Monday, August 6, 2018

'It’s a Mad Mad Mad Tamilnadu'- ஹாலிவுட் திரைப்படம் வெளிவரும் வாய்ப்பு?



'அந்த ஓட்டப்பந்தயப் புலி'யின் வாலைப் பிடித்த 'முட்டாள்' புத்திசாலிகள்' (1)



காமராஜருக்கும் ராஜாஜிக்கும் இடையில் நடந்த அரசியல் போட்டியில், காந்தி ராஜாஜி பக்கம் சாய்ந்த போது, 'கோடு உயர்ந்தது; குன்றம் தாழ்ந்தது' என்று நகைச்சுவையாக அண்ணா கட்டுரை எழுதிய 'புகழ்' திருப்பரங்குன்றத்திற்கு உண்டு. அதன்பின் காமாராஜரின் செல்வாக்கு உயர்ந்து, ராஜாஜியின் செல்வாக்கு குறையவே, ராஜாஜி தி.மு.க 'தடியுடன்'(?) தமிழ்நாட்டு அரசியலில் பயணித்தார்; இன்று சுப்பிரமணிய சுவாமி 'சசிகலா - தினகரன்' கட்சியை ஆதரித்து வருவது போலவே. அதே திருப்பரங்குன்றம் இன்று, தமிழ்நாட்டுக் கட்சிகளின் கவலைக்கு  காரணமாகி வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் வரப் போகிறதா? அது அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலோடு நடக்க வாய்ப்பிருக்கிறதா? பாராளுமன்ற தேர்தலும் சட்டமன்ற தேர்தலும் சேர்த்தே நடக்க வாய்ப்பிருக்கிறதா? அது வரை இப்போதுள்ள தமிழக அரசு நீடிக்குமா?

என்ற கவலையானது தமிழ்நாட்டில் கீழ்வரும் மக்களுக்கு இருப்பதாக தெரியவில்லை, நானறிந்த வரையில்.

கல்லூரி மாணவர்கள், கிராமங்களிலும், நகரங்களிலும் கட்சிசார்பின்றி வாழும் சாமான்யர்கள், ஜெயலலிதாவின் அனுதாபிகளாக கட்சி மூலம் பலன் அனுபவிக்கும் நோக்கமில்லாமல் வாழ்பவர்கள்;

அந்த கவலை பின் யார் யாருக்கு இருக்கிறது?

கட்சிகளின் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், 'எம்.எல்.ஏ' வாகும் கனவுகளுடன் வாழ்பவர்கள், அவர்களின் எடுபிடிகள், கட்சிகளைச் சார்ந்து 'பிழைத்து'(?) வரும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அவர்களின் எடுபிடிகள் என்ற நீண்ட பட்டியலில் உள்ளவர்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட கவலையில் சிக்கியிருந்தால் வியப்பில்லை.

‘தமிழ்நாட்டில் 'அரசியல் நீக்கம்' (Depoliticize) வளர்ந்த வேகத்தில், ஆதாயத்தொண்டர்கள் 'பலத்தில்', அரசியல் கட்சிகள் பயணித்து வருகிறார்களா?

தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய‌, இரண்டு கட்சிகளிலுமே பெரும்பாலான தொண்டர்களும், தலைவர்களும் கொள்கை அடிப்படையில் தேர்தல்பணி ஆற்றினார்களா? அல்லது 'தலைமைக்கு விசுவாசம்' என்ற அடிப்படையில்,  'உழைப்புக்கு பலன் கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில், பணியாற்றினார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அரசியல் வெளியில் (political space)  பயணிக்கும் கட்சிகளில், பெரும்பாலான தொண்டர்களும், தலைவர்களும்  கொள்கை அடிப்படையில், தேர்தல் பணியாற்றுவார்கள். 'அரசியல் நீக்கம்' (Depoliticize) போக்கில், அரசியல் வெளியை காலி செய்து பயணிக்கும் கட்சிகளில், அவர்கள் எல்லாம்,  'சுயலாப' நோக்கில், தேர்தல் பணியாற்றுவார்கள்; அதே நோக்கில் 'உள்குத்து' வேலைகளிலும் ஈடுபட்டு; தேர்தலில் ‘செலவழிக்க’ (?) கொடுத்த பணத்திலும் ஆட்டையைப் போட்டு.


அந்த இரண்டு கட்சிகளிலுமே,  'உழைப்புக்கு  பலன் கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில், பணியாற்றியவர்களே அதிகம் என்றால், ‘அரசியல் நீக்கம்’ (Depoliticize)  போக்கில்,  தங்களின் அரசியல் வெளியை (Political space) விட்டு, அந்த இரண்டு கட்சிகளும் வெளியேறிவிட்டதை,  அது உணர்த்தாதா? (‘May 20, 2016 post; 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்பட்ட 'சிக்னல்'; அரசியல் வெளி (Political Space) காலியாகி விட்டதா? அந்த அரசியல் வெற்றிடத்தை ஆக்கிரமிக்கும்,சமூக செயல்நுட்பம்? ‘; http://tamilsdirection.blogspot.com/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html )
 

‘சமூகத்தில் பொது அரங்கில் வெளிப்படும் நகைச்சுவை சம்பவங்களை எல்லாம் ரசிக்க கூட முடியாமல், தவிக்கும் தமிழர்களும் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்.

மேல் நடுத்தட்டு, பணக்காரர்களில் பெரும்பாலோரும் அந்த கவலையில் எவ்வாறு சிக்கியுள்ளார்கள்? என்பதையும் அடுத்து பார்ப்போம்.

‘தமிழக முதல்வராயிருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், 'காற்றுள்ளவரை தூற்றிக் கொள்ளும் பேராசையில்', பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம், கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஓரங்கட்டி, பணம் ஈட்ட, 'ஓடும்' ஓட்டப்பந்தயம் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம், ‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF    ) என்ற உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை திரைப்படத்தை நினைவு படுத்துகின்றன.

‘ 'it’s a Mad Mad Mad Tamilnadu'  என்ற, உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படத்திற்கான‌  சம்பவங்கள் பல, தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன:’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_12.html )

அத்துடன் மீடியா வெளிச்சத்தில் வராமல், தமிழ்நாடு முழுவதும் இன்னொரு வித்தியாசமான நகைச்சுவை போக்கும் அரங்கேறி வருகிறது.

மேலே குறிப்பிட்ட பொதுவாழ்வு வியாபாரிகளை எல்லாம் கோமாளிகளாக கருதி, அந்த நகைச்சுவை காட்சிகளை ரசித்து வருபவர்களில் பெரும்பாலோர் கீழ்நடுத்தட்டு, ஏழைகளாக இருக்கிறார்களா?

மேல் நடுத்தட்டு, பணக்காரர்களில் பெரும்பாலோர், 'காரியம் சாதிக்க' தமக்கு வாய்த்திருந்த 'செல்வாக்கு' நபர்கள் எல்லாம், 'கோமாளிகளாக' வலம் வருகையில், அந்த நகைச்சுவைகளை ரசிக்க முடியாத அளவுக்கு,  காரியம் சாதிக்க அடுத்து நமக்கு யார் 'செட்' ஆவார்கள்? என்ற தேடலில்,  குழம்பி தவிக்கிறார்களா?’ (‘பொது அரங்கில் நகைச்சுவைகளை ரசிக்க முடியாமல்; ‘சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்பவர்களின் நாடாகி வருகிறதா, தமிழ்நாடு?’; http://tamilsdirection.blogspot.com/2017/07/blog-post_16.html )

அவ்வாறு அரங்கேறிவரும் போக்கில், அந்த 'it’s a Mad Mad Mad Tamilnadu' திரைக்கதைக்கு கூடுதலாக வலு சேர்க்கும் வகையில், நடிகர் கமலஹாசன் உள் நுழைந்திருக்கிறார்.

அதில் அவரின் பாத்திரமானது நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா? என்பதை தெளிவுபடுத்தும் சம்பவங்கள் அடுத்து அரங்கேற உள்ளன?’ ( July 20, 2017-‘  'it’s a Mad Mad Mad Tamilnadu'- உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படம்: கமலஹாசன் நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா?’; http://tamilsdirection.blogspot.com/2017/07/its-mad-mad-mad-tamilnadu-its-mad-mad.html &
http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_25.html) வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் அமைக்க, ‘என்கவுண்டரில்  சுட்டுக் கொல்லப்பட்ட 'ரவுடி வீரமணி' மூலம் பெறும் வாய்ப்புள்ள‌, 'விகேரியஸ் இன்பம்' (Vicarious Joy) துணை புரியும். (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

நிகழ்காலத்தில் உலகில் எந்த நாட்டிலும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு;

புறத்தில் 'வீரமாகவும்'(?), அகத்தில் வெளியில் சொல்லமுடியாத பயத்துடனும்;

தமிழ்நாட்டுக் கட்சிகளின் 'தனித்துவமான'(Unique) தேர்தல் கவலையானது, ஜெயலலிதாவின் 'மர்ம' மரணத்தால் விளைந்ததாகும்.

தமிழ்நாட்டின் கட்சித் தலைவர்களின் 'அரசியல் அடித்தளத்தையே' கேள்விக்குறியாக்கும் வகையில், ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின், பா.. ராமதாஸ், வி.சி திருமா உள்ளிட்டு தமிழ்நாட்டு அரசியலில் வலம் வரும் இன்னும் பலதலைவர்களுக்கு உள்ள செல்வாக்குகளின் வலிமையானது;

எந்த அளவுக்கு 'பலகீனமாக'  உள்ளது ? என்பதானது;

அவர்களின் ஆதரவாளர்களில் உள்ள 'அமாவாசைகளின்' எண்ணிக்கையை பொறுத்தது.

எனவே தமது ஆதரவாளர்களில் 'அமாவாசைகள் யார்?' என்று ஆராய வேண்டிய அவசியத்தை, தமிழ்நாட்டில் கட்சித்தலைவர்களுக்கு ஏற்படுத்தி;
ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த சந்தேகப் பார்வையில், 'நாமும் சிக்கி விட்டோமா?' என்ற சந்தேகத்துடன், அந்தந்தகட்சித்தலைவர்களை, தொண்டர்கள் அணுக வேண்டிய நெருக்கடியையும் ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.’ (http://tamilsdirection.blogspot.com/2017/04/1967.html )

மேற்குறிப்பிட்ட பதிவானது 2017 ஏப்ரலில் வெளிவந்தது.

2017 டிசம்பரில் வெளிப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவானது, மேலே குறிப்பிட்ட சிக்கலில் தமிழ்நாட்டு கட்சிகள் மீள முடியாமல் தோற்று வருவதை உணர்த்தியது. ‘என்னுடைய குடும்பத்தில் இருந்து எவரும் அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள்’ என்றும் (http://www.vikatan.com/news/politics/63817-stalins-reply-to-udhayanidhis-political-entry.art ), தி.மு.கவில் 90% இந்துக்கள் என்றும் அறிவித்து, கோவிலுக்கு சென்று குருக்களை தரிசித்ததை ஊடகங்களில் வெளியிட்டு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் மயிரிழையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பினை இழக்கும் அளவுக்கு பெரும் வெற்றி பெற்றார். இன்று அதற்கு எதிராக பயணித்து வருவதும், ஆர்.கே. நகரில் 'டெபாசீட்' இழக்கும் அளவுக்கு தேய்ந்து வருவதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டு இடைத்தேர்தல்களின் வரலாற்றில், முதல் முறையாக ஆளுங்கட்சியை தோற்கடித்தது மட்டுமின்றி, மயிரிழையில் ஆளுங்கட்சியாகும் வாய்ப்பினை இழந்து, சட்டசபை எதிர்க்கட்சியாக பயணிக்கும் தி.மு.கவை 'டெபாசீட்' இழக்க வைத்து, மத்தியில் ஆளுங்கட்சியையும் 'நோட்டா'வுக்கும் கீழே தள்ளி, தமிழ்நாட்டு கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தையே, மேற்குறிப்பிட்ட தேர்தல் முடிவு கேள்விக்குறியாக்கியுள்ளது; 'அமாவாசை சமூக செயல்நுட்பத்தின்' ஊற்றுக்கண்ணான 'அரசியல் நீக்கம்' மூலமாக, கட்சி அரசியலானது, முடிந்ததன் 'சிக்னலாக'.

அதன் விளைவாக, துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள 'தேர்தல் கவலை'யின் பரிமாணத்தை, அவரவர் அறிவு, அனுபவங்களின் அடிப்படையில் யூகித்துக் கொள்ளலாம். மனிதர்களின் பலகீனங்களை(Weakness) 'சுயலாப மூலதனமாக்கி' வளர்ந்து, தமிழ்நாட்டையும் தமிழையும் சீரழித்த 'அந்த சமூக செயல்நுட்ப‌ம்' முடிந்துள்ளதன் விளைவாக, சென்னை வெள்ள நிவாரணமும், 1938 இந்தி எதிர்ப்பு போராட்ட பாணியில் நடந்த‌ ஜல்லிக்கட்டு போராட்ட கடைசிக்கட்ட வன்முறை முயற்சியை செல்லாக்காசாக்கிய போக்கும், வெளிப்படுத்திய ஆக்கபூர்வ திசையில், மனிதர்களின் பலங்களையும்(Strength), சுயலாப நோக்கற்ற தியாகங்களையும் 'சமூக மூலதனமாக' கொண்டு, தமிழ்நாடும், தமிழும் மீளும் போக்கு துவங்கி விட்டது; என்பது எனது கணிப்பாகும். (http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html    )

‘'எந்த பக்கம் காற்றடிக்கிறது?' என முன்கூட்டியே 'நுகர்ந்து' வாழும் 'அமாவசைகளின் புரட்சியில்' சிக்கியுள்ள நாடாக தமிழ்நாடு இன்று இருக்கிறது. (http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none.html  ) 

‘'மோப்பம்' பிடிக்கும் திறன் மிகுந்த அமாவாசைகள் மேக்ரோ உலகத்தில் ஈட்டிய பணத்தில் மிதக்கும் அவர்களின் குடும்பங்கள் எல்லாம் மைக்ரோ உலகத்தில், குறிப்பாக கிராமங்களில், 'வெளியில் தெரியாத' கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி வருவதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.((http://tamilsdirection.blogspot.sg/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html ) பேச்சும், எழுத்தும், மைக்ரோ உலகத்தில் 'தகவல் பரிமாற்ற வலிமையை' இழந்து, செயல்களே தகவல் பரிமாற்ற வலிமை பெற்று வருகின்றன. (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_25.html ) 
அமாவாசைகள் படை சூழ வாழும் தலைவர்கள் எல்லாம், அந்த அமாவாசைகளில் யார், யார், எப்போது, எப்படி முதுகில் குத்துவார்? என்ற அச்சத்துடனே, சாகும் வரை வாழும் வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா, எத்தனை ஆயிரம் கோடி கொள்ளையடித்த சொத்து இருந்தாலும் ? (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

மான, அவமானங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், 'ஊர் எக்கேடு கெட்டால் என்ன?' என்ற 'துணிச்சலில்' பயணிப்பவர்கள் எல்லாம்;

உற்றமும், சுற்றமும், தன் சாதியினரும் 'பொறாமை'(?) படும் அளவுக்கு 'பணம் சேர்க்கும் ஓட்டப்பந்தயத்தில்'(?) சிக்கி; 

'அவ்வாறு' பணம் சேர்த்த 'இழிவு வழிகள்', தமது முதுகுக்குப் பின்னால், 'கிசுகிசு கேலி'க்கு உள்ளாவது தெரிந்தும், தெரியாமலும்:

‘'எந்த பக்கம் காற்றடிக்கிறது?' என முன்கூட்டியே 'நுகர்ந்து' வாழும்;

‘அமாவாசைகளில் யார், யார், எப்போது, எப்படி முதுகில் குத்துவார்? என்ற அச்சத்துடனே, சாகும் வரை வாழும்’;

'அந்த ஓட்டப்பந்தய புலியின் வாலைப் பிடித்து', சாகும் வரை பயணித்தாக வேண்டிய 'தண்டனையில்' தாமாகவே மாட்டிக் கொண்டவர்கள் ஆவார்கள்.

அவர்கள் எல்லாம் மரணத்தில், 'அந்த ஓட்டப்பந்தய பலன்களை' எடுத்துச் செல்ல முடியாது, என்பதும் அவர்களுக்கு தெரியும். ஆனால் சமூகத்தை சீரழித்த பாவங்களில், நிகழ்காலத்தில் வெளியில் சொல்ல முடியாமல், அவர்கள் அனுபவித்த தண்டனைகள் போக, எஞ்சியவை எல்லாம் அவர்களின் 'ஜீன்'கள் மூலமாக அடுத்த தலைமுறைக்கு செல்லும் வாய்ப்புகள் இருப்பதை, ஆய்வுகள் வெளிப்படுத்தி வருகின்றன. 

நமது நல்ல எண்ணங்கள், மற்றும் தீய எண்ணங்கள் முரண்பாடுகளின் தொகுவிளைவிலான‌, வினையின், நல்ல/கெட்ட பலன்களை, நமது வாழ்வு முடிவதற்குள், 'அறுவடை' செய்வது ஒரு பகுதி; 'எஞ்சியவை', நமது 'ஜீன்கள்' (gene: a unit of heredity which is transferred from a parent to offspring and is held to determine some characteristic of the offspring.) மூலம் அடுத்த தலைமுறைகளில், 'அறுவடை'யாவதிலிருந்தும் (ஊழ் வினை?) தப்ப முடியாது. அந்த 'அறுவடை'களை 'பார்க்கத் தெரியாமல்', 'நல்லதுக்கு காலமில்லை' என்று புலம்புபவர்கள் எல்லாம், சமூக நடப்புகளை, 'சரியாக' பார்க்கத் தெரியாத, 'சமூகப் பார்வை குருடர்கள்' (திருக்குறள்   573) ஆவர். (http://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_22.html  & http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_16.html  )


வாழ்க்கையில் இன்பமாக வாழ்வது எப்படி? என்ற கேள்விக்கு, திறவுகோலாக நான் சந்தித்தவற்றில், கீழ்வருவதானது, இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சில வருடங்களுக்கு முன், தஞ்சை புதுப்பேருந்து நிலையம் அருகேயிருந்த புதுக்கோட்டை சாலையில் காலை சுமார் 6 மணியளவில் நான் நடைப்பயிற்சி(Walking) மேற்கொண்டிருந்தேன். தெரு ஒரமாக சுமார் 15 கிராம கூலித்தொழிலாளர்கள் ஆண்களும் பெண்களுமாக உட்கார்ந்து, தங்களுக்குள் கேலி, கிண்டல் செய்து கொண்டு, மிகவும் மகிழ்ச்சியான முகங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அன்று வேலைக்குப் போனால் தான், பணம் கிடைக்கும்? கூப்பிட வரும் லாரியில், அவர்களில் எத்தனை பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்? தவிர்க்க முடியாத காரணங்களால், அந்த லாரி அன்று வருவதும் தடைபடலாம்?  என்று குழம்பிக்கொண்டு கவலையுடன் அவர்கள் இல்லை: ஸ்டார் ஓட்டல்களில், பெரும் பணக்காரர் கூடும் இடங்களில், அத்தகைய கவலையுடன் கூடிய முகங்களையும், அந்த கவலையை மறைத்து போலியாக சிரித்து உரையாடும் முகங்களையும் நான் பார்த்திருக்கிறேன். நான் மேலே குறிப்பிட்டது போன்ற மகிழ்ச்சியான முகங்களை, அங்கெல்லாம் பார்ப்பது அரிதாகும்.

அது போலவே விமானங்களிலும், குளிரூட்டப்பட்ட ரெயில் பெட்டிகளிலும் பலமுறை பயணித்திருக்கிறேன். அங்கும் அதே நிலை தான். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் காலங்களில், விரும்பி அரசுப் பேருந்துகளில் அவ்வப்போது பயணித்து வருகிறேன்; சிங்கப்பூரில் வாழும் எனது மகனின் எச்சரிக்கையைப் புறக்கணித்து. அந்த பயணங்களிலும், மேலே குறிப்பிட்ட மகிழ்ச்சியான முகங்களையும், 'இயல்பான' கோபங்களையும் பார்த்து வருகிறேன். மேலே குறிப்பிட்ட 'புலி வாலைப்' பிடித்து பயணிப்பவர்களில், சொந்தமாக கார் வாங்கும் 'வளர்ச்சி'(?) அடையாத வரையில், அரசுப்பேருந்தில் பயணிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கி, சக பயணிகளிடம் தமது 'உயர்வை' வெளிப்படுத்தி பயணிப்பவர்களையும், நான் பார்த்து, அந்த நகைச்சுவையையும் அனுபவித்திருக்கிறேன்.

போலித்தனமான மகிழ்ச்சி, பாராட்டு, கோபம், காலில் விழுதல், பின் அதே காலை வாறுதல் உள்ளிட்ட‌ 'வாழ்வியல் புத்திசாலித்தனம்'(?) எல்லாம், பணத்தில் வசதியில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு (Threshold) மேல் வாழும் தமிழர்களின் 'ஏகபோக பண்பாகி' வருகிறது.’ அந்த எல்லைக்கு மேல் (தமிழ்நாட்டில் வாழும்) பிற மாநில மற்றும் வெளிநாட்டினர் எல்லாம், 'அந்த' பண்பில் மேற்குறிப்பிட்ட தமிழர்களிடம் தோற்று வருகிறார்கள். (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html  )

தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களிடமும், மேற்குறிப்பிட்ட பிரிவினரிடமும் வெளிப்பட்டு வரும் வேறுபாடுகளும் நகைச்சுவைக்காட்சிகளுக்கான உள்ளீடுகளாகும்(inputs). தமிழ்நாட்டில் 'இந்துத்வா எதிர்ப்பு'க்கு 'புரவலர் பற்றாக்குறை' அதிகரித்து வரும் சூழலில், மிஞ்சிய தலைவர்களை 'அந்த' புரவலர்களாக கருதி ஆதரிப்பதும், அந்த ஆதரவையே 'சுயலாப பேரமாக்கி', ஏற்கனவே பலன்கள் அனுபவித்த பின்னணியில், மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு 'அப்புரவலர்கள்' நெருக்கமாக முயற்சிப்பதும், அதற்குப் பிறகும், அப்புரவலர்களுக்கு' நெருக்கமாக‌ 'சொகுசு மண்டிலத்தில்' வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் 'இந்துத்வா எதிர்ப்பு' உணர்ச்சிபூர்வ பேச்சுக்களும், நகைச்சுவைக் காட்சிகளுக்கான உள்ளீடுகள் ஆகும்.

மேலே குறிப்பிட்ட திருப்பரங்குன்றம்/பாராளுமன்றம்/சட்டமன்ற தேர்தல் நெருங்கத் தொடங்கியுள்ளதால், இனி ''it’s a Mad Mad Mad Tamilnadu' என்ற திரைப்படத்திற்கான உச்சக்கட்ட (Climax) காட்சிகளை உருவாக்க துணை புரியும் சம்பவங்கள் அரங்கேறினால் வியப்பில்லை. இதுவரை கொள்ளையடித்த பணத்தையெல்லாம், அடுத்த கொள்ளைக்கான 'மூலதனமாக' கருதி, எந்தெந்த கட்சிகள், எந்தெந்த 'வழிகளில்'(?), ஆர்.கே.நகர் பாணியில், தேர்தல் கமிசனுடன் 'கண்ணாமூச்சி' விளையாடி, பணத்தையெல்லாம் விநியோகித்து, தேர்தல் முடிவுகளில், வெளியில் சொல்ல முடியாதவாறு எப்படியெல்லாம் ஏமாந்தார்கள்? என்பது தொடர்பான காட்சிகள் அரங்கேற உள்ளன. மேலே குறிப்பிட்ட 1963இல் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படத்தில், பதுக்கிய பணமானது, அந்த பணத்தை போட்டி போட்டு தேடியவர்கள் கண்கள் முன், காற்றில் பறந்து தெருவில் போனவர்கள் எல்லாம் ஓடி ஓடி 'கைப்பற்றும்' காட்சிகளுடன் திரைப்படம் முடியும்.

ஜெயலலிதா 'மர்மமான' முறையில் போயஸ் கார்டனில் இருந்து அப்பொல்லோவிற்கு புறப்பட்டது முதல் இன்று வரையில்;

'it’s a Mad Mad Mad Tamilnadu' என்ற படமானது, ஆங்கிலமும் தமிழும் கலந்த 'ஹாலிவுட்'(Hollywood) படமாக வெளிவந்து வசூலில் சாதனை படைக்கும் அளவுக்கு, வாய்ப்புள்ள திரைக்கதையை உருவாக்க துணைபுரியும் சம்பவங்கள் மீடியா வெளிச்சத்திலும், 'இருளிலும்' அரங்கேறி வருகின்றன. 'இருளில்' சம்பந்தப்பட்ட‌வர்களுக்கு 'உரிய' விலை கொடுத்து, மேலேக்குறிப்பிட்ட திரைக்கதை உருவாக்கத்திற்கு 'உள்ளீடுகள்' (inputs) பெறுவதும், தமிழ்நாட்டில் சிரமமில்லை.

மோடி அரசின் 'ஊழல் ஒழிப்பு கண்ணாமூச்சி' விளையாட்டில், இன்றுவரை வெற்றி பெற்று வரும் 'தமிழ்நாட்டு லல்லுக்கள்' மூலமும், நகைச்சுவைக் காட்சிகளுக்கான உள்ளீடுகள் அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாட்டின் நடப்புகளை எல்லாம் கூர்ந்து கவனித்து, அந்த 'வாய்ப்பினை' நுகர்ந்து, மேலே குறிப்பிட்ட 'வல்லமை' உடையவர்கள், அந்த முயற்சியில் ஈடுபடப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாய்ப்பு கிடைத்தால், அந்த திரைக்கதை உருவாக்கத்திற்கு என்னால் இயன்ற பங்களிப்பு வழங்கவும் ஆவலுடன் உள்ளேன்; கடந்த சுமார் 20 வருடங்களாக, எனது கண்டுபிடிப்புகள் தொடர்பாக, தமிழ்ப் புலமையாளர்களிடத்திலும், தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும், நான் பெற்ற அனுபவங்களையும் திரைக்கதைக்கான உள்ளீடுகளாக கருதி. அது மட்டுமல்ல, அமாவாசைகளின்  வாடையின்றி, இயல்பான இன்ப துன்பங்களோடு வாழும், 'சாதாரண மனிதர்கள் மட்டுமே எளிதில் சந்திக்க கூடிய வகையிலும், மற்றவர்களில் நேரில் சந்திக்கவும், போனில் பேசவும் 'வடிக‌ட்டி' (Filter), ஈமெயில் (Email) மூலம் மட்டுமே எவரும் தொடர்பு கொள்ளும் வகையிலும், 'முக்கியத்துவ சிறையில்' சிக்குவதை இயன்றவரை தவிர்த்து நான் வாழ்ந்து வருவதற்கான 'காரண அனுபவங்களும்', மேற்குறிப்பிட்ட உள்ளீடுகளில் அடக்கமாகும். (http://tamilsdirection.blogspot.com/2017/10/blog-post_10.html )

‘உலக அளவில் வியாபார ரீதியில் வெற்றி பெறும்’ என்பதை உணர்ந்த மறுகணமே, தமிழ்நாட்டில் மோடி அரசுடன் 'ஊழல் ஒழிப்பு கண்ணாமூச்சி' விளையாட்டில், வெற்றி பெற்று வரும், அரசியல் பின்பலமுள்ள 'தயாரிப்பு நிறுவங்கள்', மேற்குறிப்பிட்ட 'ஹாலிவுட்' தயாரிப்பில் இறங்கினால்;

அது அந்த திரைப்படத்தில் இடம் பெற வாய்ப்பில்லாத நகைச்சுவையாகும்.

குறிப்பு :  சமூகவியல் ஆய்வுக்கள சோதனை முடிவுகளில் மாதிரி ஒன்று:
நான்காவது இரகசியம்

புதிதாக ஒரு மனிதரை சந்தித்தவுடன் சமூக ரீதியில் அந்த மனிதர் தமக்கு சமமா?, கீழா? மேலா? என்று சில நொடிகளில் எடை போடும் திறமை வேண்டும்.மேலான மனிதர் எனில், அவருக்கு உடனே வாலாட்டி, தம்மிடம் அவருக்குப் பயன்படும் திறமைகள் இருப்பதை உணர்த்தி நெருக்கமாக வேண்டும். கீழான மனிதர்களை தமக்குப் பயன்படுவார்கள் என்றால், தம்மிடம் அவர்களுக்கான 'எலும்புத் துண்டுகள்' இருப்பதை உணர்த்தி வாலாட்ட வைக்க வேண்டும். பயன்படாதவர்களை உடனே தள்ளி வைக்க வேண்டும். சமமான மனிதர் எனில், அதை முடிந்த அளவுக்கு நம்மை விட கீழ் என்று மட்டம் தட்டுவதில் நிபுணராக இருக்க வேண்டும்.” (‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்; வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்; http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html  )

No comments:

Post a Comment