Saturday, August 26, 2017

'பெரியார்' ஈ.வெ.ராவின் இந்தி எதிர்ப்பு கொள்கை தொடர்பாக;


'பெரியார்' கொள்கையாளர்களிடையே குழப்பங்கள் ? 


கீழே குறிப்பில் உள்ள செய்தியை படித்தவுடன், 'பெரியார்' ஈ.வெ.ராவின் இந்தி எதிர்ப்பு கொள்கை தொடர்பாக;

'பெரியார்' கொள்கையாளர்களிடையே குழப்பங்கள் இருந்ததை, 'பெரியார்' இயக்கத்தில் நான் பயணித்த காலத்தில் கண்டுபிடித்ததையும்;

இந்தி எதிர்ப்பு தொடர்பான ஈ.வெ.ரா அவர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதையும், எனது சமூக கடமையென உணர்ந்து, இதனை எழுதினேன்.

கீழே குறிப்பில் உள்ள செய்தியின்படி,சென்னை பெரியார் திடலில்  திராவிடர் கழகம் சார்பில், இந்திசமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில், தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து, கீழ்வரும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“இந்தியை எதிர்ப்பது கோபத்தால் அல்ல. தமிழ் மீது உள்ள அளவற்ற காதலால் தான். என் மொழியில் வளரவிடுங்கள், என் மொழியிலேயே படிக்கவிடுங்கள் என்பதற்காகத்தான் போராடுகிறோம். தமிழ் மொழிக்காக திராவிட இயக்கத்தின் போராட்டம் உணர்வு மிக்கது.”

மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு எதிராகவே, 'பெரியார்' ஈ.வெ.ரா இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார், என்பதை கீழ்வரும் சான்று உணர்த்துகிறது.

‘1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் 03.03.1965-ல் ‘‘விடுதலை’’ இதழின் தலையங்கத்தில் ‘‘இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகிவிட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவுக் கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதிவருகிறார்கள். நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தமிழ் கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவும் இல்லை. புலவர்களே தமிழை கெடுத்துவிட்டார்கள்என்றும், “காமராஜர் ஆட்சி அவசியமா, இந்தி ஓழியவேண்டியது அவசியமா என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன்’’ என்றும், 08-03-1965-ல் ‘விடுதலைஇதழின் தலையங்கத்தில் ‘‘தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை, தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும் இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ, வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி’’ என்றும் அவரது கையொப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்.’ (http://www.tamilhindu.com/2009/06/periyar_marubakkam_par04/ )

எனவே ஈ.வெ.ரா அவர்களின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு மாறாக, ஸ்டாலின் வெளிப்படுத்திய கருத்து தொடர்பாக, அந்த மேடையிலேயே, கி.வீரமணியோ அல்லது தி.க சார்பில் வேறு எவருமோ தெளிவுபடுத்தியிருக்காவிட்டால், அது ஈ.வெ.ராவிற்கு செய்யும் அவமரியாதை ஆகாதா?

திரு.கி.வீரமணி உள்ளிட்ட பெரியார் கட்சிகளின் தலைவர்களில் பலர், இந்தி எதிர்ப்பு தொடர்பாக, 'நேருவின் வாக்குறுதியை சட்டமாக்க வேண்டும்' என்பதே ஈ.வெ.ரா அவர்களின் நிலைப்பாடாக அறிவித்து, அவை பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன.

நேருவின் வாக்குறுதி மோசடி என்றும், பிரிவினையே இந்தி திணிப்பிற்கு தீர்வாகும் என்றும், ஈ.வெ.ரா அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள், 'விடுதலை' இதழ்களில் வெளிவந்திருப்பதை நான் படித்திருக்கிறேன்.

ஆர்வமுள்ளவர்கள், சென்னை பெரியார் திடலில் உள்ள நூலகத்திற்கு சென்று, அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, ஈ.வெ.ரா அவர்கள் ஏன் கண்டித்தார்? என்ற தெளிவில்லாமல், 'பெரியார்' கொள்கையாளர்களில் யார், யார், பயணித்து வருகிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

இன்றைய சர்வதேச அரசியல் பொருளாதார சூழலில், சர்வதேச ஆதிக்க சக்திகளின் பகடைக்காய்களாகவே, தனிநாடு போராட்டங்கள் இரையாகி வருவதையும் நான் எச்சரித்துள்ளேன்.( http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_26.html  )

அது மட்டுமல்ல, மொழிப்பிரச்சினையில், இந்திய அரசியல் நிர்ணய சபையிலேயே, டி.டி.கிருஷ்ணமாச்சாரி விடுத்த அபாய எச்சரிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.( Is the Language Policy derailing the nation building process in India?; http://tamilsdirection.blogspot.in/2017/06/is-language-policy-derailing-nation.html)

மொழிப் பிரச்சினை என்பதானது, இந்தியாவின் ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் காப்பதில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும், திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும், ஆக்கபூர்வமாக ஈடுபட்டு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும். அதில் காரியம் சாதிக்கும் நோக்கில் தான், இந்தித் திணிப்பை எதிர்த்து செயல்படுவதே புத்திசாலித் தனமாகும்.

அதற்கு மாறாக, 'இந்தி எதிர்ப்பு' என்ற பெயரில், தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் , விருப்பமுள்ளவர்கள் எல்லாம் இந்தி படிக்கும் வாய்ப்பினை கெடுத்ததே;( http://tamilsdirection.blogspot.in/2017/08/1965-social-curse-internalize-role-model.html )

1968–ம் ஆண்டு ஜனவரி 23–ந் தேதி தமிழக சட்டசபையில் நிறைவேறிய இந்தி எதிர்ப்பு தீர்மானமாகும். அதன் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தின், தொடக்க நிகழ்வாக ஒரு மாநாடு, தி. சார்பில் நடந்திருப்பதானது, விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மக்கள் பங்கேற்புடன் ஒரு போராட்டம் 'காலித்தனங்கள்' இன்றி நடத்த முடியும் என்பதை, 1938இல் ஈ.வெ.ரா தலைமையில், தமிழ்நாடு நிரூபித்தது. அது காந்தியின் சத்தியாகிரகம் காலித்தனத்தில் முடியும் என்று எச்சரித்த‌ தாகூரின் பார்வைக்கு சென்று, சமூக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்ததிருந்தால், 1965இல் ஈ.வெ.ராவின் எதிர்ப்பு சுவடின்றி ம‌றைந்திருக்காது; 'அண்ணா - ராஜாஜி கூட்டணி'யின் முயற்சியும் வெற்றி பெற்றிருக்காது; தமிழ்நாடும் தப்பித்திருக்கும்; என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் வளர்ந்த 'அந்த சந்தர்ப்பவாத சமூக கேடான போராட்ட கூட்டணி பிரமீடு' என்பத‌ன் அடித்தளமானது, 'அரசியல் நீக்கம்'(depoliticize) மூலம் அரிக்கப்பட்டது. அது தெரியாமல், முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் உச்சக்கட்டமாக, 2018- இல்  ஐ.பி.எல் கிரிக்கெட், ஸ்டெர்லைட் போராட்டங்கள்  மூலமாக, 'அந்த' பிரமீடானது சரிந்து விழத் தொடங்கியுள்ளது; தமிழ்நாட்டின் மீட்சிக்கான அறிகுறியாக. (http://www.dinamalar.com/news_detail.asp?id=2054215)

குறிப்பு:

1968–ம் ஆண்டு ஜனவரி 23–ந் தேதியை தமிழினம் ஒருபோதும் மறக்காது. அன்றைய தினம் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று, வெற்றி பெற்றது. தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு விடை கொடுத்து, இரு மொழி கொள்கை தொடங்கப்பட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டம் வெற்றி பெற்ற பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தின், தொடக்க நிகழ்வாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

‘பெரியார் கொட்டிய போர் முரசு’ என்ற நூலை மு.க.ஸ்டாலின் வெளியிட, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் பெற்றுக்கொண்டார். “ http://www.dailythanthi.com/News/TopNews/2017/08/25222506/We-oppose-Hinduism-MK-Stalin.vpf


No comments:

Post a Comment