Monday, December 19, 2016

தமிழக அரசியல்  நீக்கம் (Depoliticize)  முடிவுக்கு வரும் காட்சிகள்:

                - விஜயகாந்த் வழியில் சசிகலா -


நாமும் அவமரியாதை தமிழர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?


விஜயகாந்த் வழியில், அவர் சந்தித்திருப்பதை விட, இன்னும் மோசமான விளைவை சந்திக்கும் திசையில், சசிகலா பயணிக்க தொடங்கி விட்டாரா? என்ற கேள்விக்கு, கீழ்வரும் தகவல் இடம் அளித்துள்ளது.

தற்போது ஜெ.,மறைந்ததையடுத்து அவரது இடத்திற்கு வர துடிக்கும் சசிகலாவிற்கு ஆதரவும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி உட்பட பல அமைச்சர்கள் ஜெ.,படத்திற்கு மலர் தூவி , சசிகலா காலில் விழுந்து வணங்கி சென்ற காட்சி வீடியோவாகபதிவாகியுள்ளது.        

சசிகலாவுக்கு மாற்றாக‌ ஜெயலலிதாவின் அண்ணன் மகளான‌ தீபாவை ஆதரிக்கும் முயற்சிகள் எல்லாம், தமிழ்நாடு எந்த அளவுக்கு ஆதாய அரசியலில், அரசியல் நீக்கப் (Depoliticize) போக்கில் பயணித்து வந்துள்ளது? என்ற ஆய்வுக்கும் துணை புரியலாம்.

பொது மக்களிடம், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களிடம் நல்ல பேர் எடுக்க வேண்டுமானால், நமது பேச்சுக்கும், எழுத்துக்கும், வாழும் வாழ்வுக்கும் இடையே 'சுருதி பேதம்' இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு வாழ்ந்து ஈட்டிய நல்ல பேரை, அதன் பின்னர் வெளிப்படும் 'சுருதி பேதம்' மூலம் எளிதில் இழந்து விடலாம்; மீண்டும் நல்ல பேர் எடுக்க வழியே இன்றி. இது தமிழ்நாட்டில் அரசியல் நீக்க போக்கின் காரணமாக, 'ஏக போக வலிமை' பெற்றுள்ள, பொதுமக்களின் கருத்துருவாக்கம் (Public Opinion) தொடர்பான சமூக செயல்நுட்பம் (Social Mechanism) ஆகும்.

பொதுமக்களின் கருத்துருவாக்கம் (Public Opinion) தொடர்பான சமூக செயல்நுட்பம் (Social Mechanism) பற்றிய புரிதலின்றி, அரசியல் அலையில் மேலே போகிறவர்கள் எல்லாம், 'சுதாரிக்காமல்', மக்களை 'ஆட்டு மந்தைகள்' என்று கருதி, துடிப்புடன் பயணித்தால், தாம் எதனால் கீழே விழுந்தோம்? என்பது கூட புரியாமல், மண்ணைக் கவ்வுவார்கள்என்பதற்கு விஜயகாந்த் வரலாற்று சாட்சியாகி விட்டார்: வைகோவைப் போலவே.

விஜய்காந்த் தம் மீது மக்கள் வைத்த நம்பிக்கையைத் தகர்த்து, ('பழம் நழுவி பாலில் விழும்' என்று எதிர்பார்த்த அளவுக்கு) திமுக மற்றும் அதிமுகவுடன் தேர்தல் கூட்டு வைத்ததால், இனி அவர் மீண்டும் மக்கள் நம்பிக்கையைப் பெறுவது கடினமே; வைகோவைப் போலவே.

விஜயகாந்த் ஆட்சியில் அமர்ந்து, ஊழல், தலைவரைக் கொல்ல சதி, போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக வாய்ப்பின்றி, அரசியலில் பயணித்ததால், அரசியலில் மட்டுமே கீழே விழுந்தாரே ஒழிய, தனது சொந்த வாழ்க்கையில் விழவில்லை; அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட மரியாதையையும் இழக்கவில்லை. 

மாறாக மேற்குறிப்பிட்ட தவறான பாதையில் பயணித்திருந்தால், அவர் அரசியலில் வீழும் கட்டத்தில், நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அரசானது மத்தியில் இருக்கும் நிலையில், அவரும், அவருடன் பயணித்தவர்களும் சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடுவதற்கும் வாய்ப்பு இருந்திருக்கும்.

மோடி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆன பின்னும், இன்றுவரை எந்த 'மெகா' ஊழல் வழக்கும் முடிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. ஊழலையும், கறுப்பு பணத்தையும், ஒழிப்பதாக கூறி, பிரதமர் மோடி முன்னெடுத்த பணநீக்க (Demonetization)  முயற்சியை தோற்கடிப்பதில், ஊழல் நோயில் சிக்கிய அரசு அதிகாரிகளும், வங்கி அதிகாரிகளும் எந்த அளவுக்கு  வெற்றி பெறுவார்கள்? அல்லது தோல்வியைத் தழுவார்கள்? என்பதும் இனி தான் தெரியும்.  அந்த முடிவில் தான், தமிழ்நாடும் ஊழல் அரசியலிலிருந்து விடுதலை ஆகுமா? ஆகாதா? என்பதும் தெளிவாகும். 'டிஜிட்டல் யுகத்தில்'(Digital Age), எந்த அரசுக்கும் மனதும், துணிவும் இருந்தால், ஊழல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பது சாத்தியமே.

முதல்வர் ஜெயலலிதா பெங்களுரில் சிறையில் இருந்த காலத்தில், குக்கிராமத்திலிருந்து வந்து கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவி, தனது கிராமத்தில், 'சசிகலா செய்த தவறுக்காக தான், அம்மா (ஜெயலலிதா) சிறைக்கு போக நேரிட்டது' என்று, தமது கிராமத்தில் உள்ள பெண்கள் எல்லாம் பேசிக் கொள்வதாக‌, தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக சதி செய்ததாக, சசிகலாவை போயஸ்கார்டனிலிருந்து துரத்திய செய்தியானது, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்தன;
பின அச்சதியில் தனக்கு பங்கில்லை என்றும், அச்சதிகாரர்கள் முகத்தில் இனி முழிப்பத்தில்லை என்றும் சத்தியம் செய்தபின், மீண்டும் சசிகலா போயஸ்கார்டனில் அனுமதிக்கப்பட்டார். இவை ஊடகங்களில் வெளிவந்து குக்கிராமங்கள் வரை ஊடுருவி விட்டன.

அப்போல்லோ மருத்துவனையில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவிர, கவர்னர், ஜெயலலிதா அண்ணன் மகள் உள்ளிட்ட‌ வேறு எவரையும் பார்க்க விடவில்லை. மருத்துவமனை நிர்வாகத்திடமும், மருத்துவர்களிடமும், தொலைபேசியில் கேட்டு பெறக்கூடிய தகவல்களை, கவர்னர் உள்ளிட்டு மத்திய அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் மருத்துவமனைக்கு சென்று, அத்தகவல்களை மருத்துவமனை முன் தொலைக்காட்சி பேட்டிகளாக ஒளிபரப்பியதானது, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே எந்த அளவுக்கு கேலிக்குள்ளானது? என்பதை அவர்களின் சமூக வலைதள பரிமாற்றங்கள் வெளிப்படுத்தின. (http://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_5.html & http://news.lankasri.com/india/03/115991 

மெரினாவில் ஊடகங்கள் ஒளிபரப்பிய ஜெயலலிதாவின் இறுதி சடங்கானது மத சம்பிரதாயங்களின் அடிப்படைகளில் சரியாக நடைபெற்றதா? அதில் சசிகலா பங்கேற்றதற்கு சம்பிரதாய அடிப்படையிலோ, அல்லது சட்ட அடிப்படையிலோ, அல்லது ஈ.வெ.ரா அவர்கள் முன்னிறுத்திய 'பகுத்தறிவு' அடிப்படையிலோ அனுமதி உண்டா? இல்லையென்றால், சம்பிரதாயங்களுக்கும், சட்டத்திற்கும், அல்லது ஈ.வெ.ரா அவர்கள் முன்னிறுத்திய 'பகுத்தறிவு'க்கும், அப்பாற்பட்டு, அதிகார வழிபாட்டு போக்கில், சம்பிரதாயங்களும், சட்டமும், 'பகுத்தறிவு'ம் தத்தம் முதுகெலும்பை இழந்த திசையில், தமிழ்நாடு பயணிக்கிறதா? அது திராவிட அரசியலின் சாதனையா?  அது எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்தது? என்ற கேள்விகளை, எவ்வளவு காலம் தான் இருட்டில் வைக்க முடியும்? அந்த  சாதனை போக்கில், ஜெயலலிதாவும் பலியாகி வருகிறாரா? என்ற கேள்வியை எழுப்பும் தகவல்களை அடுத்து பார்ப்போம்.

முதல்வர் ஜெய‌லலிதா, நீதிமன்ற தண்டனை காரணமாக, முதல்வர் பதவியில் இல்லாத காலத்திலும், ஜெயா தொலைக்காட்சியில், 'மக்களின் முதல்வர் ஜெயலலிதா' என்றே ஒளிபரப்பானது. ஜெயலலிதா மறைந்து, சசிகலா கட்டுப்பாட்டில், அதே தொலைக்காட்சி எவ்வாறு செயல்படுகிறது?

உயிரோடு இருந்த முதல் நாள்வரை மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா என சொல்லிவந்த ஜெயா டிவி ஜெயலலிதா என்கிறது. செல்வி ஜெயலலிதா என சொல்லி வந்த எதிர்க்கட்சி டிவிக்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்கின்றன. இதுதான் ஆரம்பம். இன்னும் பார்க்க வேண்டிய நிறைய இருக்கிறது...!

மேலே குறிப்பிட்ட சிக்னல்கள் உணர்த்தும் திசையில் சசிகலா பயணிக்க தொடங்கியிருந்தால், அவர் விஜயகாந்த் சந்தித்துள்ள விளைவை விட, இன்னும் மோசமான விளைவை ஏன் சந்திக்க நேரிடும்? என்பதற்கான விடையை கண்டுபிடிக்க, ஈ.வெ.ரா அவர்கள் 1925இல், காங்கிரசிலிருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கம் தொடங்கியதை, தொடக்கப்புள்ளியாக கருதி, ஆய்வினைத் தொடங்க வேண்டும்.

“1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறி, 'சுயமரியாதை' இயக்கம் தொடங்கிய ஈ.வெ.ரா அவர்கள்;

'சாதி', 'இனம்' தொடர்பான காலனிய சூழ்ச்சி வலையில் சிக்கி, 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி, பயணித்ததன் விளைவாக 1967இல் 'திராவிட முன்னேற்ற கழகம்' ஆட்சிக்கு வந்த பின், 'திராவிட' கட்சிகளின் ஆட்சிகளில், தமிழர்கள் தமது இயல்பான சுயமரியாதையையும் இழந்து, பணம் சம்பாதிக்க எவர் காலிலும், எப்போதும் விழ 'போட்டி போடும்', 'அவமரியாதை' தமிழர் நோயை வளர்த்த விளைவில் முடிந்துள்ளதா?

ஒழுக்கக்கேடான 'தரகு' மற்றும் 'குறுக்கு வழி' 'அதிவேக' பணக்காரர்களை 'மதித்து' நெருக்கமாகும் அசிங்கத்தில், படித்தவர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடின்றி, அது முடிந்துள்ளதா?” என்பதை ஏற்கனவே பார்த்தோம். ( எனது சாதி அடையாளத்தை தொடருவதில், எனக்கு உடன்பாடில்லை (2); எனது சமூக அடையாளம் 'சைவ பறையர்'’; http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

மிசோரமில் வாழும் பேரா.முனைவர்.கனகராஜ் ஈஸ்வரன் அவர்கள் (https://www.blogger.com/profile/02018852263498789144) எனது பதிவு ஒன்றின் கீழ் பதிவிட்ட கீழ்வரும் கருத்தானது, தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான நோக்கில், கவனிக்கத் தக்கதாகும்.

எனது மண்ணிலும் பாரம்பரியத்திலும் பண்பாட்டிலும் வேர்பிடித்த ஒரு சமூக அறிவியல் ஆய்வாளனாக முனைவர் வீரபாண்டியன் அவர்களது ஈவெராவைப்பற்றிய அவதானிப்பை துல்லியமானது என்று கருதுகிறேன். "தாய்மொழிக்கும், வாழும் நிலத்திற்கும், பாரம்பரியம் பண்பாடு போன்றவற்றிற்கும் இடையே உள்ள 'சமூகவியல் முக்கியத்துவம்' வாய்ந்த நெருக்கமான தொடர்புகள் பற்றி பெரியாருக்கு தெரியவில்லை". இது சரியானது துல்லியமானது. "எனவே தமிழும், தமிழ்ப் பாரம்பரியமும், பண்பாடும் தமிழர்க்குக் கேடானவை என்று கருதியதோடு, வாழும் நிலத்தின் முக்கியத்துவமும் அவருக்குத் தெரியவில்லை". இந்த விளக்கம் ஆய்வுக்குறியது. ஈவெரா மேற்குலகின் விழுமியங்கள்(மதிப்புகள்), சட அறிவியல் மற்றும் பொருள்துறையில் அவர்கள் அடைந்த வியத்தகு வளர்ச்சியை வியந்தார். அவர்களது வளர்ச்சிக்கு அவர்களது விழுமியங்களே குறிப்பாக மறுமலர்ச்சிக்குப் பின்னதாய பகுத்தறிவு முனைப்பே காரணம் என்று கருதியதாக இருக்கலாம்.” (comment to the post: ‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (8); தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்’; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_19.html )

மேலே குறிப்பிட்டுள்ள பதிவில் உள்ள, கீழ்வரும் கருத்தும் கவனிக்கத்தக்கதாகும்.

தமிழர் என்ற அடையாளத்திலுள்ள பல கூறுகளில் தாய்மொழிக்கும், வாழும் நிலத்திற்கும், பாரம்பரியம் பண்பாடு போன்றவற்றிற்கும் இடையே உள்ள 'சமூகவியல் முக்கியத்துவம்' வாய்ந்த நெருக்கமான தொடர்புகள் பற்றி பெரியாருக்கு தெரியவில்லை.எனவே தமிழும், தமிழ்ப் பாரம்பரியமும், பண்பாடும் தமிழர்க்குக் கேடானவை என்று கருதியதோடு, வாழும் நிலத்தின் முக்கியத்துவமும் அவருக்குத் தெரியவில்லை. எனவே அன்றைய தஞ்சை மாவட்டம் அளவுக்கு 'தனித் தமிழ்நாடு' கிடைத்தாலும் பரவாயில்லை என்ற வகையில் அவர் கருத்து தெரிவித்தார்.

இன்றும் பெரியார் இயக்கத்தவர்கள் அந்த தவறான நிலைப்பாடுகளைத் திருத்தி, சரியான திசையில் பயணிக்க விரும்புவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. தென்பட்டால், அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

1967இல் தி.மு.க ஆட்சி வந்த பின், பொதுவாழ்வில் அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் மனம் வெறுத்து ஒதுங்க எண்ணியதை ஏற்கனவே பார்த்தோம்.

“1967 ஆட்சி மாற்றத்தின் போது, அந்த வலிமை தமக்கில்லை என்பதை அன்றைய முதல்வர் அண்ணா உணர்ந்து, மருத்துவமனையில் தம்மை சந்தித்த, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம், தாம் விரைவில் மரணமடைய விரும்புவதாக தெரிவித்த செய்தியை, அவர் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அதே காலக்கட்டத்தில், பொதுவாழ்வில் மனம் வெறுத்து, தாம் முனிவராக விரும்புவதாக அண்ணாவிடம், ஈ.வெ.ரா அவர்கள் தெரிவித்து, அதை அண்ணா தடுத்திருக்கிறார். அதாவது அரசமைப்பிலும், பொது வாழ்விலும், தவறுகளை தடுக்கக் கூடிய வெளிப்படையும்(Transparency), பொறுப்பேற்பும்(Accountability) பலகீனமாகிவிட்டதை அந்த இரு தலைவர்களும் அந்த காலக் கட்டத்திலேயே உணர்ந்ததன் விளைவுகளாலேயே, முதல்வர் பொறுப்பில் இருந்தவரும், அவரை உருவாக்கிய கட்சியின் தலைவராக இருந்தவரும் மனம் வெறுத்து, மேற்குறிப்பிட்ட உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்களா? என்பது ஆய்விற்குரியதாகும்.” (http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html )

அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் ஏன் பொதுவாழ்வில் மனம் வெறுத்து ஒதுங்க விரும்பினார்கள்? என்ற ஆய்வினை, அவர்களின் விசுவாசிகள் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தினார்களா? 

இல்லையென்றால், அதே காரணங்களால் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் ஏற்பட்ட சீரழிவிற்கு, அவர்களும் பகுதி பொறுப்பாளிகள் ஆக மாட்டார்களா? என்ற கேள்விகளை, அவர்களில் சுயலாப நோக்கற்ற சமூக பற்றாளர்கள், இன்றாவது பரிசீலிப்பார்களா?

1967இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப்பின், ஊழல் அரங்கேறியிருந்தாலும், தமிழ்நாட்டில் மலைகள், ஏரிகள், ஆறுகள், காடுகள், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் எல்லாம், 1991 வரை, ஊழலில் பசிக்கு இரையாகாமல் பாதுகாப்பாகவே இருந்தன. 

எம்.ஜி.ஆர் அவர்கள் தி.மு.கவின் குடும்ப ஊழலுக்கு எதிராக அ.இ.அ.தி.மு.க தொடங்கி, 1977  முதல் முதல்வராக  ஊழலற்று பயணித்தார். பின் 1980- இல் அன்றைய பிரதமர் இந்திராவால், தி.மு.க தலைவரின் தூண்டுதல் காரணமாக ஆட்சிக்கலைப்பிற்கு உள்ளாகி, தேர்தலை சந்திக்க நேரிட்ட பின், அரசியலில் நீடிக்க அவசியமான ஊழலுடன் பயணித்தார்; மின்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஊழலுக்கு இடமில்லாத வகையில் உறுதியாக கண்காணித்து;(ஊழலில் எதிர்க்கட்சிகளும் அவரவர் பலத்திற்கேற்ப பங்கு பெறும், 'எம்.ஜி.ஆர் சூத்திரத்தையும்(MGR Formula)  அமுல்படுத்தினாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.)

1989இல் எம்.ஜி.ஆர மறைந்து, அ.இ.அ.தி.மு.க பிளவுபட்டதால், தி.மு.க தலைவர் மு.கருணாநிதி முதல்வராக 1991வரை இருந்த காலத்திலும், தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் ஊழலுக்கு இரையாகவில்லை.

எம்.ஜி.ஆர் அவர்கள் அடிமட்ட மக்களின் துன்பங்களை ஆரம்ப காலத்தில் அனுபவித்து,பின் திராவிட அரசியல் வளர்ச்சிக்கட்டத்தில் பயணித்து, தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்களால் அவமானப்படுத்தப்பட்ட புலமையாளர்கள் யார் என்று அவர்களை (டார்பிடோ ஜனார்த்தனம் போன்றவர்களை) தேடி கண்டுபிடித்து, தமக்கு பக்கபலமாக கொண்டு,முதல்வராக பயணித்தார்.

எம்.ஜி.ஆரை விட அதிக கல்வியறிவு கொண்ட ஜெயலலிதா அவர்கள், (எனது பார்வையில்) காமராஜரை விட  அதிக துணிச்சலை, 1991-இல் முதல்வரானதிலிருந்து சாகும் வரை வெளிப்படுத்தினார்; கச்சத்தீவு, காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளிலும்; அம்மா உணவகம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களிலும்.

ஆனால் மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆருக்கு இருந்த பக்கபலமின்றி, சசிகலா குடும்ப வலைப்பின்னலில் சமூக தொடர்பு நீக்கத்திற்குள்ளாகி(Social Insulation), முதல்வராக ஜெயலலிதா பயணித்ததே, கீழ்வரும் விளைவுகளுக்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். ஜெயலலிதா சென்னை சர்ச் பார்க் கான்வெண்டில் படித்த காலத்தில், அப்பள்ளியில் படித்த, இன்று உலகப்புகழ்  பெற்ற நடனக் கலைஞராக வாழும் அனிதா ரத்னம் அவர்கள், ஜெயலலிதா மீது, ஜெயலலிதாவின் அம்மா மற்றும் எம்.ஜி.ஆரை போலவே, சசிகலாவுக்கு இருந்த 'அதிகாரத்தை' கீழ்வரும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
“Perhaps it was Sasikala, with her mostly rustic sensibilities who introduced a surreal atmosphere of court intrigue, grandiose financial chicanery and the phenomenon of obsequiousness in to the Maugham and Beatles loving, academically inclined and shy Brahmin born politico’s life. And perhaps like she had done with her mother and MGR before, Jayalalithaa”

அப்படி சசிகலாவின் செல்வாக்கில் சிக்கி, 1991இல் தொடங்கிய அவரது ஆட்சியில் தான், ஊழல் கோரப்பசிக்கு தமிழ்நாட்டில் மலைகள், ஏரிகள், ஆறுகள், காடுகள், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் எல்லாம் இரையாக தொடங்கியதும், அச்சுறுத்தி தனியார் சொத்துக்களை அபகரிக்க தொடங்கியதும் ஆகிய போக்குகள் வெளிப்பட்டன; இன்று வரை வெட்கமில்லாமல் 'சசிகலா அரசியலுக்கு' வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஆதரவு தெரிவித்து வரும் தேசிய/திராவிட/தமிழ்/கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆதரவோடு.
 

பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அதே திசையில் பயணித்து: அந்த போக்குகளில், மக்களின் கோபத்திற்கு உள்ளாகி,  உச்சக்கட்ட நிலையை அடைந்து, இரண்டு கட்சிகளும் மாறி, மாறி, ஆட்சியை இழந்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தன.

1991இல் ஊழல் பசியானது, கோரப்பசியாக மாறி, அந்த வளங்களை சூறையாடிதன் பலன்களை தான், சென்னை வெள்ளம், மவுலிவாக்கம் கட்டிட சிதைவு, உள்ளிட்ட பல சேதங்களை, இன்று தமிழ்நாடு அனுபவிக்கத் தொடங்கியுள்ளது: அந்த போக்கில், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வளர்ந்த 'பெரியார் சமூக கிருமிகள்' மூலம் ஏற்பட்ட பாதிப்பானது, இது போன்ற ஆய்வுகளில் என்னை ஈடுபடத் தூண்டி. (http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.htmlஅகத்தில் சீரழிந்து, புறத்தில் 'போலி புற நேர்மையாளர்களாக' காட்சி தருபவர்களை நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக உறவுகளில் அனுமதித்ததால், தமிழ் மொழியும், தமிழ்நாடும் சீரழிந்து, அந்த 'சீரழிவு கோரப்பசியில்', அந்த 'பாவத்தில்', நமது குடும்பமும் சீரழியும் என்பதானது, 'திருச்சி பெரியார் மையம்' சமூக கிருமிகள் மூலம், நான் கற்ற அசாதாரண‌ பாடமாகும்; 1991க்குப்பின், 'வீரியமான' சீரழிவின் தொடர்விளைவாக. 

தமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட தமக்கு வேண்டியவர்களின் 'சுயநல இழிவுகளை' கண்டு கொள்ளாமல், சமுகத்தில் 'இழிவுகளை' எதிர்த்து வரும், 'முற்போக்குகளும்', 'அந்த வகை சமூக கிருமிகளே' ஆவர், என்பதும் எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. சாதாரண மனிதர்களை கிள்ளுக்கீரையாகவும், தம்மைப் போன்ற(?) 'ஊடக வெளிச்ச முற்போக்குகளை', 'மதிக்கத் தக்கவர்களாகவும்' கருதி, அம்பலமாகாமல் வலம் வந்த/வரும் முற்போக்குகள், உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறார்களா? தமிழ்நாட்டிலும் அந்த போக்கானது, 1944க்குப்பின் தான் முளைவிட்டு, வளர்ந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.   'இந்தி எதிர்ப்பு' பிரச்சினை மூலம், 1967இல் அரசு அரவணைப்பில் 'வீரியமாக வளர்ந்த‌', 'அந்த சமூக கிருமி செயல்நுட்பமே', 'ஈழ விடுதலை' பிரச்சினை மூலம், 'அதே வகை' சமூக கிருமிகளான 'அதிவேக புதுப் பணக்காரர்கள்' தமிழ்நாட்டில் 'வெளிப்பட' காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

மேலே குறிப்பிட்ட‌ சமூக தொடர்பு நீக்கத்திற்குள்ளாகி(Social Insulation) முதல்வர் ஜெயலலிதா பயணித்ததால், தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் சூறையாடப்பட்டு, அந்த போக்கில் தமிழர்களில் கணிசமானோர் பணம் சம்பாதிக்க எவர் காலிலும் விழ போட்டி போடும் அவமரியாதை நோய்க்குள்ளாகி, அந்த போக்கில், ஜெயலலிதா தனது மரணத்தை தானே வரவழைத்துக் கொண்டாரா? என்ற ஆய்வினை தொடங்க வேண்டியதும் அவசியமாகி விட்டது.
(‘While corruption started infecting TN after 1967, the natural wealth of the mountains, forests, rain harvesting rivers,
tanks, minerals including sands, etc were safe till 1991, Will all the VIP accused in the corruption cases, including those indicted in the Sahayam I.A.S report, be punished, or escape, as unproved due to the absence of the evidences & hostile prosecution witnesses?’; Did late TN CM Jayalalitha invite her own demise?;
Will the remains in TN, after the looting during the rule of the successive govts, remain safe? Will justice be rendered to the departed TN CM, by a transparent probe, to restore the respect of all the institutions, guarding democracy & the rule of law?https://groups.yahoo.com/neo/groups/akandabaratam/conversations/messages/70460 )

எனவே ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மேலே குறிப்பிட்ட கேள்விகள் எல்லாம் , சுயநல அரசியலில் புறக்கணிக்கப்படலாம். ஆனால் பொதுமக்கள் மனதில் உச்ச நீதி மன்றம் உள்ளிட்ட ஜனநாயகத் தூண்களின் மீது அவநம்பிக்கையை அது வளர்த்து, இந்தியாவில் சட்டம் ஒழுங்கின் செயல்பாடானது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சமூக வலை தளங்களில்,  கேலிப் பொருளாகி வருவதை தடுக்க முடியுமா? அந்த 'அவநம்பிக்கையை சம்பாதித்துள்ள', கட்சித் தலைவர்களின் 'ஊழல் எதிர்ப்பு' பேச்சுக்களும், எழுத்துக்களும், அதே வகை கேலிப் பொருளாகி வருவதை தடுக்க முடியுமா?

ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் கச்சத்தீவு, காவிரி மற்றும் முல்லை பெரியாறு பிரச்சனைகளில் பெரிய அளவிற்கு முன்னேற்றமும், நன்மையும் ஏற்பட்டது;  திமுக ஆட்சியில் இருந்ததைவிட. ஆனால், பெரியார் அமைப்பில் திமுக வை உண்மையான திராவிட இயக்கம் என்றும், கருணாநிதிதான் தமிழினத்தலைவர் என்றும், ஜெயலலிதா பார்ப்பனர், உண்மையான திராவிட இயக்கத்தவரல்ல என்றும், முன் நிறுத்தியானது, எந்த அளவுக்கு மக்கள் மன்றத்தில் எடுபட்டது? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

ஜெயலலிதாவின் 'தனிமனித மக்கள் செல்வாக்கிற்கும்', அவரது கட்சியின் 'சுயலாப ஆதாய வலைப்பின்னலுக்கும்' இடையே, தமிழ்நாட்டில் வெவ்வேறு ஊர்களில் இருந்த வெவ்வேறு விதமான பிணைப்புகள்(Bonds) எல்லாம்;

ஏற்கனவே  சசசிகலா குடும்பத்தை போயஸ் கார்டனை விட்டு, துரத்தி, வழக்குகள் தொடுத்து, சசிகலாவும் 'ஜெயலலிதாவிற்கு எதிரான சதியை ஒப்புக்கொண்டு, ஆனால் தனக்கு சம்பந்தமில்லை' என்று அறிக்கை விட்டு, அப்போல்லோவிலும், இறுதி சடங்கிலும்  அந்த சதிகாரர்களை 'மட்டுமே' முன்னிறுத்தி, ஊடகங்களில் அவை ஒளிபரப்பாகியுள்ள பின்னணியில்;

சசிகலாவை ஆதரிக்கும் மாநில/மாவட்ட பொறுப்பாளர்கள் எல்லாம்;

மேலே குறிப்பிட்ட‌ பிணைப்புகளை வென்று, அரசியலில் தப்பிப்பார்களா? அல்லது சுவடின்றி வீழ்வார்களா?

என்பது இன்னும் சில மாதங்களிலேயே தெளிவானால், வியப்பில்லை.

இலஞ்சம், ஊழல், குடும்ப அரசியல், கட்சியை தனது சொந்த சொத்தாக கருதி செயல்படுவது, தனது குடும்பத்தினரையே திட்டமிட்டு வாரிசு ஆக்குவது, பிறர் சொத்துக்களை மிரட்டி வாங்குவது போன்ற அநியாயங்களை மறைத்து, கொள்கை அரசியல் பேசி திசைதிருப்புவது திராவிட அரசியல் கட்சிகளின் நிலையாகிவிட்டது. இவர்களால் செய்யப்பட்ட சிறுநன்மைகள் தங்களின் கொள்ளைக்கான முதலீடாகவே கருதமுடியும். எந்த கட்சியாக இருந்தாலும், அந்த கொள்ளையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கு பெறாமல், அவர்களை நத்தி பிழைக்காமல், சுயமரியாதை தமிழர்களாக யார் இருக்கிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.("கொள்ளை அடித்தவர்களின் முகம் வெளியே வருவதில்லை. வரும்போது வரட்டும். போன சொத்தைப் பற்றி கவலையில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் நிலத்தைப் பறித்துக் கொண்டு, 'வாயை மூடிக்கொண்டு போங்கள்' என்று சொல்வார்கள். அப்படித்தான் நாம் போக வேண்டுமா? ஊரைக்கட்டி ஆள்பவர்களானாலும் முடிவில் ஒருபிடி மண்தான் என்பதை பிறகு தெரிந்து கொள்வார்கள்." கங்கை அமரன்; http://www.vikatan.com/news/coverstory/76049-sasikala-encroached-my-land-illegally-alleges-gangai-amaran.art )

நேற்று ஜெயலலிதா காலில் விழுந்தவர்கள, இன்று எதற்காக சசிகலா காலில் விழுகிறார்கள்? நாளை எவர் காலில் விழுவார்கள்? தமது சொந்த, பந்தங்கள் மதிப்பதற்கு, பணம் சம்பாதிக்க‌ இப்படி அவமரியாதையாக வாழ வேண்டுமா? இப்படி வாழ்பவர்களை மதிக்கும், அவர்களின் சொந்த பந்தங்களின் யோக்கியதையும் இப்படித்தானா? நமது யோக்கியதையும், நமது சொந்த பந்தங்களின் யோக்கியதையும் அதே போக்கில் தான் உள்ளதா? என்ற கேள்வியை மனசாட்சியுடன் எழுப்பி, விடைகள் கண்டு, உரிய திருத்தங்களுடன் பயணிக்கவில்லையென்றால், நாமும் அவமரியாதை தமிழர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?

1925இல் ஈ.வெ.ரா அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் பலனா, இவையெல்லாம்? என்று சசிகலா மட்டுமல்ல, அவரை ஆதரிக்கும் தி.க தலைவர் கி.வீரமணி மட்டுமல்ல; (“ ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்து, ஜெயலலிதாவின் கஷ்டங்கள், சிறைவாசங்களில் பங்கேற்ற சசிகலாவைப் பற்றி தேவையில்லாமல் பெரும் ஆய்வே நடத்தி, அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள்.-கி.வீரமணிhttp://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-allegation-on-bjp-269339.html )

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளிட்டு; ( இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லக்கண்ணு, முத்தரசன், தா. பாண்டியன் ஆகியோர் சசிகலாவை சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்ததானது சாதி அடிப்படையிலா? அல்லது கொள்கை அடிப்படையிலா? என்ற விவாதமும் வெளிப்பட்டுள்ளது; http://akkinikkunchu.com/2016/12/21/ ); 

ஆட்சிக்கனவில் மிதக்கும் அனைத்து கட்சிகளும், தலைவர்களும் விடைகள் கண்டு, சுதாரிக்க வில்லையென்றால்:

விஜயகாந்த் சந்தித்துள்ள விளைவினை விட, இன்னும் மோசமான விளைவுகளையே சந்திப்பார்கள்? இலவச மடிக் கணினியும், இலவச தொலைக்காட்சி பெட்டியும், அவர்களின் அரசியல் மரணத்திற்கு முக்கிய காரணங்களாக, நிரூபணமானால், வியப்பில்லை. சென்னை வெள்ளம் போன்ற அரசியல் வெள்ளமானது அவர்களை அடித்துச் சென்றுவிடும். சென்னை வெள்ளத்தில், அரசையும், அரசியல் கட்சிகளையும் வால்களாக்கி, மீட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சக்தியானது, தமிழ்நாட்டை ஊழல் வெள்ளத்திலிருந்து நிச்சயமாக மீட்கும்.

குறிப்பு:

"இன்று தமிழ்நாட்டில் யார் யார் எந்தெந்த தகுதி திறமைகளின் அடிப்படைகளில் எங்கெங்கு செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள்? அந்த 'செல்வாக்குகளுக்கும்', தமிழ்வழியின் மரணப்பயணத்திற்கும், தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள், காடுகள் மட்டுமின்றி, இயற்கைக் கனிவளங்கள் சூறையாடப்படுவதற்கும் தொடர்பு உண்டா? அந்த சூறையாடலை எதிர்த்து, அந்த சூறையாடல்களின் பின்னணியில் இருந்த 'ஊழல் பேராசை' திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களை எதிர்த்து, 'தமிழ் உணர்வு, தமிழ்த் தேசியம், பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு' ஆதரவாளர்கள் இதுவரை கண்டித்திருக்கிறர்களா? இனியாவது கண்டிப்பார்களா? இல்லையென்றால், அந்த சூறையாடலுக்கு துணையாக, மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக மாட்டார்களா?"
(http://tamilsdirection.blogspot.sg/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_31.html) இந்த அமைப்புகளின் கட்டமைப்பு(Structure), பிணைப்புகள்(Bonds), இழைகள்(Fibres) மற்றும் சமூக ஆற்றல் 'ரத்த ஓட்டம்' பற்றிய, 'ச‌மூக எக்ஸ்ரே'(Social X-Ray) ஆய்வானது, அந்த அமைப்புகளின் 'யோக்கியதையை' வெட்ட வெளிச்சமாக்கிவிடும்.( http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

No comments:

Post a Comment