Thursday, February 8, 2018


நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும், தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும் (2);


நேரு குடும்ப வாரிசு அரசியல் சந்திக்காத சிக்கலில்;



கருணாநிதி குடும்ப வாரிசு அரசியலானது, ஏன் சிக்க நேர்ந்தது?


Note: Due to BLOGGER Tech problems, replace '.in' in the links to '.com', if the links failed to open in the new window.


இந்தியாவில் 'கட்சி அரசியல்' என்பதன் அடித்தளமான நிறுவன கட்டமைத்தல்(System Building) என்பதின் பலகீனமான போக்குடன், தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html )

இந்தியாவில் தேசிய அளவில் உள்ள நேரு குடும்ப வாரிசு அரசியலும், தமிழ்நாட்டில் உள்ள கருணாநிதி குடும்ப வாரிசு அரசியலும்;

தேசிய அரசியலிலும், திராவிட அரசியலிலும்  'கட்சி கட்டுமான' (Party Building) போக்கில் ஏற்பட்ட சீர்குலைவினோடு தொடர்புடையவை ஆகும்.

இந்திய விடுதலைக்கு முன்பேயே, அந்த 'கட்சி கட்டுமான சீர்குலைவு' நோயானது, 'இந்திய தேசிய கட்டுமான' (Indian Nation Building) சீர்குலைவுக்கும் காரணமானது;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

நேரு, இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் என்று நேரு குடும்ப வாரிசில் சிக்கியே காங்கிரஸ் கட்சி பயணித்து வருவதற்கும்;

கருணாநிதி, ஸ்டாலின், என்று அதே குடும்ப வாரிசில் சிக்கியே தி.மு. பயணித்து வருவதற்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு.

கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலின்,  கனிமொழி, அழகரி என்று ஒரே குடும்பத்திற்குள் அதிகாரப் போட்டிகள் நடந்து, இன்று ஸ்டாலினின் மகன் உதயநிதியும் களத்தில் இறங்கி, சிக்கலைக் கூட்டி வருவது போல;

அது போன்ற சிக்கலின்றியே  நேரு குடும்ப வாரிசு அரசியலானது, இன்று வரை தொடர்ந்து வருகிறது. அழகிரியையும், கனிமொழியையும் தி.மு.கவில் அனுமதிக்காமல், ஸ்டாலின் மட்டுமே வாரிசாக தொடர்ந்திருந்தால், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி 'குடும்பச் சிக்கலின்றி' பிரதமரானது போலவே, கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராகியிருப்பார்; என்பதும் எனது கணிப்பாகும்.

நேரு குடும்ப வாரிசு அரசியல் சந்திக்காத சிக்கலில், கருணாநிதி குடும்ப வாரிசு அரசியலானது ஏன் சிக்க நேர்ந்தது? என்ற கேள்விக்கு விடை விளங்க வேண்டுமென்றால்;

இரண்டு வாரிசு அரசியல்களும் அரங்கேறிய பின்னணியில் இருந்த வேறுபாடுகளை ஆராய வேண்டும்.

இந்திய அரசியலில் காங்கிரஸ் என்ற கட்சியானது, விதிமுறைகளுக்குட்பட்ட கட்டமைப்பாக வளர்ந்த போக்கில், சுபாஷ் சந்திர போஸ் தேர்தலில் வெற்றி பெற்றும், காங்கிரஸ் தலைவராக செயல்பட முடியாமல், பதவி விலகி, இந்தியாவை விட்டே வெளியேறி, விடுதலைப் போராட்டத்தில் தமது பங்களிப்பை தொடரும் அளவுக்கு, அந்த விதிமுறைகளுக்குட்பட்டு வளர்ந்து வந்த‌ காங்கிரஸ் கட்டமைப்பில் சீர்குலைவினை காந்தி ஏற்படுத்தி;

பின் அதே செல்வாக்கின் பின்பலத்தில், நேருவின் செல்வாக்கும் வளர்ந்து, இந்திய விடுதலையின் போது, வல்லபாய் பட்டேலை ஓரங்கட்டி, நேரு பிரதமான பின்னணியில் தான்;

காங்கிரசானது நேரு குடும்பவாரிசு அரசியலில் சிக்கியது.

விதிமுறைகளுக்குட்பட்ட கட்டமைப்பாக வளர்ந்து வந்தகாங்கிரஸ் கட்சியில், காந்தி தமது செல்வாக்கை தவறாக பயன்படுத்தி ஏற்படுத்திய சீர்குலைவே, நேரு குடும்ப வாரிசு அரசியலானது, பிற்காலத்தில் அரங்கேற, 'விதையானது'.

1944இல் உருவான திராவிடர் கழகத்தில், .வெ.ரா அவர்கள் தமக்கு வாரிசாக தமது அண்ணன் மகன் சம்பத்தை உருவாக்கி வந்த போக்கில், .வெ.ராவின் செல்வாக்கிலிருந்து சம்பத்தைப் பிரித்து தமது செல்வாக்கில் கொண்டு வந்த முயற்சியில், அண்ணா தோற்றிருந்தால்;

1949இல் தி.மு. தோன்றியிருக்குமா? என்பதும் சந்தேகமே.

பின் தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களின் ஆதரவுடன் சம்பத்தை கட்சியிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் கருணாநிதி தோற்றிருந்தால், கட்சியில் நெடுஞ்செழியனுக்கு அடுத்த நிலை என்ற அளவுக்கு கருணாநிதி உயர்ந்திருக்க முடியுமா?

அண்ணாவின் மரணத்திற்குப் பின், கூவத்தூர் பாணியில் அடைத்து வைக்கவில்லையென்றாலும்;

அதே பாணியில் ஆதித்தனார் போன்றவர்களின் துணையுடன் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவினை 'வாங்கியதில்' வெற்றி பெற்றிருக்கவில்லையென்றால், கருணாநிதி முதல்வராகி, தி.மு.கவும் காங்கிரசைப் போல, குடும்பவாரிசு அரசியலில் சிக்கியிருக்குமா?

விதிமுறைகளுக்குட்பட்ட கட்டமைப்பாக திராவிடர் கழகத்தை உருவாக்காமல், காந்தியைப் போல இரட்டை வேடப் போக்கின்றி, துணிச்சலாக தன்னை கட்சியில் 'சர்வாதிகாரி' என அறிவித்து, தனது அண்ணன் மகன் சம்பத்தை வாரிசாக அறிவித்த போக்கில், .வெ.ரா அவர்கள் அண்ணாவிடம் தோற்றதே;

கருணாநிதி குடும்ப வாரிசு அரசியலானது, பிற்காலத்தில் அரங்கேற, 'விதையானது'.

விதிமுறைகளுக்குட்பட்ட கட்டமைப்பாக காங்கிரசைப் போல கூட, முளை விட்டு, காந்தி சீர் குலைக்கும் வரை, வளர்ந்த போக்கிற்கு இடமின்றி;

திராவிட கட்சி அரசியலானது அதன் தோற்றத்திலேயே, அந்த அளவுக்கு முளை கூட விடாமல், தலைவர்களின் செல்வாக்கிலேயே 'நின்ற' ( வடிவேலு பாணியில், 'பில்டிங் ஸ்ட்ராங்க், நோ பேஸ்மெண்ட்'- Building Strong- No Foundation ) கட்சிகளாக 'வளர்ந்தன'(?).

காங்கிரசில் இன்றும் கூட கட்சித் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டால், அதை அவமதிப்பதாக கருதும் போக்கானது, தேசிய அளவில் இல்லை, என்பதற்கும்;

திராவிடக் கட்சிகளில் தலைவர்களின் பெயர்களைச் சொல்வதை அவமதிப்பாக கருதும் போக்கிற்கும்;

மேற்குறிப்பிட்ட வேறுபாடே முக்கிய காரணமாகும்.

விதிமுறைகளுக்குட்பட்ட கட்டமைப்பாக காங்கிரசைப் போல கூட, முளை விட்டு, காந்தி சீர் குலைக்கும் வரை, வளர்ந்த போக்கிற்கு இடமின்றி, தி.கவின் தோற்றத்திலேயே, அந்த அளவுக்கு முளை கூட விடாமல், 'கட்சி அரசியல்' என்பதன் அடித்தளமான நிறுவன கட்டமைத்தல்(System Building) அடித்தளமின்றி, தலைவர்களின் செல்வாக்கு பலத்திலேயே 'நின்ற' போக்கில்;

தி.மு.க‍வும் அண்ணா பலத்திலேயே பயணித்த‌தால், தி.மு.கவில் மிகுந்த பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிப்படுத்திய ஆதரவினை ஓரங்கட்டி, 'திராவிட நாடு பிரிவினையை கை விடும் கோரிக்கையை' அண்ணாவால் நிறைவேற்ற முடிந்தது; 


என்பதை அந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற, புதுக்கோட்டை தமிழாசிரியர் மதிவாணன் என்னிடம் தெரிவித்தார்.

அண்ணாவிற்குப் பின், தமது பலத்திலேயே பயணிக்குமாறு கருணாநிதி ஏற்பாடு செய்து, குடும்ப வாரிசு அரசியலில் கட்சியைச் சிக்க வைக்க முடிந்தது. இந்திரா காந்திக்கு பிறகு செல்லரித்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கட்டுமானம் இருந்தாலும், ஒரு நேரத்தில் நேரு குடும்பத்தில் ஒருவருக்கு மேல் நுழைந்து 'அதிகார போட்டியில்' ஈடுபடுவதானது, கட்சிக்கே தற்கொலையாக முடியும், என்று அறிவுறுத்தி தடுக்கும் செயல்பாட்டுத் தடைகள் (Functional Checks) எல்லாம், காங்கிரசில் இருந்து வருவதைப் போல, தி.மு.கவிற்கு இல்லை.

அதனுடன்
கூடுதலாக, தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லின் பொருளானது, காலனிய சூழ்ச்சியில் திரிந்து, அதில் .வெ.ரா அவர்கள் சிக்கி, தி. தொடங்கியதானது, தமிழ்நாட்டின் சீரழிவிற்கு விதையாகி, தி.மு.கவுடன் 'நேசமான' போக்கில், 'பெரியார் சமூக கிருமிகள்' வளர இடமளித்தது;

என்பதை, என்னைப் போன்ற பேராசிரியர்களை 'முட்டாள் ஏணிகளாக்கி', எவ்வாறு 'பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, கம்யூனிஸ்ட்' ஆதரவாளராக காட்டிக்கொண்டு, 'பொதுத் தொண்டராகி'(?), அந்த சமூக கிருமிகள் வளர முடிந்தது? என்ற ஆய்வின் மூலமே நான் கண்டுபிடிக்க நேர்ந்தது.

இன்று கட்சியின் கட்டுமானங்கள் சிதைவுக்குள்ளாகி, கொள்கைகள் எல்லாம் செல்லாக்காசாகி, ஆதாய தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடம் சிக்கி, தமிழ்நாட்டு அரசியலானது சினிமா செல்வாக்கில் அடிமைப்பட்டு பயணிக்கிறதா? கட்சி கட்டுமான சிதைவு போக்கிற்கும், 'இந்தியர்' என்ற தேசக்கட்டுமானமானது, இந்தியாவிலேயே தனித்துவமாக தமிழ்நாட்டில், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக்குழப்பங்களின் ஊடே அதிக சிதைவிற்குள்ளானபோக்கிற்கும் தொடர்பு இருக்கிறதா? ( ‘இந்தியாவில்வித்தியாசமானதமிழ்நாடு; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html  )

மேற்குறிப்பிட்டவையெல்லாம் பெரும்பாலும் 50 வயதுக்கும் அதிகமானவர்களிடையில் மட்டுமே செல்வாக்குடன் உள்ள நிலையில்;
அவற்றிலிருந்து அந்நியமாகி, இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் எந்த அடையாள திசையில் பயணிக்கிறார்கள்? கட்சிகளில் உள்ளதைப் போன்ற, 'மபியா'(Mafia) சமூக செயல்நுட்பத்துடன் ஒப்பிடும் அளவுக்கு, வெளியில் தெரியாத, பாதுகாப்பு வளையங்கள், மாணவர்கள் மத்தியிலும் தொத்து நோயாக வளர்ந்து, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றங்களும் அவர்கள் மத்தியிலும் வளர்ந்து வருகின்றனவா?

அந்த நோய்களில் சிக்காத மாணவர்கள் மத்தியில், 'இந்தியர்' என்ற தேசக்கட்டுமானமானது, அவர்களிடம் முளை விட்டு வளர்ந்து வருகிறதா? தமிழும், தமிழ் உணர்வும் கேலிப்பொருள் வரிசையில் இடம் பெற்று வருகிறதா?( ‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (7); தமிழும், தமிழ் உணர்வும்,  மாணவர்களின்  கேலிப்பொருள் வரிசையில் ?’; http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_28.html  )

அடையாளச் சிதைவின் மூலமாக வளர்ந்த அரசியல் நீக்கம் முடிவுக்கு வந்து, தமிழ்நாடு எந்த திசையில் பயணிக்கும்? என்ற கேள்விக்கான விடை தெரிய, மேலே குறிப்பிட்ட கேள்விகளை ஆராய்வது என்பது அவசியமாகி விட்டது.’ (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html )

கட்சி என்பதானது மனிதர்களை உள்ளடக்கியது. மனிதன் தனது தேவைகளை (Needs) உணர்ந்து, மனதில் அந்த தேவைகள் எல்லாம் ஈடுபாடுகளாக (Interests) மாறிய பின், அந்த ஈடுபாடுகள் மனிதனின் செயலைத் தூண்டுகின்றன‌. தமது நலனை விட கட்சி நலனே முக்கியம் என்று கருதுபவர்கள் மிகப் பெரும்பான்மையாக இருந்து, ஒரு கட்சி உருவாகி வளரும்போதே, எளிதில் சுயநலத்திற்கு வளைக்க முடியாத சட்ட திட்டங்களுடனும், உரிய தகுதி, திறமை அடிப்படைகளிலேயே பொறுப்புகளுடனும், கட்சி கட்டமைத்தலானது, உரிய வலுவான அடித்தளத்துடன் வலிமையாக வளரும். அதற்கு மாறாக, தலைவரின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம், அடித்தளமின்றி, தலைவரின் வீழ்ச்சி காரணமாகவோ, எதிர்பாராத சமூக மாற்றங்கள் காரணமாகவோ, எந்த நேரத்திலும் மரணிக்கும் ஆபத்தில் உள்ள கட்சிகள் ஆகும். குடும்ப அரசியல் நோயில் சிக்கி பயணிக்கும் கட்சிகள் எல்லாம் அந்த வகையை சாரும். அது போன்ற கட்சிகளில் சுயலாப நோக்கின்றி வாழும் உறுப்பினர்களின் கொள்கைப் பற்றெல்லாம், தலைவர் வழிபாட்டுப்போக்கில், அறிவுபூர்வ அணுகுமுறையில் இருந்து விலகி, உணர்ச்சிபூர்வமாக சீரழிவதை தவிர்க்க முடியாது.

தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் நோயில் சிக்காமல் பயணித்து வரும் கட்சிகள் பா..கவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆகும். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களை சீர் குலைத்து வரும் சீன இறக்குமதிகளை கம்யூனிஸ்டுகள் இதுவரை எதிர்க்கவில்லை. ஆனால் பா.. எதிர்த்து வருகிறது. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இந்துத்வா எதிர்ப்பானது, சமூக கோளக்கொல்லை பொம்மையாகி வரும் போக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பாதகமாகவும், பா..கவுக்கு சாதகமாகவும் அமையும்.(http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_4.html) ஆனால் பா..கவானது 'திராவிட செருப்பு அரசியல்' நோயிலிருந்து விடுபடாத வரையில், அந்த சாதகமின்றியே பயணித்தாக வேண்டும், என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். ( http://tamilsdirection.blogspot.in/2018/01/2-same-side-goal.html )

திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் ஆதாய அரசியல் வளர்ந்து, 'அரசியல் நீக்கத்தில்' (Depoliticize)  தமிழ்நாடு சிக்கிய போக்கில்;

'வாக்கு சேகரிப்பில் திருப்பு முனையாக;

வாக்குக்கு சில நூறு ரூபாய்களாக இருந்ததானது, சில ஆயிரங்களாக 'திருமங்கலம் ஃபார்முலா' வில் உயர்ந்தது.

ஆட்சியாளர்கள் பலமணி நேரம் மின்வெட்டுக்கு பிறகும், அதிக விலையுள்ள சொத்துக்களை எவரும் 'சுதந்திரமாக' விற்கவும், வாங்கவும் முடியாத நிலையை உருவாக்கிய பிறகும், அதிக வருமானம் தரும் தொழில், சினிமா உள்ளிட்ட வியாபரங்களிலும் 'அந்த'  சுதந்திரத்தைப் பறித்த பிறகும்;

திருமங்கலம் ஃபார்முலாவை மட்டுமே நம்பி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாது;

என்பதை அடுத்து வந்த சட்ட மன்ற தேர்தல் உணர்த்தியது.

அதாவது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான கோபமோ, அல்லது செயல்பூர்வமாக 'நிரூபித்து' மக்களின் நம்பிக்கையை ஈட்டும் கட்சியோ வெளிப்படாத வரையில்;

திருமங்கலம் ஃபார்முலாவை மட்டுமே நம்பி தேர்தலில் வெற்றி பெறலாம்.' என்பதையும்;

'பிரதமர் மோடியின் பணநீக்கமும், ஊழல் ஒழிப்பும் தமிழ்நாட்டில் அரசியல் ஊழலை அதிகரிக்கவே வழி செய்து விட்டது;

என்பதை பா...வை நோட்டாவிடம் தோற்கச் செய்தும்;

'திருமங்கலம் ஃபார்முலாவானது', அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக, கட்சி அரசியலை விட்டு விலகிப் போய்விட்டதை;

தி.மு.கவை டெபாசீட் இழக்கச் செய்ததன் மூலமும்;

மேலே குறிப்பிட்ட 'இலட்சிய வெறி வீரர்களின் வலைப்பின்னலுடைய' சுயேட்சையின் வசமே தமிழ்நாடு சிக்கும்; ஊழல் பிரமீடு ஒழிக்கப்படாத வரையில்;'

என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.( http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html   )

பணத்துக்கு விலை போகாத, பெரும்பாலும் நடுத்தர, ஏழை, கிராமப்புறஜெயலலிதாவின் விசுவாசிகள் எல்லாம் ஓபிஎஸ்ஸை குவியமாக கொண்டு வளர்ந்த போக்கானது;( http://tamilsdirection.blogspot.in/2017/02/digital-age-2017.html

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்பிற்குப் பின் சீர் குலைந்து வருகிறது.

நானறிந்த வரையில் பணத்திற்கு விலை போகாத தி.மு. 'வாக்கு வங்கி'யானது, பெரும்பாலும் 50 வயதுக்கும் அதிகமானவர்களை உள்ளடக்கியதாகும். அவர்களிடையே தி.மு. குடும்ப அரசியல் அதிகாரப் போட்டிகள் காரணமாக இருந்த வெறுப்புணர்வானது, உதயநிதியின் நுழைவிற்குப் பின் இன்னும் மோசமாகி இருந்தால் வியப்பில்லை.

தமிழ்நாட்டில் ஊழல் பிரமீடு ஒழிக்கப்படவில்லையென்றால், பா..கவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் நோட்டாவுடன் தான் போட்டி போட நேரிடும்.

ஆர்.கே.நகர் பாணியில் தேர்தல் கமிசனுடன் 'கண்ணா மூச்சி' விளையாடி, அதிக பணத்தை, நம்பிக்கையான வலைப்பின்னலின் மூலம், எந்த அளவுக்கு திறமையாக விநியோகிக்கிறார்களோ, அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள்;

திருமங்கலம் ஃபார்முலா அரங்கேறியது தெரியாமல், சரத்குமார் கட்சியானது அந்த தேர்தலில் டெபாசிட் இழந்தது போல, அதே வழியில், அந்த ஃபார்முலாவின் அடுத்த கட்ட வளர்ச்சியாக 'ஆர்.கே.நகர் ஃபார்முலா' வெற்றி பெற்றுள்ள சூழலில், தேர்தலை சந்திக்கும் புதிய கட்சிகளும் டெபாசீட் இழப்பார்கள்.

அதே நேரத்தில், நெருக்கடி கால ஆட்சியில், தி.மு., தி. உள்ளிட்ட கட்சிகளின் பெரும்பாலான தலைவர்களை சிறையில் அடைத்தும், அடுத்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இந்திரா காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதற்கு;

தமிழ்நாட்டில் நெருக்கடி கால ஆட்சியில் ஊழல் பெருமளவு குறைந்தது மட்டுமின்றி, வழக்கத்திற்கு மாறாக, இரயில்களும் கால தாமதமின்றி ஓடும் அளவுக்கு  வெளிப்பட்ட மாற்றங்களே முக்கிய காரணங்களாக அமைந்தன.

பிரதமர் மோடி அரசானது, தமிழ்நாட்டில் ஊழல் பிரமீட்டினை ஒழித்தால், அந்த வரலாறு திரும்பவும் வாய்ப்பிருக்கிறது. 'திராவிட ஊழல் பாதுகாப்பு மையங்கள்' பா.ஜ.கவிலும் இருந்தால், அது சாத்தியமாகுமா? சாத்தியமாகாது எனில், இயற்கையின் போக்கில், தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பு சுனாமி உருவானால், அதில் ('பெரியார் சமூக கிருமிகளும்' கூட குளிர் காயும் அளவுக்கு, இந்துத்வா எதிர்ப்பினை 'சமூக கோளக்கொல்லை பொம்மையாக்கி வரும்) திராவிடக் கட்சிகளுடன் சேர்ந்து பா.ஜ.கவும் சுவடின்றி அழிவதிலிருந்து தப்பிக்க முடியுமா?

தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது சொந்த பணத்தில் உதவ முற்பட்டாலும், அந்த பகுதி 'திராவிட' கட்சிகளின் தாதாக்களின் செல்வாக்கை அது பாதிக்குமானால், நாம்  அவர்களின் அச்சுறுத்தல்களையும், தாக்குதலையும் எதிர் கொள்ளவும் வாய்ப்புண்டு;

என்பதை சென்னை வெள்ள நிவாரண உதவிகளின் போது, வெளிப்பட்ட தாக்குதல்கள் உணர்த்தியுள்ளன.

தமிழ்நாட்டில் ஊழல் பிரமீட்டினை ஒழித்தால் தான், அந்த 'திராவிட' தாதாக்கள் எல்லாம் செல்லாக்காசாகி, சுய சம்பாத்தியமுள்ள நேர்மை விரும்பிகள் எல்லாம் அரசியலுக்கு வருவார்கள்; அரசியல் நீக்கமும் முடிவுக்கு வரும். அதன் பின் தான் தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளும் 'திராவிட' நோய்களிலிருந்து விடுபட்டு, சரியான கட்சி கட்டுமான திசையிலும், தமிழ்நாடானது  பிரிவினை நோயிலிருந்து 'தமிழர்' அடையாளத்தை விடுவித்து, பரிமாற்ற பலன் அடிப்படையில் (Mutually Beneficial) 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இணக்கமாகி, தேச கட்டுமானமும் சரியான திசையிலும் வளரும்.

No comments:

Post a Comment