Tuesday, September 19, 2017

அரசியல் பரமபதத்தில்(2):


ஸ்டாலின் - சசிகலா நன்கொடையாக, தமிழக ஆட்சி நிலைக்கப் போகிறதா?


தினகரன் ஆதரவு 18 எம்.எல்..க்குள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, நீதி மன்றம் செல்வது பலனற்றது, என்பதை கீழே குறிப்பில் உள்ள சான்று தெளிவு படுத்தியுள்ளதுநீதி மன்றம் சென்று, இறுதி தீர்ப்பு எப்படி வெளிவந்தாலும், அதற்குள் இந்த ஆட்சியின் காலம் முடிந்து விடவும் வாய்ப்பிருக்கிறது.

சசிகலா தரப்பிலும், ஸ்டாலின் தரப்பிலும், தவறான அரசியல் தற்கொலைப் போக்கில் பயணிப்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன்.

ஆளுங்கட்சியில் யார் முதல்வர்? என்பதில் ஆளுநர் தலையிட முடியுமா?

எதிர்க்கட்சித்தலைவர் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்யாமல், தனது பணியை செய்யுமாறு ஆளுநரை நிர்பந்திக்க முடியுமா?’
(‘அரசியல் பரமபதத்தில்: ஸ்டாலினும்,சசிகலாவும் பாம்பின் தலைக்கு தாவுகிறார்களா?’; http://tamilsdirection.blogspot.sg/2017/08/blog-post_27.html )

ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு எதிராக ஆளுநரை சந்தித்து மடல் கொடுத்ததன் மூலம், சட்டப்படி தகுதி நீக்கத்திற்கு முகாந்திரம் ஏற்படுத்தி கொடுத்து விட்டார்கள், என்பதை கீழே குறிப்பில் உள்ள சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவசரப்படாமல், சட்டப்படி தகுதி நீக்கம் செய்வதற்கான முகாந்திரங்களை, மேலும் வலிமையாக்கி, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருப்பதை கீழ்வரும் சான்று தெளிவுபடுத்தி உள்ளது.

ஜக்கையன் அளித்த புகாரே 18 எம்.எல்..க்குள் தகுதி நீக்கம் செய்ய முகாந்திரமாக இருந்தது. சொந்த கட்சிக்கு எதிராக செயல்பட்டதும், தி.மு..,வுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாகவும், தனக்கு தெரியவந்ததால், தினகரன் அணியில் இருந்து வெளிவந்து முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு அளித்ததாகவும், அதிமுக ஆட்சியை கவிழ்க்க தாம் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டதாகவும்,என்னிடம் ஜக்கையன் தெரிவித்தார். இந்த புகாரின் அடைப்படையில் 18 எம்.எல்..,க்களையும் தகுதி நீக்கம் செய்ததாக தனபால் கூறினார்.” (http://www.dinamalar.com/news_detail.asp?id=1857891 )

அதாவது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தானாகவே மடல் மூலம் ராஜினாமா செய்யாமல் (de jure resignation), கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதற்கான தடயங்களின் அடிப்படையில், தனது செயல்பாடு மூலமும் கட்சியை விட்டு விலகி (de facto resignation), தகுதி நீக்கத்திற்கு உள்ளாக வாய்ப்பிருப்பதை, கீழே குறிப்பில் உள்ள சான்றுகள் தெரிவிக்கின்றன.

பணபலத்தில் ஒத்து வரும் மீடியாக்கள் துணையுடன் வெளிச்சம் போட்டாலும், சசிகலா அரசியல் பரமபததில், தவறான ஆலோசனைகளின் வழியில் செயல்பட்டு, பாம்பின் தலையைப் பிடித்து, அரசியல் குழியில், மீள்வதற்கு வழியின்றி விழுந்து விட்டார், என்பது வெட்ட வெளிச்சமாகும் காலமும், அதிக தொலைவில் இல்லை, என்பதும் எனது கணிப்பாகும்.

கீழ்வரும் காரணங்களால், எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் விரும்பினாலும்ஆட்சியைக் கவிழ்க்க முடியாது, என்பதும் எனது கணிப்பாகும்.

கடந்த சட்ட மன்ற தேர்தலில் தி.மு. ஆட்சியைப் பிடிக்கும் என்ற ஊடக கணிப்புகளை நம்பி, பெருமளவில் செலவு செய்த தி.மு. எம்.எல்.ஏக்களில் பலர், மீண்டும் ஒரு சட்டசபை தேர்தலை இப்போது சந்திக்க ஆர்வமின்றி இருந்தால் வியப்பில்லை; மீண்டும் போட்டியிட கட்சியில் வாய்ப்பு கிடைக்குமா? வாய்ப்பு கிடைத்தாலும், மீண்டும் பெருமளவில் செலவு செய்வது சாத்தியமா? புத்திசாலித்தனமா? இடையில் ஆளுநர் ஆட்சியில், தம்மிடம் உள்ள கணக்கில் வராத பணமும், சொத்துகளும் தப்பிக்குமாதி.மு.க தலைவர் சட்டசபைக்கே வரவேண்டியதில்லை என்ற தீர்மானத்தை, நிறைவேற்ற ஒத்துழைத்த அரசை கவிழ்ப்பது புத்திசாலித்தனமா? அவரவர் தகுதி, திறமைக்கேற்ப, ஆளுங்கட்சியுடன் நெருக்கமாகி, பிழைப்பது புத்திசாலித் தனமா?’ (‘'it’s a Mad Mad Mad Tamilnadu'- உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய  திரைப்படம்; சட்டசபையில் இரகசிய வாக்கெடுப்பு நடந்தால், ஆளுங்கட்சி 'அமோகமாக' வெற்றி பெறும்.’; http://tamilsdirection.blogspot.sg/2017/08/its-mad-mad-mad-tamilnadu.html )

இப்போதுள்ள ஆட்சியைக் கவிழ்க்கும் சமூக ஆற்றல்கள், ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் என்ற போர்வைகளில், சுயலாபக் கணக்குகளுடன் பயணித்து வரும் முக்கிய புள்ளிகளிடம் இருக்கிறது. ஆனால் அந்த ஆற்றல்கள் வெளிப்படையாக வெளியில் வந்து, தாம் எதிர்பார்த்த அதிகார எலும்புத் துண்டுகள் கிடைக்காத வெறுப்பில், முட்டிமோதி, ஆட்சி கவிழ்வதானது;

சசிகலா குடும்பம் தமது பண பலத்தால் வெளிச்சம் போட்டு, அதனால் பலனில்லை என்பதை உணர்ந்து, முற்றிலும் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கும் வரை;

வேறு வழியின்றி தாமதமாகும்.

சில மாதங்களே முதல்வராக பணியாற்றியிருந்தாலும், சென்னை வெள்ள நிவாரணம், ஏறு தழுவுதல் தடை நீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளில் மக்களின் கவனத்தை ஈர்த்து, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ்நாட்டில் எங்காவது மக்கள் போராட்டம் நடந்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரித்து;

1967க்குப் பின், மக்கள் பிரச்சினைகளில் உணர்நுட்பத்துடன் (sensitive) தீர்வுகளை நோக்கி செயல்படும் ஆட்சியானது துவங்கி விட்டதா? என்ற எதிர்பார்ப்பானது, சசிகலாவின் அரசியல் தற்கொலைப் போக்கினால், கருச்சிதைவுக்கு உள்ளானது.

இப்போதும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆட்சியானது, ஆட்சி கவிழ்வதைப் பற்றி கவலைப்படாமல், அந்த திசையில் ஆட்சி செய்தால், தமிழ்நாட்டில், தலைமை வழிபாடற்ற, குடும்ப அரசியலில் சிக்காத, ஒரே கட்சியாக, ...தி.மு.  மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும், என்பதும் எனது கணிப்பாகும்.

குறிப்பு :

  Statement of Objects and Reasons appended  to  the  Constitution (Fifty-second  Amendment) Bill, 1985 (Bill No.  22 of 1985); the Speaker of such House and his  decision   shall  be final. - Bar  of jurisdiction of courts.-Notwithstanding anything in  this Constitution,  no court shall have any jurisdiction in respect of  any matter  connected  with  the disqualification of a member of  a   House under this Schedule.(http://indiacode.nic.in/coiweb/amend/amend52.htm )

in the case of Rajendra Singh Rana vs. Swami Prasad Maurya and Others, the Supreme Court held that the act of giving a letter requesting the Governor to call upon the leader of the other side to form a Government itself would amount to an act of voluntarily giving up membership of the party on whose ticket the said members had got elected.; http://www.thehindu.com/news/national/What-the-Anti-Defection-Law-says/article15777794.ece

No comments:

Post a Comment