தமிழ்நாட்டின்
திருப்பு முனையில் நலன்களின் மோதல்;
தண்ணீரில் இருந்து தரைக்கு வந்துள்ள முதலையா சசிகலா?
“முதல்வராக
சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்ற, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையின்
அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் உள்ளது………… அரசியல் சட்டப்படி, கவர்னர் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி, சசிகலா முதல்வராக வேண்டும் என, ஒரு அறிக்கையை,
தம்பிதுரை வெளியிட்டிருக்கிறார். எனவே, முதல்வருக்கு உள்ள பலத்தை, சட்டசபையில்
உடனடியாக நிரூபிக்க உத்தரவிட வேண்டும். “ என்று
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் கோரியுள்ளதானது, இந்திய அரசியல் சட்டப்படி, சரியானது என்பதால், ஆளுநர் அதனை பரிசீலித்து, சட்டத்தின்
செயல்பாடானது தமிழ்நாட்டில் அமுலில் இருப்பதை நிரூபித்தாக வேண்டும். (http://www.dinamalar.com/news_detail.asp?id=1682344
)
தம்பிதுரையில்
அறிக்கை ஜனநாயகத்தை மட்டும் சீர்குலைப்பதாக இல்லை; கூடுதலாக அ.இ.அ.தி.மு.கவின்
பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவின் தலைமையையும், தலைமையேற்ற சில நாட்களிலேயே, சீர்குலைத்துள்ளதா?
என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தம்பிதுரை
மட்டுமின்றி, தமிழக அமைச்சர்கள் சிலரும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா
செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக கோரியுள்ளதானது, முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, சட்டசபையில் பெரும்பான்மை பலம் இருக்கிறதா? என்று
நிரூபிக்க வேண்டிய, அரசியல் சட்டரீதியிலான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் தொடர்வதா? வேண்டாமா? என்று விவாதிப்பதும், முடிவெடுப்பதும், ஆளுங்கட்சிக்குள் நடைபெற வேண்டிய ஒன்றாகும். அந்த விவாதம், பொது
அரங்கில், மீடியா வெளிச்சத்தில் வெளிப்படுவதானது, ஆளுங்கட்சியின் தலைமையின் பலகீனத்தை உலகுக்கு பறை சாற்றுவதாகாதா? முதல்வர்
ஓ.பன்னீர்செல்வமும், தம்பிதுரையும், முதல்வரை பதவி விலக கோரிய
அமைச்சர்களும், சசிகலாவின் காலில் விழுவதெல்லாம் நாடகமா? தமிழ்நாட்டில் இதற்கு முன், இது போல, நடந்ததுண்டா? ஜெயலலிதா தலைமையில் கட்சி இருந்த போது, கட்சியின் உள்விவகாரங்களை, இது போல் மீடியாவில் தம்பிதுரையும், பிற அமைச்சர்களும் வெளிப்படுத்தியதுண்டா?
பொதுஅரங்கில்
ஆளுங்கட்சியை அவமதிக்கும் இந்த போக்குகள் எந்த
சமூக இயக்கவியலின் (Social Dynamics) அடிப்படையில்
இயங்குகின்றன? என்ற ஆய்வின் மூலம்,
தமிழ்நாட்டின் அடுத்த கட்டம் பற்றிய வெளிச்சத்தை பெறலாம்.
கட்சியின்
தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தொடங்கி, அடிமட்ட தொண்டர் வரை, ஒவ்வொருவரும் பொதுநலன்
விரும்பியோ, அல்லது சுயநலம் விரும்பியோ, அல்லது இரண்டிலும் ஒன்று கூடுதலாகவும்,இன்னொன்று குறைவாகவும் இரண்டும் கலந்தோ செயல்படலாம்.
தமக்கு எதிரான சதி என்று ஜெயலலிதா வெளிப்படுத்தி, சசிகலாவும் அதை தனது மன்னிப்பு கடிதத்தில் ஒப்புக் கொண்டு; அது தொடர்பாகவும்;
ஜெயலலிதா அப்பொல்லோவில் சேர்க்கப்பட்டது முதல் மரணமடைந்து இறுதி சடங்குகள் நிகழ்ந்தது வரை, எழுப்பப்படும் ஐயங்கள் தொடர்பாகவும்;
இதுவரை சசிகலா விளக்கம் தராத நிலையிலும், அவரை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டவர்கள் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகளா? அல்லது தமது சுயநலனுக்காக, ஜெயலலிதா, சசிகலா மட்டுமல்ல, எவரையும் காவு கொடுக்க தயங்காத சுயநல பேர்வழிகளா?
அவர்களின் ஆதரவானது சசிகலாவிற்கு பலமா? பலகீனமா?
ஜெயலலிதா அப்பொல்லோவில் சேர்க்கப்பட்டது முதல் மரணமடைந்து இறுதி சடங்குகள் நிகழ்ந்தது வரை, எழுப்பப்படும் ஐயங்கள் தொடர்பாகவும்;
இதுவரை சசிகலா விளக்கம் தராத நிலையிலும், அவரை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டவர்கள் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகளா? அல்லது தமது சுயநலனுக்காக, ஜெயலலிதா, சசிகலா மட்டுமல்ல, எவரையும் காவு கொடுக்க தயங்காத சுயநல பேர்வழிகளா?
அவர்களின் ஆதரவானது சசிகலாவிற்கு பலமா? பலகீனமா?
தமது
காலில் விழுபவர்களில் யார்? யார்? வாய்ப்பு கிடைக்கும்போது, தமது காலை வாரி,
தம்மை படுகுழியில் தள்ளப் போகிறார்கள்? என்ற கவலையானது, சசிகலாவிற்கு
இருந்தால், வியப்பில்லை, என்பது தொடர்பான தகவல்களை அடுத்து பார்ப்போம்.
அ.இ.அ.தி.மு.கவைப் பொறுத்தமட்டில்,
ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கியவர்களில் கணிசமானோர், கடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவிற்கே துரோகம் இழைத்ததை, அவரே கண்டுபிடித்து பதிவு
செய்துள்ளார்.
“தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய,
இரண்டு கட்சிகளிலுமே பெரும்பாலான தொண்டர்களும், தலைவர்களும் கொள்கை அடிப்படையில் தேர்தல்பணி ஆற்றினார்களா? அல்லது 'தலைமைக்கு விசுவாசம்' என்ற அடிப்படையில்,
'உழைப்புக்கு பலன் கிடைக்கும்' என்ற
எதிர்பார்ப்பில், பணியாற்றினார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அரசியல் வெளியில் (political
space) பயணிக்கும்
கட்சிகளில், பெரும்பாலான தொண்டர்களும், தலைவர்களும் கொள்கை
அடிப்படையில், தேர்தல் பணியாற்றுவார்கள். 'அரசியல் நீக்கம்' (Depoliticize) போக்கில், அரசியல் வெளியை காலி செய்து பயணிக்கும்
கட்சிகளில், அவர்கள் எல்லாம், 'சுயலாப'
நோக்கில், தேர்தல் பணியாற்றுவார்கள்; அதே நோக்கில் 'உள்குத்து'
வேலைகளிலும் ஈடுபட்டு; தேர்தலில் ‘செலவழிக்க’
(?) கொடுத்த பணத்திலும் ஆட்டையைப் போட்டு.”
2016 சட்டமன்ற
தேர்தல் முடிவுகளுக்குப் பின், வெளிவந்தவைகளில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது கட்சியின் செயற்குழு கூட்டத்தில்
நிகழ்த்திய உரை தொடர்பான, கீழ்வரும்
செய்தியானது, எனது ஆய்வில் முக்கிய
இடம் பெற்றுள்ளது.
“ஆவேசம்
தேர்தலின்
போது நம்பிய பலர் துரோகம் செய்ததாக
ஜெயலலிதா...
பணத்தை
அமுக்கியவர்கள் மீது நடவடிக்கை பாயும்
என எச்சரிக்கை”
'பெரியார்'
ஈ.வெ.ரா 1948 தூத்துக்குடி
மாநாட்டு உரையில் வெளிப்படுத்திய ஆவேசத்திற்கும், முதல்வர்
ஜெயலலிதாவின் ஆவேசத்திற்கும், நிறைய
ஒற்றுமைகள் இருப்பதில் வியப்பில்லை, என்பதை கீழ்வருபவை உணர்த்துகின்றன.
“பிற
கட்சிகளில் எல்லாம், பணம் வாங்கிக் கொண்டு,
'சீட்' தருகின்றனர். நான் கட்சியின் அடிமட்ட
தொண்டர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு சீட் கொடுத்து, தேர்தல்
செலவுக்கு பணமும் கொடுத்தேன். ஆனால், மாவட்ட செயலர்களில் பெரும்பாலானோர், பணத்தை பதுக்கி விட்டனர். வேட்பாளர்களில் சிலரும், பணத்தை செலவு செய்யவில்லை.
சிலர்,
தங்கள் மாவட்டத்தில், வேறு யாரேனும் வெற்றி
பெற்றால், தங்களுக்குஅமைச்சர் பதவி கிடைக்காமல் போகலாம்
என்ற எண்ணத்தில், அவர்களை தோற்கடிக்க பாடுபட்டுள்ளனர்.
ஒருவரை
மாவட்ட செயலராக்கினால், அவர் தன் உறவினரை
மாவட்ட செயலராக்கி விட்டு, தி.மு.க.,
மாவட்ட செயலருடன் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டு செயல்பட்டுள்ளார். இவை எல்லாம் எனக்கு
தெரியாது என, நினைக்கிறார்.
கட்சி
நிதி என்ற பெயரில், அவர்
பணம் வசூலித்ததும், அவரது நண்பர் எவ்வளவு சம்பாதித்தார் என்பதும், எனக்கு தெரியும்.
ஒரு
மாவட்ட செயலர், தன் மாவட்டத்தில் மற்றவர்களை
தோற்கடிக்க, வேலை பார்த்து விட்டு,
அவர் மட்டும் எம்.எல்.ஏ.,வாகி உள்ளார்.
ஒரு மாவட்ட செயலர்,
மாவட்டத்தில், நம் கட்சியினரை தோற்கடிக்க
பணம் கொடுத்துள்ளார்.
லோக்சபா
தேர்தலில், 37 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தோம். அதன்படி, சட்டசபை தேர்தலில், 217 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இரண்டு
ஆண்டுகளில், அதிருப்தி ஏற்படும் வகையில், நாம் எதுவும் செய்யவில்லை;
ஆனாலும், அதிக இடங்களை இழந்துள்ளோம்.
இதற்கு காரணம், நம் கட்சியினர் செய்த
உள்ளடி வேலைதான். நான் நம்பிய பலர்
துரோகம்செய்து விட்டனர். (இவ்வாறு கூறும் போது கண் கலங்கினார்)
சிலர்
எனக்கு விசுவாசமாக இருக்காமல், மாவட்ட செயலர்களுக்கும், பிறருக்கும் விசுவாசமாக உள்ளனர்.
தி.மு.க.,வை
வளர விடக்கூடாது என, உழைக்கிறோம். சிலர்
அக்கட்சியுடன் கைகோர்த்து, நம் வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர்.
அவர்கள் பட்டியல் என்னிடம் உள்ளது. பணத்தை பதுக்கியவர்கள் விவரமும் உள்ளது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பதவி
இல்லாமல், சாதாரண தொண்டனாக இருக்கும் போது நல்லவராக இருக்கின்றனர்.
அவர்கள் கஷ்டத்தை பார்த்து, பதவி கொடுத்தால், தங்களுடைய
சுயரூபத்தை காட்டுகின்றனர். “
முதல்வர்
ஜெயலலிதாவின் ஆவேசத்திற்கு காரணமானவர்கள் எல்லாம், நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கான, 'தகுதி,
திறமைகள்' இல்லாத சிற்றின மனிதர்களே ஆவர். அத்தகையோரை அனுமதிக்கும், கட்சியும் சரி, குடும்பமும் சரி,
அவர்களின் 'சுயரூபம்' வெளிப்படும் வாய்ப்பு வரும் போது, அதனால் விளையும் சீர்குலைவிலிருந்து தப்பமுடியாது.
அந்த
சிற்றின மனிதர்கள் எல்லாம், வசதி குறைவில் இருக்கும்
போது நம்மிடம் காண்பிக்கும் விசுவாசம் எல்லாம், நம்மை ஏணியாக்கி வளரும் உள்நோக்கத்திலான நடிப்பு ஆகும். வாய்ப்பு கிடைத்தால், தமது வளர்ச்சிக்காக, எல்லா
மனித மதிப்பீடுகளையும் காவு கொடுத்து, மனித
மிருகங்களான, தமது சுயரூபத்தை வெளிப்படுத்துவார்கள்,
என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( ‘'பெரியார்' ஈ.வெ.ராவின்
ஆவேசமும், முதல்வர் ஜெயலலிதாவின் ஆவேசமும்’;
http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post_20.html)
http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post_20.html)
ஜெயலலிதா
மட்டுமின்றி, தி.மு.க
உள்ளிட்டு பெரிய, சிறிய கட்சிகளின் தலைவர்கள் எல்லாம், கடந்த சட்டமன்ற தேர்தலில், தத்தம் கட்சிகளில் யார்? யார்? 'உள்குத்து'வேலைகளில் ஈடுபட்டவர்கள்? என்ற ஆய்வில் இறங்கி,
கவலையை வெளிப்படுத்திய தகவல்களும், ஊடகத்தில் கசிந்துள்ளன.
ஜெயலலிதாவிற்கே
துரோகம் இழைத்தவர்கள், சசிகலாவிற்கு
துரோகம் இழைக்க மாட்டார்களா?
தமிழ்நாடானது
அரசியல் நீக்கத்தில், 'ஆதாய அரசியலில்' பயணித்து
வருவதை, ஏற்கனவே விளக்கியுள்ளேன். அரசியல் நீக்கத்தில், கொள்கைகள் எல்லாம் சருகாகி, 'தனிநபர் விசுவாசம்'அரங்கேறுவதானது தவிர்க்க இயலாததாகும். அந்த வகையில் தமிழ்நாட்டில்,
'தனிநபர் விசுவாசம்' அடிப்படையில் மக்கள் செல்வாக்கோடு பயணித்த தலைவர்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்
வரிசையில் கடைசி தலைவர் ஜெயலலிதா ஆவார்.
ஜெயலலிதாவை
கொல்ல சதி செய்ததாக, புகழ்பெற்ற
'தெகல்கா' இதழில் வெளிவந்த; (Was Sasikala
Giving Slow Poison To Jayalalithaa, Tehelka Report Says So;
http://www.indiatvnews.com/news/india/was-sasikala-giving-slow-poison-to-jayalalithaa-tehelka-report-says-so-13994.html ) செய்தியானது,
தமிழ் மட்டுமே தெரிந்த, ஜெயலலிதாவின் விசுவாசிகளின் பார்வைக்கு போகாமல் இருந்திருக்கலாம்.
ஆனால்
ஜெயலலிதா இன்றைக்கு பொதுச் செயலாளராக பதவி ஏற்றிருக்கும் சசிகலாவும்,
அவருக்கு பக்க பலமாக இருக்கும்
சசிகலாவின் உறவினர்களும் தனக்கு எதிராக சதி செய்ததை காரணம்
காட்டி, போயஸ் கார்டனை விட்டு சசிகலாவை 'மீடியா வெளிச்சத்துடன்' துரத்தி;
'அவ்வாறு
சதி நடந்தது உண்மை தான்; ஆனால் எனக்கு தெரியாமல்' என்ற வகையில் சசிகலாவும்
'மீடியா வெளிச்சத்துடன்' ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ள நிலையில்;
ஜெயலலிதாவின் விசுவாசிகளிடம்
வெளிப்படும் எதிர்ப்பை,தமக்கு ஒத்து வரும் மீடியாக்களின் துணையுடன் இருட்டில் வைத்தாலும், வரும் உள்ளாட்சி தேர்தல்களில், சட்டசபை இடைத்தேர்தல்களில் அதன் விளைவை, சந்திப்பதிலிருந்து
தப்ப முடியுமா?
'அதே போல, ஜெயலலிதாவின்
அண்ணன் மகள், அப்பல்லோ மருத்துவமனை சென்ற போது, ஜெயலலிதாவை பார்க்க விடாமல் தடுத்ததாக, 'சசிகலா' மீது குற்றம் சுமத்திய
செய்தியும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்த செய்தி வந்தவுடன்,
அது எவ்வளவு பெரிய சமூக குற்றம்? என்பதை
சசிகலாவின் உறவினர்களில், நண்பர்களில் எவராவது உணர்ந்து, அதனை சசிகலாவின் கவனத்திற்கு
கொண்டு சென்றார்களா? இல்லையா? அந்த சமூக குற்றத்தை
பற்றி, எந்த கட்சித் தலைவர்களோ,
பத்திரிக்கைகளோ கவலைப்பட்டு கண்டித்தார்களா? அவ்வாறு கண்டித்திருந்தால், தனது அத்தை முகத்தை
உயிரோடு மருத்துவமனையில் 74 நாட்கள்
இருந்தபோதே பார்க்க முடியாத
நிலைமை, அந்த பெண்ணுக்கு வந்திருக்குமா?”
( ‘முதல்வர்
ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையும் மரணமும்; சட்டமும், சமூக நெறிகளும் பற்றிய
அபாய எச்சரிக்கைகள்’;
http://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_5.html)
http://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_5.html)
ஒரு
மாநில முதல்வர் என்பவர் உடல் அளவிலும், மனதளவிலும்
முதல்வருக்கான பொறுப்புகளை நிறைவேற்ற தகுதியானவர் என்று ஆளுநர் திருப்தியில் உள்ளவரை தான் முதல்வர் பதவியில்
நீடிக்க முடியும்.
சம்பிரதாயங்களுக்கும்,
சட்டத்திற்கும், அல்லது ஈ.வெ.ரா
அவர்கள் முன்னிறுத்திய 'பகுத்தறிவு'க்கும், அப்பாற்பட்டு, அதிகார வழிபாட்டு போக்கில், சம்பிரதாயங்களும், சட்டமும், 'பகுத்தறிவு'ம் தத்தம் முதுகெலும்பை
இழந்த திசையில், தமிழ்நாடு பயணிக்கிறதா? அது திராவிட அரசியலின்
சாதனையா? அது
எப்போது முளை விட்டு, எப்படி
வளர்ந்தது? என்ற கேள்விகளை, எவ்வளவு
காலம் தான் இருட்டில் வைக்க
முடியும்? ( ‘- விஜயகாந்த் வழியில் சசிகலா நாமும் அவமரியாதை தமிழர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க
முடியுமா?’;
http://tamilsdirection.blogspot.com/2016/12/depoliticize.html) என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
http://tamilsdirection.blogspot.com/2016/12/depoliticize.html) என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
ஜெயலலிதா
மூலம் சதி பழிக்குள்ளாகி, மன்னிப்பு
மூலம் போயஸ் கார்டனில் அனுமதிக்கப்பட்ட சசிகலா போல, எம்.ஜி.ஆரின் மனைவியாக இருந்து, எம்.ஜி.ஆரால் எந்த
பழிக்கும் உள்ளாகாத ஜானகி எம்.ஜி.ஆரை,
கட்சித்தலைவர்கள் தத்தம் சுயநலன்களுக்காக முதல்வராக்கி, பின் சட்டசபை தேர்தலை
சந்தித்த போது, டெபாசீட் கூட வாங்க முடியாமல்
தோற்று, அவமானத்திற்குள்ளாகி, அரசியலில் இருந்து ஒதுங்கியது, எதை உணர்த்துகிறது?
அடிமட்ட
தொண்டர்களின் விசுவாசத்தை பெறாமல், 'ஆதாய தலைவர்களின்' ஆதரவை
மட்டுமே நம்பி, பயணிப்பவர்களுக்கு, ஜானகி எம்.ஜி.ஆர்
ஒரு வரலாற்று பாடமானார். ஜானகி எம்.ஜி.ஆரைப் போலன்றி, அடிமட்ட தொண்டர்கள் மட்டுமின்றி, அடித்தட்டு மக்களின் அன்பையும் பெற்ற ஒரு தலைவரான ஜெயலலிதா, சம்பிரதாயங்களும், சட்டமும், 'பகுத்தறிவு'ம் தத்தம் முதுகெலும்பை இழந்த திசையில், அமாவாசைகளின் அதிகார வழிபாட்டுப் போக்கினை ஊக்குவித்து பயணித்த 'பாவம்' காரணமாக; எத்தகைய மரணத்தை தழுவினார்? எத்தகைய இறுதி சடங்கு அவருக்கு நிறைவேறியது? என்பது மட்டுமல்ல; மரணத்திற்குப் பின்னும், எத்தகைய அவமானம் நேர்ந்துள்ளது? என்பதற்கான ஒரு சான்று:
ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இன்று அவரையே மறந்து அவரது படம் போட்ட காலண்டர்களை குப்பையில் வீசியுள்ளதாக அடிமட்டத் தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். http://tamil.oneindia.com/news/tamilnadu/calendars-thrown-into-dustbin-which-is-carrying-jayalalitha-image/slider-pf217952-270965.html
சசிகலா மட்டுமின்றி, ஆதாய அரசியலில் பயணிக்கும் அனைத்து தலைவர்களுக்கும், எச்சரிக்கை தரும், வரலாற்று பாடமாகி விட்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இன்று அவரையே மறந்து அவரது படம் போட்ட காலண்டர்களை குப்பையில் வீசியுள்ளதாக அடிமட்டத் தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். http://tamil.oneindia.com/news/tamilnadu/calendars-thrown-into-dustbin-which-is-carrying-jayalalitha-image/slider-pf217952-270965.html
சசிகலா மட்டுமின்றி, ஆதாய அரசியலில் பயணிக்கும் அனைத்து தலைவர்களுக்கும், எச்சரிக்கை தரும், வரலாற்று பாடமாகி விட்டார் ஜெயலலிதா.
தி.மு.க பொருளாளர்
ஸ்டாலினுக்கு,அ.இ.அ.தி.மு.கவைப்
போல, கட்சிக்குள் 'தடைகளின்றி' செயல்பட வாய்ப்பிருந்திருந்தால், ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வராகியிருக்க முடியுமா? என்ற கேள்வியையும் ஏற்கனவே
பார்த்தோம். (‘2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்பட்ட 'சிக்னல்'; அரசியல்
வெளி (Political Space)
காலியாகி விட்டதா? அந்த அரசியல் வெற்றிடத்தை
ஆக்கிரமிக்கும்,சமூக செயல்நுட்பம்?;
http://tamilsdirection.blogspot.com/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html )
http://tamilsdirection.blogspot.com/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html )
'கரணம்
தப்பினால் மரணம்' என்ற வகையில், கடந்த
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார்.
தற்போது சசிகலா பொறுப்பேற்று சில தினங்களுக்குள்ளாகவே, தம்பிதுரையும், சில
அமைச்சர்களும் சசிகலாவின் தலைமையை கேலிக்குள்ளாக்கியுள்ளார்களா?
சசிகலா
குடும்பத்தினரின் அச்சுறுத்தலுக்குள்ளாகி தமது சொத்தை விற்ற,
கங்கை அமரன் போன்ற ஒவ்வொருவரும் துணிச்சலுடன் பேசத் தொடங்கியுள்ளனர். http://www.vikatan.com/news/coverstory/76049-sasikala-encroached-my-land-illegally-alleges-gangai-amaran.art )தமிழ்நாடெங்கும் அடிமட்ட தொண்டர்கள் சசிகலாவின் தலைமையை நிராகரித்து வருவதானது, குமரி முதல் சென்னை வரை அரங்கேறி வருகிறது. உதாரணத்திற்கு ஒன்று:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கலந்தாய்வு கூட்டம்;
கீரங்கலத்தில் உள்ள 14 அ.தி.மு.க கிளைகளும் கலைக்கப்பட்டுள்ளன, தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து; 'தமிழக அரசியல்'; 04 - 01 - 2017
‘அதிமுக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்ற அதே நேரத்தில் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தின் பல இடங்களில் துக்க தினமாக அதிமுகவினர் அனுசரித்தனர்.’ (http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-cadre-commits-suicide-against-sasikala-elect-as-cm-271009.html)
“ஜெயலலிதாவால், ஐந்து ஆண்டுகள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு, பின் மன்னிப்பு கடிதம் கொடுத்து இணைந்த சசிகலாவை, பதவியிலிருப்போர் தங்கள் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஆதரிக்கலாம்; அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.”- அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்நிலை பேச்சாளர் ஜெயவேல், கட்சியிலிருந்து விலகி, வெளியிட்ட அறிக்கையில். http://www.dinamalar.com/news_detail.asp?id=1683079
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கலந்தாய்வு கூட்டம்;
கீரங்கலத்தில் உள்ள 14 அ.தி.மு.க கிளைகளும் கலைக்கப்பட்டுள்ளன, தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து; 'தமிழக அரசியல்'; 04 - 01 - 2017
‘அதிமுக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்ற அதே நேரத்தில் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தின் பல இடங்களில் துக்க தினமாக அதிமுகவினர் அனுசரித்தனர்.’ (http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-cadre-commits-suicide-against-sasikala-elect-as-cm-271009.html)
“ஜெயலலிதாவால், ஐந்து ஆண்டுகள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு, பின் மன்னிப்பு கடிதம் கொடுத்து இணைந்த சசிகலாவை, பதவியிலிருப்போர் தங்கள் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஆதரிக்கலாம்; அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.”- அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்நிலை பேச்சாளர் ஜெயவேல், கட்சியிலிருந்து விலகி, வெளியிட்ட அறிக்கையில். http://www.dinamalar.com/news_detail.asp?id=1683079
திருக்குறள் ( 471) நெறி மறந்து, ஜானகி எம்.ஜி.ஆர் வழியில், அவர் சந்தித்ததை விட, இன்னும் மோசமான விளைவுகளை சந்திக்க உள்ள திசையில், சசிகலாவின் அரசியல் பயணமானது, துவங்கி விட்டது.
ஜெயலலிதாவை முன்னிறுத்தி, பயணித்தது வரை, நீரில் முதலையாக இருந்த சசிகலா, பொதுச் செயலாளர் பதவி மூலம், நீரை விட்டு 'அதிக தூரம்' தரைக்கு வந்த முதலையாகி விட்டாரா?
ஜெயலலிதாவை முன்னிறுத்தி, பயணித்தது வரை, நீரில் முதலையாக இருந்த சசிகலா, பொதுச் செயலாளர் பதவி மூலம், நீரை விட்டு 'அதிக தூரம்' தரைக்கு வந்த முதலையாகி விட்டாரா?
'துக்ளக்'
ஆசிரியர் குருமூர்த்தியின் அபாய எச்சரிக்கையை அறிவுபூர்வமாக
அணுகியிருந்தால், இந்த நிலை வந்திருக்குமா?
என்ற கேள்விகள் எழுவது சரியா? தவறா? என்பது அடுத்த சில மாதங்களிலேயே தெளிவாகும்;
சென்னை
வெள்ள நிவாரணம் மூலம் அரசியல் கட்சிகளை வால்களாக்கி நிரூபித்த, மாணவர்களும், இளைஞர்களும் தமிழ்நாட்டை ஊழல் வெள்ளத்திலுருந்து மீட்க, சாத்தியமான
வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில்.
No comments:
Post a Comment