'அந்த ஓட்டப்பந்தயப் புலி'யின் வாலைப் பிடித்த 'முட்டாள்' புத்திசாலிகள்' (5)
தமிழ்வழி மரணப் பயணம் பற்றி சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும், நமக்குள்ள யோக்கியதை?
‘நாட்டில் நடக்கும் அநீதிகளைக் கண்டு, சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும் ஒரு யோக்கியதை வேண்டும். யோக்கியதை இல்லாதவர்கள் எல்லாம் அவ்வாறு மீடியா வெளிச்சத்துடன் 'நடிக்க' அனுமதிப்பதானது, அந்த நாட்டிற்கே இன்னும் அதிக கெடுதலை விளைவிக்கும்.’ என்பதை ஏற்கனவே பார்த்தோம்..(https://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_12.html)
அது போலவே, தமிழ்வழிக் கல்வியின் மரணப் பயணம் பற்றி சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும், ஒரு யோக்கியதை வேண்டும். யோக்கியதை இல்லாதவர்கள் எல்லாம் அவ்வாறு மீடியா வெளிச்சத்துடன் 'நடிக்க' அனுமதித்ததானது, தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மரணப் பயணத்தினை வேகப்படுத்தியுள்ளது.
'அந்த' யோக்கியதையைப் பற்றிய கவலையின்றியும், ‘தமிழ் அழிவு சுனாமி அறிகுறிகள் பற்றிய கவலையின்றியும், ‘நாமும், நமது குடும்பமும் பிழைத்தால் போதும்’ என்று நாம் வாழ்கிறோமா? அதன் விளைவாக, இன்னும் 2 தலைமுறைகளில், நமது வாரிசுகள் எல்லாம், தமிழில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியாத, தமிழ் வேரழிந்த, உலக அகதிகளாக வாழ்வதை, தவிர்க்க முடியுமா?’ (‘‘தமிழ் அழிவு சுனாமி’யிலிருந்து தமிழை மீட்க முடியுமா?’; http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post.html
)
அவ்வாறு வாழ்ந்து கொண்டு, நமது குழந்தைகள் ஆங்கிலவழியில் படிப்பதைப் போல, அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கும் அந்த வாய்ப்பினை தமிழக அரசு வழங்குவதை, நாம் எதிர்த்தால், அதில் நேர்மையிருக்கிறதா?
மேலே குறிப்பிட்டது போன்ற எதிர்ப்புகள் எல்லாம், தமிழ்வழிக்கல்வி ஆதரவுக்கு பலகீனம் மட்டுமல்ல; தமிழும், தமிழ் உணர்வும் கேலிப் பொருளாகும் அபாயத்திற்கும் வழி வகுத்து வருகிறது. ( http://tamilsdirection.blogspot.com/2015/06/ )
“அரசு பள்ளிகளில், குறைந்து வரும் மாணவர்கள் சேர்க்கையை தவிர்க்கும் வகையில், ஆங்கிலவழிக்கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.” (http://www.dinamalar.com/news_detail.asp?id=707353
)
அரசுப் பள்ளிகள் எல்லாம் படிக்க மாணவரின்றி மூடப்பட்டு வரும் போக்கினைத் தடுக்கும் நோக்கில், தமிழக அரசு ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகப்படுத்தி வருவதை, குக்கிராமங்கள் வரை ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) மூலம் ஊடுருவி வரும், தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகள் நடத்தும் கல்வி வியாபாரிகள் எல்லாம் தமக்கு 'பரிச்சயமான' வழிகளில் கெடுக்கவே முனைவார்கள். அதற்கு உதவும் வகையில், தமிழக அரசின் அந்த முயற்சியை எதிர்ப்பது தவறாகும்.
காமராஜர் முதல்வராக இருந்து, ஆயிரக்கணக்கில் தமிழ்நாடெங்கிலும் அரசுப் பள்ளிகளை திறந்து, மதிய உணவையும் அறிமுகப்படுத்தினார். கிறித்துவப் பள்ளிகளில் படிக்கும் எழை இந்துக் குடும்பங்களின் பிள்ளைகள் எல்லாம் மதமாற்றத்திற்கு, அந்த கல்வியே கருவியாகி வருகிறதா? ஆம் எனில், கீழ்வரும் தகவலை நாம் புறக்கணிக்க முடியாது.
1967 தேர்தலில் காமராஜரைத் தோற்கடிக்க கிறித்துவ மிசனரிகளும் முயற்சித்தார்கள்;
என்ற தகவல் அண்மையில் வெளிவந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது. ( https://www.youtube.com/watch?v=5MOmh6TB_Xk
) அவ்வாறு தோற்கடித்தன் விளைவாக, காமராஜர் புதிதாக திறந்த பள்ளிகள் மட்டுமின்றி, அதற்கு முன்பு இருந்த அரசுப் பள்ளிகளும், படிக்க மாணவரின்றி மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.
தி.மு.கவை ஆதரித்த கிறித்துவ மிசனரிகளின் எதிர்ப்புக்குள்ளான, முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்தார். உடனே தினமணி நாளிதழில் சுமார் 15 தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் கூட்டாக அதைக் கண்டித்து, அறிக்கை வெளியிட்டார்கள். அவ்வாறு அந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்களின் குடும்பப் பிள்ளைகள் எல்லாம் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கையில், ஏழைக் குழந்தைகளுக்கும் அந்த வாய்ப்பினை அரசு தருவதை, அவர்கள் எல்லாம் எதிர்ப்பதில் நேர்மையிருக்கிறதா? என்ற வகையில், நான் எழுதிய மடலும், அப்போது தினமணியில் வெளிவந்தது.
அவ்வாறு 'கூழுக்கும் ஆசை (தமது
குடும்பப் பிள்ளைகள் ஆங்கிலவழிக்கல்வியில்), மீசைக்கும் ஆசை (தமிழ்வழிக்கல்வி ஆர்வலராக
'மீடியா வெளிச்சத்தில்')' என்று வாழ்பவர்களை எல்லாம் ஒரு வகை மனநோயாளிகளாக, 'ஓடுக்கப்பட்டவர்களுக்கான
கல்விமுறை' (Pedagogy_of_the_Oppressed) என்ற நூல் அடையாளம் காட்டியுள்ளது. (https://en.wikipedia.org/wiki/Pedagogy_of_the_Oppressed
) அது மட்டுமல்ல, அத்தகையோரால், ‘சொந்த காசில் சூன்யம்’ வைத்துக் கொள்பவர்களின் நாடாக தமிழ்நாடு மாறி வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.(http://tamilsdirection.blogspot.com/2017/07/blog-post_16.html
) தமிழ்நாட்டில் தமிழின் பெயரால் 'டிரஸ்ட்' ஆரம்பித்து, அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபடும் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் மேலே குறிப்பிட்ட நபர்கள் எல்லாம் பங்கேற்று, அந்த மோசடியை கெளரவமாக மறைக்க உதவும் கெளரவ முகமூடிகளாக செயல்படுவதானது, தமிழுக்கு கேடாகாதா? (‘The payments to a trust’s beneficiaries could be used in the laundering process because these payments do not have to be justified as a payment for a transfer of assets or service rendered.’ ;https://www.capgemini.com/wp-content/uploads/2017/07/The_Growing_Threat_of_Money_Laundering.pdf
& https://www.indiatoday.in/opinion/mc-rajan/story/unmasking-of-a-literary-heir-87453-2010-12-21
)
தமிழ்வழிக்கல்வியின் மரணபயணத்திற்கு 'வினை ஊக்கியாக' (Catalyst), தமது குடும்பப் பிள்ளைகளை விளையாட்டுப்பள்ளி முதலே, ஆங்கிலவழிக்கல்வியில் படிக்க வைத்துக் கொண்டு, 'தனித்தமிழ்நாடு' ஆதரவாளர்களாகவும், விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களாகவும், அரசியல் கொள்ளையர்களுக்கு நேசமாகவும், தமிழ்நாட்டில் வலம் வருவது சரியா?(‘தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்’; http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html)
மேலே குறிப்பிட்டவாறு, 'சுயலாப' கள்வர்களாகப் பயணிப்பவர்களை நோக்கி, 'தேரா தமிழா?' என்று கேள்வி எழுப்ப வேண்டிய காலமும் வந்து விட்டது.
‘1970களில் தொடங்கிய ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சி காரணமாக விளைந்த, தாய்மொழி அடிப்படையிலான அடையாளச் சிதைவே, சாதி அடையாளமானது, வரம்பு மீறிய சாதி வெறியாக, ஒரு வகை போதையாக, பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே, வளர்ந்ததற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2016/07/fetna.html )
‘தமிழ்நாட்டில் விளையாட்டுப் பள்ளி(Play School) முதல் ஆங்கில வழியில் படித்து, இன்று +2 மற்றும் கல்லூரி மாணவர்களாயிருக்கும் பலருக்கு, தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாது, என்பது தமிழ் அழிவு சுனாமி அறிகுறியாகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post.html ) சமூகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி அறிமுகமாவதானது, தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணமானது இறுதிக்கட்டத்தினை அடைந்து வருவதன் முன்னறிவிப்பு ஆகும்.
மேலே குறிப்பிட்டவாறு, 'சுயலாப' கள்வர்களாகப் பயணிப்பவர்களை நோக்கி, 'தேரா தமிழா?' என்று கேள்வி எழுப்ப வேண்டிய காலமும் வந்து விட்டது.
‘1970களில் தொடங்கிய ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சி காரணமாக விளைந்த, தாய்மொழி அடிப்படையிலான அடையாளச் சிதைவே, சாதி அடையாளமானது, வரம்பு மீறிய சாதி வெறியாக, ஒரு வகை போதையாக, பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே, வளர்ந்ததற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2016/07/fetna.html )
‘தமிழ்நாட்டில் விளையாட்டுப் பள்ளி(Play School) முதல் ஆங்கில வழியில் படித்து, இன்று +2 மற்றும் கல்லூரி மாணவர்களாயிருக்கும் பலருக்கு, தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாது, என்பது தமிழ் அழிவு சுனாமி அறிகுறியாகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post.html ) சமூகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி அறிமுகமாவதானது, தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணமானது இறுதிக்கட்டத்தினை அடைந்து வருவதன் முன்னறிவிப்பு ஆகும்.
தமிழ்வழிக்கல்வியின் (எனவே) தமிழின் மரணத்திற்குப் பின், தமிழ்நாட்டில் தமிழர்கள் எப்படி வாழ நேரிடும்? என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா?
(5); தமிழின் மரணத்திற்குப் பின், தமிழ்நாட்டில் தமிழர்கள்?’ ; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_3.html
& http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_14.html
)
‘விருப்பு வெறுப்பின்றி, திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் அந்த ஆய்வை மேற்கொள்வதில் தான் தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சி இருக்கிறது. அதற்கு வாய்ப்பில்லை என்றால்,
2100-இல் தமிழ்நாடு இருக்கும. தமிழ் மொழியும், தமிழ்ப் பாரம்பரியமும், பண்பாடும் இழந்த தமிழர்கள், தமிங்கிலீசர்களாகி விதி விலக்குகள் தவிர்த்து, பெரும்பாலும் தரகர்களாகவும், திருடர்களாகவும் வாழ, தமிழ்நாட்டில் குடியேறிய பிற மாநிலத்தவர், வெளிநாட்டினர் வசம் அறிவு உழைப்பும், உடல் உழைப்பும், அசையாச் சொத்துக்களில் பெருமளவும் இருக்கும்.
தமிழின், தமிழர்களின், மீட்சிக்காக எழுதப்பட்ட இது போன்ற பதிவுகள் எல்லாம், தமிழ் மொழியின், பாரம்பரியத்தின், பண்பாட்டின் மரண சாட்சியங்களாகக் கருதப்பப்படும் நிலை வரலாம்.’ ( http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_15.html
)
‘தனது அகத்தில், குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட தமது சமூக வட்டத்தில், திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும், சமூக மாற்றதிற்கான போராட்டத்தை, முன்னெடுக்கும் மனிதர், சந்திக்க வேண்டிய ஆபத்துகளை, நன்கு விளக்கி, வழிகாட்டியுள்ள நூல்
'Pedagogy of the oppressed'.
அதற்கான போராட்டத்தை நடத்தாமல், தனது 'பாதுகாப்பு வளையத்தை'
(comfort Zone) மேற்குறிப்பிட்ட நூலில் விளக்கியுள்ளவாறு, இழிவான சமரசங்களுடன் உறுதி செய்து, 'புறத்தில்' முற்போக்கு வேடமிட்டவர்கள் முன் நின்றதே, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது என்பதும் என் கருத்தாகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2015/12/
)
எந்த நாட்டிலும் தன்மானம் கெட்ட புலமையாளர்களின் ஆதரவின் துணையுடனே தான், சுயலாப கள்வர்கள் எல்லாம், தலைவர்களாக தலையெடுத்து, அந்த நாட்டை சீரழிக்க முடியும். ‘தமிழ்நாட்டில் தமது குடும்பப் பிள்ளைகளை தமிழ்வழியில், குறைந்த பட்சம் ஆரம்பக் கல்வி வரையிலாவது படிக்க வைக்காமல், ஆங்கில வழிக்கல்வி ஊக்குவிப்பு சமூக கிருமிகளாக, பொது அரங்கில் வலம் வரும் இரட்டை வேட திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்களை, 'தீண்டாமைக்கு' உட்படுத்தி, நான் பயணிக்கிறேன்; தமிழின் மீட்சிக்கு பங்களிப்பு என்று கருதி………………………….. தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் 'பெரியார்'/தமிழ் ஆதரவாளர்களின் குழந்தைகள் எல்லாம் சரளமாக தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாமல் வளர்வதானது, மன்னிக்க முடியாத சமூக குற்றம், என்பதும் எனது கருத்தாகும். ‘ (http://tamilsdirection.blogspot.com/2018/06/blog-post.html
)
‘இன்றுள்ள சூழலில் 5ஆவது வரை, தமிழ் வழியிலும், அதன்பின் ஆங்கில வழியிலும் குழந்தைகளை படிக்க வைப்பதே புத்திசாலித்தனம் ஆகும். தமிழ்வழியில் அடிப்படைக் கல்வியை முடித்து, 10 வயதுக்கு மேல், ஆங்கிலவழி பயிலும் மாணவர்கள் எல்லாம், 10 வயது வரை, தாய்மொழியில்லாத ஆங்கிலவழியில் படித்த மாணவர்களை விட, நன்கு படிப்பார்கள் என்பதையும், கீழேயுள்ள ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.
1. ‘தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்’
2. ‘Children Learn Better in
Their Mother Tongue; Advancing research on mother tongue-based multilingual
education’; http://www.globalpartnership.org/blog/children-learn-better-their-mother-tongue
3. ‘All the international forums like UNESCO,
the World Bank, World Declaration on ‘Education for All’ (EFA), the UNO General
Assembly’s Convention on the Child’s Rights etc has stressed to educate
children at least at primary level using mother tongue as medium of instruction.
Because researches have shown that mother tongue-based schooling significantly
improves learning.’; http://www.isaet.org/images/extraimages/P1214011.pdf
4.‘when learners start school
in a language that is still new to them, it leads to a teacher-centred approach and reinforces
passiveness and silence in classrooms. This in turn suppresses young learners’
potential and liberty to express themselves freely. It dulls the enthusiasm of
young minds, inhibits their creativity, and makes the learning experience
unpleasant. All of which is bound to have a negative effect on learning
outcomes.’
Angelina Kioko is a professor
of English and Linguistics at United States International University, Nairobi,
Kenya. https://www.britishcouncil.org/voices-magazine/why-schools-should-teach-young-learners-home-language
1950-களிலிருந்தே, யுனெஸ்கோ(UNESCO)
உள்ளிட்டு, மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. (http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post.html
)
‘இந்த ஆய்வுகளும், விவாதங்களும் தமிழ்நாட்டில் உள்ள படித்த புத்திசாலிப் பெற்றோர்களாக உள்ள பிராமணர்களின் பார்வைக்குச் செல்லுமானால், முதலில் அந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளவை சரியா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். உறுதிப்படுத்தியபின், தங்கள் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளைத் தாய்மொழி வழியில் படிக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பெற்றோர்கள் மத்தியில் அப்படிப்பட்ட ஆர்வம் வெளிப்பட்டுள்ளதை அறிந்தவுடன், சென்னையில் புகழ் பெற்ற 'பத்மா சேஷாத்திரி' போன்ற கல்விக் குழுமங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ்வழி, தெலுங்கு வழி, இந்தி வழி என்று 5ஆம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்வியும், 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக் கல்வியும் இருக்குமாறு வகுப்புகள் துவங்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள படித்த புத்திசாலிப் பெற்றோர்களாக உள்ள பிராமணர்களின் குடும்பப் பிள்ளைகள் அடிப்படைக் கல்வியைத் தமிழ்வழியில் படிக்க ஆரம்பித்தவுடன், அவர்கள் வழியில் பிராமணரல்லாத படித்த பெற்றோர்கள் தமது குடும்பப் பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள். அதன்பின் 'தமிழ், தமிழுணர்வு, பகுத்தறிவு, திராவிட'க் கட்சித் தலைவர்களும் முக்கிய நபர்களும் தங்கள் குடும்பப் பிள்ளைகளையும் தமிழ்வழியில் படிக்க வைப்பார்கள். அந்த போக்கு கிராமங்களிலும் பரவ, தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களில் படிக்க மாணவரின்றி மூடப்பட்ட/மூடப்பட்டு வரும் ஆயிரகணக்கான அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றாக செயல்பட ஆரம்பிக்கும். தமிழின் மரணப்பயணம் தடுத்து நிறுத்தப்படும்.
இதில் வியப்பென்னவென்றால், மேற்கூறிய வாய்ப்பின் சாத்தியம் பற்றி, கல்லூரி மாணவர்கள் முதல் வயதான பிராமணரல்லாதோரிடமும், பெரியார் ஆதரவாளர்களிடமும் நான் கேட்ட போது, விதி விலக்கின்றி அனைவருமே, 'பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்வழியில் படிக்க வைத்தால், மற்றவர்கள் அனைவரும் உடனே தங்கள் பிள்ளைகளையும் தமிழ்வழியில் படிக்க வைப்பார்கள்' என்று கருத்துத் தெரிவித்தார்கள்.’ (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_19.html
)
மேலே குறிப்பிட்ட திசையில் தமிழ்நாடானது, பயணிக்கத் தொடங்கி விட்டது;
என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள 'சிக்னல்' வருமாறு:
‘இப்போது இது கற்பனை. ஆனால் விரைவில் நிஜமாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழ்வழிக்கல்வி மீட்சி
திராவிடர் கழகம் - ஆர்.எஸ்.எஸ் இணைந்து நடத்தும் கருத்தரங்கம்
தமிழ்வழியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரை கெளரவித்தல்:
தாய்மொழிவழிக்கல்வி பலன்கள் பற்றிய உலக ஆய்வுகளை தொகுத்து புத்தகமாக திராவிடர்கழகம் - ஆர்.எஸ்.எஸ் இணைந்த ‘தமிழ்வழிக்கல்வி மீட்சி அமைப்பு’ சார்பாக வெளியிடல்;
முதலில் சென்னையிலும், பின்னர் மாவட்ட தலைநகரங்களிலும் இந்நிகழ்ச்சிகளை நடத்துதல்;
------------
கீழ்வருவதை படித்தபின், மேலே குறிப்பிட்ட கற்பனையானது நிஜமானால் வியப்பில்லை, என்பது தெளிவாகும்........தமிழ்வழிக்கல்வி மீட்சியில். அது போல 'பெரியார்' ஆதரவாளர்களும்;
ஆர்.எஸ்.எஸின் தாய்மொழிவழிக்கொள்கையில் நம்பிக்கையுள்ள பிராமணர்களும், பிராமணரல்லாத ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களும்;( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) ஒன்று சேர்ந்து 'தமிழ்வழிக்கல்வி மீட்சி' கோரிக்கையை இப்போது முன்னெடுத்தால்;
அடுத்து வரும் கல்வியாண்டு தொடக்கத்தில், தமிழ்வழிக்கல்வி மாணவர் சேர்க்கை அதிகரிப்பில் அதன் வெற்றியானது வெளிப்படத் தொடங்கும் (‘தமிழ்வழிக்கல்வி மீட்சி: சரியான விவாதம் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும்;'துக்ளக்' துவக்கி வைத்தது. 'விடுதலை' முன்னெடுக்குமா (1)?’;
http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none.html )
ஆர்.எஸ்.எஸின் தாய்மொழிவழிக்கொள்கையில் நம்பிக்கையுள்ள பிராமணர்களும், பிராமணரல்லாத ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களும்;( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) ஒன்று சேர்ந்து 'தமிழ்வழிக்கல்வி மீட்சி' கோரிக்கையை இப்போது முன்னெடுத்தால்;
அடுத்து வரும் கல்வியாண்டு தொடக்கத்தில், தமிழ்வழிக்கல்வி மாணவர் சேர்க்கை அதிகரிப்பில் அதன் வெற்றியானது வெளிப்படத் தொடங்கும் (‘தமிழ்வழிக்கல்வி மீட்சி: சரியான விவாதம் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும்;'துக்ளக்' துவக்கி வைத்தது. 'விடுதலை' முன்னெடுக்குமா (1)?’;
http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none.html )
‘‘மக்கள் தன்மானமிழந்தால், ஊழல்வாதிகளிடம் அரசு சிக்கி, அந்த நாடு அழியும்; மக்களுக்கு தன்மானம் வந்தால், அந்த ஊழல்வாதிகள் ஒழிவார்கள்; ஊழல் சொத்துக்கள் பறிமுதல் மூலம் அந்த நாடும் வளரும்;
என்பதை மலேசியா இன்று நிரூபிக்கிறது; நாளை தமிழ்நாடு நிரூபிக்கும்; தமிழ்நாட்டிலும் தன்மானம் இருக்கிறது என்று.’ (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_10.html )
'நாளை தமிழ்நாடு நிரூபிக்கும்; தமிழ்நாட்டிலும் தன்மானம் இருக்கிறது என்று';
என்று எந்த துணிச்சலில் நான் கணித்தேன்?’ என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/search?updated-max=2018-08-15T02:24:00-07:00&max-results=7
)
தமிழர்கள் தன்மானமும் அறிவும் உள்ள புத்திசாலிகளாக மாறி வரும் போக்கில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் துக்ளக்கின் துணையோடு, தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணமானது தடுத்து நிறுத்தப்பட்டு, புத்துயிர் பெறும் போக்கும் துவங்கி விட்டது.
அந்த போக்கில், அரசின் ஆரம்பப் பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள ஆங்கிலவழிக்கல்வியை அகற்றி, தமிழ்வழிக்கல்வியை மீண்டும் அரங்கேற்றுவதும் எளிதில் நடக்கக்கூடியதே. ஆனால் கல்வி வியாபாரிகளின் தனியார்ப் பள்ளிகளில், அதற்கான எதிர்ப்பு கிளம்புவதும் எதிர்பார்க்கக் கூடியதே.
ஆனால் பத்மா சேஷாத்திரி போன்ற பள்ளிகளில்
ஆரம்பக்கல்வியில்(Primary education), குழந்தைகளின் புலன் அறி திறனை வளர்க்கும் நோக்கில்
(Cognitive Skills Development), குழந்தைகளின் தாய்மொழிவழிக்கல்வியானது சென்னையில் அறிமுகமாகி விட்டால், வேறு வழியின்றி சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள தனியார்ப் பள்ளிகளும் அந்த போக்கில், பயணித்தாக வேண்டிய சமூக நெருக்கடி உருவாகும். எனவே தமிழ்வழிக் கல்வியும் (எனவே தமிழும்) மீளும் காலமானது அதிக தொலைவில் இல்லை.
No comments:
Post a Comment