Sunday, April 23, 2017

தமிழர்களின் அடையாளச் சிதைவும்,அரசியல் நீக்கமும் (depoliticize) (12)
சமூக ஆற்றல்களில் (Social Energy) தி.மு.கவிற்கும், அ.இ.அ.தி.முகவிற்கும் பண்பு ரீதியிலான வேறுபாடு இருக்கிறதா? தமிழகத்தை ‘காவி மயமாக்க’(?) முடியாதா?   


அகத்தில் சுயலாப கணக்குடன் தான், எவரையும் ஆதரிப்பது/எதிர்ப்பது என்ற நோயின் ஆதிக்கத்தில் தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாட்டில் நமக்கு தெரிந்தவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும், நமக்கு மேற்குறிப்பிட்ட நோயில்லை, என்ற வகையில் புரிதல் உள்ளவர்களிடம் மட்டுமே, நாம் வெளிப்படையாக உரையாட முடியும்.

தமிழ்நாட்டில் சமூகத்தின் அடிமட்டத்தில் அந்தந்த கிராமத்தில் உள்ள தி.மு.க கட்சிக்காரர்களுக்கும், அ.இ.அ.தி.மு.க கட்சிக்காரர்களுக்கும் உள்ள இரு வேறு செல்வாக்குகளுக்கும், பொதுவாக (சில விதி விலக்குகள் இருக்கலாம்) இருக்கும் பண்பு ரீதியிலான வேறுபாடானது, எனது கவனத்தை ஈர்த்தது.

அதற்கான காரணத்தை, சில மாதங்களுக்கு முன் நான் சந்தித்த, தி.மு.க தலைவர் 'கலைஞர்' மு.கருணாநிதியின் தீவிர ஆதரவாளர் தெளிவு படுத்தினார் ( சற்று கோபத்துடனேயே).

ஆட்சியில் இருக்கும் போது, 'சம்பாதித்த'(?) பணத்தை, தி.மு.க காரன் தனக்கே வைத்துக் கொள்கிறான். ஆனால் அ.இ.அ.தி.மு.க காரனோ கிராமத்தில் மற்றவர்களுக்கும் உதவி, தனக்கென்று ஒரு ஆதரவு வாக்கு வங்கியை அந்த கிராமத்தில் 'மெயின்டெய்ன்' (maintain) பண்ணுகிறான்.' என்ற வகையில், அவர் தெளிவுபடுத்தினார். 

அது போலவே, பொதுவாக (சில விதி விலக்குகள் இருக்கலாம்) புறத்தில் 'கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு' என்று 'காட்சி' தந்து, அகத்தில் 'கடவுள் பக்தி', சாதி 'வெறி'யுடன் வாழ்பவர்களில், ஒப்பீட்டளவில் தி.மு.கவினர் அதிகமாகவும், அ.இ.அ.தி.மு.கவினர் குறைவாகவும் உள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அதாவது 'திராவிட' அரசியலில், தமிழ்நாட்டில் இன்று உச்சத்தில் உள்ள அரசியல் நீக்கம் (Depoliticize) போக்கில், 'தனிநபர் விசுவாசம்' என்ற சமூக செயல்நுட்பமானது, மேல் மட்டத்திலிருந்து, கிராமம் வரையிலான கீழ் மட்டம் வரை, செயல்படும் போக்கில், வெளிப்பட்டுவரும் சமூக ஆற்றல்களில் (Social Energy)  தி.மு.கவிற்கும், அ.இ.அ.தி.முகவிற்கும் பண்பு ரீதியிலான வேறுபாடு இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'உள் குத்து' செயல்நுடபத்தில், இரண்டு கட்சிகளிலும் மேல் மட்டத்தில் உள்ளவர்களிடையே வேறுபாடு ஏதும் இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மேலே குறிப்பிட்ட போக்குகளின் தொகுவிளைவாக, 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு, தனித் தமிழ்நாடு, இந்திய தேசிய எதிர்ப்பு' போன்றவற்றுடன் 'அந்நியமாகி' பயணிப்பதில் அ.இ.அ.தி.மு.கவினர் முன்னிலையிலும், அவற்றை தமது 'சுயநல அரசியலுக்கு' பயன்படுத்தி, 'நீர்த்துப் போக' செய்ததில் தி.மு.கவினர் முன்னிலையிலும், உள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

திருப்பு முனை கட்டத்தில் உள்ள தமிழ்நாட்டில், சமூக ஆற்றல்கள் தொடர்பான சரியான புரிதலே, அடுத்த கட்ட அரசியலை, கணிக்க உதவும். 'தனக்கென்று ஒரு ஆதரவு வாக்கு வங்கியை தனது கிராமத்தில் 'மெயின்டெய்ன்' (maintain) பண்ணி' வரும் நபர்களின் பலத்தில் இயங்கி வரும் அ.இ.அ.தி.மு.கவானது, ஒன்றாக வலுவுடன் பயணிக்கும் 'இணைப்பு' முயற்சி தோல்வியாகும் போது, என்ன ஆகும்? என்ற கேள்விக்கான விடையானது, அந்த கணிப்பிற்கு துணை புரியும். 1944இல் தி.க தொடங்கிய போது, தமிழ்நாட்டில் இருந்த ஆக்கபூர்வ/அழிவுபூர்வ சமுக ஆற்றல்கள் யாவை?; அவை எந்தெந்த மனிதர்களின் 'இயல்பை' பொறுத்து, அந்தந்த‌ மனிதர்கள் மூலம் வெளிப்பட்டன? 1949இல் தி.மு.க உருவானபோது முதல் இடத்தில் இருந்த அண்ணாவிற்கும், இன்று தி.மு.க தலைவராக இருக்கும் 'கலைஞர்' மு. கருணாநிதிக்கும், இடையில் 'தலைவர்கள் வரிசையில்' இருந்தவர்கள் யார்? யார்? எந்த 'சமூக செயல்நுட்பத்தின்' அடிப்படையில், அவர்களை எல்லாம் பின் தள்ளி, இன்று தி.மு.கவானது நேரு பாணி குடும்ப அரசியலில் சிக்கியது? அந்த  'சமூக செயல்நுட்பத்தின்' பிரதிநிதிகளாக இன்று அழிவுபூர்வ சமூக ஆற்றல்களின் பிரதிநிதிகளாக வலம் வருபவர்கள் யார்? அவர்களின் சுயலாப கணக்கில் சிக்கிய,  'தமிழ் உணர்வு, பகுத்தறிவு, சமூக நீதி, ஊழல் எதிர்ப்பு' போன்ற முகமூடிகளை எவ்வாறு அகற்றி, அவர்களின் 'சுய உருவத்தை' மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, 1944க்கு முன் இருந்த, நேர்மையான சுயசம்பாத்திய திறமையும், ஆர்வமும் அற்ற‌, அத்தகையோருக்கான 'சிற்றினம்' என்று, அவர்களை ஓரங்கட்ட முடியும்? என்ற கேள்விகளும், மேற்குறிப்பிட்ட கணிப்பிற்கு துணை புரிபவை ஆகும்.
 (http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post_16.htmlபாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில் இருந்த தடைகள் எல்லாம், 1944 முதல் பலகீனமான போக்கில்;


சிற்றின மனிதர்கள் எல்லாம், 'முற்போக்கு' முகமூடிகளுடன் சமூக வெளியில் (Social Space), அறிவிலும், பண்பிலும் உயர்ந்திருந்த மனிதர்களை எல்லாம், 'உணர்ச்சிபூர்வ' அச்சுறுத்தல்கள் மூலம் ஓரங்கட்டி, தமிழ்நாட்டில் 'ஆதிக்க சக்தியாக' வளர்ந்ததன் 'பலனை', இன்று தமிழும், 'நேர்மையான' தமிழர்களும், தமிழ்நாடும் 'அனுபவித்துக் கொண்டிருக்கிறதா'? என்பதும் ஆய்விற்குரியதாகும். மனசாட்சியுடன் வாழும் தமிழர்களை நோக்கி, 'தேரா தமிழா'? என்று கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் விட்டது. (http://tamilsdirection.blogspot.sg/2015/08/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

தி.மு.கவிற்கும், அ.இ.அ.தி.முகவிற்கும் தமிழ்நாட்டில் உள்ள சமூக ஆற்றல்களில் (Social Energy)  பண்பு ரீதியிலான வேறுபாடு இருக்கிறதா? என்ற ஆய்வுக்கு உதவும் தகவல்கள் வருமாறு:

ஜெயலலிதாவின் 'மர்மமான' மரணத்திற்குப்பின், 'பொதுச்செயலாளரான'(?) சசிகலாவின் காலில் விழுந்து வணங்கியவர்களில் பெரும்பாலோர், சசிகலா குடும்பத்தையே கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.'ஜெயலலிதா சிறை சென்றபோது, அ.தி.மு.க தொண்டர்கள் தீக்குளித்தனர். சசிகலா சிறை சென்ற போது, பட்டாசு வெடித்தனர்' ( துக்ளக் 26.4.2017)

அ.தி.மு.க கட்சியின் தோற்றம் மற்றும் வளர்ச்சிப் போக்கு தொடர்பான, கீழ்வரும் தகவல்களும், தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையிலான சமூக ஆற்றல் தொடர்பான வேறுபாடுகளை புரிந்து கொள்ள துணை புரியும்.

1989‍இல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், அ.இ.அ.தி.மு.க பிளவின் காரணமாக தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஒன்றுபட்ட அ.இ.அ.தி.மு.க, ஜெயலலிதா தலைமையில் மீண்டும் 1991 இல் ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் தி.மு.க தலைவர் குடும்ப செல்வாக்கு மேல் மக்கள் கொண்ட அதிருப்திக்கும், அ.இ.அ.தி.மு.கவில் சசிகலா குடும்ப செல்வாக்கு மேல் மக்கள் கொண்ட அதிருப்திக்கும், ஏற்றவாறு இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தன. தற்போது எந்த குடும்ப செல்வாக்கிலும் இல்லாதவராக தன்னை வெளிப்படுத்தியுள்ள ஜெயலலிதா அளவுக்கு தமிழ்நாட்டில் வேறு எந்த தலைவருக்கும் செல்வாக்கில்லை என்பதும் உண்மையே.ஒப்பீட்டளவில் தி.மு.க தலைவர்களை விட, ஜெயலலிதா தமிழர் என்ற அடையாளத்துக்கு இணக்கமாக ‘இந்தியர்’ என்ற அடையாளத்தின் மீது பற்றுள்ளவர் என்பதும் உண்மையே.ஆட்சிக் கலைப்புக்குள்ளான சமயங்களில் பல தி.மு.க தலைவர்கள் மத்திய அரசை அச்சுறுத்தும் வகையில் 'தனித் தமிழ்நாடு' கோரிக்கைகளை எழுப்பி, அக்கோரிக்கையை கேலிக்குள்ளாக்கினார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ஆங்கில வழியில் படித்து கல்லூரி மாணவர்களாயிருப்பவர்களிடையே, இத்தகையப் போக்குகள் 'தமிழ், தமிழுணர்வு' போன்ற‌வற்றையும் கேலிக்குள்ளாகியதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

தி.மு.கவின் ஊழல் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடி, வலிமை பெற்று வந்த காமராஜரின் 'ஸ்தாபன காங்கிரசை' ஓரங்கட்டி, எம்.ஜி.ஆர் பயணித்த குடும்ப அரசியலுக்கு  எதிரான போக்கில், இன்று ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' விளைவித்த கோபமும் சேர்ந்து, அடுத்த கட்ட 'குடும்ப அரசியல் எதிர்ப்பு' போக்கானது, ஓ.பி.எஸ் தலைமையில் அரங்கேறி வருகிறதா? என்ற கேள்வியும் இன்று எழுந்துள்ளது.

‘ 'அமாவாசை சமூக செயல்நுட்பத்தில்', 'திராவிடக்' கட்சி ஆட்சியில் அரங்கேறிய 'குடும்ப அரசியலுக்கு' எதிராக, 'புரட்சி' செய்து வெளியேறி, சாகும் வரை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் கட்டத்திலிருந்து (phase);

'ஜானகி' மூலம் 'குடும்ப அரசியலுக்கு' புத்துயிர் கொடுக்க முனைந்த 'அமாவாசைகளை' வீழ்த்தி, முதல்வரான ஜெயலலிதா, 'சசிகலா' மூலம் புத்துயிர் பெற்று, தமிழ்நாட்டை அச்சுறுத்தி வந்த 'குடும்ப அரசியலுக்கு' எதிராக போரிட்டு, அதன் காரணமாகவே, 'மர்மமான' முறையில் மரணமடைந்தார். சசிகலா, இளவரசி, சுதாகரன் சிறை செல்ல, அக்குடும்பத்தினர் ஒவ்வொருவராக அடுத்து, அடுத்து சிறை செல்ல வாய்ப்புள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.கவில் 'அமாவாசைகளின் புரட்சியானது', ஒபிஎஸ் தலைமையில் அரங்கேறியுள்ளது. 
(http://tamilsdirection.blogspot.com/2017/02/digital-age-2017.html) என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

ஓ.பி.எஸ் அணியானது மோடியின் பின்னணி பலத்தில் செயல்படுவதாக, தமிழ்நாட்டில் 'இந்துத்வா எதிர்ப்பு' என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் மூலமாகவும், தமிழ்நாட்டில் 'சசிகலா குடும்ப அரசியலுக்கு'எதிராக கிளம்பியுள்ள சூறாவளியில் (சசிகலாவின் படத்தை தவிர்த்து, தினகரன் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்த அளவுக்கு), தமிழக பா.ஜ.க-வும் பலன் பெற்று வருகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜப்பானிய 'ஜுஜுட்சு' (Jujutsu;https://en.wikipedia.org/wiki/Jujutsu) சண்டையில், எதிரியின் வலிமையையே, எதிரிக்கு எதிராக பயன்படுத்தி வெற்றி பெறுவர். எதிரியே தனது வலிமையை 'தானம்' செய்து, தானாகவே தோற்கும், 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு', தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது; ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை அப்பொல்லோவில் தொடங்கிய நாள் முதல்; அந்த 'மர்மத்தை' எதிர்த்து குரல் கொடுக்காமல், 'சசிகலா குடும்ப சூழ்ச்சிக்கு' நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைத்து, தத்தம் அரசியல் அடித்தளங்களை, தாமே 'நாசமாக்கி' கொண்ட கட்சிகளின், தலைவர்களின் பங்களிப்போடு. அதே வகை 'வித்தியாசமான அரசியலில்', பிரதமர் மோடியால் ஈர்க்கப்படும், 'திராவிட' கட்சிகளின் ஆதரவாளர்களை 'விரட்டும்' வகையில், தமிழக பா.ஜ.க தலைவர்களில் சிலர், பய‌ணித்து வருவதால்,மேலே குறிப்பிட்டுள்ள 'பலனுக்கும்', பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

1967க்குப் பின் முதல் முறையாக, தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளின் துணையின்றி, கடந்த பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க கூட்டணி 2 இடங்களில் ( தி.மு.க அணி முற்றிலும் தோற்க) பெற்ற வெற்றியிலிருந்து சறுக்கியதானது, அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டது.  

'தமிழை காட்டுமிராண்டி மொழி' என்றும், பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் தமிழர்க்கு கேடானவை என்றும் தவறாக கருதிக் கொண்டு;

அறிவுபூர்வ அணுகுமுறையில் நாத்திகர்கள் ஊக்குவிக்க வேண்டிய மொழி சமஸ்கிருதம் என்பது தெரியாமலும்; {“Sanskrit and Pali have a larger atheistic and agnostic literature than any other classical language” ( Page 35, ‘Identity and Violence’ by Amartya Sen)}

‘எத்தனை முயற்சிகள் செய்தாலும் தமிழகத்தை காவி மயமாக்க முடியாது’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ள கருத்தும் ஆய்விற்குரியதாகும். ( http://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-attacks-bjp-at-party-public-meeting-280628.html'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு' போக்கில் இந்துத்வா எதிர்ப்பு சக்திகள் பயணித்து வருவதற்கு துணையாக, பா.ஜ.கவிலும் சில தலைவர்கள் பயணித்து வருவதால், இது போன்ற கருத்துக்கள் வெளிப்படுகின்றன.

இது போன்ற முயற்சிகள் எல்லாம்;

'காவி'க்கும் தமிழுக்கும் உள்ள வரலாற்று ரீதியிலான ஆழமான தொடர்பை விளங்கிக் கொள்ளாமல், 'மேற்கத்திய முற்போக்கு' குறிப்பாயத்திற்கு (Western Paradigm) அடிமையாகி, ‘காவியை' சமஸ்கிருதத்தின் 'ஏகபோக'மாக கருதி, 'காவிமய ஆபத்து' என்ற போர்வையில், 'காவிமய' எதிர்ப்பில்' (தமிழ்நாட்டின் குடும்ப ஊழல் அரசியல் பாதுகாப்பிலும்?) ஒன்றாகி; 

பொதுச் சொத்துக்களுக்கு சேதமின்றியும், பொது மக்களுக்கு ஊறு இன்றியும், ஆனால் அரசை அச்சுறுத்தும் 'பெரியார்' ஈ.வெ.ராவின் போராட்ட வடிவங்களை, 'பிரமிக்கும்' வகையில், சுயசம்பாத்தியமுள்ள இளைஞர்களும், மாணவர்களும், வளர்த்து, 'ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில்' வெற்றி ஈட்டிய பின்னும், 'பந்த்' போன்ற மக்களிடமிருந்து 'அந்நியமாகும்', 'பிரம்மச்சாரி' இளைஞர்களின், பயணிகளின், தினக் கூலிகளின், கடையோர வியாபாரிகளின், 'கோபத்தை' சம்பாதிக்கும், போராட்டங்களுடன் பயணித்து;

கட்சி சாரா மாணவர்கள், இளைஞர்களின் சுயநலம் பாரா உண்மையான பொதுநல அக்கறையில் 'சுனாமி'யாகும் போக்கில், அலையாக வெளிப்பட்டுள்ள சமூக ஆற்றல்களின் கோபத்திற்கும் வெறுப்புக்குமான குவியமாகியுள்ள‌, 'சசிகலா குடும்ப அரசியல்' பாதுகாப்பு முயற்சியில், சுவடின்றி அழியப் போகிறர்களா?

அல்லது சமூக ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்கப் போகிறர்களா?

தமிழ்நாட்டிலும், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாள குழப்பங்களிலிருந்து 'விடுதலை'யாகி, குழப்பமற்ற 'தமிழர்' அடையாளத்திற்கும் (‘யார் தமிழர்?’; http://siragu.com/?p=3527 ), 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கும் உள்ள உறவானது ஆக்கபூர்வ திசையில் பயணிக்க ஏதுவாக', 'காவி'க்கும் தமிழுக்கும் உள்ள வரலாற்று ரீதியிலான ஆழமான தொடர்பின் அடிப்படையில், தமிழின், தமிழரின் அடையாள நிறம் 'காவியை' மீட்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
(http://tamilsdirection.blogspot.com/2017/02/depoliticize11-identity-rescueoperation.html


1967 ஆட்சி மாற்றத்தின் தொடர்விளைவாக, 1991 முதல் அரங்கேறிய 'திராவிட மஃபியா' வளர்ச்சிப் போக்கினை (துக்ளக் 3.5.2017 தலையங்கம்);

எதிர்க்காமலும், 'அனுசரித்தும்' பயணித்த தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரின் பங்களிப்பில், தமிழ் மொழியும் அந்த 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு' போக்கில் சிக்கி, மரணப் பயணத்தில் உள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_14.htmlசமூக ஆற்றல் செயல்பாடு என்ற சமூக இரத்த ஓட்டத்தில் லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்' என்ற நோய்க்கிருமி நுழைந்த பின், தமிழ்ச் சமூக இரத்தமே அந்த நோயில் பண்பு மாற்றம் அடைந்த பின், அந்த சமூகத்தில் மொழியும், மொழி சார்ந்த பாரம்பரியமும், பண்பாடும் அழிவதில் வியப்புண்டோ? அந்த நச்சு நோயின் விளைவாக திரிந்த மேற்கத்திய பண்பாட்டு நோயில் சிக்கி, ஆங்கிலத்தில் திரிந்த தமிழ் பேசும் நோயாளிகளாக தமிழர்கள் மாறுவதில் வியப்புண்டோ? தேனீக்கள் சுவடின்றி அழிந்தது போல, தமிழும், தமிழ்ப் பாரம்பரியமும் பண்பாடும் சுவடின்றி அழிவதில் வியப்புண்டோ? (http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_14.html) அவ்வாறு சுவடின்றி அழிவதற்கே, 'பெரியார்' ஈ.வெ.ரா அவதரித்தாரா? (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html )  முள்ளிவாய்க்கால் அழிவில், அந்த போக்கின் பங்களிப்பை, திறந்த மனதுடன், அறிவுபூர்வமாக விவாதித்து, பாடங்கள் கற்று பயணிக்க தாமதமாவதும், 'ஈழ' தமிழர்களை 'இன்னொரு பாலத்தீனியர்களாக', மாற்றி வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html & http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_26.htmlஇலங்கை மலையகத் தமிழரின் பிரச்சினையை இருட்டில் தள்ளி, தமிழ்நாட்டில் 'திராவிட ஆதாய அரசியல்’ சூழலில், 'வெளிச்சம்' போட்ட 'ஈழத் தமிழர்' பிரச்சினையானது, சாதாரண மக்களிடம் 'சாயம் வெளுத்துப் போனதன்' விளைவாகவே, முள்ளிவாய்க்கால் அழிவிற்குப் பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க கூட்டணியானது, மகத்தான வெற்றி பெற்றதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

நடுத்தர ஏழை மக்கள் மட்டத்தில் தொடங்கி, இன்று சசிகலாவை குவியமாகக் கொண்டு, 'சுனாமியாக' வளர்ந்துள்ள 'குடும்ப அரசியல் ஊழல் எதிர்ப்பு அலையை' உணர்ந்து, 'படித்த தமிழர்கள்' எல்லாம் அந்த அலையோடு, தமிழின், தமிழரின் அடையாள 'காவி மீட்பு'  நோக்கில், நெறிப்படுத்தும் வாய்ப்பினை தவற விட்டால், தமிழ் 'இன்னொரு பாலி' மொழியாகி (https://en.wikipedia.org/wiki/Pali );

தமிங்கிலீசர்கள் (பெரும்பாலும் தரகர்களாகவும், திருடர்களாகவும்) வாழும் நாடாக, தமிழ்நாடு சீரழியும் வாய்ப்பும், எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.(‘தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?’; 
http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html


சீரழிந்துள்ள தமிழ்நாட்டில், சீரழிவுக்கான 'வித்துக்களை', திறந்த மனதுடன் தேடி அழிக்க தயங்கினால், மீட்சிக்கு வழியில்லை என்பதும், கவனிக்கத் தக்கதாகும்.

‘தமிழில் சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை மேலேக் குறிப்பிட்ட மேற்கத்திய 'முற்போக்கு, மார்க்சிய' பார்வைகளில் அணுகிய முயற்சிகள் எல்லாம் குருடர்கள் தேடிய ஓவியங்களின் கதையானது.  அத்தகையப் பார்வையில் சிக்கியதாலேயே, 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள், தமிழைக்  காட்டுமிராண்டி மொழியாகவும், தமிழ் இலக்கியங்களில் திருக்குறள் (அதிலும் குறை கண்டு) தவிர்த்து, மற்றவையெல்லாம் தமிழர்க்குக் கேடானவை என்றும் முடிவு செய்தார்.  (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html & http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html  & http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html ).
அகத்தில் உருவாகி, புறத்தில் வெளிப்படும் எந்த படைப்புகளையும், புறப்பார்வையின் மூலம் மட்டுமே விளங்கிக் கொள்ள முயற்சித்ததே 'மேற்கத்திய பகுத்தறிவு'ப் பார்வையின் குறைபாடாகும்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

2-5-1925 இல் ஆரம்பித்து 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்களால் வெளியிடப்பட்ட ‘குடி அரசு’ இதழைத் தொடங்கி வைத்தவர், தமிழறிஞரும் திருப்பாதிரிப் புலியூர் திருமடத்தின் தலைவராகவும் விளங்கிய ’சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிஎனும் ’ஞானியார் சுவாமிகள் ஆவார். அந்த முயற்சியானது, 1944இல் திசை திரும்பியதன் தொடர் விளைவாக, தமிழின், தமிழரின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட தமிழின், தமிழரின் அடையாள 'காவி மீட்பு' முயற்சியில்,  தமிழ் சைவ ஆதரவாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமாகும்.

மேலே குறிப்பிட்டுள்ளது உள்ளிட்டு, எனது பதிவுகள் தொடர்பான அறிவுபூர்வ மறுப்பை, நான் வரவேற்கிறேன். 


குறிப்பு:

ஊடக வெளிச்சத்திற்கு வராமல், தமிழ்நாட்டில் பல நல்ல காரியங்கள் நடந்து வருவதை நான் அறிவேன். ஆனால் என்னை பிரமிக்க வைத்த, கீழ்வரும் 'சாதனை'யானது, தமிழ்நாட்டின் மீட்சியில், எனது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

‘இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது.’ (https://www.facebook.com/Sreepriya.Iyer/posts/10154818460822885

தமிழ்நாட்டில் அவ்வாறு மண்ணுக்குள் ஏரிகள் எப்போது முதல், ஏன் புதைந்தன? அதற்கான காரணகர்த்தாக்களை, 'புரவலராக' கொண்டு  செயல்பட்ட தமிழ்/திராவிட கட்சிகள் யார்?யார்?

No comments:

Post a Comment