Monday, July 16, 2018

கம்போடியாவில் 'ஆங்கோர் வாட்' (Angkor Wat);  தமிழனின் அடையாளமா? 'இந்திய' அடையாளமா? (2) 

 

'ஆங்கோர் வாட்'க்கும் முந்தைய அரச்சலூர் இசைக்கல்வெட்டு, உலகின் கவனத்தை ஈர்க்காமல் தடுப்பது யார்?




கிபி 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த (சிலரின் கருத்து 4ஆம் நூற்றாண்டு), ஆங்கோர் வாட்'க்கும் முந்தைய‌, உலக அளவில் தொன்மையான ஈரோடு அருகில் உள்ள அரச்சலூர் இசைக்கல்வெட்டானது உரிய பாதுகாப்பின்றி சீரழிந்து வருகிறது.( https://www.thehindu.com/todays-paper/isai-tamil-inscription-in-ruins/article3044059.ece  ) வெள்ளைக்காரன் நகலெடுத்து பதிப்பித்த கல்வெட்டுகள் இருந்த மலைகள் எல்லாம், தமிழ்நாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக 1991 முதல் அழிந்து வருகின்றன. இவை போன்ற தமிழரின் அடையாளங்களை விட்டு விட்டு, கம்போடியாவில் இல்லாத அடையாளத்தை உரிமை கொண்டாடுவது புத்திசாலித்தனமா? அறியாமையா?’ என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none.html )

அரச்சலூர் கல்வெட்டில் 'தை, தா' போன்ற ஆடல் தாள எழுத்துக்கள் அடிப்படையில், அதனை இசைக்கல்வெட்டாக தொல் ஆய்வு துறையினர் (Archeologists) அறிவித்துள்ளனர். அதன் கீழ் உள்ள இரண்டு வரிகளில் உள்ளவற்றை, அக்கல்வெட்டினை எழுதியவர் பெயராக மட்டுமே அறிவித்துள்ளனர். (http://veludharan.blogspot.com/2016/10/arachalur-in-search-of-history-kongu.html ) அதில் புதைந்துள்ள இசையியல் தகவல்கள் தொல் ஆய்வு துறையினரின் கவனத்திற்கு செல்ல வேண்டுமானால், முதலில் தமிழ் புலமையாளர்கள் மற்றும் இசைப்புலமையாளர்கள் அதனைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவரை அந்த அரிய இசையியல் (Musicology) தகவலுக்கான முக்கியத்துவம், அக்கல்வெட்டிற்குக் கிடைக்காது.

இரண்டு வரிகளிலேயே உலகில் உள்ள தாள இசைக்கருவிகளுக்கான, 'தாள இலக்கணம்'(Percussion Grammar) சிலப்பதிகாரத்தில் இருந்ததையும், நான் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளேன்

உலகின் தொன்மையான அரச்சலூர் இசைக்கல்வெட்டுக்கு சரியான முக்கியத்துவம் கிடைத்திருந்தால்

அக்கல்வெட்டு வெளிப்படுத்தியுள்ள இசையியல் (Musicology) தகவல்களுடன் தொடர்புடைய (அதையும் நான் தான் வெளிப்படுத்தி வருகிறேன்), புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை இசைக்கல்வெட்டும்;

சிற்பங்களில் ஆங்கோர் வாட் கோவில்களுடன் போட்டி போடும் குடுமியான்மலை கோவிலும்;

உரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுமானால்;

ஆங்கோர் வாட் ஈர்த்து வரும் சுற்றுலாப்பயணிகளில், பாரம்பரிய இசை ஆர்வலர்களில் பெரும்பாலோர், தமது வாழ்வில் ஒருமுறையாவது, தமிழ்நாட்டில் உள்ள மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு வருகை புரிவார்கள்.

‘தொல்காப்பியம் மூலம் நான் கண்டுபிடித்துள்ள 'இசை மொழியியல்' (Musical Linguistics) தொடர்பான ஆய்விற்கு, குடுமியான்மலை இசைக்கல்வெட்டும், அதற்கும் காலத்தால் முந்திய - சரியாக பாதுகாக்கப்படாத‌- அரச்சலூர் இசைக் கல்வெட்டும் (https://www.youtube.com/watch?v=qoLBg-_tc7s ) அரிய சான்றுகளாகும். 'திராவிட கிரானைட் ஊழல் சுனாமி' ஒழிந்தால் தான், இது போன்ற அரிய பாரம்பரிய செல்வங்களுக்கு உள்ள ஆபத்துகள் எல்லாம் நீங்கும்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற துறையானது உலகப்பல்கலைக்கழகங்களில் அரங்கேறும் காலமும் நெருங்கி வருகிறது. அதன்பின் அரச்சலூர், குடுமியான்மலை கல்வெட்டுகள் எல்லாம், அந்த பல்கலைக்கழகங்களின் கவனத்தை ஈர்க்கும்; அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அளவுக்கு.

அரச்சலூர் இசைக்கல்வெட்டானது, உலக அளவில் அனைத்து இசைகளும் பலன் பெறும் அளவுக்கு, அரிய இசையியல் (Musicology) கல்வேட்டு, என்பதை நான் கடந்த சுமார் 20 வருடங்களாக வெளிப்படுத்தி வந்துள்ளேன். இசை இயற்பியல் (Physics of Music)  தெரியாத தமிழ் இசை அறிஞர்கள், மறைந்த வீ.பா.கா.சுந்தரம் என்னிடம் கேட்டுக் கொண்டது போல, என்னிடம் பாடம் கேட்டு அதை விளங்கிக்கொள்ள இதுவரை எவரும் முயற்சிக்கவில்லை. கடந்த சுமார் 20 வருடங்களில் வெளிவந்துள்ள, தமிழ் இசை தொடர்பான நூல்களிலும், அதனைப் பற்றி குறிப்பிடவில்லை.(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

சமஸ்கிருத நூல்களில் இருந்து கண்டுபிடிக்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பானவை எல்லாம், உடனுக்குடன் உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.(https://www.scribd.com/document/357131673/ScienceTechSanskritAncientIndiaMGPrasad-pdf) ஆனால் உலகில் உள்ள தமிழ் அமைப்புகள் கடந்த 20 வருடங்களாக தமிழ் இசை தொடர்பாக நடத்திய நிகழ்ச்சிகளிலும், பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து வெளிவந்த‌, எனது கண்டுபிடிப்புகள் தொடர்பான‌ இருட்டடிப்பு தொடர்ந்தது: 'அந்தந்த' தமிழ் அமைப்புகளுக்குப் பிடித்த தலைவர்களின் 'வழிபாட்டு வலைப்பின்னல்' எதிலும் இடம் பெறாத ஆய்வாளராக பயணித்த, எனது 'குற்றத்திற்கு தண்டனையாக'; உண்மையில் தமிழின் வளர்ச்சியைத் 'தண்டித்து';

'தமிழின் வளர்ச்சிக்கு உண்மையான பகைவர்கள் யார்? இக்கல்வெட்டு சம்ஸ்கிருத கல்வெட்டாக இருந்து, இதே இசையியல் தகவலை நான் வெளியிட்டிருந்தால், சமஸ்கிருத புலமையாளர்கள் எல்லாம் இக்கண்டுபிடிப்பினை மிகவும் பாராட்டி, 20 வருடங்கள் தாமதமின்றி, உடனேயே உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க மாட்டார்களா?' என்ற கேள்விகளை எனக்குள் எழுப்பி.

'அந்த இருட்டடிப்பினை முடிவுக்கு கொண்டு வரும் வெளிச்சமாக'; 

The Pitfalls in the Study & Translation of the Ancient Tamil Texts  

என்ற ஆங்கில நூலை எழுதி முடித்து, வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

அதனை கீழ்வரும் பதிவின் முலமாக உலகிற்கு அறிவித்தேன்;

'செல்வாக்கான' தமிழ் ஆர்வலராக தம்மை வெளிப்படுத்திக் கொள்பவரிடமிருந்து 'ஆய்வுக்குழாயடி சண்டை' அனுபவமும் எனக்கும் கிடைக்கும்;

என்பதை சற்றும் எதிர்பார்க்காமல்.

தமிழ்நாடு மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இன்னும் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் எல்லாம் தமிழில் இளங்கலை (Graduate), முதுநிலை(Post Graduate)  படிப்புகளில் எண்ணற்ற மாணவர்கள் பயின்று வரும் படிப்புகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டிய நெருக்கடியைத் தூண்டவும்;

தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட காப்பியங்கள், கம்ப ராமாயாணம், பெரிய புராணம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், கல்லாடம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில்;

ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட இன்னும் பல உலக மொழிகளில் எல்லாம் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுக்கு எல்லாம், திருத்த பின்னிணைப்புகள் வெளியிட வேண்டிய நெருக்கடியைத் தூண்டவும்;

எனது ஆய்வினை, ஒரு குழுவின் துணையுடன் தொடர வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தவும்;

‘The Pitfalls in the Study & Translation of the Ancient Tamil Texts’   என்ற ஆங்கில நூலை எழுதி முடித்துள்ளேன். இந்தியாவில் அல்லது சிங்கப்பூரில் புகழ் பெற்ற பதிப்பாளர் மூலம் அதனை வெளியிடவும் முயற்சி செய்து வருகிறேன்; தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான 'சிக்னல்கள்' வெளிப்பட்டு வருவதை உணர்ந்து.’ (http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

மேற்குறிப்பிட்ட எனது நூல் வெளியிடும் முயற்சியைத் தொடர்ந்து;

'இசை இழை' தொடர்பான, எனது கண்டுபிடிப்பினை மறுத்து, மேலே குறிப்பிட்ட 'செல்வாக்கான' தமிழ் ஆர்வலர் இரண்டு குறைபாடுகளை எனக்கு தெரிவித்தார். இரண்டிற்கும் உரிய சான்றுகளின் அடிப்படையில் விளக்கத்தினை அனுப்பினேன்.
எனது ஆய்வுகளில் இரண்டு குறைகளை சுட்டிக்காட்டியவருக்கு, நான் அனுப்பிய - அவர் சுட்டிக்காட்டிய-  அந்த இரண்டு குறைகள் தொடர்பான‌ (6 பக்கங்கள் கொண்ட) எனது விளக்கத்திற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல்;

  ““your interpretations are logically flawed and philologically not justified.” என்று;

நான் அனுப்பிய நேரத்திலிருந்து 39ஆவது நிமிடத்தில்; எனக்கு மின்மடல் வந்தது;

'ஆய்வுக்குழாயடி சண்டை' அனுபவமாக.

மேலே குறிப்பிட்ட 'வழிபாட்டுப்போக்கின்' தொடர் விளைவா, இது போன்ற 'ஆய்வுக்குழாயடி சண்டைகள்' ? என்ற ஆய்வுக்கும் நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html

மேலே குறிப்பிட்ட ஆய்வுக்குழாயடி சண்டையில், அரச்சலூர் இசைக்கல்வெட்டு தொடர்பாக கீழ்வரும் மறுப்பானது வந்துள்ளது.

எழுத்தும் புணருத்தான் மலைய்

  வண்ணக்கன் தேவன் சாத்தன்


There is nothing here suggesting musical thread.”

நான் கீழ்வருமாறு உரிய சான்றின் அடிப்படையில்;

‘'எழுத்தும் புணருத்தான் மணிய
வண்ணக்கன் தேவன் சாத்தன்'

- அரச்சலூர் கல்வெட்டு

' ezuttum puNaruttAn maNiya                                                                                        
 vaNNnakkan tEvan cAttan' '
– arachchalUr inscription 12.
Iravatham Mahadevan ,Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century A.D, Cre-A, Chennai, and the Sanskrit Department of Harvard University, Harvard University, Cambridge, U.S., 2003’ 

வெளியிட்டிருந்த கல்வெட்டில் 'மணிய' என்று இருந்த சொல்லினை, எந்த சான்றும் குறிப்பிடாமல் 'மலைய்' என்று திருத்தி, அதன் அடிப்படையில்,

There is nothing here suggesting musical thread 

என்று ஒரே வரியில் மறுத்துள்ளது சரியா?  இது போன்ற வழிகளில் தமிழின் வளர்ச்சியைக் கெடுப்பவர்களின் செல்வாக்கில் ஃபெட்னா போன்ற தமிழ் அமைப்புகள் சிக்கி இருந்தால், அது நல்லதா? கெட்டதா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியலாம்.

'இசை மொழியியல்' (Musical Linguistics) கண்டுபிடிப்பை நோக்கிய ஆய்வில், தமிழ், தமிழ் இசை, தொல்லியல்(Archeology) துறைகளில் தமது ஆய்வு நிலைப்பாடுகள் மீது உடைமையுணர்வுடன் (Possessive) இருந்தவர்களிடம், ஆய்வுக்குழாயடி சண்டை போடுவதை, இயன்றவரை தவிர்த்தே பயணித்து வருகிறேன்.

'இந்திரனுக்கு மகனே கிடையாது. சயந்தன் இந்திரனுக்கு இன்னொரு பெயர்' என்று ஒரு கல்வெட்டு ஆய்வாளர் என்னிடம் தெரிவித்தார். சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ள‌ 'இந்திரனுக்கு மகன் சயந்தன்' என்று, சமஸ்கிருத நூலில் கிடைத்த சான்றானது, எனது இசை மொழியியல் ஆய்வுக்கு வழி வகுத்தது.( http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html ) ஆனால் அந்த ஆய்வாளர், அந்த சான்றினை ஏற்றுக் கொள்ளாமல், தமது நிலைப்பாட்டினையே என்னிடம் வலியுறுத்தினார். ஆய்வுகுழாயடி சண்டையாக தொடர விரும்பாததால், அது பற்றி அவரிடம் விவாதிப்பதை நிறுத்திக் கொண்டேன். 

தமது ஆய்வு நிலைப்பாடுகள் மீது உடைமையுணர்வு(Possessive) இன்றி, புறநானூறு (192) அறிவுறுத்தியபடி;

"மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; (காரியம் சாதிக்க அடிவருடாமல்)
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" (சமூக ஒப்பீடு உயர்வு நோயில் சிக்குவதைத் தவிர்த்து)


பயணித்து, திருக்குறள் (423) வழியில் 'மெய்ப்பொருள்' உணர்ந்து, உரிய திருத்தங்களுடன் மான, அவமானங்களைப் பற்றிய கவலையின்றி, ஆய்வுகுழாயடி சண்டைகளில் நேரத்தை விரயமாக்காமல், எச்சரிக்கையுடன்(Caution) ப‌யணிப்பதன் மூலமே, புலமையைத் தொடர்ந்து வளர்த்து சாதனைகள் படைக்க முடியும். (‘எனது கண்டுபிடிப்புகளின் வெற்றியின் இரகசியம்’; http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none.html )
 

சுயலாப நோக்கின்றி, தமிழின் வளர்ச்சிக்கு பங்காற்றும் அறிவுநேர்மையுள்ள தமிழ் அறிஞர்கள் இருந்தால், அவர்கள் கீழே குறிப்பில் அரச்சலூர் இசைக்கல்வெட்டு தொடர்பான எனது விளக்கத்தினைப் படித்து, பின்னர் மேலே குறிப்பிட்ட மறுப்பையும் படிக்கலாம். அதன்பின் எனது விளக்கத்தில் உள்ள குறைபாடுகளை, உரிய சான்றுகளின் அடிப்படையில் தெரிவித்தால், அவர்களுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்து, உரிய மாற்றங்களுடன் மேலே குறிப்பிட்ட நூலினை நான் வெளியிடுவேன். 

கணபதி ஸ்தபதி வற்புறுத்தலின் பேரில், கட்டிடக்கலையில் உறைந்துள்ள இசையை (Frozen Music) பிரித்தெடுக்கும் 'லாஜிக்' (Logic) தொடர்பான 'ஐந்திம்' சூத்திரங்கள் அடங்கிய கட்டுரையினை சமர்ப்பித்து, கணபதி ஸ்தபதி உருவாக்கிய கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை இலச்சினையாகக் கொண்டகோவையில் நடந்த உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் பங்கேற்றேன். அம்மாநாட்டில் கணபதி ஸ்தபதி, முதல்வர் கருணாநிதியை சந்திக்க முயன்று, இயலாமல் போனதை, என்னிடம் தெரிவித்து மிகவும் வருந்தினார். (தமிழ்நாட்டுதிராவிட’ ‌அரசியலில் சிக்கிய 'ஐந்திறம்' ‘; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_31.html ) 

திருச்சி National Institute of Technology (NIT)-இல், ஒரு ஆய்வுக்குழுவின் துணையுடன், அந்த 'லாஜிக்' அடிப்படையில், கட்டிடக்கலையில் உறைந்துள்ள இசையைப் (Frozen Music) பிரித்தெடுக்கும் (Decipher) சூட்சமமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (http://drvee.in/ )

அதன் அடுத்த கட்டமாக; கட்டிடத்தின் படத்தை உள்ளீடாக(Input) கொடுத்தால், அதில் இருந்து பிரித்தெடுத்து, ஒரு இசைக்கூறு கணினி மென்பொருள் நூலகம்(Library of music structures) உருவாகும்; இசை அமைப்பாளர்கள் கணினியின் துணையுடன் இசை அமைக்கும் வகையில். அது போலவே ஒரு இசையை உள்ளீடாக கொடுத்தால், அதில் உள்மறைந்துள்ள கட்டிடக்கலைக் கூறுகள் கொண்ட மென்பொருள் நூலகம் (library of Arch Design Structures) உருவாகும்; கட்டிடக்கலைஞர்கள் கணினியின் துணையுடன் புதிய கட்டிட வரைபடம் உருவாக்கும் வகையில். 

ஆங்கோர் வாட் பகுதியில் உள்ள கோவில்களின் கட்டிடக்கலைகளில் உறைந்துள்ள இசையினை வெளிப்படுத்தும் வாய்ப்பும், மேற்குறிப்பிட்ட ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது. கணபதி ஸ்தபதியின் ஆய்வுகளையும் அத்துடன் சேர்த்து கணக்கில் கொண்டால், தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் வரும் 'மயன் தொழில் நுட்பம்' தொடர்பான சான்றுகள் மூலமாக, 'ஆங்கோர் வாட்' கட்டிடக்கலையானது, தென் அமெரிக்காவில் உள்ள 'மாயன்' கட்டிடக்கலையுடன் தொடர்பு இருப்பதற்கான, ஆய்வுகளை மேற்கொள்ள முகாந்திரம் இருக்கிறது. (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none.html ) 

இது 'டிஜிட்டல் உலகம்'. எனது தலைமுறை போலின்றி, இன்றைய மாணவர்களும், படித்தவர்களும் உணர்ச்சிபூர்வ பேச்சுக்களில், எழுத்துக்களில் ஏமாற மாட்டார்கள். உள்மறை வேலைத்திட்டங்களுடன் (Hidden Agenda) 'தமிழ்/தமிழ் இசை' வளர்ச்சி என்று ஏமாற்றி, உண்மையான தமிழ் வளர்ச்சிக்கு தடைகளாக பயணிப்பதும் கடினமாகும்.

அவர்களின் வேலை வாய்ப்புகள், தொழில், வியாபார வாய்ப்புகள் தொடர்புள்ளதமிழ் ஆய்வுகளுக்கு (‘தமிழின்  அடுத்த கட்ட (Next Phase) புலமை? (2); புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும்’; http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html ) தடைகளாக பயணிப்பவர்கள் எல்லாம், அவர்களின் கண்காணிப்பில்(scrutiny) சிக்கும் காலமும் நெருங்கி வருகிறது.

Note:

'The following reference also explained how the musical sounding of the letters undergo the proper joining (puNarkka) with the composed poem.
யாழெழுத்திற் பாவாற் புணர்க்க‌’
 - பஞ்ச மரபு - 89

    "yAzh ezuththiR pavAR puNarkka "
-    panja marapu 89.

The string instrument in the ancient Tamil texts was called as yAzh (யாழ்). ‘yAzh ezuththiR’  meant the musical sounding of the letter merging with the properly tuned string of the musical note in yAzh. Also the musical sounding of the letters had to undergo proper rule based joining (puNarkka) applicable to the composed poem.

When a letter with proper musical sound is selected and used in a poetical composition, then the sound of the letter matching the musical note will sound distinctively. A person who is an expert in this act of selecting and using right letters in a colorful poetical composition was cited in the following inscription of 4th century C.E; (challenging a later period dating of tholkAppiam, or suggesting a grammar text prior to tholkAppiam, & reviewing the (Dr.Nagaswamy’s  http://tamizhportal.org/2016/10/tamil-nadu-the-land-of-vedas-part-2/) suggested link of Tamil grammar with that of Sanskrit.) 

'எழுத்தும் புணருத்தான் மணிய
வண்ணக்கன் தேவன் சாத்தன்'
- அரச்சலூர் கல்வெட்டு

' ezuttum puNaruttAn maNiya                                                                                         
 vaNNnakkan tEvan cAttan' '
– arachchalUr inscription 12. 

Iravatham Mahadevan ,Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century A.D, Cre-A, Chennai, and the Sanskrit Department of Harvard University, Harvard University, Cambridge, U.S., 2003 

In the above reference the word “ ezhuttum “ referred to a letter in Tamil. The word “puNaruttAn” referred to the act of selecting and combining the right letters according to the rules in the grammar.  

The role of ‘puNar’ in helping a ‘pAtal’ (lyric) to match paN is explained in the following reference.

'அரும் புணர்ப்பின் பாடல்சாம் பண்'
- நாண்மணிக்கடிகை 47                                                                                

“arum puNarppin  pAtal cAm paN”
-  nANmaNikktikai 47

“a lyric undergoes strict rules of matching a paN(scale & other unique aspects of a song)”

‘vaNNam’ in the above inscription referred to the color of music involving the sound of the letters following strict rules of matching (‘arum puNarppin ‘) a paN. tolkAppiam had defined 20 colours of music which had increased in the period of another ancient Tamil literature  chilappatikaram. ‘tevan cAttan’ in the above inscription referred to the expert in handling the sound of the letters in bring out the colours of Music. Hence the strict rules of matching (‘arum puNarppin ‘) the sound of letters referred to the role of musical thread in color of music in panuval.  Thus a song involving a highly aesthetic musical thread was called panuval.'

From : Decoded Key Words:  'izai இழை’ ;    DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION ;
https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264

No comments:

Post a Comment