Thursday, August 2, 2018

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை; கருணாநிதியிடம் ஏமாந்த ஜெயலலிதா (2)



மத்தியில் பா.. ஆட்சியில், தமிழ்ப் பாரம்பரிய தொழில்நுட்பங்களை மீட்பதே புத்திசாலித்தனம்



முதல்வரான அண்ணா வாடிகன் சென்று போப்பை சந்தித்த போது; கோவா விடுதலை போராட்டத்தின் போது, போர்ச்சிகீசிய அரசால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் இருந்த ஆர்.எஸ்.எஸ் காரரான மோகன் ரானடேயை சிறையிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தது ஏன்

உடல்நலக்குறைவில் சிக்காமல், அண்ணா நல்ல ஆரோக்கியத்துடன் முதல்வராக தொடர்ந்திருந்தால்;

அண்ணாவுக்கும், (கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவகம்-memorial-  எழுப்பிய)  ஏக்நாத் ரானடேக்கும் இடையில் மலர்ந்திருந்த நல்லுறவானது;

சுயலாப நோக்கின்றி, 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு', திராவிட அரசியலை வளர்க்க விரும்பிய போக்கில்;

திராவிட அரசியலுக்கும் ஆர்.எஸ்.ஸ்ஸிக்கும் இடையில், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பலன்கள் விளைந்திருக்க கூடிய நல்லுறவாக வளர்ந்திருக்கும்;

என்பது எனது ஆய்வு முடிவாகும். (‘கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை; இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்;  கருணாநிதியிடம் ஏமாந்த ஜெயலலிதா’(1); http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

அது போலவே கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வடித்த, கணபதி ஸ்தபதி முதல்வராக பணியாற்றிய இடம், மகாபலிபுரம் சிற்ப மற்றும் கட்டிடக்கலைக் கல்லூரியாகும்(Government College of Architecture and Sculpture). ஆசியாவில் சிற்பக்கலை மற்றும் பாரம்பரிய கட்டிடக்கலைக்கான இளநிலை, முதுநிலை படிப்புகள் உள்ள ஒரே கல்லூரி அதுவாகும்.

அந்த கல்லூரி உருவாக முழுமுதற் காரணம் ராஜாஜி ஆவார். ஆனால் தமிழ்நாட்டின் மற்ற பாரம்பரிய தொழில்நுட்பங்களை மீட்கும் நோக்கில், அது போன்ற கல்லூரிகள் நிறுவப்படவில்லை. இனியாவது அதற்கான முயற்சியில், ராஜாஜியைப் போன்று, செல்வாக்குள்ளவர்கள் முயன்றால், அது சாத்தியமாகும். 

அண்மையில் 'ஆங்கோர் வாட்' (Angkor Wat) கோவிலுக்கு சென்றிருந்தேன். அப்போது அருகில் உள்ள 'சியாம் ரீப்' (Siem Reap) நகரில், பாரம்பரிய சிற்ப, மர உலோகவேலைப்பாடுகளுக்கு பயிற்சி கொடுத்து, கல்லாலும், மரத்தாலும், உலோகத்தாலும், இன்னும் பல பாரம்பரிய தொழில்நுட்பங்கள் மூலம் உருவான பொருட்கள் விற்கப்படும் இடங்களுக்கு சென்று வியந்தேன். (‘கம்போடியாவில் 'ஆங்கோர் வாட்' (Angkor Wat) (1); தமிழனின் அடையாளமா? 'இந்திய' அடையாளமா?’; http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none.html )

அந்த பொருட்கள் எல்லாம் எவ்வாறு செய்யப்படுகின்றன? என்பதை எல்லாம் சுற்றுலாப் பயணிகள் பார்க்க முடியும். ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு அதில் குறுகிய கால பயிற்சி பெறவும் வாய்ப்புகள் உள்ளன. பாரம்பரிய தொழில்நுட்பங்கள் மூலம் என்னென்ன வழிகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சுற்றுலா வருமானத்தினை கூட்ட முடியும்? என்பதை அங்கே கண்டேன்.

அது போலவே சிக்கிம், தாய்லாந்து, கம்போடியா சென்ற போது, அங்கெல்லாம் பாரம்பரிய மதுபானங்கள் சுற்றுலாப் பயணிகளிடம் பெரும் வரவேற்பினைக் கண்டு வியந்தேன். வெளிநாடுகளுக்கும் அவை ஏற்றுமதியாகி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த சுமார் 50 வருடங்களாக மது விற்பனையால், வெளிநாட்டு மதுபானங்கள் மூலமாக தமிழ்க்குடும்பங்கள் நாசமாகும் போக்கே நீடிக்கிறது. தமிழரின் பாரம்பரிய மது பானங்கள் தடை செய்யப்பட்டு, அவை மூலம் சுற்றுலாப்பயணிகளிடமிருந்தும், வெளிநாட்டு ஏற்றுமதி மூலமும் கிடைத்திருக்கும் வருமானத்தையும், வேலை வாய்ப்புகளையும் தமிழ்நாடு இழந்திருக்கிறது. அது மட்டுமல்ல, பாரம்பரிய மதுவான 'கள்' மூலமாக, உடலுக்கும், உழைப்புக்கும் பலன் பெற்று, தென்னை, பனை மரங்களின் உற்பத்தி பெருகி, பிற மது பானங்கள் மூலம் 'பெரும்குடிகாரர்கள்' உருவாகி, குடும்பங்கள் நாசமாவதானது தடுக்கப்பட்டிருக்கும்.

மத்தியில் ஆளும் பா..அரசானது, பாரம்பரிய தொழில்நுட்பங்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தமிழரின் தொழில்நுட்பங்களை மீட்டெடுக்க, மகாபலிபுரத்தில் உள்ள மேலே குறிப்பிட்ட கல்லூரியைப் போன்று, உலோகக்கலை (Traditional metallurgy), மரவேலைப்பாடு (Wooden sculpture & carpentary), உள்ளிட்ட தொழில்நுட்பங்களுக்கான கல்லூரிகளையும், ஆய்வகங்களையும் (Research & Development labs) உருவாக்கும் நோக்கில் முயற்சிப்பதே புத்திசாலித்தனமாகும்.

சமஸ்கிருத நூல்களில் இருந்து கண்டுபிடிக்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பானவை எல்லாம், உடனுக்குடன் உலகின் கவனத்தை ஈர்த்து வரும் சூழலில்; (https://sanskritdocuments.org/articles/ScienceTechSanskritAncientIndiaMGPrasad.pdf  )

பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து வெளிப்பட்ட எனது கண்டுபிடிப்புகள் எல்லாம், 20 வருடங்களுக்கும் மேலாக 'வெளிச்சத்திற்கு' வராமல் இருக்கும் அவலமானது, தமிழைத் தவிர, வேறு எந்த மொழிக்கும், எந்த மொழி ஆய்வாளருக்கும், உலகில் நேர்ந்திருக்கிறதா?’ (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_20.html  )

அதற்கு யார் காரணம்? என்ற விவாதத்தில் நேரத்தைக் கடத்தாமல், இனி அது போன்ற தவறுகள் தொடராமல் இருக்க வழி காண்பதே புத்திசாலித்தனமாகும்.

'இந்துத்வா எதிர்ப்பு' என்ற பேரில், மேலே குறிப்பிட்ட முயற்சிகளுக்கு தடைகள் வெளிப்படுமானால், அதனை எதிர்த்து போராட வேண்டியதானது;

தமிழின், தமிழ்ப் பாரம்பரிய தொழில்நுட்பங்களின் மீட்சியிலும், வளர்ச்சியிலும் அக்கறை உள்ளவர்களின் சமூகக் கடமையாகும்.

‘1967க்கு முன்பு இருந்தது போல ஊழலற்ற ஆட்சி இருந்திருக்குமானால், மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே ஸ்டெர்லைட் ஆலையானது அனுமதி பெற்று செயல்பட்டிருக்கும்: ஊழலுக்கு செலவு செய்த தொகைக்கும் குறைவான தொகையிலேயே உரிய மாசுக்கட்டுப்பாட்டு பாதுகாப்புகளுடன் அந்த ஆலை செயல்பட்டிருக்கும்;

உலக நாடுகளில் ஒழுங்காக செயல்பட்டு வரும் மற்ற தாமிர ஆலைகளைப் போலவே…………… ஸ்டெர்லைட் போன்ற எதிர்ப்புகளுடன், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் சேர்த்து எதிர்க்கும் போக்கு தொடர்ந்தால், புதிய திட்டங்கள் வராமலும்

அதிக வேலைவாய்ப்புகளுடன் செயல்படும் தொழில்களும், தமிழ்நாட்டை விட்டு, வெளியேறும் அபாயமும் இருக்கிறது

அது போன்ற எதிர்ப்புகள் இருந்திருந்தால், திருச்சி பெல், துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி டேங்க் தொழிற்சாலை, போன்ற பல தொழிற்சாலைகள்/திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்குமா?’ (http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

நிகழ்காலத்தில் புதிய நிறைய தொழில், வியாபார, வேலைவாய்ப்புகள் தொல்காப்பியம் மூலமாக உருவாகும் காலம் நெருங்கி விட்டது. இனி பழந்தமிழ் இலக்கியங்களை நோக்கிய ஆய்வுப்படையெடுப்புகள் எல்லாம், உலகில் உள்ள உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து தொடங்கும் காலமும் அதிக தொலைவில் இல்லை. (‘தமிழின்  அடுத்த கட்ட (Next Phase) புலமை? (2); புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும்’; http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html  )

விடுதலைப்புலிகளை தமிழ்நாடு ஆதரித்ததற்கு தண்டனையா, தமிழ்நாட்டை வேலையில்லாத மாநிலமாக்கும், மேற்குறிப்பிட்டது போன்ற போராட்டங்கள் எல்லாம்? என்ற கேள்வி எழ, விடுதலைப்புலி ஆதரவாளர்கள் காரணமாகி வருகிறார்கள். கல்லூரி மாணவர்களும், படித்த இளைஞர்களும் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளை கெடுக்கும் முயற்சிகளை எல்லாம், இனி அனுமதிக்க மாட்டார்கள். உலகில் எவ்வாறு பாதுகாப்பானகழிவு நீக்கல்’ தொழில்நுட்பங்களுடன் தொழிற்சாலைகள் செயல்படுகிறதோ, அவை போலவே தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் செயல்படுவதை கண்காணித்து, புதிய முதலீடுகளை வரவேற்க வேண்டும். அந்த போக்கு வலுப்பெறுமானால், தமிழ்ப் பாரம்பரிய தொழில்நுட்பங்களை மீட்டு, வளர்த்து, புதிய தொழில், வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எளிதாகும். பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து, நான் கண்டுபிடித்த தொழில்நுட்பங்கள் மூலம் பிற நாடுகள் பலன்கள் பெறுவதற்கு முன்பு, தமிழ்நாடு பலன் பெற்று, அதற்கு தலையாக இருக்கும்; வாலாக பலன் பெறாமல்.

No comments:

Post a Comment