'பாபநாசம்' சிக்னலின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக 'கோலமாவு கோகிலா'? (3);
தமிழ்நாட்டில் அடுத்து வரும் பொதுத் தேர்தலில், என்னென்ன எதிர்பாராத அதிசயங்கள் அரங்கேறும்?
‘சமூகத்தில்
தாய்மொழி, அதனுடன் பிணைந்த பாரம்பரியம், பண்பாடு போன்றவையெல்லாம் மனிதரின் மனங்களில் அவை தொடர்புள்ள தேவைகளையும்(Needs)
, ஈடுபாடுகளையும் (Interests) தோற்றுவித்து
வளர்த்து, சமூக ஆற்றலுக்கு பங்களிப்பு வழங்கி, எவ்வாறு ஆக்கபூர்வமான சமூக வாழ்வுக்கு
சமூக இழைகள்(social fibers) போன்றும், சமூகப்
பிணைப்புகள் (social bonds) போன்றும் செயல்படுகின்றன.’ என்பவை தொடர்பான எனது ஆய்வுகளை
ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும் (Social Fibers & Social Bonds)’ ; http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html
)
நமது
குடும்பம், நட்பு, சுற்றம், அமைப்புகள் உள்ளிட்டு நமது சமூக தொடர்புகள் எல்லாம், மேலே
குறிப்பிட்ட சமூக இழைகள் மற்றும் சமூக பிணைப்புகள் மூலமாகவே செயல்படுகின்றன. அந்த சமூக
செயல்பாட்டில், மனிதர்களின் மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலமாகவே
செயல்பாடுகளுக்கான ஆற்றலை (Energy) உருவாக்குகின்றன,
ஊழல்
பேர்வழிகளிடம் வெளிப்படும் சமூக ஆற்றலானது சமூகத்தை சீரழிக்கும் 'சமூக காங்கிரின்'
நோய் ஆகும். நாம் வசதியுடன் இருந்தால் வாலாட்டுவதும், வசதி குறைந்தால் இழிவுசெய்து
மகிழ்வதுமான போக்குகள் எல்லாம், 'சமூக காங்கிரின்' நோயாக வாழும் மனிதர்களிடம் வெளிப்படும்
அறிகுறிகளாகும். அத்தகையோரெல்லாம்
திருந்தாமல், நமது சமூக வட்டத்தில் நீடித்தால், 'சமூகத் தூண்டல்'(Social Induction) மூலம், நம்மையறியாமலேயே
நாமும் அந்த நோயில் சிக்கும் ஆபத்தும் இருக்கிறது.
‘நீரழிவு
நோயாளியின் காலில் 'காங்கிரின்' நோய் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு
காலை வெட்டி அகற்றாவிட்டால், அந்த நோயாளியின் உயிருக்கே ஆபத்தாகி விடும்.
(https://www.healthline.com/health/gangrene-diabetes ) அது போல 'சமூக காங்கிரின்'
நோயாக நம்மிடையே வாழ்பவர்களை எல்லாம் அகற்றாவிட்டால், நாமும் அவர்களைப்போலவே 'சமூக
காங்கிரின்' நோய்க்கிருமிகளாக சமூகத்தை சீரழிக்கும் பட்டியலில் இடம் பெறுவதைத் தவிர்க்க
முடியுமா?’ (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_24.html
)
தமிழ்நாட்டின்
மேக்ரோ உலகில் 'சமூக காங்கிரீன்' நோயுடன் வாழும் மனிதர்கள் அதிகமாகவும், மைக்ரோ உலகில்
வாழும் சாமான்யர்களிடம் அந்த நோயானது, ஒப்பீட்டளவில் குறைவு என்பதும் எனது அனுபவமாகும்.
எனவே தான் நான் மேக்ரோ உலக மனிதர்களில், அந்த நோயில் சிக்காதவர்களை, எனது அறிவு அனுபவ
அடிப்படைகளில் உறுதி செய்த பின்னரே, எனது சமூக வட்டத்தில் அனுமதித்தும், அந்த நோயில்
சிக்கிய மனிதர்களை வெளியேற்றியும் வாழ்கிறேன். அந்த போக்கில் இன்று என்னைச் சுற்றி
வாழும் மனிதர்களுக்கு நான் ஒரு சமூக பொறியியல் வினை ஊக்கியாக (Social Engineering
Catalyst) செயல்படுவதும் எனக்கு வியப்பைத் தந்துள்ளது. அவர்களும் என்னைப் போலவே வாழ
முற்படுகிறார்கள். அந்த போக்கில் எனக்கு தெரியாமல், இன்னும் பலர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்,
என்பதும் எனது யூகமாகும்.
அது
மட்டுமல்ல, இன்றைய மாணவர்களும், படித்த இளைஞர்களும் அவ்வாறு வாழ்பவர்களையே மதிக்கிறார்கள்,
என்பதும் எனது அனுபவமாகும்.
ஜெயலலிதாவின்
மரணத்திற்குப் பின், தமிழ்நாட்டின் கட்சிகளும், தலைவர்களும் கல்லூரி மாணவர்கள் மற்றும்
படித்த இளைஞர்கள் மத்தியில் வெறுக்கத்தக்க
கோமாளிகளாகி வருகிறார்களா? என்ற கேள்வியை ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டமானது வெளிப்படுத்தியது.
அதன்
தொடர்ச்சியாகவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள்
ஆதரித்த தி.மு.க டெபாசீட் இழந்தது.
1949 இல் தி.மு.க தோன்றி, மைக்ரோ உலகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர் மத்தியில் வேர் பிடித்து, அவரவர் சொந்த காசை செலவு செய்து
தி.மு.க வளர்ந்தது. அவ்வாறு தி.மு.க வளர்ந்த போக்கில், காங்கிரஸ் கட்சியானது, மேக்ரொ உலகில் இருந்த தமது
செல்வாக்கானது, மைக்ரோ உலகில் தி.மு.கவின் வளர்ச்சி மூலம் ஆபத்துக்குள்ளாகும் அபாயம்
பற்றி
சுதாரிக்காமல் இருந்ததாலேயே, தமிழையும், தமிழ் உணர்வையும்
தி.மு.க-
வானது
தமது சுயநல அரசியலுக்காக சிறை பிடித்து, தேசியத்திற்கு எதிராக வளர்க்க
முடிந்தது. அதன் தொடர்ச்சியாகவே, 1967இல், ராஜாஜியின் துணையுடன், தி.மு.க
ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் தொண்டர்களுக்கு
குவார்ட்டர், பிரியாணி, பணம்,
கட்சியில் கீழிருந்து மேல் வரை, சர்க்காரியா குறிப்பிட்ட 'அறிவியல் ஊழல்' வழிகளில்
பணம் சேர்த்தல் உள்ளிட்ட ஆதாய அரசியலில்
தி.மு.க சிக்கியது.
அந்த போக்கில்,, 1967க்கு முந்தைய காங்கிரசை விட இன்னும் மோசமாக மேக்ரோ உலகிலேயே ஆதாய அரசியல் பலத்தில் பயணித்தது; நேரு குடும்ப அரசியல் பாணியில் இன்னும் மோசமான குடும்ப அரசியலில் தி.மு.க பயணித்தது. (‘நேரு குடும்ப வாரிசு அரசியல் சந்திக்காத சிக்கலில்; கருணாநிதி குடும்ப வாரிசு அரசியலானது, ஏன் சிக்க நேர்ந்தது?’; http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html
)
மைக்ரோ உலகில் சாமான்யர்கள், கல்லூரி மாணவர்கள், படித்த இளைஞர்களுடன் தொடர்பற்ற நிலையில், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில்,
தி.மு.கவானது மற்ற கட்சிகளைப் போலவே ஓரங்கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, அர்.கே.நகர் இடைத் தேர்தலில் டெபாசீட்டை தி.மு.க இழந்தது; தி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்டு இந்துத்வா எதிர்ப்பு கட்சிகளின் ஆதரவிருந்தும்.
ஆர்.கே.நகர்
தேர்தலுக்குப் பின், கட்சிகளும் தலைவர்களும் தாம், எந்த கூட்டணியில் பயணித்தால் வெற்றி பெற முடியும்?
என்று குழம்பும் அளவுக்கு, அமாவாசைகளின் புரட்சியில் சிக்கி தமிழ்நாடானது பயணிக்கிறது.
(http://tamilsdirection.blogspot.com/2017/04/1967.html
)
தமிழ்நாட்டில்
அடுத்து வரும் பொதுத் தேர்தலில், என்னென்ன எதிர்பாராத அதிசயங்கள் அரங்கேறும்? தமிழ்நாட்டில்
இன்றுள்ள ஆதாய அரசியல் சுவடின்றி அழிந்து, அநேகமாக இந்தியாவிற்கே வழிகாட்டியாக, என்ன
வகையான அரசியல் தமிழ்நாட்டில் அரங்கேற வாய்ப்புள்ளது.
என்று
ஆர்வமும், உழைப்பும் உள்ளவர்கள் எல்லாம், கீழ்வருபவற்றை கணக்கில் கொண்டால், அந்த ஆய்வானது
அதிகம் பலனளிக்கும்.
1. அனைத்து கட்சிகளிலும் அனைத்து மட்டங்களிலும் உள்ள அமாவாசைகள்;
2. 'அரசியல் அமாவாசை செயல்நுட்பத்தில்' செல்லரித்து, இன்று 'திராவிடக் கட்சிகளிடமிருந்து விலகி, வாக்கு சேகரிக்கும் வலைப்பின்னலானது 'புத்திசாலி' உள்ளூர் மேய்ப்பர்களிடம் சிக்கி, திராவிடக் கட்சிகளின் மேல் மட்டத் தலைவர்களை கோமாளிகள் ஆக்கி வரும் போக்கு;
3. மைக்ரோ உலகமாக உள்ள கிராமங்களில் எல்லாம் பொதுவாழ்வு வியாபாரிகளின் சாயமானது வெளுக்கத் தொடங்கியுள்ள போக்கு;
4. தமிழை திராவிட அரசியலில் சிறைப்படுத்தி, அதன் விளைவாக அரசியல் நீக்கத்தில் ஆதாய அரசியல் வலிமையில் பயணித்து வரும் கட்சிகள் எல்லாம், ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்குப் பின், 'அந்த' சிறையிலிருந்து தமிழ் மொழியானது விடுதலையாகும் வாய்ப்புகளும், அதன் காரணமாக, ஆட்சியில் இருந்த/இருக்கும் கட்சிகளை அடிவருடி பிழைத்து வந்த பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் சருகாகி உதிரும் வாய்ப்புகளும்;
5.. சமூக ஆற்றல்களில்
(Social Energy) தி.மு.கவிற்கும், அ.இ.அ.தி.முகவிற்கும் பண்பு ரீதியிலான வேறுபாடு; .(http://tamilsdirection.blogspot.com/2017/04/
)
6. கட்சிகளுக்கு தொடர்பில்லாமல் சென்னை வெள்ள நிவாரணத்திற்கு முன்பிருந்தே, விளம்பரமின்றி பிரமிக்கும் வகையில், கிராமங்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் உதவிகள் புரிந்து வரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் படித்து நல்ல வேலையில் உள்ள இளைஞர்கள்;
மேலே குறிப்பிட்டவைகளின் சார்பு வலிமைகளின்
(Relative Strengths) தொகுவிளைவிலேயே
(Resultant), தமிழ்நாடு பயணித்து வருகிறது; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் நம்பமுடியாத அதிர்ச்சிகளை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு வழங்கத்
தொடங்கியுள்ளது.
அந்த போக்கினை விளங்கி, அடுத்து வரும் அதிர்ச்சிகளைக் கணிக்க, கீழ்வருபவை உதவக்கூடும்.
சர்க்கரியா ஊழலில் சிக்கிய தி.மு.க அரசினை, அன்றைய பிரதமர் இந்திராவின் நெருக்கடிகால ஆட்சியில், 'டிஸ்மிஸ்' செய்து, தி.மு.க தலைவர்களை சிறையில் அடைத்து, பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.கவை மோசமாக தோற்கடித்து, இந்திரா காங்கிரசுக்கு பெரிய வெற்றியை தமிழ்நாடு தந்தது; வடமாநிலங்களில் இந்திரா காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்து, ஆட்சியையும் இழந்த போக்கில்.
‘அன்று சர்க்காரியா கமிசனை இந்திராகாந்தியின் ‘பழிவாங்கல் நடவடிக்கை’ என்று சித்தரித்தவர்கள் எல்லாம், அதே இந்திராகாந்தியால் அதே ஊழல் குற்றவாளிகள் தப்பித்ததை கண்டிக்கவில்லை. அதே போக்கில், சசிகலா குடும்பம் சந்தித்து வரும் வருமான சோதனைகளை எதிர்ப்பவர்களும், 'கூலிக்கு’ மாரடிக்கிறார்களா? அல்லது சுயலாப நோக்கின்றி எதிர்க்கிறார்களா? என்பது அவரவர் மனசாட்சிக்கே தெரியும்.
நெருக்கடி காலத்திலும், தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்புக்கு தமிழ்நாட்டு மக்கள் இந்திரா காங்கிரசுக்கு எவ்வளவு பெரிய வெற்றியைத் தந்தார்கள்? என்பதைக் கணக்கில் கொள்ளாமல்;
தேசியக் கட்சிகளின் சுயநல அரசியலில், தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பானது, பலிகடா ஆகும் போக்கினை துவக்கி, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி பயணித்த திசையில்; (‘'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட பெற்றோர்' பட்டியலில் ஜெயலலிதா? 'திராவிட பொதுவாழ்வு வியாபார குடும்ப அரசியல்' சங்கமமாகி முடிவை நோக்கி ?’ ; http://tamilsdirection.blogspot.com/2017/11/cognitiveskills.html
)
தமிழ்நாட்டின் ஊழல் பிரமீடை ஒழிக்காத திசையில், பிரதமர் மோடி பயணித்தால், ஆர்.கே.நகர் பாணியிலேயே தமிழ்நாட்டின் தேர்தல்கள் எல்லாம் நடைபெறும்; தமிழக பா.ஜ.க-வானது,
இனி
வரும் தேர்தல்களிலும் 'நோட்டா கட்சி' என்ற 'லேபிளுடன்' தான் பயணிக்க நேரிடும். 1944இல் தொடங்கிய தி.க-வின் உணர்ச்சிபூர்வ அடித்தளத்தினை அபகரித்து, 1949இல் தி.மு.க வானது உருவாகி வளர்ந்தது. ஈ.வெ.ரா அவர்களின் தாய்மொழி, தமிழ் பற்றிய நிலைப்பாடுகளை எல்லாம் கண்டிக்காமலேயே, தமிழையும், தமிழ் உணர்வினையும் அந்த உணர்ச்சிபூர்வ போக்கிலேயே, திராவிட அரசியலில் தி.மு.க சிறைப்படுத்தியது.(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html) அதன் விளைவாக அரசியல் நீக்கத்தில்(depoliticize), தமிழும், தமிழுணர்வும் முதலில்லாத மூலதனங்கள் (capital without investments) ஆகி, ஆதாய அரசியல் வளர்ந்து, ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின், அரசியல் அமாவாசைகளின் புரட்சியில் தமிழ்நாடு சிக்கியது. அந்த போக்கில், அணையும் விளக்கில் வெளிப்படும் பிரகாசம் போலவே, வரும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள், எதிர்பாராத ஆர்.கே.நகர் பாணியிலேயே வெளிப்படும் என்பதும் எனது கணிப்பாகும்.
ஆர்.கே.நகர் பாணியில், அடுத்து வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முதல்வர் யாராக இருந்தாலும், 'அந்த' முதல்வருக்கு அச்சுறுத்தலாக, எவ்வாறு மலேசியாவின் முன்னாள் பிரதமர் நசீப் துன் ரசாக் இருப்பார்? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.. (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_15.html )
ஆர்.கே.நகர் பாணியில், அடுத்து வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முதல்வர் யாராக இருந்தாலும், 'அந்த' முதல்வருக்கு அச்சுறுத்தலாக, எவ்வாறு மலேசியாவின் முன்னாள் பிரதமர் நசீப் துன் ரசாக் இருப்பார்? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.. (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_15.html )
(வளரும்)
No comments:
Post a Comment