ஜெயலலிதாவின் ‘மர்ம’ மரணமானது, 'அரசியல் அமாவாசைகளுக்கு' முடிவு கட்டும்;
தமிழ்நாட்டின் ‘சமூக அதிர்ச்சி வைத்தியமா’ ?
சத்யராஜ் - மணிவண்ணன் ஜோடியின் புகழ்பெற்ற 'அமாவாசை
காமெடி'யானது (கீழே) 1967க்கு முன் வெளிவந்திருந்தால், ரசிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
(1967க்குப்பின் 'அமாவாசை சமூக செயல்நுட்பம்'
வெளிப்பட்டு (விதைத்தது 1944?), இன்று உச்சத்தில் உள்ள சமூக சூழலில், இன்றைய 'அமாவாசைகளின்’
குடும்பங்களில் உள்ள மாணவர்களில் பலர், தமது
சமூக வட்டத்தில் சந்தித்து வரும் 'அவமானங்களும்', 'நெருக்கடிகளும்', தொடர்பான காமெடி
திரைப்படங்கள் வந்ததாக தெரியவில்லை; இனி வரலாம்.)
மேலே குறிப்பிட்ட நகைச்சுவை காட்சிகளில், ஒரு சிறிய மாற்றம் கற்பனை செய்தால், அது நிகழ்கால அரசியலுக்கு பொருத்தமாக இருக்க வாய்ப்புண்டு.
மேலே குறிப்பிட்ட நகைச்சுவை காட்சிகளில், ஒரு சிறிய மாற்றம் கற்பனை செய்தால், அது நிகழ்கால அரசியலுக்கு பொருத்தமாக இருக்க வாய்ப்புண்டு.
சத்யராஜுக்குப் பதிலாக இன்னொரு எடுபிடியை தேர்தலில்
மணிவண்ணன் நிறுத்தி, வெற்றி பெற்ற 'எடுபிடிக்கு', சத்யராஜ் அதே 'அமாவாசையாக' எடுபிடியாகி, மணிவண்ணனுடன்
'நெருக்கமாக இருந்த பெண்ணை', அந்த வெற்றி பெற்ற
எம்.எல்.ஏக்கு நெருக்கமாகுமாறு தூண்டி, மணிவண்ணனை அவமானப்படுத்தினால் எப்படி இருக்கும்?
ஜெயலலிதாவுக்கு இருந்த 'மேல்மட்ட' ஆதரவாளர்களில் ஏறத்தாழ
அனைவருமே, 'அமாவாசைகள்' என்பதை, ஜெயலலிதாவின்
'மர்ம' மரணம் மூலம், சசிகலா வெட்ட வெளிச்சமாக்கி
விட்டார்.
‘இன்றைக்கு அ.இ.அதி.மு.கவின் பொதுச் செயலாளராக பதவி
ஏற்றிருக்கும் சசிகலாவும், அவருக்கு பக்க பலமாக இருக்கும் சசிகலாவின் உறவினர்களும்
தனக்கு எதிராக சதி செய்ததை காரணம் காட்டி, போயஸ் கார்டனை விட்டு சசிகலாவை 'மீடியா வெளிச்சத்துடன்' ஜெயலலிதா துரத்தி;
'அவ்வாறு சதி நடந்தது உண்மை தான்; ஆனால் எனக்கு தெரியாமல்'
என்ற வகையில் சசிகலாவும், 'மீடியா வெளிச்சத்துடன்' ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ள
நிலையில்;
ஜெயலலிதாவால் குற்றம் சாட்டப்பட்ட சதிகாரர்கள் ஜெயலலிதா
சிசிச்சை பெற்ற அப்பொல்லோ மருத்துவமனைக்குள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள்; ஆளுநரையே
தனது அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றும் வகையில் முயன்ற போது, பார்க்க கூட அனுமதிக்காத
நிலையில் ?
சசிகலாவை சந்தித்து அனுதாபமும், ஆதரவும் தெரிவித்த
அரசியல் கட்சி தலைவர்களில் எவராவது மேற்குறிப்பிட்டது தொடர்பாக, விளக்கம் கேட்டார்களா?
அவ்வாறு விளக்கம் கேட்காமல் இருந்தால், அவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நீடிப்பதானது,
தமிழ்நாட்டிற்கு கேடாகாதா?
என்று 'மானமும், அறிவும், சுயமரியாதையும்' இழக்காத
சாதாரண பொதுமக்கள் 'கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்'.’ ( ‘1948 தூத்துகுடி மாநாட்டில்
ஈ.வெ.ரா விடுத்த அபாய எச்சரிக்கையின் இறுதி விளைவே; 2016 ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமா?
ஜெயலலிதாவின் மரணத்திற்கு கிடைக்கும் நீதியே, தமிழ்நாட்டின் விடிவா?’ ; http://tamilsdirection.blogspot.in/2017/01/1948.html
)
தமிழ்நாட்டில் 'பிரபல' எழுத்தாளர்களாகவும், 'ஆன்மீக
சொற்பொழிவு' உள்ளிட்ட பேச்சாளர்களாகவும், கவிஞர்களாகவும் வலம் வரும் 'அறிவுஜீவிகளும்',
அரசியல் கட்சித் தலைவர்களைப் போலவே, அதே வகை நெருக்கடியை, மக்கள் மன்றத்தில் சந்தித்து
வருகிறார்கள். ( ‘'மாய உடை அணிந்திருப்பதாக மக்களை ஏமாற்றி, 'நிர்வாணமாக' ஊர்வலம் வந்த;
'அரசனைப் பார்த்து, கைக்கொட்டி அந்தச் சிறுவன்
சிரிப்பது', வாஸந்திக்கு தெரியவில்லையா?’;
http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_12.html
) உலக அளவில் அநீதிக்கு எதிரான போராட்டங்களையும், தியாகங்களையும்,
தமது 'படைப்புகளின்'(?) 'முதலில்லா மூலதனமாக்கி' (capital without investment), 'உள்ளூர்
கொடுங்கோலர்களை உரசாமலும், வாய்ப்பு கிடைத்தால்
நேசமாகியும்', தமது வசதி வாய்ப்புகளை பெருக்கும் 'அமாவாசைகளா அவர்கள்?' என்ற கேள்வியையும்,
அந்த நெருக்கடியானது எழுப்பியுள்ளது.
அது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கட்சித் தலைவர்களின்
'அரசியல் அடித்தளத்தையே' கேள்விக்குறியாக்கும் வகையில், ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது,
தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின், பா.ம.க ராமதாஸ்,
வி.சி திருமா உள்ளிட்டு தமிழ்நாட்டு அரசியலில் வலம் வரும் இன்னும் பல தலைவர்களுக்கு
உள்ள செல்வாக்குகளின் வலிமையானது;
எந்த அளவுக்கு 'பலகீனமாக' உள்ளது ? என்பதானது;
அவர்களின் ஆதரவாளர்களில் உள்ள 'அமாவாசைகளின்' எண்ணிக்கையை
பொறுத்தது.
எனவே தமது ஆதரவாளர்களில் 'அமாவாசைகள் யார்?' என்று
ஆராய வேண்டிய அவசியத்தை, தமிழ்நாட்டில் கட்சித்தலைவர்களுக்கு ஏற்படுத்தி;
ஜெயலலிதாவின்
'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும்
எழுந்துள்ளது.
அந்த சந்தேகப் பார்வையில், 'நாமும் சிக்கி விட்டோமா?'
என்ற சந்தேகத்துடன், அந்தந்த கட்சித்தலைவர்களை, தொண்டர்கள் அணுக வேண்டிய நெருக்கடியையும்
ஏற்படுத்தி;
ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக
அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கீழ்வரும் சமூக செயல் நுட்பத்தின் 'வித்தியாசமான' தொடர்ச்சியாக, 'திருச்சி பெரியார் மையம்' பின்பலத்தில், சசிகலாவின் 'பெரியார் அமாவாசைகளாக' பயணித்து வந்த, 'பெரியார்
சமூக கிருமி'களுக்கும், அக்கிருமிகளின் எடுபிடிகளுக்கும், ஆர்.கே நகர் இடைத்தேர்தல்
ரத்தானது, தமது 'வளமான புது வாழ்வின்' வருங்காலம் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும்,
வியப்பில்லை. (http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_5.html )
உலக அரங்கில் வெளிப்பட்டு வரும் புதிய ஆய்வு முடிவுகளை எல்லாம் கணக்கில் கொண்டு, ஈ.வெ.ரா அவர்களின் கொள்கைகளை', ஈ.வெ.ரா வலியுறுத்திய 'கால தேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படுத்தாமல், 'பெரியார் சிறையில்' பயணித்த போக்குகளே, ஈ.வெ.ரா வாழ்ந்த காலத்தில் இல்லாத, 'பெரியார் அமாவாசைகள்' எல்லாம், 'துணிச்சலுடன் வெளிப்பட' காரணமா? என்ற கேள்வியை எழுப்பி, 'சசிகலாவின் பெரியார் அமாவாசைகள்' எல்லாம், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழிவகுத்து, வரலாற்றில் 'இடம்'(?) பெற்று விட்டார்கள். 'சமூக ஒப்பீடு தொத்து நோயில்'(Social Comparison Infection) சிக்கி, 'பாதுகாப்பின்மை'க்குள்ளாகி (insecurity) பயணிக்கும் 'திராவிட மனநோயாளியாக' வாழும் போக்கின் உச்சக்கட்டமாகவே, 'சசிகலாவின் பெரியார் அமாவாசைகள்' எல்லாம் வெளிப்பட்டுள்ளார்கள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும். (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )
அது போலவே, உலக அரங்கில் வெளிப்பட்டு வரும் புதிய ஆய்வு முடிவுகளை எல்லாம் கணக்கில் கொண்டு;
தமிழ்ச் சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை - குரலொலியிலும் vocal sounding, செவி உணர்விலும் aural perception, காட்சி உணர்விலும் visual perception, எழுத்து முறையிலும் writing methods ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் - கணக்கில் கொண்டு இலக்கண விதிகளிலும் மாற்றங்கள் செய்ய, உரிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் (http://tamilsdirection.blogspot.in/2016/07/fetna.html ), தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்வியில் பயிற்றுவித்து, 'தமிழ்வழிக் கல்வி' ஆதரவாளர்களாக காட்சி தரும், 'தமிழ் அமாவாசைகள்' எல்லாம் உருவானார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
உலக தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம்,
பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த் துறைகள் எல்லாம், 'தமிழ் அமாவாசைகளின்' ஆதிக்கத்திலிருந்து
விடுபடவில்லையென்றால்;
புலமையுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள் 'வற்றி' விடவில்லையென்றாலும்;
உலக அரங்கில் வெளிப்பட்டு வரும் புதிய ஆய்வு முடிவுகளை எல்லாம் கணக்கில் கொண்டு, ஈ.வெ.ரா அவர்களின் கொள்கைகளை', ஈ.வெ.ரா வலியுறுத்திய 'கால தேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படுத்தாமல், 'பெரியார் சிறையில்' பயணித்த போக்குகளே, ஈ.வெ.ரா வாழ்ந்த காலத்தில் இல்லாத, 'பெரியார் அமாவாசைகள்' எல்லாம், 'துணிச்சலுடன் வெளிப்பட' காரணமா? என்ற கேள்வியை எழுப்பி, 'சசிகலாவின் பெரியார் அமாவாசைகள்' எல்லாம், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழிவகுத்து, வரலாற்றில் 'இடம்'(?) பெற்று விட்டார்கள். 'சமூக ஒப்பீடு தொத்து நோயில்'(Social Comparison Infection) சிக்கி, 'பாதுகாப்பின்மை'க்குள்ளாகி (insecurity) பயணிக்கும் 'திராவிட மனநோயாளியாக' வாழும் போக்கின் உச்சக்கட்டமாகவே, 'சசிகலாவின் பெரியார் அமாவாசைகள்' எல்லாம் வெளிப்பட்டுள்ளார்கள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும். (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )
அது போலவே, உலக அரங்கில் வெளிப்பட்டு வரும் புதிய ஆய்வு முடிவுகளை எல்லாம் கணக்கில் கொண்டு;
தமிழ்ச் சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை - குரலொலியிலும் vocal sounding, செவி உணர்விலும் aural perception, காட்சி உணர்விலும் visual perception, எழுத்து முறையிலும் writing methods ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் - கணக்கில் கொண்டு இலக்கண விதிகளிலும் மாற்றங்கள் செய்ய, உரிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் (http://tamilsdirection.blogspot.in/2016/07/fetna.html ), தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்வியில் பயிற்றுவித்து, 'தமிழ்வழிக் கல்வி' ஆதரவாளர்களாக காட்சி தரும், 'தமிழ் அமாவாசைகள்' எல்லாம் உருவானார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
புலமையுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள் 'வற்றி' விடவில்லையென்றாலும்;
எல்லை மீறி போவதற்குள், மீட்பு முயற்சிகளை மேற்கொள்ளாவிடில்,
தமிங்கிலீசின் செல்வாக்கில், தமிழ் இன்னொரு பாலி மொழியாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் 'அமாவாசை சமூக செயல்நுட்பமானது'
1967இல் வெளிப்பட்டு, 1969-க்குப்பின் தடையின்றி வளர்ந்து, 1991-க்குப்பின் 'வீரியம்'
பெற்ற போக்கில், விடுதலைப் புலிகள் இயக்கமானது, எந்த அளவுக்கு சிக்கி, பலியானது? என்ற
ஆய்வின் அவசியத்தை, கீழ்வரும் தகவல் உணர்த்தியுள்ளது.
‘1980களில் போராளிகளின் எண்ணிக்கையில், ஆயுத பலத்தில்,
பண பலத்தில் விடுதலைப் புலிகள் மூன்றாம் இடத்தில் இருந்த போது;
முதல் இரண்டு இடங்களில் இருந்த 'புளோட்' தலைவர் உமா
மகேசுவரனையும், 'டெலோ' தலைவர் சிரி சபாரெத்தினத்தையும் 'வானளாவ' புகழ்ந்து, அந்த குழுக்கள்
சார்பில் வெளிவந்த இதழ்களிலும், நூல்களிலும் எழுதிய எழுத்தாளர்களிலும், புகழ்ந்த பேச்சாளர்களிலும்,
யார், யார், அந்த இரண்டு தலைவர்களையும், அக்குழுக்களின் போராளிகளையும் விடுதலைப் புலிகள்
அழித்த பின், பிரபாகரனை 'வானளாவ' புகழ்ந்து எழுதினார்கள்? பேசினார்கள்?
அதே போல், முன்பு ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கியவர்களில்
யார், யார், ஜெயலலிதாவால் தமக்கு எதிராக சதி
செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சசிகலா காலில், இன்று விழுந்து வணங்குகிறார்கள்?
கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம், தமது கட்சியில் 'உள்குத்து' வேலைகளில் ஈடுபட்ட 'அமாவாசைகளை', அன்றைய முதல்வர் ஜெயலலிதா கண்டுபிடித்து, ஆவேசப்பட்டதை, ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2016/06/blog-post_20.html ) இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள சிறிய, பெரிய கட்சிகள் எல்லாம், தத்தம் கட்சிகளில் உள்ள 'அமாவாசைகளின் உள்குத்து' பாதிப்புகளிலிருந்து, தப்பித்து பயணிக்க முடியுமா? என்ற கேள்வியானது, கடந்த சட்ட மன்ற தேர்தலிலிருந்து தொடங்கி விட்டது.
‘தமக்கான பாராட்டையும், புகழையும், தமது சமூக வட்டம்
மூலம், தாமே ஏற்பாடு செய்து கொண்டு, 'மகிழும்' மனநோயாளித் தலைவர்களை குறை சொல்லியவர்களில்,
யார் யார் தமக்கு 'வசதி வாய்ப்புகள்' கிடைத்ததும், அது போன்ற 'மகிழ்ச்சிகளில்' திளைத்தவர்கள்?
என்று ஆராய்ந்தால்,’ (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html
);
தமிழ்நாட்டில் 'அமாவாசை சமூக செயல்நுட்பமும்', பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும், பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும், போராட்டங்களும், ஒரே காலக்கட்டத்தில், ஒன்றையொன்று வளர்த்து, இன்று உச்சத்தில் இருப்பதால், அடுத்து அவற்றின் வீழ்ச்சியும் தொடங்க உள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
'அமாவாசை சமூக செயல்நுட்பத்தை' முடித்து வைக்கும், 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவியாக', சசிகலா வெளிப்பட்டாலும், வியப்பில்லை. (http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )' 'ஜெயலலிதா' என்ற கேடயத்தின் வலிமை பற்றிய, அந்த 'வலிமையை' இழந்து, 'அந்த கேடயத்தின் இடத்தை ஆக்கிரமிப்பதில்' உள்ள 'புதை குழிகள்' பற்றிய, 'அறியாமையில்', டிஜிட்டல் யுகத்தில் (Digital Age), "அப்போல்லோ மருத்துவமனையையும் போயஸ் தோட்டமாகவே கருதிக் கொண்டு, யாரையும் உள்ளே விட மறுத்த சசிகலாவுக்கு "சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறோம்" என்று அப்போது உறைத்திருக்க நியாயமில்லை" ( 'புதிய ஜனநாயகம்';ஜனவரி 2017) என்பதன் விளக்க உரையே, இனி நடக்க இருக்கும் வரலாறு ஆகும். ' (http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_12.html )
தமிழ்நாட்டில் தமக்கு வெளிப்பட்ட எதிர்ப்பை சமாளிக்க,
(அறிவுபூர்வமாக இன்று தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ள) 'ஆரிய - திராவிட' கவசத்தை முதலில்
முன்னிறுத்திய சசிகலா குடும்பமானது (http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_18.html
);
தமிழ்நாட்டில் தரகர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், நேர்மையற்ற வழக்காடிகள் (unscrupulous litigants) அடங்கிய 'நன்கு மசகிடப்பட்ட (ஊழல்) எந்திரம்' (well-oiled machine), 'பெரிய அளவில்' (mega racket), செயல்பட்டு வருவதை, சென்னை உயர்நீதிமன்றம் கண்டுபிடித்து, அம்பலப்படுத்தியுள்ளது. (http://timesofindia.indiatimes.com/city/chennai/magistrates-cannot-direct-issue-of-birth/death-certificates-high-court/articleshow/58188926.cms?utm_source=newsletter&utm_medium=referral&utm_campaign=digest_section)
'அமாவாசை சமூக செயல்நுட்பத்தில்', அது போன்ற ஊழல் எந்திரங்கள் செயல்பட்டு, ஆட்சியில் தலைமையில் இருப்பவர்களுக்கு 'அதிக லாபங்களுடனும்', அடுத்தடுத்த கீழ் மட்டங்களுக்கு 'அந்தந்த தகுதிக்கான' லாபங்களுடனும், உலகிலேயே 'தனித்துவமான ஊழல் பிரமீடு' தமிழ்நாட்டில் செயல்படுகிறதா? என்பது தொடர்பாக, ஆர்வமும், உழைப்பும் உள்ளவர்கள், 'தரமுள்ள' பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டால், என்னால் இயன்ற உதவிகளை புரிய இயலும். ஜனநாயகத்தின் தூண்களின் கண்களில் மண்ணைத் தூவி, அந்த 'ஊழல் பிரமீடின்' துணையுடன், ஜெயலலிதாவின் 'மர்ம' மரணம் நிகழ்ந்ததா? என்ற கேள்விக்கு, பாரபட்சமற்ற விசாரணை மூலமே விடை கிடைக்கும்.
ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' தொடர்பாக விசாரணை வேண்டி, நீதி மன்றத்தையோ, ஆளுநரையோ நாடாத தீபாவின் நிலையோ, 'சாண் ஏறி, முழம் சறுக்கின' கதையாகி விட்டது.
அந்த விசாரணை கோரிக்கையை முன்னெடுத்துள்ள
ஓபிஎஸ் அணியின் செல்வாக்கில், 'சசிகலாவின் எடுபிடியோ'? என்று, தீபாவை, 'சுயலாப' நோக்கின்றி ஆதரித்தவர்கள் எல்லாம் சந்தேகிக்கும்
அளவுக்கு, தீபா 'செல்லாக்காசாகி' வருகிறார்.
'அரசியல் நீக்கம்'(depoliticize) போக்கில், ஆதாய அரசியலில், வேறு வழியின்றி, சமூக
ஆற்றலானது, 'தனிநபர்' விசுவாசத்தில், குவிய வாய்ப்புள்ள நபர்களை நோக்கியே, திருப்பு
முனை கட்டத்தில் குவியும், என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
ஆனால் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், முதல் முறையாக, எந்தவித முகமூடியுமின்றி, 'நிர்வாணமாக' ஆதாய அரசியல் தொடர்புள்ள சமூக ஆற்றல்கள் எல்லாம், 'சசிகலா நடராஜன்' என்ற நபரை நோக்கி, 'ஆதாய அரசியல் செயல்நுட்பம்' மூலமாக குவியத் தொடங்கியுள்ளதால், 'அமாவாசைகள்' எல்லாம் மக்கள் மன்ற குவியத்தில் கேலிப்பொருளாகும் போக்கு - சசிகலாவின் படத்தை தவிர்த்து, ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் தினகரன் பிரச்சாரம் மேற்கொண்ட அளவுக்கு- தொடங்கி விட்டது. அது தொடருமானால்;

ஆதாய அரசியலில், வேறு வழியின்றி, சமூக ஆற்றலானது,
'தனிநபர்' விசுவாசத்தில், குவியமான கடைசி தலைவராக ஜெயலலிதா தமிழ்நாட்டில் இடம் பெறுவார். 'ஆதாய அரசியலில்', அதன் 'மீட்சி எல்லை' (Elastic Limit) பற்றிய புரிதலின்றி, அரசியல் தற்கொலைப் போக்கில்
பயணித்து, சசிகலா ஆதாய அரசியலை முடித்து வைத்த
பெருமையை(?) பெற்றாலும் வியப்பில்லை. 'சசிகலாவின்
அரசியல் ஏஜன்டாக' செயல்படும்( http://www.dinamalar.com/news_detail.asp?id=1749886) சுப்பிரமணியசுவாமியின் துணையுடன்(?)(‘ஈ.வெ.ரா, ராஜாஜி தோற்ற 'இடத்தில்', சு.சுவாமி
ஜெயிப்பாரா?’; http://tamilsdirection.blogspot.in/2017/02/porki.html
)
தனிநபர் ஒளிவட்டத்தை 'குவியமாக' கொண்டு பயணிக்கும் கட்சிகளும், அந்த போக்கில் சருகாகி, மறைந்தாலும் வியப்பில்லை.
தனிநபர் ஒளிவட்டத்தை 'குவியமாக' கொண்டு பயணிக்கும் கட்சிகளும், அந்த போக்கில் சருகாகி, மறைந்தாலும் வியப்பில்லை.
அத்தகைய குவியத்திற்கான 'தகுதி' இல்லாத ஓபிஎஸ் அணி
மட்டுமே, இன்று தமிழ்நாட்டில் மக்கள் ஆதரவுடன்
பயணிக்கும் ஒரே கட்சியா? 'ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி', 'சென்னை வெள்ள நிவாரண மீட்பு'
போன்றவற்றில் குறுகிய கால முதல்வராக இருந்து பெற்ற மக்கள் ஆதரவு வளருமா?
மக்கள் ஆதரவுடன், 'செயல்பூர்வமாக' தம்மை நிரூபித்து,
கூட்டுத் தலைமையில் பயணிக்கும் கட்சி மட்டுமே, இனி தமிழ்நாட்டில் எடுபடுமா?
'அமாவாசை சமூக செயல்நுட்பத்தில்', 'திராவிடக்' கட்சி
ஆட்சியில் அரங்கேறிய 'குடும்ப அரசியலுக்கு' எதிராக, 'புரட்சி' செய்து வெளியேறி, சாகும்
வரை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் கட்டத்திலிருந்து (phase);
'ஜானகி' மூலம் 'குடும்ப அரசியலுக்கு' புத்துயிர் கொடுக்க முனைந்த 'அமாவாசைகளை' வீழ்த்தி, முதல்வரான ஜெயலலிதா, 'சசிகலா' மூலம் புத்துயிர் பெற்று, தமிழ்நாட்டை அச்சுறுத்தி வந்த 'குடும்ப அரசியலுக்கு' எதிராக போரிட்டு, அதன் காரணமாகவே, 'மர்மமான' முறையில் மரணமடைந்தார். சசிகலா, இளவரசி, சுதாகரன் சிறை செல்ல, அக்குடும்பத்தினர் ஒவ்வொருவராக அடுத்து, அடுத்து சிறை செல்ல வாய்ப்புள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.கவில் 'அமாவாசைகளின் புரட்சியானது', ஒபிஎஸ் தலைமையில் அரங்கேறியுள்ளது. ( http://tamilsdirection.blogspot.in/2017/02/digital-age-2017.html )

சசிகலாவின் 'அமாவாசைகள்' குழுவிலிருந்து வெளியேறி, ஜெயலலிதாவின் ‘மர்ம’ மரணம் தொடர்பான விசாரணை வேண்டி பயணிக்கும் ஓபிஎஸ் அணியானது;
தமிழ்நாட்டு அரசியல் போக்கில் திருப்பு முனையாக வெளிப்படுவார்களா?
அல்லது 'இன்னொரு வித்தியாசமான அமாவாசை' குழுவாக வெளிப்படுவார்களா?
என்ற கேள்விக்கு விடை தெரியும் காலமும், அதிக தொலைவில்
இல்லை.
தமிழ்நாட்டில் 'அமாவாசைகளின்', 'பொதுநல முகமூடியுடன்' எவரையும் 'சுயலாப' கணக்குடன் 'ஆதரிக்கும்/எதிர்க்கும்', 'அறிவு விபச்சாரிகளின்', துணையின்றியும், 'வாடை'யின்றியும், வாழ்பவர்கள் எல்லாம் வணங்கத்தக்கவர்களே ஆவர். அவர்கள் எண்ணிக்கையிலும், வலிமையிலும் வளரும் போது, அந்த இரு பிரிவினரின் ஆட்டங்கள் அடங்கி, தமிழ்நாடு மீட்சி திசையில் பயணிக்கும்.

No comments:
Post a Comment