கம்போடியாவில் 'ஆங்கோர் வாட்' (Angkor Wat) (1);
தமிழனின் அடையாளமா? 'இந்திய' அடையாளமா?
" 'ஆங்கோர் வாட்' ஒரு தமிழ் அரசனால் கட்டப்பட்டது; தமிழ் மன்னர்கள் படையெடுத்த நாடுகளில் ஒன்று கம்போடியா; தமிழ் மரபில் வந்த சூர்யவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்ட கோவில் தான் 'ஆங்கோர் வாட்'
"
என்பது போன்ற தகவல்கள் கீழ்வரும் காணொளியில் உள்ளன.
‘அங்கோர் வாட் தமிழனின் பெருமை-
greatness of tamils-angor wat’; https://www.youtube.com/watch?v=O77fzGjJZGg
https://www.youtube.com/watch?v=n9qYENC1FaQ
https://www.youtube.com/watch?v=n9qYENC1FaQ
'ஆங் கோர் வாட் தமிழனின் அடையாளம்' என்று அறிவித்து மேற்குறிப்பிட்ட காணொளி முடிகிறது.
மேற்குறிப்பிட்ட காணொளிக்கு முந்தையதாக கீழ்வரும் காணொளி உள்ளது.
‘Angkor Wat Built by
Descendant of Raja Raja Cholan – சூர்யவர்மன்’; https://www.youtube.com/watch?v=A8d_MsLNz4M
மேலே குறிப்பிட்ட இரண்டு காணொளிகளிலும், ராஜ ராஜ சோழன் பரம்பரையில் வந்தவன் சூர்ய வர்மன் என்பதற்கோ, 'அந்த' சூர்யவர்மன் தான் 'ஆங்கோர் வாட்' கோவிலைக் கட்டினான் என்பதற்கோ, எந்த சான்றினையும் குறிப்பிடவில்லை. ஆனால் 'ஆங்கோர் வாட்' சிறப்புகளை, மிகவும் நன்றாகவே இரண்டு காணொளிகளும் வெளிப்படுத்தியுள்ளன
உலக அதிசயங்களில் ஒன்றாகவும், அதீத எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் (கம்போடியா) ஆங்கோர் கோவிலில்(Angkor
Wat) (https://en.wikipedia.org/wiki/Angkor_Wat
) ;
தமிழ்நாட்டில் பல்லவர் காலத்தில் இருந்த தொடர்புகள், பல்லவ கிரந்த எழுத்துக்கள் கம்போடியாவின் 'கெமர்'
(Khmer) மொழிக்கு எழுத்து வரி வடிவங்கள் உருவாக மூலமாக இருந்தவை;
சிவன், விஷ்ணு போன்ற கடவுள்களின் கோவில்களும், இராமாயணமும், மகாபாராதமும் மிகுந்த எண்ணிக்கையில் சிற்பங்களாகாவும், கல்வெட்டுக்களாகவும் நிறைந்துள்ள மேற்குறிப்பிட்ட கோவில் மட்டுமின்றி, அந்த பகுதியில் உள்ள மிக அதிக கோவில்களிலும் இருக்கின்றன;
சமஸ்கிருத கல்வெட்டுகள் இருக்கின்றன. தமிழில் கல்வெட்டுகள் இருப்பது குறித்து, எந்த சான்றும் இதுவரை படவில்லை. தமிழ் மன்னர்கள் படையெடுத்த நாடுகளில் கம்போடியா இல்லை.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநில தொடர்புகள் பற்றிய சான்றுகள் உள்ளான. அதில் தமிழ்நாட்டுக்கே, குறிப்பாக காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்லவர் ஆட்சி பகுதி தொடர்பு பற்றியே நிறைய சான்றுகள் உள்ளன.
ஆங்கோர் கோவில்
(Angkor Wat) வட்டாரப்பகுதிகளில் ,
1000 வருடங்களுக்கும் மேலாக இராமாயணத்தையும், மகாபாரதத்தையும், சிவ, விஷ்ணு உள்ளிட்ட இந்து கடவுள்களையும் கோவில்களில் சிலைகள், கல்வெட்டுகள் மூலமாக, போற்றி வரும் கம்போடியாவில் (குறிப்பு கீழே) ;
தமிழ்நாட்டில் உள்ளதைப் போன்ற 'சாதி உயர்வு/தாழ்வு, தீண்டாமை' நோய்கள் கம்போடியாவில் இருந்ததாக, எந்த சான்றுகளும் இதுவரை எனது ஆய்வில் வெளிப்படவில்லை.
இராமாயணத்தையும், மகாபாரதத்தையும், சமஸ்கிருதத்தையும், கல்வெட்டுகள் சிலைகள் மூலமாக போற்றி, சிவன், விஷ்ணு, விநாயகர் உள்ளிட்ட இந்துக்கடவுள்களை வழிபடும் 'எண்ணற்ற' கோவில்கள் இருக்கும் கம்போடியாவை 'இந்திய அடையாளமாக' கருதுவதானது;
சீனா, ஜப்பான் உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள புத்த மதங்கள் தொடர்பானவைகளையும், 'இந்திய அடையாளமாக' கருதுவதைப் போன்றதாகும்.
'ஐரோப்பிய' அடையாளத்தைப் போல, அவ்வாறு 'இந்திய அடையாளமானது' மேற்குறிப்பிட்ட நாடுகள் தாமாகவே ஏற்றுக்கொள்ளும் சூழலை வளர்ப்பதே, புத்திசாலித்தனமாகும். மாறாக அந்த நாடுகளின் வெறுப்பை ஈட்டும் வகையில், 'இந்திய அடையாளத்தை' அவர்கள் மீது திணிப்பதானது, எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்; 'தமிழ் அடையாளத்தைத்' திணிப்பதானது கேலிக்கூத்தாகவே முடியும்.
'ராஜ ராஜ சோழன் பரம்பரையில் வந்த சூர்ய வர்மன் தான் 'ஆங்கோர் வாட்' கோவிலைக் கட்டினான்' என்பதற்கு சான்றுகள் இல்லை. இருப்பதாக எவரும் தெரிவித்தால், நன்றியுடன் அதனையும் ஆய்வுக்கு உட்படுத்துவேன். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' ஒரு நாவல் என்பதை மறந்து, அதன் அடிப்படையில் அவ்வாறு நம்பியவர்களும் உள்ளார்கள்; என்பதனை பின்னூட்டம் (Feedback) மூலம் அறிந்தேன்.
வாதத்திற்காக அது உண்மை என்று வைத்துக் கொண்டாலும்;
பாணினியின் இலக்கணத்தை போற்றியவாறு, தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண, இலக்கியங்களைப் பற்றிய சான்றுகள் ஏதும் அங்கே இருப்பதாக தெரியவில்லை. தமிழ்க்கல்வெட்டுகள் இன்றி, சமஸ்கிருதத்தில் எண்ணற்ற கல்வெட்டுகளையும், இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் எண்ணற்ற சான்றுகள் மூலம் வெளிப்படுத்திய மன்னன் தான், மேலே வாதத்திற்காக குறிப்பிட்ட 'சூர்யவர்மன்' என்றால்;
அவன் கட்டிய, மேற்குறிப்பிட்ட சான்றுகளின் புதையலாக உள்ள 'ஆங்கோர் வாட்' கோவிலை;
'ஆங்கோர் வாட்' தமிழனின் 'அடையாளம்' என்று அறிவித்திருப்பதானது;
அறிவு வரை எல்லைகளைத் தாண்டிய துணிச்சலா? தாழ்வு மனப்பான்மையை ஈடுகட்ட வெளிப்பட்ட உயர்வு வெளிப்பாடா?
நல்ல குடும்ப சூழலில் வளரும் குழந்தைகள் பெரும்பாலும், மோசமான குடும்ப சூழலிலும் 'திறமைசாலிகள்', தாம் அனுபவிக்க நேரிடும் தாழ்வு உணர்வுகளை, படிப்பு, விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் சாதித்து, செல்வாக்கையும், அங்கீகாரத்தையும் பெற்று
(strives for power and recognition) ஈடுகட்டி(compensate),
பெரியவர்களாக வளர்ந்து விடுவார்கள். அத்தகையோரே சமூகத்தோடும், இயற்கையோடும் ஒட்டி உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு(Passions),
தமக்கு தாமே எஜமானராக வாழ்வார்கள்; சாதனையாளர்களாக வெளிப்படுவார்கள்; பிறர் தம்மை உயர்வாக நினைக்க வேண்டும் என்ற 'சமூக ஒப்பிடு'
(Social Comparison) நோயில் சிக்காமல்.
அவ்வாறு ஈடுகட்டும் சவாலில் தோல்வியடைந்தவர்கள் எல்லாம், 'தாழ்வு மனப்பான்மையுடன்' பெரியவர்களாக வளர்வார்கள். (If
the child failed to meet certain life challenges during his act of compensation
then he will develop an inferiority complex.
So according to Adler every child feels inferior but not every one
develops an inferiority complex which only affects those who failed to
compensate correctly.) (http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_11.html
)
அப்படி 'வளர்ந்தவர்களும்' நம்மிடையே இருக்கிறார்களா? பொய்யான அல்லது திரித்த சான்றுகளின் அடிப்படையில், உணர்ச்சிபூர்வ பேச்சுக்கள்,
எழுத்துக்கள், காணொளிகள் மூலமாக, 'அப்பாவித் தமிழர்களைத்' தூண்டி, அவர்களில் ஏமாந்தவர்களைக்
காவு கொடுக்க உதவிய சமுக சூழலுக்கு, அத்தகையோரே காரணமா?(http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html) என்ற கேள்விகளையே, முதலில் குறிப்பிட்ட இரண்டு காணொளிகளும் எழுப்புகின்றன.
கிபி 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த,
ஆங்கோர் வாட்'க்கும் முந்தைய, உலக அளவில் தொன்மையான ஈரோடு அருகில் உள்ள அரச்சலூர் இசைக்கல்வெட்டானது உரிய பாதுகாப்பின்றி சீரழிந்து வருகிறது.(
https://www.thehindu.com/todays-paper/isai-tamil-inscription-in-ruins/article3044059.ece
) வெள்ளைக்காரன் நகலெடுத்து பதிப்பித்த கல்வெட்டுகள் இருந்த மலைகள் எல்லாம், தமிழ்நாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக 1991 முதல் அழிந்து வருகின்றன. இவை போன்ற தமிழரின் அடையாளங்களை விட்டு விட்டு, கம்போடியாவில் இல்லாத அடையாளத்தை
உரிமை கொண்டாடுவது புத்திசாலித்தனமா? அறியாமையா?
‘சில வருடங்களுக்கு முன், தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை அருகில் உள்ள திருமயத்திற்கு சென்று, மலை மேல் உள்ள கோட்டையையும், அடுத்தடுத்து இருந்த, பிரமாண்டமான, ஒரே மலையின் பக்கங்களில் இருந்த, குகை கருவறை உள்ளிட்ட, சிவன், விஷ்ணு என்ற இரண்டு தெய்வங்களுக்கான தனித்தனி கோவில்களையும் பார்த்து வியந்தேன்.
சீரங்கம் ரங்கநாதரை விட, மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட, பிரமாண்டமான கருவறையில், அனைவரும் அர்ச்சகர் ‘அருகே’ நின்று வழிபட்டதானது, 'பெரியார்' கொள்கையாளனாக முன்பு பயணித்த, எனக்கு வியப்பானது.
சீரங்கம் ரங்கநாதரை விட, மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட, பிரமாண்டமான கருவறையில், அனைவரும் அர்ச்சகர் ‘அருகே’ நின்று வழிபட்டதானது, 'பெரியார்' கொள்கையாளனாக முன்பு பயணித்த, எனக்கு வியப்பானது.
மத்திய அரசின் ASI கட்டுப்பாட்டில் உள்ள அந்த சுற்றுலா தளத்தில், சுற்றுலா பயணிகளுக்கான கழிவறை பூட்டப்பட்டு இருந்ததும், அந்த அலுவலகம் சென்று, 'அழுத்தம்' கொடுத்து;
சாவியை வாங்கி, சரியாக பராமரிக்கப்படாத கழிவறை சென்று வந்ததும், மறக்க முடியாத அனுபவமானது.’(http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post_21.html
)
‘1918 பிப்ரவரியில் திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள நார்த்தாமலையில், தமிழ்நாட்டின் தொன்மையான கோவில்களில் ஒன்றாகிய 'விஜயாலய சோழீஸ்வரம் கோவில்' பகுதிக்கு சென்ற போது;
பல மில்லியன் டாலர் பாரம்பரிய சுற்றுலா வருமானம் ஈட்டக் கூடிய, விலை மதிப்பில்லாத செல்வங்களை எல்லாம், 'திராவிட அரசியல் கிரானைட் ஊழலுக்கு' இரையாக்கி வரும் 'பாரம்பரிய செல்வ வாசனை தெரியாத கழுதைகளா, வரலாற்றுக் குற்றவாளிகளான, தமிழர்கள்?' என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது;
கீழ்வரும் அரிய தகவலை படித்து விட்டு, அதன்பின் அங்கு சென்று பார்க்கும் எவருக்கும், அந்த கேள்வி எழுந்தால் வியப்பில்லை.
தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தை பகையாக கருதி வெறுக்கும் தமிழ் ஆர்வலர்கள் இருக்கிறார்கள்; தமிழைக் கீழாகவும், இழிவாகவும், சமஸ்கிருதத்தினை மேலாகவும் கருதும் சமஸ்கிருத ஆர்வலர்களும் இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட 'அடையாள இழப்பு/அழிப்பு'க்கான சமூக சூழலுக்கு, அத்தகைய 'பரிமாற்ற வெறுப்பு'ம் காரணமாகும் இரு சாராரிலும் தனிப்பட்ட முறையில் மதிக்கத்தக்க அளவுக்கு நேர்மையாளர்களும் இருக்கிறார்கள்; அழிவு சமூகத் தூண்டலுக்கு (Destructive Social Induction) உள்ளாகுவதைத் தவிர்க்கவே, அத்தகையோரையும் என் மீது மிகுந்த அன்பு பாராட்டினாலும், எனது சமூக வட்டத்தில் இருந்து அகற்றி வாழ்கிறேன்; அதனால் வரும் இழப்புகளையும் விரும்பி ஏற்று; 'பரிமாற்ற வெறுப்பு'க்கு எதிரான தனிமனித பங்களிப்பாக.
'ஆங்கோர் வாட்' மட்டுமின்றி, அந்த பகுதிகளில் உள்ள முக்கிய கோவில்கள், 1000
லிங்கங்கள் வழியாக ஓடும் நதி, அந்த நதி பின்னர் நீர்வீழ்ச்சியாக விழும் இடத்தில் குளித்து புண்ணியம் பெறும் இடங்கள் உள்ளிட்டவற்றை விவரிக்கமுடியாத வியப்புடனும், (இடிந்தவைகளைக் கண்டு) சோகத்துடனும் மறக்க முடியாத அனுபவமாக, கடந்த சூலை முதல் வாரத்தில், அங்கு நான் நான்கு நாட்கள் பயணித்தேன்.
தமிழ்நாட்டில் பல்லவ, சோழ ஆட்சிகளின் காலங்களில் வெளிப்பட்ட கட்டிடக்கலைக்கும், 'ஆங்கோர் வாட்' உள்ளிட்டு அந்த பகுதிகளில் இருந்த கட்டிட கலைக்கும் இடையில் இருந்த ஒற்றுமைகள் தொடர்பான சான்றுகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. தென் அமெரிக்காவில், 'மாயன் நாகரீகம்' தொடர்பான பகுதிகளுக்கு (https://en.wikipedia.org/wiki/List_of_Maya_sites
; கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை உருவாக்கிய) கணபதி ஸ்தபதி சென்று, அங்கிருந்த பிரமீடுகளை அளந்து, அந்த கட்டிடக்கலைக்கும், தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கும் இடையில் இருந்த ஒற்றுமையை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார். அதனை என்னிடம் மிகுந்த ஆர்வத்துடன் விளக்கினார்.
அவர் 'ஆங்கோர் வாட்' கோவில் பகுதிக்கு சென்று, அது போன்ற ஆய்வினை மேற்கொள்ளும் முன், சில வருடங்களுக்கு முன்பேயே மறைந்த வருத்தத்தினையும், அங்கு உணர்ந்தேன். தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் வரும் 'மயன் தொழில் நுட்பம்' தொடர்பான சான்றுகள் மூலமாக, 'ஆங்கோர் வாட்' கட்டிடக்கலையானது, தென் அமெரிக்காவில் உள்ள 'மாயன்' கட்டிடக்கலையுடன் தொடர்பு இருப்பதற்கான, ஆய்வுகளை மேற்கொள்ள முகாந்திரம் இருக்கிறது.
'ஆங்கோர் வாட்' அருகில் உள்ள 'சியாம் ரீப்' (Siem
Reap) நகரில் தான், நான் தங்கினேன். அங்கு கம்போடியாவின் பாரம்பரிய இசை, நடனம் குறித்தும் சில ஆய்வுகள் மேற்கொண்டேன்.
கம்போடியாவின் பாரம்பரிய இசை குறித்த வீழ்ச்சியும், தற்போது மேற்கொண்டு வரும் 'பரம்பரிய இசை மீட்சி' முயற்சிகளும் எனது கவனத்தை ஈர்த்தன; கீழ்வரும் பின்னணியில்.
பழந்தமிழ் இலக்கியங்களிலும், சிலைகளிலும், கல்வெட்டுகளிலும் உள்ள விலைமதிப்பற்ற சான்றுகளின் அடிப்படையில், 'தமிழ் இசையியல்' ஆய்வு வலிமையில், ‘தமிழ் இசையியல் மீட்பு’ நோக்கிய, எனது முயற்சிகள் மூலமாக, எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத வகையில் வெளிப்பட்டு வரும், தடைகளை, நான் 'அனுபவித்துள்ளேன்'; 'சமஸ்கிருத வெறுப்பு' அரசியலை 'முதலில்லாத மூலதனமாக' மாற்றி, வலம் வரும் ' தமிழ், தமிழ் இசை பொதுவாழ்வு வியாபாரிகளின்' பங்களிப்பால். (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html
)
கம்போடியாவானது கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில், மக்கள் தொகையில் கால் பங்கினை இழந்ததுடன், பாரம்பரிய இசை, நடனம் உள்ளிட்ட கலைஞர்ளையும் இழந்து, ஏறத்தாழ பாரம்பரியக் கலைகளில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில், கம்யூனிஸ்டுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, புது வாழ்வினைத் தொடங்கியுள்ளது. தப்பித்த ஒரு சில இசைக்கலைஞர்கள், கிராமங்களில் முடி வெட்டுதல், போன்ற தொழில்களில் ஈடுபட்டு உயிர் வாழ்ந்தனர். அவர்களை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து, நம்பிக்கையூட்டி, வரவழைத்து (அந்த இசையாசிரியர்களின் கண்களில் நீர் மல்கியதை, 'சியாம் ரீப்பில்' கிளை மேலாளர்
விவரித்த போது, அதைக் கேட்ட எனது கண்களிலும் நீர் அரும்பியது);
மீண்டும் பாரம்பரிய இசைக்கல்வியை புதுப்பிக்கும் பணியை 'ஆர்ன் கான் பாண்ட்' (Arn Chorn-Pond) என்ற இளைஞர் மேற்கொண்டு வருகிறார். (https://www.dw.com/en/saving-arts-nearly-wiped-out-by-khmer-rouge/a-16149469 )
மீண்டும் பாரம்பரிய இசைக்கல்வியை புதுப்பிக்கும் பணியை 'ஆர்ன் கான் பாண்ட்' (Arn Chorn-Pond) என்ற இளைஞர் மேற்கொண்டு வருகிறார். (https://www.dw.com/en/saving-arts-nearly-wiped-out-by-khmer-rouge/a-16149469 )
அவருக்கு எனது வருகையை முன்கூட்டியே தெரிவித்தேன். அதன் விளைவாக, 'சியாம் ரீப்' நகரில் உள்ள அவரின் பாரம்பரிய இசை மீட்பு கிளையில் இருந்த மேலாளரையும், இசை ஆசிரியரையும் சந்தித்து உரையாடினேன். அவர்களின் மீட்பு முயற்சியில், 'பாரம்பரிய இசைக் கொள்கை'
(Cambodian Traditional Music Grammar) இன்னும் மீட்கப்படவில்லை, என்பதானது, அந்த உரையாடலில் வெளிப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட இசையிலிருந்து
(Recorded Music), அந்த இசைக்கொள்கையை எவ்வாறு மீட்க முடியும்? என்பதை கணினியின் துணையுடன் விளக்கினேன். அவர்கள் என்னை வியந்து பாராட்டி, கம்போடியாவின் பாரம்பரிய இசைக் கொள்கையை மீட்பதை, ஒரு ஆய்வுத்திட்டமாக தருமாறு கோரியுள்ளார்கள். அதனை எனது தலைமையில் உரிய நிதி உதவியுடன் செயல்படுத்த ஆர்வமாயுள்ளார்கள். ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ள ஆய்வுத் திட்டங்கள் காரணமாக, அது தாமதமாவதை தவிர்க்க முடியாது.
தமிழ்நாட்டில் எனது 'தமிழ் இசையியல் மீட்புக்கு' கிடைத்து வரும் 'அனுபவங்களின்' பின்னணியில்;
எதிர்பாராத வகையில், கம்போடியாவில் வெளிப்பட்டுள்ள வரவேற்பானது என்னைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. எனவே அந்த தாமதத்தினை எவ்வாறு குறைப்பது? என்றும் திட்டமிட்டு வருகிறேன்.
அதற்கு ஏற்றார்ப்போல, கீழ்வரும் எனது ஆய்வுத்திட்டம் மூலமாக, கம்போடியாவிற்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
உலகில் புதிய தொழில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவுள்ள 'இசை மொழியியல்'(Musical Linguistics), தொல்காப்பியத்தில் இருப்பதை நான் கண்டுபிடித்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_16.html & http://tamilsdirection.blogspot.com/2016/08/linguistics-musical-linguistics.html) தொல்காப்பியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 'இசை மொழியியல்' என்பதானது, சமஸ்கிருத எழுத்துகளின் தோற்றம் பற்றிய, பாணினியின் 'அஷ்டதாயி' இலக்கண நூல் தொடர்பான, 'மகேஸ்வர சூத்திரங்களுடன்' (https://en.wikipedia.org/wiki/Shiva_Sutras
) எந்த அளவுக்கு ஒத்து வருகிறது? என்ற ஆய்வுத் திட்டத்தினையும் தொடங்கியுள்ளேன். இந்தியாவில் உள்ள சான்றுகளை விட, கம்போடியாவில் எனது மேற்குறிப்பிட்ட ஆய்வுக்கு உதவும் சான்றுகள் இருப்பதும் வெளிப்பட்டுள்ளது. (குறிப்பு கீழே)
எனது ஆய்வு முயற்சிகள் வெற்றி பெறுமானால், சமஸ்கிருதம் மூலமாக, கம்போடியாவில் தமிழுக்கும் ஒரு முக்கியத்துவம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தமிழ் இசையியலின்
(Tamil Musicology) முக்கியத்துவமும், உலகின் கவனத்தை ஈர்க்கவும் அது வழி வகுக்கும். அதன்பின் (அமெரிக்காவிலிருந்து வந்த பின், விவேகானந்தருக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பைப்போல) தமிழ்நாட்டிலும் அது வரவேற்கப்பட்டு, அதன்பின் பல்கலைகழக பாடத் திட்டங்களிலும், 'தமிழ் இசை' தொடர்பான நூல்களிலும் இடம் பெறும்.
குறிப்பு :
It is well known that the use
of the honorific title Varman — very common amongst the Pallava kings — was
borrowed by the kings of Cambodia. The first Cambodian king to have this suffix
appended to his name was Bhadravarman who lived in the fourth century and thus,
was a contemporary of one of the early Pallava rulers of Kanchipuram.
Significantly, Bhadravarman was a renowned scholar, well-versed in all the four
Vedas and the author of several inscriptions in Sanskrit. He invited learned
Brahmins from India to settle in his kingdom.
While Sanskrit language and
literature spread to Cambodia from different parts of India including South
India, the ornate Grantha (also called Pallava Grantha) script travelled to
Cambodia exclusively from the Pallava kingdom. According to scholars, some of
the birudas (titles) of the Pallava kings including Mahendravarman I appear to
be in the Khmer language — the language of Cambodia. Further, Nandivarman
Pallavamalla, one of the later Pallava rulers, is believed to have lived in
Cambodia for some years before he travelled to Kanchi to ascend the Pallava
throne.
Sanskrit in Cambodia w.r.t the research on ‘Musical Linguistics’:
Inscriptions are in beautiful and flawless Kavya style. They exhibit a thorough knowledge of different metres and most developed rues and conventions of rhetoric and prosody…. J F Stall says, “The Vocañh inscription is written in regular Sanskrit prose, and most of the inscriptions from Cambodia are written in a more correct form of Sanskrit than that which is used in some of the inscriptions from India. The reason for this may be that the Cambodians learned Sanskrit from grammar books and not from native speakers. The Indian grammarian Panini is in fact honoured by being mentioned in these inscriptions; other linguistic works are referred to as well”. https://tamilandvedas.com/tag/sanskrit-inscriptions/
No comments:
Post a Comment