மட்டத்தில் உள்ள மனிதர்கள் வரை, இடையில்
அந்தந்த சமூகத்தின் தன்மையைப் பொறுத்து, பல மட்டங்கள் இருக்கும் என்பதையும்;
எந்த மனிதரின்
செயல்பாட்டையும், கருத்தையும் 'சரியாக' விளங்கிக் கொள்ள வேண்டுமானால், அந்த மட்டங்களை
பற்றியும், 'அந்த நபர்' எந்த மட்டத்தில் இருக்கிறார் என்பது பற்றியும், அவரின் சுயநலன்/பொதுநலன்
தொடர்பான 'யோக்கியதை' பற்றி அறிந்து அணுக வேண்டும் என்பது பற்றியும் ஏற்கனவே பதிவு
செய்துள்ளேன்.
‘சமுகத்தில் வளர்ந்து வரும்(growing), தேய்ந்து வரும்(decaying)
போக்குகள் உள்ளிட்ட, பொது நலன் தொடர்புள்ள அமைப்புகளிலும், பிரச்சினைகளிலும் செயலாற்றும்
விசைகளின் (Forces) ஊற்றுக்கண்கள் மேலேக்குறிப்பிட்ட, தனி நபரிடமிருந்து வெளிப்படும் விசைகளே
ஆகும். இயற்பியலில்(physics) எந்திரவியலில் (Mechanics) எவ்வாறு விசைகள் பிணைப்புகள்(Bonds) உள்ளிட்ட பல வழிகளில் சேர்ந்து, அடுத்த அடுத்த உயர்
மட்டங்களில், தொகு விசைகளாக (Resultant
Forces) செயல்படுகிறதோ, அதே போல, சமூக எந்திரவியலில்
, மேற்குறிப்பிட்ட விசைகள், அந்த சமூகத்தில் செல்வாக்கில் உள்ள பண்பாடு உள்ளிட்ட கூறுகளின்
அடிப்படையில், வெவ்வேறு வகைகளிலான, வெவ்வேறு,
ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வகையில், அரசியல், கலை, ஆன்மீகம் உள்ளிட்ட புலங்களில்,
வெவ்வேறு தொகு விசைகளாக செயல்படுகின்றன.
ஒரு தனி மனிதர் தமது அறிவு, அனுபவ,சமூகத்தில் அவருக்கான
இடம் உள்ளிட்ட பல காரணிகளைப் (several factors) பொறுத்து, தனி மனிதருக்கு, அவர் வாழும்
சமூகத்தில், வெவ்வேறு சமூக நிலைகளில் உள்ள அமைப்புகளில் இடம் பெறுவதன்
மூலம், வெவ்வேறு அளவில், வெவ்வேறு மட்டங்களில் செயல்படும் தொகுவிசைகளோடு அடையாளப்படுத்திக்
கொண்டு, அதற்கேற்ற 'செல்வாக்குள்ளவராக', வாழ முடியும். அவ்வாறு வாழ்பவர்களின் பங்களிப்புக்கும்,
சமூகத்தின் (நல்ல அல்லது தீய திசைகளில்) போக்கின் இயல்புக்கும், இயக்கத்தன்மைக்கும்
ஏற்ப, அடுத்த அடுத்த உயர் அல்லது கீழ் நிலை தொகுவிசைகளை நோக்கி இடம் பெயர்வார்கள்.அதாவது
பேருந்தில் ஒட்டுநர் போல, சமூகத்தில் உள்ள பல வகைகளிலான செல்வாக்குள்ள ஓட்டுநர்களாக
இடம் பெயர்வார்கள். அது போன்ற நிலையில், இந்தியாவில் அதிக செல்வாக்குள்ள ஓட்டுநர் பணியில்
தற்போது மோடி உள்ளார். ஒரு ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டின் வரை எல்லைகள்(limitations),
தான் இயக்கும் அமைப்புகளின்(structures) வரை எல்லைகள் பற்றிய புரிதலுடன், தனது சுய
அறிவு, அனுபவத்தைப் பொறுத்து, நல்ல அல்லது கெட்ட திசையில் பயணிக்க முடியும்.’ (http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html
)
இயற்பியலில் ஐன்ஸ்டினின் 'சார்பு கொள்கை' (Relativity Theory) அறிந்தவர்களுக்கு, கீழ்வரும் உண்மை
விளங்கும்.
ஒரு குறிப்பு ஆயத்தில் (Frame of Reference) நேர்த் திசையில் பயணிக்கும் ஒரு பொருளானது, இன்னொரு
குறிப்பாயத்தில் உள்ள நோக்குநருக்கு, எதிர்த் திசையில் பயணிப்பதாகவும் தெரியும்.
பேருந்தில் பயணிப்பவர் தாம் ஓய்வுநிலையில் இருப்பதாகவும்,
தெரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் நபர், பேருந்து பயணிக்கும் திசைக்கு எதிர்த்திசையில்
நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரியும்.
மேலே குறிப்பிட்ட புரிதல் இல்லாதவர்கள் எல்லாம், அவ்வாறு
'உணர்ச்சிபூர்வ' வலையில் ஒருவர் கருத்து வெளிப்பட்டவுடனேயே, அது தமது நிலைப்பாட்டிற்கு
சாதகமாக இருந்தால், 'அறிவுக் கண்களை' (திருக்குறள் 423) மூடி ஆதரிப்பது; பாதகமாக இருந்தால் எதிர்ப்பது:
என்பதானது கருத்து கறுப்பு வெள்ளை நோயின் அறிகுறிகள், என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html
)
அந்த சமூக நோயில் சிக்காமல், தமது அறிவு, அனுபவ அடிப்படைகளில்
'பிறர் கண்ணோட்டம் அறிதல்' உள்ளிட்டவைகள் மூலம், அவர் வெளியிட்ட கருத்தின் 'மெய்ப்
பொருள்' காண்பது, என்ற அணுகுமுறையில்;
சுப்பிரமணிய சுவாமி அன்று ராஜபட்சேயை ஆதரித்ததும்,
இன்று நடராஜன் செல்வாக்கில் இயங்கும் சசிகலாவை ஆதரித்ததும், நடராஜன் 'ஆரிய Vs திராவிட'
கவசத்தை வெளிப்படுத்தியபோது, சுப்பிரமணிய சுவாமிக்கு நெருக்கமானவர் நடராஜன் அருகே நின்றிருந்ததும்
(http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_18.html);
'ஜெயலலிதா சசிகலா சொத்து குவிப்பு வழக்கு'
மற்றும் 'ஜல்லிக்கட்டு ஆதரவு' வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தானாகவே தொடுத்ததும்;
சுயலாப நோக்கின்றி, தனது அறிவு அனுபவ அடிப்படைகளில்,
'தனது நாட்டிற்கு நல்லது' என்ற நோக்கில், முரண்பாடுகளின்றி, சுப்பிரமணியசுவாமி செயல்பட்டு
வருகிறார் என்பதானது;
எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில் நான் பெறும் ஆய்வு
முடிவாகும். அந்த முடிவுக்கு முரணாக எந்த ஆய்வு வெளிப்பட்டாலும், அதனையும் திறந்த மனதுடன்
அணுகி, எனது ஆய்வுமுடிவினை நெறிப்படுத்திக் கொள்வேன்.
ஏனெனில் தனதளவில் நேர்மையான சுப்பிரமணியசுவாமி, தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், உலக அரங்கிலும், மேலே விளக்கியுள்ள சமுக செயல்நுட்பம் (Social Mechanism) மூலம் வெளிப்படும் தொகுவிசைகளின் (Resultant Forces) மீது செல்வாக்கு செலுத்தி, 'தனது நாட்டிற்கு நல்லது' என்ற நோக்கில் செயல்படுபவர் ஆவார் என்பது எனது முடிவாகும்.
மாறாக சமூகத்தில் முளைவிட்டு வளரும் சமூக விசைகளை (Social Forces) ஆராய்ந்து, ஆக்கபூர்வமான விசைகளை வளர்த்தும், கேடான விசைகளை எதிர்த்தும், தனிப்பட்ட அளவில் எனக்கு சாதகமாக, தொகுவிசைகளோடு ஒன்றி, 'உயர'க் கூடிய வாய்ப்புகள் என்னை தேடி வந்தாலும், சமூகத்திற்கு கேடான திசையிலேயே நான் பயணிக்க நேரிடும் என்ற புரிதலில், அவற்றை தவிர்த்து, அதன் காரணமாகவே நம்ப முடியாத இழப்புகளுடன் வாழ்ந்து வருபவன் நான். அதன் காரணமாகவே, நம்ப முடியாத அளவுக்கும், தமிழ்நாட்டின் போக்குகள் மீது செல்வாக்கும் செலுத்தி வர முடிகிறது.
(http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html )

அமிர்தாஞ்சன், கங்கை அமரன் உள்ளிட்டு சசிகலா குடும்ப
வலைப்பின்னலின் 'ஊழல் பேராசை' காரணமாக, நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டவர்களும்,
முதல்வராக இருந்த ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட போது, தமிழ்நாடெங்கும்
ஆளுங்கட்சியினர் அவிழ்த்து விட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களும், அவற்றை எல்லாம்
கேள்விப்பட்டவர்களும், தம்மை பற்றியும், தமது கட்சியைப் பற்றியும், தாம் முன்னிறுத்தும்
கொள்கையைப் பற்றியும் என்ன நினைப்பார்கள்? என்ற கவலையின்றி, காசி ஆனந்தன், நெடுமாறன் உள்ளிட்ட சில 'ஈழ' ஆதரவாளர்கள் பயணித்து வருவது போல;
முதல்வரையே அச்சுறுத்தி, ராஜினாமா மடல் பெற்று, அதை
ஆளுநருக்கு அனுப்பிய பின்னும்;
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி போன்ற சில பிராமணர்கள் தவிர, 90% பிராமணர்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக அறிவித்துள்ள நடராஜன் (https://www.youtube.com/watch?v=oeoYzJELPjk&feature=youtu.be ) துணையுடன் உருவான 'முள்ளி வாய்க்கால்' முற்றத்தில், ஈ.வெ.ரா அவர்களின் படம் இடம் பெறவில்லை என்பது உண்மையானால்;
வரலாற்றில், தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழித்தவர்களின், 'ஆரிய Vs திராவிட கவசத்திற்கு’ காரணமான, 'குற்றவாளி' என்ற பழிக்கு காரணமான, 'பெரியார்' என்ற சிறையிலிருந்து, ஈ.வெ.ரா அவர்களை மீட்கும் எனது முயற்சியும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
‘நேர்மையான சுய சம்பாத்தியத்திற்கான தகுதி, திறமைகளின்றி, மனித மதிப்பீடுகளை (Human Values) காவு கொடுத்து, சுயலாப கள்வர்களாக, பொருள் ஈட்டுவோரை, 'வரைவில் மகளிர்' என்று திருக்குறள் (பொருட்பாலில், காமத்துப் பாலில் அல்ல) 'வரைவில் மகளிர்' ( விலை மாதர்) அதிகாரம் 187 அடையாளம் காட்டியுள்ளது. அதே அதிகாரத்தில், அத்தகையோருடன் உறவு கொண்டு, 'பலன் அனுபவிப்பவர்களை', 'இருட்டறையில் பிணம்' (திருக்குறள் 913) தழுவியவர்கள் என்றும், திருக்குறள் அடையாளம் காட்டியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் நமது சமூக வட்டத்தில், 'வரைவில் மகளிர்', மற்றும் 'இருட்டறையில் பிணம் தழுவியவர்' யார்? யார்? என்று, அவர்கள் பொருள் ஈட்டும் வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, அடையாளம் கண்டு, அகற்றினால் தான், ஈ.வெ.ராவின் 'சுயமரியாதையை', 'பெரியார் சமூக கிருமிகளிடமிருந்து', மீட்கும் முயற்சிக்கு நாம் பங்களிப்பு வழங்க முடியும்.’
(http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html )
விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் காலூன்ற துணை புரிந்தவர்களில் ஒருவரான, எனது அபாய எச்சரிக்கைகளை புறக்கணித்து, என்னை வெறுத்து, 'எதிரியாக' பாவித்து, 'முள்ளி வாய்க்கால் பேரழிவு' நோக்கி, பயணித்த போக்கினை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )
என்னை புறக்கணித்து, அறியாமையின் காரணமாகவோ, அல்லது
சுயலாப நோக்கிலோ, விடுதலைப் புலிகளின் அந்த தவறான பயணத்தை தமிழ்நாட்டில் ஊக்குவித்தவர்களில்
பலர், இன்று சசிகலா முதல்வராகும் முயற்சியை ஆதரிக்கும் 'சமூக குற்றவாளிகளாக', தெரிந்தோ,
தெரியாமலோ, பங்களித்து வருகிறார்கள்.
1967 இல் திராவிடக் கட்சிகளின் ஆட்சி அரங்கேறி, 'ஊழல்' முளை
விட்டு வளரும் போக்கானது, தொடங்கியிருந்தாலும்;
1991 முதல் தான், அமிர்தாஞ்சன், கங்கை அமரன் என்று
எண்ணிலா பலரின் சொத்துக்களை எல்லாம், (ராஜபட்சே குடும்ப ஆட்சி அதிகார துஷ்பிரயோகத்திலும்
கூட இடம் பெறாத) அச்சுறுத்தி, தேவைப் பட்டால் கொலைகளும் செய்து,
அபகரிக்கும் போக்கும், மலைகளையும், காடுகளையும், தாது மணல், ஆற்று மணல், ஏரிகள்,
ஆறுகள் உள்ளிட்ட கனி வளங்களை எல்லாம் 'ஊழல் பேராசையில்' அபகரிக்கும் போக்கும் தொடங்கியது.
அந்த போக்கிற்கு 'பிள்ளையார் சுழி' போட்டு, அரங்கேற்றியவர்கள் வழியில் தான், அடுத்து
அடுத்து வந்த ஆட்சிகளும் பயணித்தன. அதன் தொடர் விளைவுகளாக, 'ஆங்கில வழிக் கல்வியானது'
வியாபாரமாகி, தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மரணப் பயணமும், அறிவு உழைப்பிலும்,
உடல் உழைப்பிலும் தமிழர்களில் பலர் 'பதராகி'வரும் போக்கும், தமிழை, தமிழர்களை, தமிழ்நாட்டை
சீரழித்து வருவதை, பல பதிவுகளில் விளக்கியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html )
(http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html )
விடுதலைப் புலிகளின் 'முள்ளி வாய்க்கால் பேரழிவு' பயணத்திற்கு
துணை போன, தமிழ்நாட்டு ஆதரவாளர்களில் பலர், அந்த பேரழிவிற்குப் பின், நடராஜன் துணையுடன்
'முள்ளி வாய்க்கால் முற்றம்' தமிழ்நாட்டில் அமைத்தார்கள். தமிழ்நாட்டிலும் முள்ளி வாய்க்கால்
அழிவை நோக்கிய பயணத்திற்கு, அது துவக்கமாக அமையுமா?
'அமையும்' என்று அஞ்சி, சுப்பிரமணிய சுவாமி, அந்த அழிவானது
("முள்ளிவாய்க்கால் பேரழிவானது, 'ஈழப் பகுதிகளில்' மட்டுமே பாதித்தது போல) தமிழ்நாட்டுக்குள்
மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த வேண்டும், இந்தியாவின் மற்ற பகுதிகளை பாதிக்க விடக் கூடாது,
என்ற நோக்கில், சசிகலாவை சிறைக்கு அனுப்பிய வழக்கையும் தொடுத்து, இன்று
சசிகலாவை பெங்களுரு சிறையிலிருந்து, சென்னை போயஸ் கார்டன் 'வீட்டு சிறைக்கு'(?) மாற்ற
உதவும் நோக்கில், பயணிக்கிறாரா?
தமிழ்நாட்டிலும் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது
என்ற அக்கறையில், நான் உள்ளிட்டு, 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி போன்ற இன்னும் பலர்
பயணிக்கிறோமா?
எந்த பயணம் வெற்றி பெறும்? என்பது வெகு சீக்கிரம் தெரிந்து
விடும்.
சசிகலா முதல்வராகும் பிரச்சினையில் எதிரெதிர் நிலைப்பாடுகளில்
உள்ள சுப்பிரமணிய சுவாமி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, நான் உள்ளிட்ட பலருக்கும்,
சுயலாப நோக்கில், அந்த நிலைப்பாடுகளை நாங்கள் எடுக்கவில்லை, என்பது அவரவர் மனசாட்சிக்கு
தெரியும்; எனவே தமது நிலைப்பாடுகள் தொடர்பான பாராட்டுகளுக்கு மயங்குவதற்கும், பழிச்
சொல்லுக்கு பயப்படுவதற்கும், இடமில்லை.
'இந்தி எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு' அடிப்படைகளில், 'மக்களை மயக்கும் திறனுள்ள' தலைவர்களுடன் (charismatic) பயணித்து, 1967 முதல் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் பயணித்து வந்த தமிழ்நாடானது;
இன்று 'மக்களை மயக்கும்' தலைவர்கள் இன்றி, அந்த கட்டத்தின் முடிவுக்கு வந்துள்ளது. இனியும் 'இந்தி எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு' தமிழ் நாட்டில் தொடருமா? தொடராதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. (‘It is clear, therefore, that a phase in Dravidian politics which began with the Congress's defeat in Tamil Nadu in 1967 is coming to an end. It remains to be seen to what extent the main ingredients of that politics -- atheism and an anti-Hindi, anti-Aryan, anti-North Indian outlook -- survives the entry of non-charismatic rulers.’; http://www.business-standard.com/article/news-ians/theatre-of-the-absurd-in-tamil-nadu-column-political-circus-117021100197_1.html )
1944க்கு முன் ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான முறைகளில், 'இந்தி எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு' தொடர்பாக, 'தீர்வு' நோக்கி வெளிப்பட்டு வளர்ந்து வந்த சமூக ஆற்றல்கள் எல்லாம், 1944 முதல் உணர்ச்சிபூர்வமாக , பொதுவாழ்வு வியாபார அழிவுபூர்வ போக்கில் பயணித்து, 1949இல் 'வீரியம்' பெற்று, 1967இல் தேசியக்கட்சிகளை ஓரங்கட்டி, ஆட்சியைப் பிடித்ததானது, வெறும் அரசியல் மாற்றம் மட்டுமல்ல; தமிழர்களிடையே நேர்மையான சம்பாத்திய கூறுகளை அழித்து, பலவகை 'தரகர்களை' வளர்த்து, 'ஊழல் பேராசையில்' தமிழ்நாட்டையும் சூறையாடி, தமிழ் மொழி மட்டுமின்றி, தமிழர்களிடமிருந்த நல்ல பாரம்பரிய, பண்பாட்டு கூறுகளை எல்லாம், சுயநல 'மேற்கத்திய முற்போக்கு' ஆதிக்கத்தில் அழித்து, அந்த போக்கிற்கு பயன்பட்டு வந்த, 'இந்தி எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு' கருத்துக்கள் எல்லாம், நேர்மையான சுயசம்பாத்தியத்தில் வாழ்பவர்களின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் உள்ளாகியுள்ளன.
எனவே உணர்ச்சிபூர்வ போதையிலிருந்து விடுபடும் போக்கில் உள்ள தமிழ்நாட்டில், அறிவுபூர்வ விவாதங்களுக்கு உட்படாமல் தொடரும்;
'இந்தி எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு' போன்றவை எல்லாம் வடிவேல் பாணி காமெடியாக திரைப்படங்களில் இடம் பெறத் தொடங்கினால் வியப்பில்லை. (‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (7)- தமிழும், தமிழ் உணர்வும், மாணவர்களின் கேலிப்பொருள் வரிசையில்?’;
http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html )
தமிழ்நாட்டிற்கு வந்து 'திராவிட நோய்களில்' சிக்கி, பயணித்த 'ஈழ விடுதலை' முயற்சிகள் எல்லாம் முள்ளிவாய்க்கால் அழிவிற்குப் பின்னும், அதே போக்கில் தொடர்வதன் மூலம், மீண்டும் ராஜபட்சே குடும்ப அரசியலானது, ஆட்சியில் அமர வழி வகுக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் மாணவர்களும், இளைஞர்களும் அந்த நோய்களுக்கு எதிரான திசையில், அறிவுபூர்வமாக, சாத்தியமுள்ள தீர்வுகள் நோக்கி, பயணிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதையே, சென்னை வெள்ள நிவாரணங்களும், வெளியில் தெரியாமல், பாதிக்கப்பட்டவர்களுக்குதவும் நிவாரணங்களும், ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியும் உணர்த்துகின்றன.எனவே சசிகலா குடும்ப அரசியல் உள்ளிட்டு பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆட்டங்கள் அடங்கி, தமிழும், தமிழரும், தமிழ்நாடும் மீளப் போவது நிச்சயமே ஆகும்.

No comments:
Post a Comment