Tuesday, June 26, 2018


.வெ.ரா அவர்களின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் பற்றி; இனி துக்ளக்கில் மட்டுமே தொடரும்


இது வரை 'விழிக்காத பெரியார் ஆதரவாளர்கள்' எல்லாம் இனி விழிக்க வாய்ப்பில்லை

 

தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியுமா

சுயலாப நோக்கற்ற, அல்லது பாதுகாப்பின்மை (insecurity) நோயில் சிக்காமல், .வெ.ரா அவர்கள் வாழ்ந்ததைப் போல, வாழும் 'பெரியார்' ஆதரவாளர்கள் எண்ணிக்கையில் மிக குறைவு என்பது எனது கணிப்பாகும்

தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய தெளிவின்றி .வெ.ரா அவர்கள் பயணித்ததால், தமிழ் மொழி, இலக்கியங்கள் உள்ளிட்டு தமிழரின் ஆணிவேர்கள் எல்லாம் சிதைவுக்கு உள்ளாகி, தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் எவ்வாறு சீரழிந்தது?

என்பது தொடர்பான எனது பதிவுகளை, அத்தகையோர் எல்லாம் அறிவுபூர்வமாக பரிசீலிக்கத் தொடங்கி விட்டார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் தங்களின் சமூக பங்களிப்பை நெறிப்படுத்திக் கொள்வதும், அவர்களின் பின்னூட்டங்கள் அடிப்படையில், எனது சமூக பங்களிப்பை நெறிப்படுத்திக் கொள்வதும் தொடங்கியுள்ளதானது, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழி வகுக்கும்.


தமிழின், சமூகத்தின், பொதுநலனுக்கும், 'செல்வாக்கான தொடர்புகள்' மூலம் 'செல்வாக்குடன்'(?) வாழும் தமது சுயநலனுக்கும் மோதல் வரும் சூழலில், தமது சுயநலனுக்காக, 'அந்த' பொதுநலனைக் காவு கொடுத்து, 'இலாவகமாக அம்பலமாகாமல் முற்போக்கு யோக்கியராக' வாழ்பவர்களையும், நான் 'அனுபவங்கள்' மூலம் அடையாளம் கண்டு, எனது சமூக வட்டத்தில் இருந்து, அத்தகையோரை அகற்றியே வாழ்கிறேன்; அவர்களின் 'உதவிகள்'(?) தூண்டில் மீன்களாகும் அபாயத்தையும் உணர்ந்தே. (http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_27.html )

இரட்டைவேடப் போக்கில் 'பொதுநல வீரர்களாக' வாழ்பவர்களை எல்லாம், 'அம்பலமாகாமல் காப்பாற்றி வந்த பாதுகாப்புகள்' எல்லாம் எரிந்து சாம்பலாகும் அளவுக்கு, கட்சிகளின் வாடையின்றி பயணிக்கும் சாமான்ய தமிழர்கள், மாணவர்கள், படித்த இளைஞர்கள் மூலமாக, மீட்சிக்கான சமூக வெப்பமானது 'வேகமாக' அதிகரித்து வருகிறது. 

எனது பதிவுகளை எல்லாம் ஆழ்ந்து படிக்காமல், மேலோட்டமாக சிலவற்றை மட்டும் படித்து, 'கீறல் விழுந்த ரெக்கார்டைப் போல', 'பெரியார்' ஆதரவாளராக நான் பயணித்திருந்த எனது கடந்த கால கருத்துக்களை, இப்போது நினைவூட்டி வரும் மடல்களை படித்த பின்;

எனது பதிவுகள் மூலமாக, இது வரை 'விழிக்காத பெரியார் ஆதரவாளர்கள்' எல்லாம் இனி விழிக்க வாய்ப்பில்லை, என்று கருதுகிறேன். எனக்கு அதிகரித்து வரும் இசை ஆய்வு தொடர்பான பணிகளும், எனது ஆற்றல் செயல்பாட்டினை அதிகம் சிக்கனப்படுத்த வேண்டிய நெருக்கடியையும் அதிகரித்து வருகின்றன.

எனவே .வெ.ரா அவர்களின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் பற்றி நான் எழுதும் கடைசி பதிவு (Blog Post) இதுவே ஆகும். துக்ளக் இதழில் எனது கட்டுரைகள் தொடராக வெளிவரும் போது, எல்லா தரப்பிலிருந்தும் வெளிப்படும் விமர்சனங்களை எல்லாம், 1944க்கு முன் வெளிவந்த 'குடிஅரசு' பாணியில் அணுகுவேன்

மேலே குறிப்பிட்ட எனது கணிப்பிற்கு விதி விலக்காக, ஈ.வெ.ராவைப் போலவே, தமது 'அறியாமை வரை எல்லைகள்' (ignorance limitations) பற்றிய தெளிவின்றி பயணிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்களும் இருக்கலாம். மேலே குறிப்பிட்ட தெளிவின்றி பயணிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்களும், மேலே குறிப்பிட்ட 'சமூக வெப்பத்தில்'  சிக்கும் அபாயமும், எனக்கு தெரிகிறது. அத்தகையோரை கருத்தில் கொண்டு, கீழ்வருவதை நினைவூட்டலாம், என்று எனக்கு தோன்றியது

அந்த நினைவூட்டலானது, அவர்களில் ஒரு சிலரையாவது, .வெ.ரா தொடர்பான எனது பதிவுகளை எல்லாம் பொறுமையாக ஆழ்ந்து படிக்கும் விளைவினை ஏற்படுத்தும் வாய்ப்பினையும், நான் தவிர்க்க விரும்பவில்லை.

‘'பெரியார்' கொள்கையாளர்கள் உணர்ச்சிபூர்வ போதையில் ஒரு வகையிலான 'அறிவுபூர்வ மயக்கத்தில்' பயணித்து வருவதை, பெங்களூர் குணாவின் நூல்கள் மூலம், நான், 'பெரியார்' கொள்கையாளராக பயணித்தபோதே, கண்டுபிடித்தேன்.

'தனித் தமிழ்நாடு' போதையில், பெங்களூர் குணாவின் நூல்களில் '.வெ.ரா எதிர்ப்பு' இருந்தது தெரியாமல், அவரின் நூல்களுக்கு நன்கொடை வழங்கி, ஆதரித்து, அவருடன் நெருக்கமாகி, பல 'பெரியார்' கொள்கையாளர்கள் பயணித்தார்கள்.

நான் 'திருச்சி பெரியார் மையம்' மூலம், குணாவின், '.வெ.ரா எதிர்ப்பை', அறிவுபூர்வமாக எதிர்த்த போதும், மேற்குறிப்பிட்ட 'மயக்கத்தில்' பயணித்தவர்களில், யார்? யார்? தெளிவு பெற்றார்கள்? அதே மயக்கத்தில் தொடர்ந்தார்கள்? என்பது எனக்கு தெரியாது.’ (http://tamilsdirection.blogspot.com/2017/03/blog-post.html )

‘1970களின் பிற்பகுதி முதல் 1990களில் இசை ஆராய்ச்சி நோக்கி, நான் திசை திரும்பிய இடைப்பட்ட காலத்தில்;

'பெரியார்' .வெ.ராவை இழிவுபடுத்திக் கொண்டே, தனித்தமிழ்நாடு ஆதரவு போக்கினை ஊக்குவித்த பெங்களூர் குணாவை, 'பெரியார் கொள்கையாளராக' இருந்து கொண்டே ஆதரித்த தவறிலும் சிக்காமல்;

'அண்ணாவை' ஏற்றுக் கொள்ளாமல், கேலி பேசிக் கொண்டே, தி.மு. தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நெருக்கமாகி, பலன்கள் அனுபவித்த இழிவு திசையில் பயணிக்காமலும்;

'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு கூடிய தனித்தமிழ்நாடு' ஆதரவு போக்கில், செயலளவில் பங்களித்து பயணித்து வந்துள்ளேன்.’ (http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html )

.வெ.ரா அவர்கள் தனது மனதிற்கு சரியென பட்ட போக்கில் பயணித்த போது, 'பிம்ப' (Ego) சிறையில் சிக்காமல், மான அவமானங்களைப் பற்றி கவலைப்படாமல், பயணித்தவர். ..… ஈ.வெ.ராவின் மறைவிற்குப் பின்னர், 'பெரியார்' கொள்கையாளர்களில் பலர், 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' (https://en.wikipedia.org/wiki/Xenophobia ) மனநோயாளிகளாக வாழ்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது………

ஈ.வெ.ராவின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் அரைகுறையாக புரிந்து கொண்டு, அறிவுபூர்வ விமர்சனங்களை தவிர்த்து, உணர்ச்சிபூர்வ சமூக மன நோயாளிகளாக, 'பெரியார்' சிறைக்கைதிகளாக‌, அவர்கள் பயணிக்கிறார்களா? திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் வலைப்பின்னலில் இடம் பெற்று பயணிக்கும் 'பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம், அம்பலமாகாமல் இருப்பதற்கும், அதுவே காரணமா?

இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்தால், எனது ஆய்வுகளை படித்து, ஐயங்களை தெளிவுபடுத்திக் கொண்டு, தமிழ் மொழி மற்றும் இலக்கியங்கள் தொடர்பான, தனது கொள்கைகளை தவறு என்று பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்டிருப்பார்;

என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்……'இனம்' மற்றும் 'சாதி' ஆகிய சொற்களின் பொருளானது, காலனிய சூழ்ச்சியில் திரிந்தது தொடர்பான, எனது ஆய்வுகளையும், ஈ.வெ.ரா இன்று படித்தால், அவரின் 'இந்திய தேசிய' எதிர்ப்பு என்பதானது;

திராவிட அரசியல் கொள்ளை சூழ்ச்சியில், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் சீரழிய வழி வகுத்தது, என்பதையும் பகிரங்கமாக அறிவித்து, 'திராவிடர்/திராவிட 'குழப்பங்களிலிருந்து விடுபட்டு, தெளிவான 'தமிழர்' அடையாளத்தை, 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமாகவே வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார், என்பதும் எனது ஆய்வு முடிவாகும். (http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html )

திரு.கி.வீரமணி உள்ளிட்ட பெரியார் கட்சிகளின் தலைவர்களில் பலர், இந்தி எதிர்ப்பு தொடர்பாக, ' நேருவின் வாக்குறுதியை சட்டமாக்க வேண்டும்' என்பதே ஈ.வெ.ரா அவர்களின் நிலைப்பாடாக அறிவித்து, அவை பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன.

நேருவின் வாக்குறுதி மோசடி என்றும், பிரிவினையே இந்தி திணிப்பிற்கு தீர்வாகும் என்றும், ஈ.வெ.ரா அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள், 'விடுதலை' இதழ்களில் வெளிவந்திருப்பதை நான் படித்திருக்கிறேன்.

ஆர்வமுள்ளவர்கள், சென்னை பெரியார் திடலில் உள்ள நூலகத்திற்கு சென்று, அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, ஈ.வெ.ரா அவர்கள் ஏன் கண்டித்தார்? என்ற தெளிவில்லாமல், 'பெரியார்' கொள்கையாளர்களில் யார், யார், பயணித்து வருகிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.com/2017/08/blog-post.html )

இன்று 'பெரியார்' கட்சிகளில் பயணிப்பவர்கள் எல்லாம் பல கட்சிகளாக பிரிந்து கிடப்பதற்கு, 'பெரியார்' கொள்கை பற்றிய புரிதலில் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமா? அல்லது கொள்கையை விட தமக்கு பிடித்த நபரையே தலைவராக கொள்ளும் 'தனிநபர் விசுவாசம்' காரணமா? அல்லது தமது சாதிக்குளேயே திருமணங்கள் செய்து வரும் 2ஆவது, 3ஆவது, 4 ஆவது தலைமுறை 'கருப்புச் சட்டை'(?) குடும்பங்களாக வாழ்ந்து கொண்டு, இப்போது இருக்கும் வசதி வாய்ப்புகளை பாதுகாத்து, முடியுமானால் 'தலைமையின் கருணை' மூலம் இன்னும் வளர்த்துக் கொள்ளும் எண்ணம் காரணமா? (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_12.html )

1944இல் பாதகமான சமூக மடைமாற்றம் ஏற்பட்டதன் விளைவாக, 1967-இல் முளைவிட்டு, 1969-இல் ஊக்கம் பெற்று, 1991-இல் வீரியம் பெற்ற 'அரசியல் அமாவாசை சமூக செயல்நுட்பமானது', ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' மூலம் முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளது;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும்…………  சுயமாக நேர்மையான முறையில் பணமோ, சமூகத்தில் செல்வாக்கோ, ஈட்ட வழியும்/மனதும் இல்லாதவர்களுக்கு, 'குறுக்கு வழி ஏணியாக' ஈ.வெ.ரா அவர்களும், அவர் வழியில் என் போன்றோரும், சமூகத்திற்கு கேடான திசையில் பயணித்தோமா? என்பதும் அந்த ஆய்வில் அடக்கமாகும்………….

விவாத வரம்பின் எல்லையை மீறி, விவாதத்தில் ஈடுபடுபவர்களையும், விவாதப் பொருளாக‌, விவாதத்திற்குள் கொண்டு வந்து, விவாத எல்லையை, தன்னிச்சையாக, விரிவுபடுத்தும் 'நாகரீகமற்ற அரைகுறை அறிவாளிகளையும்' அவர்களில் அடையாளம் கண்டேன்; புலமையாளர்கள் 'அசிங்கப்பட அஞ்சி' ஒதுங்கியதே, தமிழ்மொழி, இலக்கியங்கள் தொடர்பான 'உணர்ச்சிபூர்வ தற்குறி' போக்கில், 'பெரியார்' ஆதரவாளர்கள் பயணிக்க காரணமா? என்ற ஆய்வையும் தொடங்கும் வகையில். (http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.html  

தமது வரை எல்லைகள் (limitations)  பற்றிய புரிதலின்றி, தமக்கு விளங்காதவைகளை, தவறாக புரிந்து கொண்டு, இழிவுபடுத்தும், கண்டிக்கும் 'குருட்டு பகுத்தறிவாளர்கள்', உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான், 'பகுத்தறிவாளர்கள்' என்ற அடையாளத்தில் இருக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.com/2017/12/1-music-informationtechnologist-inputs.html )

எனது பதிவுகளின் கீழ் பதிவான எந்த விமர்சனங்களையும் அகற்றியதில்லை. இனியும் புதிதாக பதிவாகும் விமர்சன பதிவுகளும் அப்படியே இருக்கும். நான் அவற்றை பார்த்து, விளக்கம் எழுதும் தாமதத்தினைத் தவிர்க்க விரும்புபவர்கள் எல்லாம், அவ்வாறு விமர்சனம் பதிவு செய்துள்ளதை எனக்கு ‘ஈமெயில்’ (Email) மூலம் தெரிவித்தால், நான் அவற்றைப் படித்து, தேவைப்பட்டால், எனது விளக்கத்தினையும், அவற்றின் கீழ் பதிவிட முடியும்.

குறிப்பு: 

தமிழ்நாட்டில் தமது குடும்பப் பிள்ளைகளை தமிழ்வழியில், குறைந்த பட்சம் ஆரம்பக் கல்வி வரையிலாவது படிக்க வைக்காமல், ஆங்கில வழிக்கல்வி ஊக்குவிப்பு சமூக கிருமிகளாக, பொது அரங்கில் வலம் வரும் இரட்டை வேட‌ திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்களை, 'தீண்டாமைக்கு' உட்படுத்தி, நான் பயணிக்கிறேன்; தமிழின் மீட்சிக்கு பங்களிப்பு என்று கருதி.

சிங்கப்பூரில் தவிர்க்க முடியாத குடும்ப சூழலில், எனது பேத்தியின் தாய்மொழியும் வீட்டு மொழியும் ஆங்கிலமாகும். ஆங்கிலவழிப்பள்ளியில் மலாய், சீன மொழிகளை இரண்டாவது பாட மொழியாக தேர்ந்தெடுக்காமல், தமிழைத் தேர்ந்தெடுத்து மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். பேச்சுத் தமிழ் தெரியாமல், எழுதுவது போலவே தமிழில் பேச முயற்சித்து தடுமாறுகிறாள். எனது மருமகளின் மிகுந்த ஒத்துழைப்புடன், தனிப்பயிற்சி (private tuition) உள்ளிட்டு பல வழிகளில் எனது மகனும் நானும் (சிங்கப்பூரில் இருக்கும் தருணங்களில்) போராடி வருவதும் வித்தியாசமான மகிழ்ச்சி தரும் அனுபவமாகும். தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் 'பெரியார்'/தமிழ் ஆதரவாளர்களின் குழந்தைகள் எல்லாம் சரளமாக தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாமல் வளர்வதானது, மன்னிக்க முடியாத சமூக குற்றம், என்பதும் எனது கருத்தாகும்.

No comments:

Post a Comment