Friday, February 23, 2018


கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை;


இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்


கருணாநிதியிடம் ஏமாந்த ஜெயலலிதா(1)


'பராசக்தி' திரைப்படத்தின் கதாசிரியர் யார்? என்று இணையத்தில் தமிழில் 'கூகுளில்' தேடினால், மு.கருணாநிதி என்றே பெரும்பாலான விடைகள் இருந்தன. பின் ஆங்கிலத்தில் தேடியபோது தான், சரியான விடை கிடைத்தது. (https://en.wikipedia.org/wiki/Parasakthi_(film)   ) 

பாவலர் பாலசுந்தரம் என்ற தமிழ் அறிஞரால் 1950களில் எழுதி வெளிவந்த நாடகம் 'பராசக்தி'. கிருஷ்ணன் -பஞ்சு இயக்கி, திரைப்படமாக வெளிவந்த போது, அந்த திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் தான் 'கலைஞர்' மு.கருணாநிதி ஆவார். ஆனால் இன்று பாவலர் பாலசுந்தரம் இருட்டில் மறைய, முழு  குவிய வெளிச்சமும் மு.கருணாநிதிக்கே சொந்தமாகி விட்டது;

என்பது சரியானால், தமிழ்நாடுஉண்மை திசை’யிலிருந்து திரும்பி பயணித்து வரும் நாடாகி விட்டதா? என்ற கேள்வி எழுவதும் தவறா? 

அது போலவே, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை உருவாக காரணமாக இருந்தஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஏக்நாத் ரானடேயையும், முதல்வர் எம்.ஜி.ஆரையும் இருட்டில் தள்ளி, பின்னர் முதல்வரான ஜெயலலிதாவிற்கும் உண்மை தெரியாமல் ஏமாந்த பின்னர், அதன்பின் முதல்வரான கருணாநிதி கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையைத் திறந்த போது, 'அந்த' உண்மைகளை மறைத்து; 

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் முழு  குவிய வெளிச்சமும் மு.கருணாநிதிக்கே சொந்தமாகி விட்டது; 

என்பது சரியானால்,  அது தமிழ்நாடு 'பராசக்தியில்' இருந்து, ‘உண்மை திசையிலிருந்து திரும்பி பயணித்து போக்கின் அடுத்த கட்ட தவறான வளர்ச்சியா? என்ற கேள்வியும் இன்று எழுந்துள்ளது.

'அந்த' உண்மைகளும் நான் திட்டமிடாமலேயே, எனக்கு வந்தடைந்தவையாகும். 

சில வருடங்களுக்கு முன், சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த எனது மகனின் வற்புறுத்தல் காரணமாக,  மகன் குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்றதானது; 

மத்திய அரசு நினைத்ததை எல்லாம் சாதிக்க முடியாத அளவுக்கு, 'சட்டத்தின் ஆட்சி'யில் (Rule of Law), 1967 வரை, தமிழக அரசு எவ்வளவு வலிமையாக இருந்தது? என்பதை அறியும் வகையில்; 

என் கண்களைத் திறக்க காரணமான பயணமாக அமைந்தது. 

அந்த பயத்தின் போது, விவேகானந்தர் நினைவுச் சின்னமாக விளங்கும் பாறைக்கு படகில் பயணித்து, அங்கிருந்த புத்தக கடையில் கீழ்வரும் இரு நூல்களை வாங்கிய போதும், அந்நூல்களின் உள்ளே மேற்குறிப்பிட்ட கேள்விகளும், விடைகளும் அந்நூல்களில் இருக்கும், என்று நான் கற்பனை கூட செய்யவில்லை. 

1.       ‘The Story of the Vivekananda Rock Memorial’ – As told by Shri Eknath Ranade

 2. ‘Sadhana of SERVICE’ – Mananeeya Eknathji Ranade 

     'இந்துத்வா' ஆதரவாளர்கள் முன் வைக்கும் கோரிக்கைக்காக கூட, 'தேசியம்' மற்றும் 'இந்துத்வா' பிரியர்கள், 'சட்டத்தின் ஆட்சியை' வளைக்க விரும்பாத போக்கானது, லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தது வரையிலும், பக்தவச்சலம் தமிழக முதல்வராக இருந்தது வரையிலும், நீடித்ததை மேற்குறிப்பிட்ட நூல்கள் மூலம் அறிந்தேன். 

     விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி;

1962-இல் விவேகானந்தர் கன்னியாகுமரியில்  தியானம் செய்ததாக கருதப்பட்ட கடலில் இருந்தபாறையின் மேல் நினைவகம் அமைக்கும் நோக்கத்தில்: 

கன்னியாகுமரி பகுதியில் உள்ளவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்ட குழுவானது;

‘காஞ்சி மகா பெரியவர்’  சந்திரசேகரரை தமது ஆன்மீக குருவாக கொண்டு செயல்பட்ட‌ தமிழக முதல்வர் பக்தவச்சலம் 'சட்டத்தின் ஆட்சியில்' (Rule of Law) உறுதியாக இருந்ததன் விளைவாக‌ சந்தித்த தடைகள் காரணமாக, அவர்களின் முயற்சிகள் எல்லாம் முடங்கும் அபாயக்கட்டத்தை நெருங்கியது.

அந்த காலக்கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த ஏக்நாத் ரானடே, அந்த பொறுப்பிலிருந்து விலகி, விவேகானந்தர் நூற்றாண்டு விழாவை ஒட்டி, இன்றைய சமூகத்திற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில், விவேகானந்தரின் கருத்துக்களை தொகுக்கும் பணியில் மூழ்கியிருந்தார். அம்முயற்சியின் பலனே, இந்தியாவில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, மீண்டும் மீண்டும் மறுபதிப்புகளுக்கு உள்ளான 'Rousing Call to Hindu Nation ' நூல் ஆகும்.

அந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜி கோல்வால்கர் கீழ்வரும் காரணத்தால், ஏக்நாத் ரானடேயை கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவகம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்த விரும்பினார்.

புதுடெல்லியில் ஏக்நாத் ரானடேக்கு இருக்கும் தொடர்புகள் மூலம், கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவகம் ஏற்படுத்த தடையாக இருக்கும் தமிழக முதல்வர் பக்தவச்சலத்தையும், காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரையும், அந்த நினைவக முயற்சிக்கு ஆதரவாக மாற்றும் நோக்கில், ஏக்நாத் ரானடே வெற்றி பெற வாய்ப்புண்டு.

ஏக்னாத் ரானடே அந்த முயற்சியில் சந்தித்த நம்பமுடியாத தடைகளும், அதை அவர் எவ்வாறு முறியடித்து முன்னேறினார் என்பது தொடர்பான தகவல்களும்;

எந்த ஒரு இலட்சியத்தையும் அடையும் நோக்கில், சுயலாபமற்ற, 'ஈகோ' (Ego) சிக்கலற்ற உண்மையாக முயற்சிக்கும் எவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக ஏக்நாத் ரானடே விளங்குகிறார்;

என்பதை மேலே குறிப்பிட்ட இரண்டு நூல்களையும் படித்த பின், நான் உணர்ந்தேன்.

அந்த தடைகள் எல்லாம் நம்பமுடியாத அளவுக்கு,  'தேசியம்' மற்றும் 'இந்துத்வா' ஆதரவாளர்களிடம் இருந்து வெளிப்பட்டிருந்த சூழலில்;

1967இல் தமிழக முதல்வராக அண்ணா ஆன பின், அவருக்கும் ஏக்நாத் ரானடேக்கும் இடையில் நடந்த சந்திப்புகள் எல்லாம், அந்த தடைகளை கடந்து, ஏக்நாத் ரானடே தமது முயற்சியில் வெற்றி பெற எந்த அளவுக்கு உதவியது?  அது தொடர்பாக தி.மு.கவில் அண்ணாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இடம் பெற்றவர்களில், ஏன் அன்றைய அமைச்சர் கலைஞர் கருணாநிதி இடம் பெறவில்லை? முதல்வரான அண்ணா வாடிகன் சென்று போப்பை சந்தித்த போது; கோவா விடுதலை போராட்டத்தின் போது, போர்ச்சிகீசிய அரசால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் இருந்த ஆர்.எஸ்.எஸ் காரரான மோகன் ரானடேயை சிறையிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தது ஏன்?

உடல்நலக்குறைவில் சிக்காமல் அண்ணா நல்ல ஆரோக்கியத்துடன் முதல்வராக தொடர்ந்திருந்தால்;

அண்ணாவுக்கும் ஏக்நாத் ரானடேக்கும் இடையில் மலர்ந்திருந்த நல்லுறவானது; 

சுயலாப நோக்கின்றி 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு', திராவிட அரசியலை வளர்க்க விரும்பிய போக்கில்;

திராவிட அரசியலுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸிக்கும் இடையில் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பலன்கள் விளைந்திருக்க கூடிய நல்லுறவாக வளர்ந்திருக்கும்;

என்பது எனது ஆய்வு முடிவாகும். 

அகத்தில் சுயலாப கணக்குகளின்றி, தடைக‌ளைக் கண்டு அஞ்சி ஒதுங்காமல், முன்னேறி அரிய சாதனை படைத்த பின்னும், பாராட்டு, புகழ் போன்றவற்றை தவிர்த்து, தன்முனைப்பின்றி நல்ல முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்தவர் ஏக்நாத் ரானடே ஆவார். 

இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு உள்ளிட்டு எந்த கொள்கையின் ஆதரவாளராக இருந்தாலும், அகத்தில் சுயலாப கணக்குகளுடன் வாழ்பவர்களை எல்லாம், மனித இழிவுக்கு இலக்கணமான சமூக கிருமிகளாக கருதி, ஒதுக்காமல் அனுமதிக்கும்,   தனி மனிதர், குடும்பம், கட்சி, சமூகம் எல்லாம், அதற்கான 'இயற்கையின் தண்டனையிலிருந்து' தப்ப முடியாது என்பதும்;

திருக்குறள் (350) வழியில் அத்தகையோரை துணிச்சலுடன் ஒதுக்கி வாழ்பவர்கள் எல்லாம் நம்பமுடியாத அளவுக்கு 'இயற்கையின் அருளுடன்' வலிமை பெற்று;

'சமூக பொறியியல் வினை ஊக்கியாக' (Social Engineering Catalyst) சமூக மீட்சிக்கான முன்னோடிகளாக வாழ்கிறார்கள், என்பதும்;

அத்தகையோரின் எண்ணிக்கையானது தமிழ்நாட்டில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால்;

கட்சி, கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, சுயலாப நோக்கற்று பொது வாழ்வில் சாதித்து, பாராட்டு, புகழைத் தவிர்த்து வாழ்ந்து மறைந்த, ஏக்நாத் ரானடே போன்றவர்களை மாணவர்களின், படித்த இளைஞர்களின் பார்வை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் போக்கே;

தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழி வகுக்கும்.

சுயலாப நோக்கில், தன்முனைப்புடன் பயணிப்பவர்கள் இந்துத்வா ஆதரவாளர்களாக இருந்தாலும் சரி, எதிர்ப்பாளர்களாக இருந்தாலும் சரி; 

மேற்குறிப்பிட்ட இரண்டு நூல்களையும் படிக்கும்போது, அவர்களுக்குள் வெளியில் சொல்ல முடியாத குற்ற உணர்வு ஏற்பட்டால், வியப்பில்லை.

அந்த நோக்கில் தான் கீழ்வரும் கருத்தையும் பதிவு செய்தேன்.

‘'நடக்காது' என்று கன்னியாகுமரியில், 'விவேகானந்தர் நினைவக' திட்டத்தை தொடங்கியவர்களே கருதியிருந்த நிலையில்; 'அந்த தடைகளை'  எவ்வாறு முறியடித்து, ஏக்நாத் ரானடே (Eknath Ranade) சாதித்தார்? என்பதை, 'வாய்மையை' காவு கொடுக்காமல், அவரே பதிவு செய்துள்ளார்; ' The Story of the Vivekananda Rock Memorial’ என்ற நூலில். அதே போல், எந்த கொள்கையை பின்பற்றினாலும், பொதுவாழ்வில் எப்படி வாழ்ந்தால் சாதிக்க முடியும்? என்பது தொடர்பான 'அனுபவபூர்வமான வழிகாட்டும்' நூலையும் அவரே ழுதியுள்ளார். அந்த நூல் ‘ Sadhana of SERVICE’. (vkpt@vkendra.org)

மேற்கண்ட குறிப்பில் உள்ள தமிழக பா.ஜ.க தலைவர்கள் எல்லாம், குற்ற உணர்வின்றி, ஏக்நாத் ரானடே பற்றி பேச முடியுமா? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.’ (‘தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

அது மட்டுமல்ல, இன்று திராவிட அரசியலில் முக்கிய குறியீடாக இடம் பெற்றுள்ள கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உருவாவதற்கும் ஏக் நாத் ரானடே  தான் முக்கிய காரணமாவார்;

ஏக்நாத் ரானடேயின் கோரிக்கைக்கு செயல் வடிவம் கொடுத்து, அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஆவார்;

என்பது தொடர்பான தகவல்கள் கீழ்வரும் கட்டுரையில் வெளிவந்துள்ளன.

‘The idea of erecting the Thiruvalluvar statue was mooted by late Eknath Ranade (1914-1982), the venerable Sangh ideologue who was then president of Vivekananda Rock Memorial Committee and Vivekananda Kendra in Kanyakumari. The first model for the statue was given to the then-Tamil Nadu government by Ranade himself. The RSS icon had persuaded M G Ramachandran (MGR), the then-chief minister of Tamil Nadu, to agree to the installation of Thiruvalluvar statue.

Ranade, who had admirers across party lines, used the good offices of Prabhudas Patwari, the then-governor of the state, to make MGR agree to this proposal. The foundation stone for the statue was laid by Morarji Desai, the prime minister of India, in a ceremony on 15 April 1979, and the invitation was published in the name of Ranade and the Tamil Nadu government.
(https://swarajyamag.com/ideas/tamizh-between-historic-greatness-and-hysterical-hype )

1989இல் எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின் கருணாநிதி முதல்வரானார். முன்பு அவர் முதல்வராக இருந்த போது, கட்டி முடிக்கப்பட்ட‌ சென்னை 'வள்ளுவர் கோட்டத்தை' உருவாக்கிய கணபதி ஸ்தபதி, முதல்வர் கருணநிதிக்கு நெருக்கமானவர் என்பதால்;

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை திட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி மிகுந்த ஆதரவு நல்கினார்.

1991இல் முதல்வரான ஜெயலலிதா கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உருவாக்கும் திட்டத்தை, தமக்கு முந்தைய முதல்வராக இருந்த கருணாநிதியின் திட்டம் எனக் கருதி, அத்திட்டத்திற்கான நிதி ஒதுக்காமல், அத்திட்டத்தைப் புறக்கணித்தார்;

என்ற தகவலை, கணபதி ஸ்தபதி, அவர் மறைவிற்குப் பின் அவரது டிரஸ்டில் என்னை உறுப்பினராக போடும் அளவுக்கு அவருக்கு நெருக்கமான, என்னிடம் தெரிவித்தார். 

னாலும் கணபதி ஸ்தபதி மனம் தளராமல், தமது சொந்த நிதியையும், உழைப்பையும் செலவு செய்து, அத்திட்டமானது, முதல்வர் ஜெயலலிதாவின் அலட்சியத்தால் முடங்காமல் உயிர் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.

மீண்டும் 1996இல் முதல்வரான கருணாநிதி, அத்திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கி, முடித்து,

திறப்பு விழாவில், அத்திட்டத்தின் முழு குவிய வெளிச்சமும் தமக்கே கிடைக்குமாறு செய்து கொண்டார்;

தி.மு. ஆட்சியில் அவமதிக்கப்பட்ட டார்பிடோ ஜெனார்த்தனம், கி..பெ.விஸ்வநாதன் உள்ளிட்ட இன்னும் பல புலமையாளர்களை எல்லாம் தேடி, வரவழைத்து, மிகுந்த மரியாதை செய்து, ஆலோசனைகள் பெற்று முதல்வர் எம்.ஜி.ஆர்  ஆட்சியை நடத்திய பாதையிலிருந்து ஜெயலலிதா தடம் புரண்டு, எம்.ஜி.ஆரைப் போல, புலமையாளர்களை மதித்து ஊக்குவிக்காமல் அத்தகையோரின் வாடையின்றி, சரியான ஆலோசனை பெற வழியின்றி பயணித்ததை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.(http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_20.html ) 

அவ்வாறு அவர் பயணித்ததால், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உருவாக முக்கிய காரணமாக ஏக்நாத் ரானடேயும், எம்.ஜி.ஆரும் இருந்தார்கள்; 

என்ற உண்மையானது இருளில் மூழ்கி, முழு குவிய வெளிச்சமும் தி.மு. தலைவர் கருணாநிதி பெற, ஜெயலலிதா காரணமாகி விட்டார். 

அது போலவே தி.மு. தலைவர் கருணாநிதியின் செல்வாக்கில் அடிமைப்பட்டிருந்த தமிழை விடுவிக்கும் முயற்சிகளில் ஒன்றாக, எம்.ஜி.ஆர் இந்தியாவிற்கே முன்மாதிரியாக உருவாக்கியிருந்த தமிழ்ப்பல்கலைக்கழகமானது;

1989இல் கருணாநிதி முதல்வரான பின், 'எம்.ஜி.ஆரின் அந்த' பராமரிப்பின்றி நிதி நெருக்கடியில் சிக்கத் தொடங்கிய போக்கிலேயே;

1991இல் ஜெயலலிதா முதல்வராகி சாகும் வரை, அந்த போக்கிலேயே பயணித்தது; 

எம்.ஜி.ஆரால் மீட்கப்பட்ட தமிழானது, மீண்டும் 'கட்சி அரசியலுக்கு' அடிமைப்படும் வகையில்.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தரின் சிலையைப் போலவே, திருவள்ளுவரின் சிலையையும் ஒரு கோவில் போன்ற அமைப்பிற்குள் நிறுவும் திட்டத்தைத் தான், ஏக்நாத் நானடே முன்வைத்து, முதல்வர் எம்.ஜி.ஆர் அத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினரா? பின் 1989இல் முதல்வரான கருணாநிதியின் ஆட்சியில், அது மாற்றத்திற்குள்ளாகி, வெயிலிலும், மழையிலும் சிக்கி, உப்புக்காற்றில் ஏற்படும் பாதிப்புகளை அவ்வப்போது சரி  செய்யும் சிக்கலுக்குள்ளான சிலையாக இன்று காட்சி அளிக்கிறதா? என்பது தொடர்பாக இருட்டில் இருக்கும் உண்மைகள் எல்லாம், அடுத்து வெளிச்சத்திற்கு வந்தாக வேண்டும். 

பாரம்பரிய தொழில்நுட்பத்தில், கற்களால் ஆன சிலையின் பல பகுதிகள் படகில் கொண்டு செல்லப்பட்டு, சிமெண்ட் உள்ளிட்டு எந்த கலவைப்பூச்சுமின்றி ஒன்றுடன் ஒன்று பொருத்தப்பட்டு, சுனாமி அலையாலும் பாதிக்கப்படாத, சிலையின் உள்ளே ஒருலிப்ட்’ (Lift) இயங்கும் அளவுக்கு இடைவெளிவிட்டு (பின்லிப்ட்’ வேண்டாம் என்று தவிர்த்து) சிற்பக்கலையின் உயர் தொழில்நுட்ப சான்றான திருவள்ளுவர் சிலையானது, மேலே குறிப்பிட்ட மாற்றங்கள் காரணமாகவும், ஜெயலலிதாவின் ஏமாளித்தனத்தால் தி.மு. தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான குறியீடாகவும் மாறி, உலக அளவில் பெற வேண்டிய முக்கியத்துவம் இன்றி, அந்த சிலையானது, மேலே குறிப்பிட்ட குறைபாடுகளுடன் காட்சி அளிக்கிறது. 

அந்த சிலை உருவாக காரணகர்த்தாவாக இருந்த ஏக்நாத் ரானடே, அதற்கு செயல்வடிவம் கொடுத்த அடிக்கல் நாட்டிய எம்.ஜி.அரின் பங்களிப்புகளை நினைவு கூறும் வகையிலும், மேற்குறிப்பிட்ட  குறைபாடுகளில் இருந்து அந்த சிலையை மீட்கவும்; 

விவேகானந்தர் சிலைக்கு உள்ளதைப் போல, ஒரு கோவில் வடிவ அமைப்பினுள் அந்த சிலை இருக்குமாறுபுனருத்தாரண‌ம்’ (Redemption) செய்தல் சாத்தியமே ஆகும். கணபதி ஸ்தபதியின் மேற்பார்வையில் அந்த சிலையை செய்தவர்களும், கணபதி ஸ்தபதி அளவுக்கு புலமையுடையவர்களும் இன்றும் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், எம்.ஜி.ஆர் அன்பர்களும் முனைந்தால்,  அவர்களை ஒருங்கிணைத்து அப்பணிக்கு செயல் வடிவம் கொடுக்கும் பங்களிப்பும், எனக்கும் பிடித்தமான சாத்தியமே ஆகும். 

அண்ணாவுக்கும் ஏக்நாத் ரானடேக்கும் இடையில் மலர்ந்த நல்லுறவின் 'வரலாற்று வளர்ச்சியாக', அது அமையும். தாய்மொழி வழிக்கல்வியை ஆதரிக்கும் ஆர்.எஸ்.எஸ் துணையுடன், தமிழ்வழிக்கல்வியை மீட்கும் கூட்டு செயல்பாட்டிற்கும், அதுவே துவக்கமாக அமைந்தால் வியப்பில்லை. 

மத்தியில் பா.. ஆட்சியின் போது அமைச்சரவையில் தி.மு.இடம் பெற்று, தமது குடும்ப அரசியல் வளர்ச்சிக்கான பலன்களை அனுபவித்த போதே, தமிழ்நாட்டில் திராவிட அரசியலில் 'இந்துத்வா எதிர்ப்பு' என்பது செல்லாக்காசாக தொடங்கியது. 

‘1944இல் திராவிடர் கழகம் உருவாகி, பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் தடம்புரண்டு, உணர்வுபூர்வ போக்கில் சிக்கியது பற்றி ஏற்கனவே பார்த்தோம். ( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) அவ்வாறு தடம் புரண்டாலும், பெரியாரின் பிராமண எதிர்ப்புக்கும், கலைஞர் கருணாநிதியின் பிராமண எதிர்ப்புக்கும் பண்பு ரீதியில் வேறுபாடு உண்டு. ராஜாஜி உள்ளிட்டு எந்த பிராமணரையும் தனது தனிப்பட்ட பிரச்சினைக்காக, தனது கொள்கை ரீதியிலான பிராமண எதிர்ப்பைப் பெரியார் பயன்படுத்தவில்லை.அந்த வேறுபாடு மறைந்து, தனிநபரின் சுயநலத்திற்கு 'பார்ப்பன எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு' பயன்படும் போக்கானது செல்வாக்கு பெற்றதற்கு, அந்த 'தடம் புரண்டதானது' எவ்வளவு பங்களிப்பு வழங்கியது என்பதும் ஆய்விற்குறியதாகும்.அந்த வேறுபாடு மறைந்து, தனிநபரின் சுயநலத்திற்கும், தமிழ்வழி வீழ்ச்சிக்கும்,கனிவளங்கள் சூறையாடப்படும் ஊழல் கோரப்பசிக்கும், 'பார்ப்பன எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு' ஆனவை, 'தமிழ் இன உணர்வு' என்ற போர்வையில் பயன்படும் போக்கானது, செல்வாக்கு பெற்றதற்கு, அந்த 'தடம் புரண்டதானது', எவ்வளவு பங்களிப்பு வழங்கியது என்பதும் ஆய்விற்குறியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html ) 

எனவே 'இந்துத்வா எதிர்ப்பு' மற்றும் 'பிராமண எதிர்ப்பு' போன்றவை எல்லாம் 'திராவிட ஊழல் பாதுகாப்பு கவசங்களாக' பயன்பட்டு வரும் சூழலில்; 

அண்ணாவிற்கும், ஆர்.எஸ்.எஸ்காரரானஏக்நாத் ரானடாக்கும் இடையில் மலர்ந்த நல்லுறவினை வெளிச்சத்தில் கொண்டு வந்து, அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்தி; 

பிரிவினை நோயில் சிக்கிய 'தமிழர்' அடையாளத்தை மீட்டு, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பலன் தரும் வகையில், 'இந்திய தேசியத்துடன்' பிணைக்கும் முயற்சிகள் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன். 

இன்று தாய்மொழிவழிக்கல்வி மீட்பு முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டிருக்கும் சூழலில்;

அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி மீட்பு முயற்சியில்;

தமிழ்/திராவிட கட்சிகள் ஒத்துழைக்க முன் வருவார்களா? (‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil? Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil politics  ; http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html)

அல்லது கறுப்புக் குடையை பார்த்து வெறித்து ஓடும் அந்த கால மாடுகளைப் போல;

'இந்துத்வா' என்பதைக் கண்டு வெறித்து ஓடும் போக்கில் தொடர்ந்து பயணிப்பார்களா? ‘'இந்துத்வா எதிர்ப்பு'  தமிழ்நாட்டில்  'சமூக சோளக்கொல்லை பொம்மை? தப்பிக்குமா தமிழத்துவா?’ (http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

அது மட்டுமல்ல, 'பெரியார் இயக்கத்தில்' மார்க்சிய - லெனினிய புலமையுடன் கொள்கையாளனாக பயணித்த நான், கடந்த சுமார் 20 வருடங்களாக அறிவுபூர்வ விவாதத்தை எதிர்நோக்கி முன்வைத்துள்ள கொள்கைரீதியிலான குறைபாடுகளை எல்லாம் புறக்கணித்து, உணர்ச்சிபூர்வ போக்கில், 'பெரியார்' பிம்ப துணையுடன் இன்னும் எவ்வளவு காலம் தான் 'பெரியார்' கட்சிகள் உயிரோடு இருப்பதாக 'காட்டிக்கொள்ள'(?) முடியும்? (‘'தமிழ்வழிக் கல்வி மீட்சி' என்ற நோக்கில், 'சினர்ஜி' (Synergy) முறையில் ஒன்றுபட‌; 'பெரியார்' புழுதி ஒழிப்பு ஏன் உடனே தொடங்கப்படல் வேண்டும்?; htp://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_12.html )

2 comments:

  1. //பிற்காலத்தில் கலைஞரினுடைய திரைக்கதை வசனத்தோடு வெளிவந்து தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பையும் திருப்பத்தையும் ஏற்படுத்திய பராசக்தி திரைப்படத்தின் மூலக் கதாசிரியர் பாவலர். அந்தப் படம் நாடகமாக நடைபெறுகிறபோது அந்த நாடகத்தின் பெயர் – கதைத் தலைமகளான கல்யாணியினுடைய பெயர். இதை நாடகமாக பாவலர் நிறைய ஊர்களில் நடித்திருக்கிறார். கல்யாணியின் மூன்று அண்ணன்களில் மூத்தவராகவும் – நீதிபதியாகவும் வருகின்ற சந்திரசேகரன் என்ற பாத்திரத்தில் பாவலர் பாலசுந்தரம் நடிப்பாராம்.
    இது திரைப்படமாக வெளிவந்தபோது திரைப்பட வசதிகேற்ப பல மாற்றங்களை திரைக்கதை – ஆசிரியரான கலைஞரும் இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சுவும் செய்தார்களாம். பாவலர் அன்றைக்கு இருந்த பொருளாதார நெருக்கடியில் வெறும் மூவாயிரம் ரூபாய்க்கு கதை உரிமையை தயாரிப்பாளர் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாளுக்கு விற்று விட்டார்.
    (‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)
    சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை //http://www.keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/18806-2012-03-02-05-54-15

    ReplyDelete