எம்.ஜி.ஆர் "ச, ரி, க, ம, ப, த, நி, தமிழா?" என்று கேட்டதை, இருளில் இருந்து மீட்போம் (3)
பினாங்குத் தீவில் கேட்ட கேள்விகளும் பதில்களும்
மலேசியாவில்
பினாங்குத் தீவில் அண்மையில் 'தொல்காப்பியத்தில்
இசை மொழியியல்' (Musical
Linguistics in Tholkappiam) என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தியதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_29.html ) உரையின்
இடைவேளையில் அனைவருக்கும் குடிக்க மூலிகை நீர் வழங்கப்பட்டது. அப்போது
சிலர் என்னிடம் கீழ்வரும் கேள்வியைக் கேட்டார்கள்.
'ச,
ரி, க, ம, ப, த, நி தமிழே'
என்பதும், இசையில் 'சுருதி' என்ற பொருளில் 'அத்தம்'
என்ற சொல்லானது சங்க இலக்கியங்களில் பயன்பட்டதும்,
உரையாசிரியர்கள் இசை தொடர்பான சொற்கள்
இடம் பெற்ற பகுதிகளில் தவறாக விளக்கம் தந்துள்ளதை உரிய சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டதும்,
ஏன் இன்னும் தமிழ்நாட்டு பாடத்திட்டங்களில் இடம் பெறவில்லை?'
மேற்குறிப்பிட்ட
கேள்விக்கு, கீழ்வருமாறு விளக்கம் அளித்தேன்.
‘எனது
கண்டுபிடிப்புகளை பாராட்டியவர்களில் கீழ்வருபவர்கள் எல்லாம் முக்கிய பொறுப்புகள் வகித்தவர்கள் ஆவர்;
பேரா.வி.ஜெயதேவன் ‘Oxford English-English-Tamil
Dictionary’- Consultant editor, சென்னைப்
பல்கலைக்கழகத்தின் தமிழ் லெக்சிகன் மறுபதிப்பு குழுவின் தலைவர், தமிழ்த்துறை தலைவர்;
முனைவர்.வீ.அரசு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறை தலைவர்;
முனைவர்
பொற்கோ சென்னைப்பல்கலைகழக துணை வேந்தர்;
முனைவர்
ம.இராசேந்திரன், தமிழ்ப்பல்கலைகழக துணை வேந்தர், ஆசிரியர்
'கணையாழி' இதழ்;
முனைவர்
ஆர்.தாண்டவன், சென்னைப்பல்கலைகழக துணை வேந்தர்;
தமிழ்
தொடர்பான படிப்புகளில் எனது கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்திய
குறைகளை சரி செய்ய, மேலே
குறிப்பிட்ட நபர்கள், என்னென்ன
முயற்சிகள் மேற்கொண்டார்கள்? என்பதானது அவர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்’ (http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_13.html
)
தமிழ்நாட்டில்
ஜெயலலிதா, கருணாநிதி, பிரபாகரன் 'வழிபாடு வலைப்பின்னல்களில்' இடம் பெறாமல், தனித்து
அறிவுபூர்வ விமர்சனப்பார்வையோடு நான் பயணித்து வருவதே,
மேலே குறிப்பிட்ட இருட்டடிப்புக்கு காரணமாக இருக்கலாம்'
மேலே
குறிப்பிட்ட விளக்கத்தினை கேட்ட பின், கேள்வி கேட்டவர்கள் அமைதியாயினர். (‘தமிழ்நாட்டு ‘திராவிட’ அரசியலில் சிக்கிய திருக்குறள் ஆய்வுகள்’; http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html
)
‘தமிழ்நாடானது
அரசியல் நீக்கத்தில் (depoliticize), 'ஆதாய அரசியலில்' பயணித்து
வருவதை, ஏற்கனவே விளக்கியுள்ளேன். அரசியல் நீக்கத்தில், கொள்கைகள் எல்லாம் சருகாகி, 'தனிநபர் விசுவாசம்' அரங்கேறுவதானது தவிர்க்க இயலாததாகும். அந்த வகையில் தமிழ்நாட்டில்,
'தனிநபர் விசுவாசம்' அடிப்படையில் மக்கள் செல்வாக்கோடு பயணித்த தலைவர்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்
வரிசையில் கடைசி தலைவர் ஜெயலலிதா ஆவார்.’ (http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post.html
)
எனது
கண்டுபிடிப்புகள் வெளிவந்த காலத்தில் எம்.ஜி.ஆர்
முதல்வராக இருந்திருந்தால், அவை உடனே
வெளிச்சத்திற்கு வந்திருக்கும்;
என்பதும்
எனது கருத்தாகும் (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_31.html
); கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வடித்த, தமிழ்ப்பல்கலைக்கழக கட்டிடங்களை உருவாக்கிய கணபதி ஸ்தபதி, என் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், என்னை 'மயன் வாரிசாக' பாராட்டியிருந்த பின்னணியில்.
‘ஜெயலலிதாவின்
மரணம் மற்றும் தி.மு.க
தலைவர் மு.கருணாநிதியின் நோய்
ஆகியவற்றிற்குப் பின் தமிழுக்கு கேடான
அந்த போக்குகள் எல்லாம் முடிவை நெருங்குகின்றன, என்பதும் எனது கணிப்பாகும்….. எனவே
எம்.ஜி.ஆர் கேட்ட
கேள்விக்கான விடையாக, ஆபிரகாம் பண்டிதர் வெளிப்படுத்தி இருளில் நீடித்த, 'ச, ரி, க,
ம, ப, த, நி தமிழே'
என்ற கண்டுபிடிப்பும், அதன் தொடர்ச்சியான இருளில்
நீடித்த, அரச்சலூர், குடுமியான் மலை இசைக்கல்வெட்டுகள் தொடர்புடைய எனது
கண்டுபிடிப்புகளும், வெளிச்சத்திற்கு வருவதானது தொடங்கி விட்டது.’ (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_25.html
) மேலே குறிப்பிட்ட பினாங்கு தீவில் நடந்த 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' நிகழ்ச்சியே,
அந்த தொடக்கமாகும்.
அந்த
கூட்ட முடிவில், பினாங்குத் தீவு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி
மாணவர்களில் ஒருவர் என்னிடம் கீழ்வரும் கேள்வியைக் கேட்டார்.
'தொல்காப்பியத்தில்
இசை மொழியியல்' உள்ளிட்ட உங்களின் கண்டுபிடிப்புக்களை, மாணவர்கள் பார்வைக்கு எப்படி கொண்டு செல்வது?'
மேற்குறிப்பிட்ட
கேள்விக்கு கீழ்வருமாறு விளக்கமளித்தேன்.
‘பினாங்கு
ஆசிரிய பயிற்சிக்கல்லூரிகளின் பாடத்திட்டக்குழுவில் ஆலோசகராக (consultant) நான் இடம் பெற்று,
பாடத்திட்டத்தினையும், பயிற்சிப் பாடங்களையும் (Course Materials) உருவாக்கி,
கல்லூரி விரிவுரையாளர்களுக்கு 'புத்தொளிப்பயிற்சி' (Refresher
Course) வழங்கி, அமுல்படுத்தினால், அது சாத்தியமாகும்.
அது
சாத்தியமானால், பினாங்கு தீவில் மாணவர்கள் பெறும் பலன்களின் அடிப்படையில், தமிழ்நாடு மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட இன்னும் பல நாடுகளில் உள்ள
பல்கலைக்கழகங்களில் எல்லாம் தமிழில் இளங்கலை (Graduate), முதுநிலை(Post Graduate) படிப்புகளில்
அவை அறிமுகமாகும்.
அதன்
தொடர்ச்சியாக;
தொல்காப்பியம்,
திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம்
உள்ளிட்ட காப்பியங்கள், கம்ப ராமாயாணம், பெரிய
புராணம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், கல்லாடம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில்;
ஆங்கிலம்,
பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட இன்னும் பல உலக மொழிகளில்
எல்லாம் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுக்கு எல்லாம், திருத்த பின்னிணைப்புகள் வெளியிட வேண்டிய நெருக்கடியைத் தூண்டவும்;
எனது
ஆய்வினை, ஒரு குழுவின் துணையுடன்
தொடர வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தவும்;
'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION' -https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264 என்ற ஆங்கில நூல் மிகுந்த வரவேற்புடன் உலக
அரங்கில் இடம் பெறும். (http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_13.html
)
சென்னை
வெள்ள நிவாரணம் மூலம் அரசியல் கட்சிகளை வால்களாக்கி நிரூபித்த, மாணவர்களும், இளைஞர்களும் தமிழ்நாட்டை ஊழல் வெள்ளத்திலுருந்து மீட்க, சாத்தியமான
வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில்;
நிகழ்காலத்தில்
புதிய நிறைய தொழில், வியாபார, வேலைவாய்ப்புகள் தொல்காப்பியம் மூலமாக உருவாகும் காலம் நெருங்கி விட்டதானது (http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_29.html
);
அவர்களின்
கவனத்தை ஈர்க்கத் தொடங்கியதும், மேலே குறிப்பிட்டவை எல்லாம்
விரைவில் நடந்தாலும் வியப்பில்லை.
No comments:
Post a Comment