Sunday, September 10, 2017

அனிதா, காப்பி அடித்து மாட்டிக் கொண்ட மாணவி, காதல் தோல்வி போன்ற இன்னும் பல காரணங்களுக்காக, மாணவ, மாணவிகளிடம் வளர்ந்து வரும் தற்கொலைப் போக்குகளிலிருந்து;


          தமிழ்நாடு விடுதலை பெறுவது சாத்தியமா?


தமிழ்நாட்டில் தற்கொலைகளும், மன அழுத்தம் தொடர்பான வியாதிகளும் நம்பமுடியாத அளவுக்கு உச்சத்தில் இருப்பதாக, எனக்கு கிடைத்து வரும் உள்ளீடுகள் (inputs) உணர்த்துகின்றன.

ஒரு நல்ல சமூகத்தில் இயல்பாக இருக்க வேண்டிய சமூக சுமைதாங்கிகளானது, தமிழ்நாட்டில் வற்றி வந்த போக்கின் விளைவாகவே, இன்று தற்கொலைகள் பள்ளி மாணவர்களிடமும் இடம் பெறும் போக்கில், தமிழ்நாடு சிக்கியுள்ளது.

அனிதாவின் தற்கொலைக்காக நீட் தேர்வை, எதிர்ப்பது சரியென்றால், தமிழ்நாட்டில், தேர்வில் காப்பி அடித்து, மாட்டிக் கொண்ட அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவியை முன்னிறுத்தி, தேர்வுகளில் காப்பி அடிக்கும் உரிமைக்கு போராட முடியுமா?(http://tamil.oneindia.com/news/2013/05/29/india-engineering-student-jumps-death-176200.htmlமாணவிகளின் தற்கொலைகளை பிரித்து, தமக்கு சாதமான அரசியலுக்கு துணை புரியும் தற்கொலைகளை மட்டும், 'தியாகங்களாக' பாராட்டுவது சரி ஆகுமா? இவ்வாறு தற்கொலைகளை பிரித்து, பாராட்டும் போக்கானது, 1965க்கு முன், தமிழ்நாட்டில் வெளிப்பட்டதற்கான சான்றுகள் எனக்கு கிட்டவில்லை.

அல்லது வாழ்வின் சவால்களை சந்திக்க துணிவின்றி, அனிதா, காப்பி அடித்து மாட்டிக் கொண்ட மாணவி, காதல் தோல்வி போன்ற இன்னும் பல காரணங்களுக்காக, மாணவ, மாணவிகளிடம் வளர்ந்து வரும் தற்கொலைப் போக்குகளை எதிர்த்து போராடாமல், தமிழ்நாடானது, மீட்சி திசையில் பயணிக்க முடியுமா?

இன்னொரு நபரின் துக்கத்தை பகிர்ந்து, அத்துக்கத்திலிருந்து அவர் விடுபட  உதவும், சமூக சுமைதாங்கியாக நாம் செயல்பட வேண்டுமானால்; அந்த நபருடன் நமக்குள்ள உறவானது, சுயலாப நட்ட கணக்கில் இருக்க கூடாது.

எதிர்பாராத துக்கத்தை சந்தித்துள்ள அந்த இன்னொரு நபர், சுயலாப நட்ட கணக்கில், பழகும் இயல்புடையவரானால், தமது துக்கத்தை எவரிடமும் பகிர்ந்து கொள்ள தயங்குவதற்கும் வாய்ப்புண்டு. ஏனெனில் அவ்வாறு செய்வது, தமக்கு லாபத்தை தருமா?, நட்டத்தை தருமா? என்ற கணக்கில், அவரின் மூளையானது எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டிருப்பதால்.

அது மட்டுமல்ல, தமது இழப்புகளையும், துக்கங்களையும் மறைத்து, தாம் மிகவும் புத்திசாலித்தனமாக வெற்றியுடன் வாழ்வதாக வெளியில் காட்டிக் கொள்வதில், மகிழ்ச்சி அடையும்;

நானறிந்த 'பெரியார் சமூக கிருமிகள்' உள்ளிட்ட‌, 'தமக்கென வாழா மனநோயாளிகள்' (http://tamilsdirection.blogspot.sg/2015/02/12_17.html) எல்லாம் சமூக சர்க்கஸ் கோமாளிகளாக வெளிப்பட தொடங்கியுள்ளனர்.

ஒரு மனிதன் எதற்கு மகிழ்வது? எதற்கு வருத்தப்படுவது? என்ற மனித இயல்பின் இலக்கணங்களை திரித்து;

இன்னொரு மனிதரின் காலில் விழுந்து, பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வதும்;

பின் அவரின் காலை வாரி, அடுத்து செல்வாக்கான மனிதரின் காலில் விழுந்து, பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வதும்;

தம்மை 'யோக்கியராக' முன்னிறுத்திக் கொண்டே, தம்மிடம் உள்ள திறமைகளை மூலதனமாக்கி, 'அறிவு விபச்சாரிகளாக' பயணித்து வரும் போக்குகளும்;

அப்படி சம்பாதித்த நபரை பாராட்டி மகிழும் அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் மிகுந்து வரும் நாடாக தமிழ்நாடு இருப்பதும்;

1944இல் முளை விட்டு, வளர்ந்து, 1967இல் ஆட்சியைப் பிடித்த திராவிட அரசியல் வளர்த்த நோய்களாகும். இந்தியாவிலும், உலக அளவிலும், வேறு எங்கும் காண முடியாத வகையில், தமது சொந்த‌ மாநில உரிமைகளுக்கு துரோகம் செய்து, அம்பலமாகாமல் பயணிக்கும் ஊழல் முதலைகள் மிகுந்துள்ள திசையில், தமிழ்நாடு பயணித்து வந்துள்ளது. அந்த ஊழல் முதலைகளுடன் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ 'நெருக்கமாகி'(?), 'எறி சோறு' பலன்கள் (http://tamilsdirection.blogspot.sg/2015/02/12_17.htmlஅனுபவிக்கும் 'முற்போக்குகளும்', உலகில் வேறு எங்கும் காண முடியாததமிழ்நாட்டு அதிசயமாகும் 

அகத்தில் சீரழியாமல், அந்த அரசியல் போக்கில் பயணித்தவர்களில் பலர், அதிலிருந்து விடுபட்டு, சுயலாப நோக்கற்றவர்களாக‌, அறிவு விபச்சாரிகளையும், பொதுவாழ்வு வியாபாரிகளையும் ஒதுக்கி, பயணிக்கும் மீட்சிப் போக்கில், பயணிக்கத் தொடங்கியுள்ளார்கள். செயல் மூலம் பேசி வரும் அத்தகையோரே, விபரமுள்ள மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளனர்.

மடியில் கனத்துடன், மேலே குறிப்பிட்ட மனநோயாளிகளாக பயணித்தவர்கள் எல்லாம், அனுபவித்த, அனுபவித்துவரும் 'தண்டனைகள்' எல்லாம், 'கிசுகிசு' சமூக செயல்நுட்பத்தில், சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் வரை 'கசிந்து' கேலிக்குள்ளாகி வருகின்றன. குறிப்பாக, சுப்பிரமணிய சுவாமியின் 'பொர்க்கி தமிழர்' பிரயோகத்தை, கண்டிக்காத, நீட் எதிர்ப்பு தலைவர்கள் எல்லாம், 'மடியில் கனத்துடன்', இன்னும் சம்பாதிக்க அலையும் பொதுவாழ்வு வியாபாரிகள் இல்லையா?

கட்சிகளில் மேல் மட்டத்தில் உள்ளவர்களின் 'அந்தரங்கங்க‌ள்' எல்லாம், அதே கட்சிகளில் அடுத்த அடுத்த கீழ் மட்டங்களில், 'கிசுகிசு' நகைச்சுவைகளாக கேலி பேசி மகிழும் போக்கும் வளர்ந்து வருகிறது. காலில் விழுவது, ஜால்ரா அடிப்பது போன்ற சமூக செயல்நுட்பங்களை, சமூக கவசங்களாக கொண்டு, அந்த அடி மட்டத்தினரின் பொதுவாழ்வு வியாபாரமும் பாதிப்பின்றி தொடர்கிறது. 

எவர் காலில் விழுந்தாலும், அவர் எப்போது காலை வாருவார்? என்று கட்சித்தலைவர்கள் எல்லாம் அஞ்சும் போக்கினை, ஜெயலலிதாவின் மரணமானது கூட்டியுள்ளது.

'அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள்' - திருக்குறள் 754

தமிழ்நாட்டில் 'தீது ஒன்றி வந்த பொருள்' சேர்த்துள்ள மனிதர்கள் குடும்பத்தில், சுற்றத்தில், அறன் ஈன வாய்ப்புண்டா? இன்பம் ஈன வாய்ப்புண்டா?

அத்தகையோர் செல்வாக்குடன் வலம் வரும் வரை, தமிழ்நாட்டில் தற்கொலைகளும், மன அழுத்தம் தொடர்பான வியாதிகளும் நம்பமுடியாத அளவுக்கு உச்சத்தில் இருப்பதில் வியப்புண்டோ?

முதலில் குறிப்பிட்ட, சுயலாப நோக்கற்று, சமூக சுமைதாங்கிகளாக வாழ்பவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்;

அவர்களை சந்திக்கும் கட்சிகளின் அடிமட்டத்தினர், தாமாகவே மேலே குறிப்பிட்ட நகைச்சுவைகளை தெரிவித்து, தம்மை யோக்கியராக காட்டிக் கொள்ளும் நகைச்சுவை காட்சிகளும், தமிழ்நாட்டில் அரங்கேற தொடங்கியுள்ளன.

இயற்கை விதியின்படி இழிவின் உச்சத்தை தொட்டுள்ள சமூகத்தில், மீட்சிக்கான போக்குகள் முளை விடத் தொடங்கியுள்ளன.

எனவே வாழ்வின் சவால்களை சந்திக்க துணிவின்றி, அனிதா, காப்பி அடித்து மாட்டிக் கொண்ட மாணவி, காதல் தோல்வி போன்ற இன்னும் பல காரணங்களுக்காக, மாணவ, மாணவிகளிடம் வளர்ந்து வரும் தற்கொலைப் போக்குகளை எதிர்த்து போராடும் நோக்கில்;

சுய விமர்சனம் மூலம், அகத்தில் சீரழியாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டு, சுயலாப நோக்கற்றவர்களாக, அறிவு விபச்சாரிகளையும், பொதுவாழ்வு வியாபாரிகளையும் ஒதுக்கி, கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து;

அறிவுபூர்வ விவாதத்தின் ஊடே, வாய்ப்புள்ள பிரச்சினைகளில் ஒன்று சேர்ந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும், மீட்கும் திசையில், தமிழ்நாடானது பயணிக்கத் தொடங்கி விட்டது. 

திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களுக்கு நெருக்கமான‌, 'சமூக சர்க்கஸ் கோமாளிகளாக', 'பெரியார் சமூக கிருமிகள்வெளிப்பட தொடங்கியுள்ள சூழலில்;


தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிக்கும் வாய்ப்பினை, 'பெரியார்' கட்சிகள் தாமே கெடுத்துக் கொண்ட சூழலில்;

அதற்கான சமூக நியுக்கிலியேசன் (Social Nucleation) நடைபெற, மக்கள் செல்வாக்குள்ள நபர் எவராவது அரசியலில் நுழைந்தாக வேண்டும்.

அது ரஜினி மூலமாக நடப்பதும், அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலம் நடப்பதும், ரஜினி மேற்கொள்ள இருக்கும் நிலைப்பாடுகளை பொறுத்ததாகும்.' (http://tamilsdirection.blogspot.sg/2017/06/4-socialnucleation-signals-on-growth.html )

No comments:

Post a Comment