'பெரியார்' ஈ.வெ.ராவின் ஆவேசமும், முதல்வர் ஜெயலலிதாவின் ஆவேசமும்
தமிழ்நாடானது 'அரசியல் நீக்கத்தில்' பயணித்து வருவதையும், 2016 தேர்தல்
முடிவுகள் உணர்த்திய பாடங்களையும், ஏற்கனவே
பார்த்தோம்.
“தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய, இரண்டு கட்சிகளிலுமே
பெரும்பாலான தொண்டர்களும், தலைவர்களும் கொள்கை அடிப்படையில் தேர்தல்பணி ஆற்றினார்களா?
அல்லது 'தலைமைக்கு விசுவாசம்' என்ற அடிப்படையில்,
'உழைப்புக்கு பலன் கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில், பணியாற்றினார்களா? என்பதும்
ஆய்விற்குரியதாகும். அரசியல் வெளியில் (political space) பயணிக்கும் கட்சிகளில், பெரும்பாலான தொண்டர்களும்,
தலைவர்களும் கொள்கை அடிப்படையில், தேர்தல்
பணியாற்றுவார்கள். 'அரசியல் நீக்கம்' (Depoliticize) போக்கில், அரசியல் வெளியை காலி
செய்து பயணிக்கும் கட்சிகளில், அவர்கள் எல்லாம்,
'சுயலாப' நோக்கில், தேர்தல் பணியாற்றுவார்கள்; அதே நோக்கில் 'உள்குத்து' வேலைகளிலும்
ஈடுபட்டு; தேர்தலில் ‘செலவழிக்க’ (?) கொடுத்த பணத்திலும் ஆட்டையைப் போட்டு.”
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின், வெளிவந்தவைகளில், தமிழக
முதல்வர் ஜெயலலிதா, தனது கட்சியின் செயற்குழு
கூட்டத்தில் நிகழ்த்திய உரை தொடர்பான, கீழ்வரும் செய்தியானது, எனது ஆய்வில்
முக்கிய இடம் பெற்றுள்ளது.
“ஆவேசம்
தேர்தலின் போது நம்பிய பலர் துரோகம் செய்ததாக ஜெயலலிதா...
பணத்தை அமுக்கியவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை”
“பிற கட்சிகளில் எல்லாம், பணம் வாங்கிக்
கொண்டு, 'சீட்' தருகின்றனர். நான் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க
வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு சீட் கொடுத்து, தேர்தல் செலவுக்கு பணமும் கொடுத்தேன்.
ஆனால், மாவட்ட செயலர்களில் பெரும்பாலானோர், பணத்தை பதுக்கி விட்டனர். வேட்பாளர்களில்
சிலரும், பணத்தை செலவு செய்யவில்லை.
சிலர், தங்கள் மாவட்டத்தில், வேறு யாரேனும் வெற்றி பெற்றால், தங்களுக்குஅமைச்சர் பதவி கிடைக்காமல் போகலாம் என்ற எண்ணத்தில், அவர்களை தோற்கடிக்க பாடுபட்டுள்ளனர்.
ஒருவரை மாவட்ட செயலராக்கினால், அவர் தன் உறவினரை மாவட்ட செயலராக்கி விட்டு, தி.மு.க., மாவட்ட செயலருடன் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டு செயல்பட்டுள்ளார். இவை எல்லாம் எனக்கு தெரியாது என, நினைக்கிறார்.
கட்சி நிதி என்ற பெயரில், அவர் பணம் வசூலித்ததும், அவரது நண்பர் எவ்வளவு சம்பாதித்தார் என்பதும், எனக்கு தெரியும்.
ஒரு மாவட்ட செயலர், தன் மாவட்டத்தில் மற்றவர்களை தோற்கடிக்க, வேலை பார்த்து விட்டு, அவர் மட்டும் எம்.எல்.ஏ.,வாகி உள்ளார்.
ஒரு மாவட்ட செயலர், மாவட்டத்தில், நம் கட்சியினரை தோற்கடிக்க பணம் கொடுத்துள்ளார்.

லோக்சபா தேர்தலில், 37 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தோம். அதன்படி,
சட்டசபை தேர்தலில், 217 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இரண்டு ஆண்டுகளில், அதிருப்தி
ஏற்படும் வகையில், நாம் எதுவும் செய்யவில்லை; ஆனாலும், அதிக இடங்களை இழந்துள்ளோம்.
இதற்கு காரணம், நம் கட்சியினர் செய்த உள்ளடி வேலைதான். நான் நம்பிய பலர் துரோகம்செய்து
விட்டனர். (இவ்வாறு கூறும் போது கண் கலங்கினார்)
சிலர் எனக்கு விசுவாசமாக இருக்காமல், மாவட்ட செயலர்களுக்கும், பிறருக்கும் விசுவாசமாக உள்ளனர்.
தி.மு.க.,வை வளர விடக்கூடாது என, உழைக்கிறோம். சிலர் அக்கட்சியுடன் கைகோர்த்து, நம் வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர். அவர்கள் பட்டியல் என்னிடம் உள்ளது. பணத்தை பதுக்கியவர்கள் விவரமும் உள்ளது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பதவி இல்லாமல், சாதாரண தொண்டனாக இருக்கும் போது நல்லவராக இருக்கின்றனர். அவர்கள் கஷ்டத்தை பார்த்து, பதவி கொடுத்தால், தங்களுடைய சுயரூபத்தை காட்டுகின்றனர். “
முதல்வர் ஜெயலலிதாவின் ஆவேசத்திற்கு காரணமானவர்கள் எல்லாம், நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கான, 'தகுதி, திறமைகள்' இல்லாத சிற்றின மனிதர்களே ஆவர். அத்தகையோரை அனுமதிக்கும், கட்சியும் சரி, குடும்பமும் சரி, அவர்களின் 'சுயரூபம்' வெளிப்படும் வாய்ப்பு வரும் போது, அதனால் விளையும் சீர்குலைவிலிருந்து தப்பமுடியாது.
அந்த சிற்றின மனிதர்கள் எல்லாம், வசதி குறைவில் இருக்கும் போது நம்மிடம் காண்பிக்கும் விசுவாசம் எல்லாம், நம்மை ஏணியாக்கி வளரும் உள்நோக்கத்திலான நடிப்பு ஆகும். வாய்ப்பு கிடைத்தால், தமது வளர்ச்சிக்காக, எல்லா மனித மதிப்பீடுகளையும் காவு கொடுத்து, மனித மிருகங்களான, தமது சுயரூபத்தை வெளிப்படுத்துவார்கள், என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
“ 1944இல், திராவிடர் கழகம் தோன்றி, பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் கீழிறங்கி, உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகள் அரங்கேறத் தொடங்கிய போக்கு, 'இன உணர்வு' என்ற பெயரில் 'சிற்றினம்' தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்று மதிக்கத் தக்கவர்களானதால், என்னை போன்றவர்கள் சமூகத்தில் 'வாழத்தெரியாத முட்டாள்களாக', 'சமூக விரயமாக' ஒதுக்கப்படும் நிலை வந்துள்ளதா? என்ற ஐயம் எனக்கு இருந்தது. சுயசம்பாத்தியம் இல்லாதவர்களுடன் சேர்ந்து, பொதுத்தொண்டு செய்வதில் உள்ள அபாயங்கள் பற்றி, 1948 தூத்துக்குடி மாநாட்டில், 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள் விடுத்த எச்சரிக்கையில் இருந்து, அவரே சறுக்கியது போலவே, அவர் வழியில் நானும் சறுக்கியதாக உணர்கிறேன். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' ( புறநானூறு 192) அந்த சறுக்கலில் 'மூழ்காமல்', 'உடுக்கை இழ்ந்தவன் கை' (குறள் 788) நட்புகள், மற்றும் என் உள்ளார்ந்த ஈடுபாடுகள்(Passions) என்ற இரு துடுப்புகள் மூலம் நான் தப்பித்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html ) ஒரே நேரத்தில் மனசாட்சியுள்ள முதல் மற்றும் மூன்றாம் மனிதனாக (1st & 3rd person), நமது வாழ்வினை அணுகும்போது, இன்பங்கள் மட்டுமின்றி, அரிய பாடங்களை வழங்கும் துன்பங்களையும், 'அனுபவித்து' வாழ முடியும்; உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழும்போது.”

http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html
இத்தகைய மனித மிருகங்கள் எல்லாம், தமிழ்நாட்டின் பொது அரங்கில் வலம் வர அடித்தளம் இட்டு, 1948 தூத்துக்குடி மாநாட்டில் அந்த அபாயத்தை எச்சரித்து, பின் அதிலிருந்து வழுக்கி, அந்த போக்கிலேயே பலியானவர் ஈ.வெ.ரா. அந்த போக்கிலேயே 1967இல் முதல்வரான அண்ணாவும், அதன் பாதகத்தை அனுபவித்து, மனமுடைந்து மரணத்தை தழுவினார்.
அன்றைய முதல்வர் அண்ணாவிடம், தான் முனிவராக பொதுவாழ்விலிருந்து ஒதுங்க விரும்புவதாக ஈ.வெ.ரா ஏன் தெரிவித்தார்? மருத்துவமனையில் தன்னை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியிடம், தான், விரைவில் மரணமடைய விரும்புவதாக அண்ணா ஏன் தெரிவித்தார்? என்ற கேள்விகள் இந்த ஆய்வில் முக்கிய இடம் பெறுகின்றன.
“தமிழ்நாட்டில் 1969இல், கலைஞர் கருணாநிதி முதல்வரானது முதல், தமிழ்நாட்டு அரசியலானது, தி.மு.க ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற இரண்டு முனை அரசியலாக மாற்றம் பெற்றது. அந்த சூழலில், காமராஜரின் 'ஸ்தாபன காங்கிரஸ்' கட்சியானது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டு, பல போராட்டங்கள் மூலம், தி.மு.க எதிர்ப்பு 'அரசியலில் வலிமையுடன் வளர்ந்தது. தி.மு.கவை விட்டு வெளியேறிய எம்.ஜி.ஆர், அக்கட்சியில் சேர முயற்சித்தததையும், காமராஜர் அதை விரும்பாத காரணத்தால், வேறு வழியின்றி, அன்றைய பிரதமர் இந்திராவின் ஆதரவுடனும், பின்பலத்துடனும், அ.தி.மு.கவைத் தொடங்கினார்' என்ற தகவலையும், மறைந்த 'நாத்தீகம்' ராமசாமி தனது நினைவுக் குறிப்புகளில் வெளியிட்டுள்ளார். அதன்பின் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில், அ.தி.மு.க முதலிடத்தையும், ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் பிடிக்க, தி.மு.க மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அந்த அளவுக்கு, தமிழக இருமுனை அரசியலில், 'தி.மு.க எதிர்ப்பு அரசியலானது', வலிவுடன் இருந்தது. காமராஜர் மறைவிற்குப்பின், 'தி.மு.க எதிர்ப்பு அரசியல்' என்பது, அ.இ.அ.தி.மு.கவின் 'ஏகபோக' பலமானது.”

http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_28.html
1977இல் முதல்வரான எம்.ஜி.ஆர் ஊழலற்ற ஆட்சி அமைத்து, அந்த ஊழல் போக்கில் திருப்பு முனையை ஏற்படுத்தினார்.
அதன்பின் 1980இல் சுயநல அரசியல் நோக்கில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, தி,மு,க தலைவர் கலைஞர் கருணாநிதியுடன் கூட்டு சேர்ந்து, எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைத்தார். பின் நடந்த தேர்தலில், அமோக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்தார்.
எதிர்பாராத வகையில், இந்திரா காந்தி, கலைஞர் கருணாநிதி சுயநல அரசியலால் உருவான தேர்தல் செலவுக்கு தடுமாறிய எம்.ஜி.ஆருக்கு, நிதி உதவி செய்தவர்களுக்கு, கைமாறு செய்யும் நெருக்கடியில், அ.இ.அ.தி.மு.க ஆட்சியிலும் ஊழல் நுழைய நேரிட்டது. ஆனாலும் மின் வாரியம், ரேசன், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட துறைகளில் ஊழலின்றி, தேர்தல் அரசியலில் பயணிக்க, ஊழலுடன், எதிர்க்கட்சிகளும் அதில் பங்கு பெறும் வகையில் 'எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுடன், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகாமல், எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தாரா? என்பது ஆய்விற்குரியதாகும்.
எம்.ஜி.ஆருக்குப் பின் “அந்த இருமுனை அரசியல் போக்கில், அடுத்த கட்ட மாற்றமாக, (சசிகலா நடராஜன்/கலைஞர் கருணாநிதி) குடும்ப செல்வாக்கு ஊழல் ஆதிக்க ஆட்சி மீது மக்களுக்கு இருந்த கோபமும் வெறுப்புமே, 1996இல் தி.மு.க ஆட்சிக்கு வரவும், அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்கள் வரவும் காரணமானது. அந்த புதிய போக்கில், அரசியல் நீக்கத்தில், கொள்கைகள் சருகான நிலையில், உரிய பாடங்கள் கற்று, உரிய திருத்தங்களுடன் ஜெயலலிதா, மக்கள் மத்தியில், தனிநபர் விசுவாசத்தில், அதிக செல்வாக்குள்ள தலைவராக உள்ளாரா? உரிய பாடங்கள் கற்காமல், குடும்ப அரசியல் குழப்பத்தில் மூழ்கி, தி.மு.க எந்த அளவுக்கு பலகீனமாகியுள்ளது? என்பது ஆய்விற்குரியதாகும்.” என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

1967இல் அண்ணா
முதல்வரான பின், தனது கட்சியினரின் செயல்பாடுகளால் மனமுடைந்து, மரணமடைய விரும்பியது
தொடர்பான தகவலை, மேலே பார்த்தோம்.
முதல்வர் ஜெயலலிதாவை
பிடிக்காதவர்கள் கூட, அவரின் துணிச்சலை பாராட்டியதை நான் அறிவேன்
கடந்த 2016 சட்ட மன்ற தேர்தலில், தமது கட்சியில், சுயநல நோக்கில், கட்சி நலனை சீர் குலைத்து, செயல்பட்டவர்கள் தொடர்பாக, அண்ணாவைப் போல மனமுடையாமல்;
1948 தூத்துக்குடி
மாநாட்டில் அந்த அபாயம் தொடர்பாக ஆவேசப்பட்டு, எச்சரித்து, பின் அதிலிருந்து 'பெரியார்' ஈ.வெ.ரா,
அந்த ஆவேசத்திலிருந்து, வழுக்கியது போல வழுக்காமல், ஜெயலலிதா துணிச்சலுடன்
தனது ஆவேசத்திலிருந்து வழுக்காமல்;
அந்த நோயிலிருந்து, தமது கட்சியை எப்படி காப்பாற்றப் போகிறார்? என்பது இனி நடக்க இருக்கும் வரலாறு ஆகும்; அதே சிக்கலை சந்தித்துள்ள எதிர் கட்சிகளும் ஆர்வத்துடன் கவனிக்க வேண்டிய நெருக்கடியில் .
'அரசியல் நீக்கம்'(Depoliticize) போக்கில், 'தமக்கென்ன லாபம்?' என்ற எதிர்பார்ப்புள்ளவர்களின் ஆதிக்கத்தில், அ.இ.அ.தி.மு.க, தி.மு.க, உள்ளிட்ட எல்லா கட்சிகளும் சிக்கியுள்ள சூழலில், முதல்வர் ஜெயலலிதா தமது முயற்சியில் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், அது தமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் திருப்பு முனையாக, அமைய வாய்ப்புள்ளது.
அதன் முதல் ‘சிக்னலாக’, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இருக்கும்; ஸ்டாலினின் 'சாதனையாக', வலுவான எதிர்க்கட்சியாக, தி.மு.க புத்துயிர் பெற்றுள்ள நிலையில்; ‘என்னுடைய குடும்பத்தில் இருந்து எவரும் அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள்’ என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதிபட அறிவித்துள்ள நிலையில்.
http://www.vikatan.com/news/politics/63817-stalins-reply-to-udhayanidhis-political-entry.art

No comments:
Post a Comment