Thursday, August 23, 2018

'சுயலாப அரசியல்' தடைகளை மீறி, நம்பகத்தன்மையுள்ள தலைமையை உருவாக்கும் சமூக செயல்நுட்பம்;


'பாபநாசம்' சிக்னலின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக 'கோலமாவு கோகிலா'? (1)



 

'திராவிட' அரசியல் கட்சிகளின் ஆட்சிகளில் விளைந்துள்ள 'தனித்துவமான (Unique) ரசனை இடைவெளி' பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். 'சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் தமிழில் எழுதப் படிக்க தெரியாமல், தமிழ்த் திரைப்படங்களை ரசிக்கும், தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாடும் அந்த வழியில் பயணித்து வருவது போல, இந்தியாவில் வேறு எந்த மாநிலமும், உலகில் வேறு எந்த நாடும் இல்லையென்றால்;

அது 'திராவிட' அரசியல் கட்சிகளின் ஆட்சிகளில் விளைந்துள்ள 'தனித்துவமான (Unique) ரசனை இடைவெளி' ஆகும்.' (http://tamilsdirection.blogspot.com/2017/11/blog-post.html )


'பாபநாசம்', 'கோலமாவு கோகிலா' போன்று நாட்டில் நடக்கும் பிரச்சினைகளையும் சாமான்யர்களையும் குவியமாக்கும் திரைப்படங்களின் வெற்றியானது, அதற்கான 'ரசனை ஒத்திசைவானது'  (racanai resonance) சரியான முறையில் படைக்கப்பட்டதன் வெளிப்பாடாகும்.

பெரிய கதாநாயகர்களை குவியமாக்கி திரைப்படங்கள் வெற்றி பெறுவதானது, மக்களை பலகீனமாக்கும் 'விகேரியஸ் இன்பம்'(Vicarious Joy) தொடர்புள்ள 'ரசனை ஒத்திசைவானது', சரியான முறையில் படைக்கப்பட்டதன் வெளிப்பாடாகும். அவ்வாறு படைக்க
ப்படுவது சிரமமாகி வருவதும், மேலே குறிப்பிட்ட மக்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் 'ரசனை ஒத்திசைவானது' சரியான முறையில் படைக்கப்படுவதானது அதிகரித்து வருவதும், தமிழ்நாட்டின் மீட்சிக்கான சிக்னல்களே ஆகும். அதாவது தங்களை காக்க 'இரட்சகர்களாக'  கதாநாயகர்களை கருதி ஏமாந்த ரசனையானது,  மிகவும் பலகீனமாகி வருவதையே அந்த சிக்னல் உணர்த்துகிறது.

சங்க
இலக்கியங்கள் அடையாளம் காட்டிய சிற்றினத்தின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டின் நிலைமையை 'பாபநாசம்' திரைப்படம் சுட்டிக்காட்டியது.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை 'ஆபாசமாக' படம் எடுத்து, மிரட்டி, தனது காமத்துக்கு, தீனீயாக்க முயற்சிக்கிறான், போலீஸ் .ஜி.யின் மகன். அத்திட்டத்தை அக்குடும்பம் எவ்வாறு முறியடித்தது? என்பதை, அற்புதமாக வெளிப்படுத்தியுள்ள திரைப்படம் அது. நடைமுறையில் அச்சிக்கலை சந்திக்கும் குடும்பங்களில், எத்தனைக் குடும்பங்களின் பெற்றோர்கள், தமது மகளை, 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்' அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள தூண்டி, தமது செல்வத்தையும், செல்வாக்கையும் அதிகரித்துக் கொள்வார்கள்? அது போன்ற போக்கில் வாழும் 'வாழ்வியல் புத்திசாலிகள்'(?) தான், தமிழ்நாட்டு அரசியல் கொள்ளைக்காரர்களின் சமூக முதுகெலும்பா? தமிழ்நாட்டில் அந்த போக்கானது, 'அபரீதமாக' அதிகரித்து வருவதே, அதற்கு எதிர்நீச்சல் போட்ட 'பாபநாசம்' வெற்றி பெற காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2015/07/normal-0-false-false-false-en-us-x-none_9.html  )

‘எப்பாடுபட்டாலும் சீக்கிரமாக பணம், செல்வாக்கு சம்பாதிப்பது எப்படி? என்ற வெற்றியின் இரகசியத்தை அறிந்து செயல்படுத்துவதில், தமிழ்நாட்டில் ஒரு கணிசமான மக்கள் 'புத்திசாலிகள்’ (நோயாளிகளாக‌) ஆக முயற்சித்து வருகின்றனர்.’ (‘தமிழ்நாட்டு சமூக நோயும், தீர்வும்’; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_23.html )

தமது மகளை, 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்'(?), ‘அந்தவாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள தூண்டி வரும் குடும்பங்கள் தமிழ்நாட்டில் இருந்தால், அவர்கள் எல்லாம் வெட்கி தலை குனியும் அளவுக்கும்;

நிர்மலா தேவி என்ற சமூக நோய்க்கு எதிராக, சுயலாப நோக்கின்றி சமூக அக்கறையுடன் வாழ்ந்து வருபவர்கள் எல்லாம் நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் துவக்கியுள்ள போராட்டங்களை, மலடாக்க முயற்சிக்கும் 'கறுப்பு ஆடுகள்' குடும்பங்கள் எல்லாம் வெட்கி தலை குனியும் அளவுக்கும் (‘நிர்மலாதேவி போன்ற‌ ‘இன்னும் பல ஆண் - பெண் சமூக நோய்க்கிருமிகளிடமிருந்து', தமிழ்நாடு  விடுதலை பெறுவது?’ ; http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

அவ்வாறு தூண்டாமல், ஒட்டு மொத்த குடும்பமும், 'அந்த' மகளுடன் சேர்ந்து, சமூகத்தை அச்சுறுத்தி வரும் சிற்றினத்தின் சூழ்ச்சியை எவ்வாறு முறியடித்தனர்? என்பதை பிரமிப்பூட்டும் வகையில் வெளிப்படுத்தியுள்ள படம் 'கோலமாவு கோகிலா' ஆகும். கமலஹாசன், ரஜினி உள்ளிட்ட பெரிய நடிகர்களின் பிரமாண்ட படங்கள் தோல்வியடையும் சூழலில், 'கோலமாவு கோகிலா' வெற்றிநடை போடுவதானது நம்பிக்கையுட்டும் சமூக சிக்னலாகும்.

நம்பகத்தன்மையுள்ள தலைமையை உருவாக்கும் சமூக செயல்நுட்பம் தமிழ்நாட்டில் வெளிப்பட வாய்ப்புள்ளதையும், அந்த சிக்னல் உணர்த்தியுள்ளது.

அதனைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், கீழ்வரும் போக்குகளில் நாம் எவ்வாறு பயணிக்கிறோம்? என்ற மனசாட்சியுடன் கூடிய சுயவிமர்சன அணுகுமுறையில் தான், அந்தப் போக்குகள் பற்றிய தெளிவின் மூலமாக, மேலே குறிப்பிட்ட சிக்னலைப் புரிந்து கொள்ள முடியும்.

ஜல்லிக்கட்டு ஆதரவுபோராட்டத்தின் ஊடே, எது தீர்வு? என்று வழிகாட்டும் நம்பகத்தன்மையுள்ள குழு தலைமை உருவாகியிருந்தால், போராட்டத்தின் முடிவில் வன்முறை வெடித்திருக்குமா? அவ்வாறு குழு தலைமை உருவாக இருந்த வாய்ப்பானது, 'சுயலாப அரசியல்' நோக்கில் ஊடுருவிய சக்திகள் மூலம் சிதைக்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு விடை காணாமல், அடுத்து இது போன்று அரங்கேறும் போராட்டமும் வெற்றி பெற வாய்ப்பில்லை.’  என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_27.html )

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமாக இருந்தாலும், ஈழ விடுதலை போராட்டமாக இருந்தாலும், அல்லது காஷ்மீர் விடுதலை உள்ளிட்டு எந்த போராட்டமாக இருந்தாலும்;

'உதவிகளை வழங்குபவரைப் போலவே, உதவிகள் பெறுபவருக்கும், சுயலாப கணக்கிலான உள்நோக்க ஈடுபாடு இருக்குமானால், அப்படிப்பட்ட நபர்களிடம் ஏமாந்து, அவர்களை பொதுவாழ்வில் தலைவர்களாகவும், தொண்டர்களாகவும் செயல்பட அனுமதித்த சமூகமானது, அந்த உதவிகளால் விளையும் ஆபத்திலிருந்து தப்பவே முடியாது.' என்பதையும்;

வெளிப்படைத்தன்மையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability) இல்லாத மனிதரும், குடும்பமும், கட்சியும், அரசும், எந்த அமைப்பும், சமூகத்திற்கு கேடாக பயணிப்பதில் இருந்து தப்ப முடியாது. (‘அரசியல் கட்சிகளும், நிறுவனங்களும்; நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும்,       தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும்’; http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html  ) என்பதையும்;

ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘  'உதவிகளும்', ‘தூண்டில் மீன்களும்’ ; சீமானும், ராகவா லாரன்சும்;  அடுத்து இது போன்று அரங்கேறும் போராட்டமும், வெற்றி பெற வாய்ப்புண்டா?’; http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_27.html )

ஆதாய அரசியலில் சிக்கி, தமிழ்நாட்டு கட்சிகள் எல்லாம் மரண திசையில் பயணிப்பதையும் ற்கனவே விளக்கியுள்ளேன்.

ஜப்பானிய 'ஜுஜுட்சு' (Jujutsu; https://en.wikipedia.org/wiki/Jujutsu ) சண்டையில், எதிரியின் வலிமையையே, எதிரிக்கு எதிராக பயன்படுத்தி வெற்றி பெறுவர். எதிரியே தனது வலிமையை 'தானம்' செய்து, தானாகவே தோற்கும், 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு', தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது

ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை அப்பொல்லோவில் தொடங்கிய நாள் முதல்; அந்த 'மர்மத்தை' எதிர்த்து குரல் கொடுக்காமல், 'சசிகலா குடும்ப சூழ்ச்சிக்கு' நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைத்து, தத்தம் அரசியல் அடித்தளங்களை, தாமே 'நாசமாக்கி' கொண்ட கட்சிகளின், தலைவர்களின் பங்களிப்போடு;

அதே வகை 'வித்தியாசமான அரசியலில்', பிரதமர் மோடியால் ஈர்க்கப்படும், 'திராவிட' கட்சிகளின் ஆதரவாளர்களை 'விரட்டும்' வகையில், தமிழக பா.. தலைவர்களில் சிலரும் பயணித்து, தமிழ்நாட்டு கட்சிகளின் அரசியல் எல்லாம் மரணத்தை நோக்கி பயணித்து வருவதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2017/04/depoliticize12-social-energy.html

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் கட்சிகளின் அரசியல் மரணித்து விட்டதை, ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.

தி., கம்யூனிஸ்ட், உள்ளிட்டு அனைத்து 'இந்துத்வா' எதிர்ப்பு கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஆதரித்த தி.மு. வேட்பாளர் 'டெபாசீட்' இழந்துள்ளார்.

இந்துத்வா ஆதரவு பா..கவோ, நோட்டா வாக்குகளை விட குறைவாக பெற்றுள்ளது. நோட்டா வாக்குகளுக்கு நிச்சயமாக யாரும் பணம் கொடுத்திருக்க மாட்டார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் பா.. கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை தெரிந்தால், அவர்களில் எத்தனை பேர் பா..கவிற்கு வாக்களிக்கவில்லை, என்பதானது தெளிவாகும்.

தி. ஆதரவோடு "ஆரிய திராவிட' கவசத்தை முன்னிறுத்திய நடராஜனை அவமானகரமாக ஓரங்கட்டி; (http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_12.html  & http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_18.html    )

சுப்பிரமணியசுவாமியை 'வீரமாக' எதிர்த்து பேசி விட்டு, பின் சுப்பிரமணியசுவாமியின் எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிந்த 'திராவிட'  கட்சி தலைவர்கள் யார்? யார்? மேல் மட்டத்தில் வாழ்பவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், கட்சிகளின் தலைவர்கள், பிரபல பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் யார்? யார்? என்ற ஆராய்ச்சியின் மூலமாகவே, நிகழ்கால ராஜாஜியாக சுப்பிரமணிய‌சுவாமி செயல்படுவதை விளங்கிக் கொள்ள முடியும். (சுப்பிரமணிய சுவாமியின் 'பொர்க்கி' (porki) 'சிக்னல்';  http://tamilsdirection.blogspot.com/2017/02/porki.html )
மோடி அரசின் 'அன்பை' வாய்ப்பு கிட்டும்போது ஈர்க்கும் திசையில், சுப்பிரமணிய சுவாமியின் ஆதரவுடன், தமிழ்நாட்டின் ஒரே சக்தியாக தம்மை நிரூபித்து, சசிகலா தினகரன் முன்னெடுத்த 'பணத்துவா' பெற்ற வெற்றியானது, தங்கள் அரசியல் வாழ்வில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி பெற்ற தேர்தல் வெற்றிகளை எல்லாம் விஞ்சி விட்டது.

திராவிட தேர்தல் அரசியலை, 'பண அரசியல்' மூலம் சசிகலாவின் ஆசியோடு தினகரன் முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில்;

தமிழ்நாட்டில் சசிகலா குடும்ப அரசியலின் 'பணத்துவா' என்பதானது, 'இந்துத்வா ஆதரவு' மற்றும் எதிர்ப்புக் கட்சிகள் எல்லாவற்றையும் ஓரங்கட்டியதானது;

1944இல் தொடங்கப்பட்ட 'திராவிடர் கழகம்' சந்தித்து வரும்  இறுதி முடிவின் சிக்னலாகும். (‘'அந்த'(?)  ஓட்டப்பந்தயத்தில் சிக்கிய 'முட்டாள்த் தமிழர்கள்' (3) ? திராவிட அரசியலை முடித்து வைத்த 'பணத்துவா' ‘; http://tamilsdirection.blogspot.com/2017/12/3_26.html )

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், ‘எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு 'கொள்ளையடித்த பணத்தில் நமது பங்கு' என்று வாக்காளர்களில் பெரும்பாலோர் வசூலித்தார்கள்; இனி வரும் தேர்தல்களிலும் வசூலிப்பார்கள்; மேல் மட்டத்தில் வாழ்பவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், கட்சிகளின் தலைவர்கள், பிரபல பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம், ஆளும்/ஆண்ட கட்சிகளில், தம்மால் முடிந்த அளவுக்கு, 'பலன்களை'(?) வசூலித்து வருவதைப் போலவே  என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/search?updated-max=2018-08-17T05:01:00-07:00&max-results=7

மேல் மட்டத்தில் வாழ்பவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், கட்சிகளின் தலைவர்கள், பிரபல பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம், ஆளும்/ஆண்ட கட்சிகளில், தம்மால் முடிந்த அளவுக்கு, 'பலன்களை'(?) வசூலித்து வரும் போக்கினை முடிவுக்கு கொண்டு வராமல்;

தமிழ்நாடு பயணித்த போக்கின் காரணமாகவே, 'பாபநாசம்' திரைப்படமானது உருவாகி வெற்றி பெற காரணமானது. அந்த போக்கில் பயணிப்பவர்களில் மனசாட்சி உள்ளவர்கள் எல்லாம், குற்ற உணர்வின்றி, 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தினை பார்க்க முடியாது;

என்பதும் எனது கணிப்பாகும்.

‘‘வடநாட்டில் பிரதமர் மோடி ஊழலை எதிர்த்து பேசுவதற்கு வரவேற்பு இருக்கலாம்; 'வடநாட்டு லல்லுக்கள்' சிறையில் இருப்பதால்.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி ஊழலை எதிர்த்து பேசினால், அது 'வடிவேல் பாணி' காமெடியாகி விடும்; 'தமிழ்நாட்டு லல்லுக்கள்' பிடியில் தமிழ்நாடு தொடர்வதால்.’ என்பதையும்;

தமிழ்நாட்டு அரசியலில் 'கரணம் தப்பினால் காமெடி பீஸ்' என்ற உச்சக்கட்ட காட்சியில் (Climax), தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலினும், பிரதமர் மோடியும் சிக்கியிருப்பதாக, எனக்கு படுகிறது.’  என்பதையும்;

ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘1944இல் முளை விட்டதானது முடிவுக்கு வருகிறது; தமிழ்நாட்டில் அமாவாசைகளின் புரட்சியானது தொடங்கி விட்டது.’ ; http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none.html  )

எனவே 'சுயலாப அரசியல்' தடைகளை மீறி, நம்பகத்தன்மையுள்ள தலைமையை உருவாக்கும் சமூக செயல்நுட்பம் உருவாகும் வாய்ப்பானது, மேலே குறிப்பிட்ட 'அரசியல் அமாவாசைகளின் புரட்சி' மூலமாக உருவாகி வருகிறது. இழிவான சமரசங்களை அனுமதிக்காமல், அதற்கான இழப்புகளை விரும்பி அனுபவித்து, தமது 'நேர்மை வழிகாட்டி'யானது தடம் புரளாமல் சரியான திசையில் பயணித்து வருபவர்கள் எல்லாம், எந்த கட்சியில் இருந்தாலும், கட்சிகளின் வாடையே இல்லாமல் வாழ்ந்தாலும், தெரிந்தும், தெரியாமலும், அந்த சமூக செயல்நுட்பத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பங்களித்து வருகிறார்கள்; 'கோலமாவு கோகிலா' குடும்ப உறுப்பினர்கள், அந்த சமூக செயல்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு திசை காட்டியுள்ளார்கள்..

(வளரும்)

No comments:

Post a Comment