Monday, November 21, 2016



அரசியல் கட்சிகளும், நிறுவனங்களும்;

 

நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும்,       தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும் (1)


Note: Due to BLOGGER Tech problems, replace '.in' in the links to '.com', if the links failed to open in the new window.


நான் ஒரு கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய காலத்தில், வகுப்பறைகள், மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் ஒழுங்காக சுத்தம் செய்யப்படுகிறதா? என்று தினமும் கண்காணித்து வந்தேன்; அந்த இரண்டிலும் மோசமாக இருக்கும் நிறுவனங்களும், மோசமாகவே இருக்கும் என்ற எனது புரிதலில். 

ஒரு நாள் மதியம் 2 மணி அளவில் சுற்றி வந்த போது, மாணவர்கள் இல்லாத ஒரு வகுப்பறையில் குப்பைகள் இருப்பதைப் பார்த்தேன். உடனே எனது உதவியாளரிடம், பெருக்குபவர்(Sweeper) மதிய உணவு சாப்பிட்டு, கல்லூரிக்கு வந்தவுடன், என்னை பார்க்கச் சொன்னேன். அந்த பணியாள் வந்தவுடன், அவருடன் சென்று வகுப்பறையைப் பார்த்தால், சுத்தமாக இருந்தது. எனது உதவியாளர் முன்கூட்டியே அந்த பணியாளுக்கு தகவல் கொடுத்து விட்டதால், அந்த பெண் தான் ஏற்கனவே வகுப்பறையை சுத்தம் செய்து விட்டுத்தான் மதிய உணவு சாப்பிட சென்றதாக பொய் சொல்லி, தப்பித்தார். புதிதாக ஆரம்பிக்கப்பட்டு, சுமார் 40 ஆசிரியர்கள் பணியாற்றிய கல்லூரியிலேயே, பணியில் வெளிப்படையும்(Transparency), பொறுப்பேற்பும்(Accountability) நடைமுறைப்படுத்த, நான் மிகவும் சிரமப்பட்டேன்.

இன்று தமிழ்நாட்டில் பெரிய தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில், அரசியல் கட்சிகளிலும் கூட‌,  கீழ் மட்டங்களில் எவ்வளவு தவறுகள் நிகழ்ந்தாலும், அவை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு உடனே தெரிய வாய்ப்பில்லை. அத்தவறுகளின் தொகு விளைவாக(Resultant), மறைக்க முடியாத பாதிப்பானது, அவர் பார்வைக்கு வந்தாலும், எந்த விசாரணை மூலமும், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினம். அந்த அளவுக்கு, சுயநல அடிப்படையில், 'மபியா'(Mafia; https://en.wikipedia.org/wiki/Mafia) சமூக செயல்நுட்பத்துடன் ஒப்பிடும் அளவுக்கு, வெளியில் தெரியாத, பாதுகாப்பு வளையங்கள், அந்த நிறுவனத்தின், கட்சியின், அடி மட்டத்திலிருந்து, மேல் மட்டம் வரை செயல்பாட்டில் உள்ளன. எனவே விசாரணையில் மாட்டி, தண்டனைக்குள்ளாகுபவர் பெரும்பாலும் உண்மை குற்றவாளியாக இருக்க மாட்டார். அந்த அளவுக்கு நிறுவன கட்டமைத்தல்(system building)  பலகீனமாக உள்ளது.

இந்திய விடுதலைக்கு முன், காலனிய ஆட்சியின் நலன்களுக்காக இருந்த நிறுவன கட்டமைப்பானது, அதை நிர்வகித்த காலனிய அதிகாரிகளின் பங்களிப்பால், காலனிய ஆட்சி சூழலில், வலிமையாக இருந்தது; இன்றும் கூட, வெள்ளைகாரனே ஆட்சியில் இருந்திருந்தால், இவ்வளவு மோசமாக ஊழலும், சட்ட ஒழுங்கு சீர் குலைவும் வந்திருக்காது என்றும் சிலர் இன்றும் பேசி வரும் அளவுக்கு.

இந்திய விடுதலைக்குப்பின் தேசக்கட்டுமானம்(Nation Building) எந்த அளவுக்கு சீர்குலைவு திசையில் பயணித்தது? என்பதை ஏற்கனவே பார்த்தோம். ( ‘Is BJP aware of the derailing of the Indian nation building process?’; http://tamilsdirection.blogspot.in/2016/07/normal-0-false-false-false-en-in-x-none_18.html  )

இந்தியாவில் நிறுவன கட்டமைத்தல்(system building) என்பது பலகீனமாகி வருவதற்கும், அதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதாவது 'விதேசி' நலன்களுக்காக செயல்பட்ட‌ காலனிய நிறுவன கட்டமைத்தலானது, இந்திய விடுதலைக்குப் பின், 'சுதேசி' நலன்களை முன்னிறுத்தி, தேச கட்டுமானம் மூலம் சுதேசி நிறுவன கட்டமைத்தல் நோக்கி பயணிக்காமல், 'இரண்டும் கெட்டானாக' பயணித்து, இன்று பெரிய தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில், கட்டமைத்தல் சீர்குலைவுக்குள்ளாகி, பொது ஒழுக்கமும், ஊழல் மூலம் சட்ட ஒழுங்கும், சீர் குலைந்து வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

நான் கல்லூரி முதல்வராக இருந்த போது, எனக்கு காரோட்டியாக இருந்தவர், தனது பணியில் சிறப்பாக இருந்தார்.

தான் 'டி.வி.எஸ்' நிறுவனத்தில் பணியாற்றியதை பெருமையுடன் அடிக்கடி  சொல்வார். அந்த நிறுவனத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைத்தன. அதாவது 1967க்கு முன், தமிழ்நாட்டில், அது போன்ற் நிறுவனங்களில் நிறுவன கட்டமைத்தல்(system building) வலிமையாக இருந்ததால், பணியாளர்களிடம் நிறுவனத்தின் மீது உண்மையான பற்று இருந்ததா? இன்றும் அது போன்ற நிறுவனங்களுக்கும், 1967க்குப்பின் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கும் இடையில், நிறுவன கட்டமைத்தல் நோக்கில், வேறுபாடுகள் இருக்கின்றனவா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.

அவ்வாறு வேறுபாடுகள் இருந்தால், அதற்கு திராவிட மனநோயாளிகளின் பங்களிப்பு எவ்வளவு? என்பதும் ஆய்விற்குரியதாகும்.சட்டத்தின் செயல்பாடு(Rule of Law) என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இருக்கும் வரை தான், வெளிப்படையும்(Transparency), பொறுப்பேற்பும்(Accountability) நிறுவன கட்டமைத்தலில் வலிவுடன் இருக்கும்.  தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்  தமக்குள்ள அதிகாரத்தை, தமது ஊழல் உள்ளிட்ட பலகீனங்களுக்கு சேவகம் செய்ய முயற்சிக்கும்போது, அவர்களை அகற்றும் அளவுக்கு அந்த வலிமை இருக்க வேண்டும். 

1967 ஆட்சி மாற்றத்தின் போது, அந்த வலிமை தமக்கில்லை என்பதை அன்றைய முதல்வர் அண்ணா உணர்ந்து, மருத்துவமனையில் தம்மை சந்தித்த, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம், தாம் விரைவில் மரணமடைய விரும்புவதாக தெரிவித்த செய்தியை, அவர் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அதே காலக்கட்டத்தில், பொதுவாழ்வில் மனம் வெறுத்து, தாம் முனிவராக விரும்புவதாக அண்ணாவிடம், ஈ.வெ.ரா அவர்கள் தெரிவித்து, அதை அண்ணா தடுத்திருக்கிறார். அதாவது அரசமைப்பிலும், பொது வாழ்விலும், தவறுகளை தடுக்கக் கூடிய வெளிப்படையும்(Transparency), பொறுப்பேற்பும்(Accountability) பலகீனமாகிவிட்டதை அந்த இரு தலைவர்களும் அந்த காலக் கட்டத்திலேயே உணர்ந்ததன் விளைவுகளாலேயே, முதல்வர் பொறுப்பில் இருந்தவரும், அவரை உருவாக்கிய கட்சியின் தலைவராக இருந்தவரும் மனம் வெறுத்து, மேற்குறிப்பிட்ட உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்களா? என்பது ஆய்விற்குரியதாகும்.

அந்த 'சிக்னலை' உணர்ந்து, அவற்றை பொதுவிவாதத்திற்கு, அந்த காலக்கட்டத்தில் அறிவு ஜீவிகளும், சமூக அக்கறையுள்ளவர்களும் ஈடுபட்டு, மீட்பு நடவடிக்கையில் இறங்கியிருந்தால், திராவிட மனநோயாளிகள் பங்களிப்பின் மூலமாக, இந்தளவுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் எல்லாம், நிறுவன கட்டமைத்தல் சீர்குலைவிற்கு உள்ளாகியிருக்குமா? அதற்கு மாறாக, அறிவு ஜீவிகளும், சமூக அக்கறையுள்ளதாக காட்டிக் கொண்டவர்களும், சொந்த வாழ்வில் இழப்புகளுக்கு அஞ்சியோ, அல்லது 'புதிய ஊழல் சூழலில்' 'வளமாக' விரும்பியோ, 'சமூகத்தின் முதுகெலும்பானது', 'ஊழல் அதிகாரத்திற்கு' வளையும் அளவுக்கு பங்களித்து, பயணித்து வந்துள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 


மாறாக, 1967க்குப்பின் 'வீரியமாக' வளர்ந்த 'சுயலாப கள்வர்' நோயின் போக்கில்;

அறிவு ஜீவிகளும், சமூக அக்கறையுள்ளவர்களாக 'காட்சி' தந்தவர்களும், 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு, தமிழ் உணர்வு, ஆன்மீகம், மார்க்ஸ், லெனின், மாவோ, காந்தி, சே குவாரா, காம்ஸ்கி, பின் நவீனத்துவம்' உள்ளிட்டு உலக அளவில் முக்கியத்துவம் பெற்றவைகளையும், ‘ஜென்புத்தீசம், மனித உரிமை, பெண்ணுரிமை’ என்று 'புதிதாக' 'அறிவு பேஸனாக' வளர்பவைகளையும், தமிழில் எழுதி, பேசி; 

ஆனால் அரசியல் கொள்ளைக்காரர்களை எந்த வகையிலும் 'உரசாமல்' பாதுகாப்பாக, முடியுமானால், வெளியில் தெரியாமல் அவர்களுக்கு நேசமாகி, 'பலன்கள்' அனுபவித்து கொண்டே, அந்த அரசியல் கொள்ளையர்களை தமக்கு நெருக்கமான வட்டத்தில் கேலி செய்தும், கண்டித்தும், அந்த போக்கில் தம்மிடம் ஏமாந்த குப்பன் சுப்பு வீட்டுப் பிள்ளைகளை 'முற்போக்கு', 'புரட்சி' உசுப்பேத்தி 'காவு' கொடுத்து, ஆனால் தமது பிள்ளைகள் ஒழுங்காக படித்தாலும், படிக்கா விட்டாலும், இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ நன்கு செட்டில் செய்து, வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும், நிறுவன கட்டமைத்தல் சீர்குலைவிற்கும், சமூக சீரழிவிற்கும் காரணமான முக்கிய சமூக குற்றவாளிகளா? அதாவது சுயலாப நோக்கற்ற இயல்பான அன்பையும், மதிப்பையும், 'துறந்து', எவரையும் லாபநட்ட கணக்கில் அணுகும் 'சமூக விபச்சாரிகளாக' வாழும், 'சமூக குற்றவாளிகளா' அவர்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அதாவது தமிழ்நாட்டில் சமூக அளவில், ‘சீரழிவு சமூக ரத்த ஓட்டத்தில்’, சமூகத்தில் குடும்பம், கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கட்டமைத்தலில், சீரழிந்த சமூக இழைகளாகவும் (Social Fibres), பிணைப்புகளாகவும் (Social Bonds), மேலே குறிப்பிட்ட நபர்கள் பங்களித்து வருவதானது, இது வரை பொது அரங்கில் அறிவுநேர்மையுடனும், திறந்த மனதுடனும் விவாதிக்கப்படவில்லை என்பதும், அத்தகைய விவாதம் இன்றி மீட்சி இல்லை என்பதும் என் கருத்தாகும். ( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும் 
(Social Fibers & Social Bonds)’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )  


அதன் தொடர்விளைவாக;

அரசு, தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, குடும்பம், இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட சமூகத்தில் உள்ள நிறுவன கட்டமைத்தல் எல்லாம், அதே நோயில் சிக்கி, சீர் குலைந்து வருகின்றனவா? வயதான பெற்றோரை புதுச்சேரி பேருந்து நிலையத்தில் 'அனாதையாக' விட்டு விட்டு, தமது பொறுப்பில் இருந்து தப்பிக்கும் பிள்ளைகளும், விவாகரத்து, கொலை, தற்கொலை, துரோகம் உள்ளிட்ட நோய்களில் குடும்பங்கள் சீர் குலைந்து வருவதற்கும், குடியிருப்பு சங்கங்கள் உள்ளிட்டு, நிதி உள்ள அமைப்புகளில், பொறுப்பில் உள்ளவர்கள் கையாடல் செய்வதற்கும், அவ்வாறு சட்ட விரோத, ஒழுக்கக்கேடான வழிகளில் பணம் சம்பாதித்தவர்களை 'மதித்து' நட்பு கொள்வதற்கும், ஊழல்வழி ஊக்குவிப்பில் தமிழ்வழிக்கல்வியை (எனவே தமிழையும்) சீரழித்து, ஆங்கிலவழிக்கல்வி மூலம்,  கல்வியானது வியாபாரமாக வளர்வதும், உள்ளிட்ட அனைத்து சீர்கேடுகளுக்கும்;


1967இல்  'பிள்ளையார் சுழி' போடப்பட்டு விட்டதை உணர்ந்து, அதைத் தடுக்கும் வலிமையானது தமக்கு இல்லை என்பதையும் உணர்ந்து, அந்த இரண்டு தலைவர்களும் மனம் வெறுத்து, மறைந்தார்களா? என்பதை இனியாவது ஆய்வுக்குட்படுத்தாமல், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் மீட்சியை நோக்கி பயணிக்க முடியுமா?

அதாவது 'எந்திரன்' திரைப்படத்தில் நல்ல விஞ்ஞானியின் பிடியிலிருந்து, தீய விஞ்ஞானியிடம் சிக்கிய 'எந்திரனின் மூளை செயலாக்கியை'(Brain Processor of the Human Robot) மாற்றியவுடன், சமூகத்திற்கு கேடாக 'எந்திரன்' பயணித்தது போல, தமிழ்நாட்டில் இயல்பில் பலகீனமான தமிழர்களில் பெரும்பாலோர் எல்லாம், தமது மூளையின் செயல்பாட்டை, 1967க்கு பின் அரங்கேறிய 'சுயலாப' கள்வர் நோயில் சிக்க வைத்து, 'சமூக விபச்சாரிகளாக' பயணிக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குறியதாகும். (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_17.html )

மத்திய அரசு தமிழ்நாடு தொடர்பாக எதற்கு முயற்சித்தாலும், தமிழ்நாட்டின் நலன்களுக்காக அதை எதிர்க்கும் துணிச்சலானது,1967க்கு முந்தைய காங்கிரஸ் அரசிடம் இருந்தது என்பதை, கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலை நினைவகம் முயற்சியில் ஈடுபட்ட ஏக்னாத் ரானடேயின் நூல் தெளிவுபடுத்தியுள்ளது. பின் தி.மு.க ஆட்சியில் அத்திட்டமானது, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்போடு, நிறைவேறியது.( 'The Story of the Vivekananda Rock Memorial’; vkpt@vkendra.org)  1967க்கு முன், மத்திய அரசு விரும்பியிருந்தாலும், கச்சத்தீவு தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து, இலங்கை வசம் போயிருக்க முடியாது என்பதையும், அதன் மூலம் விளங்கிக் கொள்ளவும் முடிகிறது.

கட்சிக்காக விரும்பி தியாகங்கள் புரிந்தவர்கள் பலத்தில் 'வளர்ந்த' திராவிடக் கட்சிகள் எல்லாம், ஆதாயத் தொண்டர்கள் பலத்தில்;

நேரு குடும்பமானது இந்திய அளவில் அறிமுகப்படுத்திய வாரிசு அரசியலில் சிக்கி, பயணிக்க தொடங்கிய பின், கட்சியின் கட்டமைத்தல்(Party Building) பலகீனமாகி, அதன் பலன்களை கட்சித் தலைமைகள் அனுபவித்து வருவதாலேயே;

கட்சியின் எல்லா மட்டங்களிலும், சுயநல அடிப்படையில், 'மபியா'(Mafia) சமூக செயல்நுட்பத்துடன் ஒப்பிடும் அளவுக்கு, வெளியில் தெரியாத, பாதுகாப்பு வளையங்கள், செயல்பாட்டில் உள்ளனவா? எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கூட்டுக்கொள்ளையில் ஈடுபடும் அளவுக்கு, அந்த வலைப்பின்னல் அதிக நுட்பத்துடன் (More Complex) வளர்ந்துள்ளதா? எனவே விசாரணையில் மாட்டி, தண்டனைக்குள்ளாகுபவர் பெரும்பாலும் உண்மை குற்றவாளியாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவா? என்ற போக்கில் திராவிட கட்சிகள் பயணிக்கின்றனவா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவையாகும்.

மேற்குறிப்பிட்ட பொதுவாழ்வு திருடர்களாக, நாம் இல்லையென்றாலும், நமது சமூக வட்டத்தில் அத்திருடர்களை நாம் அனுமதித்தாலும், அல்லது 'தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சி' போன்றவையும், அந்த திருடர்களின் துருப்புச் சீட்டுகள் ஆவதை அனுமதித்தாலும், நாமும் அந்த பொது வாழ்வு திருட்டுக்கு துணை போனவர்கள் ஆவோம்.  தமது அளவில், தமது செயல்பாடுகளில் வெளிப்படையும்(Transparency), பொறுப்பேற்பும்(Accountability) இருப்பதை தமது மனசாட்சிக்குட்பட்டு, அமுலாக்கி, தவறுகளை ‘ஈகோ’(Ego) சிக்கலின்றி ஒப்புக்கொண்டு, திருத்திக் கொண்டு, பயணிப்பவர்களால் மட்டுமே, சமூகத்தில் உளள சீர்கேடுகளை களையும் முயற்சியில் வெற்றி பெற முடியும். (குறிப்பு கீழே) அதற்கு ஒரே நேரத்தில் நமக்குள் நாமே, முதல் மனிதராகவும், நமது செயல்பாடுகளை கண்காணித்து மூன்றாம் மனிதராகவும் வாழ முடியும், என்பதை சிறப்பாக விளக்கியுள்ள நூல் ‘The Theory of Moral Sentiments’ ( by Adam Smith)  ஆகும். அந்த தகுதியுடன் ஆய்வில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்கு, கீழ்வருபவற்றை முன்வைக்கிறேன். 

பொதுவாக ஒரு மனிதர் ஒரு கட்சியில் பங்கேற்கும் போதும், அல்லது ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் போதும், தலைமையில் இருப்பவர்களின் நம்பிக்கையை எந்த அளவுக்கு பெறுகிறர்களோ, அந்த அளவுக்கு அந்த கட்சியில், அந்த நிறுவனத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கும். அந்த முக்கியத்துவமானது அந்த கட்சியில், அந்த நிறுவனத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் பார்வைக்கு வந்து விட்டால், அந்த நபர் அந்த கட்சியில், அந்த நிறுவனத்தில், ஒரு முக்கியத்துவ சிறையில் சிக்கி விடும் ஆபத்தும் இருக்கிறது. அவ்வாறு சிக்கியபின், அந்த கட்சியில், அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் எல்லாம், அந்த நபருடன் உரையாடல் உள்ளிட்ட தொடர்பு கொள்ள வாய்ப்பு நேரிடும் போது,  அவருக்கு பிடித்த திசையிலேயே உரையாடல் நிகழ்த்துவார்கள்; காரியங்கள் செய்வார்கள். எனவே அந்த கட்சியின், நிறுவனத்தின் உண்மை நிலையை, அந்த நபர் எவ்வளவு முயன்றாலும், கண்டுபிடிக்க முடியாத சிக்கலானது அவர்களைச் சூழ்ந்து விடும். 

முக்கியத்துவ போதையில் சிக்கியவர்கள் எல்லாம் அந்த சிறையில் சிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். அந்த முக்கியத்துவ போதையில் நான் எவ்வாறு சிக்காமல் தப்பித்தேன்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். ( ‘தமிழ்நாட்டு பொதுவுடமை முகாம்கள் உணர்ச்சி பூர்வ இரைச்சலில் கண்டுகொள்ளாமல் விட்ட 'சிக்னல்கள்',  ஆந்திராவில் அரிய பொக்கிசமாகக் கருதப்பட்டதை உணர்ந்தேன். கூடுதலாக 'முக்கியத்துவம்' என்பது , ஏமாந்தால், நம்மை போதையில் ஆழ்த்திவிடும் என்பதையும் உணர்ந்தேன். எனவே தப்பித்தவறியும் அதில் சிக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் இன்று வரை வாழ்ந்து வருகிறேன்’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html )

‘'பெரியார் இயக்கத்தில்' இருந்த போதும், அந்த காலக்கட்டத்தில், நான் உள்ளிட்டு 'தனித் தமிழ்நாடு' கனவுடன் பேராசிரியர்களும், எண்ணற்ற இளைஞர்களும், இருந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே, என் மீது அவர் வெளிப்படுத்திய அன்பும், மதிப்பும் தெரியும் அளவுக்கு(http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html ) 'தனது சாதி' என்பதால் தான், ‘பேரா.செ.அ.வீரபாண்டியனுக்கு ஆசிரியர் (கி.வீரமணி) இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்' என்ற, முட்டாள்த்தனமான கிசுகிசுக்கள் 'மேல்மட்டத்தில் மட்டுமே உலா' வந்த அளவுக்கு ; சாதாரண தொண்டர்கள் மத்தியில், அவர்களில் ஒருவராகவே இருக்க முடிந்தது.

பின் கல்லூரி முதல்வராயிருந்தபோது, அலுவலக நேரத்தில் மிகுந்த கண்டிப்புடன், இருந்து கொண்டே;

வெளியில் நான் மதிக்கும் பண்புடையவர்களை மட்டுமே (அவர்களின் செல்வ/செல்வாக்கு நிலை மேலாக, கீழாக இருப்பது பற்றிய கவலையின்றி), எனது சமூக வட்டமாகக் கொண்டு, சாதாரண மனிதர்கள் போலே வாழ்ந்து வந்தேன்; அதன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து, 'சுயலாப' கள்வர் நோய்க்கு எதிரான போக்கிற்கு வலிவு சேர்க்கும், சமூக பொறியிய‌ல் (Social Enginnering) பரிசோதனையில், நான் வாழ்வதையும் உணர்ந்து.

அரசு கல்லூரிகளில் பிரச்சினைகள் அடிப்படையில், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டு, நான் எதிர்த்தவர்களும் கூட என்னை மதித்த அளவுக்கு , தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த குறையும், வருத்தமும் இன்றி, உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு வாழும் எனது வாழ்க்கைப் பயணத்தையே ஒட்டி, மாறுதல்களுக்கள்ளாகி (transfer of jobs);

இப்போது திருச்சி NIT வரை, ஆய்வுத் திட்ட ஆலோசகராக‌(Project Consultant to R & D Project) நான் பணியாற்றி வருகிறேன்: எனது 'நிறுவன ஆய்விற்கான' (Organization research) அரிய உள்ளீடுகளை, மேலே குறிப்பிட்ட பல்வேறு பணிகளின்/பொறுப்புகளின் ஊடே அனுபவங்களாக பெற்று; கீழ்வரும் ஆய்வுக்ளுக்கான கேள்விகளை எழுப்பி.

தமிழ்நாட்டில் நிறுவனங்களிலும், கட்சிகளிலும் உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றுபவர்களை முட்டாள்களாக்கி, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் 'பலகீனங்களுக்கு' தீனி போட்டு, வலிமையாகி வருபவர்களின் பங்களிப்பால், அந்த நிறுவனங்களும், கட்சிகளும் ஏற்கனவே இருந்த நிறுவன கட்டமைத்தலை, சீர் குலைவு மூலம் இழந்து வரும் போக்கில் சிக்கியுள்ளனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அந்நோயில் சிக்கிய க‌ல்வி நிறுவனங்களின் சூழலானது, மாணவர்களை எதன் மீதும் எவர் மீதும் மதிப்பற்ற, சுயநல மிருகங்களாக மாற்றி வருகிறது. கட்சிகளிலோ ஆதாயத் தொண்டர்கள் வளர்ந்து, சாதாரண மக்கள் எல்லாம் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்து, அரசியல் நீக்கத்திற்கு (Depoliticize) உள்ளாகி வருகிறார்கள்.

1967க்கு முன் 'தேசிய' போக்கில் பயணித்தவர்களில் பலர் சிவாஜி கணேசன் ரசிகர்களாகவும், 'திராவிட' போக்கில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் எம்.ஜி.ஆர் ரசிகர்களாகவும் இருந்தார்கள்; காமராஜர், அண்ணா போன்ற கட்சித்த்லைவர்களின் செல்வாக்கிற்கு கட்டுப்பட்ட போக்கிலேயே; ஆதாயத் தொண்டர்களை விட, கட்சிக்காக சொந்த பணத்தையும், உழைப்பையும் கொடுத்து, தியாகங்களும் புரிந்த தொண்டர்களே 'தேசிய', 'திராவிட'  கட்சிகளில் அதிகமாக இருந்த போக்கில்.

இன்று கட்சியின் கட்டுமானங்கள் சிதைவுக்குள்ளாகி, கொள்கைகள் எல்லாம் செல்லாக்காசாகி, ஆதாய தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடம் சிக்கி, தமிழ்நாட்டு அரசியலானது சினிமா செல்வாக்கில் அடிமைப்பட்டு பயணிக்கிறதா? கட்சி கட்டுமான சிதைவு போக்கிற்கும், 'இந்தியர்' என்ற தேசக்கட்டுமானமானது, இந்தியாவிலேயே தனித்துவமாக தமிழ்நாட்டில், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக்குழப்பங்களின் ஊடே அதிக சிதைவிற்குள்ளான‌ போக்கிற்கும் தொடர்பு இருக்கிறதா? ( ‘இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

மேற்குறிப்பிட்ட‌வையெல்லாம் பெரும்பாலும் 50 வயதுக்கும் அதிகமானவர்களிடையில் மட்டுமே செல்வாக்குடன் உள்ள நிலையில்;

அவற்றிலிருந்து அந்நியமாகி, இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் எந்த அடையாள திசையில் பயணிக்கிறார்கள்? கட்சிகளில் உள்ளதைப் போன்ற, 'மபியா'(Mafia) சமூக செயல்நுட்பத்துடன் ஒப்பிடும் அளவுக்கு, வெளியில் தெரியாத, பாதுகாப்பு வளையங்கள், மாணவர்கள் மத்தியிலும் தொத்து நோயாக வளர்ந்து, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றங்களும் அவர்கள் மத்தியிலும் வளர்ந்து வருகின்றனவா?

அந்த நோய்களில் சிக்காத மாணவர்கள் மத்தியில், 'இந்தியர்' என்ற தேசக்கட்டுமானமானது, அவர்களிடம் முளை விட்டு வளர்ந்து வருகிறதா? தமிழும், தமிழ் உணர்வும் கேலிப்பொருள் வரிசையில் இடம் பெற்று வருகிறதா?( ‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (7); தமிழும், தமிழ் உணர்வும்,  மாணவர்களின்  கேலிப்பொருள் வரிசையில் ?’; http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

அடையாளச் சிதைவின் மூலமாக வளர்ந்த அரசியல் நீக்கம் முடிவுக்கு வந்து, தமிழ்நாடு எந்த திசையில் பயணிக்கும்? என்ற கேள்விக்கான விடை தெரிய, மேலே குறிப்பிட்ட கேள்விகளை ஆராய்வது என்பது அவசியமாகி விட்டது. 

குறிப்பு: 

எந்த திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பத்தின் வலைப்பின்னலில் இடம் பெற்று, ஒழுக்கக்கேடான, சட்ட விரோத வழிகளில், 'அதிவேகப் பணக்காரராகி', எனது மகளின் 'வாழ்வியல் புத்திசாலி முன்மாதிரியாகி(Role Model)(?) எனது குடும்பத்தை சீர்குலைத்த;

'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'பெரியார் சமூக கிருமியாக' வளர்ந்த(?) நபரை, அந்த வலைப்பின்னலை அணுகி, எனது குடும்ப வட்டத்திலிருந்து, அந்த நபரை நான் எளிதில் துவக்கத்திலேயே அகற்றியிருக்க முடியும். அதன்பின் அந்த வலைப்பின்னலை விமர்சிக்கும், கண்டிக்கும், தகுதி எனக்கு இருக்காது; இந்த வலைதளமும்(Blog), பதிவுகளும் வெளிவந்திருக்காது. அந்த 'இழிவான பணபலத்தில்', அந்த 'பெரியார் சமூக கிருமி', தமது எடுபிடிகளுடன், 'பார்ப்பன எதிர்ப்பு' மற்றும் 'ஊழல் ஒழிப்பு'(?) பொதுவாழ்வு வியாபாரங்களில் ஈடுபட்டதை நான் கண்டுபிடித்து, அவை எனது பதிவுகளுக்கு உள்ளீடாக(inputs) வந்திருக்காது.

ஏதோ 'வாழ்வியல் புத்திசாலித்துடன்'(?) தாம் பிழைக்க இருந்த வாய்ப்பினை நான் கெடுத்ததாக, 'பணமே தெய்வம்' என வாழும் எனது உறவினர் ஊக்குவித்தலில், பயணிக்கும், தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைத்ததால் என் மீது கோபத்தில் இருக்கும், எனது மகள், என் மீது 'இன்னும் அதிக கோபம்' கொள்ள வழியுண்டாகும். எனவே 'பட்டு திருந்தட்டும்' என்று, மூன்றாம் மனிதரைப் போல, ஒதுங்கி, சாட்சியாக பார்த்து, எனது வழியில் நான் வாழ்கிறேன்; மோடி ஆட்சியில் ஊழல் ஒழிப்பானது எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது, என்பதையும் கண்காணித்து. (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

குடும்பம், சுற்றம், நட்பு உள்ளிட்ட,  நமது வட்டத்தில் நாம் அனுமதிக்கும் நபர்கள் எல்லாம்;

அவரவர் இயல்பின்படி அவரவர் வாழ்வதால், யாரை எங்கே வைப்பது? என்ற 'வாழ்வியல் அறிவு' இன்றி வாழ்வதால், நாம் அனுபவிக்கும் இழப்புகளுக்கு, எவர் மீதும் கோபப்படுவத்தில் அர்த்தமில்லை; நம்மை திருத்திக் கொண்டு, மீண்டும் அதே தவறில் சிக்காமல் வாழ்வதே புத்திசாலித்தனம் என்பதும், நான் கற்று செயல்படுத்திவரும் பாடமாகும்.



"இனம் இனத்தோடு சேரும் என்ற இயற்கை விதியின்படி, சமூக ஒப்பீடு நோயில் சிக்காமல், நமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் நாம் வாழும்போது, நமது சமூக வட்டமானது, அந்நோயாளிகளிடமிருந்து விலகி, நம்மைப் போன்றே வாழும் மனிதர்களை உள்ளடக்கிய சமூக வட்டமாக மாறுவதும், இயற்கை விதி போலவே நடைபெறுகிறது என்பதும், எனது அனுபவமாகும்."( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html ) சமூக மூச்சுத்திணறலிலிருந்து(Social Suffocation) விடுபட்டு, உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு ஒன்றி; 

கட்டிடத்தில் உறைந்துள்ள இசையைப் பிரித்தெடுக்கும்(De freezing the music from the architecture), கட்டிடம் கட்டுவது போலவே, இசை அமைத்தலுக்கான இசைக் கட்டிடம் கட்டும்(music composing as the music building) புதிய இசை நுணுக்கம் கண்டுபிடிக்கும், பாடலுக்கு கணினியே இசை அமைக்கும் (Text to Music Conversion), இசையறிவற்றவர்கள்(music illiterates) 'லேப்டாப்'(Laptop) மூலம் இசை கற்று, இசை அமைப்பாளர்களாகும்(music composers), போன்ற இன்னும் பல, கூடுதலாக ஈ.வெ.ரா மற்றும் அவர் வழி தியாகங்களை சீரழித்த சமூக செயல்நுட்பத்தையும், மீட்சிக்கான திறவுகோலையும் கண்டுபிடிக்கும்; 

நம்பமுடியாத, ஆனால் சாத்தியமாக்கிய, ஆய்வுகளோடு நான் பயணிக்கிறேன். 

No comments:

Post a Comment